|
||||
|
தமிழ் மக்களின்
அரசியல் தலைவர்களுக்கு
ஒரு பகிரங்க
வேண்டுகோள்!
இன்று தமிழ்
மக்களைத்
தலைமை தாங்கும் நீங்கள் ஒவ்வொருவரும்
ஏதோ ஒரு
வகையில் தமிழ் மக்களின்
உரிமையை வென்றெடுக்க
வேண்டுமென்ற
நிலைப்பாட்டில்
பல்வேறுபட்ட
போராட்டங்களில்
உங்களை இணைத்துக்கொண்டு
பல அர்ப்பணிப்புக்களைச்
செய்துள்ளனர்.
மே, 19 2009
வரையும் நீங்கள் ஒவ்வொருவரும்
பல்வேறு காரணங்களினால்
மாறுபட்ட
கருத்துக்களுடன்
மாறுபட்ட
நிலைப்பாட்டை
எடுத்திருந்தனர். உங்களில் பலருக்கு
உங்களுடைய
நிலைப்பாட்டை
நியாயப்படுத்தக்கூடிய
காரணங்கள்
இருந்துள்ளன.
ஆனால் மே 19, 2009க்குப்
பின் இலங்கையில்
ஏற்பட்டுள்ள
அரசியல் சூழல் உங்கள்
ஒவ்வொருவருடைய
ஒற்றுமையை
மிகவும் வலியுறுத்தி
நிற்கின்றது.
நீங்கள் ஒவ்வொருவரும்
எமது இனத்தின்
உரிமை அல்லது விடுதலை என்கின்ற நிலைப்பாட்டில்
எவ்வளவு இதய சுத்தியோடு
ஈடுபட்டீர்கள்
என்பதனை இந்த ஒற்றுமையில்
நீங்கள் காட்டும் ஆர்வம் வெளிப்படுத்தும்.
கடந்த 30 ஆண்டுகால
யுத்தத்தில்,
குறிப்பா
மே 19, 2009 வரையான
இறுதி யுத்தத்தில்
இறுதிக்கட்ட
யுத்தத்தில்
அனுபவித்த
துயரங்கள்,
இன்றும் தடுப்பு முகாம்களுக்கு
உள்ளேயும்,
வெளியேயும்
இன்றுவரை
அனுபவித்துவரும்
சொல்லொணாத்
துன்பங்கள்
யாவரும் அறிந்ததே. அவர்களின் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்
தலைவர்கள்
ஒவ்வொருவருக்கும்
உண்டு.
இலங்கையில் உரிமைக்காக
உரத்துக்
குரல் கொடுத்த எம்மக்கள்
உரிமை இழந்து, உடமை இழந்து,
உறவுகளை இழந்து, உணர்வின்றி
காலத்திற்குக்
காலம் பேரினவாத அரசுகளினால்
வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு
உள்ளனர். இந்நிலையில்
காலத்துக்குக்
காலம் தமிழ் தலைமைகள்
ஏதோ ஒரு
காரணத்திற்காக
சிந்திக்கின்ற
நிலை உருவாகும்
போதெல்லாம்
ஒவ்வொரு தேர்தல்களை
அறிவித்து
அந்த ஒற்றுமைக்கு
குந்தகம்
விளைவிக்கும்
நடவடிக்கையை
இலங்கை அரசு கச்சிதமாக
மேற்கொண்டு
வருகிறது.
அதே நிலையைத்தான்
இன்றும் அரசு தோற்றுவித்துள்ளது. கடந்த
பல மாதங்களாக
தமிழ் அரசியல் தலைவர்கள்
ஒன்றிணைந்து
ஒரு சில
விடயங்களிலாவது
கொள்கையளவில்
ஒற்றுமைப்பட்டு
செயற்படக்கூடிய
நிலைப்பாட்டை
எடுத்தபோது,
தற்பொழுது
உள்ளுராட்சி
சபைகளுக்கான
தேர்தல்கள்
அறிவிக்கப்பட்டுள்ளமை
இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறு
இருக்க வடக்குக் கிழக்குப்
பிரதேசங்களில்
நில ஆக்கிரமிப்புக்கள்,
சிங்கள மொழித் திணிப்புகள்,
கொலைகள், ஆட்கடத்தல்கள்
என பல்வேறுபட்ட
சட்டவிரோத
நடவடிக்கைகள்
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது.
இவ்விடயங்களில் இருந்து
தமிழ்த் தலைவர்களின்
கவனங்களை
திசை திருப்பும்
ஒரு யுக்தியாகவும்
இத்தேர்தல்
அமைகின்றது.
எது எவ்வாறாயினும்
எமது மக்கள்
உரிமையுடனும்,
சமத்துவத்துடனும்
வாழக்கூடிய
ஒரு சூழ்நிலையை
உருவாக்குவதற்கு
நாம் அனைவரும்
தேர்தல் அரசியல் என்பதற்கு
அப்பால், உரிமைப் பிரச்சினைக்கு
முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும். வடக்குக் கிழக்குப்
பிரதேச நிருவாகங்களை
பெரும்பான்மைக்
கட்சிகள்
நிருவகிக்கும்
நிலையைத்
தோற்றுவிக்காமல்
தனிப்பட்ட
கோபாதாபங்களை
விடுத்து,
துன்பப்பட்டு
இருக்கும்
எமது மக்களின்
நலனுக்காக
சுயநல அரசியலை விடுத்து, விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையுடன்
ஓரணியில்
நின்று செயற்படும்
வண்ணம் மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்
கொள்ளுகின்றோம்.
இதுவே இன்றுள்ள
சூழ்நிலையில்
எமது மக்களுக்கு
விடிவைத்
தரக்கூடிய
வாய்ப்பினை
ஏற்படுத்தும்.
இதனை நாம்
உணர மறுத்து
சுயநல அரசியலுக்காகப்
பிரிந்து
நிற்போமேயானால்
எதிர்காலத்தில்
தமிழ் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு
எமது பூர்வீகப்
பிரதேசங்கள்
ஆக்கிரமிக்கப்படுவதை
எவராலும்
தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
ஆகவே தமிழ் அரசியல்
தலைமைகள்
ஒன்றுமைப்படுவது
காலத்தின்
கட்டாயமாகும்.
இவ்வண்ணம்
ஓற்றுமைக்கும் சமாதானத்துக்கும்
பிரித்தானியத்
தமிழர் அமைப்பு.
British
Tamil Forum for Unity and Peace - BTFUP
ஜனவரி 12, 2011
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |