|
||||
|
தலைவர்கள் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது! - பேராசிரியர் சிற்றம்பலம் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப்
பதிவு செய்ய வேண்டிய
ஒழுங்குகள்
யாவும் தமிழரசுக்
கட்சியின்
தலைவரான திரு. இரா. சம்பந்தன் தலைமையில்
பூர்த்தியாகிவிட்டன.
இதனை இட்டு
இக்கட்சியின்
சிரேஷ்ட உப தலைவரும்
1956ஆம் ஆண்டு
தொடக்கம்
இக்கட்சியின்
இலட்சியத்திலிருந்து
இம்மியும்
விலகாது பேசியும் எழுதியும்
செயற்பட்டும்
வருபவனாகிய
நாம் அதிர்ச்சியடைந்தோம்.
இத்தகைய
அதிர்ச்சியில்
தான் வடக்குக்
கிழக்கு மாகாணத்திலுள்ள
கட்சித் தொண்டர்களும்
உறைந்திருந்ததை
அவர்கள் நம் முடன்
மேற்கொண்ட
தொடர்புகள்
மூலம் அறிந்து கொண்டேன் என யாழ்.
பல்கலைக் கழகத்தின்
ஓய்வு நிலைத் சிரேஷ்ட பேராசிரியரும்
இலங்கைத்
தமிழரசுக்
கட்சியின்
முன்னாள்
தலைவர்களில்
ஒருவரான சி.க.சிற்றம்பலம்
தெரிவித்தார்.
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அரசியல் கட்சியாகப்
பதிவு செய்யப்படவுள்ளதாக
வெளியான தகவலையடுத்து,
இலங்கை தமிழரசுக்
கட்சியின்
உப தலைவர்
பேரா சிரியர்
சி.க.சிற்றம்பலம்
வெளியிட்டுள்ள
செய்திக்
குறிப்பு
இங்கு பிரசுரமாகின்றது.தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
அரசியல் கட்சியாக நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.)
அவர் வெளியிட்ட
செய்திக்
குறிப்பு
வருமாறு, இலங்கைத் தமிழரசுக்
கட்சியை
1949 ஆம் ஆண்டில்
தந்தை செல்வநாயகம்அவர்
கள் ஆரம்பித்தபோது
அதனை வெறும்
கட்சி யாக மட்டும்
இனங்காணாது
தமிழ் மக்களுக்கு
விமோசனமளிக்கும்
ஒரு இயக்கமாக
வே இனங்கண்டார்.
இத்தகைய இயக்கம்
தமிழ் மொழி பேசும்
வடக்குக்
கிழக்கு மாகாணங்களை
இணைக் கும் ஒரு
சக்தியாக
உருவெடுக்க
வேண்டும்
என்பதே அவரது கனவாகும். இதனால்தான் தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய
உரிமை ஆகிய கோட்பாடுகளின்
சின்னமாக
'வீடு' (வீடுபேறு
அளிப்பது)
அமைந் தது. தந்தை செல்வநாயகம்,
தலைவர் அமிர் தலிங்கம்
போன்ற தலைவர்களின்
பாதங் கள் வடக்குக்
கிழக்கின்
பட்டிதொட்டியயங்கும்
படியத் தமிழ்த் தேசியம் வலுவான சக்தியாக உருவெடுத்தது.
தலைவர்களினதும்
தியாகத்தாலும்
தொண்டர்களது
அர்ப்பணிப்பாலும்
அப் பளுக்கற்ற
தியாகத்தாலும்
வடக்குக்
கிழக்கு மாகாண மக்களின்
இதயங்களில்
வீட்டுச்
சின்னமே தமக்கு விமோசனமளிப்பது
என்ற எண்ணக்கரு
உருவாகி ஆல விருட்சமாக
வளர்ச்சி
பெற்றது.
தமிழரசுக் கட்சி மேற்கொண்ட
போராட்டங்களும்
செய்து கொண்ட ஒப்பந்தங்களும்
ஏனைய தமிழ்க்
கட்சிகளை
விட இதனை
முதன்மை நிலைக்கு இட்டச் சென்றன. இருந்தும்
நமக்குள்
ஏட்டிக்குப்போட்டி
போடும் அரசியலைத்
தவிர்க்கும்
நோக்கில்
இக் கட்சி
தமிழ்க் காங்கிரஸுடன்
இணைந்து தமிழர் விடுதலைக்
கூட்டணியாக
உதயசூரி யன் சின்னத்தில்
இயங்கினாலும்
அதன் முதன்மையும்
தனித்துவமும்
இக் கூட்டமைப்
பில் பேணப்பட்டது.
எனினும் சித்தாந்த
ரீதியிலன்றி
வெறும் ஒற்றுமைக்கான
கூட்டமைப்பு
என்ற கோ
த் தின்
அடிப்படையில்
ஏற்பட்ட இவ்விணைப்
பின் விபரீத
விளைவுகளை
அண்மைக்கால
சம்பவங்கள்
மட்டுமன்றி
நடந்து முடிந்த தேர் தலும்
துலாம்பரமாக
எடுத்துக்
காட்டியுள்ளது.
வீட்டை விரும்பிய
விடுதலைப்புலிகள்
தமிழரசுக் கட்சியின்
வீடுதான்
தமிழர் தாயகத்தை இணைக்கும்
மிக நீண்ட
வரலாற் றுப் பாரம்பரியமுடைய
சின்னம் என்பதாலும்
ஏனைய தமிழ்க்
கட்சிகளைப்
போலன்றி வடக்குக் கிழக்கு மாகாணங்கள்
முழுவதிலும்
வியாபித்துள்ள
கட்சி என்பதாலும்
2004 இல் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
உருவான போது இதிலேதான்
இக் கூட்டமைப்பினர்
தேர் தலில்
போட்டி போட வேண்டும்
என்று விடுத லைப்புலிகளும்
விரும்பினர்.
இதனை ஏனைய கட்சிகளும்
ஏற்றன. அன்று
இக் கூட்டமைப்பு
உருவானபோது
நல்லிணக்க
அடிப்படையில்தான்
ஒவ்வொரு கட்சியும்
செயற்பட்டன.
எனினும் கடந்த காலத்தில்
தமிழ்த்தேசியக்
கூட்டணியின்
பாராளுமன்ற
உறுப்பினர்களின்
செயற்பாடின்மையும்
கடந்த தேர்தலில்
நிற்போரைத்
தெரிவு செய்வதில்
ஏற்பட்ட இழு பறிகளும்
இதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும்
ஒருகால் உள்வீட்டுப்
பிள்ளைகளாயிருந்து
பின்னர் விலகிச் சென்ற தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினரின்
விதண்டாவா
தங்களும்
இத் தேர்தலில்
போட்டி போட்டோர் பற்றித் தமிழரசுக்
கட்சியின்
தொண்டர்கள்
மத்தியில்
ஏற்பட்ட விமர்சனங்களும்
இதன் விளைவாக
அவர்கள் மத்தியில்
கால்கொண்ட
அக்கறையின்மையுமே
வட பகுதியில்
தமிழரசுக்
கட்சியைக்
களத்தில்
பின்னடையச்
செய்தன. கட்சியாகப் பதிவு தேவைதானா?
இப் பின்னணியில்
அதுவும் கடந்த கால
அனுபவங்கள்
மத்தியில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப்
பதிவு செய்தல் காலத்தின்
தேவைதானா? என்பது பற்றி மிக ஆழமாக
சிந்திக்க
வேண்டியதொன்றாகவுள்ளது.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினைக்
கட்டா யம் ஒரு
கட்சியாகப்
பதிவு செய்தல் வேண் டும்
என்பதில்
தலைவர்கள்
முரண்பிடித்து
ஒரு தலைப்பட்சமாகத்
தீர்மானிக்க
முடியாது.
மிக நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தையுடைய
இக் கட்சியின்
இதற்கான வழிமுறைகள்
பல உள.
மத்திய குழு, பொதுச்
சபை ஆகியவற்றி
னுள் இது
பற்றி விவாதிக்கப்படல்
வேண்டும். இவையே
கட்சியின்
கொள்கை எதிர்காலத்
திட்டங்கள்
ஆகியவற்றை
வகிக்கும்
கருவிக ளாகும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள்
ஆகி யும்
இவற்றைக்
கூட்டிக்
கட்சித் தொண்டர்க ளுடன் கருத்துக்களைப்
பரிமாறத்
தலைமைப் பீடம் எதுவித
நடவடிக்கைகளையும்
மேற் கொள்ளாத
சூழலில் மத்திய குழுவைக் கூட் டும்படி
02.06.2010 இல் தலைவர்/செயலா ளர்
ஆகியோருக்குக்
கட்சியின்
சிரேஷ்ட உப தலைவர்
என்ற ரீதியில்
ஒரு கடிதத்தினை
அனுப்பியிருந்தோம்.
இற்றைவரை கடிதம் கிடைத்தது
என்று கூடப் பதில்
இல்லை. தன்னிச்சையான
செயற்பாடுபொதுவாகக்
கட்சித் தொண்டர்கள்
மத்தி யில் தலைமைப்பீடம்
தங்களைக்
கலந்தா லோசிக்காது
தன்னிச்சையாகச்
செயற்படு
கின்றது என்ற கருத்து
நிலவுகின்றது.
தலை மைப் பீடம் எதேச்சையாக
செயற்பட்டதை
அண்மைக்கால
நிகழ்வுகளும்
எடுத்துக்
காட்டியுள்ளன.
எவ்வாறிருப்பினும் மிக நீண்ட
ஜனநாய கப் பின்னணியுடைய
இக் கட்சியில்
இத்த கைய
போக்கினை
அனுமதிக்க
முடியாது. இத னால்
கட்சியின்
எதிர்கால
ஆரோக்கியமான
வளர்ச்சி
தடைப்பட்டு
விடும். எதுவித இலட்சியப்பற்றுமற்ற
வெறும் வழிப்போக்கர்கள்தான்
கட்சியில்
நுழைந்து
தொண்டர்களுக்கு
ஆணையிடும்
நிலை ஏற்
படும். இது மிக மிக ஆபத்தான
நிலையாகும்.
இத்தகைய நிலை வெள்ளைக்
கையர்க ளாக எமது
மறைந்த தலைவர்களது
தியாகத் திற்கும் எமது ஜனநாயகப்
பாரம்பரியத்திற்
கும் அழிவைத்
தேடித் தந்தே விடும். எனினும் இனியும்
காலம் தாழ்த்தாது
உட னே
கட்சியின்
மத்திய குழுவையும்
பொதுக் குழுவையும்
கூட்டல் வேண்டும்.
தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினை
அரசியல் கட்சியாகப்
பதிவு செய்யப்படும்
நடவடிக்கை
பற்றி அலசி ஆராயப்பட
வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும்போது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சின்னம் யாது என்
பதில் தெளிவு வேண்டும். எக்காரணம் கொண் டும் வீட்டுச்
சின்னத்தைத்
பரிமாற்றம்செய்ய
முடியாது.
விலைபேசவும் முடியாது.
காரணம் இன்று இவ் வீட்டுச்
சின்னம் தமிழரசுக்
கட்சி யின் தியாகிகளின்
நினைவாலயமாகவும்
மிளிர்கின்றது.
கண்ணீராலும் செந்நீராலும்
வளர்க்கப்பட்ட
கட்சி
தலைவர்களினதும் தொண்டர்களினதும்
கண்ணீராலும்
செந்நீராலும்
வளர்க்கப்பட்ட
இத் தமிழரசுக்
கட்சி என்ற ஆல
மரத்தைப்
புதுமுகங்கள்
வெட்டித்
தறிக்கத்
தமிழரசுக்
கட் சியின்
தொண்டர்கள்
இடம் கொடுக்கக்
கூடாது. அவ்வாறு இடம் கொடுத்தால்
இப் புதுமுகங்
களே தாம்தாம்
நவயுக தியாகிகள்
எனத் தம்
பட்டம் அடித்துக்
கொண்டு எமது தலைவர்
கள் செய்த
தியாகத்தையும்
எம் கட்சியின்
தியாக வரலாற்றையும்
குழி தோண்டிப்
புதை த்து
விடுவார்கள்.
இவ்வாறு நடைபெற்றால்
தந்தை செல்வ நாயகம்,
கோப்பாய்
கோமான் வன்னியசிங்
கம், இரும்பு
மனிதன் நாகநாதன், திருமலை இராசவரோதயம்,
பட்டிருப்பு
இராசமாணிக்
கம், தலைவர்
அமிர்தலிங்கம்
போன்றோரை
யும் அவர்களின்
பங்களிப்புகளையும்
எதிர் கால சந்ததியினர்
அறியாவண்ணம்
இவ் நவஉலகத்
தியாகிகள்
புறந்தள்ளி
விடுவார்கள்.
நீதிமன்றம்
செல்வோம் இன்றெல்லாம் கட்சிகளைப்
புனரமைக்
கும் பணி
ஈழத்தில்
நடைபெறுகின்றது. இத்த கைய பணியிலேயேதான்
இலங்கைத்
தமிழ ரசுக்
கட்சியும்
இனியும் காலம் தாழ்த்தாது
இற ங்க
வேண்டும்.
எவராவது தமிழரசுக்
கட்சியின்
வீட்டுச்
சின் னத்தையோ
அன்றி அதன் கொடியையோ
சுய நலத்திற்காக
விலைபேச முற்பட்டால்
நீதி மன்றம்
சென்றாவது
இதனைத் தடுத்து நிறுத் துதல் ஒவ்வொரு
தமிழரசுக்
கட்சியின்
தொண் டனின்
தலையாய கடமை என்று
வலியுறுத்திக்
கூற விரும்புகின்றேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டார நாயக்க கூறியதுபோன்று
இன்று அரசியல் என்பது பொய்யும் புரட்டும்
புளுகும்
நிறைந்த வியாபாரமாகி
விட்டது. உண்மை,
நேர்மை, கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு
என்பன தேர்தல் காலங்களில்
மட்டும் அரசியல்வாதி
களால் தம் புகழ்பாட
இதய சுத்தியின்றி
உச்சரிக்கப்படும்
வெறும் பதங்களாகி
விட்டன.அவர்களது
அன்றாட வாழ்க்கையில்
இவற்றுக்கு
இடமேயில்லை
என்றுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |