“ஈழப்போராட்டத்தில்
இதுவரை நடந்தவைகளும்
இனி நடக்க வேண்டியவைகளும்”
– பெங்களுர் மாநாட்டில்
ஈ.என்.டி.எல்.எப். தலைவர்
ஞா.ஞானசேகரன் அவர்கள்
ஆற்றிய உரை!
பெங்களுர்
சிறப்பு மாநாடு
நாள்:- 13, 14 – 11 – 2010
பெங்களுர் நகரில்
கடந்த 13 மற்றும்
14ம் திகதிகளில்
நடைபெற்ற சிறப்பு
மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப்.
தலைவர் ஞா.ஞானசேகரன்
அவர்கள் ஆற்றிய
உரை வெளியிடப்படுகிறது.
இவ்வுரை வீடியோவில்
வெளியிடுவதாக
இருந்தது. மாநாட்டினை
ஒளிப்பதிவு செய்ததில்
சில குறைபாடுகள்
இருந்ததால், அவரது
உரையினை ஒலி மற்றும்
ஒளி இல்லாமல் வெளியிடுகிறோம்.
இங்கு தலைமையேற்றிருக்கும்
திரு. டேவிட்
அவர்களே, இந்த
மாநாட்டிற்கு
வருகை தந்திருக்கிற
பேராளர்களே! பல
சிரமங்களுக்கு
மத்தியில் முகாம்களிலிருந்தும்,
சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளிலிருந்து
வந்திருக்கிற
எனது அன்பிற்குரிய
நண்பர்களுக்கும்
மற்றும் மாணவ செல்வங்களுக்கும்
எனது அன்புக்குரிய
வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள்
கடந்த 30, 40 ஆண்டுகளாக
போராட்டங்களை
முன்னெடுக்கிறாhகள்
என்பது அனைவரும்
அறிந்த ஒன்று.
ஈழத் தமிழர்
போராட்டம் என்பது,
கிட்டத்தட்ட கிறிஸ்துவுக்கு
முன் 161ஆம் ஆண்டுகளிலேயே
எங்களது இனத்துக்கும்
சிங்கள இனத்துக்குமான
போர் ஆரம்பித்துவிட்டது.
அது சிங்கள
இனத்திலுள்ள துட்டகை
முனு என்பவர் அந்த
யுத்தத்தை ஆரம்பித்து
வைத்தார். அந்த யுத்தத்தில்
தமிழ் அரசனான எல்லாளன்
தோல்வியுற்றான்.
அதன் மூலமாக
அவர்கள் அனுராதபுரம்,
பொலனருவ பகுதிகளைக்
கைப்பற்றி சிங்களவருடைய
ஆட்சியை அங்கு
நிலைநாட்டினார்கள்.
சிங்களவருடைய
வரலாறு ஒரு குறுகிய
வரலாறுதான்! ஆயினும் ஈழத்
தமிழருடைய வரலாறு
என்பது கிட்டத்தட்ட
5000 ஆண்டுகளைக் கொண்டது.
இலங்கை என்ற சொல்
என்பது தமிழ்ச்
சொல் அல்ல! இலங்கை
என்பது சமஸ்கிருதச்
சொல்! தமிழ்
இலக்கணத்திலே
ஒரு முறை இருக்கிறது.
லகரம் ல, ர, ந,
ட, ன. னீ, ழ, ள இந்த
எழுத்துக்கள்
தமிழினுடைய சொல்லின்
முதலெழுத்தாக
வரமாட்டாது. அதற்குப் பதிலாக
அவர்கள் எழுதிய
இலக்கணத்தின்
படி அந்த எழுத்தக்களின்
முன் “இ” சேர்க்கப்படுகிறது.
அப்படிச் சேர்க்கப்பட்டதுதான்
லங்கா என்ற சொல்லுக்கு
முன் “இ’ சேர்க்கப்பட்டு
“இலங்கை”யாக மாறியது.
இந்த “லங்கா”
என்ற சொல், ஆரம்பத்தில்
“பாளி” மொழி பேசி
இலங்கைக்கு வந்த
பௌத்த பிக்குகள்
அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த பௌத்த பிக்குகள்
என்பவர்கள் சிங்கள
இனத்துக்குச்
சொந்தமானவர்கள்
அல்ல! பொளத்தத்தைப்
பரப்ப “பாளி” மொழி
பேசி இலங்கைக்கு
வந்த பௌத்தப் பிக்குகள்தான்
சிங்களவருடைய
வரலாற்றை தொகுத்து
எழுதியவர்கள்.
அப்படி அவர்கள்
எழுதிய சிங்கள
இனத்தினுடைய வரலாறு
முன்னுக்குப்
பின் முரணானது.
அவர்களுடைய
மகாவம்சம் என்ற
புத்தகத்திலே,
எப்படி சொல்லப்பட்டிருக்கிறது
என்றால் விஜயன்தான்
சிங்களவருடைய
மூதாதேயர் என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த விஜயன்
என்பவர் வங்கம்
என்ற நாட்டிலிருந்து
நாடுகடத்தப்பட்டு,
அவர் இலங்கை வந்து
இறங்கினார். அவர்களோடு 700
பேர் துட்டர்களாக
நினைக்கப்பட்டு,
விஜயனோடு கப்பலேற்றி
அனுப்பப்பட்டு,
அவர்களும் இலங்கை
வந்து சேர்ந்தனர்.
இந்த சிங்களவருடைய
மூதாதையர் என்று
சொல்லக்கூடிய
விஜயனின் வரலாற்றை
மகாவம்சம் எப்படி
சொல்கிறது என்றால்
விஜயனுடைய தந்தையாகிய
ஒரு அரசன், தனது
தாய், தனது சகோதரிகளுடன்,
காட்டிலிருந்து
வெளியில் வந்து,
வங்கத்தில் தனது
மூதாதையருடன்
இணைந்தார்கள்.
அவர்கள் காட்டிலிருந்து
எப்படி வந்தார்கள்
என்பற்கான, கற்பனை
விளக்கம் ஒன்று
மகாவம்சத்தில்
சொல்லப்படுகிறது,
விஜயனுடைய பாட்டியார்
வங்கத்திலிருக்கிற
ஒரு காட்டுப் பகுதியில்
பிரயாணம் செய்துகொண்டிருக்கும்
போது, ஒரு சிங்கத்தினால்
கடத்தப்பட்டு,
அந்தச் சிங்கம்
அவரை காட்டுக்குள்
அழைத்துச் சென்று
குடும்பம் நடத்தி
அதற்குப் பிறந்தவர்தான்
விஜயனுடைய தந்தையார்
என்பது சிங்கள
மகாவம்சத்தில்
சொல்லப்பட்டிருக்கிற
ஒரு கதை. இதில்
உண்மை எதுவும்
இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், மகாவம்சம்
என்பது பௌத்தத்தைப்
பரப்ப, பௌத்தத்தைக்
காக்க, சிங்கள
இனத்தை ஒரு உணர்வுள்ள
இனமாக மாற்றுவதற்காக
ஒரு கட்டுக்கதையாகத்தான்
அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிங்கத்துக்குப்
பிறந்தவர்தான்
விஜயனுடைய தந்தை,
அதனால்தான் இவர்களை
சிங்களவர் என்று
சொல்லப்படுகிறது.
உண்மையிலேயே சிங்களவருடைய
பெயர் சிங்களம்
அல்ல! அவர்கள்
இலங்கையில் வந்திறங்கும்
போது அவாகளுடைய
பெயர் “ கெல”
கெலஜனதா என்றுதான்
அவர்கள் சொல்லப்பட்டார்கள்.
சிங்கத்துக்குப்
பிறந்தவர் என்று
சொல்லப்பட்டது
எதில் என்றால்
மகாவம்சத்தில்,
மகாவம்சத்தில்
வந்த சிங்கத்தின்
முன் பகுதியான
“சிங்” கை எடுத்துதான்
“சிங்கெல” என்று
வந்தது. அந்த
சிங்கம் என்பது
இல்லை என்று சொன்னால்
வெறும் “கெல” என்றுதான்
இருக்கும். அப்படி
சிங்கம் என்ற சொல்
புகுத்தப்பட்டதற்குக்
காரணம், சிங்களவர்கள்
வீரமிக்கவர்கள்
என்பதை அவர்களுக்கு
உணர்த்த வேண்டும்
என்பதற்காக பௌத்த
பிக்குகளால் இந்த
சிங்கத்தினுடைய
கட்டுக்கதை சொல்லப்பட்டு
அவர்கள் சிங்களவர்களாக
மாறினார்கள்.
சிங்களவர்களுடைய
வரலாற்றுக் குறிப்புகளான
மகாவம்சம், தீப
வம்சத்தில் சொல்லப்படுவது
என்னவென்றால்.
கிறிஸ்துவுக்கு
முன் 450 களில் விஜயன்
கப்பலில் கடத்தப்பட்டு
இலங்கை வந்து இறங்கினார்.
அவருடைய உறவுக்காரர்கள்
நிறையபேர் கலிங்க
நாட்டில் இருந்தார்கள்.
கலிங்க நாட்டில்
பௌத்தம் பரவியிருந்தபடியால்,
“பௌத்தம்” இலங்கைக்குப்
பரவ வாய்ப்பாக
இருந்தது என்று
அவர்களுடைய வரலாற்று
நூல்கள் சொல்கிறது.
சுதந்திரத்துக்குப்
பிறகு, பாடசாலைகளிலும்,
கல்லூரிகளிலும்
இலங்கைத் தமிழர்களுக்கு
சிங்களவருடைய
வரலாறு சிங்களவர்களால்
போதிக்கப்படுகிறது
அப்படி போதிக்கப்படும்போது,
ஒரு இடத்தில் மகாவம்சத்தில்
சொல்கிற ஒரு கூற்றின்படி.
துட்டகைமுனு
ஒரு விருந்தினில்
கலந்துகொள்ளாமல்,
கோபித்துக்கொண்டு
போய் ஒரு கட்டிலில்
படுத்து இருக்கிறார்.
அப்படிக் கட்டிலில்
கால் கைகளை மடக்கிக்
கொண்டு குறண்டிக்கொண்டு
படுத்துகிடக்கிறார்
என்பதை அவரின்
தாய் அறிந்து,
அவரிடம் போய்,
“நீ எதற்காக முடங்கிக்கொண்டு
படுத்திருக்கிறாய்?
கால் கைகளை நன்றாக
நீட்டிக்கொண்டு
படுக்க வேண்டியதுதானே”
என்று சொன்னதற்கு,
அந்த கெமுனு சொன்னார்
என்று அப்போது
தமிழர்களுக்குப்
படிப்பிக்கப்பட்டது
என்னவென்றால்,
‘தெற்குப் பக்கம்
நான் காலை நீட்டி
படுக்க முடியவில்லை
அங்கு சமுத்திரம்
இருக்கிறது, வடக்குப்
பக்கத்தில் தமிழர்கள்
வாழ்கிறார்கள்
அதனால் நான் நின்மதியாக
கால் கைகளை நீட்டி
படுக்கமுடியவில்லை”
என்று சொல்கிறார்.
ஆனால், மகாவம்சத்தில்
பாளி மொழியில்
உண்மையாக எழுதப்பட்டது
அதுவல்ல, உண்மையான
பாளிமொழியில்
எழுதப்பட்ட மகாவம்சத்தில்
அவர் என்ன சொல்லியிருக்கிறார்
என்றால், “கால்
கையை என்னால் நீட்ட
முடியவில்லை, தெற்குப்
பகுதியில சமுத்திரம்
இருக்கிறது, கங்கைக்கு
மேற்பகுதியில்
தமிழர் வாழ்கிறார்கள்’
என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த கங்கை
என்றால் அடைப்புக்
குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கிறது
“மகாவலி கங்கை”.
மகாவலி கங்கைக்கு
மேலே தமிழர்கள்
வாழ்கிறார்கள்
என்றுதான் கெமுனு
சொன்னதாக பாளி
மொழியில் எழுதப்பட்ட
மகாவம்சத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
சுதந்திரத்திற்குப்
பின்னர் சிங்களவர்
சொன்ன வரலாற்றுப்
பாடப்புத்தகத்திலே
“வடக்கு” என்று
மாற்றிவிட்டனர்.
மகாவலி என்று
சொன்னால், மத்தியமாகாணத்துக்கு
மேலிருந்து வடக்கு
வரைக்கும் தமிழர்கள்
வாழ்ந்தார்கள்
என்பதுதான் கெமுனுவுடைய
கூற்று. மகாவலி
என்று சொன்னால்
தமிழர்கள் மகாவலி
வரைக்கும் இடத்தைக்
கேட்க்கப் போகிறார்கள்,
என்பற்காகத்தான்
வடக்கு என்று மாற்றிவிட்டார்கள்.
இதைத்தான்
எங்களுக்கு வரலாறாக
போதிக்கப்பட்டது
பாடசாலைகளில்.
எங்களது வரலாற்று
ஆசிரியர்கள் அல்லது
அரசியல் தலைவர்கள்
இதிலுள்ள தவறை
அப்போதே சுட்டிக்காட்டவில்லை,
திருத்தவில்லை.
எது எதெற்கெல்லாமோ
போராட்டம் நடத்தினார்கள்,
ஆனால் வரலாற்றை
திரித்து எழுதி
தமிழருடைய வரலாற்றை
மாற்றி எழுதியதற்கு
போராட்டம் நடத்தப்படவில்லை.
இதுவரைக்கும்
மகாவம்சம் தமிழர்களுக்கு
எதிராக எழுதப்பட்ட
புத்தகமே தவிர
அது தமிழர்களுடைய
வரலாற்று நூல்
அல்ல!
ஈழத்தில் தமிழருடைய
வரலாறு!
தமிழர்களுக்கென்று
ஒரு வரலாறு உண்டு.
தமிழர்களின்
வரலாறு என்று பதிவு
செய்யப்பட்டது.
கடந்த காலங்களில்
ஏற்பட்ட கடல்கோள்களால்
அழிக்கப்பட்டது.
ஆனால், தமிழர்களின்
வரலாறு பகுதிகளை
எஞ்சிய சில இடங்களில்
ஒரு சில தனிநபர்கள்தான்
வைத்திருந்தார்கள்.
அவர்களுடைய
வரலாற்றுக் குறிப்புகள்
மூலமாக, தமிழர்கள்
ஈழத்தினுடைய பூர்விகக்
குடிகள் என்று
கண்டுகொண்டோம்.
ஈழம் என்ற சொல்லுக்கு
சரியான விளக்கம்
இன்னும் யாரும்
சொல்லவில்லை.
ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னால் உள்ள
வரலாற்றுக் குறிப்புகள்
ஈழத்துக்கு என்ன
பொருள் என்று குறிப்பிடுகிறது.
அது என்ன என்று
சொன்னால், திராவிடர்
வாழ்ந்த நிலப்பரப்பு
கன்னியாகுமரியிலிருந்து
ஏறக்குறைய 7000 மைல்களுக்கு
அப்பால் நீண்டிருந்தது
என்று வரலாற்றுக்
குறிப்பு சொல்கிறது.
இது கடல்கோளால்
அழிக்கப்பட்டது.
தமிழ்ச்சங்கம்
என்று முதன்முதலில்
ஆரம்பிக்கப்பட்ட
தமிழ்ச்சங்கம்
அந்த அழிந்து போன
மலைபிரதேசங்ளில்தான்
ஆரம்பிக்கப்பட்டது
என்று வரலாற்றுக்
குறிப்பு சொல்கிறது.
இந்த ஈழம் என்ற
சொல் புறநானூற்றிலும்
இதிகாசங்ளிலும்
சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், அதற்கு
சரியான விளக்கம்
சொல்லப்படவில்லை.
அதற்கு விளக்கத்தை
விளக்க முயற்சித்தவர்களுடைய
விளக்கத்திலிருந்து
நான் ஒரு விளக்கத்தை
சொல்கிறேன். “ஈழம்” என்ற சொல்
ஏழ் கடலில் இருந்து
பிறந்தது என்றுதான்
வரலாற்றுக் குறிப்பு
சொல்கிறது. “ஏழ் கடல்” நாடு
என்று ஒரு நாடு
இருந்தது, அது
குமரி கண்டத்தின்
கீழ் இருந்தது.
அது இலங்கையுடன்
தொடர்புடையதாக
இருந்ததாக வரலாற்றுக்
குறிப்பு சொல்கிறது.
இந்த “ஏழ் கடல்”
நாடினுடைய சுருக்கம்தான்
‘ஈழம்”. இதற்கு
அப்பாற்பட்டு
சிலர் விளக்கங்கள்
கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த
விளக்கங்கள் எவையும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இல்லை.
திராவிட மொழிகளில்
தமிழ் மூத்த மொழி,
அதிலிருந்து பிரிந்து
சென்றதுதான் ஏனைய
மொழிகள். அப்படி
ஒரு மொழிதான் ஈழத்தில்
இருந்தது என்று
சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கு
ஆதாரக் குறிப்புகள்
எதுவும் இல்லை.
இலங்கையில்
இருந்தது “எழு”
மொழி என்று சொல்லப்படுகிறது.
“துளு” மொழி என்று
ஒரு மொழி இருக்கிறது.
அந்த மொழி கர்நாடக
மாநிலத்தினுடைய
மேற்குப் பகுதிகளில்
பேசப்படுகிறது.
இது திராவிட
மொழி. கன்னடமும்
திராவிட மொழிதான்,
தெலுங்கும் திராவிட
மொழிதான், மலையாளமும்
திராவிட மொழிதான்,
இப்படி தமிழிலிருந்து
பிரிந்து சென்ற
மொழிகளில் இருக்கிற
சமஸ்கிருத சொற்களை
நீக்கிவிட்டுப்
பார்த்தால் மிஞ்சுகிறது
தமிழ் மட்டுமே.
தெலுங்கை எடுத்துக்கொண்டால்
அதிலிருக்கிற
வடமொழி, சமஸ்கிருத
சொற்களை நீக்கினால்
மிஞ்சுகிறது தமிழ்தான்.
கன்னடத்திலிருக்கிற
வடமொழி சொற்கள்
சமஸ்கிருத சொற்களை
நீக்கினால் மிஞ்சுகிறது
தமிழ். மலையாளத்திலும்
இதுதான்! அடுத்தது
துளு! ஈழத்திலே
“எழு” மொழி இருந்ததாக
சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கு
ஆதாரப்பூர்வமான
சான்றுகள் எதுவும்
இல்லை. ஆகவே
ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கான
ஆதாரப்பூர்வமான
சொல் ஈழம் என்பதற்கான
வழியமைப்பு ‘ஏழ்கடல்
நாடு” என்பது, ஏழ்
கடல் நாடு ஒரு
கட்டத்தில் கடலில்
மூழ்கியது. அப்படி கடலில்
மூழ்கியிருந்தால்
அது எப்பொழுது?
அது எப்படி
என்று ஒரு வரலாற்றுக்
குறிப்புச் சொல்லப்படுகிறது.
கிறிஸ்துவுக்கு
முன் 2378ஆம் ஆண்டுகளுக்கு
முன் கடல்கோள்
ஏற்பட்டதாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தக் கடல்கோளில்தான்
முழு பகுதியும்
அழிந்து இலங்கை
நாடு தீவானது என்று
சொல்லப்படுகிறது.
பூம்புகாருக்கு
மேல்பகுதியிலிருந்தும்
குமரிக்கு பின்பகுதிவரைக்கும்
எல்லாம் கடலில்
மூழ்கியது என்று
சொல்லப்படுகிற
வரலாற்றுக் குறிப்புகள்
இருக்கிறது. ஆனால், இது ஆதாரப்பூர்வமாக
எழுதப்படவில்லை.
ஏனென்றால்,
கிறிஸ்துவுக்கு
முன் கிறிஸ்துவுக்குப்
பின் என்று பின்நாள்களில்தான்
வந்திருக்கிறது.
அதை ஒரு குறிப்பின்படிதான்
அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்
எப்படியென்றால்,
கிறிஸ்துவுக்கு
முன் 2378 ஆம் ஆண்டு
சொல்லப்போனால்
இப்போது 4388 ஆண்டுகளுக்கு
முன் என்று எடுத்துக்கொள்ளலாம்.
“ஈழம்”; என்ற சொல்
தமிழுக்குச் சொந்தமானதே
தவிர வேறு எந்த
மொழிக்கும் சொந்தமானதல்ல.
இலங்கையில் இன்று
“லங்கா” என்று சொல்லப்படும்
சொல் அது சிங்களத்துக்குச்
சொந்தமானதல்ல
அது சமஸ்கிருதத்துக்கும்,
பாளி மொழிக்கும்
சொந்தமானச் சொல்.
ஏனென்றால்
சிங்களவர் இலங்கையில்
இறங்கும் போது
அதற்கு இலங்கை
என்ற பெயர் இல்லை.
பிக்குகள்
1800 ஆண்டுகளுக்கு
முன்பு மதத்தைப்
பரப்ப வந்திறங்கிய
போதுதான் லங்கா
என்று பெயர் வைத்தனர்.
லங்கா என்றால்
“தீவு” என்று அர்த்தம்.
ஆகவே, அவர்கள்
தீவுக்குப் போனாhகள்,
தீவுக்குப் போனபடியால்
அவர்கள் லங்கா
என்று பெயர் வைத்தனர்.
பின்னால் அவர்கள்
“சிறி” யைச் சேர்த்து
சிறிலங்கா என்று
மாற்றிவிட்டனர்.
ஆகவே
வரலாற்றுக் குறிப்புகளை
நாங்கள் எடுத்துக்கொண்டு
பார்த்தாலே “ஈழம்”
என்ற சொல்தான்
நிரந்தரமான தமிழ்ச்
சொல்.
“லங்கா” என்ற
சொல் சிங்களவருக்கும்
சொந்தமில்லை தமிழருக்கும்
சொந்தமில்லை.
இப்போது “ஈழம்”
என்ற சொல்லைப்
பயன்படுத்தக்கூடாது
என்று சொல்லும்
அளவுக்கு சிங்களவர்கள்
முன்னேறிவிட்டனர்.
தொடரும்....