Contact us at: sooddram@gmail.com

 

உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் - மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் அவற்றிற்கு உடன் முடிவு கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அசாத்திய பொறுமையுடனும், ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு செய்திகளை நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் இனமும், சமூக பொறுப்புள்ள தமிழ் உடகங்களும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றன என்பதை கூட்டமைப்பு அரசியல் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

கூட்டமைப்பு சகோதர கட்சிகளுக்குள் பல வருட காலமாக நீடித்து வந்துள்ள உள்முரண்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதை நிச்சயமாக நானறிவேன். ஆனால், இன்று பகிரங்கமாகியுள்ள முரண்பாட்டு செய்திகள், கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று துன்பங்களை சுமந்து நிற்கும் தமிழர்களின் தேசிய இருப்பை சவாலுக்கு உள்ளாக்கும் விடயமாக மாறி வருகின்றன என்ற காரணத்தினாலேயே இதை கவலையுடன் சொல்ல வேண்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, உள்முரண்பாடுகள் பகிரங்கமாகும்போது முதற்பலி, மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். சொல்லொணா அகோர நினைவுகளையும், அவல நிஜங்களையும் சுமந்து வாழும் தமிழ் மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த நம்பிக்கையும் கனவாகுமானால், அது துர்பாக்கியமாகும். அது கோர வன்னி யுத்தம் தந்த வலிக்கு சமாந்திரமானதாகும்.

ஒரு அங்குலமும் இறங்கி வர தயார் இல்லை என்று இனவாத அரசு தனது நிலைபாடுகள் நாள் தோறும் அறிவித்துகொண்டுள்ளது. தமிழ் மக்களை சாகவிட்டுவிட்டு அதற்கு துணை போன சர்வதேசமும், இப்போதுதான் தாமதமாக விழித்து எழுந்து எம்மை சமாதானப்படுத்தி கொண்டிருக்கின்றது. உலக வல்லரசுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முதல் வரிசையில் இருந்தால், கட்சிகள் செயற்படாவிட்டாலும்கூட, தனது தேவைக்காகவே சர்வதேச உலகம் நம்மை தள்ளி அழைத்து சென்று தீர்வுக்கு வழி காட்டிவிடும். ஆனால், தூரதிஷ்டவசமாக உலக நாடுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முன் வரிசையில் இல்லை.

இந்த கசப்பான உண்மையை பகிரங்கமாக சொல்வதற்கு நாம் தயங்க வேண்டியது இல்லை. இதுபற்றி தமிழ் மக்களுக்கு பொய்யான மாய நம்பிக்கைகளை தர முடியாது. எனவே, சர்வதேசம் என்ற ஒரே வார்த்தை பிரயோகம் மூலமாக மாத்திரம் நமது எதிர்பார்ப்புகள் தீர்ந்துவிட போவதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால்தான், நம்மை ஜனநாயகரீதியாக தயார் படுத்திகொள்ளலாம். சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் அந்த ஒத்துழைப்பை உள்வாங்க காத்திரமான கட்டமைப்பு இருக்க வேண்டும்.

இந்த காரணத்தினாலேயே இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமைகள், உலகின் ஏனைய இன விடுதலை இயக்க தலைமைகளை விட, அதிகமாக, காத்திரமாக, முழுநேரமாக உழைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். காத்திரமான முழு நேர உழைப்புக்கும், ஆளுமைக்கும் கூட்டமைப்பில் பஞ்சமில்லை என நான் நம்புகிறேன். எனவே உழைப்பையும், ஆளுமையையும் முன்னெடுக்கும் எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பைகொண்ட கட்சி இயந்திரம்தான் தேவைபடுகிறது.

ஆனால், இன்று வானத்தில் பறக்கும் பறவையை பிடிப்பது என்பது விடுத்து, கையில் இருக்கும் பறவையும் நம் கையில் இருந்து பறந்துவிடுமோ என்ற பயம் மக்களுக்கு வந்து விட்டது. புதிய எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற இலக்கை நோக்கி நகர்வது என்பதை விடுத்து, இப்போது கையில் இருக்கும் கட்டமைப்பும் சிதையுமானால், அது வரலாற்று தவறாகிவிடும். நாளைய வரலாறு எழுதப்படுவது என்பது ஒருபுறமிருக்க, இன்றைய நிகழ்காலமே நம்மை நடுச்சந்தியில் நிறுத்திவிடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஆளுமையும், அர்ப்பணிப்பும், நேர்மையும், தூரப்பார்வையும், துணிச்சலும் கொண்ட கொண்ட தமிழ் தேசிய இயக்கமாக புத்தெழுச்சி பெற வேண்டும் என்பதுவே, சகோதர தமிழ் தேசிய கட்சியான எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

கூட்டமைப்பில் இடம்பெறும் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எமது கருத்துகள் அமையவில்லை.
தமிழ் மக்களை சார்ந்தே நமது கருத்துகள் அமைகின்றன. உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள். ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தி கூட்டமைப்பை வலுப்படுத்துங்கள். இதுவே இன்று நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. இந்த மக்கள் குரலையே நாம் இங்கு எதிரோலிக்கின்றோம்.

கொள்கை இன் அடிப்படையில் அமையாமல் கொள்ளை இன் அடிப்படையில் அமைந்த கூட்டமைப்பிற்குள் நாம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும். மக்கள் விழித்து எழுந்து சரியான மாற்றுத் தலமையை உருவாக்காதவரை தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை. இதில் சிறு புகழ் மனோ கணேசன் போன்றவர்களும் தமிழ் மக்களின் அழிவிற்கு புலிகளை ஆதரித்து பங்காளியானவர்கள்தான். -சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com