|
||||
|
ஈழத் தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர
நடையணத்தின்
65வது நாளான
(21-03-2011, திங்கள்)
நேற்று காலை 06:00 மணியளவில்
புறப்பட்ட
நெடும்பயணம்
டெல்லி நோக்கி பயணித்தது.
எமது நடைபயண
வீரர்களின்
வெற்றியான
நடைபயணத்தினால்
அதிர்ந்து
போன இலங்கை
அரசாங்கம்
இந்தியாவிற்கு
விடுதலைப்
புலிகளுக்கு
ஆதரவான ஒரு கூட்டம்
டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு
வருகிறது,
அதை அனுமதிக்க
வேண்டாம்
என்று உத்தியோகபூர்வமாக
இந்திய அரசுக்கு அறிவித்திருந்தது. ஆனால், ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணியை
(ஈ.என்.டி.எல்.எப்.)
இந்தியாவில்
அனைவரும்
அறிவர். ஈழ
தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி கடந்த 22 வருடங்களாக
ஈழத் தமிழர்
விடுதலைக்காக
இந்தியாவின்
உதவியை எதிர்பார்த்துக்
காத்திருக்கும்
அமைப்பு என்பது இந்தியாவில்
அனைவரும்
அறிவர். டெல்லி காவல்துறையினர்
இது நகைப்புக்குரிய
விடயம் என்றும் தெரிவித்தனர்.
ஆதலால், எமது
நடைபயண வீரர்களுக்கு
இலங்கை அரசாங்கத்தால்
ஆபத்து ஏற்படுமோ என்று நினைத்து
டெல்லி காவல்துறையினர்
65வது நாள் புறப்பட்ட
இடத்திலிருந்து
முன்னும்
பின்னும்
வாகனத்திலும்
மற்றும் மோட்டார் சைக்கிளிலும்
நடைபயண வீரர்களுக்கு
பாதுகாப்புக்
கொடுத்து
வந்தனர். இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டதால்
ஒரு அவசர
மருத்துவ
ஊர்தியுடன்
டெல்லி காவல்துறையினர்
நடைபயண வீரர்களுக்குப்
பாதுகாப்பு
கொடுத்தனர்.
இதேவேளை நடைபயண வீரர்களை ஊக்குவிக்க,
இலண்டனில்
நடைபயணத்தை
ஆதரித்துக்
கூட்டம் நடத்தியவரும்
மற்றும் ரி.பி.சி. வானொலியின் பணிப்பாளருமான
திரு. வீ.
இராம்ராஜ் அவர்களும்,
ஈழத் தமிழர்
விடுதலைக்காக
அயராது உழைத்துக்
கொண்டிருக்கும்
பிரான்சு
நாட்டில்
புலம்பெயர்ந்து
வாழும் திருமதி. ஜென்னி அவர்களும்
மற்றும் திரு. கண்ணன் அவர்களும்
வந்து நடைபயண வீரர்களுடன்
இணைந்து, அவர்களோடு
நடந்து நடைபயண வீரர்களை ஊக்குவித்தனர்.
இந்த உற்சாகத்தில்
நடைபயண வீரர்கள் நேற்று 42 கிலோ மீற்றர்
தூரத்தைக்
கடந்து, பரிதாபாத்
நகரைக் கடந்து 5வது
கிலோ மீற்றர்
தூரத்தில்
'கோபால் கார்டன்" என்ற மண்டபத்தில்
இரவு முகாம்
அமைத்தனர்.
நடைபயண வீரர்களின்
கோரிக்கைகளை
தெரிந்தவுடன்
'கோபால் கார்டன்" நிர்வாகிகள்
நடைபயண வீரர்கள் தங்குவதற்கு
உடனே அனுமதி
கொடுத்தார்கள்.
அவர்களுக்கு ஈழத் தமிழர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர்
விடுதலைக்கான
நெடுந்தூர
நடைபயணத்தின்
66வது நாளான
(22-03-2011,செவ்வாய்)
இன்று காலை 06:00 மணியளவில்
தேசிய நெடுஞ்சாலை
- 2 இல் இருந்து
புறப்பட்டனர்.
வழி நெடுகிலும்
பொதுமக்கள்
'கோலி" பண்டிகை என்பதால் நடைபயண வீரர்களுக்கு
கலர் தன்னீர்
ஊற்றி, வாழ்த்துக்
கூறி நடைபயணம்
வெற்றிபெற
வாழ்த்துக்
கூறினர்.
நடைபயண வீரர்கள் கொடுத்த பிரசுரத்தைப்
படித்து பெண்களுக்கு
நடந்த கொடுமைகளைப்
பார்த்து
கடவுள் ராஜபக்சே என்ற நரகாசுரனை
அழிப்பார்
என்று நடைபயண வீரர்களுக்கு
ஆறுதல் கூறினர்.
அரியானா மாநிலத்தைச்
சேர்ந்த பொதுமக்கள்
இந்த விடயத்தை
20 வருடங்களுக்கு
முன்னால்
நீங்கள் எங்களுக்கு
தெரிவித்துவிருக்க
வேண்டும். காலதாமதம் என்றாலும்
நாங்கள் பெண்களுக்கு
நடந்த கொடுமைகளுக்கு
ஆதரவு கொடுப்போம்
என்று அரியானா மாநில பெண்கள்
தெரிவித்தனர்.
நடைபயணத்தின் 66வது நாளான
இன்று நடைபயண வீரர்கள் 20
கிலோ மீற்றர்
தூரம் நடந்து டெல்கி மாநகரை சென்றடைந்தனர்.
அனைத்து அரசியல் தலைவர்களின்
சந்திப்பு
23-0302011, புதன் கிழமை என்பதால்
நடைபயண வீரர்களுக்கு
இன்று மதியம் முதல் ஓய்வு
கொடுக்கப்பட்டது.
நடைபயண வீரர்கள்
இந்திய அரசியல் தலைவர்களை
சந்தித்துவிட்டு
மீண்டும்
சென்னை திரும்புவதற்காக,
டெல்லியில்
புலம்பெயர்ந்து
வாழும் ஈழத் தமிழர்
நெடுந்தீவைச்
சேர்ந்த உயர்திரு. மெத்தோடீயஸ்
குமாரசுவாமி
அவர்களின்
குடும்பத்தினர்
இரயில்வே
டிக்கேட்
எடுத்துக்
கொடுத்து
ஈழத் தமிழர்
விடுதலைக்காக
எந்த உதவியையும்
செய்வோம்
என்று தெரிவித்து
வாழ்த்துக்
கூறினர்.
நடைபயண வீரர்கள் நாளை 23-03-2011, புதன்கிழமை
இந்திய அரசியல் தலைவர்களைச்
சந்தித்துவிட்டு,
மாலை மற்றும்
அடுத்தநாள்
சென்னை திரும்புவார்கள்
என்று தெரிவித்துகொள்கிறோம்.
நன்றி!
இவ்வண்ணம்,
திரு.
மங்களராஜா
நடைபயண
தலைமைக்குழு
22-03-2011 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |