|
||||
|
“தமிழீழ
விடுதலைப் புலிகள்
புத்துயிர் பெறுவார்கள்
என நான் நினைக்கவில்லை” – திருநாவுக்கரசு
சிறீதரன் ஆக்கம்:சேர்ஜி
டீ சில்வா-ரணசிங்க (இடதுசாரி
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி
பத்மநாபா பிரிவு
தலைவர்களில் ஒருவரான
திருநாவுக்கரசு
சிறீதரன் ஜூன்
2010ல் நடத்தப்பட்ட
ஒரு பிரத்தியேக
நேர்காணலில் சேர்ஜி
டீ சில்வா-ரணசிங்கவுடன்
உள்நாட்டு யுத்தம்
முடிவடைந்த பின்
ஸ்ரீலங்காத் தமிழ்
மக்கள் எதிர்நோக்கும்
பொதுவான நிலமைகளையும்,
எல்.ரீ.ரி.ஈ. இன்
மறைவுக்குப் பின்னான
நடைமுறைகளையும்,
மற்றும் தமிழர்களின்
எதிர்கால இலட்சியத்தையும்
பற்றி அவர் ஆர்வத்துடன்
பேசியிருந்தார்.) பன்மைத்
தன்மையின் மறுவரவு இரண்டு
தசாப்தங்களாக
தமிழீழ விடுதலைப்
புலிகள் தமது அதிருப்தியாளர்களான
தமிழ்கட்சிகளை
அடக்கி வைத்திருந்ததின்
பின்னர், May 2009க்குப்
பிறகு தமிழ் அரசியலில்
பன்மைத் தன்மை
மறு எழுச்சி பெற்று
ஸ்ரீலங்காத் தமிழ்
மக்களின் அரசியற்
காட்சிகளில் கூட்டுச்
சேர்ந்திருக்கிறது. திருநாவுக்கரசு
சிறீதரன்: “ஈ.பி.ஆர்.எல்.எப்
அமைப்பானது ஒரு
இடதுசாரி முற்போக்கு
அரசியல் கட்சி.
எங்கள் ஆரம்பகாலத்
தலைவர் கே. பத்மநாபா 1990ல்
சென்னையில் வைத்து
எல்.ரீ.ரி.ஈ. இனால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
அத்தோடு எல்.ரீ.ரி.ஈ.க்கு
எதிராகப் போரிட்டதில்
எங்கள் இயக்கத்
தோழர்கள் 1400 பேர்களை
நாங்கள் இழந்து
விட்டோம். இன்று ஈ.பி.ஆர்.எல்.எப்.
– நாபா பிரிவு
சுமார் 300முழு நேர
அங்கத்தவர்களை,
பிரதானமாக மட்டக்களப்பு
திருகோணமலை மற்றும்
யாழ்ப்பாணப் பகுதிகளில்
கொண்டிருக்கிறது. தமிழ்
புலம் பெயர்ந்தவர்களிலும்
ஏறக்குறைய 500 சுறுசுறுப்பான
ஈ.பி.ஆர்.எல்.எப்
அங்கத்தவர்கள்
கனடா இங்கிலாந்து,
பிரான்ஸ் ஜேர்மனி
மற்றும் சுவிற்சலாந்து
ஆகிய நாடுகளில்
இருக்கிறார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப்
இரு குழுக்களாகப்
பிரிந்து இருக்கிறது
(ஈ.பி.ஆர்.எல்.எப்.
– நாபா மற்றும்
ஈ.பி.ஆர்.எல்.எப்.
– சுரேஸ் அமைப்புகள்)
எங்கள் பிளவுபட்ட
எதிரணிக்கு சுரேஸ்
பிரேமச்சந்திரன்
தலமை தாங்குகிறார்.
அவர் இப்போது
தமிழ் தேசியக்
கூட்டமைப்புடன்
(ரி.என்.ஏ) கூட்டு
வைத்துள்ளார்.
(தமிழ் தேசியக்
கூட்டமைப்பு, பல
கட்சிகளை உள்ளடக்கிய
ஸ்ரீலங்காவிலிலுள்ள
மிகப் பெரிய தமிழ்
அரசியல் அமைப்பு)
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின்
அரசியல் எங்களுக்கு
வித்தியாசமானது. எங்கள் அமைப்பு
அரசியல் பயிற்றப்பட்ட
பணிநிலை அங்கத்தவர்களை
அடிப்படையாகக்
கொண்டது. அரசியல்
ரீதியாக ரி.என்.ஏ
பரந்த மனப்பாங்கு
கொண்டவர்களல்ல.
அவர்களின் அரசியல்
முன்பு எல்.ரீ.ரி.ஈ.யினைச்
சுற்றியும் இப்போது
புலம் பெயர்ந்தவர்களின்
பலத்திலும் தங்கியுள்ளது.” “ரி.என்.ஏயின்
குறுகிய பிரிவான
அரசியலைப் போலல்லாமல்
(ஈ.பி.ஆர்.எல்.எப். – நாபா,
தமிழீழ மக்கள்
விடுதலை முன்னணி
(புளொட்) ஈழமக்கள்
விடுதலை முன்னணி(ஈ.பி.டி.பி)
மற்றும் தமிழர்
விடுதலைக் கூட்டணி
(ரி.யு.எல்.எப்) ஆகியவை
நம்புவது நாங்கள்
சிங்களவருடன்
நல்ல ஒரு சகோதரத்
தன்மையுள்ள உறவினைப்
பேணவேண்டும் என்று.
இதனால்தான் ஈ.பி.ஆர்.எல்.எப்,
முன்பு அது ஒரு
பெரிய இயக்கமாக
இருந்த போதிலும்
இடது சாரிகளான
லங்கா சமசமாஜக்
கட்சி (எல்.எல்.எஸ்.பி),
ஸ்ரீலங்கா கொமியுனிசக்கட்சி(சி.பி.எஸ்.எல்)
ஆகியவற்றுடன்
பாரம்பரியமாக
ஒரு கூட்டினை ஏற்படுத்தியுள்ளது.புளொட்
அமைப்புக்கு வவுனியா
மாவட்டத்தில்
சுமார் 500 – 600 பயிற்றப்பட்ட
பணிநிலை அங்கத்தவர்களும்
வெளிநாட்டில்
சுமார் 500 – 600 பேர்களும்
உள்ளார்கள். ஈ.பி.டி.பி
க்கும் சுமார்
500 – 600 அங்கத்தவர்கள்
உள்ளனர் வெளிநாட்டில்
அதற்குப் பெரிய
ஆதரவோ பிரதிநிதித்துவமோ
கிடையாது. ரி.யு.எல்.எப்
இன் பாத்திரம்
மற்றக் கட்சிகளை
விட வித்தியாசமானது,
அது எப்பொழுதும்
ஒரு பிரபலமான ஆளின்
கட்சியாகவே இருந்து
வந்திருக்கிறது. அவர்களிடம்
ஒரு 50 அங்கத்தவர்கள்
வரை இருக்கலாம்
ஆனால் அது பணிநிலை
அங்கத்தவர்கள்
சார்பான கட்சியல்ல.
எங்களது கட்சி
மற்றும் புளொட்
ஈபிடிபி போன்றவை
பயிற்றப்பட்ட
பணிநிலை அங்கத்தவர்களைக்
கொண்டது.” தமிழீழ
விடுதலைப் புலிகளின்
நிலை எல்.ரீ.ரி.ஈ.யின்
தோல்விக்குப்
பின் அது மீண்டும்
புத்துயிர் பெறக்
கூடியதான சாத்தியங்கள்
அதிகரித்துக்
கொண்டு போவதைப்போல
தோன்றுகிறது. எப்படியாயினும்
சிறிய அல்லது பலனற்ற
மீதங்கள் தற்போதைய
சூழலில் ஒரு நிகழ்தகவினை
தோற்றுவிக்க முடியாது. திருநாவுக்கரசு
சிறீதரன்; “எல்.ரீ.ரி.ஈ.
ஒரு பாசிச இயக்கம். அது
தமிழ் சமூகத்தையே உருக்குலைத்து
விட்டது. அது
முஸ்லிம்களையும்
சிங்களவர்களையும்
வெறுக்கிறது.
அது மட்டுமல்லாமல்
மாற்றுக் கருத்துடைய
தமிழ் கட்சிகளையும்
அது வெறுக்கிறது.
இப்போது பெரும்பாலான
தமிழர்கள் எதிர்ப்புத்
தன்மையுள்ள அரசியல்
நல்லதல்ல என்பதை
உணர்கிறார்கள். தமிழ்
மக்கள் முக்கியமாக
ஸ்ரீலங்காவின்
வடபகுதியாகிய
வன்னியில் வாழ்பவர்களும்
அதேபோல் யாழ்ப்பாணத்தில்
உள்ளவர்களும்
எல்.ரீ.ரி.ஈ.யினை
வெறுப்பதாக தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக இதுதான்
மக்கள் நினைப்பது.
தமிழீழ விடுதலைப்
புலிகள் புத்துயிர்
பெற முடியும் என
நான் நினைக்கவில்லை.
இப்பொழுதிலிருந்து
வரும் 15 வருடங்கள்
வரை எந்த விதமான
ஒரு தமிழ் போராளி
இயக்கமும் உருவாக
முடியும் என்பது
எனக்குச் சந்தேகமே. சிலவேளைகளில்
அரசியல் வன்முறைகள்
உருவாகலாம். ஆனால் போராளி
இயக்கம் உருவாகலாம்
என்பதில் எனக்குச்
சந்தேகம்தான்.
தீவிரவாதிகள்
மிகவும் சிறிய
சீறுபான்மையினர்.
ஸ்ரீலங்காவில்
இப்போது ஒரு 15விகிதமானவர்களே
எல்.ரீ.ரி.ஈ.யினை
ஆதரிக்கக் கூடும்.
முக்கியமாக வன்னி
மக்கள் எல்.ரீ.ரி.ஈ.யின்
மீது போரின்
இறுதிக் கட்டத்தில்
அவர்கள் வெளிக்காட்டிய
அரக்கத்தனத்தினால்
அடங்கா கோபத்திலும்
அவர்களைப் பற்றி
எச்சரிக்கையாகவும்
இருக்கிறார்கள்.
யுத்தத்தின்கடைசி
மாதங்ளில் எல்.ரீ.ரி.ஈ.இடமிருந்து
தப்பிய சில தமிழ்
பொதுமக்களால்
என்னிடம் சொல்லப்பட்டது
என்னவெனில் எல்.ரீ.ரி.ஈ.
பலவந்தமாக ஆட்சேர்ப்பதிலும்,
தமிழ் பொதுமக்கள்
மீது துப்பாக்கிச்சூடு
நடத்துவதிலும்
மிகவும் ஆணவத்துடனும்
இரக்கமற்ற விதத்திலும்
நடந்து கொண்டதாக.” “பொதுமக்களை
உள்ளக இடம் பெயர்
முகாம்களில் இட்ட
போது 8000 – 10000க்கும்
மேலானவர்கள் தப்பிச்
சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான
எல்.ரீ.ரி.ஈ. போராளிகளும்
சுமார் 500கடும்
போக்குடைய அங்கத்தவர்களும்
தப்பி ஓடி விட்டார்கள்.
எல்.ரீ.ரி.ஈ. சார்பான
புலம் பெயர்ந்தவர்கள்
இந்த முகாம்களைப்
பற்றி மிகைப் படுத்தப்
பட்ட விதமாக குற்றம்
சாட்டினார்கள்.
எங்களுக்கு
இது தெரியும் ஏனெனில்
இந்த முகாம்களுக்கு
நாங்கள் ஏற்கனவே
விஜயம் செய்திருநதோம்.
தமிழ்
புலம் பெயர்ந்தவர்களில்
சிலர் இவை சித்திரவதை
முகாம்களைப் போலிருப்பதாகச்
சொன்னார்கள். இது மிகைப் படுத்தப்பட்ட
தன்மை. எல்.ரீ.ரி.ஈ.
சார்பான தமிழ்
புலம் பெயர்ந்தவர்கள்
ஸ்ரீலங்காவிலிருக்கும்
தமிழர்களைக் காட்டிலும்
வித்தியாசமான
மனப்போக்கைக கொண்டவர்கள்.
ஸ்ரீலங்காவிலிருக்கும்
தமிழர்கள் தங்களின்
பிள்ளைகளின் படிப்பையும்,
வேலையையும் வாழ்விடத்தையும்
பற்றியே மிகவும்
கவலைப் படுவார்கள்
ஆனால் எல்.ரீ.ரி.ஈ.
சார்பான தமிழ்
புலம் பெயர்ந்தவர்கள்
நினைப்பது பிரிவினையையும்
போராட்டத்தையும்
பற்றி இதே நேரம்
அவர்களின் பிள்ளைகள்
நல்ல நிலையில்
படித்துக் கொண்டிருப்பார்கள். தமிழர்களின்
பேரவா ஸ்ரீலங்கா
தமிழர்களிடையே
உள்ள முக்கிய கவலையாக
வழமைக்குத் திரும்புவதற்கு
வேண்டிய முழுப்
பரிகாரமாக மறுவாழ்வு,
மீள்கட்டமைபபு
மற்றும் அபிவிருத்தி
என்பன அவசியமாகும்போது
ஆட்சியமைப்பு,
அரசியல் தீர்வு
என்பனவற்றுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து நிகழ்ச்சி
நிரலில் தொடர்ந்தும்
மேலாண்மை செலுத்தப்
பட்டு வருகிறதே திருநாவுக்கரசு
சிறீதரன் : நான்
தொடர்ந்து கூறி
வருவது ஆகக் குறைந்த
நம்பகத் தன்மையுள்ள
ஒரு அதிகாரப் பகிர்வு
அவசியமானது என்று.
இதன் கருத்து
குறைந்தது அரசியலமைப்பின்
13வது திருத்தத்தையாவது
நடைமுறைப் படுத்த
வேண்டும் என்பதுதான்.
(13வது திருத்தம்
பிரதிநிதிப் படுத்துவது
ஸ்ரீலங்காவின்
மாகாணசபைகளுக்கு
மட:டுப் படுத்தப்பட்ட
சுயாட்சியையும்,
அதிகாரப் பரவலாக்கத்தையும்)
தமிழ்
மற்றும் முஸ்லிம்
மக்களும் தாங்களும்
ஸ்ரீலங்காவின்
ஆட்சி முறையின்
ஒருபகுதி என்பதைச்
சில அரசியல் ஏற்பாடுகள்
மூலமாக உணரவேண்டும். நாங்கள்
நினைக்கிறோம்
ஜனாதிபதி கூட
13 வது திருத்தத்தில்
விசேடமாக நிருவாக
அதிகாரம்,நிதி,
காவல்துறை மற்றும்
பாதுகாப்பு படைகள்
போன்ற பகுதிகளில்
மாற்றம் வெய்வதற்காக
ஒரு குழுவை நியமித்ததாக.
நான் நினைக்கிறேன்
அதில் இரண்டு வகையான
காவல்துறையினர்
இருப்பதாக. ஒன்று
மத்திய காவல்துறை
மற்றது மாகாணசபையினரால்
வழிநடத்தப் படும்
மாகாணக் காவல்துறை. மாகாண
சபைகள் உள்ளுர்
நிருவாகம், வரியறவீடு,
பொதுப் போக்குவரத்து
மற்றும் பொதுச்
சுகாதாரம் என்பனவற்றை
நடத்த வேண்டும். இவைகளையாவது
நடைமுறைப் படுத்தினால்
மக்கள் தாங்களும்
ஸ்ரீலங்கா ஆட்சியமைப்பில்
பங்கு உள்ளவர்களாக
நினைப்பார்கள். நான் மேலும்
சில நல்ல விடயங்களைக்
கேள்விப்பட்டேன்,
தமிழையும் அரச
கரும மொழியாக நடைமுறைப்
படுத்தப் போவதாக.
மிகவும் நல்ல
முன்னேற்றங்கள்.
1987ல் ஸ்ரீலங்காவில்
தமிழ் ஒரு அரச
கரும மொழியாக அறிமுகப்
படுத்தப்பட்டது.
ஆனால் அப்போதிலிருந்து
அது மிகவும் தாமதமாகவே
நடைமுறைப் படுத்தப்
படுகிறது. ஆகக் குறைந்தது
ஸ்ரீலங்கா ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸவுக்கு
கூடத் தமிழ் பேசத்
தெரியும். இப்போது ஸ்ரீலங்காவின்
தென்பகுதியில்
சிங்கள இளைஞர்களுக்கும்
தமிழில் நல்ல அறிவு
இருக்கிறது. முன்பு அப்படியில்லை. மேலும்
தமிழ் மக்களுக்கு
வேண்டியது அபிவிருத்தி,
மற்றும் வேலைவாய்ப்பும்
தங்கள் பிள்ளைகளின்
கல்வியினை நிலைநிறுத்துவதுதான்;. வடக்கு மற்றும்
கிழக்கிலுள்ள
தொழிற்சாலைகள்,
காங்கேசன் சீமெந்துத்
தொழிற்சாலை வாழைச்சேனை
கடதாசி ஆலை, மற்றும்
பரந்தன் இரசாயனத்
தொழிற்சாலை ஆகியவை
செயற்படாமல் போய்
தசாப்தங்களாகி
விட்டன. வைகளை
மறுபடி மீளாரம்பிக்க
வேண்டும். முன்பு அங்கு
ஒன்றிரண்டு கண்ணாடித்
தொழிற்சாலைகள்
இருந்தன. ஆனால்
இப்போது எதுவுமில்லை
போரினால் எல்லாம்
அழிந்து நாசமாகி
விட்டன” “இப்போது
உள்ளக இடம் பெயர்ந்தோர்
படிப்படியாக தங்கள்
பகுதிகளில் மீள்
குடியமர்த்தப்
பட்டு வருகிறார்கள். ஒரு சிறு பகுதியினரே
முகாம்களில் மீதமாய்
இருக்கிறார்கள்.
மூன்று தொடக்கம்
ஆறு மாதங்களுக்கிடையில்
எல்லோருமே அநேகமாக
அவர்கள் பகுதிகளில்
மீளக் குடியமர்த்தப்
பட்டு விடுவார்கள்.
300,000 பேர்களில் இப்போது
30,000 பேர்களே இப்போது
உள்ளக இடம் பெயர்ந்தோர்
முகாம்களில் எஞ்சியிருக்கிறார்கள்
அவர்களுக்கும்
சுதந்திரமாக இயங்கும்
உரிமையும் முகாம்களில்
தங்குவதை சுயமாக
தேர்வு செய்யும்
உரிமையும் உள்ளது.
மீள்
குடியமர்த்தப்
பட்டவர்களுக்கு
அவர்கள் வயல்களில்
விதைப்பதற்கு
விதை நெல்லும்
அவர்கள் வாழ்க்கையை
மீளத்தொடங்குவதற்கு
உதவியாக 20,000 ரூபாவும்
வழங்கப் பட்டுள்ளது. உலக வங்கி மேலதிகமாக
20,000 ரூபா வழங்கப்
போவதாக நான் கேள்விப்
பட்டேன். ஒரு
லட்சத்திற்கும்
மேலான ஸ்ரீலங்காத்
தமிழர்கள் தென்
இந்தியாவின் தமிழ்நாட்டில்
அகதிகளாகத் தங்கியுள்ளார்கள்
இப்போது போர் முடிந்து
விட்டதால் அவர்களும்
நாட்டிற்குத்
திரும்ப வேண்டும்.
நிச்சயமாக
அவர்களில் பெரும்பான்மையோர்
எங்கள் நாட்டிற்குத்
திரும்பி வர விரும்புவார்கள்.
அவர்களுக்கு
வீட்டு உட்கட்டமைப்பு
வசதிகளும் வேலைவாய்ப்பும்
தேவை. அவை கிடைத்தால்
அவர்கள் நிச்சயம்
திரும்ப வருவார்கள்.
மீள்குடியேற்றப்பட்ட
பின் மீள்கட்டுமானப்
பணி மிகவும் முக்கியம்
நிலமைகள் மெதுவாக
சீர்திருந்தி
வருகின்றன. உதாரணத்துக்கு
முல்லைத் தீவின்
நந்திக் கடலின்
கரையோரப் பகுதிகள்,
அங்கு புதிய வசதிகள்
அமைக்கப்பட்டு
மீனவரின் உபயோகத்துக்காக
தயாராக உள்ளது.
இந்த வேளையில்
வடக்கில் கண்ணிவெடி
அகற்றும் பணி மிக
மும்முரமாக நடைபெற்று
வருகிறது. புதிய வீதிகள்
அமைக்கப் பட்டு
வருகின்றன. ஆனால் மின்சாரம்
எப்போதும் கிடைப்பதில்லை. கிணறுகளில்
உள்ள தண்ணீரினாலும்
பிரச்சனை உண்டாகிறது. அவை சுத்திகரிக்கப்
படவேண்டிய தேவை
உள்ளது. கல்வி
வசதிகளும் முன்னேற்றப்
படவேண்டிய கட்டாயத்திலுள்ளது.
சுகாதாரத்
துறையும் கூட முன்னேற்றப்
படவேண்டும். சில சத்திர சிகிச்சை
நிலையங்கள் கிளிநொச்சியிலும்
மற்றைய பகுதிகளிலும்
திறந்து வைக்கப்
பட்டுள்ளன.” “எப்படியாயினும்
வடக்கு மற்றும்
கிழக்கு பகுதியிலுள்ள
பெரிய அளவிலான
துருப்புகளின்
எண்ணிக்கை அச்சமூட்டுவதாய்
உள்ளது. அவை குறைக்கப்
படவேண்டும். அவசரகால
சட்டங்களில் தசாப்தங்களுக்குப்
பிறகு சில நெருக்கடியான
விதிகள் தளர்த்தப்
பட்டுள்ளன. ஏ-9 பாதையில் ஓமந்தை
சோதனைச் சாவடி
மட்டுமே உள்ளது.
அதுவும் தீவிர
சோதனையை மேற்கொள்ளாது
கண்ணியமாக தொழில்
நெறிமுறையுடன்
நடத்தப் படுகிறது.
பொது மக்கள்
இப்போது வன்னிப்
பகுதியெங்கும்
பயணம் செய்ய முடியும்.
விதிவிலக்காக
சில இடங்களில்
கட்டுப்பாடுகள்
உண்டு அவ்விடங்களில்
இராணுவ அனுமதி
பெறப்படவேண்டும்.
இராணுவத்தினருக்கும்
பொதுமக்களுக்கும்
இடையில் நிச்சயமாகப்
பிரச்சினைகள்
இல்லை. இராணுவத்தினர்
மிகவும் பணிவாக
நடந்து கொள்வதுடன்
வீடுகள் கட்டுவதற்கும்
உதவிகள் செய்கிறார்கள்.
நாங்கள்
நினைக்கிறோம்
எதிர்காலத்தில்
ஸ்ரீலங்கா இராணுவம்
சிங்களம் தமிழ்
முஸ்லிம் எனப்
பல்லினத்தைக்
கொண்ட இராணுவமாக
ஒழுங்கமைக்கப்
படும் என்று. அந்த வழியில்தான்
நாங்கள் ஒரு ஐக்கிய
ஸ்ரீலங்காவை உருவாக்க
முடியும். காவல் துறை ஏற்கனவே
தமிழர்களை சேவையில்
ஆட்சேர்க்கத்
தொடங்கி விட்டது.
சுமார் 600 பேர்
வரையில் யாழ்ப்பாணத்திலிருந்து
சேர்த்துக் கொள்ளப்பட்டதாக
அறிகிறேன். இது நல்ல ஒரு
முயற்சி. தமிழ்
பேசக்கூடிய சிங்களவர்கள்
காவல் சேவையில்
இருந்தாற்கூடப்
பரவாயில்லை எப்படியாயினும்
வடக்கிலும் கிழக்கிலும்
சமநிலைப்படி காவல்
துறையிலுள்ள தமிழர்களின்
விகிதம் 50 – 60 ஆகவும்
மிகுதியான 40 – 50 விகிதமும்
சிங்களவர்கள்
மற்றும் முஸ்லிம்களாகவும்
இருக்க வேண்டும்.
எல்.ரீ.ரி.ஈ. மற்றும்
தமிழ் புலம் பெயர்ந்தவர்கள்
தமிழர்களும் சிங்களவர்களும்
சேர்ந்த வாழ முடியாது
எனக் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையின்படி
ஏராளமான தமிழர்கள்
வெள்ளவத்தை, மொறட்டுவ
தொடங்கி நீர்கொழும்பு
வரையான பாரிய
கொழும்புப் பகுதியில்
மட்டும் சிங்களவர்களுடன்
கலந்து வாழ்கிறார்கள்.
மேலும் நான்
நினைக்கிறேன்
இவர்களில் 250,000 –
300,000 மக்கள் வடக்கு
மற்றும் கிழக்குப்
பகுதியைச் சேர்ந்தவர்கள்
என்று. கண்டியில்
கூட ஏராளமான தமிழர்கள்
வாழ்கிறார்கள். இப்போது ஏராளமான
சிங்களவர்கள்
வடபகுதிக்கு விஜயம்
செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த 15 – 20 வருடங்களாக
யாழ்ப்பாணம் ஒரு
அமைதியான நகரமாக
இருந்து வந்துள்ளது,
ஆனால் இப்போது
மக்கள் வருகையினால்
திடீரென எல்லாமே
வளர்ச்சி பெறத்
தொடங்கி விட்டது.
நல்லெண்ண முயற்சிகளுக்கும்
இது நல்லது. மக்களின் வருகையினால்
பயப்பிராந்தி
குறையத் தொடங்கும்.நான்
நினைக்கிறேன்
தமிழ் மக்கள் இதனால்
அச்சம் அடைய மாட்டார்கள்.
இதை ஒரு இறுக்கமான
சூழலாக நான் கருதவில்லை,இது ஒரு நல்ல
சூழ்நிலை. ஈ.பி.ஆர்.எல்.எப்
இன் வரலாறு பற்றிய
சுருக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப்
தமிழ் மாணவச் செயற்பாட்டாளர்களால்
1980களில் ஒரு பிரிவினைவாத
போராளிக் குழுவாக
உருவாக்கப் பட்டது. 1980 முதலாக அது
தமிழ் கிளர்ச்சிக்
குழுவாக வளர்ந்து
ஆளுமை பெற்றது.
1986ல் தமிழ் போராளிகளுக்கிடையே
தலமைத்துவமாக
மேலோங்க நினைத்த
எல்.ரீ.ரி.ஈ.ஆனது
ஈ.பி.ஆர்.எல்.எப்
உடன் யுத்தத்தை
பிரகடனப் படுத்தியது.
1987ல் இந்திய
- இலங்கை ஒப்பங்தம்,
கைச்சாத்தாகி
அது இந்திய அமைதி
காக்கும் படையினரை
ஸ்ரீலங்காவில்
நிலை நிறுத்தியது.
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஜனநாயக அரசியல்
நீரோட்டத்தில்
ஒரு பதிவு செய்யப்பட்ட
அரசியற் கட்சியாக
இணைந்து 1988ல் மாகாணசபைத்
தேர்தல்களில்
போட்டியிட்டு
புதிதாக நிறுவப்
பட்ட வடக்கு கிழக்கு
மாகாணசபைக்கு
அதன் தலைவரான வரதராஜப்பெருமாள்
முதலாவது முதலமைச்சராக
நியமனம் பெறுவதை
அது கண்டது. எப்படியாயினும்
இந்திய அமைதி காக்கும்
படையினரின் வெளியேற்றத்தோடு
அதனுடன் கசப்பான
மோதலில் ஈடுபட்டிருந்த
எல்.ரீ.ரி.ஈ. தனது
ஆளுமையை மீள்வலியுறுத்திக்
கொண்டு மற்றைய
எதிர்கட்சிகளையும்
போராளிக் குழுக்களையும்
தடை செய்தது. இதன்
காரணமாக எல்.ரீ.ரி.ஈ.
க்கு எதிரான அனேக
தமிழ் எதிர்ப்பாளர்கள்
இந்தியாவுக்குத்
தப்பி ஓடுவதையோ
அல்லது ஸ்ரீலங்கா
அரசாங்கத்திடம்
பாதுகாப்பு கோருவதையோ
செய்ய நேர்ந்தது. 1990
ல் 13 சிரேட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்
தலைவர்களை அதன்
செயலாளர் நாயகம்
கே.பத்மநாபா உட்பட
சென்னையில் வைத்து
எல்.ரீ.ரி.ஈ. மிகக்
கோரமாகக் கொலை
செய்தது. அது மட்டுமல்லாமல்
1997 வரை ஈ.பி.ஆர்.எல்.எப்
இனால் தனது அலுவலகத்தை
யாழ்ப்பாண நகரத்தில்
திறக்க முடியாமலிருந்தது.
ஸ்ரீலங்கா இராணுவம் எல்.ரீ.ரி.ஈ.
யிடமிருந்து யாழ்ப்பாண
குடாநாட்டை திரும்பக்
கைப்பற்றிய பிறகே
திறக்க முடிந்தது.
1999ல் ஈ.பி.ஆர்.எல்.எப்
திரும்பவும் இரண்டாகப்
பிளவுபட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப்
சுரேஸ் பிரிவு
எல்.ரீ.ரி.ஈ.க்கு
ஆதரவு தெரிவிக்க
முடிவு செய்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப்
வரதர் பிரிவு இரண்டு
தசாப்தங்களாக
இந்தியாவில் வாழ்ந்து
வந்த வரதராஜப்பெருமாள்
தலமையில் தொடர்ந்து
இயங்கி வந்தது.
எப்படியாயினும்
இது இறுதியில்
புதிய மாற்றம்
பெற்று பொதுச்
செயலாளராகவும்
பிரிவின் தலைவராகவும்
பதவி வகிக்கும்
திருநாவுக்கரசு
சிறீதரன் தலமையின்
கீழ் வந்ததும்
மறைந்த அதன் தலைவர்
கே.பத்மநாபாவுக்கு
நினைவஞ்சலி செலுத்தும்
விதத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்
- நாபா என மாற்றப்பட்டது. தமிழில்
எஸ். குமார் (நன்றி:
தமிழ் மொழிப்பிரதி பெறுநர்
இணையம்: தேனி) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |