Contact us at: sooddram@gmail.com

 

இன ஒற்றுமையைக் குழப்பும் சதிமுயற்சிகளுக்கு எவரும் துணை போக வேண்டாம்

இனங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் சதிகளுக்கு மத்தியில் மக்கள் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் கோரியுள்ளனர். பல்வேறு சம்பவங்களினூடாக மோதல்களை உருவாக்கி அதனூடாக அரசாங்கத்தை தனிமைப்படுத்தவும் அதனூடாக அரசியல் லாபம் பெறவும் சிலர் முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஸ்கிரிய பீட சிரேஷ்ட தேரர் வண. மெதகம தம்மானந்த, குருணாகல் ஆயர் வண. சென் பிரான்ஸில், கண்டி பிரதான மெளலவி பஸ்லுர் ரஹ்மான் உட்பட பல மத தலைவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர். இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தின் மூலமே நாடு பலமடையும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இவ்வாறான நிலைகளில் ஊடகங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஐக்கிய தாதியர் சங்க தலைவரும்
நாரஹேன்பிட்டிய அபயாராம விஹாராதிபதியுமான
வண.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாடு துரித அபிவிருத்தியை நோக்கி செல்லும் இச்சந்தர்ப்பத்தில் சிலர் எரியும் நெருப்புக்குள் வைக்கோலை இடுவது போன்று செயற்படுகின்றார்கள். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில அடிப்படைவாதிகள் இனவாத, மத உணர்வுகளை தூண்டி நாட்டை குழப்ப முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். சகலரும். சமமாக வாழும் உரிமை இருக்கிறது என புத்த பெருமான் நவின்றுள்ளார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் வாழும் உரிமை இருக்கிறது.

நாடு மிகவும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் நாட்டை பற்றி சிந்தித்து தேவையில்லாத மோதல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அஷ் - ஷெய்க் எஸ். ஏ. அப்துல் ஹலீம் (ஷர்க்கி)
சிரேஷ்ட விரிவுரையாளர்
சாஹிரா கல்லூரி கொழும்பு

எமது தாய்நாடான இலங்கையில் பல இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்கின்றனர். எமது இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் நிலவுகின்ற நல்லுறவிலேயே இந்நாட்டின் மேம்பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது.

அந்த வகையில் இந்நாட்டில் வாழும் பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு மதங்களுக்கு மத்தியில் வரலாற்று நெடுகிலும் காலாகாலமாக நல்லிணக்கம் நிலவி வந்தபோதிலும் கடந்த சில வருட காலமாக இந்நிலைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.

இப்போது ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய பல இனத்தவர்களும் மதத் தலைவர்களும் வேண்டத் தகாத செயற்பாடுகளை கருத்தில் கொண்டு சமூக ஒற்றுமையை சீர்குலைத்து இனங்களுக்கிடையில் பிளவுகளை உண்டுபண்ணி வருகின்ற ஒரு கசப்பான நிகழ்வு நடந்தேறி மனித மனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலை தொடருமாக விருந்தால் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட பேராபத்துக்கள் எம்மை சூழ்ந்துகொள்வதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கான ஐயப்பாடு இல்லை.

இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவது இந்நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அனைவருக்குமுள்ள பெரும் சவாலாகும்.

இச்சவாலை சமாளித்து வெற்றிகொள்வதிலேயே நமது நாட்டின் சுபீட்சமும் வளமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதனை புரிந்து கொண்டவர்களாக அனைத்து இன மதத்தலைவர்களும் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது அவசியமாகும்.

சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார்
சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர்

நாட்டில் முழுமையான சமாதானம் நிலவி வருவதனை பொறுக்காத சில தீய சக்திகள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது.

இந்த சமாதானத்தை தக்க வைத்துக் கொள் வதும் மக்களை ஆசுவாசப் படுத்தி வழி நடத்துவதும் மத குருமார் மற்றும் அரசியல்வாதிகளின் பொறு ப்பாகும்.

மேலும் இலங்கை சர்வதேச நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இக்காலகட்டத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை குழப்பி யடித்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டு பண்ணும் வகையில் சிலர் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக் கின்றனர்.

இவ்வாறான முறுகல் நிலைகளை தவிர்த்து மக்களை சரியாக வழிநடத்த வேண்டியது மதகுருமாரினதும் அரசியல்வாதிகளினதும் கடமையாகும் .கடந்த காலங்களில் இனங்களு க்கிடையில் இடம்பெற்ற மோதல்களை மீட்டுப் பார்த்தால் அவை ஏதோவொரு அரசியல் கட்சியின் பின்னணியில் அரசியல் இலாபம் கருதி செய்யப் பட்டதொன்று என்பது எமக்கு புலப்படும். இவ்வாறான செயற்

பாடுகளுக்கு விலைபோகாது நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கொழும்பு பிரதான சங்கநாயக்கர்
அதிவணக்கத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜி தேரோ

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டை அமைதியின் மையான நிலைக்கு உட்படுத்துவதற்கு சில அடிப்படைவாதிகள் முயற்சி செய்கிறார்கள் என கொழும்பு நவ கோரளயே பிரதான சங்க நாயக்கர் மாதம்பாகம அஸ்ஸஜி தேரர் கூறி னார்.

வெளியாட்களின் தலையீடுகளினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான நேரத்தில் மத ஒற்றுமையையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

இந்தச் சம்பவம் யாரால் ஏற்பட்டது என்பது பற்றி சிந்திக்காமல் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பொறுமையாக முகம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செயற்படுவது அனைவரதும் கடமையாகும்.

உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல் பொறுமையாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com