Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் சாதி அரசியல் செயற்படும் முறை

யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் மக்கள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.நளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.துணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.

வண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.உதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள். பல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள். சிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள். சிறப்புரிமை குறைந்த சாதியினரிடையே கோவியர்,மற்றும் கரையார் ஆகிய சாதியினருக்கு பெரும்பான்மை வெள்ளாள சமூகத்தினரால் சலுகைகள் வழங்கப்பட்டு வந்ததால் மற்ற சிறப்புரிமை குறைந்த சாதியினரைப்போல் இவர்கள் தீவிரமான பிரச்சனைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை.

மாறுபட்ட உரையாடல்களுடன் ஒரு நேர்காணல்

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்குப் பின்னர் அரசியல் பேச்சு வார்த்தைகள் தமிழ் சமூகத்தினரிடையே வேர்விட்டிருந்த சாதிப்பாகுப்பாட்டை புறக்கணிக்கத் தொடங்கியதுடன் விடுதலை எண்ணத்தை எதிர்நோக்கி சாதி அடையாளத்துக்கு முக்கியத்துவம் வழங்குவது பின்னுக்குத் தள்ளப்பட்டது. முன்னணியில் உள்ள தமிழ் ஊடகங்கள் சாதி ஒடுக்குமுறை தமிழரிடையே நிலவுகிறது என்பதை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.தமிழர் தேசிய குழுக்களும் மற்றும் அதிகாரமிக்க தமிழ் அரசியற்கட்சிகளும் சாதி ஒடுக்குமுறையை முற்றாக ஒழித்து விடுவதில் அதிக அக்கறை காட்டவில்லை.மட்டுப் படுத்தப்பட்ட சாதியினரின் துக்கங்களுக்கு முக்கியத்தை வழங்குவதில் ஆர்வம் காட்டாமலும் அவாகளின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதில் அக்கறை காட்டாமலுமிருந்தன,ஏப்ரல் மாதம் மாறுபட்ட உரையாடல் ,சிறுபான்மை தமிழ் மகா சபை பொதுச் செயலாளரான 76 வயதான பி.ஜே அன்ரனியை பலாலி வீதி,யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து சமகால சாதிப்பிரகடனம்,சாதி அரசியல்.மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சாதிக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்புகள் என்பனவற்றின் வரலாறுகளைப் பற்றிக் கலந்துரையாடியது.

திருகோணமலையைச் சேர்ந்த அன்ரனி அவரின் தாயாரின் பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு அவரது தந்தையாரின் மரணத்தை தொடர்ந்து 1937ல் இடம் பெயர்ந்தார்.1958ல் யாழ்ப்பாணம் புலோலியில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலையில் கல்வி போதிக்கும் ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்தார். ஆசிரிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக 1980 ல் அவர் இந்த வேலையை இழக்க வேண்டி நேரிட்டது.ஆனால் 1982ல் அவர் மீண்டும் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1995ல் அவர் தனது ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றபோது அவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.2001ல் அன்ரனி ஒரு சட்டத்தரணியாக தேர்ச்சி பெற்றார். 2005 வரை அவர் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாக கடமையாற்றினார்.சமீபத்தில் 2010 ஏப்ரலில் நடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழுவொன்றை தலைமையேற்றிருந்தார்.

மாறுபட்ட உரையாடல்: நீங்கள் ஒரு சிறுபான்மைத் தமிழ் செயற்பாட்டாளராக எவ்வாறு மாறினீர்கள் என்பதைச் சொல்வீர்களா? இதுவரை எந்த வகையான பணிகளை நீங்கள் ஆற்றியுள்ளீர்கள்?

பி.ஜே. அன்ரனி: நான் 13வயதானபோதே யாழ்ப்பாணத்தில் சாதிப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவன்.நான் கல்வி கற்று வந்த கிறீஸ்தவ கல்லூரியில் வைத்து  உயர்சாதி மாணவனொருவனால் தாக்கப்பட்டேன். அந்த சம்பவத்தை இப்போது கூட என்னால் மறக்கவே முடியாது.சிறுபான்மைத் தமிழர் மகாசபை, 1941ல் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.ஜோவெல் போல், மற்றும் எம்.சி.சுப்பிரமணியம் என்பவர்கள் இந்த இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள்.சிறுபான்மைத் தமிழரின் நலன்களுக்காக தீவிரமாக பணியாற்ற நான் விரும்பியதால் எனது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து கொண்டேன்.பிற்பாடு எனக்கு ஒரு ஆசிரியப் பதவி வெளிமாவட்டப் பாடசாலையில் கிட்டியபடியால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினேன்.அரசாங்க சேவையில் ஒரு எழுதுவினைஞராக எனக்கு நியமனம் கிட்டிய போதிலும்,எனது சமூகத்துக்கு கல்வி போதிப்பது எனது இலட்சியமாக இருந்தபடியால் நான் ஆசிரியத் தொழிலினை ஏற்றுக் கொண்டேன்.பல பேர்கள், எனது ஆசிரியர்களில் ஒருவர் உட்பட எனது முடிவு விவேகமற்றது எனக் கூறினார்கள்.நான் 1969ல் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தபொழுது,மகா சபையின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டேன்.

அந்தச் சமயத்தில் சிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.நான் ஒரு கத்தோலிக்கனாக இருந்தபோதிலும் பெரும்பாலான இந்தப் பிரச்சாரங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். சிறுபான்மை தமிழ் சமூகத்தின் விடயங்களுக்காக எனது உயிரை ஆபத்தில் உட்படுத்துவதற்குக்கூட நான் தயாராக இருந்தேன்.வல்வெட்டித்துறை சிவன்கோவிலில் ஒரு ஆலயப்பிரவேச நடவடிக்கையில் நான் பங்கேற்றபோது என்னைக் கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் பொருளாளராக இருந்த தோழர் எஸ். இராசையா எனது உயிரைக் காப்பாற்றினார்.அப்போது நான் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக காவல் நிலையங்களுக்கு இந்துக் கோவில்களில் நடைபெறும் பூஜைகளிலும் திருவிழாக்களிலும் சிறுபான்மைத் தமிழர்கள் பங்களிப்பை உத்தரவாதப் படுத்துவதற்கு அதரவு வழங்கும்படி கடிதங்களை எழுதினேன்.1971க்கு முன்னர் காவல்துறையினரின் ஆதரவினைப் பெறுவது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகவிருந்தது.1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன. இந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி வெள்ளாளர்கள் தொடர்ந்தும் சிறுபான்மைத் தமிழர்கள் இந்துக் கோவில்களுக்குள் நுழைவதை தடுத்துவந்தனர்.

1971ல் இந்தச்சட்டம் திருத்தப்பட்டபோது சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களான காவல்துறையினர் ஆலயப் பிரவேச நடவடிக்கைகளின்போது எற்பாட்டாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியவர்களானார்கள் அவர்களால் தொடர்ந்தும் உயர்சாதிக்காரருடன் இணங்கிப்போக முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் காவல்துறை அத்தியட்சகராகவிருந்த திரு.சுந்தரலிங்கம் தனது முழு ஆதரவினையும் எங்களுக்கு வழங்கினார்.காங்கேசன்துறை காவல்துறை உதவி அத்தியட்சகராகவிருந்த திரு.ராஜசிங்கம் மகாசபா அங்கத்தவர்களின் பிரசன்னத்தில் துன்னாலை வாரியவளவு பிள்ளையார் கோவில் தருமகர்த்தா சபையினரிடம் கோவிலை சிறுபான்மை மக்களுக்காக திறந்து விடும்படி கட்டளை பிறப்பித்தார்.

பல படித்த சிறுபான்மை தமிழ் சமூக இளைஞர்களுக்கு வேலைகளைப் பெற்றுத் தருவதில் விசேடமாக ஆசிரியர் நியமனங்களை பெற்றுத் தருவதற்கு நானும் உதவிகளைச் செய்தேன். 1957ல் கல்வி அமைச்சராகவிருந்த திரு.தகநாயக்கா க.பொ.த சாதாரணதர பரீட்சையில் மூன்று திறமைச் சித்திகளைப் பெற்றிருந்த அநேக சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கினார்.அப்போது பாராளுமன்ற அங்கத்தவராகவிருந்த திரு.அமிர்தலிங்கம் இது கல்வித் தரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என்கிற காரணத்தைக் காட்டி இதை எதிர்த்தார்.

சிறுபான்மைத் தமிழரின் காணி உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவும் நான் உழைத்திருக்கிறேன்.காணியற்றிருந்த எனது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு வன்னிப் பகுதியில் காணிகளைப் பெற்றுத் தருவதற்கு நான் உதவி செய்துள்ளேன்.1970 களில் யாழ்ப்பாணத்தில் காணி உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றியவர்கள் நாங்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்காக கிளிநொச்சியில் விவசாயம் செய்வதற்காக காணிகளைத் தரும்படி கேட்டபோது எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டார்கள் எப்படியாயினும் அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராகவிருந்த திரு. பொன்னம்பலம் எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தார்.ஒரு சட்டத்தரணி என்கிற வகையில் எனது சமூகத்தினருக்கு நிரந்தர காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிந்துள்ளேன்.அவர்களில் பலருக்கு இப்போது அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் வீட்டுத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

மாறுபட்ட உரையாடல்: யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதி வெறியினையும் அது தொடர்பாக பல்வேறுபட்ட சாதியினருக்கு உள்ள அதிகாரத்தையும் உங்களால் விளக்க முடியுமா?

பி.ஜே. அன்ரனி: யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் மக்கள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.நளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செயபவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.துணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.

வண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.உதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.பல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.சிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள். சிறப்புரிமை குறைந்த சாதியினரிடையே கோவியர்,மற்றும் கரையார் ஆகிய சாதியினருக்கு பெரும்பான்மை வெள்ளாள சமூகத்தினரால் சலுகைகள் வழங்கப்பட்டு வந்ததால் மற்ற சிறப்புரிமை குறைந்த சாதியினரைப்போல் இவர்கள் தீவிரமான பிரச்சனைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உள்ளுராட்சி அங்கங்களில் அதாவது கிராமசபை மற்றும் நகரசபை போன்றவற்றில் அங்கத்துவம் மறுக்கப்பட்டது.தேர்தல் தேவைகளுக்காக வட்டாரங்கள் வரையறுக்கப் பட்டபோது, அதிகார மனப்போக்கு கொண்ட வெள்ளாளர்கள் அதிகளவு சிறுபான்மைத் தமிழர் பரந்து வாழும் பகுதிகளை பல துண்டுகளாகக் கூறுபோட்டு அவற்றை வெள்ளாளர் பெரும்பகுதியாக வாழும் பல்வேறு வட்டாரங்களுடன் இணைத்தனர்.உள்ளுராட்சி அங்கத்தில் உள்ள எந்த ஒரு வட்டாரத்திலும் சிறுபான்மைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வரமுடியாமற் செய்யப்பட்டது.அதன் விளைவாக அவர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி அங்கங்களில் தங்களது பிரதிநிதிகளை அனுப்ப முடியாமலிருந்தது. எப்படியாயினும் சிறுபான்மை தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய்  கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.

சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.தேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.தேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது. கடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.இந்தப் பழக்கம் 1960 வரை  சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.

1930 மற்றும் 1940 களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.தங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.குடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.உயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.

மாறுபடட உரையாடல்: சிறுபான்மைத் தமிழர்கள் கடந்த காலங்களில் கல்வி கற்பதற்கான வழிகளைத் தேடுவதில் எந்த வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது? சிறுபான்மைத் தமிழர்களுக்கு கல்வி வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் மகா சபையினால் என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன?

பி.ஜே. அன்ரனி: எனது தந்தையின் மரணத்தின்பின் என்னை ஆளாக்க வேண்டி எனது தாயார் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.அவர் உதவிக்காக சில கத்தோலிக்க மதகுருமாரை அணுகியபோது என்னை ஏன் எனது தந்தையின் தொழிலை பழகுவதற்கு அனுமதிக்கக் கூடாது என அவர்கள் எனது தயாரிடம் கேட்டார்கள். சிறுபான்மைத் தமிழர்களுக்கு கல்வி உரியதல்ல என உயர்சாதிக்காரர்கள் நினைத்தார்கள். ஏழ்மை காரணமாக கொடுமைக்கு உட்பட்ட சாதிக்காரர்களால் தங்கள் பிள்ளைகளை கட்டணம் அறவிடும் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியவில்லை. இலவசக் கல்வியின் அறிமுகமும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதும்கூட சிறுபான்மைத் தமிழர்களின் கல்விக்கான வழியை முன்னேற்றவில்லை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,பரமேஸ்வராக் கல்லூரி,மற்றும் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி போன்ற முன்னணிக் கல்லூரிகளில் சிறுபான்மைத் தமிழர்களின் பிள்ளைகள் அனுமதி பெறுவது இன்னும் கடினமான ஒன்றாகவே இருந்தது.எப்படியாயினும் 1960 ல் யாழ்ப்பாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.மாணிக்கவாசகர்,  கல்லூரி அதிபர்களாகவிருந்த யாழ்ப்பாண மத்திய கல்லூரி திரு.தம்பர்,மற்றும் பரமேஸ்வராக் கல்லூரி திரு சிவபாதசுந்தரம் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பதில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருந்தபடியால் அவர்களுக்கு பிரவேச அனுமதியை வழங்கினார்கள்

அநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.இந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.அவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் தங்களின் உயர்சாதி ஆசிரியர்களால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்டார்கள். இந்த ஆசிரியர்கள் உயர்சாதி மாணவர்கள் முன்வைத்து இந்த மாணவர்களை அவர்களின் சாதிப்பின்னணியைச் சுட்டிக்காட்டி அவமதித்தனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வேண்டுகோளின்படி எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் குடாநாட்டில் சுமார் 15 பாடசாலைகளை சிறுபான்மைத் தமிழர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்வதற்கு வேண்டி உருவாக்கியது.அதேநேரம் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்தப் பாடசாலைகளில் ஆசிரியாகளாக நியமனம் பெற்றார்கள்.இந்தப் பாடசாலைகளின் உருவாக்கத்தினால்; எமது மாணவர்களை பாகுபாடற்ற சுதந்திரமான சூழலில் கல்வி கற்கக் கூடியதாகவிருந்தது.

மாறுபட்ட உரையாடல்: காலப்போக்கில் இந்த உயர்சாதி மரபுப் பாகுபாட்டில் ஏதாவது முக்கிய மாற்றத்தை நீங்கள் அவதானித்தீர்களா?

பி.ஜே. அன்ரனி: அரசாங்க துறை அலுவலகங்களில் இந்த நாட்களில் சாதிப் பாகுபாட்டினை நாங்கள் அரிதாகவே காண்கிறோம். சிறுபான்மைத் தமிழர்கள் பல்வேறு திணைக்களங்களிலும் சபைகளிலும் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு இயலுமாகவிருந்த பொழுதிலும் அவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப் படுகின்றன, இருந்தாலும் அது சாதி அடிப்படையான காரணத்தை வெளிப்படையாகக் காண்பிப்பதில்லை. சிறுபான்மைத் தமிழ் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் பாடசாலைகளில் நிறுத்தப்பட்டு விட்டன. இனிமேலும் சிறுபான்மைத் தமிழர்களுக்காக தனியான பாடசாலைகள் தேவையில்லை.சிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் சிறுபான்மைத் தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.அடக்கப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.அதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.ஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.உதாரணத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் சிறுபான்மைத் தமிழ் மாணவர்கள் கல்வியில் அவர்கள் எவ்வளவுதான் திறமை பெற்றிருந்தாலும் கூட போதானாசிரியர் தரத்துக்கு உயர்வான பதவிகளில் அமர்த்தப்படுவது மிகக் கடினமாகவே உள்ளது.சிறப்புரிமை குறைந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தகுதியான தகமைகளைக் கொண்டிருந்த போதும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பதவிக்கு நியமிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர்களின் கற்கைக்கான வழி மறுக்கப்படாதிருந்த படியினால் அவர்களால் பட்டதாரிகளாகவும்,வைத்தியாகளாகவும் பொறியியலாளர்களாகவும் வர முடிந்திருக்கிறது.

1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர். சமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.கல்வியினாலும் தொழிலினாலும் சமூக ஏணியின் உச்சத்தில் ஏறியுள்ள சிறுபான்மைத் தமிழர்கள் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் இருந்தபோதிலும் சமூகத்திலுள்ள அநேகரின் பொருளாதார நிலை இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழேயே உள்ளது.அநேகமான சிறுபான்மைத் தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு தொழில் இல்லை.

மாறுபட்ட உரையாடல்: யாழ்ப்பாணத்தில் தொழில்,ஏழ்மை,காணி உரிமை என்பனவற்றில் சாதி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பி.ஜே. அன்ரனி: யாழ்ப்பாணக் கிராமப்புறங்களில் சிறப்புரிமை குறைந்த சமூகங்களிலிருந்து வந்த பெரும்பான்மையான தொழிலாளர்கள் வயல்களிலும் தோட்டங்களிலுமே வேலை செய்கிறார்கள்.இந்த வேலையாட்களில் சிலர் பெண்கள்.கல்லுடைக்கும் தொழிலைச் செய்பவர்களும் இதே சாதியைச் சோந்தவர்களே. யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.இந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.இந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொள்கிறார்கள்.காணி உரிமையாளர்கள் இந்த குத்தகை விவசாயிகள் தங்கள் காணிகளுக்கு உரிமை கோரிவிடுவார்களோ என அஞ்சுகிறார்கள்,

அதனால் அவர்கள் அந்த குத்தகை விவசாயிகளை அவர்கள் பயிர் செய்யும் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக உள்ளார்கள்.அவர்களில் சிலர் கோயிற் காணிகளில் பல வருடங்களாக குடியிருந்த போதும் அவர்களால் அந்தக் காணிக்கு உரிமையாளர்களாக முடியாது.வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறை போன்ற இடங்களிலுள்ள அநேகர் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்தபோதிலும் சொந்தக் காணிகள் இல்லாததால் வீடுகளைக் கட்ட முடியாதவர்களாக உள்ளார்கள்.அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும்  வீடற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தோன்றினாலும் அதற்கு உதவியாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு நிலங்களை வழங்குவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

மாறுபட்ட உரையாடல்: ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக போராடுவதில் வகித்த பங்கினை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?

பி.ஜே. அன்ரனி: ஈபிஆர்எல்எப் ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலைக்கு வேண்டிய முன்னேற்றகரமான பல திட்டங்களைக் கொண்டிருந்தது.இடதுசாரி கொள்கைகளுடைய சமூக மறுசீரமைப்புக்கு அவர்கள் ஆதரவாகவிருந்தார்கள்.சாதி ஒடுக்கத்தை இல்லாதொழிப்பதற்காக அவர்கள் கிராம மட்டத்திலிருந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.காரைநகர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.

மாறுபட்ட உரையாடல்: சிறுபான்மைத் தமிழர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பதிலும் அவர்களின் துயரங்களைப் பரிகரிப்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆற்றிய பங்கினை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள?

பி.ஜே. அன்ரனி: சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக எல்ரீரீஈ அவ்வளவு சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.இந்த விடயத்திற்கு பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை மாறாக தமிழ் சமூகம் சாதி ஒடுக்குமுறையற்ற சுதந்திரமானது என்கிற எண்ணத்தை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக ஈபிஆர்எல்எப் அல்லது கம்யுனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய அளவுக்கு இவர்களின் கடப்பாடு இருக்கவில்லை.சிறுபான்மை தமிழ் சமூகத்தை சேர்ந்த பாராளுமன்ற  அங்கத்தவர்களால் சாதிப் பாகுபாடு விடயத்தில் எல்ரீரீஈ யினரது அதிகார அரசியல் காரணமாகச் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை.

மாறுபட்ட உரையாடல்: சிறுபான்மைத் தமிழர் மகாசபை நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டது.பிரதான நீரோட்டத்திலுள்ள தமிழ் கட்சிகளின் பின்துணையில்லாமல் தனியாகப் போட்டியிட நீங்கள் ஏன் தீhமானித்தீர்கள்?

பி.ஜே. அன்ரனி: வட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான சிறுபான்மைத் தமிழர்களை.யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு பிரதிநிதித்துவங்கள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.கடந்த பொதுத் தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவை சிறுபான்மை தமிழ் சமூகத்திலிருந்து ஒரே ஒரு அபேட்சகரை மட்டுமே நிறுத்தியிருந்தது.சிலபேர் தெரிவாகியருந்த போதிலும் அவர்களின் சமூகத்துக்கு முக்கியமான எதனையும் அவாகளால் செய்ய முடியவில்லை ஏனென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய கட்சியினரிடம், சிறுபான்மைத் தமிழர்களின் வளர்ச்சிக்கான பங்களிப்பை செய்யக்கூடிய நிகழ்ச்சித் திட்டம் எதுவும் இருக்கவில்லை.அதற்கு மேலாக நாங்கள் ஊடகங்களில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவது பற்றிய எங்கள் எண்ணத்தை வெளியிட்டிருந்த போதிலும் ரிஎன்ஏ எங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கான அதிக ஆர்வத்தைக் காட்டவில்லை. ரிஎன்ஏ சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் ஆர்வக்குறைவாக இருந்ததினால் சுயேச்சைக் குழுவாக தேர்தலைச் சந்திக்க வேண்டிய ஒரே தெரிவை எடுக்க வேண்டிய நிலைக்கு அது எங்களைத் தள்ளிவிட்டது. ரிஎன்ஏ உண்மையிலேயே எங்கள் மக்களின் பிரச்சினையில் அக்கறை கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்கள் எங்களை அணுகியிருக்க வேண்டும்.

மாறுபட்ட உரையாடல்: சிறுபான்மைத் தமிழர்களின் எண்ணிக்கை வட பகுதி சனத் தொகையின் 40 விகிதம் என்று நீங்கள் சொன்ன போதிலும், சிறுபான்மைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் கட்சியால் ஒரு அங்கத்தவரைக்கூட பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியவில்லையே.ஏன் உங்கள் கட்சியால் கடந்த பொதுத்தேர்தலில் நன்கு சோபிக்க முடியவில்லை?

பி.ஜே. அன்ரனி: எங்கள் வேட்பாளர்களுக்கு தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளை ஆற்றுவதற்கு யாழ்ப்பாணத்தில் போதிய சுதந்திரம் கிடைக்கவில்லை.தேர்தல் எண்ணும் நிலையங்களில் ஏராளமான தவறான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக எங்களுக்குச் சொல்லப் பட்டது.எங்கள் கட்சிக்கு வழங்கப் பட்ட வாக்குகள் செல்லுபடியற்றவைகளாகக் கருதப்பட்டதாக நாங்கள் கேள்வியுற்றோம்.ஒரு அமைதியான முறையில் தேர்தல்கள் நடத்தப் படவில்லை.அது நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தோதல் அல்ல. இல்லையென்றால் கடந்த பொதுத்தேர்தலில் எங்கள் கட்சி திறமையான ஒரு செயற்;பாட்டைப் பதிவு செய்திருக்கும்.

மாறுபட்;ட உரையாடல்: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்ட போது சில தமிழ் தேசியவாதிகள் கூறினார்கள்,நீங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பின் பின்துணையோடு வடக்கிலுள்ள தமிழ் வாக்குகளை சாதி ரீதியாகப் பிரிப்பதற்காக போட்டியிடுகிறீர்கள் என்று

பி.ஜே. அன்ரனி: நாங்கள் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வேறு அரசியற் கட்சிகளிடமிருந்தோ எந்தவித ஆதரவையும் கோரவில்லை.தேர்தல் வேலைகளுக்காக நாங்கள் அரசாங்கததிடமிருந்து ஒரு சதத்தைக்கூடப் பெறவில்லை.வெளிநாட்டிலுள்ள  எங்கள் தோழர்கள் எங்களுக்கான பணத்தினை அனுப்பியிருந்தார்கள்.விடுதலைக்காகப் போராடும் தமிழர்களைச் சிதைப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. எங்கள் இளைய தலைமுறையினர் கூட தமிழ் சமூகத்தின் விடுதலைக்காகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்கு எதிராக மகா சபை ஒருபோதும் இருந்ததில்லை. மறுபக்கத்தில் சிறப்புரிமையுள்ள சாதியைச் சேர்ந்த சில அபேட்சகர்கள் பொதுத் தேர்தலின்போது வாக்குகளைத் திரட்டுவதற்கு தங்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினர்கள். அவர்கள் வெளிப்படையாக தங்களை அடையாளப் படுத்திய சாதியானது, சிறுபான்மைத் தமிழர்களான நாங்கள் எதிர்கொள்வதைப் போன்ற கடுமையான சாதி சம்பந்தமான இன்னல்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.எப்படியாயினும் நாங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அரசியல் நலன்களை பிரதிநிதிப் படுத்தி அவர்கள் படும் துன்பங்களுக்காக  குரலெழுப்பினோம்,ஆனால் தமிழ் சமூகத்திடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக எங்கள் மீத  அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மாறுபட்ட உரையாடல்: கொடுமைப் படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தமிழ் தேசிய இராணுவக் குழுக்களில் ஏன் இணைந்து கொண்டார்கள் என நினைக்கிறீர்கள்?

பி.ஜே. அன்ரனி: சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது  தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.இந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.சிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். சிறுபான்மைத் தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை  களைந்தெறியத் தவறி விட்டார்கள்.

மாறுபட்;ட உரையாடல்: சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான உங்கள் திட்டங்கள் மற்றும் இலட்சியங்கள் யாவை? எந்த வகையான அரசியல் நடைமுறை யாழ்ப்பாணத்திலுள்ள சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஏற்றவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

பி.ஜே. அன்ரனி: கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜிக் கட்சி என்பன கடந்த காலங்களில் சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவுகளை வழங்கி வந்தன, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் அவை இப்போது செயற்பாட்டிலில்லை. ரிஎன்ஏ போன்ற பிரதான அரசியல் நீரோட்டத்திலுள்ள கட்சிகள் நினைப்பது சாதி தொடர்பான விடயத்தை கையாள்வதற்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு அபேட்சகர்களை தேர்தலில் நிறுத்தினால் போதம் என்று.சாதி முறையினை வேரோடு களைவதற்கான பரந்துபட்ட பார்வை அவாகளிடம் இல்லை.எப்படியாயினும் தமிழ் அரசியற்கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவற்றுடன் பேச்சுக்களை நடத்தி தற்பொழுது சிறுபான்மைத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.இந்தக் கட்சிகளிடம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இன்னும் அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கும்படி நாங்கள் கோருவோம்.பாராளுமன்றத் தேர்தல்களில் யாழ்ப்பாணத்தில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று அல்லது நான்கு பிரதிநிதிகளை தருவதற்கு விருப்பமுடைய கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்.அரசாங்க நிறுவனங்களில் நியமனங்களிலும்,பதவி உயர்வுகளிலும் சாதிப் பாகுபாடு காட்டப் படுவதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.இந்தத் தெரிவுகள் நல் விளைவுகளை ஏற்படுத்தாவிட்டால் ,சாதி அடக்குமுறையை நிர்மூலமாக்குவதற்காக வன்முறையற்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பாரிய போராட்டங்களை ஆரம்பிப்போம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com