|
||||
|
எமக்கு வழங்க வேண்டிய
உரிமையைப்
பறிக்கும்
நாடு நகர
திருத்த சட்டமூலத்தை
முற்றாக எதிர்ப்போம்
- கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
துரைரெட்ணம்
(பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்) சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும்
ஒரேயொரு கிழக்கு மாகாண சபையில் எமக்கு வழங்க
வேண்டிய அதிகாரங்களை
பறிக்கப்
போகின்ற நாடு நகர
திட்டமிடல்
திருத்த சட்டமூலத்தை
நிராகரியுங்கள்
என கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
இரா.துரைரெத்தினம்
வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
நாடு நகர
திட்டமிடல்
திருத்தச்
சட்ட மூலம்
குறித்த ஒத்திவைக்கப்பட்ட
விவாதம் எதிர்வரும்
28 ஆம் திகதி
நடைபெறவுள்ளமை
குறித்து
அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே
இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள
அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
13 ஆவது திருத்தச்
சட்டமூடாக,
மாகாண சபைக்கு வழங்கப்பட்ட
வழங்க வேண்டிய அதிகாரங்களையும்
ஏனைய அதிகாரங்களையும்
மத்திய அரசின் புத்தசாசன
அமைச்சின்
கீழ் கொண்டு
வருவதற்கும்
கையகப்படுத்துவதற்குமாக
31012012 அன்று செவ்வாய்க்கிழமை
நாடு நகரத்
திட்டமிடற்
கட்டளைச்
சட்டத்தைத்
திருத்துவதற்கான
தொரு சட்ட
மூலத்தை புத்தசாசன
மற்றும் மத அலுவல்கள்
அமைச்சு கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக கிழக்கு
மாகாண சபையின் அங்கீகாரத்தை
பெறுவதற்கு
சமர்ப்பித்துள்ளது.
இதனைக்
கட்சித் தலைவர்களின்
கூட்டத்தில்
சபைமுதல்வர்
முன்வைத்த
போது இது
தொடர்பாக
தெளிவின்மையாலும்,
நேரம் போதாததாலும்
ஒத்திவைக்குமாறு
கோரப்பட்டது.
இம் முடிவை
சபைமுதல்வர் ஆளுநருக்கு அறிவிக்க மீண்டும் சபையில் சமர்பிக்குமாறு
சபை முதல்வரை
ஆளுநர் பணித்ததின்
பேரில் 1322012 இல் சபைக்கு
சமர்ப்பிக்கவுள்ளதாக
அறிவித்தார்.
இது
தொடர்பாக
கிழக்கு மாகாண சபையின்
நியதிகள்
சட்டக் குழு மட்டக்களப்பிலும்
திருகோணமலையிலும்
பல தடவைகள்
சபை முதல்வர்
தலைமையில்
கலந்துரையாடல்கள்
நடத்தியது. இவ் வேளையில்
இச்சட்டமூலத்தை
திருத்தத்துடன்
ஆதரிப்பதாக
ஆளும் தரப்பினரும்
இச் சட்டமூலத்தை
நிராகரிப்பதோடு
எதிர்ப்பதாக
எதிர்கட்சியினரும்
தெரிவித்தனர்.
மீண்டும்
கடந்த 13 ஆம் திகதி
கிழக்கு மாகாண சபையில்
இது தொடர்பான
விசேட அமர்வு நடந்தது. முதலமைச்சாரல்
திருத்துவதற்கான
பிரேரணை முன்வைக்கப்பட்டு
அமைச்சர்
உதுமாலெவ்வையினால் வழிமொழியப்பட்டு
சபை ஒத்திவைக்கப்பட்டு
மீண்டும்
சபைமுதல்வர்
தலைமையில்
கலந்துரையாடல்
நடத்தப்பட்டு
இதிலும் இரண்டு விதமான கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டு
எதிர்க் கட்சியினராகிய
நாங்கள் இதை நிராகரிப்பதாகவும்
எதிர்ப்பாதாகவும்
கூறி கலந்துரையாடலை
தவிர்த்துக்
கொண்டோம்.
மீண்டும்
13 ஆம் திகதி
சபை கூடியது
அமைச்சர்
உதுமாலெவ்வை
திருத்தப்
பிரேரணை தொடர்பாக விவாதத்தை
ஆதரித்துப்
பேசினார். இச் சந்தர்ப்பத்தில்
எதிர்க்கட்சியினராகிய
ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லீம்
காங்கிரஸ் , ஈ.பி.ஆர்.எல்.எவ்.
, ஜே.வி.பி.
உறுப்பினர்களாகிய
நாங்கள் திருத்தப் பிரேரணை
சட்டத்திற்கு
முரணாக முன்வைக்கப்படுவதாலும்
சரியான முறையாக இச் சபைக்
கூட்டம் கூட்டப்படவில்லை
எனவும் இதற்கான விளக்கத்தை
சபை முதல்வர்
தரவேண்டும்
எனவும் கேள்வி எழுப்பினோம்.
பதிலளிக்க
தவறியதால்
எழுந்து நின்று எங்களது ஆட்சேபனையை
தெரிவித்தோம். இவ் வேளையில்
ஆளும் தரப்பினர்
அனைவரும்
எழுந்து நின்று சட்டத் திருத்தத்தை
ஆதரித்து
பேசிக் கொண்டிருந்தனர்.
எதிர்க் கட்சியினரோ
தொடர்ந்தும்
தவறான முறையில் இச் சபையை
சபை முதல்வர்
கூட்டமுடியாதெனத்
தெரிவித்தோம்.
இதன்
காரணமாக சபையில் ஆக்ரோசமான
வாக்குவாதம்
நடைபெற்றது. இரு பகுதியினரும்
மாறிமாறி
கருத்துக்களை
தெரிவித்துக்
கொண்டே இருந்தனர்.
எமது நியாயங்களை
நாம் உறுதியாக
முன்வைத்தோம்.
சபையை நடத்த உறுப்பினர்கள்
ஒத்துழைக்காததால்
சபை ஒத்திவைக்கப்பட்டு
மீண்டும்
சபை முதல்வர் சபையை கூட்டி
சபைக் கூட்டத்தை
எதிர்வரும்
28 ஆம் திகதி
வரை ஒத்திவைத்தார்.
கிழக்கு மாகாண சபைக்கு
வழங்கப்பட்ட,
வழங்கப்பட
வேண்டிய அதிகாரங்களை
புத்தசாசன
அமைச்சு கபளீகரம் செய்வதற்கு
கிழக்கு மாகாண சபை
சிறுபான்மை
கட்சிகள்
துணைபோக மாட்டார்கள்
என நம்பினோம்.
இது வேறு வடிவத்தில்
மீண்டும்
விஸ்வரூபம்
எடுத்துள்ளது.
எமக்குரிய
அதிகாரங்களை
நாமேதிருத்தி
மத்திய அரசுக்கு தாரை வார்க்கும்
வேலையை ஏற்றுக் கொள்ள
முடியாது.
மத்திய அரசை திருப்த்திப்படுத்துவதற்கு
ஆளும் தரப்பிலுள்ள
சிறுபான்மை
கட்சிகளுக்கு
இது தருணமல்ல.
அதிகாரப் பரவலாக்கல்
தொடர்பாக
வெளிநாடுகள்
ஆர்வத்துடன்
இருக்கும்
போதும் பேச்சுவார்த்தை
நடைபெறுகையிலும் ஐக்கிய நாடுகள்
சபை இலங்கை
இனப் பிரச்சினை
தொடர்பாக
விளிப்படைந்த
நிலையில்
நாம் அனைவரும்
ஒன்று சேர்ந்து உரிமையை பெறுவதா அல்லது கபளீகரத்துக்கு
துணைபோவதா?
திருத்தம்
ஊடாக புத்தசாசன
அமைச்சுக்கு
எமது அதிகாரத்தை
வழங்க உங்களுக்கு
எந்த மக்களும்
வாக்களிக்கவில்லை.
இதை மறுக்க
முடியாவிட்டால்
இதிலிருந்து
ஒதுங்குங்கள்!
இழப்பில்
உருவாக்கப்பட்ட
மாகாண சபை அதிகாரங்களை
ஒரு சிலர்
சுயநலத்துக்காக
அழிக்க முடியாது. இந் நாட்டில்
உள்ள சிறுபான்மை
இனத்தைப்
பிரதிநிதித்துவம்
செய்யும்
ஒரேயொரு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை
என்பதை மறந்துவிடக்
கூடாது. இச் சபையில்
தான் எமது
ஆளுகைகள்
இருக்க வேண்டும்.
எனவே எதிர்வரும்
28 ஆம் திகதி
மீண்டும்
சபையில் முன்வைக்கப்படவிருக்கும்
இச் சட்ட
மூலத்தை உறுதியாக நிராகரிக்குமாறும்
கேட்டுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |