தானும் செய்யாது செய்பவரையும்
செய்ய விடாது...
- வடமாகாண
எதிர்கட்சி முதல்வர்
வடமாகாண
சபை உருவாக்கப்பட்டு
சரியாக ஒரு வருடமாகியுள்ளது. இந்த ஒரு வருட பதவிக்காலப்
பகுதியினுள்
வடபகுதி மக்களுக்கு
அம்மாகாண
சபை செய்த
சேவை அல்லது
சாதனை என்ன?
உண்மையைச்
சொல்வதானால்
உருப்படியாக
எதனையுமே
செய்யவில்லை. இதில் சாதனை
என்று கூற என்ன
இருக்கிறது.
மத்திய அரசாங்கத்தினால்
ஒதுக்கப்பட்ட
நிதியிலும்
கடந்த 10 மாதகாலத்தினுள்
25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
இந்த வருடத்தில்
வட மாகாண
சபைக்கு மீண்டுவரும்
செலவினமாக
13,650 மில்லியனும்
மூலதன செலவாக 1876 மில்லியனும்
ஒதுக்கப்பட்டது.
இவற்றில் 25 வீதமே
செலவிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்தே அவர்களது
சாதனையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இதற்கு
என்ன காரணம்? அவர்களிடம் நிர்வாகத்
திறமை இல்லையா அல்லது எதுவுமே செய்யக் கூடாது என்ற மன
நிலையில்
உள்ளார்களா?
நிர்வாகத்
திறமை இல்லை என்பது
உண்மையே. எனினும் அவ்விடயம்
ஒருபுறமிருக்க
எதனையுமே
வேண்டுமென்றே
செய்யாது
அரசாங்கத்தின்
மீது பழியைப்
போடுவதே இவர்களது பிரதான நோக்கமாகும்.
கடந்த ஒரு வருட காலத்தில்
சபையில் மாகாண சபையுடன்
தொடர்பற்ற
சுமார் 150 தீர்மானங்கள்
தேவையற்ற
முறையில்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமக்கு ஒதுக்கும்
பணத்தை பயன்படுத்தாமல்
காலத்தைக்
கடத்தி அரசாங்கத்தை
குற்றஞ்சாட்டி
வருவதே இவர்களது செயற்பாடாக
இருக்கிறது.
இது, தானும்
செய்யாது
செய்யும்
அரசாங்கத்தையும்
செய்யவிடாது
தடுக்கும்
ஒரு செயலாகவே
நான் கருதுகின்றேன்.
இதைத்தான்
கிளிநொச்சியில்
நடைபெற்ற
ஒரு கூட்டத்தில்
வைத்து ஜனாதிபதி வைக்கல் பட்டடை எதுவோ போல
என்று கூறினாரோ?
இருக்கும். ஜனாதிபதியின் அக்கூற்றில்
தவறு எதுவும்
இருப்பதாகத்
தெரியவில்லை.
அவர் சரியாகத்தான்
கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே அதுதான்
வடக்கில்
நடக்கிறது.
எப்படிக் கூறினாலும்
அவர்கள் திருந்துவதாக
இல்லை.
நாட்டிலுள்ள
ஏனைய 7 மாகாண
சபைகள் கடந்த 15 வருடங்களாக
இயங்கி வருகின்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கும்
அரசாங்கம்
பெருமளவு
நிதியை ஒதுக்கி வருவதாகக்
கூறப்படுகிறது. இது
உண்மையா?
நூற்றுக்கு
நூறு வீதம்
உண்மை. ஏனைய மாகாண மக்கள் சனத்தொகையுடன்
ஒப்பிடுகையில்
வட மாகாண
சபைக்கே கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசாங்கமும்
வட மாகாண
சபைக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது.
வடக்கில் 18 மாணவர்களுக்கு
ஓர் ஆசிரியர்
என்ற அடிப்படையில்
ஆசிரிய விகிதாசாரம்
காணப்படுகிறது.
ஏனைய மாகாணங்களில்
19.1 என்ற அடிப்படையே
காணப்படுகிறது.
வட மாகாண
சபைக்கு இம்முறை வரவு செலவுத்
திட்டத்தினூடாக
நிதி ஒதுக்கீடு
செய்வது குறித்து ஆராய திறைசேரி
செயலாளர்
வடக்கிற்கு
சென்ற போது முதலமைச்சரும்
ஏனைய அமைச்சர்களும்
அந்த கூட்டத்தை
பகிஷ்கரித்தனர்.
ஆனால், அரசாங்கம்
வடக்கிற்கு
எதுவும் வழங்குவதில்லை
என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுதான் உண்மையில்
அங்கு நடக்கிறது.
ஆனால்
இந்த உண்மைகள்
வெளியுலகிற்கு
மூடி மறைக்கப்பட்டு
அரசாங்கம்
வடக்கைப்
புறக்கணிப்பதாகவே
பிரசாரம்
செய்யப்படுகின்றது. இதனை எவ்வாறு
முறியடிப்பது?
கடந்த
ஒரு வருடத்தில்
ஒதுக்கிய
பணத்தை கூட முழுமையாக
பயன்படுத்தாமல்
தமது இயலாமையை
மறைப்பதற்காக
அரசின் மீது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
வீண் பழிசுமத்துகிறது. ஆனால் எந்தப்
பிரச்சினையுமின்றி
அரசாங்க செலவில் புத்தம் புதுவாகனங்களை
மட்டும் முதலமைச்சரும்,
அமைச்சர்களும்
வாங்கியுள்ளனர்.
இதனை மட்டும்
கேட்டு வாங்கத் தெரிந்த அவர்களுக்கு
மக்கள் நல விடயங்கள்
குறித்து
வாய் திறக்கப்
பஞ்சியாக
உள்ளது. மக்களுக்கும், வெளியுலகிற்கும்
இப்போது தமிழ்க் கூட்டமைப்பின்
உண்மையான
முகம் தெரிய வருகிறது.
இன்னும் சிறிது
காலத்தில்
மக்கள் அவர்களைப்
பற்றி முழுமையாக
அறிந்து விடுவர். உண்மையில் அரசாங்கம்தான்
நாட்டின்
ஏனைய பகுதி
மக்களைப்
போன்று வடபகுதி மக்களுக்கும்
பாகுபாடின்றித்
தனது சேவையைச்
செய்து வருகிறது.
வடமாகாண
சபை முதல்வரை
பகிரங்க விவாதத்திற்கு
வருமாறு அழைப்பு விடுத்துள்Zர்கள். அதற்கான காரணம்
என்ன? அவர் வருவாரா?
ஆம். இந்த ஒரு
வருட பதவிக்காலத்தில்,
தமிழ்க் கூட்டமைப்பு
வட மாகாண
சபையில் என்ன செய்தது
என்பது குறித்து விவாதிக்க
வருமாறு முதலமைச்சர்
விக்னேஸ்வரனுக்கு
பகிரங்கமாக
அழைப்பு விடுத்துள்ளேன்.
இதற்கு முன்னரும்
இவ்வாறு முதலமைச்சருக்கும்
மாகாண அமைச்சர்களுக்கு
அழைப்பு விடுத்தாலும்
யாரும் அதற்கு தயாராக இல்லை. அதுபோன்று இதனையும்
தட்டிக் கழிப்பார்கள்
என்றே நினைக்கிறேன்.
உண்மையானவர்களாக இருந்தால்
என்னுடன்
நேரடி விவாதத்திற்கு
வர வேண்டும்.
வடக்கில்
ஜனாதிபதி
மற்றும் முக்கிய அமைச்சர்கள்
தலைமையில்
நடைபெறும்
முக்கிய கூட்டங்களை
தமிழ்க் கூட்டமைப்பு
பகிஷ்கரிப்பதற்கான
காரணம் என்ன?
உண்மைகளை
மறைத்து பொய்யாக அறிக்கை விடும் இவர்களால்
எப்படி ஜனாதிபதியுடன்
அல்லது அமைச்சர்களுடன்
பொது மேடைகளில்
ஏற முடியும். ஏதாவது காரணம்
கூறி பங்குபற்றாமல்
தவிர்க்கும்
இவர்கள் மக்களை உணர்ச்சி பூர்வமாக பேசி ஏமாற்றி
வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
20 ஆயிரம் காணி உறுதிகள்
வழங்கப்பட்ட
நல்ல விடயத்தைக்கூட
இவர்கள் விமர்சிக்கிறார்கள். அதனை எதிர்த்து
நீதிமன்றம்
செல்லக்கூடத்
தயாராகியுள்ளார்கள்
என்றால் அவர்களது சேவை மனப்பான்மையைப்
பாருங்கள்.
இத்தகைய கீழ்த்தரமான
ஊடக விளம்பரத்திற்காக
தமிழ்க் கூட்டமைப்பு
வட மாகாண
சபையை பயன்படுத்துகின்றது.
வடமாகாண
சபையில் நிறைவேற்றப்படும்
தீர்மானங்கள்
ஆக்கபூர்வமாக
உள்ளனவா? அவற்றில் ஏதாவது
நிறைவேற்றப்பட்டுள்ளதா?
ஏனெனில் அவற்றுக்கு
ஊடகங்களில்
அதிமுக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது?
உண்மையில்
கடந்த ஒரு வருடத்தில்
ஜெனீவா மற்றும் மாகாண சபைக்கு
அதிகாரமில்லாத
விடயங்கள்
பற்றிய பல தீர்மானங்களே
நிறைவேற்றப்பட்டன. இவையெல்லாம் ஊடகங்களினூடாக
விளம்பரம்
பெறவே செய்யப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும்
பெரும்பான
ஊடகங்கள்
அவர்களுக்கு
சார்பாகவே
இயங்குகின்றன.
மாகாண சபையில்
நிறைவேற்றப்பட்ட
எந்தவொரு
தீர்மானமும்
இதுவரை நிறைவேற்றப்பட்டதாக
சரித்திரம்
இல்லை.
13ஆவது
திருத்தத்தை
முழுமையாக
அமுல்படுத்த
வேண்டும்
எனத் தமிழ்க்
கூட்டமைப்பு
கோரி வருகிறது. இதில் தங்களது
நிலைப்பாடு
என்ன?
3ஆவது
திருத்தத்தை
முழுமையாக
அமுல்படுத்த
வேண்டும். நாமும் அதனை வலியுறுத்தி
வருகின்றோம்.
அதில் மாற்றுக்
கருத்திற்கு
இடமில்லை.
ஆனால் 13ஆவது திருத்தத்தை
முழுமையாக
அமுல்படுத்துமாறு
கோரும் இவர்கள் இருக்கும்
அதிகாரத்தை
கூட பயன்படுத்தாதுள்ளனர்.
13ஆவது திருத்தத்தின்
கீழ் மாகாண
சபை தொடர்பான
37 விடயங்களில்
சாலை, பொலிஸ்
அதிகாரங்கள்
தவிர 35 விடயங்கள்
இருக்கின்றன.
இந்த 35 விடயங்களையும்
தமிழ்க் கூட்டமைப்பு
அமுல்படுத்தியிருக்கலாம்.
ஆனால் வட மாகாண சபைக்கு
கிடைத்துள்ள
அதிகாரத்தை
கூட பயன்படுத்தாமல்
அரசை குறை
கூறுகிறது.
இராணுவத்தை வடக்கிலிருந்து
வெளியேற்றுவதாக
த.தே.கூ கூறினாலும்
மாகாண சபைக்கு அந்த அதிகாரம்
கிடையாது.
இது அரசியல்
லாபம் பெற மக்களுக்கு
அளித்த வாக்குறுதி
மட்டுமே.
இராணுவத்தின் பிடியிலிருந்து
126 சதுர கிலோ
மீற்றர் காணியில் 55
சதுர கிலோ
மீற்றரே எஞ்சியுள்ளது.
இராணுவத்திடமிருந்த வீடுகளில்
647 வீடுகள்
கையளிக்கப்பட்டுள்ளன.
அவற்றையும் மீள வழங்க வேண்டும்
என்று நாமும் கோரி வருகின்றோம்.
எது எவ்வாறிருப்பினும்
வடக்கில்
தமிழ் மக்களது அதிக வாக்குகளைப்
பெற்ற கட்சியாக தமிழ்க் கூட்டமைப்பு
இருப்பதனால்
அம்மக்களது
எதிர்பார்ப்பை
பூர்த்தி
செய்வதும்
அவர்களது
கடமையல்லவா?
நிச்சயமாக.
ஆனால் அதிக வாக்குகளை
அவர்கள், மக்களுக்குப்
பொய்யான வாக்குறுதிகளை
வழங்கி ஏமாற்றியே
பெற்றுள்ளனர். வட மாகாண சபை
தேர்தலின்
போது மூன்றிலிரண்டு
வாக்குகளை
எமக்களித்தால்,
நாம் வடக்கிலிருந்து
இராணுவத்தை
வெளியேற்றுவோம்.
எனவே, எங்களுக்கு
வாக்களியுங்கள்.
நாம் 3ஆம் கட்ட
போரை ஆரம்பிப்போம்
என்று பிரசாரம் செய்தே வாக்குகளை
பெற்றுக்கொண்டனர்.
இவற்றை நம்பியே
வடக்கு மக்கள் வடமாகாண சபை தேர்தலின்
போது, வாக்களித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்ததை
விடவும் அதிகமாகவே
மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், ஒரு வருட காலமாகியும்
வடமாகாண சபை சாதித்தது
என்ன? வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
நிறைவேற்றப்பட முடியாத
வாக்குறுதி
என நன்கு
அறிந்திருந்தும்
தமிழ்க் கூட்டமைப்பு
மக்களை ஏமாற்றியுள்ளது.
இன்று வரை ஏமாற்றி வருகிறது.
நீங்கள்
கூறுவதைப்
பார்த்தால்
மக்களுக்கு
எதுவுமே செய்யாத போதிலும் தற்பிரசாரத்தில்
தமிழ்க் கூட்டமைப்பு
வெற்றி பெற்றுள்ளது
என்றே கருத வேண்டும். அதற்கான காரணம்
என்ன?
உண்மைதான். ஊடக பிரசாரத்தில்
தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
அரசாங்கத்தினால்
ஒதுக்கப்படும்
நிதியினை
கொண்டு வடமாகாணத்தில்
அரசாங்கம்
கட்டி முடித்த பல கட்டடங்களை
திறந்து வைத்து, புகைப்படமெடுத்து
ஊடகங்களில்
வெளியிட்டு
தங்களை தாங்களே பிரபல்யப்படுத்திக்
கொள்கின்றார்கள்.
நீங்கள்
கூறியது போல உண்மையிலே
ஊடக பிரசாரத்தில்
அவர்களுக்குத்தான்
வெற்றி. ஆனால் அது இன்னும் சிறிது காலத்திற்கே.
உண்மை என்னவென்று
தெரிந்தவுடன்
ஐரோப்பிய
நாடுகளிலுள்ள
தமது உறவுகளுடன்
சென்று குடியேறிவிடுவார்கள்.
அதுவரை தான் இந்த பொய்க்கால்
குதிரையாட்டம்.
(எஸ். சுரேஷ்)