|
||||
|
இழந்து போன
எமது மக்களுக்கு
நாம் செலுத்தும்
மரியாதை என்பது வாழ்கின்ற
மக்களுக்கான
அரசியலுரிமையை
வென்றெடுப்பதேயாகும்
கடந்த கால
கொடிய யுத்தத்தின்
போது உயிரிழந்து
போன எமது
மக்களுக்கு
நாம் செலுத்தும்
மரியாதை என்பது இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்
எமது மக்களுக்கான
அரசியலுரிமைகளை
வென்றெடுப்பதேயாகும்
என்றும், நடந்து முடிந்த அழிவுகளில்
இருந்து எமது மக்கள்
நிமிர்ந்தெழ
இதுவே அவசியத்தேவை
என்றும் ஈழ மக்கள்
ஜனநாயகக்
கட்சியின்
செயலாளர்
நாயகமும்
பாரம்பரிய
கைத்தொழில்கள்
மற்றும் சிறு தொழில்
முயற்சி அபிவிருத்தி
அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்கள் அழிவுகளையும்,
அவலங்களையும்
சந்தித்திருப்பது
முள்ளிவாய்க்காலில்
மட்டுமல்ல,
அதற்கு முன்னராகவே
நீண்ட காலமாக எமது மக்கள்
அழிவுகளையும்
அவலங்களையும்,
இடம்பெய ர்வுகளையும்
சந்தித்து
வந்திருக்கிறா
ர்கள். ஆரம்ப கால
ஆட்சியாளர்களால்
திட்டமிட்டு
உருவாக்கப்பட்ட
இனக்கலவரங்களும்,
தனி மனித
உயிர்வாழ்வுக்கு
எதிரான அச்சுறுத்
தல்களும்,
தமிழ் பேசும் மக்களுக்கான
அரசியலுரிமைகள்
மறுக்கப்பட்ட
ஒரு சூழலும்
ஒரு உரிமைப்
போராட்டத்திற்கான
தேவையை அன்று எமக்கு
வலியுறுத்தியிருந்தது.
அந்த உரிமைப் போராட்டத்தில்
நாமும் அன்று முன்னணிப்
பாத்திர மேற்று பங்கெடுத்திருந்தவர்கள். இன்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
இருப்பவர்களில்
பலரும் அன்று உணர்ச்சி
பொங்க பேசி எமது
இளைஞர், யுவதிகளை வீதிக்கு இழுத்தார்கள்.
அவர்களது நடைமுறைக்கு
சாத்தி யமற்ற வெறும்
சுயலாப உணர்ச்சிப்
பேச்சுக்களை
நம்பி வீதிக்கு வந்த எமது
மக்கள் நடுத்தெருவில்
நிற்க, தனிநாடு கேட்ட அவர்கள்
தமது குடும்பங்க
ளோடு தப்பியோடிச்
சென்று தமிழ் நாட்டில்
தனி வீடுகள்
பெற்று சொகுசாக வாழ்ந்தார்கள்.
அப்பாவி மக்களை
இரத்தம் சிந்த வருமாறு
போலி முழக்கமிட்டு
அழை த்தவர்கள்
உரிமைப்போராட்டத்தில்
வியர்வை கூட சிந்தாமல்,
கட்டிய வேட்டி கூட பிசங்காமல்
ஓடித்தப்பி
விட்டனர்.
ஆனாலும், நாம் எமது மக்களின்
நீடித்த பாதுகாப்புக்காகவும்,
நிரந்தர அரசியலுரிமைக்காகவும்
நீதியானதொரு
உரிமைப் போராட் டத்தை எமது
மண்ணில் நின்று நடத்தியிருந்தோம்.
ஆனாலும், ஒரு
தாய் பெற்ற
பிள் ளைகள்
போல் ஒரே
இலட்சியத்
திற்காக உரிமைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்த
எம்மத்தியில்
தோன்றிய தனித்தலைமை
வெறி என்பது
எமது மண்ணை
சகோதரப் படுகொலை களமாக மாற்றியிருந்ததால்
எமது நீதி
யான உரிமைப்
போராட்டம்
திசை மாறி
அழிவு யுத்தமாக மாறிச்சென்றது.
அழிவுகளும், அவலங்களும்
மட் டுமே
எமது மக்களுக்கு
மிஞ்சியி
ருந்தன. உட்பகை வேரறுக்கும்
என்பது போல் எமது
ஒற்றுமையீனம்
என்பது எமது மக்களை
கருவறுக்கத்
தொடங்கியது.
அந்த சூழலிலேயே
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டது. எமது மக்களை அழிவுகளில்
இருந்து மீட்கவும்,
எமது அரசியலுரிமைகளை
நோக்கி நாம் செல்வதற்கும்
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
அரியதொரு
வாய்ப்பாகவே
இருந்தது.
ஆனாலும் அதை அன்று
ஒரு பகுதியினர்
ஏற்கவும்
இல்லை, ஏற்றுக்கொண்ட
இன்னொரு பகுதியினர்
சரிவரப் பயன்படுத்தவும்
இல்லை.
அவ்வாறு இலங்கை
- இந்திய ஒப்பந்தத்தை
ஏற்றுக்கொண்டும்,
சரிவரப் பயன்படுத்தியும்
இருந்திருந்தால்
அதற்குப்
பின்னரான
எமது மக்களின்
அழிவுகள்
தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
அன்று முதல் இறுதியில்
நடந்த முள்ளிவாய்க்கால்
வரையிலான
அழிவுகளும்
இங்கு நடந்திருக்காது.
அதன் தொடர்ச்சியாக
முன்னாள்
ஜனாதிபதிகளான
பிரேமதாச
புலிகள் பேச்சுவார்த்தை,
சந்திரிகா
குமாரதுங்க,
புலிகள் பேச்சுவார்த்தை,
மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம
சிங்க, புலிகள் பேச்சுவார்த்தை,
இறுதியாக
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ - புலிகள் பேச்சுவார்த்தை
எனத் தொடர்ச்சியாக
பல்வேறு சந்தர்ப்பங்களும்
எமக்கு கனிந்து வந்திருந்தன.
ஆனாலும் யுத்தத்தின்
மூலமே எதையும் பெறுவோம் என்ற தீர்க்க
தரிசனமற்ற
எண்ணங்களும்,
கண்ணை மூடிக்கொண்டு
அதற்கு ஆதரவளித்த
சுயலாப அரசியல் தலைமைகளின்
பொறுப்பற்ற
செயலும் எமது மக்களை
முள்ளிவாய்க்கால்
வரை தள்ளிச்
சென்று அழிவுகளை மட்டுமே இங்கு பெற்றுத்
தந்திருக்கிறது.
இலங்கை - இந்திய
ஒப்பந்த நடைமுறைகளில்
ஈ.பி.டி.பி.யினராகிய
நாம் பங்கெடுக்கும்
உரிமை என்பது சக தமிழ்
தலைமைகளால்
மறுக் கப்பட்டிருந்தாலும்
அதை நாம்
கொள்கை ரீதியாக மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள்.
நாம் உட்பட சகல
விடுதலை அமைப்புகளினதும்
இரத்தம் சிந்திய அர்ப்பணங்களால்
உருவாக்கப்பட்டதே
இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும். எமது உரிமைப் போராட்டத்திற்கு
இதுவரை கிடைத்த வெற்றி என்பது அது ஒன்று
மட்டுமே.
ஆகவேதான் ஆரம்பத்தில்
இருந்தே நாம் அழிவு
யுத்தம் வேண்டாம் என்றும், அமைதிப்பேச்சின்
மூலமே எமது மக்களின்
அரசியலுரிமைகளை
வென்றெடுக்க
முடியும்
என்றும் நாம் வலியுறுத்தி
அதற்காக நடை முறையில்
உழைத்தும்
வந்திருக்கின்
றோம்.
இலங்கை - இந்திய
ஒப்பந்தத்திற்கு
முந்திய அரசுகளின்
குணாம்சம்
வேறு, அதற்கு
பிந்திய அரசுகளின்
குணாம்சம்
வேறு, இலங்கை
- இந்திய ஒப்பந்தத்திற்கு
பிந்திய இலங்கை அரசுகள் அரசியல் தீர்வுக்கு
உடன்பட்டு
வந்திருந்த
போதும் மாறி வரும்
உலகத்தின்
போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு சுயலாப தமிழ் அரசியல்
தலைமைகள்
உடன்பட்டு
வந்திருக்கவில்லை.
இவ்வாறு நாம்
கூறுவது சுயலாப தமிழ்த் தலைமைகளின்
பார்வையில்
பொய்யானதாக
இருந்திருந்தால்
அவர்கள் அரசியல் தீர்வுக்கு
தயாராக இருப்பது என்பது உண்மையானதாக
இருந்திருந்தால்
அதற்கான தமது மனவிருப்பங்களை
நடைமுறையில்
வெளிப்படுத்தி
நாம் போராடுவதும்
வாதாடுவதும்
நீதியானதொரு
அரசியலுரிமைக்காகவே
என்பதை சர்வதேச சமூகத்தின்
முன்பாக வெளிப்படுத்தியிருக்க
வேண்டும்.
அவ்வாறு இவர்கள் செய்ய விரும்பாத
காரணத்தினாலுமே
எமது உரிமைப்
போராட்டம்
என்பது பயங்கரவாத
செயற்பாடுகளாக
உலக அரங்கில்
அடையாளப்படுத்தப்பட்டன.
இதுவே எமது
மக்கள் அழியும் போதும் அவலப்படும்
போதும் சர்வதேச சமூகம் அதை தட்டிக்
கேட்க விருப்பமின்றி
கை கட்டி
நின்றது என்று சுயலாப
அரசியல் தலைமைகள் நீலிக்கண்ணீர்
வடிப்பதற்கு
காரணமான விடயமாகும்.
சுயலாப தமிழ்
அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்று
தவறுகளால்
எமது மக்கள்
அழிந்தும்,
அவலப்பட்டும்,
இடம்பெயர்ந்தும்,
நிலமிழந்தும்,
சொத்திழந்தும்
அலைந்து திரிய வேண்டிய
துயரங்கள்
இங்கு நடந்தன.
ஆகவே, கடந்து
போன வரலாற்றுத்
தவறுகளை ஏற்றுக்கொண்டு
இனி யொரு
அழிவுக்குள்
எமது மக்களை
தள்ளி விடாமல் புதுவிதி படைப்பதற்கு
தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறைச்
சாத்தியமான
வழி முறையில்
உழைப்பதற்கு
முன்வர வேண்டும்.
வெறும் சுயலாபங்களுக்கான
அர்த்தமற்ற
உணர்ச்சிப்
பேச்சுக்கள்
எதையும் எமக்கு பெற்றுத்தராது. மாறாக
அழிவுகளை
மட்டுமே பெற்றுத்தரும்
என்பது அனுபவங்கள்
எமக்கு கற்றுத்தந்த
பாடங்களாகும்.
ஆகவே, சாணக்கிய தந்திரங்களும்,
மதிநுட்ப
சிந்தனைகளும்
எமது மக்
களை வழி
நடத்திச்
செல்ல வேண்டும். எதுவாக இருப்பினும்,
இதுவரைகால
அழிவு யுத்தத்தின்
போது உயிரிழந்து
போன அனைத்து
மக்களுக்கும்
நாம் மரியாதை
செலுத்துகின்றோம்.
இவர்களது இழப்புகளால்
துயருற்றிருக்கும்
அனைத்து உறவு களுடனும்
எமது துயரங்களை
பகிர்ந்து
கொள்கின்றோம்.
அந்த மரியாதைகளுக்காகவே
சமா தானம்,
வளமான தேசம், அரசிய
லுரிமை சுதந்திரம்
குறித்து
உயிரிழந்த
வர்களது கனவுகளை நிறைவேற்ற
வேண்டியவர்களாக
நாம் இருக்கின்
றோம்.
இவ்வாறு தெரிவித்திருக்கும்
ஈழமக்கள்
ஜனநாயகக்
கட்சியின்
செயலாளர்
நாயகமும்
அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் நட ந்து
முடிந்த அழிவுகளையும்
அவலங் களையும் வைத்து அர்த்தமற்ற
வகை யில்
பகைமையுணர்வை
வளர்க்காமல்
அப்பாவி மக்களின் இழப்புகளை
வைத்து அரசியல் சுயலாபம் தோடாமல் எமது மக்களை
நிம்மதியாகவும்
சுதந்திர
பிரஜைகளாகவும்
எமது மண்ணில்
வாழவைப்பதை
பிரதான நோக்காகக்
கொண்டு அனைத்து தமிழ்த் தலைமைகளும்
ஆக்கபூர்வமாக
உழைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு
விடுத்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |