|
||||
|
அருண் செல்வரா
ஐஎஸ்ஐ
உளவாளி, புலிகளின்
உறுப்பினர்.
சென்னையில்
கைது செய்யப்பட்ட
ஐஎஸ்ஐ உளவாளி என
சந்தேகிக்கப்படும்
இலங்கையரான அருண்
செல்வராஜை,எதிர்வ
வரும் 25ம் திகதி
வரை சிறையில் அடைக்க
பூந்தமல்லி சிறப்பு
நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
குறித்த நபரை சாலிகிராமத்தில்
உள்ள வீட்டில்
நேற்று முன்தினம்
புதன்கிழமை இரவு
தேசிய புலனாய்வு
அதிகாரிகள் கைது
செய்தனர். இவரது
வீட்டில் பொலிஸார்
நடத்திய சோதனையில்
டைரி, வரைபடங்கள்,
இந்தியா, இலங்கை
கடவுச் சீட்டுக்கள்
மற்றும் வங்கிக்
கணக்குப் புத்தகங்கள்
உள்ளிட்ட பல முக்கிய
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரது வங்கி கணக்கில்
இந்திய ருபாய்
2 கோடி வரை பணம்
இலங்கையில் இருந்து
இணையம் மூலம் பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
அந்த பணம் இவருக்கு
உளவு பார்த்ததற்கான
கூலியாக இருக்கலாம்
என்று கருதப்படுகிறது
என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில்
கைது செய்யப்பட்ட
ஐ.எஸ்.ஐ. உளவாளி
ஜாகிர் உசேன்,
கடந்த 2012-ம் ஆண்டு
கைது செய்யப்பட்ட
தமீம் அன்சாரி
ஆகியோருடன் அருண்
செல்வராஜூக்கு
இடையே நிறைய தகவல்
பரிமாற்றங்கள்
நடந்திருப்பதும்
விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
மேலும்,
சாலிகிராமத்தில்
வாடகைக்கு வீடு
எடுத்து நீண்டநாள்
தங்கியிருப்பதும்,
சென்னையில் முக்கிய
இடங்களில் உள்ள
பாதுகாப்பு ஏற்பாடுகளை
அவர் உளவு பார்த்திருப்பதும்,
பல முக்கிய இடங்களைப்
படம் பிடித்திருப்பதும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில்
உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்
நேற்று ஆஜர்படுத்தப்பட்ட
அருண் செல்வராஜை
வரும் 25ம் திகதி
வரை சிறையில் அடைக்க
உத்தரவு பிறப்பித்துள்ளது.
அருண்
செல்வராஜா விடுதலைப்
புலிகளின் உறுப்பினராகவும்
செயற்பட்டார்-
இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய
புலனாய்வு பிரிவான
ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில்
உளவு நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாக கூறி
கைது செய்யப்பட்டுள்ள
இலங்கை தமிழரான
அருண் செல்வராஜா,
விடுதலைப்புலிகளின்
உறுப்பினர் என
இந்திய இணையத்தளம்
ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று
முன்தினம் அவர்
சென்னையில் வைத்து
கைதான பின்னர்
நேற்று வெளியான
செய்திகளின்படி
அவருக்கு இலங்கையிலும்
குற்றச்சாட்டுக்கள்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்
இன்று வெளியாகியுள்ள
செய்தியில் அவர்
விடுதலைப் புலிகளின்
உறுப்பினராக இருந்தவர்
என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்
புலிகளுக்கு தங்குமிட
வசதிகளை செய்து
கொடுத்தவர் என்ற
குற்றச்சாட்டும்
அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி
அருண் செல்வராஜா
பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ
உளவுப் பிரிவுக்கு
முக்கியமான சொத்தாக
செயற்பட்டுள்ளார்.
அவர்
ஐஎஸ்ஐக்காக உளவு
பணிகளில் மாத்திரம்
ஈடுபடாமல், பயங்கரவாத
தாக்குதல்களுக்கான
தயார்படுத்தலுக்கும்
உதவியளித்துள்ளார்.
குறிப்பாக
அவர் கல்பாக்கம்
அணுஉலை, கோயம்புத்தூர்
சந்தை மற்றும்
விமான பயிற்சி
நிலையம் என்பவை
தொடர்பில் தகவல்களை
திரட்டியிருந்தார்.
அவர்,
கைது செய்யப்பட்டபோது
அவரிடம் இருந்து
லெப்டொப், எப்பல்
ஐபேட், 6 கைத்தொலைபேசிகள்
போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரிடம் இருந்து
மீட்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள்
இரண்டில் ஒன்றில்
இலங்கையர் என்றும்
மற்றதில் இந்தியர்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய
கடவுச்சீட்டில்
அவருடைய பெயர்
சரவணமுத்து என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
அருண்
செல்வராஜா, கொழும்பில்
உள்ள பாகிஸ்தானிய
அதிகாரியான அமிர்
ஸுபைர் சித்தீக்கினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மற்றும்
ஒரு பாகிஸ்தானிய
அதிகாரியினாலேயே
அவர் வழிநடத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில்
பாகிஸ்தானிய நிதியுதவியில்
அருண் செல்வராஜா,
இந்தியாவில் ஐசி
என்ற நிறுவனத்தை
ஆரம்பித்து அங்கிருந்து
முன்னணி பாடகர்
ஜேசுதாஸ் போன்றோரின்
நிகழ்ச்சிகளையும்
ஒருங்கிணைக்கும்
பணிகளில் ஈடுபட்டு
வந்துள்ளார்.
அத்துடன்
இந்தியாவின் நிர்வாக
அதிகாரிகளுடனும்
அவர் தொடர்புகளை
பேணிவந்துள்ளார்.
இந்தநிலையில்
விசாரணைக்குழு
ஒன்று அவர் தொடர்பில்
இலங்கைக்கு சென்று
விசாரணைகளை நடத்தவுள்ளதாக
இந்திய தேசிய புலனாய்வு
பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை
இந்தியாவில் பாகிஸ்தானுக்கான
உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில்
2013 ஆம் ஆண்டில் இருந்து
அருண் செல்வராஜாவுடன்
மூன்று பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
உளவு
வலையமைப்பை கண்டறிய
இலங்கையின் உதவியை
எதிர்பார்க்கும்
இந்திய புலனாய்வாளர்கள்
இந்தியாவுடன்
தொடர்புடைய இலங்கையர்கள்
பயன்படுத்தப்பட்டு,
பாகிஸ்தான் தூதரகத்தின்
ஊடாக இயங்கும்
இந்தியாவுக்கு
எதிராக உளவு பார்க்கும்
வலையமைப்பு தொடர்பில்
இலங்கைக்கு விஜயம்
செய்து அதிகாரிகளை
சந்திக்க இந்திய
தேசிய புலனாய்வு
முகவர் அமைப்பு
தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான
உளவு பணியில் ஈடுபட்ட
இலங்கையை சேர்ந்த
அருண் செல்வராஜன்
என்பவர் சென்னையில்
கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து
கொழும்பில் உள்ள
பாகிஸ்தான் தூதரகத்தின்
கட்டுப்பாட்டில்
உளவு பணிகளில்
ஈடுபடும் வலையமைப்பு
குறித்து ஆய்வு
செய்ய தேசிய புலனாய்வு
முகவர் அமைப்பு
முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.
சென்னையில்
வர்த்தகத்தில்
ஈடுபட்டு வரும்
போர்வையில், பாகிஸ்தானுக்காக
உளவு பார்க்கும்
நோக்கில் அதியுயர்
பாதுகாப்பு வலயங்களை
புகைப்படம் எடுத்தார்
என்ற குற்றச்சாட்டில்
செல்வராஜன் கைது
செய்யப்பட்டார்.
அவரது
கைதை அடுத்து செப்டம்பர்
11 தாக்குதல் போன்ற
தாக்குதலை தென்னிந்தியாவில்
நடத்த திட்டமிடப்பட்டிருக்கலாம்
என புலனாய்வு அதிகாரிகள்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உளவு
வலைமையமைப்பை
கண்டறிய இலங்கையின்
ஆதரவை எதிர்பார்த்துள்ளதாக
தேசிய புலனாய்வு
முகவர் அமைப்பு
இலங்கை வெளிவிகார
அமைச்சு எழுத்து
மூலம் கோரிக்கை
விடுத்துள்ளதாக
இந்திய ஊடகங்கள்
தெரிவித்துள்ளன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |