|
||||
|
Forum for Srilankan Diaspora – Switzerland FSDS
கண்ணீர் அஞ்சலி
1990 களில் எம்மவர்களாலேயே
எம்மவர்கள்மீது
விடுதலை, தமிழ்தேசியம்
என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட
ஜனநாயக மறுப்பு,
மனிதஉரிமை மீறல்கள்,
கருத்துச்சுதந்திர
மறுப்பு, ஊடகங்கள்
மீதான தடை, மாற்று
அமைப்புக்கள்
மீதான தடைகள்,
வன்முறைக் கலாச்சாரம்
என்பன நிலத்தில்
இருந்து புலத்திற்கு
இறக்குமதி செய்யப்பட்டிருந்த
காலம்.
இந்தக் காலத்தில்
வை.சி.கிருபானந்தன்
என்ற பெயர் புகலிடத்தில்
ஒலிக்கத் தொடங்கியது.
அரசியல் அநாகரிகங்களுக்கு
எதிராக ஊடகங்களிலும்,
அரங்குகளிலும்,
ஆக்கங்களிலும்
தன் பங்களிப்பைச்
செய்து ஈழத்தமிழர்கள்
நாகரீக அரசியலை
நடாத்த வேண்டும்
என்பதை வலியுறுத்தி
வந்தவர் வை.சி.
போருக்குப் பின்னரான
சூழலில் நிரந்தர
சமாதானத்தையும்
பாதிக்கப்பட்ட
மக்களின் புனர்வாழ்வையும்
முக்கிய விடயங்களாக
அடையாளம் கண்டவர்களுள்
கிருபானந்தனும்
ஒருவர். வெறும்
இனவாத, பிரதேசவாத,
மதவாத குறுகிய
அரசியல்தான் எமது
மண்ணைச் சிதைத்தது
என்பதால் சகல இனங்களுக்குமிடையிலான
உறவு என்பது அவருக்கு
முக்கியமானதாக
இருந்தது. இனங்களுக்கிடையிலான
புரிந்துணர்வு
ஒன்றுதான் அரசியல்
வியாபாரிகளை அகற்றி
நிரந்தர சமாதானத்தைத்
தரும் என்று நம்பியவர்
தோழர் கிருபா.
அல்லலுறும் மக்களுக்கு
புனர்வாழ்வளிக்க
அமைப்புரீதியான
செயற்பாடுகளின்
தேவையை அவர் உணர்ந்திருந்தார்.
இதனால் புகலிட
மக்கள் மத்தியில்
இது விடயமாக இடம்பெற்ற
கலந்துரையாடல்கள்;
சந்திப்புக்களில்
பங்குகொண்டு தமது
கருத்துக்களை
முன்வைக்க அவர்
தயங்கவில்லை. அன்னாரின்
இந்த உத்வேகம்தான்
அவரை சுவிஸ் புலம்பெயர்ந்த
இலங்கையர் சம்மேளனத்துடன்
இணைந்து செயற்படத்
தூண்டியது. எம்மையும்
அவரோடு இணைத்தது.
வை.சி. என்று அன்பாக
தனது அரசியல் கலை,இலக்கிய
நண்பர்களால் அழைக்கப்பட்ட
அந்த மனிதம் நிறைந்த
மனிதனை நாம் இன்று
இழந்து விட்டோம்.
ஆனாலும் அவரது
போராட்ட உணர்வும்,
அன்னார் எமக்கு
ஊட்டிய துணிவும்,
அவரது பணிகளும்
எம் மனக்கண்முன்
காட்சி தருகின்றன. ஜனநாயகம், நிரந்தர சமாதானம், போரினால் சூறையாடப்பட்ட மக்களின் புனர்வாழ்வு இவையே வை.சியின் கனவாக இருந்தன. இவற்றை நனவாக்குவதே நாம் அன்னாருக்குச் செய்யும் அஞ்சலியாகவும், எமது எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் அவர் கண்ட அறம் தவறா அரசியலாகவும் அமையும். வை.சி. கிருபானந்தன் அவர்களின் பிரிவுத்துயரால் வாடும் அவரது மனைவி, பிள்ளைகள்;, குடும்பத்தினர் மற்றும் அவரது அரசியல், கலை, இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Forum for Srilankan Diaspora – Switzerland FSDS |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |