Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தை வென்று மீண்டுள்ளேன் பிடல் காஸ்ட்ரோ

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு திரும்பி வந்திருக்கின்றேன் என்று கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெருகும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட போது பிழைப்பேனோ, மாட்டேனோ என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்று மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது, எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது பிழைப்பேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை காப்பாற்ற முடியாது என்று கைவிட்டுவிடுவார்களா என்றெல்லாம் எனக்குள் நான் எத்தனையோ கேள்விளைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் குணமடைந்து விட்டேன்.

உடல்நிலை சற்றுத் தேறியவுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல் நலக் குறைவால் எனது கால்களும், கைகளும் வலுவிழந்து இருந்தன. இதனால் எனது கால்களையும், கைகளையும் பழையபடி கொண்டுவர முயற்சித்தேன்.

எழுந்து நிற்கவே படாதபாடுபட்டேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்தேன். எழுதி எழுதி கைகளை சரிசெய்தேன். என் உடலையும், உள்ளத்தையும் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டேன். இதனால்தான் என்னால் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.

உடல் நலம் பாதிக்கப்பட்டபோது உடல் எடை வெகுவாகக் குறைந்தது. தற்போது உடல் எடை அதிகரித்து 85 கிலோவாக உள்ளது. எனினும் உணவு, மருந்து உட்கொள்வதில் மருத்துவர் ஆலோசனையை தவறாது கடைப்பிடிக்கிறேன்.

எனது உடல்நிலை குறித்து எனக்குள் எழுந்த கேள்விகளையும் சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு தற்போது எனக்கு மருத்துவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் நான் பட்டம் பெறாத மருத்துவராகி விட்டேன் என்று அவர் கூறினார். இந்தப் பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார் என்று அவரைப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக ஆண்டவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006 ஆம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ, மரண வாயிலைத் தொட்டுத் திரும்பினார். காஸ்ட்ரோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரை உயிராய் நேசிக்கும் கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவரின் உடல்நிலை படிப்படியாகத் தேறியது. இனியும் தன்னால் ஜனாதிபதி பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்த அவர், அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்படைத்தார். தற்போது அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com