Contact us at: sooddram@gmail.com

 

சுயாட்சி உரிமையுடன் வாழவே இலங்கைத் தமிழ் மக்கள் விருப்பம் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் 95 சதவீதம் பேர் சுயாட்சி உரிமை பெற்று வேலைவாய்ப்புடன் அமைதியாக வாழவே விரும்புவதாக மண்டபம் முகாமில் தங்கியுள்ள மக்கள் கூறினர். அவர்களை சந்தித்த பிறகு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா.அண்ணாதுரை ஆகியோர் இதை தெரிவித் தனர். முகாமிற்குள் நேரடியாக குறைகளை கேட்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்த செயலையும் அவர்கள் கண்டித்தனர்.

வியாழனன்று மண்டபத் தில் உள்ள இலங்கைத் தமிழ் மக்கள் முகாமிற்கு சென்று விட்டு இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் ஏ.லாசர் எம்எல்ஏ கூறியதாவது:-

மண்டபம் முகாமில் உள்ள 40 பேர் உள்ளிட்டு 140க்கும் மேற்பட்ட அகதிகள் 25 பேர் செல்லக்கூடிய படகில் ஆஸ்தி ரேலியா செல்ல முயற்சித்த போது கேரள காவல்துறை யினரால் கைது செய்யப்பட் டனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, முகாமிற்கு வந்து கருத்தறிந்தும் நிலைமைகளை கண்டறிந்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

மண்டபம் அகதிகள் முகா மிற்கு வந்து குறைகளைக் கேட்க மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே பேசி தகவல் தெரிவித்தோம். ஆட்சியரின் அழைப்பின்பேரில் இது குறித்து மீண்டும் வியாழக் கிழமை பேசியபோது, அகதி கள் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் பேசி அனுமதி வாங்க வேண்டும் என ஆட்சி யர் தெரிவித்தார். சென்னையில் உள்ள ஆணையரிடம், ஆட்சி யரின் ஆலோசனைப்படி தொலைபேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்ட போதும் பேச இயலவில்லை. இந்நிலையில் முகாமிற்கு சென்ற எங்களை திடீரென தடுத்து நிறுத்தியது ஏற்புடை யதல்ல. கண்டனத்திற்குரியது.

இந்நிலையில் மண்டபம் முகாம் சென்று வெளியில் இருந்த இலங்கை தமிழ் மக்க ளின் கருத்தறிந்தோம். அவர் கள் முகாமில் இலவச அரிசி அனைவருக்கும் வழங்கப்படு கிறது. 16 கிலோ அரிசி 57 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. முகாமில் தற்போது 5 டாக்டர் மட்டுமே உள்ளனர். அல்ட்ரா என்ற தொண்டு நிறுவனம் சார் பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் தங்களுக்கு பயன்படுத்தப்பட வில்லை; மாறாக அதிகாரி களுக்கு பயன்படுவதாக அகதி கள் புகார் தெரிவித்தனர். வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன் இரவு நேரத்தில் திரும்பும்போது காவல்துறை கெடுபிடி அதிகமாக உள்ள தாக தெரிவித்தனர்.

மேலும் எல்டிடிஇ பிரச்ச னை இல்லாத நிலையில் பூர் வீகமான, சொந்த நாட்டிற்குச் சென்று வேலைவாய்ப்பு பெற்று வாழ விரும்புவதாக அகதிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் வன்னி பகுதியில் ரூ.1000 கோடி செலவில் மத்திய அரசு வீடுகட்ட வழங்கியதில் 850 வீடுகள் மட்டுமே கட்டப் பட்டுள்ளன. பல்லாயிரம் பேருக்கு வீடு இல்லை.

சமீபத்தில் கிளிநொச்சி பரந்தன் -குமரபுரம் பகுதியில் தமிழரின் வீட்டை அடகு வைத்துவிட்டு, திரும்பச் சென்று வீடு கேட்ட தமிழ் குடும்பத்தாரை சிங்கள காவல் துறை துணையோடு தாக்கி கொலை செய்ததாகவும், இலங் கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை சூழ்ச்சியுடன் பிரித் தாள நினைப்பதாக அகதிகள் தெரிவித்தனர்.

தனிஈழம்என்பது தமிழ கத்தில் அரசியல் காரணங் களுக்காக பேசப்படுவதாகவும், தற்போது எல்டிடிஇ போர் இல்லாத நிலையில் தனி ஈழம் என்ற பேச்சே எழவில்லை என்பதுடன் கல்வி, வேலை வாய்ப்பு பெற 95 சதவீத தமிழ் மக்கள், இங்கு இருப்பது போல் மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் கூடுதல் சுயாட்சி உரிமை பெற்று வாழ விரும்பு வதாகவும் கருத்து தெரிவித் துள்ளனர்.

32 ஆண்டுகளுக்கு முன் னரே இலங்கையில் தமிழ் மக்க ளுக்கு கூடுதல் சுயாட்சி அதி காரம் வேண்டும் என்ற சிபிஎம் நிலைபாடு இப்போது பொருத் தமாக இருக்கிறது என்பதை நினைவு கூர்கிறோம். அகதிகள் முகாமில் 2011க்கு முன்னரே வழங்கப்பட்ட கேஸ் சிலிண் டர் இணைப்பு நிறுத்தப்பட் டுள்ளதாக தெரிகிறது. விபத் தில் மரணமடைந்த நேசப் பெருமாள் என்ற நபருக்கு வெறும் 2,500 ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு ஏ.லாசர் தெரி வித்தார்.

இரா.அண்ணாதுரை எம் எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவாஜி, கே.கருணாகரன், என்.கலையரசன், தாலுகாச் செயலாளர் சி.ஆர்.செந்தில் வேல், எம்.ராஜ்குமார், கருப் பையா, செல்வராஜ், அந் தோணி பீட்டர், அசோக் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com