|
||||
|
பத்திரிகைச் செய்தி “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஈழ தேசிய ஜனநாயக
விடுதலை முன்னணியினராகிய
நாங்கள் கடந்த அறுபத்தேழு
(67) நாட்களாக
மேற்கொண்ட
நடைபயணம்
2500 கி.மீற்றர்
தூரத்தைக்
கடந்து இன்று டெல்கி
வந்தடைந்துள்ளது. இந்திய ஜனாதிபதி,
பிரதம மந்திரி, காங்கிரஸ்
கட்சியின்
தலைவர் திருமதி. சோனியாகாந்தி, எதிர்க்கட்சித்
தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ்,
கம்யூனிஸ்ட்
கட்சிகளின்
தலைவர்கள்
மற்றும் பிறநாட்டுத்
தூதராலயங்களுக்கு
எங்களது இனப் பிரச்சினை
தொடர்பாக
அறிக்கைகள்
கையளித்துள்ளோம்.
“இந்திய-இலங்கை”
ஒப்பந்தத்தினை
முழுமையாக
நிறைவேற்ற
வேண்டும்,
48க்குப்
பின்னர் தமிழர் பகுதிகளில்
அத்துமீறி
குடியமர்த்தப்பட்ட
சிங்களக்
குடியேற்றவாசிகளை
வெளியேற்ற
வேண்டும். என்ற இரு கோரிக்கைகளையும்
முன்வைத்து
நாங்கள் இந்த நடைபயணத்தை
சென்னையிலிருந்து
ஜனவரி 16ம் தேதி ஆரம்பித்தோம்.
தமிழ் இனப்
பிரச்சினைகள்
தொடர்பாக
ஏற்படுத்தப்பட்ட
“இந்திய-இலங்கை”
ஒப்பந்தத்தின்
நிர்வாக அம்சங்களை
சிறிலங்கா
அரசு தனக்குச்
சாதகமானவற்றை
மட்டும் எடுத்துக்
கொண்டு நடைமுறைப்படுத்தி
வருகிறது.
தமிழ் மக்களுக்குச்
சாதகமானவற்றை
நிராகரித்ததுடன்
கடந்த இருபது ஆண்டுகளுக்கும்
மேலாகத் தமிழ் மக்களை
ஏமாற்றி வருகிறது. அத்துடன்
பயங்கரவாதம்
என்று கூறி தமிழ்
மக்களைப்
படுகொலை செய்ததுடன்
இப்போது தமிழர் பகுதிகளில்
சிங்கள இனத்தவரைக்
குடியமர்த்தி
தமிழர்களை
இன அழிப்புச்
செய்யும்
நடவடிக்கைகளையும்
மேற்கொண்டு
வருகிறது
சிங்களப்
பேரினவாதம்.
இந்தியா எங்கள் இனத்தின் சார்பாக கையெழுத்திட்ட
நாடு, சிறிலங்கா
அரசும், விடுதலைப்
புலிகளும்
இணைந்து இந்தியா ஏற்படுத்திய
அமைதி ஒப்பந்தத்தை
முறியடித்தனர். அந்த ஒப்பந்தம்
காலாவதியாகிப்
போனதோ அல்லது ரத்துச் செய்யப்பட்டதோ
அல்ல.
எனவேதான் 1987ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை
முழுமையாக
நிறைவேற்றித்
தரும்படியும்,
இலங்கை சுதந்திரம்
அடைந்த பின்(1948ஆம் ஆண்டு)
சிங்கள அரசின் அதிகாரத்தைப்
பயன்படுத்தி
தமிழர் பகுதிகளில்
குடியமர்த்தப்பட்ட
மற்றும் குடியமர்த்தப்பட்டு
வரும் சிங்களக் குடியேற்றவாசிகளை
வெளியேற்ற
வேண்டும்
என்ற இரு
கோரிக்கைகளையும்
முன்வைத்துள்ளோம்.
இன்றைய நிலையில் இவ்விரு கோரிக்கைகளும்
நிறைவேற்றப்பட்டால்
எங்கள் இனம் அழிவிலிருந்து
ஓரளவுக்குப்
பாதுகாக்கப்படும்
என்பது எங்களது நம்பிக்கையாகும்.
இந்த நடைபயணத்தில்
130 அங்கத்தவர்கள்
கலந்து கொண்டார்கள். ஏழு மாநிலங்களைக்
கடந்து மேற்கொள்ளப்பட்ட
இந்த நெடும்பயணத்தில்
செல்வன்.
சுதர்சன் என்பவர்
விபத்து ஒன்றினால்
உயிரிழந்துள்ளார்,
இருவர் வாகன விபத்தில்
சிக்குண்டு
மருத்துவ
சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
பதினைந்து பேர்வரை
மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டனர்,
ஆறுபேர் வரை டைபோயிட்
நோயினால்
பாதிக்கப்பட்டார்கள்.
கடுமையான குளிர், கொடுமையான
வெய்யில்,
ராஜஸ்தானின்
பாலைவனப்
புழுதியையும்
தாக்குப்பிடித்து
தளராமல் முன்னேறினர். சம்பல் பள்ளத்தாக்கில்
குடிநீர்
கிடைக்காமல்
நாவறட்சியினால்
பெரும் சிரமத்தைச்
சந்தித்தார்கள்.
அத்துடன்
இந்த நடைபயணத்தில்
கடுமையான
பருவநிலை
மாற்றங்களையும்
தாக்குப்பிடித்து
எங்கள் இளைஞர்கள்
இந்தியாவின்
மீது நம்பிக்கை
வைத்து, மன உறுதியுடன்
தங்களது இலட்சிய நடைபயணத்தை
நிறைவு செய்துள்ளனர்.
இந்த நடைபயணத்துக்கு
ஆதரவு தெரிவித்து
பெண்களும்,
மாணவிகளும்
கலந்துகொண்டு,
நடந்து வந்தார்கள். ஆக்ராவிலிருந்து
டெல்லிவரை சுமார் இருநூறு
கிலோ மீற்றர்
தூரத்துக்கு
அவர்கள் நடந்து வந்தார்கள்.
பலருக்கு காலணிகள்
காயப்படுத்தியிருந்தாலும்
தொடர்ந்து
அவர்கள் மனவுறுதியுடன்
இறுதிவரை
நடந்து வந்தார்கள். இலங்கையில் சிங்கள அரசு செய்து வரும் அநீதியான செயல்கள் எவற்றையும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாத நிலை உள்ளது. தமிழர்களை இரகசியமாகப் படுகொலை செய்து வருகின்றனர்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில்
அரச மரங்கள்
காணப்படும்
இடங்களில்
எல்லாம் புத்த விகாரரைகள்
கட்டி வருகின்றனர். இலங்கை
முழுவதும்
ஓர் பௌத்த
நாடு என்று
காண்பிக்க
இதுபோன்ற
விகாரைகளை
தமிழ்மக்களின்
விருப்புக்கு
மாறாக அவர்களது பகுதிகளில்
கட்டி வருகின்றனர்
சிங்கள ஆட்சியாளர்கள்.
10,000
(பத்தாயிரம்)க்கும்
அதிகமான தமிழர்களை
சிறைகளில்
அடைத்து வைத்துள்ளனர்.
அவர்களது விபரங்கள்கூட
யாருக்கும்
தெரியாது.
ஈழத்தில் வாழும்
தமிழர்களால்
அப்படித்
தடுத்து வைக்கப்பட்டவர்களை
விடுவிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவேதான் இந்தியா
எங்களது இனப்பிரச்சினையில்
நேரடியாகத்
தலையிட வேண்டும் என்று கோருகிறோம்.
இந்த நடைபயணத்தின்
மூலம் இந்தியாவிலுள்ள
பிற மாநிலங்களின்
விழிப்புணர்வையும்
ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் கடந்து
வந்த ஏழு
மாநிலங்களிலும்
மக்களையும்
ஊடகங்களையும்
நேரடியாகவே
சந்தித்தோம்.
அவர்களது மொழியில்
பிரசுரங்களும்,
புத்தகங்களும்
வெளியிட்டு
வினியோகித்து
அவற்றினை
பத்திரிகைகளில்
பிரசுரிக்கவும்
செய்தோம்.
சிங்கள அரசினால் இலங்கையில்
நடத்தப்பட்ட
தமிழினப்
படுகொலைகளை
புகைப்படங்கள்
மூலமாகத்
தெரியப்படுத்தினோம். தங்களது வாழ்நாளில்
இப்படியான
படுகொலைப்
படங்களைப்
பார்த்தது
கிடையாது
என்று அம்மக்கள்
தெரிவித்தனர்.
பௌத்த பயங்கரவாதம்
எப்படிப்பட்டது
என்பதையும்
தாங்கள் தெரிந்துகொண்டதாகத்
தெரிவித்தனர்.
தமிழ் மக்கள், சிங்கள இனத்தவருடன்
ஒன்றுபட்டு
வாழ முடியாது
என்பதை தாங்களும்
உணருவதாகப்
பத்திரிகையாளர்களும்
பொதுமக்களும்
தெரிவித்தனர். இது எங்களது கோரிக்கைகளுக்குக்
கிடைத்த அங்கீகாரமாகும்.
எங்களது கோரிக்கைகள்
இரண்டும்
சாத்தியமானவைதான். இவற்றை நிறைவேற்றிக்
கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு
உண்டு என்று நாங்கள்
நம்புகிறோம்.
எனவேதான் நாங்கள்
இந்த நடைபயணத்தை
மேற்கொண்டு
இந்திய அரசையும் இந்திய மக்களையும்
நேரில் சந்தித்துள்ளோம்.
எங்கள் இனத்துக்கு
நியாயமான
தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்
கொடுக்க அனைவரும் ஆதரவு வழங்க
வேண்டும்
என்று ஈழத் தமிழர்கள்
சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் கடந்து
வந்த ஏழு
மாநிலங்களிலும்
எங்களுக்கு
ஆதரவும், ஒத்துழைப்பும்
வழங்கிய மக்களுக்கும்,
காவல்துறையினருக்கும்
மற்றும் அரசு அதிகாரிகளுக்கும்
நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
24-03-2011 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |