Contact us at: sooddram@gmail.com

 

தோழர் அ. வைத்தியலிங்கம் அவர்களின் 100வது பிறந்த தின வைபவம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர்
சிறந்த கணித ஆசிரியர்
யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்
உரும்பிராய் இந்துக் கல்லூரி அதிபர்
வடமாகாண ஆசிரியர் சங்க ஸ்தாபகர்களில் ஒருவர்
தோழர் அ. வைத்தியலிங்கம் அவர்களின் 100வது பிறந்த தின வைபவம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி இலண்டன் ரிறினிற்ரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பிரித்தானிய குடியேற்ற ஆட்சி இலங்கையிலும்> இந்தியாவிலும் கோலோச்சியிருந்த வேளை> இந்த நாடுகளின் தொழில் வளங்கள் நசுக்கப்பட்டு> மூல வளங்கள் சுரண்டப்பட்டு அம் மூல வளங்களினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முடிவுப் பொருட்களின் சந்தையாக இத் தேசங்கள் மாற்றப்பட்டிருந்த வேளை பிரித்தானியாவின் பல்கலைக் கழகங்களில் மாணவர்களாக இருந்த கிருஷ்ணமேனன்> ஜோதிபாசு> பெரோஸ் காந்தி> பொன். கந்தையா> பீட்டர் கெனமன் போன்ற தனது நண்பர்களுடன் இணைந்து ‘ பிரித்தானியாவே வெளியேறு’ என்ற இயக்கத்தை நடத்தியவர்களில் ஒருவர்.
பட்டப்படிப்பை முடித்து தாயகம் சென்ற இவர்கள் குடியேற்ற ஆட்சிக்கு எதிராக இயக்கங்களை நடத்தினார்கள். அப்போதிருந்த இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர் புரட்சி> குடியேற்ற ஆட்சியிருந்து விடுபடுவது> புரட்சியில் தொழிலாள> விவசாய வர்க்கங்களின் பங்கு போன்ற சர்வதேச அளவிலான தத்துவார்த்த> நடைமுறை சார்ந்த விவாதங்களினால் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அக் கட்சியிலிருந்து வேளியேறி 40களில் ஐக்கிய சோசலிசக் கட்சியை ஸ்தாபித்தார்கள். பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த இவர்களது கட்சி தடைசெய்யப்பட்டது. இருப்பினும் அவர்கள் இரகசியமாக இயங்கினார்கள்.
1943 இல் சர்வதேச அளவில் தொழிலாள இயக்கங்கள் பல கம்யூ. கட்சியாக மாற்றம் பெற்ற வேளை சோசலிசக் கட்சியை கம்யூ. கட்சியாக பெயர் மாற்றம் செய்தார்கள். இலங்கையிலும்> இந்தியாவிலும் பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக மாகாத்மா காந்தி தலைமையிலும்> இடதுசாரி இயக்கங்களினாலும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் சுதந்திரத்தை வழங்கி வெளியேறும் முடிவுக்கு குடியேற்ற ஆட்சியாளர் வந்தனர். இதன் காரணமாக இலங்கைக்கான அரசியல் யாப்பை வரையும் பொருட்டு சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் ஆணைக்குழு முன்னிலையில் கம்யூ. கட்சி தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிகவும் தெளிவாக சில முன் மொழிவுகளை சமர்ப்பித்தது. அவை இன்றும் வலுவான> பொருத்தமான கோரிக்கைகளாக இருப்பதை அவதானிக்கலாம்.
தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயாட்சியை இன்று தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைத்த போதிலும் இவை 40களில் கம்யூ கட்சியால் முன்வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதும் இல்லை. ஆதரித்ததும் இல்லை.
- இலங்கை பல்லின மக்களின் தாயகம்.
- பல மதங்களை பின்பற்றும் நாடு.
- பல மொழி பேசுபவர்களின் தேசம்.
- பல கலாச்சாரங்களின் இருப்பிடம்.
- இலங்கைத் தமிழர்கள் தனித் தேசிய இனம்> தமது பிரதேசங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் சுயாட்சி உரிமை அம் மக்களுக்கு உண்டு.
என தேசிய இனப் பிரச்சனை குறித்து தமது திட்டத்தினை முன்மொழிந்தார்கள். இத் தீர்மானங்களை தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பில் வைத்தியலிங்கம் அவர்களும்> கம்யூ. கட்சி சார்பில் பீட்டர் கெனமன் அவர்களும் கையளித்தனர்.
யாழ். இந்துக் கல்லாரியின் கணித ஆசிரியராகவும்> பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லாரி அதிபராகவும் பணியாற்றிய அவர் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியதோடு> உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பல கட்டிடங்களை நிர்மாணித்து அதன் தரத்தை உயர்த்தவும் உழைத்தார்.
அவ் வேளையில் வட மாகாணத்தின் பாடசாலைகள் பல தனியார் மயமாக இருந்த வேளை ஆசிரியர்களுக்கென வட மாகாண ஆசிரியர் சங்கம்> அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அம் மாகாண ஆசிரியர் சங்கத்தினால் பரீட்சைகளும் நடத்த உதவினார்.
தேசத்தின் சாமான்ய உழைக்கும் மக்களுக்காக செயற்பட்ட இம் மகான் தனது மக்களுக்காகவும் தனது உழைப்பை வழங்கத் தவறவில்லை. பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் தனது இலட்சியத்திலிந்து விலகாது மக்களுக்குச் சேவை செய்த வைத்திலிங்கம் அவர்களை நினைவுகூர்வது சாலப் பொருத்தமானது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com