|
||||
|
எதிர்வுகூறல்களை
அப்பா நம்பியிருக்கவில்லை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எனது தந்தை எடுப்பார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட புதல்வி சத்துரிக்கா சிறிசேன கேள்வி: உங்களது குடும்பத்தைப் பற்றி கூறுங்கள்? பதில்: எனது வாழ்வில் நான் சந்தித்த மிகச் சிறந்த ஆசிரியை எனது தாயார். சிறந்த மனைவியாக, நல்ல தாயாக அவர் காட்டும் முன்மாதிரிகள் பல. தந்தைக்கு உணவு தயார் செய்ய நாம் சமையல் அறைக்கு செல்வதை அவர் விரும் புவதில்லை. தந்தையுடைய சாப்பாட்டுத் தட்டைக்கூட எமக்கு தொடுவதற்கு விடுவதில்லை. எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தாயார் சமைக்கும் உணவைத்தான் தந்தை சாப்பிடுவார். எனது தாய், தந்தையர் இருவரும் சாதாரணமான, அழகான தம்பதியாவர். அவர்களின் காதல் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. கேள்வி: அவர்களின் காதல் கதையை உங்களிடம் கூறியிருக்கிறார்களா? பதில்: அந்த சந்தர்ப்பத்தில் எனது தந்தை கூட்டுறவு விநியோக அதிகாரியாக பணியாற்றினார். தாயார் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். கண்ட முதல் நாளே தாயார் குறித்து பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நேரடியாகவே அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். பல வருடங்கள் காதலித்து இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களின் காதல் கதையின் பலனாகவே நானும் தங்கை தரணிஷாரிக்கா மற்றும் தம்பி தஹம் தாரக்க பிறந்தோம். கேள்வி: தந்தையின் நாளாந்த பணிகள் எவ்வாறு அமையும்? பதில்: படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தந்தை மத வழிபாடுகளில் ஈடுபடுவார். நாம் சிறுவயதினராக இருந்தது முதல் இந்தப் பழக்கத்தை காணுகின்றோம். தாயார் தயாரித்து தரும் தேநீரை அருந்திவிட்டு பத்திரிகை வாசிப்பதில் அவர் மூழ்கிவிடுவார். அதேபோன்று தந்தைக்கு காலையில் எழுந்தால் கட்டாயம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவர் ஜனாதிபதியாக தெரிவான போதும் இந்தப் பழக்கங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கேள்வி: உங்கள் தந்தையின் பின்னணியில் நிழலாக இருப்பது உங்கள் தாய் என்று கூறுகிர்களா? பதில்: நிச்சயமாக. அரசியல் வேலைகளில் ஈடுபட்டு விட்டு தந்தை வீடு திரும்புகையில் எமக்கு தொலைக்காட்சியைக் கூட பார்க்க அம்மா விடுவதில்லை. தந்தை அரசியலை தலையில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நுழைவதில்லை. அன்பான கணவனாக, தந்தையாகவே அவர் வீட்டுக்கு வருவார். தந்தை காலையில் எழுந்தால் ஏதாவது பாட்டை முனுமுனுப்பார். தூக்கத்துக்கு செல்லும் முன்னரும் இசை கேட்பது அவருக்கு பிரியமான விடயமாகும். இதனூடாக அவர் மனதுக்கு ஆறுதலை தேடிக்கொள்வார். கேள்வி: நீங்கள் கூறும் விடயங்கள் மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் போலல்லவா? பதில்: ஒருபோதும் இல்லை. அவ்வாறு மிகைப்படுத்தி கூறும் அவசியம் எமக்கு கிடையாது. நாம் யதார்த்தத்தைப் புரிந்து வாழும் சாதாரண குடும்பமாகும். எமது தந்தை திருட்டு, மோசடி எதிலும் ஈடுபட்டது கிடையாதென எனக்கு எங்கும் சத்தமிட்டு கூற முடியும். கேள்வி: உங்கள் தந்தை கொள்கையை மதித்து நேர்மையான அரசியல்வாதி என்கிaர்களா? பதில்: அவ்வாறு சொல்வதற்கு வேண்டுமான அளவு ஆதாரங்கள் உள்ளன. நாட்டில் கலவரம் வெடித்த சமயங்களில் கட்சித் தலைவர்களை உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுவதற்கு தந்தை முன்னின்று செயற்பட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் நம்பிக்கையுடன் செயற்பட்டார். யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்ட கடைசி தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்தார். அந்த சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக எனது தந்தையே செயற்பட்டார். யுத்த வெற்றி செய்தியை நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் நாட்டுத்தலைவர் திரும்பி வரும்வரை அதனை இரகசியமாக பாதுகாத்தார். எமது தந்தை அதுபோன்ற நேர்மையான மனிதர். கேள்வி: உங்கள் தந்தை பொதுவேட்பாளராக களமிறங்குவார் என்பதை உங்கள் குடும்பத்தவர்கள் அறிந்திருந்தார்களா? பதில்: எனது தந்தைக்கு பல்வேறு சவால்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தாலும் ஒருபோதும் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. பொதுவேட்பாளராக களமிறங்குவது குறித்து அவர் எமக்கு அறிவித்தார். இந்த முடிவினால் தனது வாழ்க்கையைப் போன்று உங்களது வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எம்மிடம் தெரிவித்தார். அவர் எப்பொழுதும் நன்றாக சிந்தித்தே எந்த முடிவையும் எடுப்பார். கேள்வி: பொதுவேட்பாளராக தன்னை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உணர்ச்சிவசப்பட்டது குறித்து? பதில்: கண்களில் நீர் நிரம்ப முழு நாட்டு மக்களுக்கும் உரையாற்றிய விதம் எமக்கு பெரும் கெளரவத்தை தந்தது. எனது தந்தை இந்தத் தேர்தலில் வெல்வார் என்பது அப்பொழுதே எமக்கு புலனானது. கேள்வி: இன்று உங்களது தந்தை இந்த நாட்டின் ஜனாதிபதி. அது உங்களுக்கு எவ்வாறு இருக்கிறது? பதில்: இது ஆர்ப்பாட்டமற்ற அமைதியான வெற்றியாகும். எமது குடும்பம் மிகவும் சாதாரண எளிமையான குடும்பம். நாம் எதிர்வுகூறல்களை நம்பியிருக்கவில்லை. சரியான நேரத்தில் சரியானதை செய்தார்கள். அவர் வெற்றி பெற்ற செய்தி அறிந்த போதும் தந்தை சாதாரணமாகவே இருந்தார். அவரின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றத்தை காண முடியவில்லை. சிலவேளை இந்தத் தேர்தலில் எனது தந்தை தோல்வியடைந்திருந்தால் எமது குடும்பத்துக்கே உயிராபத்து ஏற்பட்டிருக்கும். அல்லது தந்தை சிறையில் இருந்திருப்பார். நன்றி: லங்காதீப தமிழில்: எம்.எஸ்.பாஹிம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |