“ஈழப்போராட்டத்தில்
இதுவரை நடந்தவைகளும்
இனி நடக்க வேண்டியவைகளும்”
– பெங்களுர் மாநாட்டில்
ஈ.என்.டி.எல்.எப். தலைவர்
ஞா.ஞானசேகரன் அவர்கள்
ஆற்றிய உரை! - பாகம்
-02
பெங்களுர்
சிறப்பு மாநாடு
நாள்:- 13,14 – 11 – 2010
பெங்களுர் நகரில்
கடந்த 13 மற்றும்
14ம் திகதிகளில்
நடைபெற்ற சிறப்பு
மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப்.
தலைவர் ஞா.ஞானசேகரன்
அவர்கள் ஆற்றிய
உரை வெளியிடப்படுகிறது.
இவ்வுரை வீடியோவில்
வெளியிடுவதாக
இருந்தது. மாநாட்டினை
ஒளிப்பதிவு செய்ததில்
சில குறைபாடுகள்
இருந்ததால், அவரது
உரையினை ஒலி மற்றும்
ஒளி இல்லாமல் வெளியிடுகிறோம்.
பாகம் -02
ஈழத்
தமிழர்களுக்கும்
சிங்களவர்களக்குமான
பரம்பரைப் போர்
ஈழத்தமிழர்கள்
மீது துட்ட கைமுனு
ஆரம்பித்துவைத்த
போராட்டக்காலங்களிலிருந்து
போர்த்துக்கீசியர்
எங்களது நாட்டைக்
கைப்பற்றும் வரைக்கும்
எங்களுடைய தமிழ்
அரசர்கள் சிங்களவர்களிடம்
பல நூறு தடவைகளுக்கும்
மேல் யுத்தங்கள்
மேற்கொண்டிருக்கிறார்கள்.
சிங்ளவர்கள் வடக்குப்
பகுதியைப் பிடிப்பதும்
பிறகு அவர்களை
தமிழர்கள் விரட்டியடித்துக்கொண்டு
போய் தெற்குப்
பகுதியில் கொண்டுபோய்
விடுவதுமாக பல
நூறு தடவைக்கும்
மேல் போராட்டம்
நடந்துகொண்டுதான்
இருந்துள்ளது.
அனுராதபுரமும்,
பொலநறுவையும்
தமிழர்களால் கட்டி
எழுப்பப்பட்ட
பிரதேசங்களே அல்லாமல்
சிங்களவர்களின்
பிரதேசமே கிடையாது.
அனுராதபுரத்தில்
பௌத்தப் பிக்குகள்
வந்து பௌத்த விகாரைகளைக்
கட்டுவதற்கு யார்
இடம்கொடுத்தது
என்று கேட்டால்,
தமிழ் அரசர்கள்தான்!
தமிழ் அரசர்கள்
அந்தக்காலத்தில்
சைவம் மற்றும்
சமண மதத்தைப் பின்பற்றினார்கள்.
ஆனால் பௌத்தத்தை
எதிர்க்கவில்லை.
அதுவும் ஒரு
சமயம். அதற்கும்
நாம் வழிபடுவோம்
என்றுதான் பௌத்தத்தை
அனுமதித்தார்கள்.
ஆந்திராவில்
வடக்குப் பகுதியும்
பீகாருக்குக்
கீழ்பட்டப்பகுதியும்
பாளி மொழிப் பேசப்பட்டு
வந்தது. அந்தப்
பாளி மொழி பேசிய
புத்தப் பிக்குகள்தான்
இலங்கையைத் தெரிவு
செய்து, இலங்கையை
முற்றும் முழுவதுமாக
ஒரு பௌத்த நாடாக
மாற்ற வேண்டும்
என்று திட்டமிட்டவர்கள்.
அந்தத் திட்டத்துக்கு
அடிகோலியவர் அசோகச்
சக்கரவர்த்தி.
அசோகச் சக்கரவர்த்தியின்
மகன் என்று சொல்லப்படுகிற
மகிந்தன் அல்லது
மகேந்திரன், சங்கமித்திரை
இந்த இரண்டு பேரும்தான்
பொளத்தத்தைப்
பரப்ப தலைமை தாங்கி
இலங்கைக்கு வந்தவர்கள்.
இந்த இருவரையும்
பற்றி ஒரு கூற்று
உள்ளது. மகிந்தன்
என்பவர் அசோகச்
சக்கரவர்த்தியின்
மகன் என்பதுதான்
அது. ஆனால்
இந்தியாவில் உள்ள
சான்றுகள் என்ன
சொல்கிறது என்று
கேட்டால், மகிந்தன்
அசோகச் சக்கரவர்த்தியினுடைய
தம்பி. அவர்
சில தவறான செயல்களைச்
செய்து ஒரு துட்டகனாக
நடந்தபடியால்,
அவரை சிறையில்
அசோகச் சக்கரவர்த்தி
அடைத்தார். அசோகச்
சக்கரவர்த்தி
மகிந்தனை சிறையில்
அடைத்து மரண தண்டனை
கொடுக்கிற நேரத்தில்,
நீ என்னுடைய சகோதரனாக
இருந்தும் உன்னை
தூக்கிலிட வேண்டிய
நிர்ப்பந்தம்
எனக்கு ஏற்பட்டிருக்கிறது,
மன்னித்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டார்.
சிறையில்
அடைக்கப்பட்ட
நாள் முதல்கொண்டு
மகிந்தன், புத்த
பிக்குகள் அணிகிற
உடை அணிந்து, பௌத்த
மதத்திற்கு மாறி,
மூன்று மாதகாலமாக
பௌத்தங்களைப்
படிக்கத் தொடங்கினார்.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு
முதல்நாள் அசோகச்
சக்கரவர்த்தி
மகிந்தனின் கொட்டகைக்குச்
சென்று பார்த்தபொழுது,
மகிந்தன் புத்த
துறவி உடை அணிந்த
கோலத்தில் இருந்தார்.
அப்பொழுது
இவரால் மகிந்தனை
தூக்கிலிட முடியவில்லை.
அதனால் மகிந்தனிடம்
அசோகச் சக்கரவர்த்தி
ஏன் இப்படி மாறினாய்
என்று கேட்டதற்கு,
நான் முழுமையாக
பௌத்தத்திற்கு
அர்ப்பணித்துக்கொண்டேன்.
பௌத்தம் மத போதனை
செய்வதற்கு எனக்குக்
கல்வி வேண்டும்
அதனால் நான் முழுமையாக
அர்ப்பணித்துக்கொண்டேன்
என்று கூறியதாக
சில சரித்திரங்கள்
சொல்கின்றன..
அதன்படி அசோகச்சக்கரவர்த்தியால்
மன்னிக்கப்பட்டுதான்
மகிந்தனுடைய தலைமையில்,
அங்கிருந்த சங்கமித்திரையையும்
அழைத்துக்கொண்டு,
பீகாரில் இருந்த
ஒரு அரசமரத்திலிருந்து
ஒரு கிளையை எடுத்துக்கொண்டு
அனுராதபுரத்திறகுச்
சென்று அதனை நட்டதாகவும்
இந்தியாவில் இருக்கிற
வரலாறுகள் சொல்கிறது.
ஆனால் மகாவம்சமோ
அல்லது பிற்பாடு
வந்த சிங்கள வரலாறுகளோ
வேறுவிதமாக சொல்கிறது.
சங்கமித்திரையும்
மகிந்தனும் அசோகச்சக்கரவர்த்தியின்
குழந்தைகள், அவர்கள்தான்
தலைமைத்தாங்கி
இலங்கை வந்து பௌத்தத்தைப்
பரப்பினார்கள்
என்று சொல்கிறது.
எது
எப்படியிருந்தாலும்
இப்பொழுது இதனைப்பற்றி
நாம் பேசி புரயோசனம்
இல்லை. ஆனால்,
சரித்திரத்திரம்
எங்களுக்கு தெரியவேண்டும்.
மகிந்தனும் சங்கமித்திரையும்
வட பகுதியிலிருந்து,
தமிழ்நாடு வழியாக
நாகப்பட்டினம்
வந்து, யாழ்ப்பாணத்தை
அடைந்து யாழ்ப்பாணத்திலிருந்துதான்
இவர்கள் அந்த அரசினுடைய
உதவியோடு அனுராதபுரம்
வந்தார்கள். அனுராதபுரத்தில்
அவர்கள் புத்த
விகாரைகளை அமைக்க
ஆரம்பித்தனர்.
இதற்கு அன்று
யாழ்ப்பாணத்திலிருந்த
அரசர்களாலும்,
தமிழ்நாடு பகுதியில்
அப்பொழுது இருந்த
அரசர்களாலும்
இடங்கொடுத்தப்படியால்தான்
இவர்களால் இதை
கடந்து போகமுடிந்தது.
அதற்கு சாதகமாக
அமைந்தது அவர்களுடைய
மதம். இந்த மதத்தை
தமிழர்கள் எதிர்க்காதபடியால்,
அந்த மதம் இந்தியாவிலிருந்து
அங்கே சென்று,
அங்கே இருக்கிற
ஒரு இனத்துக்கு
அந்த இனம் தோன்றியதே
இந்த மதத்தைப்
பாதுகாக்கத்தான்
என்று அவர்களுக்குப்
போதனை செய்து,
அவர்களை தமிழர்களுக்கு
எதிராகவே திசைத்
திருப்பி விட்டது
இந்த பௌத்த மதமும்,
அந்த பௌத்தப் பிக்குகளும்தான்.
அதனுடைய தொடர்ச்சித்தான்
எங்களுக்கு கடந்த
ஆண்டு முல்லைத்
தீவில் நடந்த மரணம்
வரையிலும். இந்த சம்பவங்கள்
நடந்தேறியதற்குக்
காரணம் பௌத்தப்
பிக்குகளுடைய
தூண்டுதலும் அவர்களுடைய
திட்டமிடுதலும்தான்.
பௌத்தர்கள்
தங்கள் மதத்தைப்
பரப்புவதற்கு
அவர்கள் பயன்படுத்தியது
என்னவென்றால்.
இனத்திற்கிடையே
இருக்கிற முரண்பட்டை
அதிகரிப்பதன்
மூலமாக, சிங்கள
மக்களை, பௌத்தம்
தன்னுடைய கைகளுக்குள்
வைத்துக்கொண்டது.
தமிழர்கள்
பௌத்தத்தை முழுமையாக
ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழர்கள்
ஆரம்பகாலங்களில்
இயற்கை வழிபாடுகளைத்தான்
வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதுவும் குறிப்பாக
சூரியனை. அடுத்தது,
விவசாயம் இப்படியானவைகளுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து அவைகளைத்தான்
வணங்கி வந்தார்களே
தவிர அவர்கள் பௌத்தத்துக்கு
இடம்கொடுக்கவில்லை.
ஆனால், பௌத்தத்தை
அவர்கள் எதிர்க்காமல்
விட்டதன் விளைவுதான்,
நாங்கள் அகதிகளாக
இந்தியாவுக்கு
வரவேண்டியதன்
காரணமாக அமைந்துள்ளது.
தமிழர்களுடைய
போராட்டங்கள்
2000 வருடகால வரலாறுகளைக்
கொண்டது. ஆனால்
எங்களுடைய நாடு
எப்படி சிங்களவர்களுக்கிடையில்
அகப்பட்டது என்று
பார்த்தால்தான்,
எங்களுடைய இனத்தவர்கள்
அதாவது எங்களது
மூத்தகுடி மக்கள்
என்னென்ன தவறுகள்
செய்திருக்கிறார்கள்
என்பதை நாங்கள்
அறிய முடியும்.
எங்கள் இனத்துக்கென்று
கடந்த 450 ஆண்டுகளுக்கு
மேலாக, ஒரு தலைமை
இருக்கவில்லை.
ஆனால் சிங்களவர்களைப்
பொறுத்தவரை அவர்களுக்கு
கிட்டத்தட்ட
2000ம் ஆண்டுகளாக
அவர்களுக்கென்று
தலைமை இருக்கிறது.
இந்த தலைமை
முழுக்க முழுக்க
பௌத்தத்தை மையமாகக்
கொண்ட தலைமை.
ஈழத் தமிழர்களைப்
பொறுத்தவரை அரசர்கள்
ஆண்டு வந்தாலும்,
போர்த்துக்கீசியரின்
படைபெடுப்புக்குப்
பிறகு எங்களது
தலைமை முற்றாக
அழிக்கப்பட்டது.
கடைசியாக இருந்த
பரராசசிங்கம்
என்ற சங்கிலியன்
அழிக்கப்பட்டதுடன்,
எங்களுக்காக இருந்த
தலைமை முற்றாக
அழிக்கப்பட்டுவிட்டது.
பின்னர் எங்களுடைய
பிரதேசங்களைக்
கைப்பற்றிய போர்த்துக்கீசியர்,
டச்சுக்காரர்கள்
அவர்களல்லாமல்
பிரிட்டிசார்,
இவர்கள் யாவரும்
தங்களுடைய நிர்வாகத்திற்காக,
தலைமை இல்லாமல்
போன தமிழர்களை
தங்களுக்கு அடிமைகளாக
தெரிவு செய்தார்கள்.
அப்படியான
தமிழர்களில் சிலர்
படிப்பித்திருந்தார்கள்,
சிலர் அவர்களுடைய
நிர்வாகத்தில்
உள்ளடங்கியிருந்தார்கள்.
அதன் மூலமாக சில
இடங்களில் தங்களின்
வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தியிருந்தவர்கள்
எங்கள் இனத்தைப்
பாதுகாக்க வேண்டும்,
எங்களது மொழியைப்
பாதுகாக்க வேண்டும்,
எங்களுக்காக ஒரு
அமைப்பை உருவாக்க
வேண்டும், ஒரு
தலைமை தேவை, குறைந்தப்பட்சம்
தங்களது மூத்தக்குடிகளைக்
கொண்டு ஒரு சபையை
அமைக்க வேண்டும்
என்றுகூட யாரும்
நினைக்க விலலை.
பிரிட்டிசார் மொத்த இலங்கையையும்
பிடித்து, தமிழரது
ஈழத்தையும் சிங்களப்
பகுதிகளையும்
ஒன்றாக இணைத்து
ஒரே நிர்வாகத்தின்
கீழ் கொண்டு வந்த
காலத்தில் கூட,
இப்படி இணைக்கக்
கூடாது என்று எதிர்ப்பதற்கு
எங்கள் இனத்திற்கு
தலைமை இல்லை.
இந்த
தலைமை என்பது இல்லாமல்
போனதன் விளைவுதான்
இன்றைக்கு ராஜபக்சே
போன்றவர்கள் எங்கள்
இனத்தை அழித்து
முற்றும் முழுவதுமாக
இல்லாமல் செய்து
அவர்களே எங்கள்
இனத்துக்கு வழிகாட்டக்கூடிய
சூழல்கூட எற்பட்டுள்ளது.
பிரிட்டிசார்
எங்கள் நாட்டை
விட்டு வெளியேறினதற்குப்
பிறகு, எங்கள்
மக்களில் சிலபேருக்கு
தேர்தலை மையமாக
வைத்து ஒரு விளிப்புணர்வு
வந்தது. பிரிட்டிசார்
ஆட்சி முடிவுக்கு
வந்த நேரத்தில்,
நாடாளுமன்றத்
தேர்தல் மூலம்
தெரிவு செய்யப்படுகின்ற
நபர்கள் தமிழ்
இனத்துக்கு தலைவராக
வரலாம், அவர்களுடைய
பிரச்சினைகளை
பாராளுமன்றத்தில்
பேசி அவர்களுடைய
குறையைப் போக்கலாம்
என்று சிங்களத்
தலைவர்கள் சொன்ன
பேச்சை, எங்களுடைய
தலைவர்கள் நம்பினார்கள்.
பிரிட்டிசார்
வெளியேறிய பிறகு
எங்களது தலைவர்கள்
என்று சொல்லப்பட்டவர்கள்
தேர்தலில் பங்குபற்றி
தேர்வு செய்யப்பட்டு
பாராளுமன்றத்துக்குச்
சென்றார்கள்.
சில பேர் அமைச்சர்களாகவும்
இருந்தார்கள்.
எங்களுடைய தலைவர்மார்கள்
அன்றே தீர்மானித்திருக்க
வேண்டும், நாங்கள்
சிறுபாண்மை இனமாக
ஆக்கப்பட்ட இனம்,
அவர்களது (சிங்களவரது)
எம்.பி.க்கள் குறைந்தது
175 பேர் இருப்பார்கள்,
எங்களது எம்.பி.க்கள்
அதிகமாக 30 பேர்தான்
தெரிவுசெய்யப்படுவார்கள்,
நாங்கள் ஒரு தீர்மாணத்தை
கொண்டு போனால்கூட
எங்களது எம்.பி.க்கள்
ஒன்று சேர்ந்துகூட
வாக்களிக்க மாட்டார்கள்.
ஆகவே. நாங்கள்
ஒரு தீர்மானத்தை
பாராளுமன்றுக்கு
கொண்டு போனால்
அது நிச்சயமாக
தோற்கடிக்கப்படும்.
ஏனென்றால் பெரும்பான்மையாக
இருப்பவர்கள்
யார் என்று பார்த்தால்
அனைவரும் சிங்களவர்கள்
என்று எங்களது
மக்களும், அன்றைய
நேரத்தில் இருந்த
தலைவர்மார்களும்
சிந்தித்துப்பார்க்கவில்லை,
இந்த நாடாளுமன்ற
முறையினுள் நாங்கள்
போனால் எங்களுடைய
பிரச்சினைகள்
தீர்க்கப்படுமா?
எந்தத் தீர்மானத்தையாவது
நாடாளுமன்றத்தில்
கொண்டு போய் அங்கிருக்கும்
எம்.பி.க்களைக்
கொண்டு நிறைவேற்ற
முடியுமா? என்றால் கண்டிப்பாக
முடியாது. சிங்கள அங்கத்தினருடைய
ஆதரவு இல்லாமல்
தமிழர்கள் எந்தத்
தீர்மானத்தையும்
நிறைவேற்ற முடியாது.
நாடாளுமன்ற
தேர்தல் என்பது
எந்த வழியிலாவது
எம்.பி.க்களாக
வேண்டும் என்பது
எங்கள் தலைவர்மார்களின்
கொள்கை. சிங்களவர்களும்
அதில் விதிவிலக்கல்ல.
நாங்கள் றோடு போடப்போகிறோம்,
அதை செய்கிறோம்,
இதை செய்கிறோம்
என்பதை விட அவர்களுக்கு
எளிமையான வழி,
சிங்களத்தை ஆட்சி
மொழியாகக் கொண்டு
வரப்போகிறேன்,
தமிழர்களை இந்தப்பகுதியிலிருந்து
விரட்டுவேன், தமிழர்களுடைய
பிரதேசங்களில்
சிங்களக் குடியேற்றங்கள்
நடத்துவேன், விவசாயப்
பகுதிகள் சிங்களவருடைய
ஆட்சியின் கீழ்
வரும், இப்படியாக
குறுக்கு வழியைப்
பயன்படுத்தி பிரசாரம்
செய்வது சிங்களவர்களுக்கு
எளிதாக இருந்தது.
சிங்களவர்களுக்கு
சிங்களம்தான்
ஆட்சி மொழியாக
இருக்கிறது, பௌத்தம்
மதம் ஆட்சி பீடத்தில்
இருக்கிறது, இருந்தாலும்
சிங்கள விவசாயிகள்
முழுவதும் மலைப்பிரதேசங்களில்
வாழ்கிறார்கள்.
ஆனால், விவசாய
சமவெளி பூமி அனைத்தும்
தமிழர்களுடைய
கட்டுப்பாட்டுக்குள்
இருக்கிறது, தமிழர்கள்
அனைவரையும் விரட்டி
அடித்து மொத்தமும்
சிங்கள நாடாக மாற்றுவோம்
என்று பண்டாரநாயக்கா
முதன் முதலில்
அறிவித்தார். இந்த அறிவிப்பினை
அடுத்து சிங்கள
மக்கள் கூட்டாக
வாக்களித்து பண்டாரநாயக்காவை
பிரமமந்திரியாக
ஆக்கினார்கள்.
பண்டாரநாயக்கா
பிரதம மந்திரியாக
ஆன உடனே, ஜெயவர்த்தனா
போன்ற மற்ற தலைவர்கள்
என்ன செய்தார்கள்
என்றால், இதற்கு
மேலாக சிங்கள மக்களுக்கு
நான் சேவை செய்வேன். எப்படியென்றால்,
அவரும் அப்படித்தான்,
சிங்களத்தைப்
படிக்க வைப்பேன்,
தமிழர்களை விரட்டியடிப்பேன்,
ஒட்டுமொத்த நாட்டையும்
சிங்கள நாடாக்குவேன்
என்று பண்டாரநாயக்க
அறிவித்ததைவிட
அதிகமாகவே தமிழர்களுக்கு
எதிராக அறிவித்தார்.
அதனால் அடுத்தப்படியாக
ஜெயவர்த்தனாவை
சிங்கள மக்கள்
வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள்.
இப்படியான
பாராளுமன்ற தேர்தல்
முறை வழி வந்ததன்
பின்னர்தான் எங்கள்
இனத்துக்கு அழிவே
ஏற்பட்டது. எங்களது
தலைவர்கள் சிங்கள
அரசியல் தலைவர்களோடு
பேச்சுவார்த்தை
நடத்தி எங்களுக்கு
உரிமை வேண்டும்,
எங்களுக்குக்
கல்வி உரிமை வேண்டும்,
நில உரிமை வேண்டும்,
ஆட்சி உரிமை வேண்டும்
இப்படியெல்லாம்
பல தடவைகள் பேசிபார்த்தார்கள்
அனைத்திலும் தோல்விதான்
ஏற்பட்டது. காரணம் என்னவென்றால்,
ஆட்சி அவர்களுடைய
கையில்.
இந்தியாவுக்கு
சுதந்திரம் வழங்கும்
போது ஜின்னா பாகிஸ்தானைப்
பிரித்துக்கொண்டு
போனார். எங்களது
தலைவர்மார்களும்
அதைப் பார்த்துக்கொண்டுதான்
இருந்தார்கள்.
அவர்களும்
ஈழத்தைத் தனியாகக்
கேட்டிருந்தால்,
நிச்சயமாக பிரிட்டிசார்
பிரித்துக் கொடுத்துவிட்டுத்தான்
போயிருப்பார்கள்.
ஆனால் எங்களது
தலைவர்கள் அதை
கேட்கவில்லை.
அவர்கள் அந்த
சந்தர்ப்பத்தைத்
தவற விட்டுவிட்டார்கள்.
கேட்க வேண்டிய
நேரத்தில் கேட்டு,
ஈழத்தைப் பிரித்துக்கொண்டு
போயிருந்தால்
இவ்வளவு அழிவு
எங்களுக்கு வந்திருக்காது.
எங்களது
அப்போதைய தலைவர்கள்
எல்லாரும் நினைத்தார்கள்
சிங்களவர்கள்
நல்லவர்கள், பௌத்தத்தைப்
பின்பற்றுபவாகள்,
பௌத்தம் ஒரு சாத்வீக
மதம் எங்களுக்கு
எதிராக அவர்கள்
போகமாட்டார்கள்
என்று நம்பியிருந்தார்கள்.
ஆனாலும்
பிரிட்டிஸ்காரங்கள்
வெளியேறும் போது
இவர்களெல்லாரும்
சேர்ந்து போயிற்று
வாருங்கள் என்று
அவர்களை அனுப்பிவைத்ததன்
விளைவுதான் நாங்கள்
இந்தத் தலைமுறையில்
அதிகப்படியான
உயிரிழப்புக்களை
சந்திப்பதற்கான
காரணமாக அமைந்தது.
இது முடிந்து
போன விடயம்.
நாங்கள் என்ன
தவறு செய்திருக்கிறோம்.
எங்கள் இனத்தினுடைய
தலைவர்கள் அல்லது
நாங்கள், அல்லது
எங்களது இயக்கப்
போராளிகள், ஏன்
இந்தப் போராட்டம்
உச்சக்கட்டத்தை
அடைந்தது? இன்று எல்லாமே
இல்லாமல் போனதற்கான
காரணம் என்ன?
என்பவற்றை
நாங்கள் ஆய்ந்துப்
பார்த்தால்தான்.
இனிவருங் காலத்திலாவது
அப்படி ஒரு தவறு
நடக்காமல் இருப்பதற்கு
எங்களுக்கு சரியான
தீர்வு கிடைக்கும்.
தொடரும்....