Contact us at: sooddram@gmail.com

 

புலம்பெயர்ந்தோர் விருப்புக்கேற்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாலேயே சிக்கல் நிலைமை

தமிழ் மக்களுக்கு நன்மை தரும் திவிநெகும சட்டமூலத்தை தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பது துரோகம்

ஒருவேளை உணவை கொடுப்பதன் மூலம் வறுமையிலிருந்து மக்களை மீட்க முடியாது

திவிநெகும சட்ட மூலம், அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட நேர்முகம்

கேள்வி : தற்போது திவிநெகும சட்டமூலம் தொடர்பாக அதிகளவில் கலந்துரையாடப்படுகின்றது. அதனால் இச்சட்டமூலம் குறித்து சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில் : ஆம். தற்போது நாட்டில் 1.5 – 1.8 மில்லியன் வரையான மக் கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழு கின்றார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களாவர். அத்தோடு கொழும்பு போன்ற நகர்களிலுள்ள சேரிகளிலும், மீனவர்கள் மத்தியிலும் வறுமைக்கு உள்ளானவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

அவர்களைத் தனி மனிதர்களாகவும், தனித்தனிக் குடும் பங்களாகவும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் நோக் கிலேயே திவிநெகும சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ஆனால் கடந்த காலங்களில் வறுமைக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு உணவுப் பார்சலோ அல்லது ஒரு கிலோ அரிசியோ தான் அரசியல் வாதிகளால் பெற்றுக் கொடுக்கப் பட்டது. ஒருவேளை உணவைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக வறுமைக்கு உள்ளாகி இருப் பவர்களை அதிலிருந்து விடுவிக்க முடியாது. இதனை யாவரும் அறிவர்.

சமுர்த்தித் திட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்நாட்டில் சுமார் 36 சதவீதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் இருந்தனர். ஆனால் அது அரசியல் தலையீடு மிக்க வேலைத்திட்டமாக விளங்கியது. அத்திட்டத்திற்கு அரசாங்கமே தொடர்ந்தும் உதவியளித்து வருகின்றது.

இவ்வாறான ஒரு வேலைத் திட் டத்தின் ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களால் சுயமாக எழு ந்து நிற்க முடியாது. அதனால் தான் இத்திட்டத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்புவதற்காக இத்திட்டத்தை முன்வைத்திருக் கின்றோம்.

இத்திட்டத்தின் கீழ் உணவுப் பார்சலுக்கு பதிலாக தானிய விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கு கின்றோம். அவற்றை பயிரிடும் முறை தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரமும் சேர்த்து விநியோகிக்கப்படுகின்றது.

இதன் பயனாக தமது அன்றாடப் பாவனைக்கு தேவையான மரக்கறி வகைகளை தம் வீட்டுத் தோட்டத்திலேயே பெற் றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றது. தமது நாளாந்த பாவனைக்கு மேலதிகமான மரக்கறி வகைகளை அயல் வீட்டாருக்கும் கூட வழங்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் இந்நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களைத் தொடர்ந்தும் அதே நிலையில் வைத்திருக்க முடியாது. அவர்க ளையும் பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடுவது மிக மிக அவசியமான காரியமாகும்.

இன்று நாட்டில் கமத்தொழில், சோளச் செய்கை, மரக்கறி மற்றும் பழச்செய்கை, பாலுற்பத்தி, கால்நடை வளர்ப்பு, உள்ளிட்ட சகல தொழிற்றுறையில் ஈடுபட் டிருப்போரினதும் வருமானம் அதிகரித்துள்ளது. இதற்கு அரசாங் கம் வழங்கி வருகின்ற உர மானியம் உள்ளிட்ட ஊக்குவிப் புகளும், சலுகைகளும் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றன.

இந்த வகையில் தான் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் மேம்பாட்டுக்காக சேவையாற்று கின்ற இலங்கை சமுர்த்தி அதிகார சபை, இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை ஆகிய வற்றை உள்ளடக்கி திவி நெகும சட்ட மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

கேள்வி: இந்நாட்டு ஏழை மக்களின் வாழ்வில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தும் நன்நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் இச்சட்ட மூலம் அதிகம் கலந்துரையாடப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ள காரணிகளாக நீங்கள் எதனைக் கருதுகின்aர்கள்?

பதில்: திவிநெகும சட்ட மூலத்தையும், 13வது திருத்தத்தையும் சரியான முறையில் புரிந்து கொள் ளப்படாததன் வெளிப்பாட்டையே இப்போது அவதானிக்க முடிகின்றது. இது தேவையற்ற பிரச்சினை.

மாகாண சபை முறை தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் உள்ளன. அது வெள்ளை யானை. அதனால் எந்த வேலையும் இல்லை என்றெல்லாம் பொதுமக்கள் கூறுகின்றார்கள். அதில் குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்த முடியும்.

அதற்காக திவிநெகும சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு வேலைத் திட்டத்தையும் நாம் நிறுத்தவுமில்லை. எடுக்கவுமில்லை. எதிர்காலத்தில் எடுக்கப் போவது மில்லை.

அதேநேரம் தற் போது மாகாண சபையால் மேற் கொள்ளப்படுகின்ற எந்தவொரு வேலைத் திட்டமும் திவிநெகும திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அத்தோடு மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களும் கூட இதனுள் சேர்க்கப்படவில்லை.

மாகாண சபையால் இப்படியான வேலைத் திட்டம் முன்னெடுக் கப்படுவதுமில்லை. அவற்றை மாகாண சபைகளால் செய்யவும் முடியாது. மாகாண சபையால் செய்ய முடியாத, ஆனால் மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள் கின்றது.

உதாரணமாக பாடசாலைகளில் மலசலக் கூட வசதிப் பிரச்சினை பல வருடங்களாக நீடித்தது. இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையிட்டு இப்பிரச் சினையைத் தீர்த்து வைத்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டிலுள்ள 9800 பாடசாலைகளில் 8600 பாடசாலைகளின் மலசலகூடப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டன. இந்நடவடிக்கையின் மூலம் மாகாண சபையின் அதிகாரங்கள் குறைக் கப்படவில்லை. இதனால் எந்த பிரச்சினையுமே ஏற்படவுமில்லை. இவ்வேலைத் திட்டத்தை மாகாண சபைகளே பெரிதும் வரவேற்றன.

இவ்வாறு மாகாண சபைகளால் செய்ய முடியாத வேலைத் திட்டங் களையே மத்திய அரசு மேற்கொள் கின்றது.

நாம் திவிநெகும ஊடாக மாகாண சபைகள் மேற்கொள்ளுகின்ற மருத்துவ சேவை வழங்கவோ, கழிவுப் பொருட்களை அகற்றவோ, பாடசாலை கட்டவோ, வீதிகளை அமைக்கவோ செல்லவில்லை. மாறாக தனிநபரையும் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். இது மாகாண சபையால் செய்யப்படும் வேலை அல்ல.

திவிநெகும ஊடாக கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இவற்றுக்கு அவசியமான மிருக வைத்திய சேவை இப்போது மாகாண சபை ஊடாகவே வழங்கப்படுகின்றது. அச்சேவையைத் தொடர்ந்தும் அவர்களே வழங்க வேண்டும்.

இதேபோல் திவிநெகும ஊடாக நாம் வாராந்த சந்தை நடாத்துவோம் என்றோ, அவற்றுக்கு வரி அற விடுவோம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. என்றாலும் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வாராந்த சந்தைகளில் விற்பனை செய்யப் படுகின்றன. சந்தைகளை முகாமை ப்படுத்துவதும், அவற்றில் வரி அறவிடுவதும் மாகாண சபை செய்யும் வேலை. நாம் மக்களிடம் வரி எடுக்கச் செல்லவில்லை.

மாறாக திவிநெகும திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களுக்கு மூலப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொடுப்பது, பயிற்சிகளை வழங்குவது, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அப்பொருட்களுக்கு உள்நாட்டில் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது போன்றவாறான பணிகளே மேற்கொள்ளப்பட விருக்கின்றன. இவை இச்சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக் கின்றது. இந்த வேலையை நாம் இப்போதும் செய்து கொண்டி ருக்கின்றோம். இதனையே கிரா மத்திலுள்ள சிறிய முதலாளிக ளும் கூட செய்கின்றனர். இது மாகாண சபைக்குரிய வேலையா? இல்லையே.

கேள்வி: இச்சட்ட மூலத்திலு ள்ள சிறப்பம்சங்களைக் குறிப் பிடுங்கள்?

பதில்: இச்சட்ட மூலத்திலுள்ள பிரதான சிறப்பம்சம் தான் சமூக அடிப்படையிலான அமைப்புகளை (Community Base Organiza tions) உருவாக்குவதாகும். இதனூடாக தனித்து செயற்பட முடியாதவர்கள் குழுவாகச் செயற்பட்டு முன்னேறுவதற்கு வழிகாட்டல் வழங்கப்படும். அதற்குரிய வசதி வாய்ப்புகளும் செய்துகொடுக்கும். அன்று இப்படியான அமைப்புகள் கிராம மட்டத்தில் இருந்தன.

முன்னாள் பிரதமர்களான மறைந்த எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச போன்றோர் சமூக அடிப்படையிலான அமைப்புகளில் தான் தம் சமூகப் பணிகளை ஆரம் பித்தனர். அவர்கள் பின்னர் நாட்டின் தலைவர்களாக உருவாகினர்.

முன்னாள் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட மகிலா சங்கத்தில் இணைந்து செயற்பட்டே தம் சமூகப் பணிகளை ஆரம்பித்தார். அவ்வாறு சிறப்பு மிக்க சமூக அடிப்படையிலான அமைப்புகள் இப்போது இல்லை. மரண சகாய நிதிச் சங்கங்கள் மாத்திரமே இன்று எஞ்சி இருக்கின்றன. இச்சங்கங்கள் எவ்வளவு சிறப்பாக இயங்குகின்றன. இதேபோல் சிரமதான சங்கங்கள் அன்று செயற்பட்டன. அவை இப்போது இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.

இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் உள்ளன. அவை சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தியுள்ளன. அவை திட்ட அறிக்கைகளை வெளிநாட் டவருக்கு சமர்ப்பித்து டொலர்களைப் பெறுகின்றன. அவை முடிந்ததும் நிறுவனம் மூடப்பட்டு விடுகின்றன. இப்படியான நிலமை முன்னர் இருக்கவில்லை.

இன்று அரச சார்பற்ற நிறுவனமாக உள்ள அமைப்புகள் முன்னர் சிரமதான சங்கங்களாக இருந்தன. அந்தப் பெயரிலும் சங்கங்கள் இருந்தன. அவை வலுவான சங்கங்களாகத் திகழ்ந்தன. இச்சட்டத்தின் ஊடாக அச்சங்கங்களை மீள உரு வாக்க முன்னுரிமை அளித்து இருக்கின்றோம். இச்சங்கங்களில் அமைச் சர்களோ, அதிகாரிகளோ தலையீடு செய்ய மாட்டார்கள். திவிநெகும திணைக்களம் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கு வசதிகளை செய்துகொடுக்கும்.

குறிப்பாக அறிவூட்டுதல், ஆலோசனை வழங்குதல், பயிற்சி அளித்தல், ஊக்குவித்தல், குழுக்கள் அமைத்தல் போன்ற வேலைத் திட்டங்கள் இதனூடாக முன்னெடுக்கப்படும். அத்தோடு நிதியுதவி தேவையான வர்களுக்கு அதற்கு வசதியும் செய்துகொடுக்கப்படும். கடன் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அதேநேரம் இந்த அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும் விரும்புகின்றோம். ஏனெனில் நெற் செய்கையாளர்கள் உட்பட சோளம், மிளகாய், பெரிய வெங்காயம், ரம்புட்டான் போன்றவாறான பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும், மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்க ளுக்கும் குறிப்பிட்ட காலப் பகுதியில் தான் வருமானம் (ஷிலீasional யிnணீoசீலீ) கிடைக்கும்.

அந்த சந்தர் ப்பத்தில் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும் செலவளித்து விட்டால் பின்பு பயிரிடத் தேவையான விதை இனங்களையும் பசளையையும் கொள்வனவு செய்யவும், ஏனைய தேவைகளுக்கும் கடன் வாங்கவே நேரும். அதற்காக அவர்கள் வங்கிகளை நாடுவார்கள். அங்கு கடன் கிடைக்கா விட்டால் அதிக வட்டி வீதத்தில் கடனைப் பெறுவார்கள். இதனால் வறுமை கூடுமே ஒழிய குறையாது.

அதனால் சமூக அடிப்படையிலான அமைப்புகளில் சேமிக்கவும், அவற்றின் ஊடாக வங்கிகளில் கடன் கிடைக்கப் பெறாதவர்கள் கடனுக்கு நிதியைப் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்படும். இப்படியான வேலைத் திட்டம் சமுர்த்தியின் ஊடாகவும் முன்னெடுக்கப்படும். அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தான் திவிநெகும சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக இச்சட்டத்தின் கீழ் விசேட நிதியமொன்று அமைக்கப்படும்.

இந்நிதியத்தின் கீழ் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி உதவி பெறும் எவராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு இறுதிக்கிரியை களுக்கென பத்தாயிரம் ரூபா வழங்கப்படும். எவரது குழந்தையாவது பல்கலைக்கழகம் சென்றால் புலமைப் பரிசில் வழங்கப்படும்.

சமுர்த்தி உதவி பெறுபவர் எவராவது நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தால் அவர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த நாட்களுக்கு நாளுக்கு முந்றூறு ரூபாப்படி கொடுப்பனவு வழங் கப்படும். இச்சேவைகள் யாவும் இந்நிதியத்திற்குக் கிடைக்கப்பெறும் நிதி மூலம் கிடைக்கின்ற வட்டிப் பணத்தைக் கொண்டே மேற்கொள் ளப்படும். இவ்விடயம் இச்சட்டத்தின் 44 வது ஷரத்தில் தெளிவாகக் குறிப் பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் சேவையாளர்க ளுக்கு மூன்று தெரிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

1) திவிநெகும திணைக்களத்தில் இணைந்து சேவையில் சேர்ந்த காலம் முதல் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளுதல்.

2) சேவையிலிருந்து விலகி ஊழியர் சேம லாப நிதியைப் பெற்றுக் கொண்டு புதிதாக திவிநெகும திணைக்களத்தில் இணைதல்.

3) ஊழியர் சேமலாப நிதிய நிதி, ஊழியர் நம்பிக்கை நிதிய நிதி, நஷ்டஈடு ஆகியவற்றை பெற்றுக்கொண்டு சேவையி லிருந்து வெளியேறுதல்.

இவற்றுக்கு மேலதிகமாக மற்றொரு தெரிவை நாம் முன்வைத்தி ருக்கின்றோம். அதுதான் ஓய்வூதியத் தில் இணையாமல் தொடர்ந்தும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியுடன் சேர்ந்திருத்தல் ஆகும்.

இலங்கை வரலாற்றில் திணைக் களங்கள் தான் கூட்டுத்தாபனங் களாகவும், அதிகார சபைகளாகவும் மாறியுள்ளன. ஆனால் முதற் தடவையாக அதிகார சபைகள் திணைக்களமாக மாற்றப்படுகின்றது.

அத்தோடு ஓய்வூதியமும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதுவும் திவிநெகும திணைக்களம் இப்போது ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும், அதனுள் இணைகின்றவர்களுக்கு சேவையில் சேர்ந்த காலம் முதலே ஓய்வூதியம் வழங்கப்படவிருக்கின்றது. இவ்வாறு முன்னொரு போதுமே வழங்கப்படுவதில்லை.

சமுர்த்தி திட்டத்தில் 27 ஆயிரம் சேவையாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது தொழிலை உத்தரவாதப் படுத்துமாறும் தமக்கு ஓய்வூதியம் பெற்றுத் தருமாறும் நீண்ட காலமாக கோரி வந்தனர். அக்கோரிக்கையைக் கருத்தில் கொண்டு தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண் டிருக்கின்றார்.

கேள்வி : திவிநெகும சட்டத்தின் மூலம் சமுர்த்தியிலுள்ள நிதி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும், அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே...!

பதில் : அந்தக் கூற்றுக்களில் எந்த உண்மையுமே இல்லை. அப்படியான நிலைமை ஒருபோதும் ஏற்படாது. சமுர்த்தி அதிகார சபை சட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறையுமே தவிர சிறி தளவேனும் கூடாது. ஆனால் பொறு ப்பான அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். அமைச்சரவை நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு ஒன்றுபட்டும் தனிப்பட்ட வகையிலும் பொறுப்புக் கூற வேண்டும்.

திணைக்களத்திற்கு பாராளுமன் றம் அங்கீகரிக்கின்ற வரவு - செலவுத் திட்டம் மூலமே நிதி வழங்கப்படும். அதற்கு பதிலளிப் பது அமைச்சரின் பொறுப்பு. அதற்கு அதிகாரம் இருப்பதும் அவசியம்.

திவிநெகும திணைக்களம் என்று வரும் போது அது அரசாங்கத் தின் காணக்காய்வுக்கு உள்ளாக் கப்படும் பாராளுமன்றத்தில் நிதி பெற வேண்டும். பாராளுமன்ற ஆலோசனைக் குழு, கணக் காய்வாளர் நாயகம், அமைச்சரவை பொறுப்பான அமைச்சர் ஆகி யோருக்கு பொறுப்பு கூற வேண் டும். ஏனைய எல்லா திணைக் களங்களும் இவ்வாறுதான் செயற் படுகின்றன.

ஆகவே சமுர்த்தி மற்றும் திவிநெகும கணக்குகளிலுள்ள எந்த நிதியும் அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. சமுர்த்தி வங்கிகளில் ஒவ்வொருவரது பெய ரிலும் இருக்கின்ற வைப்புக் கணக் குகள் திவிநெகும வங்கிகளிலும் அதே பெயரிலேயே இருக்கும். நிறுவனங்களின் பெயர் மாற்ற மடைந்தாலும் அங்கு சேவைசெய் பவர்களின் பணிக்கொடை எவ்வாறு மாற்றமடையாதோ அதேபோன்றே இதுவும் மாற்றமடையாது. இது திவிநெகும சட்டத்தில் குறிப் பிடப்பட்டிருக்கின்றது.

தற்போது சமுர்த்தி வங்கி கணக் குக்கு மேலதிகமாக அரசாங்கம் மாதாந்தம் மண்ணெண்ணெய் நிவா ரணம் உட்பட பல நிவாரண உதவி களை வழங்குகின்றது. அவை அப் படியே தொடர்ந்தும் கிடைக்கும். அவ ர்கள் மேம்பாட்டால் அந்நிவாரண உதவிகள் நீங்குமேயொழிய இல் லாவிடில் தொடர்ந்தும் வழங்கப் படும்.

கேள்வி: இவ்வாறு பரந்த நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் இச்சட்ட மூலத்தைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

பதில்: இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்ளுக்கும் மேலாகி விட்டன. இக்காலப் பகுதியில் ஒரு போதும் கிடைக்கப்பெற்றிராத சேவையையும் அபிவிருத்தியையும் ஜனாதிபதியின் அர சாங்கம் வடக்கு மக்களுக்கு இப்போது பெற்றுக்கொடுக்கின்றது. கடந்த 30 வருட காலப்பகுதியில் புலிகள் அழித்ததை மாத்திரமல்லாமல் அவற்றுக்கு மேலாகவும் நாம் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இதில் உட்கட்டமைப்பு வசதிக ளின் மேம்பாடு பிரதானமானது.

அதில் தொடர்பு முதன்மையானது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திற்கு முன்னர் ஆனையிரவு ஊடாக ஏ-9 நெடுஞ்சாலையில் மாத்திரமே தொடர்பு இருந்தது. ஆனால் இப்போது ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேலதிகமாக சங்குப்பிட்டியில் பாரிய பாலத்தை அமைத்து ஏ-32 நெஞ் சாலை ஊடாகவும், முல்லைத்தீவு, கரைந்துரைப்பற்று கரையோரம் ஊடாகவும் யாழ்ப்பாணத்திற்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின் றது. அத்தோடு திருகோணமலை புல்மோட்டை - யான்ஓயா ஊடாக வும் யாழ். குடாநாட்டுக்கு நெடுஞ் சாலை அமைக்கப்படுகின்றது. இதேபோல் மன்னாருக்கும் முல் லைத்தீவுக்கும் நெஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ரயில் பாதைகளும் அமைக்கப்படுகின்றன.

இதேநேரம் முதல் தடவையாக பிரதான தேசிய மின் விநியோக இணைப்பிலிருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்கள் மின் சாரத்தைப் பெற்று இருக்கின்றார்கள். இதேபோல் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட சகல பொது வசதிகளும் மேம் படுத்தப்படுகின்றன.

இந்த வேலை த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரத்தில் அந்த மக்களின் பிரதான வாழ்வாதாரத்துறைகளான விவசாயத்தையும், கடற்றொழிலை யும் அதேபோல் கால்நடை வளர்ப்பையும் மேம்படுத்தத் தேவையான வசதிகளை ஏற்படுத் திக் கொடுக்கின்றோம். இந்த இரண் டையும் செய்த பின்னர் மக்கள் மத் தியில் செல்ல வேண்டிய சேவைகள் இரண்டு உள்ளன. ஒன்று வீடு, மற்றையது அவர்களது வாழ்வாதாரம். அதனையே திவிநெகும ஊடாக செய்கின்றோம்.

இந்த வகையில் வீடுகளை வெளி நாடுகளின் உதவிகளைப் பெற்று அமைத்து வருகின்றோம்.

இதேபோல் வடபகுதி மக்களுக் குப் பல வருடங்களாகக் கிடைக் கப்பெறாத சமுர்த்தி உதவியை இப்போது பெற்றுக் கொடுக்கின் றோம். அத்தோடு இவ்வருடம் தான் ஜனாதிபதி வடபகுதி மக்களு க்கு சமுர்த்தி வங்கியைப் பெற் றுக்கொடுத்திருக்கின்றார். மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இப்போது தான் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால் ஏனைய மாவட்டங்களில் சமுர்த்தி அறிமுகமானது முதல் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சேவையாற்றி வருகின்றார்கள்.

அரசாங்கம் இவ்வாறு விரிவான அடிப்படையில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வடக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுத்து வருகின்றது. அங்கு வீதிகள் அபிவிருத்தி செய் யப்பட்டுள்ளன. மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை யாவும் பொதுவானவை.

ஆனால் இப்போது முதற் தடவையாக கிராமத்திற்கு கிரா மம் வீட்டுக்கு வீடு, ஒவ்வொரு வரையும் சென்றடையக் கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டமாக திவிநெகுமவை அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வேலைத்திட்டத்திற்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அச் சப்படுகின்றனர். அத்தோடு நாம் அம்மக்களுக்கு வீடுகள் அமைத் துக் கொடுப்பதையிட்டும் கூட் டமைப்பினர் பீதியடைந்துள்ளனர். அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் மேம்படுத்துவதையிட் டும் அவர்கள் பயப்படுகின்றனர்.

நாம் வடபகுதி தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத் தும் போது அந்த மக்களின் உள்ளங்களை நாம் வென்று விடுவோம். அந்த மக்கள் எம்பக் கம் அணி திரண்டு விடுவார்கள். அந்த நிலமை தமது வாக்கு வங்கியைப் பெரிதும் பாதித்துவிடும். இதனை அடிப்படையாக வைத்து தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இச்சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்.

வடக்கில் வாழும் தமிழ் மக்களை அரசாங்கம் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்புவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறிதளவேனும் விரும்புகின்றார்கள் இல்லை. அந்த மக்களைத் தொடர்ந்தும் வறிய நிலை யில் வைத்திருக்கவும் அம்மக்களின் உள்ளங்களில் எமக்கு எதிரான பகைமை உணர்வை வளர்த்து குரோத மனப்பான்மையைத் தொடர்ந்தும் பேணவே விரும்புகின்றார்கள். அத னால்தான் நாம் அம்மக்களின் மேம் பாட்டுக்காக எந்த வேலைத்திட்ட த்தை முன்னெடுத்தாலும் அதனை அவர்கள் ஒன்றில் எதிர்க்கின்றார்கள் அல்லது அவ்வேலைத்திட்டங்களைத் தடுக்கும் செயலில் ஈடுபடுகின்றார்கள்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியனவா?

பதில்: அரசாங்கம் வடக்கு தமிழ் மக்களின் சுபீட்சத்திற்காகக் கொண்டு வந்திருக்கும் திவிநெகும சட்டமூலத்தை எதிர்க்கும் பிரதான தரப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்ற போர்வையில் அம்மக்களின் மேம்பாட்டுக்குத் தடையாக இருந்து வருகின்றார்கள்.

2001 ஆம் ஆண்டிலும் 2004ம் ஆண்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே பாராளுமன் றத்திற்கு வந்தனர். அதனை அவர்களது அன்றைய தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அவற்றை அவர்கள் இன்று வரையும் வாபஸ் பெறவில்லை. ஆகவே புலிகள் தமிழ் மக்களுக்குச் செய்த நன்மை களுக்கும், தீமைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்புக் கூற வேண்டும்.

வடபகுதி தமிழ் மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், வீதிகள் உட்பட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளையும் புலிகள் ஒன்றில் அழித்தனர், அல்லது சேதப்படுத்தினர். தமிழ் மக்களது உயிர்களும், உட மைகளும் கூட அவர்களால் அழிக் கப்பட்டன.

அதேநேரம் முன்னாள் பிரதமர் மறைந்த சிறிமாவோ பண்டாரநாய க்கா அன்று யாழ்ப்பாணத்திற்கென பல்கலைக்கழகமொன்றை வழங் கினார். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய தலைவர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சத்தியாக்கிரகம் கூட நடத்தினர். பல்கலைக்கழகத் தொடக்க வைபவ த்தை கூட பகிஷ்கரித்தனர்.

இதன் விளைவாக அப் பல் கலைக்கழகத்திற்கு அன்று விவசாய பீடம் இல்லாமல் போனது. அதனை எமது ஜனாதிபதியே இப்போது பெற்றுக்கொடுத்து இருக்கின்றார்.

சமுர்த்தி நிவாரண உதவித் திட்டம் நாடுபூராவும் செயற்படுத்தப்பட்ட போது அத்திட்டத்தை வடக்கின் பெரும்பா லான பிரதேசங்களில் நடைமுறைப் படுத்த முடியாது போனது.

இதற்குப் புலிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தடையாக இருந்தனர். இதனால் சமுர்த்தித் திட்டத்தின் பலன்கள் வடக்கின் தமிழ் மக்களுக்குப் பல வருடங்க ளாகக் கிடைக்கவில்லை. அதனையும் எமது ஜனாதிபதி கடந்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இதேநேரம் வடக்குத் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பிரதான பிரச்சினைகளில் காணி உரிமை பத்திர விவகாரமும் ஒன்றாகும். அம்மக்களின் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கவென 'பிம்சவிய' திட் டத்தின் ஊடாக நாம் நடவடிக்கை எடுத்தோம். அந்த வேலைத் திட் டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்று அவ்வேலைத் திட்டத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சரைப் பெறவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த தேர்தலில் அபேட்சகர்களை நிறுத்தியது. அங்கு எல்லா மக்களும் சரிசமமாக வாழுகின்றார்கள். ஆனால் தமிழ் தேசி யக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தமிழ் மக்களுக்காக எனக் கூறி தேர்தலில் குதித்தது. இதன் விளைவாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்த மாகாண சபையில் தமிழ் அமைச்சர் மாத்திர மல்லாமல் சபைத் தலைவர், பிரதித் தலைவர் பதவிகளைக் கூட தமிழர் களுக்கு இல்லாமலாக்கி விட்டது.

இவ்வாறு தமிழ் மக்களின் வாக் குகளை பெற்றுக்கொண்டு தொடராக அம்மக்களுக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இழைத்து வருகின்றது. அந்தடிப்படையில் இப்போது 13வது திருத்தத்திலுள்ள சில குறைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திவிநெகும திட்டத்தின் நன்மைகள் வடக்கு தமிழ் மக்களுக்குச் சென்றடைவதைத் தடுப்பதற்கு அவர் கள் முயற்சி செய்கின்றார்கள். இது வடபகுதி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசி யக் கூட்டமைப்பு இதுவரை செய்ததை விடவும் மிக மோசமான மகா துரோகமாக அமையும்.

 

இதேநேரம் திவிநெகும சட்ட மூலம் தாமதப் படுத்தப்படுவதால் சமுர்த்தி திட்டத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள் ஓய்வூதியத்தை இழக்கின்றார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பாக்கிய சோதி மற்றும் வெலிஅமுன போன்றவர்களுமே வகை சொல்ல வேண்டியவர்களாவர்.

மேலும் நாம் வடபகுதி மக்களின் சுபீட்சத்திற்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக அத்திட்டங்களுக்கு உதவியளிக்க வேண்டாமென நாட்டுக்கு நாடு சென்று கூறுகின்றார்கள்.

இதனடிப்படையில் இந்தியா, சீனா நாடுகளின் பிரதிநிதிகளையும் கூட அவர்கள் சந்தித்துள்ளனர். இவர்கள் சந்தித்தாலும் அந்நாடுகள் எமக்கு தொடர்ந் தும் முன்பைவிட அதிகமாக உதவுகின்றன. என்றாலும் இவர்கள் செய்கின்ற வேலையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படும். அதனை அவர்கள் உணர வேண்டும்.

மியன்மார் நாட்டு எதிர்க் கட்சி தலைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போதிலும் கூட தமது நாட்டுக்கு எதிராகத் தடைகளைக் கொண்டு வர வேண்டாமென சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொண்டார். இப்படியானவர்களைத் தமிழ்த் தேசிய கூட்ட¨மைப்பினர் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்காலிக நலன்புரி நிலையங்களின் கூரைகளுக்கு கிடுகளுக்கு பதிலாக தகரமும் நலன்புரி நிலையத்தின் நிலத்திற்கு சீமெந்தும் போடப்படுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அந்நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் பருவ பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நாம் இந்நடவடிக்கை எடுக்கின்றோம்.

வவுனியா மெனிக் பாம் நலன்புரி நிலையத்திற்கு மின்சார வசதி செய்யப்பட்ட போது அங்கு மக்களைப் பல வருடங்களாக வைத்திருக்கப் பார்க்கிறார்கள் என்றும் எம்மீது குற்றம்சாட்டினார்கள். ஏன் இவ்வளவு வசதி மிக்கதாக நலன்புரி நிலையங்களை அமைக்கின்aர்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.

நாம் வடபகுதி மக்களின் மேம்பாட்டுக்காக முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் காரணமாக சில சர்வதேச அமைப்புகள் நலன்புரி நிலையங்களுக்கு வழங்கவென குப்பை கூடைகளைக் கூட எமக்கு வழங்க மறுத்தன. இதனை எழுத்து மூலம் அந்நிறுவனங்கள் எமக்கு அறிவித்தன.

இதேபோல் நாம் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும், அந்நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்திய போதும் அதற்கு எதிராகவும் அவர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால் இப்பணியில் பாதுகாப்புப் படையினரையும் ஈடுபடுத்தி இராவிட்டால் இம்மக்களைத் துரிதமாக மீளக்குடியேற்றி இருக்க முடியாது.

தமிழ் கூட்டமைப்பினரின் எதிர்ப் பிரசார நடவடிக்கை காரணமாக கண்ணி வெடிகள் அகற்றும் பணிக்கென பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா முதலில் நிதியுதவி வழங்க முன்வரவில்லை. பின்பே கள நிலவரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து நிதியுதவி வழங் கினார்கள். இப்போது உலகில் சிறந்த முறையில் கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவினராக அமெரிக்காவினால் எமது பாதுகாப்புப் படையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களின் போக்குவரத்து வசதிக்காக வீதிகளை அபிவிருத்தி செய்த போது அது இராணுவத்தினரும் அவர்களது கவச வாகனங்களும் பயணம் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாகக் கூறினர். கவச வாகனங்களைக் கொண்டு செல்ல பாதுகாப்புப் படையினருக்கு பாதைகளை அபிவிருத்தி செய்யத் தேவை இல்லை.

அவர்கள் உடைக்கப்பட்டிருந்த பாதைகள், பாலங்களையும் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் கடந்து சென்றுதான் புலிகளின் பிடியில் மனிதக் கேடயங்களாகச் சிக்கி இருந்த மக்களை மீட்டெடுத்தனர். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த தமிழ் மக்கள் தப்பி வந்த போது அவர்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.

மக்களின் போக்குவரத்து சிரமங்களை நிவர்த்தி செய்யவே நாம் பாதைகளை அபிவிருத்தி செய்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சட்டத்தரணி எம்.பி. ஒருவர், ‘தாம் காலையில் யாழிலிருந்து வவுனியாவுக்கு வந்த நீதிமன்ற வழக்ககுகளில் ஆஜராகி விட்டு பகல் சாப்பாட்டுக்கென மீண்டும் யாழ்ப்பாணம் சென்று விடுவதாகக் கூறியுள்ளார். அதற்கு எமது வீதி அபிவிருத்தியே பெரிதும் உதவி இருக்கின்றது.

மேலும் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் மாதக்கணக்கில் திருகோண மலைக்குச் செல்லாதவர். இப்போது அடிக்கடி திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் அவர் சென்று வருகின்றார். ஒன்றரை மணித்தியாலங்களில் திருமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று வர முடியும். நாம் பாதைகளை அபிவிருத்தி செய்ததன் பயன்களை அவர்களும் அனுபவிக்கின்றார்கள். இந்த வீதிகளில் மட்டக்களப்புக்குச் சென்று தான் அவர்கள் மக்களைக் கொதிப்படையச் செய்தார்கள்.

நாம் தொலைத் தொடர்பு வசதியையும், மின்சார வசதியையும் எல்லா இடங்களுக்கும் வழங்கியதால்தான் டயஸ்போரா அனுப்பிய படங்களை அவர்களால் எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்த முடிந்தது.

கேள்வி: வடக்குத் தமிழ் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் திவிநெகும திட்டத்தைத் தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றதே?

பதில்:

நாட்டில் நீண்ட காலமாக இருந்து பரிணாமம் அடைந்து தொடராக முன்னெ டுக்கப்படும் ஒரு வேலைத் திட்டத்தையே திவிநெகும சட்ட மூலம் ஊடாகக் கொண்டு வந்துள்ளோம். நாட்டு மக்களுக்கு மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதை நோக்கமாகக் கொண்டு ஏற்கனவே இருந்த திட்டங்களில் காணப்பட்ட குறைகள் இத்திட்டத்தில் நிவர்த்திக்கப்பட்டு பொருத்தமான முறையில் இச்சட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வேலைத் திட்டத்தை மக்கள் ஆணை இல்லாத சிலர் நிறுத்த முயற்சி செய்வார்களாயின், அதற்கு ஏதாவது சட்டம் துணையாக அமையுமாயின் அந்த சட்டத்தைத் திருத்துவதற்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும். அந்த வகையில் வடக்கு மக்களுக்கு அதிக சேவை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் அந்த மக்களுக்குச் சேவை செய்வதற்குத் தடையாக அமையுமாயின் மக்கள் அரசாங்கம் என்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதேநேரம் வடக்கு மக்களுக்கு சேவை செய்வோம் என அம்மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் (டயஸ்போரா) விருப்பதற்கு ஏற்ப செயற்படாமல் இருப்பார்களாயின் பிரச்சினை இராது. அப்போது 13வது திருத்தத்தை அம்மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்த முடியும்.

அதேநேரம் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அன்று 13வது திருத்தத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைப் புலிகள் படுகொலை செய்தனர். இதில் குறைகள் உள்ளதாகக் கூறினர். அந்தக் குறைபாடுகளைக் கொண்டு திவிநெகும சட்டமூலத்தை தடுக்கவே அவர்கள் இப்போது முயற்சி செய்கின்றனர். இதனூடாக இத்திட்டத்தை வடக்கு மக்களுக்கு இவர்கள் தடுப்பார்களாயின் அது வடக்கின் எதிர்கால பரம்பரையினருக்கு செய்யும் பெரும் பாவமாக அமையும்.

இதே நேரம் வடக்குத் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு 13வது திருத்தத்தின் காரணமாக முடியாத நிலை ஏற்படுமாயின் அது அத்திருத்தத்தின் குறைபாடுகளையே வெளிப்படுத்துகின்றது. இக்குறைபாடுகள் ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ இடையூறாக அமையாது. நாம் அம்மக்களுக்குத் தொடர்ந்தும் சேவை செய்வோம்.

கேள்வி:- அப்படியாயின் 13வது திருத்தத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:-

இத்திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், போதாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அக்குறைபாடுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு தமிழ் மக்களை வறுமையிலிருந்து விடுவிக்க நாம் முன்வைத்திருக்கும் திவிநெகுமவை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயலுமாயின் அத்தடையை நீக்குமாறு வடக்கு மக்களே கோருவர்.

அவர்களுக்காக அத்தடைகளை நீக்க நேரிடும். அதனால் இதனை ஒரு தடையாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். ஏதோ ஒரு தரப்புத்தான் இதனை உருவாக்கியது வடக்கு மக்களுக்கு சேவை செய்வதற்காக... அதனையே தடை கல்லாக ஆக்கிக்கொள்ளுவது தவறான நடவடிக்கை.

நெருப்பு இருக்கின்றது. அதனைக் கொண்டு வீட்டை எரிக்கவும் முடியும். அதேபோல் உணவு சமைத்தல், நீரை சூடாக்குதல், போன்றவாறான நன்மைகளையும் அதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நெருப்பை போன்று தான் இவ்விவகாரம். இங்கு நெருப்பின் பிழை அல்ல. அந்த வகையில் இத்திருத்தத்தைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறாகப் பாவிக்க முயற்சி செய்யக்கூடாது.

கேள்வி: அப்படியாயின் 13வது திருத்தத்தை சீரமைக்கும் வகையில் 19வது திருத்தம் கொண்டுவரப்படுமா?

பதில்:

மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எவருமே எதிர்ப்பில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தால் அதுவே மிகச் சிறந்த காரியம். இப்போது சிலர் மக்களது ஆணையைப் பறிக்கவல்லவா பார்க்கின்றார்கள். அதிகாரம் தலைவர்களுக்குத் தான் தேவைப்படுகின்றது. மக்களது தேவையோ வேறாக உள்ளது. 13 வது திருத்தத்தில் மட்டுமல்லாமல் 19வது திருத்தத்தின் ஊடாகவாவது மக்களுக்கு அதிகாரம் வழங்க நாம் தயாராகவுள்ளோம். அதனால் தான் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்து மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு கூறுகின்றோம்.

மாவட்டமுறை அமுலில் இருந்தபோது இந்திய வம்சாவளி மக்கள் நுவரெலிய மாவட்டத்தில் சக்தி மிக்கவர்களாக விளங்கினார்கள். ஆனால் மாகாண சபை முறை அமுலுக்கு வந்ததோடு அவர்கள் சக்தியற்றவர்களாகினார்கள்.

இதேபோல் விருப்பு வாக்கு முறையால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை. இம்முறைமை அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஏதாவது ஒரு கட்சியில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் தெரிவாவர். இப்போது அப்படி முஸ்லிம் பிரதிநிதி தெரிவாவதில்லை.

இதேநிலை தான் பேருவளைத் தொகுதிக்கும் நேர்ந்து இருக்கின்றது. ஆகவே பிரச்சினைக்கு தீர்வு தேடுவதாயின் சகலரும் ஒன்றுபட்டுத் தேட வேண்டும். சகலரதும் கருத்துகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். அதேநேரம் மக்களுக்கு முடிவுகளை எடுக்கக்கூடிய உரிமையும் வழங்கப்படவேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இன்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட முடியாது. இதுவரை காலமும் தேடப்பட்ட தீர்வுகள் தோல்வியுற மக்களின் எதிர்ப்பே காரணம்.

நாம் மஹிந்த சிந்தனையில் நாடு ஐக்கிய இலங்கையாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கின்றோம். அது அரசியல் யாப்பில் மாற்ற முடியாத ஷரத்துக்களில் ஒன்றாகும்.

இதேவேளை நாட்டில் வாழுகின்ற சகலருக்கும் இனம், மதம், குலம், வாழும் பிரதேசம், ஏழை, பணக்காரன் என்ற அடிப்படைகளில் வேறுபாடு காட்ட முடியாது. எல்லோருக்கும் ஒரேவிதமாக வரப்பிரசாதமும், உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் என்ற வகையில் எதையும் செய்யக் கூடிய அதிகாரமும் சக்தியும் எமக்கு இருந்தாலும் பொது மக்களின் அப்பிராயத்திற்கு நாம் செவிசாய்க்கின்றோம். நாம் நல்லதை செய்யப்போகின்ற சில வேளைகளில் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.

அப்போது அந்த வேலைத் திட்டத்தை வாபஸ்பெற்று விடுகின்றோம். இதற்கு தனியார் துறையினருக்கான ஓய்வூதிய திட்டம் நல்ல உதாரணம். இத்திட்டத்தை வைத்து ஏதோவொரு குழு மக்களை குழப்பிவிட்டது. அதனால் அரசாங்கம் அத்திட்டத்தை வாபஸ் பெற்றது. இதனூடாக பெரிய ஒருதலையிடி நீங்கியது.

கேள்வி: இறுதியாக, திவிநெகும சட்ட மூலத்திற்கு 13வது திருத்தம் தடையாக அமையுமெனக் கருதுகின்aர்களா?

பதில்: அவ்வாறு அமையுமாயின் அத்தடையை நீக்குமாறு வடக்கு மக்களே கூறுவர். 13வது திருத்தத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு எதிர்ப்பும், விமர்சனமும் உள்ளது. அந்த எதிர்ப்பு உத்வேகத்துடன் வேகமாக வெளியே வர இடமளிக்காதீர்கள்.

நாம் வாக்கு பெறும் நோக்கில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடக்கில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களைத் தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதுதான் இத் திட்டத்தின் நோக்கம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று முதலில் வட பகுதியைக் கட்டியெழுப்பத்தான் பணம் கொண்டு வருகின்றார். மாறாக அவரது மக்களுக்காக அல்ல. ஆனால் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையும் ரயில் பாதையை நீடிக்குமாறு ஜனாதிபதி இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது 1976 களில் யோசனையை முன்வைத்தார்.

ஆனால் அதில் ஒரு அங்குலம் கூட இற்றைவரையும் அமைக்கக் கிடைக்கவில்லை. இப்போது தான் அதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிரு க்கின்றன. ஆனால் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்திற்குமான ரயில் பாதைகள் அடுத்த வருடம் திறந்து வைக்கப்படும். அவை புலிகளால் அழிக்கப்பட்டவையே. ஆனால் இவ்விரு பாதைகளையும் மீளமைப்பதற்குச் செலவிடப்படும் நிதியில் அரைவாசியைக் கொண்டு மாத்தறை முதல் கதிர்காமம் வரை அமைக்க முடியும்.

இதேவேளை நான் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசங்களுக்குச் செல்லும் போது குற்ற உணர்வை உணர்கின்றேன். ஏனெனில், இந்நாட்டுக்கு வருடா வருடம் பெருந்தொகையான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் இம்மக்களின் வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் முன்னேற்றப் படாதுள்ளன.

அவர்கள் நாட்டில் அழிவை ஏற்படுத்தாது ஆக்கத்திற்குப் பங்களித்து வருபவர்கள். அதனால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற வீடுகளில் ஒரு தொகையை மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குமாறு இந்திய அரசிடம் நான் கேட்டுக் கொணடேன். அதற்கேற்ப ஐயாயிரம் வீடுகள் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு நாம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தவே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com