“ஈழப்போராட்டத்தில்
இதுவரை நடந்தவைகளும்
இனி நடக்க வேண்டியவைகளும்”
– பெங்களுர் மாநாட்டில்
ஈ.என்.டி.எல்.எப். தலைவர்
ஞா.ஞானசேகரன் அவர்கள்
ஆற்றிய உரை! -
பாகம் -03
பெங்களுர் சிறப்பு
மாநாடு
நாள்:- 13,14 – 11 – 2010
பெங்களுர் நகரில்
கடந்த 13 மற்றும்
14ம் திகதிகளில்
நடைபெற்ற சிறப்பு
மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப்.
தலைவர் ஞா.ஞானசேகரன்
அவர்கள் ஆற்றிய
உரை வெளியிடப்படுகிறது.
இவ்வுரை வீடியோவில்
வெளியிடுவதாக
இருந்தது. மாநாட்டினை
ஒளிப்பதிவு செய்ததில்
சில குறைபாடுகள்
இருந்ததால், அவரது
உரையினை ஒலி மற்றும்
ஒளி இல்லாமல் வெளியிடுகிறோம்.
பாகம் -03
விடுதலைப்
போராட்டம் தோல்விக்கான
காரணம்:
எங்களது
வடக்குக் கிழக்குப்
பகுதியை நோக்கிய
ஆபத்து வந்துகொண்டிருக்கிறது.
இதில் தமிழ்த்தலைவர்கள்
என்று சொல்லப்பட்டவர்களெல்லாரும்
கொல்லப்பட்டுவிட்டார்கள்,
ஆயுதங்கள் ஏந்தியவர்கள்
மட்டும் மிஞ்சியிருக்கிறார்கள்,
ஆயுதங்கள் ஏந்தியவர்களில்
ஒரு குறிப்பிட்ட
அளவு வன்னிக்குள்ளே
ஒரு பகுதியினரும்,
ஏனையவர்கள் இலங்கை
அரசாங்கத்துடனும்,
எங்களைப் போன்றவர்கள்
இந்தியாவிலும்
தங்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டது.
இது எப்படி
அமைந்தது என்றால்,
ஆயுதம் ஏந்தியப்
போராளிகள் ஒரு
தூரப்பார்வையுடன்
இந்தப் போராட்டத்தை
முன்னெடுக்கவில்லை.
பாலஸ்தீன விடுதலை
இயக்கம் 1949ஆம் ஆண்டு
ஆரம்பித்தது.
ஆனால் 1964ம் ஆண்டே
பி.எல்.ஓ என்ற பொதுவான
அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
1971ஆம் ஆண்டு
அவர்களுக்கு ஐ.நா.சபையில்
அங்கத்துவம் கிடைத்தது.
1974ஆம் ஆண்டு
யாசீர் அரபாத்
ஒரு கையில் துப்பாக்கியுடன்
மற்றொரு கையில்
ஒலிவ் இலையுடன்
ஐ.நா.சபைக்கு வருகைத்
தந்தார், வரவேற்கப்பட்டார்.
அது அவர்களுடைய
திட்டமிடுதல்.
எத்தனை இயக்கங்கள்
போராடினாலும்
நோக்கம் என்ன?
அவர்கள் அதைப்
புரிந்து கொண்டுதான்
6 இயக்கங்கள் ஒன்று
சேர்ந்துதான்
“பி.எல்.ஓ” என்ற பொது
அமைப்பை உருவாக்கினார்கள்.
யாசீர் அரபாத்தினுடைய
அமைப்பு பி.எல்.ஓ
கிடையாது. அரபாத்தினுடைய
சொந்த அமைப்பின்
பெயர் “அல்பற்றா”.
ஆனால் அவர்
பி.எல்.ஓ. அமைப்புக்கு
தலைமைத் தாங்கினார்.
அது எப்படி என்று
கேட்டால், அவர்களின்
திட்ட அமைப்புகள்!
போராடிய அமைப்புகள்
அனைத்தையும் ஒன்றுசேர்ந்து.
ஒரு அமைப்புக்குக்
கீழ் கொண்டுவந்து,
அதற்குத்தான்
தலைமைத் தாங்கினவர்
அரபாத். அவர்கள்
1949ஆம் ஆண்டில் ஆரம்பித்த
பிரச்சினையை
1970ம் ஆண்டுக்குள்
தங்களுக்கு என்ன
தேவை, நாங்கள்
என்ன செய்ய வேண்டும்
என்று உணர்ந்து
கொண்டார்கள் போராளிகள்.
ஆனால் எங்களுடைய
மக்களுடைய போராட்டம்
வந்து 1970களில்தான்
ஆரம்பித்தது.
1970ல் ஆரம்பித்தது
1983ல் உச்சக்கட்டத்தை
அடைந்து, மக்களே
முன்வந்து தங்களுடைய
குழந்தைகளை இரத்தத்
திலகமிட்டு. குங்குமப் பொட்டு
வைத்து மாதகல்
கரையிலும் வல்வெட்டித்துறை
கரையிலும் வந்து
படகுகளில் ஏற்றிவிட்ட
நாட்களும் உண்டு.
எங்களுடைய
தலைவர்கள் இயக்கங்களாக
இருக்கட்டும்.
கட்சிகளாக
இருக்கட்டும்
ஒன்று சேர்ந்து
ஒரு அமைப்பை ஏற்படுத்தாதன்
தவறுதான் நாங்கள்
இன்று தோல்விக்கான
காரணமாக நாங்கள்
பார்க்கிறோம்.
இயக்கங்களுக்குள்
ஏற்பட்ட வீக்கம்!
இதுவரை ஈழத்தில்
நடந்து வந்தது
ஆயுதத்தினுடைய
ஆதிக்கம். குறிப்பாக
வன்னியில் இருந்தபடியால்
நாங்கள் யாருமே
அவர்களுக்கு ஒரு
கருத்தை சொல்லக்கூடியதாக
இல்லை, கருத்தைச்
சொன்னாலும் அவர்கள்
அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய
நிலையில் இல்லை.
உண்மையில்
சொல்லப்போனால்,
விடுதலைப் புலிகளுக்குள்
இருந்த போராளிகள்கூட,
எங்களுடைய போராட்டத்தினுடைய
வரலாறும், எங்கள்
இனத்தினுடைய வரலாறும்.
ஏன் நாங்கள்
போராடுகிறோம்
என்பதும் அவர்களுக்குத்
தெரியாது. எதிரியைக் கொல்லவேண்டும்
என்று மட்டும்தான்
அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதே
தவிர, அவர்கள்
உணர்வுடன் எங்கள்
மக்களை நேசிக்கிற
அளவுக்கு அவர்கள்
பண்படுத்தப்படவில்லை.
இதே நிலைமை
மற்ற இயக்கங்களிலும்
இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப்.
இயக்கத்தை
எடுத்துக்கொண்டாலும்
சரி. புளொட்டை
எடுத்துக்கொண்டாலும்
சரி அல்லது டெலொவை
எடுத்துக்கொண்டாலும்
சரி, அது எப்படி
வந்ததென்றால்,
விடுதலைப் போராட்டம்
என்று 1983ஆம்ஆண்டு
எல்லாரும் புறப்படும்
போது, இயக்கங்களுக்குள்
ஒரு வீக்கம் ஏற்பட்டது.
இயக்கங்களே
எதிர்பார்க்காத
அளவுக்கு போராளிகள்
இயக்கத்தில் சேர்ந்தாhகள்.
அது எப்படி
நடந்தது என்றால்,
ஒரு விதையை, விதைத்தால்தான்
அறுவடை செய்ய முடியும்,
ஆனால் இயக்கங்கள்
விதையை விதைக்காமல்
அறுவடை செய்தன.
அந்த விதையை
விதைத்தது யாரென்றால்,
தமிழர் விடுதலைக்
கூட்டணி, தமிழரசுக்
கட்சி போன்ற கட்சிகள்தான்
அந்த விதையை விதைத்தன,
அறுவடை செய்தது
இயக்கங்கள். எங்களுக்கு
விடுதலை தேவை என்று
தமிழரசுக் கட்சியும்,
பின்னர் தமிழர்
விடுதலைக் கூட்டணியும்
மக்கள் மத்தியில்
பிரசாரம் செய்தது.
அந்தப் பிரசாரத்தின்
மூலம்தான் மக்கள்
தட்டி எழுப்பப்பட்டார்கள்,
அப்படி தட்டி எழுப்பப்பட்டு,
அவர்கள் போராடுவதற்கு
முன்வரமுற்பட்ட
காலங்களில்தான்
இயக்கங்கள் வளர்ச்சிப்பெற்றது.
அந்த நேரதில்
கட்சிகள் விதைத்த
விதையை அறுவடை
செய்தது இயக்கங்கள்.
இயக்கங்கள்
அறுவடை செய்ததினால்
தமிழர் விடுதலைக்
கூட்டணிக்கோ, தமிழரசுக்
கட்சிக்கோ எந்தப்
பயனும் இல்லாமல்
போனது, அவர்கள்
அழிக்கப்பட்டார்கள்
பின்னாளில். இப்படியான திடீர்
வீக்கம் ஒன்று
ஏற்பட்டபடியினால்,
ஒவ்வொரு இயக்கமும்
தாங்கள்தான் தகுதி
வாய்ந்தவர்கள்,
நாங்கள்தான் பலசாலிகள்
என்று தீர்மானித்துக்கொண்டனர்.
இந்தத் தீர்மானம்
ஆரம்பிக்கப்பட்டது
1982ஆம் ஆண்டு, விடுதலைப்
புலிகளால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட
1990ஆம் ஆண்டுக்குள்
அது முடிவுக்கு
வந்து, விடுதலைப்
புலிகள் மட்டுமே
வன்னியில் மிஞ்சக்கூடிய
அளவுக்கு ஒரு சூழ்நிலை
ஏற்படுத்தப்பட்டது.
ஈழத்
தமிழர்களுக்கான
தீர்வை இந்தியா
தயாரிக்க ஏற்பட்ட
சூழ்நிலை
சிறிலங்கா அரசாங்கம்
எங்களுக்கு, 1958,
1961, 1977, 1981 பின்னர் 1983ஆம்
ஆண்டு எங்கள் மீது
தாக்குதல் தொடுத்து
அந்தத் தாக்குதல்
மிகுந்த கொடூரமானப்
பின்னர்தான், நாங்கள்
(பொதுமக்கள் மற்றும்
இயக்கங்கள்) அங்கிருந்து
இந்தியாவுக்கு
1983ஆம் ஆண்டு அகதிகளாக
புறப்பட்டு வந்தோம்.
அப்படி வந்த நேரத்தில்கூட,
நாங்கள் இன்னொரு
நாட்டுக்குள்ள
வந்திருக்கிறோம்,
எங்களுக்குள்ளே
ஒற்றுமை வேண்டும்,
எல்லோரையும் ஒன்று
சேர்த்து ஒரு அமைப்பை
உருவாக்க வேண்டும்
என்று எங்கள் தலைவர்களோ,
எங்கள் கட்சிகளோ,
எங்கள் இயக்கங்களோ
சிந்திக்கவில்லை.
இங்கே வந்த
பின்னால்கூட, அவாகள்
ஒவ்வொருவரும்
தங்களுக்கு வேண்டிய
தமிழ்நாட்டுக்
கட்சிகளின் ஆதரவைப்
பற்றிக்கொண்டார்கள்.
அப்படி ஆதரவுக்
கொடுத்த தமிழக
கட்சிகளும்; அதன்
தலைவர்களும் எங்களது
தலைமைகளால் தங்களையும்,
தங்கள் செல்வாக்கை
உயர்த்துவதற்கும்,
வருமானத்தைப்
பெருக்குவதற்கும்,
தங்களுடைய பிரசாரங்களை
மேற்கொள்வதற்கும்
பயன்படுத்தப்பட்டார்களே
தவிர, புரயோசனமாக
பயன்படுத்தப்படவில்லை.
அப்படி ஆதரவு
கொடுத்த தமிழகத்
தலைவர்களால்கூட
எங்கள் இனத்துக்கென்று
சொல்லி ஒரு பொது
அமைப்பை ஏற்படுத்த
முடியவில்லை.
இதனால் இந்தியாவுக்குக்
கூட ஒரு பெரிய
சங்கடம் ஏற்பட்டது.
எப்படியென்றால்,
யாரை அழைத்துப்
பேசுவது? ஒரு
அமைப்பின் கீழ்
ஈழத் தமிழர்களின்
எல்லா அமைப்பும்
இருக்கிறதென்றால்,
அந்த அமைப்பை இந்தியா
கூப்பிட்டு, வாருங்கள்!
என்ன பேசலாம்,
என்ன செய்யலாம்
நீங்கள் இங்கு
அகதியாக வந்திருக்கிறீர்கள்.
சொல்லுங்கள்,
என்ன செய்யலாம்
என்று கேடகமுடியும்.
ஆனால் இங்கு
வந்து பல இயக்கங்கள்.
ஒரு இயக்கத்தை
அழைத்துப் பேசினால்
மற்ற இயக்கத்துக்குப்
பிடிக்காது, எப்படி
அகதி முகாம்களில்
பிரச்சினைகள்
இருக்கிறதோ அதே
பிரச்சினை அன்று
இங்கே இருந்தது.
கடைசியாக திம்பு
பேச்சுவார்த்தை
முடிந்த பின்னால்,
இந்தியாவாக ஒரு
முடிவை எடுத்தது.
ஈழத் தமிழர்களுக்காக
நாங்களே ஒரு தீர்வை
தயாரிப்போம் என்றுதான்,
இந்திய-இலங்கை
ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
இந்திய-இலங்கை
ஒப்பந்தம் தயாரிக்கப்படுகையில்.
தயாரிப்பதற்கு
முன்னால் எங்கள்
இயக்கங்கள் யாரையும்
இந்தியா அழைத்துப்
பேசவில்லை, கருத்துக்களையும்
கேட்கவில்லை.
காரணம் நாங்கள்
பல இயக்கங்களாக
இருந்தோம்.
இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கான
காரணம்
இந்திய-இலங்கை
ஒப்பந்தம் தயாரிப்புக்குப்
பின்னால், ஒப்பந்தம்
நிறைவேற்றப்படுவதற்கு
இரண்டு நாள்களுக்கு
முன்னால்தான்,
எல்லா இயக்கங்களும்
அழைக்கப்பட்டு,
அவர்களுக்கு இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தின்
நகல் கையளிக்கப்பட்டது.
அந்த நகலை அன்றைக்கு
இருந்த எல்லா இயக்கங்களும்
வாங்கி படித்துப்
பார்த்தார்கள்,
படித்துப் பார்த்தால்
அதில் சில திருத்தங்கள்
இருந்தன.
இந்தியாவுக்கு
நாங்கள் அகதிகளாக
வந்ததன் பின்னால்,
விடுதலைப்புலிகள்
உள்பட எங்களுடைய
எல்லா இயக்கங்களுக்கும்
இந்தியா உதவிகள்
செய்தது. இங்கு
தங்குவதற்கும்,
முகாம்கள் அமைப்பதற்கும்,
பயிற்சி கொடுப்பதற்கும்,
திரும்பி நாட்டுக்குச்
செல்வதற்கும்
எல்லா உதவிகளையும்
கொடுத்தது. அப்படி
இந்தியா பயிற்சி
கொடுக்கும் போது,
“நீங்கள் தமிழீழத்தைக்
கேட்கக்கூடாது,
தமிழீழத்தைக்
கைவிட்டுவிட்டு
வந்தால்தான் நாங்கள்
பயிற்சி கொடுப்போம்”
என்று எங்களுக்கு
எங்கேயும் சொல்லவும்
இல்லை எந்தவொரு
நிபந்தனையும்
எந்த இடத்திலும்
விதிக்கவுமில்லை.
நாங்களாகவே, இயக்கங்களுக்குள்ளாகவே,
ஒரு தீர்மானம்
எடுத்துக்கொண்டனர்,
(நாங்கள் என்றால்.
எங்களையல்ல! மற்ற
மற்ற இயக்கங்கள்.)
“இந்தியா தனிநாடு
வாங்கிக் கொடுக்காது,
ஏனென்றால் அங்கே
தனிநாடு கிடைத்தால்,
தமிழ்நாடும் பிரிந்துகொண்டு
போய்விடும், அதனால்
இந்தியா தனிநாட்டுக்
கோரிக்கைக்கு
ஆதரவு கொடுக்காது”
என்று தமிழகத்தில்
உள்ள சில தலைவர்கள்
மற்ற இயக்கங்களுக்கு
ஒரு தவறான ஆலோசனை
வழங்கியிருந்தார்கள்.
குறிப்பாக
விடுதலைப் புலிகளுக்கு
ஒரு பயமுறுத்தலாக
தமிழ் நாட்டில்
உள்ள அரசியல் தலைவர்கள்
ஒரு தவறான ஆலோசனையை
வழங்கியிருந்தார்கள்.
அது எடுபட்டது.
அதனாலேயே விடுதலைப்
புலிகள் இயக்கம்
இந்தியாவை விட்டு
விலகி விலகியே
போக வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டது.
இது யாரால்
ஏற்பட்டது என்றால்.
தமிழகத்தில்
உள்ள அரசியல் தலைவர்களால்தான்.
அவர்கள், தனிநாடு
கோரிக்கையை ஏற்கனவே
முன்வைத்துத்
தோல்வி கண்டவர்கள்.
ஆகவே, தங்களால்
முடியாத பட்சத்தில்,
வி.புலிகளுக்கு
ஒரு தவறான தகவல்
தோல்விகண்டவர்களால்
தரப்பட்டது. விடுதலைப் புலிகளும்
அதை நம்பிக் கொண்டு,
இந்தியாவுக்கு
எதிராக எவ்வளவு
தூரம் போக முடியுமோ
அவ்வளவு தூரம்
இந்தியாவுக்கு
எதிராக புலிகள்
சென்றார்கள்.
ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு
முன்னால் இந்தியா
எங்களைக் கூப்பிட்டு
பேசும் போது, நாங்கள்
அந்த ஒப்பந்தத்தினை
வாங்கி படித்துப்
பார்த்துவிட்டு
சில திருத்தங்கள்
தேவை என்று சொன்னோம்.
அப்போதே அன்றைய
பாரதப் பிரதமராக
இருந்த இராஜீவ்காந்தி
அவர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டு,
உடனே நாங்கள் தங்கியிருந்த
இடத்திற்கு வந்திறங்கினார்கள்.
என்ன திருத்தம்
என்று கேட்டார்,
நாங்கள் முக்கியமாக
சொன்ன திருத்தம்
என்னவென்றால்,
இரண்டு மாகாணங்களை
இணைத்துத்தான்
தீர்வு வேண்டும்
என்று சொன்னோம்.
அந்த
ஒப்பந்தத்தை நாங்கள்
பரிசீலித்துப்
பார்த்துக்கொண்டிருக்கையில்
இந்தியாவோ, இராஜீவ்காந்தி
அவர்களோ நீங்கள்
தனிநாடு கோரிக்கையை
கைவிடவேண்டும்
என்று எங்களிடம்
சொல்லவில்லை. நாங்கள் தனிநாடுபற்றி
பேசவில்லை. ஆனால் எங்களது
கொள்கை அதே கொள்கைதான்.
நாங்கள் அதிலிருந்து
மாறுகிறோம் என்று
சொன்னதுமில்லை,
மாறவும் இல்லை.
ஆனால், எங்களின்
சார்பாக இந்தியா
எங்களுடைய பிரச்சினையை
முன்னெடுக்கிறது.
அதனால் நாங்கள்
இதற்கு சம்மதம்
தெரிவித்தோம்.
ஏனென்றால், எங்களுக்குத்
தெரியும் இலங்கை
அரசாங்கத்தைப்
பொறுத்தவரையிலும்,
அவாகள் நெடுங்காலமாக
தமிழர்களுக்கு
உரிமைகிடைக்கக்கூடிய
எந்த ஒப்பந்தத்தையும்
ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். அதனால்,
இப்போது, இந்தியாவால்
போடப்படும் ஒப்பந்தமும்
தூக்கி வீசப்பட்டு,
அதனால் இந்தியாவுக்கும்
இலங்கைக்கும்
முரண்பாடு ஏற்பட்டு
அது எங்களுக்கு
சாதகமாக அமையும்
என்பதனால் நாங்கள்
வடக்குக் கிழக்கு
இணையவேண்டும்,
குறிப்பாக நிலம்,
தொழில், கல்வி,
இது சம்பந்தமாக
தீர்மானம் எடுக்கிற
உரிமை வந்து அந்த
மாநில அரசுக்கு
இருக்கவேண்டும்
என்ற ஒரே ஒரு திருத்தத்தால்
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம்.
வடக்கும் கிழக்கும்
கண்டிப்பாக இணையும்,
அதை நாங்கள் செய்வோம்
என்று எங்களுக்கு
உறுதியளித்தார்,
அதேபோல்தான் அங்கு
செய்யப்பட்டது.
வடக்குக் கிழக்கும்
இணைக்கப்பட்ட
ஒரே மாகாணசபைக்குத்தான்
தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம்
சம்பந்தமாக பேசி
முடிந்ததும் இராஜீவ்காந்தி
அவர்களிடம் நான்
ஒரே ஒரு கேள்வி
கேட்டேன், இது
சம்பந்தமாக தனியாக
நான் பேச வேண்டும்
என்று. என்னோடு
எனது இயக்கத்தைச்
சேர்ந்த கனகராஜ்
என்பவர் இருந்தார்.
ஒரு இயக்கத்திலிருந்து
இரண்டு பேர்தான்
கலந்துகொள்ளவேண்டும்.
தனியாகப் பேச
வேண்டும் என்றால்
இந்தக்கூட்டம்
முடிந்தவுடன்
பேசலாம் என்றார்.
கூட்டம் முடிந்ததும்
எங்களை அழைத்தார்.
என்ன பேச வேண்டும்
என்று கேட்டார்,
நான், ஏற்கனவே
பண்டாரநாயக்கா-செல்வநாயகம்
செய்துகொண்ட ஒப்பந்தம்
கிழித்து வீசப்பட்டது,
டட்லி சேனநாயக்கா-செல்வநாயகம்
செய்துகொண்ட ஒப்பந்தம்
கிழித்து வீசப்பட்டது,
இவர்களுடைய ஒப்பந்தத்திற்கு
ஏற்பட்ட நிலைமை
இந்த ஒப்பந்தத்திற்கு
ஏற்பட்டால் நீங்கள்
என்ன செய்வீர்கள்?
அப்போது, அவர்
என்னிடத்தில்
ஆங்கிலத்தில்
சொன்னார், ‘அப்படி
ஒரு நிலைமை ஏற்படுமாயிருந்தால்,
நாடு பிரித்து
வழங்கப்படும்”
இதை சொன்ன அடுத்த
நிமிடம் நான் சொன்னது,
அப்படி ஒரு முடிவு
உங்களிடம் இருக்குமானால்,
நிபந்தனையின்றி
இந்த ஒப்பந்தத்தை
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”
என்றேன். உடனே
அவர் எழுந்து என்னிடம்
கைகொடுத்துவிட்டு,
உடனடியாக இந்த
ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்
என்று வாக்களித்தவிட்டு
புறப்பட்டுச்
சென்றார்.
இந்த நிகழ்வை
வந்து மற்ற இயக்க
அங்கத்தவர்களை
வைத்துக்கொண்டு
நான் பேசவில்லை,
ஏன் கேட்கவில்லையென்றால்,
இந்தக் கேள்வி
வந்து நான்குபேர்
முன்னால் வைத்துக்
கேட்கக்கூடிய
கேள்வியா? அப்படிக்
கேட்டால், அவரால்
என்ன பதில் சொல்ல
முடியும்? அவருக்கு ஒரு
பிரச்சினையை உண்டு
பண்னும் என்று
உணர்ந்தபடியினால்
நான் தனியாக பேச
வேண்டும் என்று
கேட்டேன். அதனால், தனியாகப்
பேசவேண்டும் என்ற
கேள்விக்கு மேற்கண்டவாறு
பதில் அளித்தார்.
இதை நாங்கள்
உடனடியாக, எங்களது
இயக்க அங்கத்தினர்களிடம்
தெரிவித்தோம்.
இந்தக் கேள்வியைக்
கேட்ட எங்களுக்கு
உறுதியளிக்கப்பட்டது.
ஆனால்
இப்படி ஒரு கேள்வியை
மற்ற ஆட்கள் கேட்டனரா
என்பது எனக்குத்
தெரியாது, ஏனென்றால்
அவர் என்னைத் தவிர
வேறுயாரையும்
தனியாக பார்க்கவில்லை. அங்கு
டெலொ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்.
மற்றும் புளொட்
அங்கத்தவர்கள்
இருந்தனர். விடுதலைப்
புலிகளின் தலைவர்
பிரபாகரன் மட்டும்
இராஜீவ்காந்தி
அவர்கள் கலந்துகொண்ட
கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை,
நான் பிரதமரை தனியாகத்தான்
பார்ப்பேன் என்று
சொல்லி, அசோகா
ஓட்டலில் அவர்
தங்கியிருந்தார்.
அவரை பிரதமர்
தனியாகப் போய்
பார்த்தார், அவர்கள்
என்ன பேசினார்கள்
என்று எங்களுக்குத்
தெரியாது.
நாங்கள் பேசியது,
எங்களது பிரதேசத்தில்
எங்களுக்கென்று
ஒரு தனித்துவம்
நிலைநாட்டப்படவேண்டும்,
வடக்குக் கிழக்கு
இணைந்த ஒரு மாநிலம்
எங்களுக்கு ஏற்படுத்தபட
வேண்டும், அந்த
மாநிலத்துக்கான
அதிகாரங்கள் எங்களுக்கு
வழங்கப்படவேண்டும்,
குறிப்பாக நிலம்,
தொழில், கல்வி,
இது சம்பந்தமாக
தீர்மானம் எடுக்கிற
உரிமை வந்து அந்த
மாநில அரசுக்கு
இருக்கவேண்டும்
என்று, அதை அவர்கள்
ஏற்றுக்கொண்டார்கள்.
இதன் பின்னர்தான்
நாங்கள் மீண்டும்
இலங்கைக்கு வந்தோம்.
இலங்கைக்குச்
சென்ற வேளையில்கூட
அங்கே, பலதரப்பட்டப்
பிரச்சினைகள்,
விடுதலைப் புலிகளின்
பிரச்சினை ஒருபக்கம்,
சிங்களவருடைய
ஜே.வி.பி. யின்
பிரச்சினை ஒருபக்கம்,
இந்தியா அமைதிப்படை
ஈழத்துக்கு வந்ததை
எந்த சிங்களவனும்
ஏற்றுக்கொள்ளவில்லை,
அத்தனை பேரும்
அதற்கு எதிராகத்தான்
நின்றார்கள்.
இராஜீவ்காந்தி
அவர்கள் ஒப்பந்தம்
நிறைவேற்ற வருகையில்கூட,
கையெழுத்துப்
போட்டுவிட்டுத்
திரும்பும் போது
விஜயவீர என்ற விமானப்படை
வீரன் அவரை துப்பாக்கியால்
அடித்து அவமானப்படுத்தி
திருப்பி அனுப்பினார்கள்.
இப்படி பல நிகழ்வுகள்
உண்டு.
தொடரும்....