Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள் எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை வெள்ளிக்கிழமை (03) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் கடந்த பல நாட்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்கு பதில் தரவில்லை. இருப்பினும் கடந்த மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் நடந்த கருத்தரங்கில், கூட்டமைப்பு பதிவு சம்மந்தமாக நீங்கள் கூறிய கருத்துக்களில் ஏதோ தமிழரசுக் கட்சிதான் நீண்டகால போராட்டங்களை முன்னெடுத்தது என்றும் அவர்களின் சம்மதம் இதில் முக்கியம் என்றும் கருத்துக் கூறியிருந்தீர்கள்.

போராட்ட வரலாறுகளை எடுத்து பார்த்தால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எல்லா கட்சிகளும் போராட்ட வடிவங்களை மாற்றிக்கொண்டு தமிழரசுக் கட்சியை விட மிகத் தீவிரமாக போராடியுள்ளன. அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சியைவிட ஏனைய கட்சிகள் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் விலைமதிக்க முடியாத தங்களது தலைவர்களையும் இழந்துள்ளன.

ஏற்கனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழரசுக் கட்சியால் தீர்க்க முடியாது என தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து கொண்டபடியால்தான் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டு தந்தை செல்வா அவர்கள் 1972 ஆம் ஆண்டு அப்போதிருந்த முக்கிய தமிழ்த் தலைவர்களான சட்ட மாமேதை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், மலையகத் தமிழர்களின் விடிவெள்ளி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அகியோரை இணைத்துக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்.

அந்த வரலாறு தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ஏனெனில் அப்போது தாங்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தும் தமிழரசுக் கட்சியில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இருக்கவுமில்லை, தமிழரசுக் கட்சியின் எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொண்டதுமில்லை.

இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தால் தந்தை செல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார். 1977ஆம் ஆண்டு தாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றம் சென்றீர்கள் என்பதைக் கூட மறந்துவிட்டீர்களே.

தந்தை செல்வாவின் மறைவுக்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானதும் அதில் தாங்களும் அங்கம் வகித்தீர்கள். தமிழர் விடுதைக் கூட்டணியின் போராட்டங்கள், அதன் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கைகள், தமிழ்மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்குக்கு எடுத்து சென்ற முறைகள் எல்லாவற்றையும் எப்படி மறந்தீர்கள?.

பெருமதிமிக்க எத்தனை பெருந் தலைவர்களை எல்லாம் தப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பலி கொடுத்துள்ளோம். அப்பாவித் தொண்டர்கள் எத்தனை பேரை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகக் கொடுத்தோம். இவைகளை எல்லாம் நன்கு தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் தமிழரசுக் கட்சிதான் பல போராட்டங்களை நடத்தியது என்று எவ்வாறு கூற முடிந்தது? தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒப்பிடும்போது போராட்டங்களானாலும் சரி, இழப்புகளானாலும் சரி தமிழரசுக் கட்சியின் பங்கு மிகச் சிறியதே.

இதை நன்கு அறிந்த தாங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாற்றை மறைத்துவிட்டு, அவரால் முடக்கி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் புகழ்பாடுவது வேடிக்கையானது. இது தந்தை செல்வாவுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். ஜனநாயக ரிதியில் போராடிய கட்சிகளில் அதிகளவான இழப்புகளை சந்தித்த ஒரே கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணிதான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை.

எனவே இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள். அதைவிட பன்மடங்கு போராட்டங்களையும் இழப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்ற ஏனைய அமைப்புகளும் சந்தித்திருக்கின்றன என்பதை தமிழரசுக் கட்சியினருக்கு நீங்கள் ஞாபகப்படுத்துங்கள்.

நீங்கள் சர்வாதிகாரி இல்லை என்று சொன்னாலும்கூட நீங்கள் தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே கூட்டமைப்பு பதிவு விடயத்தில் ஏனைய கட்சிகளின் எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள்.

கூட்டமைப்பை பதிந்து விட்டால் நாளையே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்ற ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளீர்கள். அப்படியாயின் கூட்டமைப்பை பதிந்தால் என்ன பதியாவிட்டால் என்ன தமிழ் மக்களின் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதென்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

நிலைமை இவ்வாறிருக்க பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ்மக்களை ஏன் தவறான வழிக்கு கொண்டு செல்கின்றீர்கள். ஒரு சமூகத்திடம் பொய்களைக்கூறி வெற்றியடைவதைவிட உண்மைகளைக் கூறி, தோல்வி அடைவது மேலானது என்ற ஒரு அறிஞனின் கூற்றை தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

எனவே அனைத்து தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்தி தந்தை செல்வாவினால் இறுதியாக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தர முடியும் என்பதையும், அதற்காக உறுதியுடன் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com