|
||||
|
அதிகாரங்களை
பகிர்ந்து கொள்ள த.தே.கூ முன்வர வேண்டும்! தமிழரசுக் கட்சியின் ஆணவப்போக்கையும் அதன் தான் தோன்றித்தனத்தையும் இனிமேலும் பொறுத்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்நது, ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. புத்தி ஜீவிகளும், தமிழ்த் தலைவர்களும், ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஒன்று சேர்வோம் ஒரு புதிய அணியை உருவாக்குவோம் பரவலாக்கலையும், ஜனநாயகத்தையும் இலங்கை அரசிடம் கோரி நிற்கும் நாம் நமக்கு கிடைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக வழிமுறைகளை மேற்கோள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அக்கட்சிகளின் தலைவர்களையோ, உறுப்பினர்களையோ கலந்து ஆலோசிக்காமல் தமிழரசுக் கட்சி மட்டும் தனது உறுப்பினர்களை அமைச்சர்களாக தெரிவு செய்வதென்பது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுவது போன்றதொன்றாகும். இதே போன்று தான் பல விடுதலை அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டம், பின்னர் தமிழரசுக் கட்சி இப்போது நடக்கின்ற ஆணவப் போக்கைப் போன்று, விடுதலைப் புலிகளாலும் மேற்கோள்ளப்பட்டு தாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று கூறி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களை அழித்து விட்டு கடைசியில் தமிழ் மக்களை முள்ளிவாயக்காலில் பழிகொடுத்ததுதான் அதன் விளைவாக அமைந்தது. இது அவர்களின் ஆணவப்போக்கு. ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதே போன்று தமிழரசுக் கட்சியும், அதன் தலைவர்களும் இவ்வளவு அனர்த்தங்களையும், உயிர் இழப்புகளையும் தமிழ் மக்கள் அனுபவித்து, வேதனையின் விளிம்பில் துவண்டு கொண்டிருக்கின்ற நேரத்திலும் இவ்வாறான போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றார்கள் . ஏனைய கட்சிகளின் உறுப்பினர்ளை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு தாங்கள்தான் பலமான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி உலகிற்கு ஜனநாயகம் என்ற போலி வேடத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை அரசு மீது சர்வதேச விசாரனை வேண்டும் என்று ஒரு சாராரும் வேண்டாம் என்று ஒரு சாரரரும் அறிக்கை விட்டுக் கொண்டு தமிழ் மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி குளிர்காய நினைக்கின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். தங்களின் பதவி சுகத்திற்காக தமிழ் மக்களை பலிக்கடாய் ஆக்குகின்றார்கள். தொடந்து இந்த நிலை நீடித்தால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே தமிழரசுக் கட்சியின் ஆணவப்போக்கையும் அதன் தான் தோன்றித்தனத்தையும் இனிமேலும் பொறுத்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்நது, ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. புத்தி ஜீவிகளும், தமிழ்த் தலைவர்களும், ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஒன்று சேர்வோம் ஒரு புதிய அணியை உருவாக்குவோம் என்றார். வீ.ஆனந்தசங்கரி. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |