Contact us at: sooddram@gmail.com

 

புலம் பெயர் தேசம் எங்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தியாகிகள் தினம்(பிரித்தானியா)

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் ஏற்பாட்டில் லண்டனில் நேற்று (21.06.2014) தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் சிறாப் தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின வைபவத்தில் தோழர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். கனவு கண்ட தோழர்களே என்ற தலைப்பில் தோழர் ஸ்ரான்லி தான் எழுதிய கவிதை ஒன்றை வாசித்தார். வெளிநாடுகளில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு மரணத்தைத் தழுவிக்கொண்ட தோழர்கள் தொடர்பாக தோழர் ரவி தயாரித்த ஒலி, ஒளி வடிவிலான விவரண சித்திரம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பத்திரிகையான கண்ணோட்டம் பத்திரிகையில் பிரசுரமான அபிமன்யு பதில்கள் என்ற கேள்வி பதில் பகுதி தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ள அபிமன்யு பதில்கள் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது. புத்தகம் பற்றிய அறிமுக உரையை அரசியல், சமூக ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான சிவலிங்கம் நிகழ்த்தினார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதிநிதி தயா, ரெலோ பிரதிநிதி சாம் சம்பந்தன் தியாகிகள் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதனையடுத்து 13வது திருத்தம் தொடர்பிலான கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு  “அபிமன்யு” சிவா அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் இராசநாயகம், லண்டன் ரி.பி.சி இயக்குனர் ராம்ராஜ்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதி, முன்னாள் யாழ் மாநாகர சபை உறுப்பினர் அரவிந்தன், அரசியல் ஆய்வாளர். சமூக செயற்பாட்டாளர் சிவலிங்கம், சமூக செயற்பாட்டாளர் ராகவன் ஆகியோர் இந்த கருத்தரங்கில் பங்கெடுத்து கருத்துக்களை தெரிவித்தனர்.

இறுதியாக தியாகிகள் தின நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கிய தோழர் சிறாப் தியாகிகள் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பங்களிப்ப நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன்  மறைந்த எமது தோழர்கள் எந்த இலட்சிய கனவுகளுடன் மறைந்தார்களோ அக்கனவுகளை நனவாக்க உறுதியுடன் செயற்ப்படுவோம் எனக்  கூறி தியாகிகள் தின நிகழ்வுகளை நிறைவு செய்தார். 

தோழர் ஸ்ரான்லியின் கவிதை:

கனவுகண்டதோழர்கள்.

கனவுகண்டதோழர்களின்
நினைவுநாள் இன்று.


சிட்டுக்குருவிகளாய்
பறந்துதிரியவேண்டிய
பதின் வயதிலும்,பக்குவப்பட்டவயதிலும்
விடுதலைவேள்வியில்
தம்மைஎரித்ததியாகச் சுடர்களை
மனிதநேயத்தின்
மொத்தஉருவம் மடிந்த
ஜூன் 19ல் நினைவுகூருகிறோம்.

அப்போதெல்லாம் யாரும்
சோசலிசக் கனவுகளோடு
ஈபிஆர் எல் எவ்வுக்குள்
நுழையவில்லை.


83க் கலவரம் தூண்டிய
மொழிவெறியும்,கொலைவெறியும்தான்
எல்லோரையும்போல்
எம் தோழர்களையும் இழுத்துவந்தது.
ஆகக்குறைந்தது
ஒருசிங்கள இராணுவத்தையாவது
சுட்டுவிட்டால் கடமைதீர்ந்தது
எனநினைத்துவந்தவர்களுக்கு,
 

எதிரி இராணுவமல்ல
அந்தஏழைச் சிங்களவனை
மொழிவெறிபோதையூட்டிஅனுப்பிய
அரசுதான்,என்றஅடிப்படைஉண்மையை
தெளியவைத்ததுஈபிஆர்எல்எவ்.
 

தமிழீழத்தைஈழமாக்கி
மொழிவெறியைஎம்மிடமிருந்து
முளையிலேயேகிள்ளிஎறிந்தது
ஈபிஆர்எல்எவ்.

கார்ல்மாக்ஸ்,லெனின்,
சேகுவேரா,பிடல்,கோசிமின் போன்ற
சுpறந்தபுரட்சியாளர்களை
அறிமுகப்படுத்தி
சோசலிசத்தையும்,கம்யூனிசத்தையும்
மனிதநேயத்தையும் கற்றுத் தந்தது
ஈபிஆர்எல்எவ்.

படிக்கிறகாலத்தில்
பாசறைக்குள் நுழைந்தவர்களை
உலகஅறிவில்
பட்டதாரியாக்கியதுஈபிஆர்எல்எவ்.

தோழர்களோடுதோழராய்
ஒரேபாசறையில் தங்கி
ஒரேஉணவைஉண்டு
ஒரேபாயில் படுத்து
சோசலிசத்தைசொல்லில் அல்ல
செயலில் காட்டியவர்
எங்கள் தோழர் பத்மநாபா.
 

கோடம்பாக்கத்தின் பெட்டிக்கடையில்
கடலைமிட்டாய்வாங்கிஉண்பதும்
கும்பகோணத்தின் வீதிகளில்
சைக்கிளில்சவாரிசெய்வதுமாய்
சாமானியரைப்போல்
வாழ்ந்தஒரு இயக்கத்தின் தலைவரை
இதற்குமுன் ஒருபோதும்
ஈழம் பாத்திருந்திருக்காது

முன்னர் தியாகிகளான
அத்தனைதோழர்களும்
தோழர் நாபாதலைமையில்
பாலும் தேனும் ஓடும்
ஒருசோசலிசஈழத்தைக்
கனவுகண்டபடியே
உயிரைவிட்டிருப்பார்கள்.

எங்கள் பகைவர்களல்ல
சகோதரர்களே
அந்தக் கனவுகளையெல்லாம்
குழி தோண்டிப் புதைத்துவிட்டு
தாமும் புதைந்துபோனார்கள்.

மன்னிக்கவேண்டும் தோழர்களே.
உங்களை  எங்கள்
நெஞ்சங்களில் சுமந்திருக்கிறோம்
ஆனால் உங்கள் கனவுகளை
நிறைவேற்றமுடியாத
கையறுநிலையினராய்!


எனினும
் ஓர் நாள்
காலம் உங்கள் கனவுகளை
கட்டாயம் நனவாக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com