Contact us at: sooddram@gmail.com

 

திருச்சியில் கேலிக் கூத்தாக முடிந்த மோடிக் கூத்து

பிரதமர் வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி திருச்சியில் வந்து குதியாட்டம் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவரை மோடி என்று அழைப்பதைவிட மோசடி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக கூட்டணிக்கு வருமாறும், வாய்ஸ் கொடுக்குமாறும் பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நச்சரித்தனர். ஆனால் அவர் இவர்களை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ரஜினி படத்தையும் மோடி படத்தையும் ஒன்றாகப் போட்டு பல இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளத்தின்போது ஒரே நாளில் குஜராத்தைச் சேர்ந்த 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மோடி சூப்பர்மேன் போல பாய்ந்து சென்று காப்பாற்றியதாக புருடா விட்டனர். ஆனால் அது உண்மையில்லை என்ற உண்மை வெளியானவுடன் ஆளாளுக்கு நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொண்டனர். மோடி கூட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் பெருமளவில் திரண்டு வருவதாக ஷோ காட்டுவதற்கு இவர்களே தொப்பி மற்றும் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கு ஒரே இடத்தில் தொப்பி மற்றும் பர்தா தைத்த விவகாரம் வெளியாகி நாறிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான் மோடி திருச்சிக் கூட்டத்தில் கர்ஜித்திருக்கிறார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் புல்லரித்து போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டு புரண்டிருக்கிறார். போபாலில் அத்வானியின் காலை தேடிப்பிடித்து மோடி விழ, அவரோ முகத்தை பின்பக்கமாக திருப்பிக் கொண்டார். சொந்தக் கட்சிக்குள்ளேயே மோடியை எதிர்த்து சுனாமி சுழன்றுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தமிழ் மொழியின் பெருமை குறித்து மோடி வெகுவாக பேசியிருக்கிறார். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருந்தபோது தேவ பாஷையான சமஸ்கிருதத்திற்கு நிகராக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மறுத்தனர். சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து பெருந்தொகையை ஒதுக்கியவர்கள் அவ்வாறு தமிழ் ஆண்டு என்று அறிவிக்க மறுத்தனர்.

ஆனால் திருச்சிக்கு வந்தவுடன் மோடிக்கு தமிழ் மொழியின் மீது பாசம் பொங்கி வழிந்து கொள்ளிடத்தையே நிறைத்திருக்கிறது. அமெரிக்காவின் உளவு வேலைகளை வெளியிட்ட ஸ்னோடெனுக்கு ரஷ்யா புகலிடம் கொடுத்ததால் ரஷ்ய மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. இதேபோன்ற தன்மான உணர்ச்சி நமக்கு வேண்டாமா? என்று மோடி அந்தக் கூட்டத்தில் கேட்டிருக்கிறார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார். உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி அரைநிர்வாணச் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணிற்கு எப்படியாவது சென்றே தீருவேன் என்று இந்த தன்மான வீரர் மோடி விசா கேட்டு கெஞ்சிக் கொண்டிருப்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார் மோடி .

ஆனால் அது ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதையாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சி பின்பற்றும் அதே கொள்கைகளைத்தான் பாஜகவும் கொண்டுள்ளது. அதே கொள்கைகளைத்தான் மோடியும் குஜராத்தில் தீவிரமாக செயல்படுத்துகிறார். அதனால்தான் குஷியடைந்த முதலாளிகள் மோடியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்று கூறியுள்ளார் மோடி. தமிழர்கள் மதச்சார்பின்மையில் உறுதி யான நம்பிக்கை கொண்டவர்கள் என்பதையும் அவர் விரைவில் புரிந்துகொள்வார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com