இருதரப்பு பேசும்போது
மூன்றாம்
தரப்பு அதனைக் குழப்புவதற்கு
முயற்சி!
- மனித வளங்கள் சம்பந்தமான
சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர
கேள்வி:
இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வொன்றைப்
பெற்றுக்கொடுக்கும்
அரசின் தீர்மானத்திற்கு
பாராளுமன்றத்தெரிவுக்குழு
அமைப்பது
எந்த வகையில்
முக்கியத்துவம்
பெறுகின்றது?
பதில்: இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வொன்றைக்
கொண்டு வருவதற்கு
56 இலிருந்து
பல்வேறு வகையான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு
வந்தது. இதை பல தசாப்தங்களாக
நாம் கதைத்தும்
ஒரு இனக்கப்பாட்டுக்கு
வரமுடியாமலுள்ளது.
அதில் நாம் தோல்வியும்
கண்டுள்ளோம்.
இதற்கு முன் இப்பிரச்சினைக்குத்
தீர்வைப்
பெற்றுக்கொள்ள
எடுத்த முயற்சிகளுடன்
பார்க்கும்போது,
இந்தமுறை
ஏற்பட்டிருக்கும்
நிலைமை 3 காரணங்களினால்
முதன்மையானது.
கேள்வி:
கடந்த காலத்தில்
இப்பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு
எடுத்த முயற்சிகளுக்கும்
தற்போது மேற்கொள்ளப்படும்
முயற்சிக்கும்
இடையிலான
வேறுபாடுகள்
என்ன?
பதில்: பண்டாரநாயக்க
- செல்வநாயகம்
மற்றும் டட்லி - செல்வா
ஒப்பந்தம்
தவிர்ந்த
ஏனைய சகல
ஒப்பந்தங்களும்
யுத்தத்தை
அடித்தளமிட்டே
நடத்தப்பட்டது.
1987
ஜே. ஆர். - ராஜீவ்
காந்திக்கு
இடையில் ஏற்படுத்தப்பட்ட
இந்து-ஸ்ரீலங்கா
ஒப்பந்தத்துடன்
இப்பிரச்சினைக்கு
சர்வதேச தொடர்புகள்
ஏற்பட்டன.
அதன்பின் ஜனாதிபதி
பிரேமதாச,
எல்.ரீ.ரீ.ஈ.
யின் உதவித்
தலைவர் “மகத்தயா” உடன் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
சந்திரிக்கா ஜனாதிபதியின்
காலத்தில்
பாலபட்டபெந்தியின்
தலைமையில்
குழுவொன்று
அவர்களுடன்
பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டது.
இந்தப் பிரச்சினைக்கு
மீண்டும்
ஒருமுறை நோர்வே நாட்டை இழுத்தெடுத்து
ரணில் இப்பிரச்சினையை
சர்வதேச மட்டத்திற்குக்கொண்டு
சென்றார்.
2001ஆம் வருடத்திலேயே
இது நடைபெற்றது.
இந்த எல்லா முயற்சிகளிலும்
இரண்டு பிரிவினரே
இருந்து வந்தனர். அதேமாதிரி, அந்த எல்லா சந்தர்ப்பங்களிலும்
பேச்சுவார்த்தை
நடத்தியது
யுத்த நேரங்களில்,
காலங்களில்
ஆயுதம் ஏந்திய குழுவினருடன்
தான். இம்முறை பேச்சுவார்த்தை
நடத்துவது
யுத்தம் நிறைவுபெற்ற
நிலையில்.
அதனால் மிகவும்
வெளிப்படையாக
ஒரு புரிந்துணர்வுக்கு
வரக்கூடிய
சூழ்நிலை
உள்ளது. தற்போது, பேச்சுவார்த்தைக்கு
ஒரு நல்ல
சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
சகல சந்தர்ப்பங்களிலும்
எல்லாப் பேச்சுவார்த்தைகளும்
இடம்பெற்றது
வெளிநாட்டில்
அல்லது பாராளுமன்றத்திற்கு
வெளியில்
ஆகும்.
கேள்வி:
பாராளுமன்றத்தில்
இப்பிரச்சினை
தொடர்பாக
புரிந்துணர்வை
கட்டியெழுப்புவது
மிகவும் நன்மையானது
என நீங்கள்
நம்புவது
ஏன்?
பதில்: பாராளுமன்றத்தில்
சகல அரசியல்
கட்சிகளும்
பிரதிநிதித்துவம்
செய்கின்றனர்.
அவ்வாறே சகல கட்சிகளுக்கும்
தலைவரொருவர்
அக்கட்சியினுள்
இருக்கின்றார்.
அரசினுள் 16 கட்சிகளும்,
எதிர்க்கட்சியில்
5 கட்சிக்களும்
மொத்தம் 21 கட்சிகள் பாராளுமன்றில்
அங்கம் வகிக்கின்றன.
அதனால் நல்ல ஓர் இணக்கப்பாட்டுக்கு
வரமுடியும்.
இவ்வாறே தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றில்
அங்கம் வகிக்கின்றன.
அதனால் எல்லோரும்
இணைந்து, கதைத்து ஒரு தீர்க்கமான
முடிவுக்கு
வரமுடியும்.
அனைவரும்
வரலாற்றில்
ஒருபாடத்தைப்
படித்திருப்பதால்
நல்ல ஒரு
அரசியல் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால்
தெரிவுக்குழு
மூலம் சக்திமிக்க
ஒரு தீர்வைப்பெற்றுக்கொள்ள
முடியுமென
நாம் நம்புகிறோம்.
என்னுடைய கணிப்பீட்டின்படி
மீண்டுமொரு
முறை வரலாற்றின்
மூலமாக எங்களுக்கு
ஒரு சந்தர்ப்பம்
கிடைத்துள்ளது.
அதை சரியான
முறையில்
நாம் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
இடையூறுகள்
ஏற்படுத்தாத
வண்ணம்) இல்லாவிட்டால்
நாம் எதிர்கால
பரம்பரைக்கு
இப்பிரச்சினையை
இதனை மாற்றுவது
மாத்திரமே
நடைபெறும். நாம் நமது
அரசியல் நிகழ்ச்சி
நிரல்களை
முன்னுக்குக்
கொண்டுசென்று
மீண்டுமொருமுறை
அரசியல் தீர்வைப்பெறாவிடில்
இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுதினமோ
பயங்கரவாதத்துடன்
வாழக்கூடிய
ஒரு சூழலே
எமது சந்ததியினருக்கு
உருவாகும்
நிலை ஏற்படும்.
அந்நேரத்தில், அவர்களின்
சாபம் எம்மை நோக்கி
வரும். இதற்கு முன்னுள்ளவர்கள்
இந்த விடயத்தை
அறிவு பூர்வமாக சிந்திக்காமல்
அவர்களுக்கு
இடம்கொடுத்தபடியால்
ஏற்பட்ட அழிவுகள் எதிர்கால பரம்பரைக்கும்
விட்டுச்
செல்வதா என்பதை நாம் எமது
மனச்சாட்சியின்
படி நினைத்துப்
பார்க்கவேண்டும்.
கேள்வி: பயங்கரவாதம்
முழுமையாகத்
தோற்கடிக்கப்பட்டபடியாலும்
அதற்கான காரண கர்த்தாக்களான
எல்.ரீ.ரீ.ஈ.
யை யுத்த
மூலம் தோல்விபெறச்
செய்திருப்பதால்
அரசியல் தீர்வை முன்வைப்பது
யாருக்கு?
என்ற வினாவை
சிலர் எழுப்புகின்றார்கள்
தானே?
பதில்: யுத்தம் நிறைவடைந்தவுடன்
தீர்வுகிடைக்குமென்று
கூறமுடியாது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய
தீர்வொன்றைக்
கொடுக்காவிடில்
மீண்டும்
இது தலைதூக்கும்
பயங்கரவாதமோ
அல்லது பிரிவினைவாதமோ
ஏற்படுவதற்கு
காரணிகளான
பொருளாதாரம்,
சமூக, அரசியல்
காரணங்கள்
இருக்கின்றன.
அதைத் தீர்க்கமுடியும்
அரசியல் தீர்வினால்
மாத்திரமே.
கேள்வி: அரசுக்கு பாராளுமன்றத்தினுள்
2/3 பலம் உள்ளது.
தெரிவுக்குழுவை நியமிக்காது
அரசுக்கு
தீர்வைப்பெற்றுக்கொடுக்க
முடியும்
என எதிர்க்கட்சி
எழுப்பும்
குற்றச்சாட்டுக்கு
உங்களின்
கருத்து எப்படி?
பதில்: ஆம் அரசுக்கு
2/3 பலம் உள்ளது
உண்மைதான்.
அவ்வாறே நிறைவேற்றுச்
சக்தி உள்ளது. ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவுக்கு 5/6 பலம் இருந்தது.
அப்படியிருந்தும் அவர் ஏன் சர்வகட்சிக்குழுவை,
தெரிவுக்குழுவை
நியமித்தார்.
நான்
இதற்கு முன்னர் ஜே. ஆர். அரசு மாத்திரமல்ல
பிரேமதாஸ
அரசு காலத்தில்
நடைபெற்ற
எல்லா சர்வகட்சிக்குழு
மாநாட்டிற்கும்
சமுகமளித்துள்ளேன்.
அவை எல்லாவற்றிற்கும்மேலாக
இந்தமுறை
ஒரு வித்தியாசம்
உள்ளது. அது தான் “அரச தலைவர்”
என்ற ரீதியில்
ஜனாதிபதி
பாராளுமன்றத்திற்கு
கொண்டுவரும்
எந்தவொரு
தீர்வையும்,
தான் நடைமுறைப்படுத்துவதாக
உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
வேறு எந்தத்
தலைவரும்
பெறுமதிமிக்க
வார்த்தையை
பாராளுமன்றத்
தெரிவுக்குழுவிடயத்தில்
வழங்கவில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தின்
முக்கியத்துவமானதான
மூன்றாவது
காரணம் அதுவாகும்.
அதனால் கிடைக்கும்
சந்தர்ப்பத்தில்
பயனைப்பெற்று
நிரந்தரத்
தீர்வைப்பெற
பங்களிப்பைச்
செய்வது அரசு, எதிர்க்கட்சிகளின்
பொறுப்பாகும்.
கேள்வி:
தேசியப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு
எல்லா அரசியல் கட்சிகளும்
பங்கெடுக்கவேண்டுமென்று
நீங்கள் கூறுவது என்ன நோக்கத்திற்காக?
பதில்: இந்த நிலைமை
(விடயம்) இன்று ஏற்பட்டதற்கு
செய்வதற்கு
எல்லா அரசியல் கட்சிகளும்
பொறுப்புக்கூற
வேண்டும்.
இதனால் இப்பிரச்சினையைத்
தீர்ப்பது
எல்லா அரசியல் கட்சியினதும்
கடமையாகும்.
அதே மாதிரி
இது எதிர்காலச்
சந்ததியினரைப்
பாதிக்கும்
விடயமாகும்.
ஐம்பது ஆண்டு பழைமையான வரலாறு தேசிய பிரச்சினைக்கு
உண்டு. அந்த அடிப்படையில்
30 வருடம் யுத்தம் நடைபெற்றது.
நாட்டின் நிரந்தர
சமாதானத்திற்கும்,
அபிவிருத்திற்கும்
இந்தப் பிரச்சினை
நேரடியாகத்
தொடர்புபட்டது.
இன்னும் தாமதப்படுத்தாது
அதற்குத்
தீர்வைப்பெற்றுக்கொடுப்பது
அனைவரினதும்
கடமையாகும்.
வரலாற்றில்
எல்லாச் சந்தர்ப்பத்திலும்
தேசியப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு
இரு தரப்பினர்
மாத்திரம்
கலந்துகொண்டபடியால்
மற்றவர்கள்
அதைக் குழப்புவதற்கு
முயன்றார்கள். இவ்வேளையில்,
அரசு தனிப்பட்ட
முறையில்
யோசனையைக்
கொண்டுவராது,
சமர்ப்பிக்காது
சகல கட்சிகளும்
தீர்வைப்பெற்றுக்கொள்ள
அக்கட்சிகளுக்கு
சந்தர்ப்பத்தைப்
பெற்றுக்கொடுப்பது,
அதை ஏற்றுக்கொள்வது,
அறிக்கைகளை
வெளியிடுவது,
புதிய நிலைமையைத்
தோற்றுவித்துள்ளது.
வரலாற்றில்
இடம்பெற்ற
பிழைகளைத்
திரும்பத்
திரும்பச்
செய்யாது
அது சம்பந்தமாக
நேர்மையான
முறையில்
நடந்துகொள்வது
நாம் அனைவரும்
மேற்கொள்ளவேண்டியதொன்றாகும்.
எல்லாக்
கட்சிகளுக்கும்
கொள்கை யொன்று உள்ளது. அதிலிருந்து கொஞ்சம்கூட
நகர்வதில்லை
என நினைத்தால்
தீர்வைக்கொண்டு
வரமுடியாது.
ஹினிதிமற்றும்
நி.V.ஜியும்
ஒரு வழிக்கு
வரவேண்டும்
நடுநிலைமைக்கு
வரவேண்டும்
ஹினிதியின்
யோசனையை நாம் ஏற்றுக்கொள்வதோ
அல்லது எமது யோசனையை
ஹினிதிஏற்றுக்கொள்வதோ
அல்லது இந்தப் பேச்சுவார்த்தையின்
தன்மை சிங்களம், தமிழ், முஸ்லிம்
ஆகிய சகல
இனத்தவரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய
தீர்வை ஏற்படுத்தவேண்டும்.
கேள்வி:
பாராளுமன்றத்
தெரிவுக்குழு
ஊடாக அரசு
முயற்சி செய்வது பொறுப்புடன்
ஏமாற்றுவதற்காகவே
என்று எதிர்க்கட்சி
கூறுகின்றதே?
பதில்: பாராளுமன்ற
யோசனைக்கு
செயற்படுத்தும்
அதிகாரம்
அரசுக்கே
உண்டு. ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெளிவான அறிவிப்பு
ஒன்றைச் செய்துள்ளார்.
பாராளுமன்றம் எடுக்கும்
செயற்பாடுகளை
தான் நிறைவேற்றுவதாகக்
கூறியுள்ளார்.
அவர் உறுதியான
நடவடிக்கை
எடுக்கும்
ஒரு தலைவர்
ஆவார். அவர் கூறியபடி
பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டது.
அதேமாதிரி, இந்தப்
பிரச்சினைக்கு
நிரந்தரத்
தீர்வைப்
பெற்றுக்கொடுப்பதும்,
அதற்கான தைரியமும்
அவரிடம் உண்டு. நாம் அவருக்கு
ஆதரவை வழங்குவது
அதன் நிமித்தமே.