|
||||
|
தமிழ் தேசிய காங்கிரஸ்
பற்றி
சுதந்திர
இலங்கையில் ஆட்சியைக்
கைப்பற்றும் நோக்கில்
குறுகிய இனவாதத்தை
முன்வைத்து அரசியலை
முன்னெடுத்தமை
எழுபதுக்களின்
இறுதிப் பகுதியில்
கால்நூற்றாண்டு
கால யுத்தம் ஒன்றுக்கு
வித்திட்டது வரலாறாகி
உள்ளது. இந்த உள்நாட்டு
யுத்தம் மே 18 2009இல்
முடிவுக்கு வந்த
போதும் உள்நாட்டு
யுத்தத்துக்கு
அடிப்படைக் காரணமாக
இருந்த இன முரண்பாட்டைத்
தீர்ப்பதற்கு
காத்திரமான முயற்சிகள்
இதுவரை எடுக்கப்படவில்லை.
மாறாக ஜனநாயகமற்ற
அரசியல் போக்கு
நாடு முழுவதும்
காணப்படுகிறது.
இது குறிப்பாக
தமிழ் மக்களின்
வரலாற்றுத் தாயகங்களான
வடக்கு கிழக்கிலும்
காணப்படுகின்றது.
இந்நிலையில்
இலங்கையின் தேசிய
சிறுபான்மை இனங்கள்
குறிப்பாக தமிழ்
மக்கள் சமத்துவமாகவும்,
கௌரவமாகவும் வாழ்வதற்கான
அடிப்படை ஜனநாயக
உரிமைகளைப் பாதுகாப்பது
அவசியமாகிறது. பாரிய
இழப்புகளுக்கு
முகம் கொடுத்துள்ள
மக்கள் தமது இழந்த
உரிமைகளை மீட்டெடுப்பதற்கான
வாய்ப்புகளை அதிகரிப்பது
அதன் அரசியல் தலைமைகளின்
பொறுப்பும் கடமையும்
ஆகும். ஆனால்
துரதிஸ்ட வசமாக
தமிழ் தலைமைகளுக்கு
இடையே தொடர்ந்து
நிலவுகின்ற அரசியல்
மற்றும் தனி நபர்;
முரண்பாடுகள்,
அரசின் பிரித்தாளும்
அரசியல் தந்திரங்கள்;
தமிழ் மக்களின்
உரிமைக்கான முன்னெடுப்புகளை
மேலும் வலுவிழக்கச்
செய்கின்றது.
வட
அயர்லாந்தில்
இதே போன்ற நிலமைகள்
காணப்பட்ட போதிலும்
அப்பகுதி மக்கள்
நம்பிக்கை தளராது
செயற்பட்டார்கள். இரு பகுதி
மக்கள் மத்தியில்
காணப்பட்ட நல்லிணக்கம்,
அமைதி என்பவற்றில்
அசையாத நம்பிக்ககையுற்ற
மக்கள் குறிப்பாக
பெண்கள், மாணவர்கள்
என்போர் அரசியல்வாதிகள்
மீது அதிகளவு அழுத்தங்களைப்
பிரயோகித்தார்கள்.
சிவில் அமைப்புகளைத்
தோற்றுவித்து
ஆயுதப் போருக்கு
எதிராக போராடினார்கள்.
அவர்களின்
விடாப்பிடியான
போராட்டம் பெரியவெள்ளி
ஒப்பந்தமாக மலர்ந்தது.
இன்று ஆயுதங்கள்
பெரும்பாலும்
மௌனித்த அமைதியான
பிரதேசமாக வட அயர்லாந்து
காணப்படுகிறது.
இந்த
அனுபவங்களைக்
கருத்தில் கொண்டு
தமிழ் அரசியல்
கட்சிகளிடையே
ஒரு புரிந்துணர்வை
ஏற்படுத்துவதும்
தமிழ் மக்களுடைய
அரசியல் அபிலாசைகளை
நிறைவேற்றுவதற்கான
முன்னெடுப்புகளை
மேற்கொள்வதும்
என்றுமில்லாத
அளவுக்கு அவசியம்
என்பதை புரிந்து
கொண்டோம்.
இதன்
அடிப்படையிலேயே
தமிழ் அரசியல்
கட்சிகளை ஒன்றாகக்
கொண்டுவரும் ஒரு
அமைப்பு அவசியம்
என்ற எண்ணக்கரு
தமிழ் தேசியக்
காங்கிரஸ் என்ற
அமைப்பாக பரிணமித்துள்ளது.
இந்த
எண்ணக் கருவுக்கு
செயல் வடிவம் கொடுக்க
இலங்கையில் உள்ள
தமிழ் அரசியல்
கட்சிகளின் இலண்டன்
கிளைப் பிரதிநிதிகளை
அணுகிய போது அவர்கள்
முழுமனதடன் இந்த
முயற்சிக்கு ஆதரவு
தந்தமை ஒற்றுமையின்
அவசியத்தையும்
தேவையையும் அவர்கள்
உணர்ந்திருப்பதை
வெளிப்படுத்தியது.
மேலும் கட்சிகளின்
பிரிதிநிதிகள்
இலங்கையில் உள்ள
தங்கள் அரசியல்
தலைமைகளுடனும்
தொடர்பு கொண்டு
இந்த ஒன்றுபட்ட
முயற்சிக்கு அவர்களுடைய
முழுமையான ஆதரவையும்
வழங்கி இருந்தனர்.
இப்பின்னணியில்
தமிழ் தேசியக்
காங்கிரஸ் ஏப்ரல்
03 2011 முதல் ஓராண்டுகளாக
தமிழ் அரசியல்
கட்சிகளுடன் கலந்துரையாடல்களை
மேற்கொண்டு, புரிந்துணர்வை
ஏற்படுத்துவதற்கு
முயற்சிகளை எடுத்து
வருகின்றது. மேலும் இலங்கையின்
இனப்பிரச்சினைக்கு
அரசியல் ரீதியான
தீர்வுகாண்பதற்கான
ஆவணத்தை தமிழ்
கட்சிப் பிரதிநிதிகளின்
ஒத்துழைப்புடன்
தயாரித்து அதனை
வெளியிடுகின்றது.
தமிழ்
தேசியக் காங்கிரஸ்,
நாட்டின் தேசிய
சிறுபான்மை இனங்களின்
குறிப்பாக தமிழ்
அரசியல் கட்சிகளின்
சமத்துவ பங்களிப்புடன்
கௌரவமான நிரந்தரமான
அரசியல் தீர்வை
எட்டுவதற்கான
இலங்கையின் தேசிய
சிறுபான்மை இனங்களின்,
குறிப்பாக தமிழர்களுக்கான
ஜனநாயகக் குரலாக
செயற்பட திட்டமிட்டுள்ளது.
தமிழ் தேசியக்
காங்கிரஸ் ஜனநாயகம்,
நீதி, சமாதானம்,
சுதந்திரம், சமத்துவம்,
விடுதலை ஆகிய ஜனநாயகப்
பண்புகளை உறுதியாக
நம்புகிறது.
மேலும் இவற்றை
பேச்சுவார்த்தை
ஊடாகவும் வன்முறையற்ற
வழியிலுமே அடைய
முடியும் என்றும்
உறுதியாக நம்புகிறது. About Tamil National Congress
The historical development and the way of life of
the Sri Lankan Tamil people were shaken by the advent of the successive Sri
Lankan Governments since independence.
Political negotiations in order to bring peaceful
solution to the ethnic conflict took place between the successive Singhalese
governments and the Tamil moderate leaderships but failed drastically. Since
these failures the Tamil youth sought a path of violence through which they
intended to form a separate state called Tamil Eelam. Their inability to change
their policies to suit the international political climate caused serve re
defeat for them.
The war was bought to an end in May 2009 and even
three years life on Sri Lanka particularly to Tamils has not changed for
better. Even though certain steps are being taken to provide facilities to the
displaced Tamils no action has been taken by the Sri Lankan Government on
political front.
It is worth to note that no party in Sri Lanka has
got any policies and framework to solve the ethnic problem. Particularly the
parties among Tamils do not see eye to eye in bringing out a political solution
to the Tamil Community and this is really heart breaking.
Tamils need a Political Solution urgently in Sri
Lanka and the delay in this causes severe hardship to our community that has
been suffering from untold grievances particularly after the defeat of the
L.T.T.E.
Even though similar political situation existed in
Northern Ireland, people from Northern Ireland particularly women and students
worked with vigour to bring peace and harmony between the two communities by
exerting much pressure on politicians. They formed civil societies and fought
against arm struggle. Their un relentless action
yielded Big Friday agreement and now the country enjoys its political freedom
prospering on the path of non violence.
We, some of the Diaspora sincerely felt that
something had to be done in this respect and contacted various Sri Lank an
Tamil political parties and sections of the people who work in the community
and after having a number of meetings it was decided to float The Tamil
National Congress bringing all the Tamil parties representing the Tamils in Sri
Lanka together, to work with a minimum programme
where
every one of them could be bought to a table together at least in overseas to
promote the aspirations of Tamils in Sri Lanka.
We had a number of meetings where ways of bringing
all the parties together were discussed at length and now we are proud to
announce today that it has been decided to float Tamil National Congress at
this gathering.
It is Tamil National Congress’ resolve to unite
different Tamil political parties and their leaderships together on the basis
of winning absolute equality with the Singhalese and other communities through
the path of non violence under the unitary framework of Sri Lanka and these
goals to be achieved through political negotia-tions. The constitution which we
release today is only intended as a model on which all the Tamil political
parties can work together on a minimum programme to bring everyone together to
a negotiating table without giving up their policies and princi-ples.
We sincerely believe that through the Tamil National
Congress we can bring all different Tamil Political Parties together and raise
our political objectives in one voice which is the most vital need at this
juncture where the Tamils cry for Unity.
We undertake the responsibility without any
prejudice and only on genuine intention to make our brethren in Sri Lanka to
live in peace and harmony enjoying equal rights with Sri Lankan majority
Community.
We believe in democracy, justice, peace, freedom,
equality and liberation and Tamil National Congress is in no doubt that it can
be only possible through negotiations and following the path of non violence.
தமிழ்
தேசியக் காங்கிரஸ்:
அறிமுகம்
- இலக்கு - வேலைத்திட்டம்
தமிழ்
தேசிய காங்கிரஸின்
உருவாக்கமும்
அதன் இலக்கும்
இலங்கை
சுதந்திரம் அடைந்த
காலம் முதல் நாட்டில்
வாழும் தேசிய சிறுபான்மை
இனங்களின் உரிமைகள்
தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு
உள்ளாகி வருகிறது. இதற்குப்
பிரதான காரணம்
அரசியல் கட்சிகளின்
இனவாத அடிப்படையிலான
போக்குகளாகும்.
இவ் இனவாத அரசியலிலிருந்து
நாடு மீள்வது தவிர்க்க
முடியாத தேவையாகும்.
சிறுபான்மை
இனங்களின் உரிமைகள்
பாதுகாக்கப்படுவதற்கும்
வளர்ப்பதற்கும்
ஏற்ற புறச் சூழலை
உருவாக்குவதற்கு
அரசியல் கட்சிகள்
மத்தியிலே இணக்கம்
ஏற்படுவது அவசியமாகிறது.
கடந்த 30 வருடகால
வன்முறை கலந்த
அரசியல் பின்புலம்
இனங்கள் மத்தியிலே
பலத்த இடைவெளியை
ஏற்படுத்தியுள்ளது.
இது இனங்கள்
மத்தியில் மட்டுமல்லாது
கட்சிகள், இயக்கங்கள்,
தனி நபர்கள் மத்தியிலும்
சந்தேகம், அவநம்பிக்கைகளை
மிகவும் ஆழமாக
விதைத்துள்ளது.
இதனால் கட்சிகள்,
இயக்கங்கள் இடையே
இணக்கத்தை ஏற்படுத்துவது
கடினமாகியுள்ளது.
இந்நிலை தொடர்ந்து
நீடிப்பதால் அரசியல்
தீர்வு தொடர்பாக
அரசுடன் ஒருமித்த
குரலில் பேச்சுவார்த்தைகளை
நடத்துவதும், பொருத்தமான
தீர்வுகளை முன்
வைப்பதும் கேள்விக்குறியாகவே
உள்ளது. சிறுபான்மை
இனங்களின் உரிமைகளை
ஒருமித்த குரலின்
அடிப்படையில்
பேரம்பேசி பெறவேண்டுமெனில்
சிறுபான்மையினரின்
அரசியல் கட்சிகளிடையே
நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவது
முன் நிபந்தனையாகிறது.
இதற்கான
ஆரம்ப நடவடிக்கையாக
தமிழ் அரசியல்
கட்சிகளிடையே
நல்லிணக்கத்தை
ஏற்படுத்தவது
பொருத்தமாக அமையும்
எனக் கருதப்பட்டது. தமிழ்
அரசியல் கட்சிகளிடையே
தமிழ் மக்களின்
உரிமைகள் தொடர்பாக
அடிப்படை முரண்பாடுகள்
காணப்படாமையாலும்,
அரசியல் தீர்வின்
அடிப்படைகள் குறித்து
பொதுவான இணக்கம்
காணப்படுவதாலும்
ஏற்கெனவே இதற்கான
முயற்சிகள் எடுக்கப்பட்டு
ஓரளவு சாத்தியமாகியதாலும்,
இத்தகைய நடவடிக்கைகளை
தொடர்ந்து எடுப்பது
அவசியம் எனக் கருதப்பட்டது.
தாயகத்தில் செயற்படும்
தமிழ்க் கட்சிகளின்
கிளைகள் வெளிநாடுகளில்
இயங்குவதாலும்,
இவற்றில் செயற்படுவோர்
மத்தியில் காத்திரமான
நல்லுறவு காணப்படுவதாலும்
முதலில் புலம்பெயர்
நாடுகளில் இயங்கும்
கட்சி செயற்பாட்டாளர்கள்
மத்தியிலே நல்லுறவை
வளர்ப்பதற்கான
முயற்சிகள் தேவை
என்ற வகையில் பொது
அமைப்பு ஒன்றினை
நிறுவுவது எனக்
கருதப்பட்டது.
இப்
பொது அமைப்பின்
அரசியல் மற்றும்
உடனடிக் கோரிக்கைகள்
எவை?
என்பது குறித்து
நீண்ட விவாதங்கள்
இடம்பெற்றிருந்தன.
தமிழ்க் கட்சிகளிடையே
காத்திரமான இணக்கத்தை
ஆரம்ப நோக்காக
கொண்டிருப்பதால்
ஏற்படுத்தப்படவுள்ள
அமைப்பு தற்போதைக்கு
தமிழ் தேசிய காங்கிரஸ்
Tamil National Congress (TNC)
என அழைக்கப்படலாமென
தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில்
காணப்படும் இனப்பிரச்சனையின்
அடிப்படைத் தாற்பரியங்கள்
தெளிவாக அறியப்பட
வேண்டும். நாடு
சுதந்திரம் அடைந்த
காலம் முதல் இன்று
வரை தீராத பிரச்சனையாக
காணப்படும் பொருளாதாரமும்
இனப்பிரச்சனையும்
மேலும் மேலும்
சிக்கல் நிலையை
அடைந்து செல்வதற்கான
அடிப்படைக் காரணிகள்
தெளிவாக நோக்கப்பட
வேண்டும். 1972ம் ஆண்டு
முதல் தேசத்தின்
அரசியல் வரலாறு
குடியரசு என்ற
ஆரம்பநிலைக்கு
எடுத்துச் செல்லப்பட்ட
போதிலும், 1978ம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட
இரண்டாவது குடியரசு
யாப்பின் அறிமுகம்
மேலும் மேலும்
அரசியல் நெருக்கடிகளை
தோற்றுவித்தது.
நிறைவேற்று
அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி ஆட்சி
முறை இதற்கான பிரதான
காரணமென கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே
சந்திரிகா பண்டாரநாயகா,
மகிந்த ராஜபக்ஸ
ஆகியோர் தமது ஜனாதிபதி
தேர்தல் விஞ்ஞாபனங்களில்
ஜனாதிபதி முறையை
ஒழிக்கப்போவதாக
வாக்குறுதி அளித்திருந்மை
குறிப்பிடத்தக்கது.
1978ம்
ஆண்டில் நிறைவேற்று
ஜனாதிபதி ஆட்சிமுறை
அறிமுகப்படுத்தப்பட்ட
போது பொருளாதாரத்தில்
மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக
அன்றைய ஜே ஆர்
அரசு தெரிவித்திருந்தது. தற்போது
30 ஆண்டுகளுக்கு
மேல் உருண்டோடி
விட்டது. ஆனால்
இன்றைய அரசின்
தகவலின் அடிப்படையில்
பார்க்கும்போது
மேல் மாகாணம் மட்டும்
மொத்த தேசிய உற்பத்தியின்
50 சதவீதத்திற்கு
அதிகமாக வழங்கியதாகவும்,
நாட்டின் ஏனைய
8 மாகாணங்களின்
உற்பத்தி 50 சதவீதமென
அறியும்போது பொருளாதாத்தின்
பின்தங்கிய நிலமைகளை
இதன் மூலம் புரிந்துகொள்ள
முடியும். இது
நாட்டில் சமச்சீரற்ற
பொருளாதாரம் காணப்படுவதை
இவை தெளிவாகக்
காட்டி நிற்கிறது.
அதனால் அரசியல்
பரவலாக்கத்துடன்
கூடிய பொருளாதார
சமச்சீராக்கம்
ஒன்றின் அவசியம்
புலப்படுகிறது.
1978ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட
அரசியல் அமைப்பும்
அதனைத் தொடர்;ந்த அரசியல்
யாப்புத் திருத்தச்
சட்டமூலங்களினால்
ஏற்பட்ட மாற்றங்கள்
குறிப்பாக, பாராளுமன்றம்
பலவீனப்படுத்தப்பட்டமை,
ஜனாதிபதியின்
கைகளில் நிறைவேற்று
அதிகாரங்கள் குவிக்கப்பட்டமை
இனப்பிரச்சினையை
மேலும் மேலும்
சிக்கலாக்கியது.
தமிழ் மக்களின்
உரிமைகளுக்கான
போராட்டங்கள்
ஆரம்பத்தில் சாத்வீகமானதாகவும்,
ஐக்கிய இலங்கைக்குள்
காத்திரமான தீர்வினை
நோக்கியதாகவும்
இருந்தன. இருப்பினும்
இவை இலங்கை அரசின்
படைப் பலத்தினால்
ஒடுக்கப்பட்டன.
சிங்கள தேசிவாத
சக்திகள் நாட்டின்
சிறுபான்மை இனங்களை
தேசிய நீரோட்டத்தில்
இணைப்பது தொடர்பாக
தெளிவான போக்கைக்
கொண்டிருக்கவில்லை.
அரசு ஒடுக்குமுறைகள்
மூலம் ஜனநாயக உரிமைக்கான
குரல்களை நசுக்க
எண்ணினர். இதனால் மிதவாத
தமிழ் அரசியல்
சக்திகளின் கரங்களிலிருந்த
அரசியல் அதிகாரம்
தீவிரவாத சக்திகளின்
கைகளிற்கு மாறியது.
இதன் விளைவாக
நாடு பெரும் ஜனநாயக
மற்றும் பொருளாதார
மேலும் மனித அழிவையும்
சந்தித்தது.
இவற்றின் விளைவாக
நாட்டின் ஒட்டுமொத்தமான
ஜனநாயக நிறுவனங்கள்
பலவீனப்பட்டுள்ளன.
மே
19ம் திகதிக்கு
பின்னர் வன்முறை
சார்ந்த அரசியல்
போக்குகள் தற்போது
இல்லாதொழிந்த
நிலையில் மீண்டும்
ஐக்கிய இலங்கைக்குள்
கௌரவமான தீர்வை
நோக்கிய சிந்தனைகள்
பரவத் தொடங்கியுள்ளன.
ஆனால் இன்னமும்
சிங்கள பௌத்த தேசியவாத
சக்திகள் அதன்
தாற்பரியங்களை
உணர்ந்துள்ளதாக
தெரியவில்லை.
தற்போது சிங்கள
பௌத்த தேசியவாத
சிந்தனைகள் இலங்கைத்
தேசியம் என்ற போர்வையில்
விரிவடைவதாக சிறுபான்மையினர்
மத்தியில் அச்ச
உணர்வு ஏற்பட்டுள்ளது.
இப்பின்னணியிலிருந்தே
இனப்பிரச்சனைக்கான
அரசியல் தீர்வு
மற்றும் பொருளாதார
மாற்றங்களின்
தேவைகள் குறித்து
முடிவு செய்ய வேண்டியுள்ளது. உலகம்
முழுவதிலும் வளர்ந்து
வரும் கட்டுப்பாடற்ற
திறந்த பொருளாதாரம்
சமூகங்களிடையே
பரஸ்பரம் இறுக்கமான
உறவுகளையும் புதிய
அணுகுமுறைகளையும்
திறந்துள்ளது.
மொழி, மத வேறுபாடுகளுக்கு
அப்பால் பொருளாதாரம்
சமூகங்களிடையே
இணக்கத்திற்கான
சந்தர்ப்பங்களையும்
வழங்கியுள்ளது.
எனவே கடந்த முப்பது
ஆண்டுகால வன்முறை
அரசியலின் பின்னர்
எற்பட்டுள்ள புதிய
நிலமைகள் நாட்டில்
எற்பட்டுவரும்
ஜனநாயகத்திற்கான
கோரிக்கைகள் என்பவற்றைக்
கருத்தில் கொண்டு
பார்க்கையில்
அரசியல் அமைப்பில்
காத்திரமான மாற்றங்கள்
மேற்கொள்வது அவசியமாகிறது.
நாட்டில்
தற்போதைய அரசியல்
சூழ்நிலைகளுக்கு
ஏற்ப அரசியல் அமைப்பில்
மாற்றங்களை எற்படுத்துவது
நீண்ட காலத்தேவை.
இம்மாற்றங்களை
நோக்கிய தயாரிப்புகளை
மேற்கொள்ளும்
அதேவேளை உடனடியாகத்
தீர்வு காணப்பட
வேண்டிய விடயங்களை
வற்புறுத்திச்
செல்வதும் அவசியமாகிறது.
இதன்
அடிப்படையில்,
இலங்கைத் தீவில்
வாழும் தேசிய இனங்கள்
அமைதியோடும் நிரந்தர
சமாதானத்தோடும்
வாழ்வதற்கு காத்திரமான
அரசியல் தீர்வு
அவசியம் என்பதை
காங்கிரஸ் வற்புறுத்துகிறது.
அவ்வாறான அரசியல்
தீர்வு நாட்டின்
இறைமைக்கு அச்சுறுத்தல்
அற்றதாகவும், அத்
தேசிய எல்லைக்குள்
வாழும் சகல சமூகங்களும்
சமத்துவத்துடனும்
சமஉரிமையோடும்;
பாதுகாப்புடனும்
கௌரவத்தோடும்
வாழும் வகையில்
சகல சமூகங்களும்
ஏற்றுக் கொள்ளும்
வகையிலான தீர்வு
ஒன்றினை காங்கிரஸ்
வற்புறுத்துகிறது.
தற்போதுள்ள அரசியல்
சூழலைக் கருத்தில்
கொண்டு பார்க்கையில்
தேசிய இனங்களிடையே
பரஸ்பர நம்பிக்கையை
ஏற்படுத்தும்
வகையில் சில ஆரம்ப
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு
அரசை வலியுறுத்துவது
அவசியமாகிறது.
அரசியல் தீர்வினை
அடைவது என்பது
நீண்ட பல விவாதங்கள்,
விட்டுக்கொடுப்புகள்
என்பவற்றைக் கடந்து
செல்லவேண்டியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள்
தொடர்ந்து இடம்பெறும்
அதேவேளை போரினால்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள
தமிழ்ப் பிரதேசத்தினை
அபிவிருத்தி செய்வதும்
அவசியமாகிறது.
அபிவிருத்தி
என்பது மக்களின்
ஜனநாயகப் பங்களிப்புடன்
இடம்பெறுவது அவசியமாகிறது.
சுருக்கமாக
கூறுவதாயின் ஜனநாயகம்
இல்லாமல் அபிவிருத்தி
இல்லை அதேபோன்று
அபிவிருத்தி இல்லாமல்
ஜனநாயகம் சாத்தியமில்லை.
இதனைக் கருத்தில்
கொண்டே அரசியல்
தீர்வு தொடர்பாக
மேற்கொள்ள வேண்டிய
ஆரம்ப செயற்பாடுகள்
குறித்து காங்கிரஸ்
தீர்மானங்களை
மேற்கொண்டுள்ளது.
அரசியல்
தீர்வுக்கான அடிப்படைகள்:
அரசியல்
தீர்வை எட்டுவதற்கான
அணுகுமுறைகள்
குறித்து முதலிலே
தெளிவான விவாதம்
நடத்தப்பட்டது. கடந்தகால
அரசியல் வரலாற்றில்
இருந்து கற்றுக்கொண்ட
பாடங்கள், நடைமுறைகள்
அதனால் பெரும்பான்மை
இனத்தவரிடையே
ஏற்பட்டு வரும்
கடும் போக்குகள்
போரின்போது சர்வதேச
சமூகம் குறிப்பாக
இந்திய அரசின்
நிலைப்பாடுகள்
கவனத்தில் கொள்ளப்பட்டு
அதன் பின்னணியில்
பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டன.
இலங்கையில்
வாழும் தேசிய சிறுபான்மை
இனங்களின் எதிர்காலம்
என்பது ஐக்கிய
இலங்கைக்குள்
கௌரவமான தீர்வினை
எட்டுவதன் மூலமே
சாத்தியமாகும்
எனவும், இவ்வாறான
ஒரு தீர்வு பேச்சுவார்த்தை
மூலம் அடையப்பட
வேண்டும் எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையிலான
நல்லிணக்கம், ஜனநாயக
அரசியல் தீர்வுக்கான
வழிமுறைகள் பெரும்பான்மை,
சிறுபான்மை என்ற
அளவுகோல்களுக்கு
அப்பால் பல்லின
மக்களின் தாயகம்
என்பதால் தேசத்தின்
வளர்ச்சியை மையமாகக்
கொண்டே நோக்கப்பட
வேண்டும். இவை
எக்காரணம் கொண்டும்
வன்முறைசார்ந்ததாக
அமையக் கூடாது
எனவும், அவ்வாறு
வன்முறைiயைத் தூண்டும்
எந்த முயற்சியையும்
அது அரச வன்முறைறையாயினும்
காங்கிரஸ் முற்றாக
நிராகரிக்கும்
எனவும் தீர்மானித்துள்ளது.
வன்முறை
பயங்கரவாதம் தேசிய
ஐக்கியத்தை சிதைப்பதற்கான
முயற்சிகள் போன்றவற்றிற்கு
எதிராக செயற்படும்
அரசியல் சக்திகள்,
இயக்கங்கள், பொது
அமைப்பகள், தனிநபர்கள்
போன்றோரை காங்கிரஸில்
இணைந்து செயற்படுமாறு
இச்சந்தர்ப்பத்தில்
அழைப்புவிடுகிறது.
கடந்தகால அரசியல்
பாதையில் இருந்து
முற்றாக விலகி
நாட்டில் வாழும்
தேசிய இனங்களின்
தனித்துவங்களைப்
பேணும் வகையிலும்,
தேசிய அளவில் பலமான
ஜனநாயக நிர்வாகக்
கட்டுமானங்களை
உருவாக்கவும்
காங்கிரஸ் உதவும்.
அரசியல்
தீர்விற்கான முன்மொழிவுகள்:
இலங்கை
- இந்திய ஒப்பந்தத்தின்
அடிப்படையில்
உருவாக்கப்பட்ட
அரசியல் அமைப்பின்
13வது திருத்தம்
மாகாணசபைகள் உருவாக்கம்,
அதிகாரப் பரவலாக்கம்,
மத்திய மற்றும்
மாகாணங்களுக்கும்
இடையேயான உறவு
தொடர்பான முக்கியமான
கோட்பாட்டு அம்சங்களையும்
உள்ளடக்கி உள்ளது.
மாகாணசபைகள்
உருவாக்கம் நாடு
முழுவதும் செயற்பட்டு
வருகிறது.
இச்சிக்கல்களை
நீக்கி தேசிய சிறுபான்மை
இனங்களின் ஜனநாயக
உரிமைகளை வழங்குவதற்கான
ஆரம்ப நிகழ்வாகவே
இலங்கை-இந்திய
ஒப்பந்தம் உருவானது
எனவே 13வது திருத்த
அமுலாக்கம் இலங்கை-இந்திய
ஒப்பந்தத்தின்
முழுமையான சாராம்சங்களை
உள்ளடக்கியதாக
அமைதல் வேண்டும்.
எனவேதான் இலங்கை-இந்திய
ஒப்பந்ததின் அடிப்படையில்
தற்போதைய அரசியல்
சூழ்நிலைகளையும்
கவனத்தில் கொண்டு
அரசியல் சாசனத்தில்
முழுமையான மாற்றங்களைக்
கொண்டுவரப்பட
வேண்டும் என முடிவாக்கப்பட்டது.
இனப்பிரச்சனை
தொடர்பாக புதிய
சிந்தனைகளோடு
21ம் நூற்றாண்டிற்கு
ஏற்ற விதத்தில்
அணுகும்படி கோருவதென
தீர்மானிக்கப்பட்டது.
- அரசியல்
அமைப்பின் 13வது
திருத்தம் முழுமையாக
அமுல்படுத்தப்பட
வேண்டும்.
- மாகாண சபைகளுக்குள்ள
சட்டம் இயற்றும்
அதிகாரம் முழமையாக
வழங்கப்படும்
விதத்தில் அதிகார
பரவலாக்க ஏற்பாடுகள்
வழங்குதல் வேண்டும்.
- வட மாகாண
சபைக்கான தேர்தல்
நடத்தப்படுவதோடு
அப் பிரதேசங்களில்
இடம்பெறும் அபிவிருத்தி
வேலைகள் முழுமையாக
அதன் கண்காணிப்பில்
கொண்டு வரப்படுதல்
வேண்டும்.
- கிழக்கு
மாகாணசபையின்
செயற்பாடுகள்
முழுமைப்படுத்தப்படுதல்
வேண்டும்.
- மீன் பிடிப்பதற்கான
கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட வேண்டும்.
- மாகாண சபை
நிர்வாகங்களில்
காணப்படும் ஆளுநரின்
தேவையற்ற தலையீடுகள்
தவிர்க்கப்பட
வேண்டும்.
அடையாளம்
காணப்பட்ட உடனடியாக
தீர்வு காணப்பட
வேண்டிய விடயங்கள்:
1.
போர் முடிவடைந்து
இரண்டு வருடங்கள்
ஆகியும் வடக்கு
கிழக்குப் பிரதேசங்களில்
இன்னமும் இராணுவம்
இப்பிரதேசங்களில்
குவிக்கப்பட்டிருப்பதற்கான
நோக்கங்கள் தெளிவாக்கப்
படவில்லை. இராணுவ
அதி உயர் பாதுகாப்புவலையம,;
உல்லாசப் பயணத்
துறைக்கான வசதிகளை
எற்படுத்தல் தொழில்
மையங்களை எற்படுத்தல்
என்ற பெயரில் மிகப்
பெருந்தொகையான
நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலங்களில்
பாரம் பரியமாக
வாழ்ந்த மக்கள்
தற்காலிக இருப்பிடங்களில்
குடியமர்த்தப்பட்டுள்ளதோடு
அந்த நிலங்களுக்கான
உரிமங்கள் வழங்கப்படவில்லை.
எந்தவிதமான
தொழில் உத்தரவாதங்களும்
இல்லை.
இந்நடவடிக்கைகள்
யாவும் மிகவும்
இரகசியமாகவும்
அப்பகுதி மாகாண
நிர்வாகங்களுக்குத்
தெரியப்படுத்தாமலும்
இடம்பெற்று வருகின்றன.
வடக்கு
கிழக்கு பிரதேசங்களில்
அபிவிருத்தி என்ற
பெயரிலும் இராணுவக்
குடியிருப்பு
என்ற பெயரிலும்
மேலும் அரசாங்கத்தின்
அணுசரணையுடன்
மேற்கொள்ளப்படும்
(மீனவர் குடியேற்றம்)
திட்டமிட்ட குடியேற்றங்கள்
இடம்பெற்று வருகின்றது.
வடக்கு கிழக்கிற்கான
அரசியல் ரீதியிலான
அதிகாரப் பரவலாக்கம்
நடைமுறைப்படுத்தப்படாமல்
இவ்வாறான குடியிருப்புகளை
அமைத்து அப்பிரதேச
மக்களின் அடிப்படை
உரிமைகளை மீறுவது
இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதனை
மேலும் சிக்கலாக்கும்.
2.
கடந்த காலங்களில்
கைது செய்யப்பட்டு
மிக நீண்டகாலமாக
நூற்றுக் கணக்கானவர்கள்
தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டு
உள்ளனர். இது
அடிப்படை மனித
உரிமை மீறலாகும்.
எனவே விசாரனைகள்
இன்றி சிறைச்சாலைகளிலும்
தடுப்பு முகாம்களிலும்
தடுத்து வைக்கப்
பட்டிருப்போர்
உடனடியாக நீதி
விசாரணைக்கு உடப்படுத்தப்பட
வேண்டும். இல்லையேல் உடனடியாக
விடுதலை செய்யப்பட
வேண்டும்.
பொலிசாரினாலும்,
இராணுவத்தினாலும்
விசாரணைக்கென
கைது செய்யப்பட்டவர்கள்,
மற்றும் சரணடைந்தவர்களின்
விபரங்கள் எதுவும்
இதுவரை அவர்களின்
குடும்பத்தினருக்குத்
தெரியப்படுத்தப்படவில்லை.
நல்லிணக்க
ஆணைக்குழு முன்னிலையில்
பல விபரங்கள் வெளியிடப்பட்ட
போதிலும் திருப்திகரமான
நடவடிக்கைகளை
அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
இவை இனங்களுக்கிடையேயான
நல்லிணக்கத்தை
எற்படுத்துவதற்குப்
பெரும் தடையாக
அமைந்துள்ளது.
எனவே கைது செய்யப்பட்டவர்கள்,
மற்றும் சரணடைந்தவர்களின்
முழுமையான விபரங்களை
இலங்கை அரசு வெளியிட
வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அத்துடன்,
அரசியல் பிரச்சனைகள்
காரணமாக எழுந்த
போர் நிலமைகளால்
சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும்
உள்ள தமிழர்கள்
அனைவரும் அரசியல்
கைதிகளாக கருதப்பட்டு
பொது மன்னிப்பு
வழங்கப்படுவது
நாட்டின் எதிர்காலத்திற்கும்
தேசிய நல்லிணக்கத்திற்கும்
இன்றியமையாதது.
அதனால் இவர்கள்
அனைவரும் பொது
மன்னிப்பின் கீழ்
விடுதலை செய்யப்பட
வேண்டும் என்று
வலியுறுத்துகிறோம்..
3.
நாட்டின் அரச செயற்பாடுகள்
தொடர்ந்தும் அவசரகாலச்
சட்டத்தின் கீழ்
நடைபெறுகின்றன.
போர் முடிவடைந்து
இரண்டு வருடங்கள்
ஆகிய நிலையில்
அவசரகாலச்சட்டம்
நீக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்ட
போதிலும் அதற்குப்பதிலாக
பயங்கரவாதத் தடைச்சட்டம்
பயன்படுத்தப்படுவதும்
நாட்டின் ஜனநாயக
செயற்பாடுகளுக்குத்
தடையாக உள்ளன பயங்கரவாதச்
சட்டமும் முழுமையாக
நீக்கப்பட வேண்டும்.
4.
யுத்தத்த சூழலினால்
பாதிக்கப்பட்டு
நலன்புரி நிலையங்களில்
தங்கியுள்ள மக்கள்
மீண்டும் தங்கள்
சொந்தப் பிரதேசங்களில்
சென்று வாழ்வதற்கான
அடிப்படை வசதிகளும்
வாழ்வாதார வாய்ப்புகளும்
செய்து கொடுக்கப்பட
வேண்டும்.
ஏற்கனவே
முகாம்களில் இருந்து
அடிப்படை வசதிகளும்
வாழ்வாதார வாய்ப்புகளும்
இல்லாமல் மீளக்குடியேற்றப்பட்ட
மக்களுக்கும்
அடிப்படை வசதிகளும்
வாழ்வாதார வாய்ப்புகளும்
செய்துகொடுக்கப்பட
வேண்டும்.
இம்மக்கள்
கூட்டுறவு அடிப்படையில்
தமது அடிப்படை
வசதிகளை மேற்கொள்ளும்
பொருட்டு கூட்டுறவு
அமைப்புகள் சட்ட
அடிப்படையில்
உருவாக்கப்பட்டு
அம் மக்கள் தமக்கான
தீர்மானங்களை
எடுக்கும் வகையில்
ஒழுங்குகள் எற்படுத்தப்பட
வண்டும்.
குறிப்பாக
விவசாய உபகரணங்கள்,
விதைவகைகள், உரவகைகள்
என்பன கூட்டுறவு
அமைப்பின் மூலமாக
வழங்கப்பட்டு
மூன்றாம் தரப்பாரின்
தலையீடு தவிர்க்கப்பட
வேண்டும்.
கலந்துரையாடல்களில்
கலந்துகொண்டு
அறிக்கையைத் தயாரிப்பதில்
பங்கெடுத்துக்கொண்ட
அரசியல் கட்சிகள்
ITAK - இலங்கை
தமிழ் அரசுக் கட்சி
EPDP - ஈழ மக்கள்
ஜனநாயக முன்னணி
ENDLF - ஈழத்
தேசிய ஜனநாயக விடுதலை
முன்னணி
EPRLF - ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை
முன்னணி (நாபா
அணி)
EROS- ஈழ புரட்சிகர
மாணவர்
PLOTE- தமிழீழ
மக்கள் விடுதலைக்
கழகம்
TELO - தமிழீழ
விடுதலை இயக்கம்
TULF - தமிழர்
விடுதலைக் கூட்டணி
கலந்துரையாடல்களில்
கலற்துகொண்டு
அறிக்கையைத் தயாரிப்பதில்
பங்கெடுத்துக்கொண்டவர்கள்
வி
ராம்ராஜ்,
பி
பொபி,
ஜி
விக்னேஸ்,
சலீம்,
ரி
சோதிலிங்கம்,
பொ
சிவசுப்பிரமணியம்,
என்
தேவராஜா,
ஆர்
பி ஜெயசங்கர்,
பி
அருள்ராஜ்,
கெ
தம்பா,
ரி
சிவபாலன்,
என்
நவேந்திரராசா,
எம்
கேசவன்,
ஏ
நிக்கலஸ்பிள்ளை,
என்
மதனராஜ்,
பொ
சிவகுமார்,
நேசன்
சங்கர் ராஜீ,
வி
சிவலிங்கம்,
கோபி,
பி
சிறிகரன் (சுதன்),
சிறி,
ஆர்
ஜெயதேவன்,
கெ
நிசாந்தன்,
பி
கேதீஸ்,
குகதாசன்,
எஸ்
தர்மன்,
என்
நடராஜா,
பொ
தேவகுமாரன்,
எஸ்
தவராஜா,
எஸ்
ராஜா,
வி
செல்வகுமார்,
எம்
சக்தி,
சார்ள்ஸ்
அந்தோனிதாஸ்,
ரி
சஞ்சயன்,
எஸ்
பிராகரன்,
எஸ்
சிவதீசன்,
து. போல்
சத்தியநேசன்,
எஸ்
அரவிந்தன்,
கெ
வரதீஸ்வரன்,
எஸ்
இராதாகிருஸ்ணன்
(தயா), த ஜெயபாலன்
Tamil
National Congress: Introduction – Mission - Vision
East Ham Agreement
Introduction – Mission - Vision
The Formation of Tamil National Congress and its Objectives
From the time Sri Lanka gained its independence, the rights of
the national minority communities in Sri Lanka have been under threat.
The communal stand taken up by the political parties in Sri Lanka has
greatly contributed towards this situation. It has become imperative that the
country has to recoup from this situation. Creating an atmosphere conducive to
safeguard and promote the rights of the minority communities; and bringing
consensus amongst the political parties representing the minority communities,
particularly amongst the Tamil political parties, have become the need of the
day.
The outcome of political culture blended with violence over the past 30
years is that it has created a big division between the different communities
in Sri Lanka. It has also extended its tentacles beyond the communities
into political parties, political movements and individuals causing suspicion
and mistrust among themselves. Thus, reaching consensus among the Tamil parties
and other political movements have become a difficult task. In the light of
this continuing situation, discussing with the Government of Sri Lanka as one
voice on the political rights of the Tamils has become a question mark. If the
rights of the minority communities are to be negotiated as a united voice, it
is inevitable that consensus has to be reached among the minorities especially
the Tamil political parties.
As a preparatory step, bringing consensus among all Tamil Parties and
earning their goodwill is considered to be more appropriate. Since there are no
fundamental differences of opinion among the Tamil political parties on the
rights of Tamils; and that there is a common understanding with regard to the
basic principles for a political solution; and as the efforts taken in this
regard previously have shown signs of success, the necessity to pursue with
such attempt is considered to be of paramount importance. As branches
of the Tamil Political Parties functioning in the homeland are
having branches in foreign countries and that there is a healthy relationship
prevailing among the members of these branches; and considering the necessity
to strengthen the relationship among these branches in foreign countries,
the need to set up a common forum was felt as an initial step forward.
Lengthy discussions were held by this common forum on the subject of
political solution and the immediate need of the people. As the prime objective
of this forum is to bring about unswerving consensus among the Tamil parties,
it has been decided to call this forum as ‘Tamil National Congress’ (T.N.C).
The fundamental causes for the ethnic conflict in Sri Lanka need
to be clearly identified. The main focus should be on the worsening situation
with regard to economy and the ethnic issue, which remain unresolved since the
country gained its independence. Although the country became a republic with
the introduction of a new constitution in 1972, both the 1972 and the 1978
constitutions, caused more and more political chaos
in the country.
According to a government report the Western Province alone
has contributed towards more than 50% of the Gross National Product. The GNP of
the rest of the provinces could be assessed from this statement. It clearly
shows the imbalance in economic development in the country. Hence the need for
a political devolution with balanced economic development is evident.
The weakening of the power of Parliament and the enormous powers vested
with the President through the introduction of the 1978 constitution and the
subsequent amendments have made the ethnic issue more and more complicated.
At the start, the struggle for the rights of the Tamils was non-violent and
aimed towards a sustainable political solution within a united Sri Lanka.
Nevertheless, it was crushed by the use of force by the Sri Lankan security
forces.
The Sinhala nationalist forces did not have a clear vision to accommodate
the aspirations of the national minorities into the main stream politics
of Sri Lanka. Instead, the Sri Lankan States were determined to crush
their voice by forceful means. As a result, the Tamil political
leadership changed hands from the moderates to the militants. This has resulted
in the destruction of human life and economy and also weakened the democratic
institutions as a whole.
In the present post war situation, the need for an honourable political
solution within the united Sri Lanka has surfaced again. But, the
Sinhala Buddhist nationalists appear to have not understood the realities. The
minority communities now fear that the forces of the Sinhala Buddhist
nationalists are extending their authority under the cover of Sri Lankan
nationalism.
It is in this background that a political solution to the ethnic issue has
to be worked out. The open economic policies unfolding around the globe has
brought in strong relationship among different communities and paved the way
for new approaches. The open economy has provided opportunities for bringing
the communities together bypassing the linguistic and religious differences.
Vital changes to the constitution of Sri Lanka have become imperative
in view of the new trend in the aftermath of the 30 years of armed conflict and
the call for the restoration of democracy in the country.
The need of the hour is to change the constitution in the context of the
present political climax. While initiatives are taken towards such a
constitutional change, action should also be taken to emphasize on the
immediate needs of the people.
On account of these, the Tamil National Congress is of the view that a
lasting political solution is vital for the Sri Lankan nationalities to live in
permanent peace and harmony with equality and dignity. Further, the Tamil
National Congress wants to insist that such a political solution should not be
a threat to the sovereignty of the country, should be acceptable to all the
communities and ensure that all the communities living within the national
boundaries be able to live as equals with equal rights, dignity and security.
In the context of the current political situation, it has become essential
to insist the Government, as a stepping stone, to take necessary actions
towards confidence building measures amongst the national communities. A
political solution could be reached only through extensive discussions,
convincing dialogues and resolute compromises. While necessary steps are taken
in this regard, the reconstruction, rehabilitation and development of the war
torn Tamil areas is also to be considered as equally important. Development
activities should be carried out with the democratic participation of the
people. In short, there won’t be development without democracy and democratic
activities without development. Taking these into consideration, the Tamil
National Congress has formulated its decision with regard to the initial
initiative to be taken towards finding a permanent political solution.
Basis for political solution
Lucid discussions were held with regard to the ways and means of achieving
a political solution. The following decisions were taken after giving due
considerations to the lessons learned and experiences gained from the political
history of the past which has caused the majority community to take up extreme
political stand, and the stand taken by the international community,
particularly India, during the war.
It was decided that the future of the national minorities in Sri
Lanka would be promising only by reaching an honourable political solution
within the united Sri Lanka and that such a political solution should
be reached through dialogue. It was also decided that violent means should not
be employed, for whatever reasons, for achieving the political solution and
that the Tamil National Congress will reject any attempt to instigate violence,
even if it is state sponsored.
The Tamil National Congress take this opportunity to call upon the
political forces, political movements, public organizations and individuals who
are working against violence, terrorism and attempts to disrupt national unity
to join hands and work together. In defiance to the political approaches of the
past, the Tamil National Congress will endeavour to create and promote
democratic institutional setups at national level in a manner that would help
to preserve the identity of the different communities.
Proposals for political solution
The constitution of Sri Lanka need to be redrafted in such a
manner that the peoples of all the communities living in Sri
Lanka should be able to live as equals, with equal rights, dignity and
security while ensuring that there is no threat to the sovereignty of the
country.
In the event of prolonged delay in redrafting the constitution, steps
should be taken to implement the Indo–Lanka accord in full as
an interim measure until such time the redrafting is completed.
The work plan formulated to achieve its objects
Holding continued discussions and developing close relationships amongst
the foreign branches of the political parties functioning in Sri Lanka,
especially with those functioning in Britain.
Co-operate action with the social organizations working amongst the Tamil
Diaspora with the same motto.
Developing strong relationship with the major political parties in foreign
countries having close institutional affiliation with political parties in
homeland that are committed to safeguard the rights of the minority communities
and the working class.
Establishing relationship with the Government of Sri Lanka and expound to
it the expectations of the Tamils, Muslims and the Sinhalese living abroad.
Making contacts and establishing cordial relationship with the Governments
of foreign countries, particularly with India, and to elucidate them the
aspirations of the people in our homeland.
Matters identified for immediate action
1.
The rationale behind the continued presence of the security forces in large
numbers in the north and east, even after about three years of ending the war,
is not explicable. Large extent of lands has been grabbed under the pretext of
army high security zone, providing amenities for tourism industry and
establishing of industrial zones. The traditional inhabitants of these lands
have been sheltered in alternate lands but they have not been provided with
title deeds for these swaps and are devoid of employment opportunities. These
activities are taking place clandestinely and without any notification to the
provincial administration.
State sponsored colonization is taking place in the north and east
(fisherman colonies) under the pretext of development and army settlement.
Going ahead with such settlement schemes, without any move politically to
devolve adequate powers to the north and east, is a violation of the
fundamental rights of the people living in those areas that would complicate
the process of finding a solution to the ethnic issue.
2.
Hundreds of Tamils who were arrested in the past are being detained for a long
period of time, which is a denial of their fundamental rights. Therefore, all
those who are detained in prisons and detention centres, should either be
subjected to judicial inquiry or released immediately.
Details of persons arrested by the police and the security forces for the
purpose of inquiry and of those who surrendered have not yet been furnished to
their families. Although particulars of many such cases were submitted to
L.L.R.C by their family members, the Government has not taken any suitable
action in this regard. It would hinder the process of reconciliation among the
communities. We therefore insist that the Government of Sri Lanka should
release the details of those arrested and surrendered persons.
Further it is vital on account of national reconciliation and for the
prospect of the country, to treat all Tamils in prisons and detention camps who
are prisoners of circumstances caused by the war due to unsettled political
issues, as political prisoners. We insist that all of them should be released
under common amnesty.
3.
With the lifting of Emergency Regulations, most of the actions of the
Government are now being carried out under the Prevention of Terrorism Act. In
spite of the fact that about three years have passed since ending the war,
using Prevention of Terrorism Act in place of Emergency Regulations would cause
obstruction for the democratic activities in the country. Hence, the Prevention
of Terrorism Act needs to be repealed.
4.
All basic facilities and lively hood assistance has to be provided for those
victims of war who are in welfare centres, to return to their original places
of habitat.
Those who have already been resettled from the welfare camps but lacking
basic facilities and livelihood assistance has to be provided with basic
amenities and livelihood assistance.
Steps should be taken to establish co-operative societies under the
relevant co-operative society acts to enable these people to make their own
decisions to procure their basic requirements. In particular, the distribution
of agricultural equipments, seeds, fertilizer etc. has to be done through
cooperative societies, thus preventing third party intervention.
Political Parties took part in the discussions,
contributed and agreed the above Agreement:
ENDLF: Eelam
National Democratic Liberation Front
EPRLF:
Eelam peoples Revolutionary Liberation Front
EPDP:
Eelam People’s Democratic Party
EROSE: Eelam Revolutionary Organisation of Students
ITAK: Illankai Tamil Arasu Kachchi
PLOTE: People
Liberation Organisation of Tamil Eelam
TELO: Tamil
Eelam Liberation Organization
TULF:
Tamil United Liberation Front
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |