|
||||
|
8ஆவது நாடாளுமன்றின்
கன்னி அமர்வு ஒரே பார்வையில்... இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னியமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது. அந்த நிகழ்வுகளை ஒரே பார்வையில் தருகின்றோம். • மு.ப 9.10: புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகை தந்தனர். • மு.ப 9.23: நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைக்குள் வந்திருப்பதற்கான கோர மணி, சுமார் 5 நிமிடங்களுக்கு ஒலித்தது. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்குள் வந்து தங்களுக்கென ஒதுக்கப்படாத ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். • மு.ப 9.29: படைக்கல சேவிதர், செங்கோலுடன் முன்னோக்கிவர நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் உதவி நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஆகியோர் வருகை தந்தனர். இதன்போது, அவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். • மு.ப 9.30: ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க வாசித்தார். • மு.ப 9.35: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கரு ஜயசூரிய, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வா அதனை வழிமொழிந்தார். • மு.ப 9.40: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வாவும், புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவை அக்கிராசனத்துக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். • மு.ப 9.42: புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதுடன் பதவிப்பிரமாணமும் செய்துக்கொண்டனர். • மு.ப 9.52: புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். அவருடன் நிமல் சிறிபால டீ சில்வா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். • மு.ப 10.11: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பலரும் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யும், புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். • மு.ப 10.27: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சுயாதீன உறுப்பினர் என்ற வகையில் வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியமர்ந்தார். • மு.ப 11.43: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீன், புதிய சபாநாயகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். • மு.ப 10.45: பிரிவிதுரு ஹெல உறுமயவின் சார்பில் உதய கம்பன்பில, வாழ்த்து தெரிவித்தார். • மு.ப 10.49: நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் உரைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். • மு.ப 10.50: புதிய சபாநாயகர் கரு ஜயசூரிய, உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். • மு.ப 10.55: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி.யான திலங்க சுமத்திபால பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை நிமல் சிறிபால டீ சில்வா எம்.பி முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வழிமொழிந்தார். • மு.ப 10.56: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார். • மு.ப 10.58: ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அவைத் தலைவராகவும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். • மு.ப 11.00: நாடாளுமன்றத்தின் காலை அமர்வு, ஜனாதிபதியின் வருகைக்காக மாலை 3 மணி வரையிலும் சபாநாயகரினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. • பி.ப 2.40 க்கு பொலிஸ் மோட்டார் படை சகிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் வருகைதந்தனர். • பி.ப 2.43 அவ்விருவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து இராணுவத்தின் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. • பி.ப 2.45 சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் முன்வாயிலுக்கு வந்ததுடன் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது. படைக்கல சேவிதர்கள் அணிவகுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலின் ஊடாக நாடாளுமன்றுக்குள் சென்றடைந்தார். • பி.ப 2.54 மணிவரையிலும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தங்கியிருந்தார். • பி.ப 2.59 மணிவரையிலும் கோரமணியொழித்தது. பின்னர் ஜனாதிபதி, சபாநாயகர் அவைக்குள் வருகைதந்தனர். • பி.ப.3.00 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கையை விளக்கி அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு சுமார் 35 நிமிடங்கள் சிங்கள மொழியில் மட்டும் உரையாற்றினார். • பி.ப 3.35 உரையை நிறைவு செய்துகொண்டு நாடாளுமன்றத்தை விட்டு தனது பாரியாருடன் வெளியேறினார். அவர்கள், வெளியேறியதை படையினர் அறிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/153192#sthash.wUiad32b.dpuf |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |