|
||||
|
சுவிஸ் புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியம்,
"தமது எதிர்கால செயற்பாடுகள்
குறித்து"
விடுக்கும்
பகிரங்க அறிக்கை..!
**சுவிஸ் புங்குடுதீவு
விழிப்புணர்வு
ஒன்றிய, புதிய நிர்வாகத்தின்
சார்பில்
ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக
ஒரு சிறிய
நிதியுதவியை
முதலாவது
செயற்திட்டமாக
நாம் செய்திருக்கின்றோம்
என்பதை யாவரும் அறிவீர்கள்.
**அதேபோன்று
எமது இரண்டாவது
செயற்திட்டமாக,
சில ஆண்டுகளுக்கு
முன்பு புங்குடுதீவில்
இனந்தெரியாத
நபர்களால்
படுகொலை செய்யப்பட்ட
செல்வி தர்சினியின்
குடும்பத்திற்கு
மாதாமாதாம்
நிதிஉதவி
செய்ய வேண்டுமென்று
அவருடைய உறவுகள் வேண்டுகோள்
விடுத்திருந்தது
தெரிந்ததே.
இதற்கு அமைவாக,
இம்மாதம் முதல்,
மாதாமாதம்
சிறியதோர்
நிதி உதவியினை
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்
ஒருவர் "தனது குடும்பத்தின்
சார்பில்"
சுவிஸ் புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியத்தின்
ஊடாக வழங்குவதற்கு
முன்வந்துள்ளார்.
(ஆயினும்
அவரது வேண்டுகோளுக்கிணங்க
அவரது பெயர் இங்கு
பகிரங்கப்படுத்தப்படவில்லை.)
அடுத்து, சுவிஸ்
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியத்தின்
இவ்வருடத்திற்கான
செயற்திட்டங்களாக:-...
1. "புங்குடுதீவுக்கான
நுழைவாயிலில்
வரவேற்பு
வளைவு" ஒன்றினை நிர்மாணிப்பது...
அதாவது, ஏற்கனவே
எமது நிர்வாகத்தில்
கதைத்ததற்கு
அமைவாக, புங்குடுதீவுக்கான
நுழைவாயிலில்
வரவேற்பு
வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தால்
தீர்மானிக்கப்
பட்டுள்ளது.
இதனை புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தில்
உள்ள ஒருவர்
பொறுப்பேற்றிருப்பதை
இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம். எனவே இதற்கமைய புங்குடுதீவுக்கான
நுழைவாயிலில்
வரவேற்பு
வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதென
தீர்மானிக்கப்படுகின்றது.
2. "புங்குடுதீவு
பஸ் தரிப்பிடங்களில்
நிழற்குடைகளை
அமைப்பது",...
அதாவது, புங்குடுதீவில்
உள்ள சகல
பஸ் தரிப்பிடங்களிலும்
அவ்வப் பகுதியைச்
சேர்ந்த வெளிநாட்டிலுள்ள
குறிப்பாக,
சுவிஸிலுள்ள
உறவினர்கள்;
தமது தாய்,
தந்தை மற்றும் உறவுகளின்
நினைவாக நிழற்குடையை
அமைப்பதற்கு
முன்வர வேண்டுமென
கேட்டுக்
கொள்வது.
அவ்வாறு அவர்கள் முன்வரும்
பட்சத்தில்
சுவிஸ் புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியம்
அதனை முன்நின்று
செயற்படுத்தும். அவ்வாறு முன்வருவோர்
யாருடைய பெயரால் அந்த நிழற்குடையை
அமைக்கிறார்களோ
அவரது ஞாபகார்த்தமாக
அவருடைய பெயரில் அந்த நிழற்குடையை
அமைப்பது.
அதேபோன்று இதனை
அமைப்பதற்கு
உதவி புரியும்
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியம்
சுவிஸ்லாந்து
என்னும் பெயரையும்
கீழே பதிவு
செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.
இந்த நிழற்குடை
அமைக்கும்
திட்டத்தின்
போது, ஒரே
இடத்தில்
நிழற்குடை
அமைப்பதற்கு,
பலர் கோரிக்கை
விடுத்து
பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படும்
பட்சத்தில்
அதனைக் "குலுக்கள்
முறையின்
மூலம்" தேர்ந்தெடுப்பது
என்று தீர்மானிக்கப்படுகின்றது.
3.
"முக்கியமான
சந்திகளில்
பொது மலசலகூடம்"
அமைப்பது,..
அதாவது. புங்குடுதீவிற்கு
வருகை தரும் சுற்றுலாப்
பயணிகளின்
வசதி கருதியும்,
புங்குடுதீவின்
ஊடாக ஏனைய
தீவுப் பகுதிகளுக்குச்
செல்லும்
மக்களினதும்,
புங்குடுதீவு
வாழ் மக்களினதும்
நலன் கருதியும் முதல்கட்டமாக புங்குடுதீவின்
முக்கியமான
ஐந்து அல்லது ஆறு சந்திப்புகளில்
(சந்திகள்)
மலசலகூடம்
அமைப்பதென
தீர்மானிக்கப்படுகின்றது.
இதற்காக திட்டமொன்றினை
முன்னெடுப்பதென்றும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
(இதன் முதல்கட்டமாக
மடத்துவெளிசந்தி,
ஆலடிச்சந்தி,
சந்தையடி,
பெருங்காட்டு
சந்தி,
தம்பர் கடைச்சந்தி
(இறுப்பிட்டி),
குறிகட்டுவான்
துறைமுகம்
ஆகிய பகுதிகளை
தெரிவு செய்துள்ளோம்.
இவை காலப்
போக்கில்
ஏனைய பகுதிகளுக்கும்
விஸ்தரிக்கப்படும்.)
4. "பொதுக் கிணறுகள், குளங்களை துப்புரவு
செய்தல் புனரமைத்தல்"...
அதாவது, அனைத்துப்
பொதுக் கிணறுகளையும்,
தூர்வாரி
துப்புரவு
செய்வதுடன்,
அவற்றைப்
புனரமைப்பது. இதற்கு அப்பகுதியைச்
சேர்ந்த சுவிஸில் வாழும் மக்களிடம்
ஆலோசனையும்,
நிதியுதவியும்
பெற்று அதனை மேற்கொள்வது
என்று தீர்மானிக்கப்படுகின்றது.
இதேபோன்று அனைத்துக்
குளங்களையும்
கட்டம் கட்டமாக தூர்வாரி துப்புரவு
செய்து, புனரமைப்பது. இதற்கும்
அந்தந்தப்
பகுதிகளைச்
சேர்ந்த சுவிஸில் வாழும் புங்குடுதீவு
மக்களின்
நிதியுதவி
பெற்று அவற்றை மேற்கொள்வதென
தீர்மானம்
நிறைவேற்றப்
பட்டுள்ளது,
எனவே, சுவிஸ்
வாழ் புங்குடுதீவு
மக்கள் உட்பட உலகம்
பூராவும்
வாழும் புங்குடுதீவு
மக்கள் அனைவருக்கும்
இதன்மூலம்
தெரியப்படுத்துவது
யாதெனில்,
இது குறித்த
தங்களது ஆலோசனைகளையும்,
கருத்துக்களையும்
தயவுசெய்து
கூடிய விரைவில், எமக்கு எழுத்து மூலமோ, அன்றில்
தொலைபேசி
மூலமோ தெரியப் படுத்துமாறு
பணிவன்புடன்
கேட்டுக்
கொள்ளுகின்றோம்.
ஏனெனில், உங்களின்,
ஆலோசனைகள்,
கருத்துக்கள்,
பங்களிப்புகளின்
மூலம் "புங்குடுதீவு
மண்ணுக்காகவும்,
மக்களுக்குமான
எமது செயற்பாடுகளை"
நாம் முடிந்தவரை
துரிதகதியில்
முன்னெடுக்க
உதவுங்கள்!!
இவ்வண்ணம்,
நிர்வாகசபை
புங்குடுதீவு மக்கள்
விழிப்புணர்வு
ஒன்றியம்,
சுவிஸ்லாந்து
இதுகுறித்த தொடர்புகளுக்கு...
இ.ரவீந்திரன், (தலைவர்)
079.2187075
சுவிஸ்ரஞ்சன் (உபதலைவர்)
077.9485214
மின்னஞ்சல்...
***ஊடக நண்பர்கள்
அனைவருக்கும்
தயவுசெய்து
இதனை தங்கள்
ஊடகங்களில்
முக்கியத்துவம்
கொடுத்து
பிரசுரித்து
உதவுமாறு
பணிவன்புடன்
கேட்டுக்
கொள்கிறோம்.. நன்றி..!
தகவல்...
சுவிஸ் ரஞ்சன்
(ஊடகப் பொறுப்பாளர்)
-புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியம்,
சுவிஸ்லாந்து. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |