|
||||
|
தலித்துக்களை
புறக்கணிக்கும் தமிழ் தேசியம் 2015 இற்கான பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, பின்பு பலதும் கலந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாக உரு மாறி, இறுதியாக விடுதலைப் புலிகளின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்றவகையில் பெயர் போர்த்திக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் அதன் தலைமைகளும் தொடர்ந்தும் தலித் மக்களை வாக்களிக்கும் ஒரு சமூகப்பிராணிகளாகவே கருதி வருகின்றனர். அம்மக்களின் வாக்குகளை கொத்தாக பெறும் நோக்கத்திலும், வாக்குகளை சிதறவைக்கும் தந்திரத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த சிலரை தமிழ் தேசியத் தலைமைகள் வேட்ப்பாளர்களாக நியமித்த, நியமிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது. இவை அனைத்துமே தமிழ் தேசியத் தலைமைகளின் நலன்களுக்கு உகந்ததாகவே திட்டமிடப்பட்டும் வருகிறது. தமிழ் தேசியம் பேசும் தலைமைகளோ சாதிரீதியான சமூக ஒடுக்குமுறைக்கு எதராக குரல் எழுப்பிய வரலாறு நிகழ்ந்ததில்லை. தமிழ் மக்களுக்காக அவர்கள் செய்த சமூக அரசில் தியாகம் என்பது எதிர்ப்பு அரசியல் சாதனை மட்டுமே! சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான தலித் மக்கள் இடது சாரிகளுடன் இணைந்து போராட்டங்கள் மேற்கொண்ட காலம் ஒன்றிருந்தது. அவ் எழுச்சிப் போராட்டத்தின் அலையில் தமது அரசியல் கனவு மூழ்கிப்போவதை உணர்ந்த மேட்டுக்குடி தலைமை 1977இல் நடைபெற்ற தமிழ் ஈழத்திற்கான தேர்தலில் இராஜலிங்கம் எனும் ஒரு தலித்தை தமது வேட்ப்பாளராக பயன்படுத்தினார்கள். அது ஓரளவு தமிழ் தேசிய வாதிகளுக்கு சாதகமாக இருந்ததென்றே கூறலாம். ஆனால் இராஜலிங்கத்தை தேர்வு செய்த தலித் சமூகம் எவ்வித பயனையும் கண்டதில்லை. மாறாக இராஜலிங்கம் அவர்கள் ஒடுக்குமுறைச் சாதியினரால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களே அதிகம் நிகழ்ந்தது. 2004இல் நடைபெற்ற தேர்தலில் புலிகளால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிவநேசன் எனும் தலித் வேட்ப்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரும் தமிழ் தேசியத்தின் குரலாகவே கூனிக் குறிகிப்போனார். தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாடு குறித்து அவரால் சிந்திக்கவே முடியாது போனது. மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் தமது வர்க்க நலனுக்கும், அதிகார நலனுக்கும் பயன்படுத்தும் ஒரு பண்டமாகவே தலித்துக்களை இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பென்பது மிதவாதக் கட்சியுடன் இணைந்த சில ஆயுதப்பபோராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களின் ஒரு கூட்டாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் எமது பார்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பென்பது ஒரு மேட்டுக்குடி அடையாளமாகவே தெரிகிறது. அக்கட்சியின் வேட்ப்பாளர் தெரிவுகளில் அவர்களே முதன்மையானவர்களாக உள்ளனர். கிராமங்களிலுள்ள வாக்குவங்கியை கவனத்தில் கொண்டு ஒரு சில தலித்துக்களை வேட்ப்பாளர்களாக நியமிக்கின்றபோதும் அவர்கள் வெற்றியடைமுடியாத வகையிலேயே பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். இவைகுறித்து கேள்வி எழுப்புகின்றபோது தாம் தகுதி அடிப்படையில்தான் வேட்ப்பாளர்களை தெரிவு செய்கிறோம். சாதிப் பாகுபாடு நாம் பார்ப்பதில்லை என்றும் காரணம் கற்பிக்கின்றனர். அதுசரி என்ன இவர்களது தகுதி? 1948இல் இருந்து ஐம்பதுக்கு ஐம்பது, சமஸ்டி, சுயாட்சி, தமிழ் ஈழம், மாகாணசபை என கோசம் போட்டு அரசியல் செய்த இவர்களால் தமிழ் பேசும் மக்கள் அடைந்த நன்மை என்ன? எவற்றை இவர்களது தகுதியாக நாம் அடையாளம் காண்பது? மேட்டுக்குடி தகுதி என்பதுதானே இவர்களது ஒரே ஒரு தகுதி! சற்று நிதானித்து ஆழ்ந்து சிந்திப்போமாயின் இவ்வாறான மேட்டுக்குடித் தலைமைகளிடம் எந்தக் கோட்பாடோ தத்துவமோ கிடையாது, தேசப்பற்றும் கிடையாது, இனப்பற்றும் கிடையாது, எந்தவித தார்மீகமும் கிடையாது, தேர்தல்காலம் நெருங்கும் தருணத்தில் பொய்களையும், புழுகு மூட்டைகளையும் அவிழ்த்துக் கொட்டி வாக்கு சேகரிக்கும் நரித்தனுமும் இவர்களிடம் இருக்கும் மேலதிக தகுதியாக இருப்பதையும் நாம் கண்டு கொள்ளலாம். தமது குடும்பங்களையும், பிள்ளைகளையும் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வாழவைத்து ஏழை, எளிய மக்களை போர்க்களத்திற்கு அனுப்பியதிலும் அவர்களை தமக்கு வாக்களிக்க வைத்ததிலும் இவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே! அந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான எந்தவித முயற்சிகளையும் இவர்கள் மேற்கொண்டதில்லை. தமிழ் தேசியத்தின் உணர்ச்சியின்பால் உந்தப்பட்ட பல படித்த தலித்துக்கள் மேட்டுக்குடித் தலைமைகளின் நயவஞ்சக புத்தியை தெரிந்திருப்பினும் தமது எதிர்ப்பினை இதுவரை காட்டியதில்லை. தமது எதிர்ப்பை தெரிவிப்பதனூடாக துரோகிகள் எனும் அடையாளம் தம்மீது ஒட்டிக்கொள்ளும் எனவும் அவர்கள் தயங்கக்கூடும். 17-08-2015இல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் போட்டியிடும் தமிழ் கட்சிகள், வேட்ப்பாளர்கள் குறித்த பல்வேறு விவாதங்களும் விமர்சனங்களும் மிக சுவாரசியமாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான காட்டமான விமரசனங்கள் என்றுமில்லாதவாறு சில “பொதுப் புத்திகளிடமிருந்து” மேல்கிளம்புகிறதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்தின் (முற்போக்கு தமிழ் தேசியம்) பால் நெருக்கமான பற்றுடைய அரசியல் விமர்சகர்கள் கூட தலித் சமூகம் குறித்தும் அவர்களது பாராளுமன்றப் பிரநிதித்துவத்தின் நியாயங்கள் பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவ்வாறான சூழலையும் சாதகமாக கொண்டு நாம் இத்தேர்தல் குறித்த எமது பார்வையை முன்வைக்கிறன்றோம். நடைபெற இருக்கும்
பாராளுமன்றத் தேர்தலில் தலித்துக்களுக்கான வேட்ப்பாளர்கள் தமிழ்
தேசியக்கூட்டமைப்பில் இல்லாத காரணத்தால் (வடமராட்சியில் ஒரு தலித்
வேட்ப்பாளர்) சிறுபான்மைத் தமிழர் மகாசபை எனும் சமூக விடுதலை இயக்கம்
சுயேட்சையாக போட்டியிடுகிறது. அதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் பல
தலித் வேட்ப்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வடபகுதியில் வெற்றிலைச்
சின்னத்திலும் தலித் வேட்ப்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். எனவே நிலமையை
கவனத்தில் கொண்டு நாம் எந்தக்கட்சியையும் இத்தேர்தலில் பிரத்தியேகமாக
ஆதரிக்கமுடியாது. பல்வேறு கட்சிகளில் இணைந்தும், சுயேட்சையாகவும்
போட்டியிடும் தலித் வேட்ப்பாளர்களிடமும், அதன் தலைமைகளிடமும், கட்சிகளிடமும்
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு
சில ஆலோசனைகளை முன்வைக்கின்றது. 2, சாதிய ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கெதிராக குரல்கொடுக்கும் இடதுசாரிகள் மற்றும் சமூக முற்போக்கு சக்திகளுடன் உறவை பேணவேண்டும். 3,
எதிர்காலத்தில் தலித்துக்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார
தொழில் மேம்பாட்டிற்கும் ஏற்றவகையில் செயல்படும் வகையில் தலித்துக்களுக்கான
தனித்துவமான அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும். (இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்) (03-08-2015) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |