|
||||
|
அமெரிக்கா இழைக்கும் அக்கிரமங்கள்
மனித உரிமை மீறல்
இல்லையா?
ஜெனீவா
மனித உரிமைகள்
பேரவை யில் இலங்கைக்கு
எதிரான அமெரிக்க
தீர்மானம் குறித்து
பாராளுமன்றத்தில்
நடைபெற்ற விவாதத்தில்
அமைச்சர் ரிசாட்
பதியுதீன் ஆற்றிய
உரை
நம்
தாய் நாட்டிற்கெதிராக
ஜெனீவா வில் அரங்கேறிய
ஒரு சதி நாடகம்
தொடர் பாக இவ்வுயர்
சபை விவா தித்துக்
கொண்டிருக்கும்
இவ்வேளை வடக்கில்
சுமார் 22 வருடங்களுக்கு
முன் 24 மணி நேர அவ
காசத்தில் பலவந்தமாக
விரட்டியடிக்கப்பட்ட
முஸ்லிம் சமூகத்தில்
ஒருவனாக அம்மக்களின்
பிரதிநிதியாக
இந்த நாட்டை நேசிக்கும்
ஒருவனாக பேச எழுந்திருக்கிறேன்.
ஜெனீவாவில்
ஏகாதிபத்திய சக்திகளால்
இலங்கைக்கு எதிராக
அரங்கேற்றப்பட்ட
நாடகத்திற்கு
‘மனித உரிமை மீறல்கள்
தொடர் பான பொறுப்புக்கூறல்’
என்பதே கருப்பொருள். இந்நாடகத்தின்
பிரதான இயக்குனர்
இன்று முழு உலகமும்
தன்சுட்டுவிரல்
அசைவிற்கு தலைசாய்க்க
வேண்டும் என்று
எதிர்பார்க்கின்ற
அமெரிக்கா. ஏனென்று கேட்டால்
எட்டி உதை என்பது
இவர்களின் தத்துவம்.
அதனால்தான்
ஈராக்கிற்குள்
ஐ.நா. பாதுகாப்புசபையின்
அனு மதியின்றி
பொய்யை தனக்குத்
துணையாக எடுத்துக்
கொண்டு அத்துமீறிப்
புகுந்து அட்டகாசம்
புரிந்து நாட்டின்
அதிபரைக் கொன்று
ஆயி ரக்கணக்கான
உயிர்களை பலியெடுத்தது
மட்டுமல்லாது
இன்னும் அங்கு
உயிரிழப்பு க்கள்
தொடர்ந்த வண்ணமுள்ளன.
இத்தனைக்கும்
சதம் ஹுசைன் செய்த
குற்றம் அமெரிக்காவின்
தலையாட்டுபொம்
மையாக இருக்க மறுத்ததாகும். லிபியாவில்
கடாபிக்கு எதிராக
உள்நாட்டில் ஏற்பட்ட
ஒரு சிறிய எதிர்ப்பை
எண்ணெய் ஊற்றி
பெரிதாக பற்றவைத்து
பின் கலகக்காரர்
களுக்கு பகிரங்கமாக
ஆயுத உதவிகளும்,
நிதி உதவிகளும்
செய்து கலகத்தில்
ஈடு படுத்தி அவர்களுக்கு
துணையாக தமது வான்
படைகளையும் தாக்குதலில்
ஈடுபடு த்தி பல
உயிர்களை காவு
கொண்டு இறுதி யில்
நிராயுதபாணியாக
இருந்த கடாபியை
யும் கொன் றார்கள்.
ஆப்கானிஸ்தானில்
‘அல்கைதாவையும்,
தாலிபான்களையும்
களையெடுக்கின்றோம்’
என்ற போர்வையில்
அப்பாவி மக்கள்
மீது குண்டு களைப்போட்
டும், துப்பாக்கிகளால்
சுட்டும் கொல்
கின்ற கோரச்செயல்
இன்றுவரை தொடர்கிறது.
‘அல்கைதா
களையெடுப்பு’ என்ற
பெய ரில் பாகிஸ்தானிலும்
அவ்வப்போது ஆளி
ல்லா விமானம் மூலம்
குண்டுகளைப்போட்டு
கொடுமைபுரியும்
கதை தொடர்கிறது. அமெரிக்காவின்
அக்கிரமத்தினால்
அழி கின்ற உயிர்கள்
மனித உரிமைகள்
என்ற வரைவிலக்
கணத்திற்குள்
வருவதில்லை. அமெரிக்க ஜனாதிபதி
பராக் ஒபாமா 3 வரு
டங்களுக்கு முன்பு
‘குவந்தனாமோ குடா’
என்ற இடத்தில்
இயங்கும் தனது
சித்திர வதை முகாமை
மூடுவதாக உறுதியளித்தார்.
ஆனால்
இன்றுவரை அம்முகாம்
மூடப்பட வில்லை. சித்திரவதை
முகாமை அமெரிக்கா
நடத்தி வருவதை
ஒப்புக்கொண்டதுடன்
அதை இன்று வரை
மூடாதிருப்பது
சித்திர வதைகளை
தொடர் வதை ஒப்புக்கொள்
வதுமாகும். இச்சித்திரவதை
முகாமை ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளர் நாயகத்
தின் மேற்பார்வையில்
மூடுவதற்கான நட
வடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்
என்ற ஒரு பிரேரணை
இதுவரை கொண்டு
வரப்பட வில்லை.
சித்திரவதைகளுக்கான
பொறுப்புக்கூறலை
அமெரிக்கா ஏற்றுக்கொள்ள
வேண்டுமென்று
ஒரு பிரேரணை கூட
இன்றுவரை கொண்டுவரப்
படவில்லை. அமெரிக்காவும்
அதன் சகபாடிகளான
சில ஐரோப்பிய நாடுகளும்
சேர்ந்து ஈராக்,
லிபியா, ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் போன்ற
நாடுகளில் செய்த,
செய்து வருகின்ற
கொலைகளுக்கு பொறுப்புக்கூற
வேண்டுமென்று
எதுவித பிரேரணையும்
கொண்டுவரப்படவில்லை.
மனித உரிமை களுக்காக
பேசுகின்ற சர்வதேச
மன்னிப்புச் சபையோ!
அல்லது மனித
உரிமை அமைப்புகளோ
அல்லது ஐரோப்பிய
ஒன் றியமோ குரல்
எழுப்பவில்லை.
நிராயுத பாணிகளாக
கடாபியையும், ஒஸாமா
பின் லேடனையும்
சுட்டுக் கொன்றது,
சர்வதேச சட்டங்களுக்கு
குற்றமாகத் தெரியவில்லை.
இஸ்ரேல்
பலஸ்தீனத்தில்
தொடர்ச்சியாக
புரியும் அட்டூழியத்தை
அங்கீகரிக்கின்ற
அமெரிக்காவுக்கும்
அதன் சகபாடிகளுக்கும்
30 வருடங்கள் இந்நாட்டை
நமது தாயக பூமியை
தனது கோரப்பிடிகளுக்குள்
வைத் திருந்த கொடிய
பயங்கரவாதத்தை
குழி தோண்டி புதைத்தது
குற்றம் என்று
தட்டிக் கேட்கிறார்கள்.
அமெரிக்கா
சர்வதேச ரீதியில்
அப்பாவி உயிர்களை
பலியெடுப்பதுபோல்
உள்நாட் டில் விடுதலைப்புலிகள்
யாரை விட்டுவைத்
தார்கள்? பெளத்தர்களின்
அதியுயர் வணக்
கஸ்தலமான தலதா
மாளிகையை விட்டு
வைத்தார்களா?
அல்லது பெளத்த
மதகுரு மாரை விட்டுவைத்தார்
களா? மத்திய
வங்கி தப்பியதா?
அல்லது மக்கள்
கூடும் இடம்தான்
தப்பியதா? அதுமட்டுமல்லாமல்
காத்தான்குடி
பள்ளிவாசலுக்குள்
புகுந்து தொழுகையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த
அப் பாவி முஸ்லிம்களை
சுடவில்லையா?
சாய்ந்த மருது,
அக்கரைப்பற்று
பள்ளிவாச லுக்குள்
கிரனைட் வீசவில்லையா?
அழிஞ்சி பொத்தானைக்குள்
புகுந்து அப்பாவி
மக்களை அறுத்து
வீசவில்லையா?
ஏறாவூர் சதாம்
ஹுசைன் கிராமத்துக்குள்
புகுந்து கொலைவெறியின்
உச்ச கட்டமாக ஒரு
கர்ப்பிணித்தாயின்
வயிற் றைக் கிழித்து
அதற்குள் இருந்த
சிசுவை எடுத்து
இரண் டாக அறுத்து
வீசவில்லையா? இவ்வாறு புலிகள்
செய்யாத குற்றம்
என்ன? இத்தனைக்கு
மத்தியிலும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் தமது பத
வியை பொறுப்பேற்ற
போது விடுதலைப்
புலிகளை சமாதான
காற்றை சுவாசிக்க
அழைக்கவில்லையா? புலிகள் பேசுவது
போல் நடிக்கவில்லையா?
வேதாளம் மீண்டும்
முருங்கமரம் ஏறவில்லையா?
நீட்டிய சமாதான
கரத்திற்கு பிரதி
உபகார மாக மாவி
லாறில் தண்ணீர்
தரமாட்டோம் என்று
தண் ணீரை தடுக்கவில்லையா?
1990 ஆம் ஆண்டு
சமாதானம் பேசுவோம்.
சரணடையுங்கள்.
என்ற
அன்றைய ஜனாதி பதியின்
உத்தரவை ஏற்று
கல்முனையிலும்,
சம்மாந்துறையிலும்,
அக்கரைப்பற்றிலும்,
பொத்துவிலிலும்
பொலிஸார் சரணடைந்த
பொழுது தமிழ்ப்
பொலிஸாரையும்
தமிழ் சிவில் தொண்டர்
படையினரையும்
வேறாக்கி விட்டு
முஸ்லிம், சிங்கள
பொலிஸாரைக் கொன்ற
இனவாத விடுதலைப்
புலிகளை வேரோடு
அறுத்திருந்தால்
இந்நாடு என்றோ
பொலிவு பெற்றிருக்கும்.
எனவே
மாவி லாறில் தண்ணீர்
தரமறுத்த போதும்
அதே தவறை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ
செய்யவில்லை என்பது
தான் குற்றமா? புலிகளை வேரறுத்ததை
குற்றம் கூறவில்லை.
ஆனால் பொது
மக்கள் பாதிக்கப்பட்டது
தான் குற்றம் என்
பது எதிரணியின்
வாதம். புலிகளை
வேரறுத்த செய்தியை
பொது மக்கள் பாதிக்கப்பட்ட
குற்ற மென்றுதான்
இந்த மேற் கத்தைய
ஏகாதிபத்திய வாதிகளும்
பூதாகரமாய் கூறுகின்றார்கள். ஒரு காலத்தில்
புலிகளின் கட்டுப்பாட்டுப்
பிரதேச த்தில்
வாழ்ந்த தமிழ்
மக்களை மருத்துவ
கார ணங்களுக்காகக்
கூட கொழும்புக்கு
வர அவர் கள் அனுமதிக்கவில்லை.
'பாஸ்'
நடைமுறை மூலம்
அவர் கள் கட்டுப்
படுத்தப்பட்டார்
கள். தமிழ்
மக்களுக்காக புலிகள்
போராடியது உண்மையென்றால்
பொதுமக்களின்
துன் பங்களை அன்று
அவர்கள் கண்டு
கொள் ளாமல் விட்டது
ஏன்? அதே புலிகள்தான்
யுத்தம் ஆரம்பித்ததும்
கோழைத்தன மாக மனித
கேடயங்களாக அப்பாவி
மக்களை பிடித்துவைத்
துக் கொண்டு அவர்கள்
பின்னால் ஒழிந்து
யுத்தம் செய்ய
விளைந் தார்கள்.
அன்று
அப்பாவி மக்களை
யுத்தப் பிரதேசத்தில்
இருந்து விடுதலை
செய்யுங்கள் என்று
அரசாங்கமும், இராணுவமும்
தொடர்ச்சியாக
வேண்டுகோள்களை
விடுக் கவில்லையா? பொதுமக்கள்
மீது அக்கறை இருந்திருந்
தால் புலிகள் ஏன்
அவர்களை விடுவிக்க
வில்லை. அவ்வாறு
விடுவித்திரு
ந்தால் பொதுமக்களின்
உயிரிழப்புக்கள்
தவிர்க்கப் பட்டிருக்கமாட்டாதா?
புலிகள்தான்
மனிதாபிமானமற்ற
அரக்கர் கள் என்று
அனைவருக்கும்
தெரியும். ஆகக்குறைந்தது
இன்று அந்தப் பொதுமக்க
ளுக்காக குரல்கொடுப்பதாக
கூறுகின்ற தமிழ்
தேசிய கூட்டமைப்பு
அன்று ஏன் விடுதலைப்
புலிகளிடம் பொதுமக்களை
வெளியே வர அனுமதியுங்கள்
என்ற ஒரு வேண்டுகோளையாவது
விடுக்கவில்லை.
மனித வரலாற்றில்
தமக்கெதிராக யுத்தம்
செய்தவர்களுக்கும்
உணவளித்து யுத்தம்
செய்த மனிதாபிமானம்
இலங்கையில்தான்
நடைபெற்றது என்பதையும்
நாம் மறந்து விடலாகாது.
அன்று
விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டில்
வாழ்ந்த மக்களுக்கு
அர சாங்கம் உலருணவு
வழங்கிய பொழுது
அங்கிருந்த சில
அரச அதிகாரிகள்
திட்ட மிட்டு மக்களின்
எண்ணிக்கையை அதிக
மாகக் காட்டி அரசாங்
கத்திடமிருந்து
உணவினைப்பெற்று
விடுதலைப் புலிகளு
க்கு கையளித்தார்கள்.
அவ்வாறான
அதி காரிகள் இன்று
கையும், களவுமாக
பிடி பட்டிருக்கின்றார்கள். இன்று
மக்கள் இழப்பு
எண்ணிக்கையை விடுதலைப்
புலிகளுக்கு உலருணவு
கொடுப்பதற்காக
பொய்யாக காட்டிய
எண்ணிக்கையோடு
ஒப்பிட்டு உயிரிழப்பை
பெரிய ஒரு எண்ணிக்கையாக
காட்ட முற்படுகிறார்கள்.
இவைகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு
தெரியாது என்று
கூற முடியுமா? நல்லிணக்க ஆணைக்
குழு என்பது எமது
நாட்டில் எமது
ஜனாதி பதியினால்
நியமிக்கப்பட்ட
குழுவாகும். அதன் சிபாரிசுகளை
எவ்வாறு அமுல்
படுத்த வேண்டும்
என்று மனித உரிமை
மீறல்களின் மொத்த
நாயகன் சொல் லித்தர
வேண்டிய அவசியமில்லை.
அன்று
நல்லிணக்க ஆணைக்குழு
நிய மக்கப்பட்ட
பொழுது அதனை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
அங்கீகரிக்கவில்லை. அவர்கள் நல்லிணக்க
ஆணைக்குழு முன்
சாட்சியமளிக்க
வுமில்லை. ஆனால்
அதே தமிழ் தேசிய
கூட்டமைப்பு நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகளை அமுல்
படுத்த ஜெனீவா
பிரே ரணையை ஆதரிக்
கக் கோரி ஐக்கிய
நாடுகள் மனித உரிமை
கவுன்ஸில் நாடுகளுக்கு
கடிதம் எழுதுகிறார்
கள் ஏன் இந்த முரண்பாடு.
அரசாங்கம்
ஏற்கனவே நல்லிணக்க
ஆணைக் குழுவின்
பல சிபாரிசுகளை
அமுல்படுத்தி
இருக்கின்றது. அதைப்பற்றி
அவர்கள் பேசு வதில்லை.
இடம்பெயர்ந்த
மக்கள் அதிவேகமாக
மீள்குடியேற்றப்பட்டி
ருக்கின்றார்கள்
என ஜப் பான் உட்பட
பல நாடுகள் கூட
ஆச்சரியப்படு
கின்ற அளவுக்கு
ஜனாதிபதி அவர்களின்
வழி காட்டலில்
அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ அவர்களது
தலைமைத்துவத்தின்
கீழ் நாம் அதனை
செய்து முடித்தோம்.
சுமார்
11,000 முன்னாள் விடுதலைப்
புலி போராளிகள்
புனர்வாழ்வளிக்கப்
பட்டு இன்று சமூக
நீரோட்டத்தில்
கலக்கவிடப்பட்டிருக்கிறார்
கள். இவர்களில்
அதிகமானோர் பலவந்த
மாக விடுதலைப்
புலிகளால் உள்வாங்
கப்பட்டவர்கள்.
அதிலும் பலர்
சிறுவர்கள். அப்பொழுதெல்லாம்
தமிழ்த் தேசியக்
கூட் டமைப்பினர்
இவற்றுக்கெதிராக
குரல்கொடு க்கவில்லை.
மாறாக விடுதலைப்
புலிகளின் ஊதுகுழலாக
செயற்பட்டார்கள்.
இந்தியாவின்
தமிழ் நாட்டில்
இலங்கை தமிழ் மக்களை
தமது அரசியல் வியாபா
ரத்தின் விற்பனைப்
பொருளாக மாற்றி
விட்டார்கள். வியாபாரம்
என்றாலே போட்டி
தானே! அதனால்தான்
கட்சிகள் தமக்கி
டையே இவ்வியாபாரத்தில்
யார் முதலாம் இடம்
பெறுவது என நாளாந்தம்
போட்டி போடுகிறார்கள்.
நான்
ஜனாதிபதியின்
விசேட செய்தி யோடு
கட்டார் மன்னர்
அவர்களைச் சந்
தித்தேன். அவர்கள் எம்முடன்
இருப்பதாக கூறினார்கள்.
அதேபோன்று
பல முஸ்லிம் நாடுகளின்
பிரதிநிதிகளைச்
சந்தித்தேன்.
அவர்கள் நம்
ஜனாதிபதி மீதும்
நாட்டின் மீதும்
கொண்டிருக்கின்ற
நல்லபிப்பிராயத்
தைத் தெரிவித்தார்கள்.
அதேபோன்ற எமக்கு
ஆதரவாக வாக்களித்தார்கள்.
அவர்களுக்கு
எனது மனமார்ந்த
நன்றி களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை
முஸ்லிம்களின்
மார்க்க உயர் பீடமாக
செயற்படும் ஜம்மியதுல்
உலமாவின் தலைவர்
மெளலவி ரிஸ்வி
முப்தி, மெளலவி
அகார் முஹம்மத்
ஜெனீவாவிற்கு
வந்து முஸ்லிம்
நாட்டுப் பிரதி
நிதிகளுடன் பேசினார்கள்.
விடுதலைப்
புலிகள் முஸ்லிம்
கள் மீது கட்டவிழ்த்து
விட்ட கொடுமை களை
எடுத்துரைத்தார்கள்.
அந்தக்
கொடுமை கள் மனித
உரிமை மீறல் என்ற
தலைப் பில் எந்த
மனித உரிமைகள்
ஆர்வலர்களா லும்
பார்க்கப்படாத
துரதிஷ்டத்தை
எடுத்துக் கூறினார்கள். 20 வருடங்களுக்கு
முன்பு உடுத்திருந்த
உடையுடன் விரட்டப்
பட்டு விரக்தியின்
விளிப்பில் இன்றுவரை
இடம்பெயர்ந்தவர்கள்
என்ற முத்திரையைப்
பதித்துக்கொண்டு
வாழ்கின்ற எமது
முஸ்லிம் சகோதரர்களின்
இழி நிலையை எடுத்துக்
கூறினார்கள். மஹிந்த
ராஜபக்ஷ என்ற ஒருவர்
ஜனாதிபதியான பின்புதான்
இந்த முஸ்லிம்
கள் நிம்மதிக்
காற்றைச் சுவாசிப்பதையும்
தமது சொந்த இடங்களுக்கு
திருப்பிச் செல்ல
முடிந்ததையும்
முஸ்லிம்கள் இந்நாட்டு
ஜனாதிபதிக்கு
நன்றிக்கடன் பட்டிருப்பதையும்
எடுத்துக் கூறினார்கள்.
தாய் நாட்டை
நேசிப்பது முஸ்லிம்களின்
கட்டாயக் கடமையாகும்.
அந்த
வகையில் முஸ்லிம்கள்
மார்க்க உயர் பீடம்
என்ற முறையில்
அவர்கள் அந்தக்
கடமையைச் செய்தார்கள். அவர்களுக்கும்
நன்றி செலுத்துகிறோம்.
இந்நாட்டு
மக்கள் சாதி, இன,
மத பேதமின்றி தெருக்களில்
இறங்கி இப்பிரேரணைக்கு
தமது எதிர்ப்பை
வெளியிட்டார்கள்.
பல்லாயிரக்கணக்கான
முஸ்லிம்களும்
கலந்து கொண்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும்
நாம் நன்றி தெரிவிக்கின்றோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |