|
||||
|
தமிழக மீனவர்களைக்
கைது செய்தது
சிறிலங்கா
அரசுதான்!
தமிழகத்து மீனவர்களை
கடத்திச்
சென்று யாழ்ப்பாணச்
சிறையில்
அடைத்தது
யாழ்ப்பாணத்
தமிழர்கள்
செய்த செயலல்ல. சிங்கள அரசின் உளவுத்துறையின்
ஏற்பாட்டில்
டக்கிளஸ்
தேவானந்த
என்ற அமைச்சர்தான்
இதனைச் செய்வித்தவர்.
கடந்த நாடாளுமன்றத்
தேர்தலுக்கு
சில தினங்களுக்கு
முன்னர் யாழ்ப்பாணக்
குடாநாட்டு
மீனவர்கள்
சிலருக்கு
மீன்பிடிப்
படகுகளை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த வழங்கினார்.
அறுபது படகுகள்
வரை முற்பணம்
செலுத்தாமல்
சிங்கள அரசின் சார்பாக தவணை முறையில்
வழங்கப்பட்டது.
அந்தப் படகுகளைக்
கொண்டு அவர்கள் மீன்பிடித்து
வந்தனர். அண்மைக் காலங்களில்
சிறிலங்கா
கடற்படையினர்
தமிழக மீனவர்களைத்
தாக்கியும்
படுகொலை செய்தும் வருகின்றனர். சிறிலங்கா அரசின்
மீது தமிழகமும்,
இந்தியாவும்
கோபம் கொண்டுள்ளன.
கடற்படையின்
செயற்பாட்டினால்
இந்தியா தங்களுக்கு
எதிராகத்
திரும்பிவிடுமோ
என்ற அச்சத்தின்
காரணமாக இச்செயல்களை
சிறிலங்கா
கடற்படையினர்
செய்யவில்லை,
யாழ்ப்பாணத்துத்
தமிழர்கள்தான்
செய்துவருகின்றனர்
என்பதை இந்தியாவுக்குத்
தெரியப்படுத்துவதற்காகவே
திட்டமிட்டுச்
செயற்படுத்தப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்டவை
டக்கிளஸ்
தேவானந்தா
வழங்கிய, முற்பணம் பெறாமல் வழங்கப்பட்ட
அந்தப் படகுகளைத்தான். சிறிலங்கா கடற்படையினர்
சிவில் உடையில் லுங்கி மற்றும் சாதாரண சட்டை அணிந்து
அந்த மீன்பிடிப்
படகுகளில்
ஒருவர் வீதம் ஏறினர். கடனாக
படகுகளைப்
பெற்றவர்களிடம்
எங்களது கடற்பகுதிகளில்
இறால் மீன் பிடிக்கும்
வலையைக் கொண்டு எல்லாவிதமான
சிறியவகை
மீன்களையும்
அள்ளிச் செல்கின்றனர்
தமிழக மீனவர்கள்
என்று கூறி அந்த
மீனவர்களைக்
கைது செய்து
வரவேண்டும்
என்று படகுகாரர்களிடம்
கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தரவின்
பேரில்தான்
இதனைச் செய்கிறோம்
என்று மீனவர்கள்
சிலரை இழுத்துச்
சென்றுள்ளனர்.
கடனாக வாங்கிய படகை எந்த
நேரத்திலுமு;
அரசாங்கம்
பறிக்கலாம்
என்ற பயத்தினால்
அமைச்சர்
டக்கிளஸ்
தேவானந்தாவிடமும்
தொலைபேசியில்
கேட்டுள்ளனர். சென்றுவாருங்கள்
பிரச்சினை
இல்லை என்று அமைச்சர்
கூறியதைத்
தொடர்ந்து
சிவில் உடையில் மீனவர்கள்
போன்று உடையணிந்திருந்த
கடற்படையினருடன்
படகுகளை ஓட்டிச் சென்றுள்ளனர்
மீனவர்கள்.
இச்செயல் முழுக்க
முழுக்க சிங்கள அரசின் சதிச்செயலே!
யாழ்ப்பாணத் தமிழர்கள்
தமிழக மீனவர்களைக்
கைது செய்து
போலீசில்
ஒப்படைத்தால்
அந்த மீனவர்களை
உடனேயே திருப்பி அனுப்பியிருக்க
வேண்டும்
இலங்கை அரசு.
அதுவும் அல்லாமல் யாழ்ப்பாணத்
தமிழர்களுக்கு
இப்படி ஓர் அதிகாரத்தை
சிங்கள அரசு எந்தக்
காலத்திலும்
வழங்கியது
கிடையாது. இலங்கைத் தமிழர்கள்
எந்தவித உரிமையும்
இல்லாமல்
அடிமைகளாகத்தான்
வாழ்கிறார்கள்
ஈழத்தில்.
அந்த அடிமைகளில்
சிலரைப் பயன்படுத்தித்தான்
இந்தக் கடத்தல் வேலையைச் செய்து தமிழகத்துக்கும்
ஈழத் தமிழர்களுக்கும்
பகையை உண்டுபண்ண
சிங்கள அரசு முயற்சி
மேற்கொண்டுள்ளது. சில அடிமைத் தமிழர்களைக்
கொண்டு இலங்கைப் பத்திரிகைகளுக்கும்
பேட்டி கொடுத்துள்ளது
சிங்கள அரசு.
இது விடயத்தில்
இந்தியா சரியான முடிவினை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களை
இந்தியாவிடமிருந்து
பிரித்துவிடும்
இச் சதிச்
செயலை இந்தியா அனுமதிக்கக்
கூடாது என்று கேட்டுக்
கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
விவேகானந்தன்
தேவராஜா
மத்தியக்குழு
உறுப்பினர்
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |