|
||||
|
சம்பள உயர்வை
வென்றெடுப்பதற்கு கோமளித்தனமான வழிமுறைகளை கைவிட்டு சரியான வழிமுறைகளை
தேர்ந்தெடுக்க வேண்டும்
- மக்கள் தொழிலாளர் சங்கம் பெருந்தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்ற நாடோடிகளாக்குவதற்கான திட்டங்களை முன்வைத்து செயற்படுகின்ற போது அவ்வாபத்திருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் திட்டங்களை பற்றி சிந்திக்காது தொழிலாளர்களின் ஐக்கியத்தை கூறுபோடும் இ.தொ.கா.வும் அதற்கு எதிரான அணியினரும் ஏட்டிக்கு போட்டியாக சத்தியாகிரக போராட்டங்கள் என முன்னெடுக்கும் கோமாலித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறது என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா அதன் மத்திய குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து இ.தொ.கா. தன்னிச்சையாக வெளியேறியதையடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலை பற்றி ம.தொ.ச. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வழமையை விட இம்முறை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முரண்பட்டும் பிளவுபட்டு கொண்டும் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இ.தொ.கா. அதன் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைக்க தள்ளப்பட்டது. எனினும் அச்சம்பள கோரிக்கை நியாயமானது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அக்கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே ஐ.தே.க. சார்பு தொழிற்சங்கங்களும் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கமும் எடுத்து வந்தன. பேரப்பேச்சில் பங்கெடுக்கும் இ.தொ.க.வானது, இ.தே.தொ.ச மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பற்றுடன் கலந்துரையாடாமல் 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்ததும் அக்கோரிக்கைக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்காததையடுத்து இந்த இரு தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் பேச்சுவார்த்தையில் இருந்து தான்தோன்றித்தனமாக விழகியதும் தவறானது. 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களின் வாக்குகளை பெற செயற்படுவதும் திட்டமிடப்படாத போராட்ட வழிமுறைகளை மக்கள் மீது திணிப்பதும் சம்பள உயர்வை பெற்று கொள்வதற்கான நேர்மையான அணுகுமுறையாகாது. இருப்பினும் இ.தே.தொ.ச., பெ.கூ.தொ.நிலையமும் ஏனைய ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்களும் 1000 கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றமையை அங்கீகரிக்க முடியாது. தோட்டக் கம்பனிகளினால், தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் என முன்வைத்த வாதத்தை எமது தொழிற்சங்கம் பாரம்பரிய தொழிற்சங்க நடைமுறையை கடந்து விஞ்ஞான பூர்மாக முறியடித்துள்ளது. ரூபா 1000 நாட் சம்பள கோரிக்கை நியாயமானது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு 03 நாட்களுக்கு மட்டுமே நாட் சம்பளத்தை வழங்க முடியும் என்றும் ஏனைய நாட்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கும், வெட்டப்படும் இறப்பர் பாலுக்கும் ஏற்ப கூலி வழங்கப்பட முடியும் என்று முன்மொழிந்துள்ளன. இது தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்றவர்களாக்கி நாடோடிகளா நடுத்தெருவில் விடுவதற்கான சதியாகும். இவ்வாறான சதிகளில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை பாதுகாத்து அவர்களுக்குரிய தொழிலையும் நியாயமான சம்பளத்தையும் உறுதி செய்ய வேண்டியது பொறுப்புமிக்க தொழிற்சங்கங்களினதும் அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். இப் பாரிய பொறுப்புகளில் இருந்து விழகி தொழிலாளர்களின் வாக்குகளை மட்டும் பெறுவதை மட்டும் நோக்காக கொண்டு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் நோக்கிலும் பாராளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு ஏட்டிக் போட்டியாக இ.தொ.க. மற்றும் அதற்கு எதிரான ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்கள் சத்தியக்கிரக போராட்டங்களை நடத்துவது கபடத்தனமானதும் கோமாளித்தமானதுமாகும். சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதற்காக தொழிலார்களின் ஒரு சாரார் இன்னொடு சாராருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது என்பது தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதாகும். இ.தொ.கா. நடத்தும் போராட்டத்திற்கு எதிராக ஏனைய அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் ஏனைய அமைப்புகளுக்கு எதிராக இ.தொ.க. போராட்டம் நடத்துவதும் தொழிலாளர் விரோத நிலைப்பாடாகும். எனவே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவும் பெருந்தோட்ட கம்பனிகளின் சதிகளில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கவும் தொழிலாளர்களை உள்ளடக்கிய பரந்துப்பட்ட கலந்துரையாடலை செய்து பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்படுவதே சரியான வழிமுறையாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |