Contact us at: sooddram@gmail.com

 

சுஷ்மாவுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இக்கடிதம் தமிழர் விடுதலைகக் கூட்டணியின் செயலாளர் நாயகத்திடமிருந்து வருகிறது. இத்துடன் வரும் பத்திரங்கள் தாங்கள் 2013ஆம் ஆண்டு சித்திரை மாதம் 9ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் சர்வகட்சித் தூதுக் குழுவுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் தலைவியாக தலைமை தாங்கி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து கையளித்த பத்திரங்கள், மகஜர்கள் ஆகியவற்றின் உண்மைப் பிரதிகளாகும்.

அச்சமயம் பல ஸ்தாபனங்களும் தங்களை சந்திக்க கூடியிருந்தமையால் அவை பற்றி விளக்கமளிக்க போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அன்றிருந்த நாட்டு நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இல்லாமையாலும் ஆட்சிபீடத்தில் எமக்கு சாதகமான அரசு ஆட்சிபுரிவதாலும் இந்தப் பத்திரங்களைப் படித்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக முழுவிபரங்களையும் படித்து அறிய மிகப்பொருத்தமான நேரம் இதுதான் என்பதை உணர்கின்றோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ விஜயத்துக்கு சில நாட்களுக்கு முன்பே தாங்கள் வருகை தந்துள்ளமையால் இலங்கையின் இனப்பிரச்சினை சம்பந்தமாக சகல விபரங்களையும் பற்றி அறிய போதிய நேரம் உள்ளமையால் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக மிகத்தெளிவான ஒரு விளக்கத்தை பிரதம அமைச்சருக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புண்டு.

அரசமாற்றம், மக்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குறிப்பாக நரேந்திர மோடியும், ஏனைய இந்திய நாட்டின் அதிகாரிகளும் காட்டும் ஆர்வம் அத்தனையும் இணைந்து இனப்பிரச்சினை தீர்வை அடைய அண்மித்துவிட்டோம் என்ற வலுவான செய்தியைத் தருகிறது.

தற்போதைய அரசு பதவியில் வந்து இரண்டே மாதங்கள் ஆகின்றது. பல்வேறு கொள்கைகள் முரண்பாடுகள், கடும் போக்காளர்களைக் கொண்ட ஏறக்குறைய 38 அரசியற்கட்சிகள் இணைந்து எல்லோர்க்கும் விரோதமான ஒருவரைப் பதவியை விட்டு இறக்கி, ஜனநாயகத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு இணைந்து உருவாக்கப்பட்டதே.

நடக்க இருக்கின்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமக்கு புகழ் சேகரிக்கப் பார்க்கிறார்கள். ஆகவே நாட்டை தாமே காப்பாற்றினோம் என்பவர்கள் பற்றி எச்சரிக்க விரும்புகிறேன்.

பிரதம மந்திரியை ஓர் குழு புதுடில்லியில் சந்தித்தபோது அக்குழுவில் வேறு தமிழ் குழுக்கள் சேராது உள்ளன என கேட்ட கேள்விக்கு, அவர்கள் கூறிய பதில் 'இரண்டொரு தமிழ்க் குழுக்கள் அரசுடன் சேர்ந்து செயற்படுகிறார்கள்! அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என தம்மால் அறிய முடியவில்லை' என்று. இது உண்மையல்ல.

பிரதம மந்திரி இவர்களை அரசுடன் பேச்சுவார்ததையில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார். இந்தக்குழு இப்போதும் விடுதலைப்புலிகளின் பினாமிகளாகச் செயற்படுவதாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கியும் விட்டமையால், தகுந்த பதில் கொடுக்க முடியாமல் மழுப்பிவிட்டனர். மேலும் மக்கள் தமக்கு நாடாளுமன்ற தேர்தல் மூலமும், உள்ளூராட்சித் தேர்தல்கள்; மூலமும் ஆணை தந்துள்ளனர் என்ற கூற்றை உண்மையென ஏற்கமுடியாது.

ஏனெனில் கடைசியாக நடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ் மாவட்டத்தில் ஏழரை லட்சம் வாக்குகளில் விழுந்த வாக்குகள் 63,000 வாக்குகள் மட்டுமே! நாடளாவிய ரீதியில் 10 சதவீதமான வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் வாக்குகளை வைத்து ஆணையை பெற்றுவிட்டதாக கூற முடியாது.

என்னால் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களின் பிரதிகளை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். தங்களுக்கு வேண்டிய சகல விபரங்களையும் இவற்றில் பெற்றுக்கொள்ளலாம். புதுடில்லியில் பிரதமரையும் தங்களையும் சந்தித்த தூதுக் குழுவினர் விடுதலைப் புலிகளின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிக்க முயன்றனர்.

மிக்க திறமையுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை அழித்துவிட்டு தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறுகின்றனர். உண்மைநிலை யாதெனில் இத்தனை அனர்த்தங்கள் மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தப்பிப் பிழைத்து இயங்குகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com