Contact us at: sooddram@gmail.com

 

வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பனிப்போர் என்ற செய்தியில் உண்மையில்லை!

பதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும், இது வழமை போல் புனையப்பட்டு சோடிக்கப்பட்டிருக்கும் பொய்த்தகவல் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில,.. தேர்தல் என்பது எமது கட்சியின் இலக்கு அல்ல. தேர்தல் மூலம் பதவி நாற்காலியை மட்டும் எட்டிப்பிடிப்பது எமது விருப்பமும் அல்ல. எமது அரசியல் இலக்கு நோக்கிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலும் ஒன்று என்பதே உண்மை. தேர்தலின் மூலம் அரசியல் அதிகாரங்களை பெறுவதன் ஊடாகவே நாம் இது வரை அரசியல் தீர்வை நோக்கியும், அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார வசதிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலும் வெற்றியின் திசை நோக்கி நடந்து வந்திருக்கிறோம். மாகாண சபை அதிகாரம் என்பது அரை குறை தீர்வு என்றும், உழுத்துப்போனது என்றும் சக தமிழ் கட்சி தலைமைகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், நாம் மட்டுமே மாகாண சபையில் இருந்து தொடங்கி எமது அரசியல் இலக்கு நோக்கி செல்  ுடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள்.

ஆகவே தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், மாகாண சபையை மறுபடியும் எமது மக்களுக்கு உருவாக்கி கொடுத்ததன் வெற்றி எமது கட்சியையும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களையுமே சாரும். இத்தகையை அரசியல் வெற்றியை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கும் எம்மை கொச்சைப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யான செய்திகளை நாம் வெறுக்கின்றோம்.

எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விகளையோ அன்றி அது குறித்த கோரிக்கைகளையோ எமது கட்சி சார்பாக இது வரை நாம் எவரிடமும் விடுத்ததில்லை.  எமது இலக்கும், எண்ணமும் மாகாண சபை யார் கையில் இருந்தாலும் அது எமது மக்களின் எதிர்கால இலட்சியத்தை நோக்கி வழி நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும். எதிர்க்கட்சி என்றால், ஆளும் கட்சி எதை செய்தாலும் சரி, தவறு பார்க்காமல் எதிர்க்கும் அருவருப்பான உண்மைகளே இதுவரை இங்கு நடந்தேறி வந்திருக்கின்றன.

இத்தகைய கசப்பான நிகழ்வுகள் இனியும் இங்கு நடக்க நாம் அனுமதியோம். வட மாகாண சபை எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது நாம் அதை எதிர்க்கட்சியாக இருப்பினும் ஆதரித்து வரவேற்போம். தவறுகள் நடந்தால் மட்டும் தட்டிக்கேட்போம். இதையே எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் கட்டளையாக எமக்கு பிறப்பித்துள்ளார் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு செயலாளர்

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com