|
||||
|
இறுதி யுத்தத்தில்
பொதுமக்கள்
பலர் கொல்லப்பட
புலிகளே காரணம்! பிரபாகரன் மக்களை கேடயமாகப்
பாவித்ததுடன்
சர்வதேசத்தின்
குரல்களை
அலட்சியம்
செய்வதில்
பிடிவாதமாக
இருந்தார்! - எரிக் சொல்ஹேய்ம்
மனம்
திறக்கிறார்
இலங்கை இராணுவத்துக்கும்
விடுதலைப்
புலிகள் அமைப்புக்கும்
இடையிலான
போரில், 2009 ஆம் ஆண்டின்
துவக்கத்தில்,
போரின் இறுதிக் கட்டத்தில்
பெருமளவிலான
பொதுமக்கள்
கொல்லப்படக்கூடிய
மனிதப் பேரவலம் நடக்காமல்
தடுக்கும்
நோக்கத்தில்
சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி
எடுத்ததாக
ஏற்கனவே செய்திகள்
கசிந்திருந்தன.
அந்த முயற்சியில்
முக்கிய பங்காற்றிய
நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும்,
இலங்கை அரசுக்கும்
விடுதலைப்
புலிகள் அமைப்புக்கும்
இடையிலான
சமாதானப்
பேச்சுவார்த்தைகளை
முன்னின்று
நடத்தியவர்களில்
ஒருவருமான
எரிக் சொல்ஹேய்ம்,
அந்த திட்டம்
குறித்து
தற்போது வெளிப்படையாக
பேசியுள்ளார்.
லண்டனில் பிபிசி
அலுவலகத்திற்குச்
சென்ற எரிக் சொல்ஹேய்ம்
இந்த திட்டம்
உருவான பின்னணி குறித்தும்
அது ஏன்
செயற்படாமல்
கைவிடப்பட்டது
என்றும் தெளிவாகக்
கூறியுள்ளார்.
எரிக் சொல்ஹேய்ம்:
இலங்கையின் சமாதானத்துக்காக
முன்முயற்சி
எடுத்து கொண்ட நாடுகளான
ஜப்பான், அமெரிக்கா,
ஐரோப்பிய
ஒன்றியம்
மற்றும் நோர்வே ஆகிய நாடுகள்
இணைந்து
2009 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் ஒரு
யோசனையை முன்வைத்தன.
ஐ.நா மன்றமும்
இதன் பின்னணியில்
இருந்தது.
அன்றைய நிலைமையில்
போரின் முடிவு இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான
வெற்றியாக
அமையும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள்
கொல்லப்படும்
பேரழிவை தடுக்கும்
வகையில் போரை முறையாக
முடிவுக்கு
கொண்டுவர
வேண்டும்
என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.
அந்த திட்டத்தின்
முழுமையான
இறுதி வடிவமும் விடுதலைப்
புலிகளும்
இலங்கை அரசும் ஒப்புக்கொண்ட
பிறகு தான் முடிவு
செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் அதற்கு
அடிப்படையாக
நாங்கள் தெரிவித்த
நடைமுறை யோசனை என்னவென்றால்,
சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா,
இந்தியா அல்லது வேறு ஒரு
நாடு இலங்கையின்
வடக்கு - கிழக்குப்
பகுதிக்கு
ஒரு பெரிய
கப்பலை அனுப்பிவைப்பது
என்றும், அதில் ஐ.நா
மன்ற அதிகாரிகளோ
அல்லது மற்ற சர்வதேச
அமைப்பை சேர்ந்தவர்களோ
இருந்து, போரின் இறுதியில்
எஞ்சியிருந்த
அனைத்து விடுதலைப்புலிகள்
மற்றும் பொதுமக்கள்
அனைவரையும்
ஒருவர் விடாமல் கணக்கெடுத்து
புகைப்படத்துடன்
பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம்.
அவர்கள் அனைவரும்
கொழும்பு
கொண்டு செல்லப்பட்டு
அவர்களிடதிருந்த
ஆயுதங்களை
ஒப்படைத்த
பிறகு, விடுதலைப்புலிகள்
அமைப்பின்
தலைவர் பிரபாகரன்
மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர்
தவிர்ந்த
மற்ற அனைவருக்கும்
பொதுமன்னிப்பு
வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டது.
எங்களின் இந்த யோசனை
மட்டும் ஏற்கப்பட்டிருந்தால்,
இறுதிக்கட்டத்தில்
கொல்லப்பட்ட
விடுதலைப்புலிகள்
இன்று நம்மிடையே
உயிருடன்
இருந்திருப்பார்கள். ஏப்ரல்
மாதம் இந்த திட்டத்தின்
இறுதிவடிவத்தை
முடிவு செய்வதற்காக
விடுதலைப்புலிகள்
அமைப்பின்
சர்வதேச பேச்சாளர்
குமரன் பத்மநாதன்
ஒஸ்லோவுக்கு
வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில்
பிரபாகரன்
அவரை தடுத்துவிட்டார்.
எங்களின் பாதுகாப்பு
அதிகாரிகள்
அவரை பத்திரமாக
அழைத்து வரு வதற்காக
கோலாலம்பூருக்கே
சென்றிருந்தனர்.
ஆனால் இந்தத்
திட்டம் தங்களுக்கு
ஏற்புடையதல்ல
என்று எங்களுக்கு
செய்தி சொல்லப்பட்டது.
எங்களால் ஒன்றும்
செய்ய முடியவில்லை.
கேள்வி: இந்த
திட்டத்திற்கு
இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?
பதில்: அந்த
நாட்களில்
நான் இலங்கைக்கு
செல்லவில்லை.
ஆனால் ஒஸ்லோவில்
இருக்கும்
இலங்கைத்
தூதரகம் மூலமாகவும்,
மற்ற தூதரகங்கள்
மூலமாகவும்
இலங்கை அரச தரப்புடன்
எங்களுக்கு
இருந்த தொடர்புகள்
மூலமாகவும்
இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள்
நடத்தினோம்.
கேள்வி: இந்த
திட்டத்திற்கு
இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும்
என்று எதை வைத்து
நீங்கள் நம்புகிaர்கள்?
பதில்: அவர்களுக்கு
இதில் விருப்பம்
இருக்கிறதோ
இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும்
அமெரிக்காவும்
மற்றவர்களும்
இதில் உறுதி காட்டியிருப்பார்கள்,
ஒட்டுமொத்த
சர்வதேச சமூகத்தினரும்
இதில் ஒன்றாகவும்
உறுதியாகவும்
குரல் கொடுத்திருப்பார்கள்.
இலங்கை அரசில்
தயக்கம் இருந்திருந்தாலும்
அவர்களுக்கு
வேறு வழி
இருந்திருக்காது.
கேள்வி: அப்படியானால்,
இலங்கைப்
போரின் இறுதிக் கட்டத்தில்
பல்லாயிரக்
கணக்கானவர்கள்
கொல்லப்பட்ட
சம்பவத்திற்கு
முதன்மையான
பொறுப்பு
விடுதலைப்
புலிகளின்
தலைமையை சாரும் என்கிaர்களா?
பதில்: போரின்
இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது
என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும்
போரை ஒழுங்குபடுத்தப்பட்ட
முறையில்
முடிக்காமல்
கடைசிவரை
போராட வேண்டும் என்று பிரபாகரன்
உள்ளிட்ட
விடுதலைப்புலிகள்
அமைப்பின்
தலைமை முடிவெடுத்தது
மிகப்பெரிய
வரலாற்று
தவறு என்றே
நான் நினைக்கிறேன்.
கேள்வி: இந்த
திட்டத்திற்கு
இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?
பதில்: விடுதலைப்புலிகள்
அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம்
இல்லை. ராஜீவ் காந்தி
கொலை உட்பட
பல்வேறு காரணங்கள்
இதற்கு பின்னணியில்
இருக்கின்றன.
ஆனால் அதேசமயம்,
இறுதிகட்டத்தில்
ஆயிரக்கணக்கானவர்கள்
கொல்லப்படக்கூடாது
என்பது குறித்து அங்கே கரிசனை
காணப்பட்டது.
கேள்வி: நீங்கள்
இறுதியாக
முன்வைத்த
திட்டத்திற்கு
இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?
பதில்: இலங்கை
பிரச்சினையில்
நான் ஈடுபட்டிருந்த
10 ஆண்டுகாலங்களில்
இந்தியாவுக்கு
தெரிவிக்காமல்
நான் எந்த
திட்டத்தையும்
முன்னெடுத்ததில்லை.
இந்த திட்டத்தை
இந்தியா ஏற்றிருக்கும்
என்பதிலும்
இந்த திட்டத்தின்
ஒரு பகுதியாக
இந்திய அரசும் இருந்திருக்கும்
என்பதிலும்
எனக்கு எந்தவித சந்தேகமும்
இல்லை.
கேள்வி: இப்படி
ஒரு திட்டம்
இருந்ததாக
நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள்
உண்மையா என்பதற்கு
என்ன ஆதாரம்?
பதில்: 2009 ஆம்
ஆண்டில் நடந்த இந்த
விடயங்கள்,
கொழும்பில்
இருக்கும்
அமெரிக்க
தூதரகத்தின்
தகவல் பரிமாற்றங்கள்
மற்றும் அது தொடர்பான
மற்ற ராஜீய
தகவல் பரிமாற்றங்கள்
அனைத்தும்
விகிலீக்ஸில்
வெளியாகியிருக்கின்றன.
அவற்றில் இருக்கும்
தகவல்களை
நுணுகிப்
பார்த்தால்
இந்தக் கூற்றுக்கான
ஆதாரங்கள்
அதில் இருக்கின்றன.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |