|
||||
|
வைகோ போடும்
கரணம்!
ஈழத் தமிழரது
பிரச்சினையில்
நேரடியாகத்
தலையிடும்
படி ஈழத்
தமிழர்களாகிய
நாங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் துரோகம், வைகோ அவர்கள்
மத்திய அரசைச் சந்தித்தால்
அது தியாகம்.
ஈழத் தமிழர்களை
படுகொலை செய்தது சோனியாவும்,
மத்திய அரசும்தான்
என்று வாயில் நுரை தள்ள
மேடையில்
பேசிய வைகோ அவர்கள்
அதே வாயில்
பற்கள் அனைத்தும்
தெரிய இந்திய அரசின் தலைவர் உயர்திரு. மன்மோகன்சிங் அவர்களைச்
சந்தித்து
வாழ்த்துச்
சொல்லி வந்துள்ளார்.
தற்போது ஈழத்தைச்
சுற்றிப்பார்த்து
விட்டு வந்திருக்கும்
தமிழ் உணர்வாளரான
பெண் வழக்கறிஞர்
ஒருவர், ஈழத் தமிழர்கள்
தமிழகத்துத்
தமிழர்களின்
உதவியைத்தான்
எதிர்பார்க்கிறார்கள்,
இந்தியாவின்
உதவியை எதிர்பார்க்கவில்லையென்று
சொன்னார்கள்.
அவருக்கும் விளங்கவில்லை,
தமிழகம் என்ன ஐரோப்பாவிலா
இருக்கிறது?
அதுவும் இந்தியாவில்தான்
இருக்கிறது.
தமிழகமும்
இந்தியாவின்
ஒரு பகுதிதான்!. இந்தப் பெண்ணை
விடுவிக்க
உதவிய பாரதப் பிரதம மந்திரி
அவர்களுக்குத்தான்
திரு. வைகோ அவர்கள்
நன்றி சொல்லிவிட்டு
மகிழ்ச்சியுடன்
விமானத்தில்
சென்னை திரும்பியுள்ளார்.
தனது மக்களுக்கு
விசுவாசமும்,
நேர்மையும்
இல்லாத வைகோ அவர்கள்
ஈழத் தமிழரின்
பிரச்சினையில்
மட்டும் வீரம் நிறைந்த
மறவர் போன்று நடிப்பதை எங்கள் வெளிநாட்டுத்
தமிழர்கள்
இன்றும் நம்பி ஏமாந்து
நிதி வழங்கி
வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டுத்
தமிழர்கள்
இப்படியான
நபர்களை எப்போதோ ஓரம்கட்டிவிட்டனர்.
ஒரு எம்.எல்.ஏ.
ஆசனம் குறைவாகத்
தந்துவிட்டார்
என்று தி,மு.க.
அணியிலிருந்து
மாற்றுக்
கட்சிக்கு
ஓடிச் சென்ற வைகோ
அவர்கள் சுயநலவாதியா?
பொதுநலவாதியா? இப்படிச் சுய லாபத்துக்காக
அலையும் நபரைப் புலிகள் இயக்கம் தங்களது பேச்சாளராக
நினைத்து
ஏமாந்துள்ளனரா
இல்லையா? கடந்த தேர்தலில்
காங்கிரஸ்
கட்சியையும்
தி.மு.க. கட்சிகளையும்
தோற்கடிக்க
வேண்டும்
என்பதற்காக
இவர்கள் போட்ட வேடம்தான்
இந்தியா மீது போட்ட
பழி. இப்போது கொள்கை
வீரனான வைகோ அவர்கள்
ஏதோ அரசியல்
லாபம் தேடித்தான்
பிரதம மந்திரியின்
வாயிலைத்
தட்டியுள்ளார்.
கட்சி மாறினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவரது அரசியல்
பற்றி நாங்கள் விமர்சிக்க
வேண்டியதில்லை,
ஆனால் இவர் ஈழத்
தமிழர்களாகிய
எங்களுக்கு
அவரது அரைகுறை அறிவை வைத்து
பட்டங்கள்
சூட்டப் புறப்பட்டதைத்
தான் எங்களால்
பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. எந்தக் காங்கிரஸ்
தமிழர்களை
அழித்ததோ
அந்தக் காங்கிரசிடம்
நீங்கள் அறிக்கை சமர்ப்பிக்கச்
செல்கிறீர்கள்
என்று கேட்டவர்கள்
இவர்கள். இன்று
எங்களையும்
முந்திக்கொண்டு
விமானத்தில்
சென்று நன்றி தெரிவிக்கிறார்
இந்தச் சந்தர்ப்பவாதி!
ஈழத் தமிழர்களைக்
கேட்டுக்கொள்கிறோம்,
இந்தப் போலிகளை நம்பவேண்டாம். எங்கள் இனத்துக்குத்
தரகர்கள்
தேவையில்லை,
உண்மையாக
ஈழத் தமிழர்களுக்கு
உழைக்கும்
தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் வாக்கு
வேட்டை நடத்தும் வேட்டைக்காரர்கள்.
இவர்கள் என்றும்
சந்தர்ப்பவாதிகளாகத்தான்
இருப்பார்கள்.
எது எப்படி
இருப்பினும்
இறுதியில்
இந்திய மத்திய அரசுத்தான்
தீர்வுகாண
வேண்டும்
என்று கதவைத் தட்டிய வைகோ அவர்களை
அடையாளம்
காட்டிய இந்த நிகழ்வை
ஈழத் தமிழர்கள்
பாராட்ட வேண்டும்.
அரசியல்துறை
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
23-01-2011 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |