Contact us at: sooddram@gmail.com

 

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் 13-09-2010 அன்று வழங்கிய சாட்சியம்

ஆணைக்குழு தலைவர்:- எமது விசாரணை ஆரம்பிப்பதற்கு முன் உங்களுக்குளன்ள பல்வேறு வேலைப்பளுவின் மத்தியிலும் இந்த ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமைக்கு நன்றி தெரிவித்து இக்குழுவின் நடைமுறை பற்றி விளக்க விரும்புகின்றேன். நீங்கள் பகிரங்கமாகவோ அன்றி இரகசியமாகவோ வாக்குமூலம் அளிப்பதென நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். வாக்குமூலம் அளித்ததன் பின் ஆணைக்குழுவினர் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கலாமே தவிர வேறு யாரும் கேட்க முடியாது. பொது மக்களோ அல்லது  இங்கு பிரசன்னமாகி இருப்பவர்களோ கேள்வி கேட்க முடியாது. அத்துடன் நீங்கள் பதிலளிக்கும் போது ஒரு பகுதியை இரகசியமாக முன்வைக்க விரும்பின் அதையும் நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம்.

திரு. வீ.ஆனந்தசங்கரி :-

இவ் ஆணைக்குழுவிற்கு மிக முக்க்pயத்துவம் கொடுத்துள்ளமையினால் நான் சென்னையில் இருந்து நேற்றிரவு இங்கு சமூகமளிக்க வந்துள்ளேன். நேரம் போதாமையினால் விரும்பிய சில ஆவணங்களை கூட பரிசீலிக்க முடியவில்லை. எது எப்படியிருப்பினும் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பல ஆண்டுகாலமாக எதிர்நோக்கியமையால் நுணுக்கமாக ஆராய வேண்டிய விடயத்தை தவிர்த்து ஏனையவற்றை ஞாபகப்படுத்தி கூற முடியும். நான் அவதானித்தவற்றையும் எனது சிபாரிசுகளையும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வாய்ப்பளித்தமைக்கு ஆணைக்குழுவுக்கு என்னுடைய நன்றிகள். இவ்வேளை நான் தமிழ் இனத்தையோ வேறு எந்த சமூகத்தினரையோ பிரதிநிதித்துவப்படுத்தாமல் இந்நாட்டையே பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் எப்பொழுதும் இந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளேன். ஆகவே உங்களை தவறாக வழிநடத்தாமல் நான் கூறும் அனைத்தும் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளை எடுக்க உதவுமென உத்தரவாதமளிக்கிறேன். நிச்சயமாக தமிழ் சமூகத்தினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே நான் கூறுவனவற்றில் சில உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இன்னும  சில பொருத்தமற்றதாகவும், மிக பொருத்தமானதாகவும் தோன்றலாம். நான் எதையும் திட்டமிட்டு கூறவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு மன்னிக்குமாறு முன்கூட்டியே கேட்டுக் கொள்கிறேன்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம்

இப்போது நாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பரிசீலிப்போம். நான் என்றும் விடுதலைப் புலிகளை வன்மையாக எதிர்த்தவன் அல்ல. ஏனையவர்கள் போல் மற்றும் வேறு சமூகத்தவர்கள் போல விடுதலைப் புலிகள் நல்லதொரு காரணத்திற்காக போராடுவதாக நம்பினேன். சிலர் அமைதியாக இருந்தனர். சிலர் கடுமையாக அவர்களை ஆதரித்தனர். மற்றும் சிலர் நியாயமற்ற முறையிலும் தேவையற்ற நிலையிலும் அவர்களை ஆதரித்தனர். விடுதலைப் புலிகளுடன் நான் மிகவும் கவனமாக செயற்பட்டேன். ஆனால் எனது நிலைப்பாடு பெருமளவில் தப்பாக விளங்கிக் கொள்ளப்பட்டது. நான் வெளிப்படையாக பேசுவதே அதற்கு காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை பற்றி ஒரு சில வார்த்தைகள். அதற்கு என்னை மன்னீப்பீர்களாக. பிரபாகரன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அவ்வேளை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது எனது உரையில் யசீர் அரபாத் போன்று திரு வே. பிரபாகரன் அவர்களும் உலகத்தை சுற்றிவரும் காலம் வரும் என்றும், பிரபாகரனை பிடித்து விசாரிப்பதற்கு இது உகந்த நேரமல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். நான் மட்டுமல்ல இனப்பிரச்சினை தீர்வுக்கு விடுதலைப் புலிகள் ஆர்வமாக உள்ளனர் என எல்லோருமே நம்பினோம். ஆகவேதான் நான் அவரை பாராளுமன்றத்தில் வன்மையாக கண்டிக்காது அவர் சார்பாகவும் உரையாற்றினேன். பல சந்தர்ப்பங்களில் அவருக்கு சங்கடமான நிலைமையையும் உருவாக்கியுள்ளேன். எனது கடிதங்கள் மூலமாக என்னால் கேட்கப்பட்ட பல கேள்விகள் அவருக்கு பல சங்கடங்களை உருவாக்கியிருக்கும். துரதிஷ்டவசமாக தமிழ் ஊடகங்கள் என்னுடன் ஒத்துழைத்திருந்தால் இன்று இந்த நிலைமை முற்று முழுதாக மாறுபட்டு இருந்திருக்கும். தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. அன்று அவர்கள் செய்த வேலைகள் எல்லாவற்றிற்கும் பிரபாகரனை மிகைப்படுத்தி பாராட்டி வந்தனர். அவர்களின் செயற்பாடுகளை நான் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதெல்லாம் என்னை துரோகி என ஊடகங்கள் வர்ணித்தன.

ஐயா, நான் இங்கே எனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த வரவில்லை. கடந்த ஐந்து ஆண்டு காலமாக நான் எத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தேன் என்பதற்கு விளக்கமளிப்பதே எனது நோக்கமாகும். இப்போது நான் மௌனமாக இருந்திருக்கலாம் என உணர்கிறேன். முட்டாள்த்தனமாக நடந்து கொண்டேன் என்பதையும் உணர்கின்றேன். ஏனைய பலரை போல் நான் மௌனமாக இருந்திருக்கலாம். அதற்குரிய தண்டனையை நான் இப்போது அனுபவிக்கிறேன். விடுதலைப் புலிகளிற்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அரசுக்கும் இடையில் நான் நசுக்கப்பட்டேன் அரசின் எடுபிடியாக என்னை விடுதலைப் புலிகளும் எல்லா விடயங்களிலும் அரசை சரியென நான் ஆதரிப்பதாக அரசும் கருதி வந்துள்ளன. ஆனால் அது உண்மையல்ல. இந்த விடயங்களில் நான் எப்பொழுதும் சுதந்திரமான கருத்தையே கொண்டிருந்தேன். அவசியம் ஏற்படும் போது அரசையும் எப்போது தேவையோ அப்போது புலிகளையும் கண்டித்து வந்துள்ளேன். இதுதான் நான் வகித்த பாத்திரமாகும். யாராவது எவரேனும் நான் அரச ஆதரவாளன் என அல்லது அரசின் எடுபிடி எனவும் தப்பாக விளங்கி இருந்தால் நான் அப்படியல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமிட்டு வெளியிட்டவேளை யுத்த நிறுத்த ஒப்பந்தம் சம்பந்தமாக விவாதிக்க அரசு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்காதது பிழையென அன்று நான் கருத்து கொண்டிருந்தேன். அது சம்பந்தமாக மக்களிடம் கருத்து கேட்டிருந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலும் பார்க்க நல்ல பல சரத்துக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்pல் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதே யுத்த நிறுத்த ஒப்பந்தமாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் முக்கிய தவறு என்னவெனில் அரசு அதில் ஒப்பமிடுவதற்கு முன்னரே மக்களின் பரிசீலனைக்கு முன் வைக்காமையே. இரண்டாவதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த கால எல்லை குறிப்பிடப்படாமையால் அது பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒபப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக அரசுக்கு வழங்கப்படாத அவசியமற்ற முக்கியத்துவம் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டமை. உதாரணமாக விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாராளமாக வந்து செல்லும் உரிமை. ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மட்டுமென இருந்து காலப்போக்கில் நாட்டின் எப்பகுதிக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போய் வருகின்ற வாய்ப்பு அரசுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கோ வழங்கப்படவில்லை. அதுவே மிக முக்கிய பெரிய தவறாகும். ஏனையோருக்கு தெரியாத வகையில் விடுதலைப் புலிகள் எதையும் செய்யக்கூடியதாக இருந்தது. மற்றவர்கள் எவரும் விடுதலைப் புலிகளுக்கு தெரியாது எதையும் செய்யமுடியாத நிலை இருந்தது. இது மிகப் பெரும் தவறு என எல்லோரும் ஒத்துக்கொள்வர். இரு தரப்பினரும் மற்றவர்களின் பிரதேசத்துக்குள் சென்று வரக்கூடியவாறு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இலங்கை இராணுவம் இராணுவ உடையிலோ அல்லது சிவில் உடையிலோ   விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் செல்லுகின்ற வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவரேனும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் சிவில் உடையிலோ அல்லது இராணுவ உடையிலோ செல்லவில்லை. “ இவைதான் இறுதியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிந்தமைக்கான காரணமாக அமைந்;தன”

யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்

இன்னுமொரு விடயம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறல்கள் சம்பந்தமானது. ஓன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கான ஒப்பந்த மீறல்களை விடுதலைப்புலிகளும், மிகச் சிறிய அளவிலான ஒப்பந்த மீறல்களை அரச படையினரும் செய்தனர். அரசை திருப்திபடுத்துவதற்காக இதை நான் கூறவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை மீறாது செயற்பட வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருந்தது. இப்போது அரசின் நிலைப்பாடு தெளிவாகிறது. உதாரணமாக விடுதலைப் புலிகளின் யுத்த மீறல்களில் ஒன்று ஸ்கண்டிநேவிய கண்காணிப்பு குழுவை சேர்ந்த சிலரை வன்னிக்கு கட்டியிழுத்து கொண்டு வந்தமையாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இந்த ஒரு உதாரணம் போதுமானதாகும். எல்லோரும் அவர்களின் குற்றங்களை சகித்துக் கொண்டனர். இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எதனையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. என்னிடம் ஒரு புகைப்படம் உண்டு. விடுதலைப் புலிகள் வவுனியா நகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழாவின் போது ஒரு பெண் விடுதலைப் புலி உறுப்பினர் தேசிய கொடியையோ, ஈழக் கொடியையோ அல்ல ஒரு புலிக் கொடியை ஏற்றியபோது கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த ஒரு அயல் நாட்டு பெண்மணி மிக இரகசியமாக அச் செயல் ஒப்பந்தத்தை மீறும் செயல் எனக் கூறும் போது கட்டாயத்தின் பேரில் அந் நிகழ்வுக்கு சமூகமளிக்க வரவழைக்கப்பட்டிருந்த  மாணவர் மாணவியர்கள் கூச்சலிட்டு வரவேற்றனர்.

இவ்வாறான மீறல்கள் இறுதியாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்கு காரணமாக அமைந்தது. அல்லாவிட்டால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நல்லதொரு முடிவை ஏற்படுத்த அல்லது உதவ பிரயோசமானமாக அமைந்திருக்கும். இந்த தவறை அன்று ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற கேள்விக்கு எனது பதில் நானும் அந்தத் தவறுக்கு பொறுப்பாளிகளில் ஒருவன் என ஒத்துக் கொள்கிறேன். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. பல ஆண்டுகளின் பின் கடத்தல், காணமல் போதல் கொலை, சித்திரவதை போன்ற விடுதலைப் புலிகளின் குற்றச்செயல்கள் நிறுத்தப்பட்டிருந்தமையினால் மக்கள் பெருமகிழ்ச்சியுடன் இருந்தனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தமை மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தமையால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நன்கு ஆராய வேண்டிய தார்மீக பொறுப்பு எல்லோருக்கும்; உண்டு என்பதை மறந்து விட்டனர்.  அதற்காக நான் ஒருவர் மீதும் குற்றம் சாட்டவில்லை.. அன்றைய அரசையோ அரசியல்வாதிகளையோ ஏனெனில் அக் குற்றத்தில் எனக்கும் பங்குண்டு என்பதால் தற்போது அதற்காக நான் வருந்துகிறேன். இக் குற்றங்கள் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை பற்றி நீங்கள் மறந்நிருக்கமாட்டீர்கள். அதற்கு நான்  எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். சில நண்பர்கள் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என என்னிடம் கோபித்து கொண்டனர். அவர்களுக்கு அதில் என்ன உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாது. அதன் சாரம்சங்களையோ அதை நான் எதற்காக எதி;ர்க்கிறேன் என்பது பற்றியோ தெரியாமல் ஒரு தமிழ் ஊடகம் என்னைப்பற்றி கசப்பான ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

ஓர் ஆங்கில தினசரி என்னுடைய கருத்தை விளங்கிக்கொண்டு அதை ஆதரித்து ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.  இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தமை எனக்கு துரோகி பட்டத்தை பெற்றுக் கொடுத்தது. புதிய அமைப்பாகிய இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை அங்கத்துவம் வழங்கி அரசுடன் செயற்பட வைப்பது தேவையற்ற ஒரு விடயமாக எனக்குத் தெரிந்தது. இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை கோட்பாட்டை நான் ஆதரிக்காமைக்கான காரணத்தை வெளிநாட்டு தூதுவர்களிடமும் எடுத்து கூறியிருந்தேன். இலங்கையின்  25 மாவட்டங்களில் 08 மாவட்டங்கள் வடக்கு கிழக்கில் உள்ளன. நான் வழங்கிய விபரங்களில் இவற்றில் எத்தனை மாவட்டஙகள் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் எத்தனை மாவட்டங்களில் ஒரு பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதையும் தெளிவுப்படுத்தியிருந்தேன். எம்மிடம் பல அரச அதிகாரிகள் இருந்தனர். அதில் அரச அதிபர்கள் 08 பேர், உதவி அரச அதிபர்கள் 08 பேர். மேலதிக அரச அதிபர்கள் 08 பேர். பல பிரதேச சபைகள் 75 என நினைக்கிறேன். தயாராக இந்த அமைப்பு இருக்கின்ற இவ் வேளையில் சுனாமியால் அழிவுற்றதை கட்டியெழுப்பவும், இழந்தவற்றை மீளப்பெறவும் புதிய அமைப்போ விடுதலைப் புலிகள் அபிவிருத்தியை மேற்கொள்ளவோ, மீளக்கட்டியெழுப்ப வேண்டிய நிலைமையோ தேவையில்லை என கண்டன மூலம் தெரிவித்தேன். அடுத்ததாக

ஏகபிரதிநிதித்துவம்

ஏகபிரதிநித்;துவ கோட்பாட்டை எடுப்போம். இதைப்பற்றி கூறிய ஒரேயொருவன் நானே. இதற்கு வேறு எவரேனும் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ முடியாது விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கூற்றுக்கு நான் சவால் விட்டிருந்தேன். அதனால்தான் உச்சியிலிருந்து பாதாளத்திற்கு தள்ளிவிடப்பட்டேன். 36,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று 09 உறுப்பினர்களில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட நான் அடுத்த தேர்தலில் அடித்தளத்துக்கு இறக்கப்பட்டேன். நான் பல காலம் ஆசிரியராக கடமையாற்றிய பகுதிகளில் கூட எனக்கு நூற்று சொச்ச வாக்குகளே கிடைத்தன. இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் தாம் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற விடுதலைப் புலிகளின் கூற்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதால்தான். அவர்கள் என்றும் எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றவும் இல்லை. பொது சேவையிலும ஈடுபடவும் இலலை. எல்லாவற்றையுமே தாமே தீர்மானித்து தாமே செய்தனர். அவர்களே நீதிமன்றங்களை அமைத்து, நீதிபதிகளை நியமித்து குற்றவாளிகளாக காணப்பட்டவர்களைகூட சிலரின் சிபாரிசுக்கு அமைய விடுதலை செய்து இப்படியெல்லாம் எல்லா விடயத்திலும் ஒரே குளறுபடியாக இருந்தது. இவர்களை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூற முடியும்? இது தவறாகும்.

 இப்போது அதே நபர்கள், அதே பத்திரிகைகள், அதே ஊடகங்கள் அந்த பிழையையே செய்கின்றன. ஒரு தடவையேனும்; எல்லோரும் சேர்ந்து விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் ஏதாவது ஒன்றை ஒரே மனதாக கண்டித்திருந்தால் அவர்கள் அதை மீள பரிசீலித்து எதிர்காலத்தில் திருந்தி செயற்பட்டு இருந்திருப்பர். அதை செய்ய எவரும் துணிந்து முன்வரவில்லை. ஆனால் துணிந்த என்னை துரோகி என அழைக்க அவர்களுக்கு பயமோ அல்லது யாரிடமிருந்து உத்தரவு பத்திரமோ தேவைப்படவில்லை. அதே பிழையை அவர்கள் மீண்டும் செய்கின்றனர். இன்னுமொரு குழுவின் செயற்பாடுகளை மிகைப்படுத்தி விடுதலைப் புலிகளின் வாரிசாக உருவாக்குகின்றனர். ஆனால் உண்மையாக போராடுகின்றவர்களை புறக்கணிக்கின்றார்கள். நான் அரசியல் பேச விரும்பவில்லை. அங்கே சிலர் மிக இலகுவாக தமிழ் மக்களிடம் சென்று இதுதான் இது என்று கூறியதும் தமிழ் மக்களும்  புத்தி சாதுரியமாக நடக்காது கடந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை மறந்து இத் தலைவர்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றனர். இன்று யுத்தத்தை வென்று விட்டோம், யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதால் நான் மகிழச்சியடைகின்றேன் என்பதை துரோகச் செயலாக சிலர் குற்றம் சாட்டலாம். ஆனால் இந்த யுத்தம் வென்றது இத்தகையவொரு நிர்வாகத்தை அமைப்பதற்காக அல்ல. “யுத்தம் வெல்லப்பட்டதுதான். அதற்கு என்ன விலை கொடுத்தோம்? யுத்தத்தில் அடைந்த வெற்றியை நீங்கள் கொண்டாடுவது சந்தோஷம்தான். ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பால் மக்கள் துயருற்றிருக்கும் இவ்வேளையில் உங்களுடைய வெற்றியில் என்னால் பங்குகொள்ள முடியவில்லை” என ஜனாதிபதிக்கு எழுதியிருந்தேன். என்னால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இன்று பத்திரிகைகளை பார்ப்பீர்களாக இருந்தால் யாரோ ஒரு பெண் என் கணவரை கண்டீர்களா? அவரை நான் பார்க்க வேண்டும். என் பிள்ளை என் கண் முன்னாலேயே கொல்லப்பட்டான் போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தடுப்பு முகாம்கள்

இடம் பெயர்ந்த மக்கள் சரியாக கவனிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் போராளிகளை பற்றி பேசுகின்றனர். கேள்விகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதனால் நான் சுருக்கமாக கூற விரும்புகின்றேன். 10,000 தொடக்கம் 11,000 பேர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பாராதூரமான குற்றமாகும் என மீண்டும் வலியுறுத்துகின்றேன். அவர்கள் அனைவரும் எமது பிள்ளைகள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் 20, 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக் காவலில் வைக்கப்படடி;ருந்;த ஜே.வி.பி போராளிகள் புனர்வாழ்வுக்காக கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டார்கள். அப்பொழுது புனர்வாழ்வு அமைச்சராக இருந்த கௌரவ மறைந்த கே.பி. ரட்ணாயக்கா அவர்கள் எனது நல்லதோர் நண்பன். ஒருநாள் என்னை அவர் அழைத்து ஒரு குறுகிய காலத்துக்கு தடுப்பில் உள்ளவர்களை உங்கள் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும், நான் ஆட்சேபிக்க கூடாதென்றும் கேட்டிருந்தார். அதற்கு நான் கூறிய பதில் அவர்கள் எமது பிள்ளைகள். புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கிறீர்கள் அதற்கு நான் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்”?. என கேட்டேன். நான் கூறியது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவர்கள் ஆறு மாதத்தில் திரும்பி சென்று விட்டனர். என்னுடன் பாராளுமன்றத்தில் இருந்த சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதை பெரிய பிரச்சினையாக்கினார். எமது பிரதேசம் அமைதி பிரதேசம் யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கின்றது. இந்த பயங்கரவாதிகளை இங்கே கொண்டு வராதீர்கள் என பெரும் ஆட்சேபனையை கிளப்பினார். அவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. பதிவு ஏடுகளை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். அந்த நேரத்திலும் சிங்கள குடியேற்றத்தை அக்கராயனில் அமுல்படுத்த உதவுவதாக குற்றம் சாட்டி துரோகிப் பட்டம் சூட்டப்பட்டேன். இதில் உண்மையில்லை.

அக்கராயனில் ஒரு முகாம் அமைக்கப்பட்டு புனருத்தானம் செய்யப்பட்டு ஆறு மாதத்திற்குள் அவர்கள் போய் விட்டார்கள். எப்போது திரும்பி சென்றார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் எனது துரோகி பட்டம் பல காலம் நீடித்தது மட்டுமல்ல கடந்த தேர்தலிலும் துண்டு பிரசுரமாக வெளியாகியது. இது சம்பந்தமாக இன்னும் பல விடயங்களை கூறலாம். ஆனால் இவை இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமற்றவை. இச் சம்பவத்தை தற்போது கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எவ்வாறு ஜே.வி.பி பிள்ளைகளை எம் பிள்ளைகள் என அழைத்தேனோ அதேபோல் இவர்களும் எமது பிள்ளைகள் என்பதால் இவர்கள் குற்றமற்றவர்கள் என கூற விரும்புகின்றேன். அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையால் பிழையான வழிக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். அவர்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அனைவரும் கைகட்டி மௌனியாக இருந்தனர். நான் அனைவர் எனக் குறிப்பிடுவது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையே. புலம் பெயர்ந்தவர்கள் இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முன் வருகின்றனர். இவர்கள் அனைவரும் வசதியாக பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டு டாக்டர், எஞ்ஜினீயர்கள் என தமது பிள்ளைகளுக்கு உயர்கல்வியை வழங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுப்பது தமது பிள்ளைகளை துன்புறுத்த, சித்திரவதை செய்ய, அல்லது எமது பிள்ளைகளின் முன்னேற்றத்தை இடையூறு செய்யவேயாகும். புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல எமது பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். கடந்த ஆறு ஆண்டுகளை நோக்குவோமானால் விடுதலைப் புலிகளின் ஏகபிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பின் பரீட்சை எழுதிய 8000 மாணவர்களை பிடித்துச் சென்று பயிற்சி அளித்தனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற இவர்களில் ஒருவரேனும் இது பற்றி மூச்சுவிடவில்லை. பல ஆட்கடத்தல்கள், கொலைகள், சித்திரவதைகள் நாகரீக உலகில் கேள்விப்படாத அளவில் நடந்துள்ளன. ஐந்து அடி உயரமான ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாதவாறு முக்கோண வடிவில் முட்கம்பியினால் சுற்றப்பட்ட கூடுகளே சித்திரவதைக்கு பாவிக்கப்பட்டன. இதன் புகைப்படங்கள் கைவசம் உண்டு. அவற்றை பார்த்ததும் என் இதயத்தில் இரத்தம் வடிந்தது. நான் ஒரு நிலைப்பாட்டை பிரபாகரனுக்கு எடுத்துக் கூறினேன். நீர் தமிழ் மக்களின் பிரதிநிதியல்ல. நீர் ஒரு கொடியவன் தேவையற்ற எல்லாவிதமான செயல்களிலும் ஈடுபடுகின்றீர். நீர் பிள்ளைகளை தவறான வழிக்கு இட்டுச் செல்லுகின்றீர். நீர் பிள்ளைகளின் முன்னேற்றத்தையும் கல்வியையும் தடுக்கின்றீர். ஆனால் நான் அறிகிறேன் நீர் உமது பிள்ளைகளை டாக்டர், எஞ்ஜினீயராக படிப்பிக்கின்றீர். இங்குள்ள ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் யுத்த முனைக்கு அனுப்பப்படுகின்றார்கள்.  அனுராதபுர விமான நிலையம் தாக்கப்பட்ட மறுநான் பத்திரிகைகளில் வெளிவந்த பல புகைப்படங்களில் இரண்டு எனது கவனத்தை ஈர்த்தன. ஒன்று பிரபாகரனுடன் 22 பேரும், மற்றைய படத்தில் தாக்குதலில் கலந்து கொண்டு மரணமான போராளிகளின் 22 பேரின் சடலங்களும். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் திரு பிரபாகரனுக்கு எழுதியிருந்தேன். “அந்த 22 பேரில் ஒருவராக நீர் இருந்திருந்தால் நான் மகிழ்ச்சியுடன் உம்மை மாபெரும் வீரனாக பாராட்டி இருப்பேன.; ஆனால் நீர் ஒரு கோழை.

முதல் நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு முன்போ உம்முடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 22 இளைஞர்களை பலி; கொடு;ததுள்ளீர். யாருக்கும் பயப்படாமல் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு. எதுவித பலனையும் எதிர்பாராமல் அவர்களுக்காக நான் குரல் கொடுத்தேன்.

அப்பாவி போராளிகளின் புனர்வாழ்வு

இப்போதும் கூட பலாத்காரமாக இளைஞர்களையும், ;;;;;யுவதிகளையும் அவர்களின் விருப்பமின்றி அழைத்துச் செல்லப்பட்ட 10,000, 11,000 பிள்ளைகளுக்காக குரல் கொடுக்க கடமைபட்டவன் நான். இந்த ஆணைக்குழு ஊடாகவும் ஜே.வி.பி காலத்தில் எடுத்த நடவடிக்கை போன்று ஒரு நீதிபதி, அல்லது ஒரு இளைப்பாறிய நீPதிபதி  அல்லது ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி, ஒரு கண்ணியமான பொதுமகன் ஆகியோரைக் கொண்டு உள்ளடக்கிய அத்தகைய குழுக்கள் இந்த இளைஞர் யுவதிகளை விசாரணை செய்ய வேண்டுமென அரசுக்கு ஆலோசனை வழங்குகிறேன். அத்தகைய குழுக்கள் தடுப்புக் காவலில் உள்ள இளைஞர்களையும், பெற்றோர்களையும் இவர்களுக்கு என்ன நடந்தது. எவ்வாறு இயக்கத்தில் சேர்ந்தார்கள், பலாத்காரமாக சேர்க்கப்பட்டார்களா, தாமாக விரும்பி சேர்ந்தார்களா போன்ற விபரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றேன்.

உண்மை குற்றவாளியை அடையாளம் காணுங்கள்

இந்த நாட்டிலுள்ள மிக மோசமான குற்றவாளியே தான் தலைவர் என்றும், தான் தான் பிரபாகரனின் வாரிசு என்றும் உரிமை கோருகின்றார். இச் செயலை முழு உலகும் அவதானிப்பதையிட்டு நான் வெட்கமடைகின்றேன். களத்திலே இருந்த பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பெரும் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு உணவளித்தும், வேலை வாய்ப்பளித்தும் அவர்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படுகின்ற வேளையில் குறிப்பிட்ட பயங்கர குற்றவாளியும் இன்னும் 09 புலம் பெயர்ந்தவர்களும் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முன் வருகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழர்களை ஒத்த அளவு தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்கின்றார்கள். பல இலட்சம் தமிழ் மக்கள் உலகளாவிய அளவில் பரந்து வாழ்கின்றார்கள் கனடா, ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளில் வாழ்கின்றவர்களும் புலம் பெயர்ந்தவர்கள்தான். ஆனால் 09 பேர் மட்டும் நாட்டை அபிவிரு;தி செய்ய முன் வந்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ஒழிய முழுப் போராளிகளும் உடலால் சரணடைந்தார்களே அன்றி சிந்தனையால் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாள் இந்த நாட்டை அழிக்க 05 நபர்கள் போதுமானதாகும். இப்படி ஏன் நடக்காது என் நான் வினவுகின்றேன். பிரபாகரனின் வாரிசு என்று சொல்கின்றவர் களத்தில் நிற்கிறார். இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்கின்றார். நாட்டையும் சுற்றி வருகின்றார். அத்தகைய ஒருவரால் இப்படி ஏன் நடக்காது, இத்தகையோரிடமிருந்து என்னை போன்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு உண்டு? இந்த கேள்விகள் பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும்.

அப்பாவி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி

இந்த பிள்ளைகள் அப்பாவிகள். இவர்களில்  உண்மையில் சம்பந்தப்பட்டவர்களை பிரித்து எடுக்கலாம். அத்தகையோர் 700 பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்யுங்கள். அவ்வாறு விசாரணை செய்யப்பப்பட வேண்டியவர் கே.பி என்பவரே. ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அவரது வாரிசு என கூறிவருகின்றவர் 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியவராவார். ஆனால் அவர் சுதந்திரமாக இருக்க அப்பாவி ஏழைப் பிள்ளைகள் தொழிற் பயிற்;சி முகாம்களில் பயிற்சி பெறுகின்றனர். இத்தகைய தொழில்களும் வேலை வாய்ப்புக்களும் இழிவானவை என நான் கூறவில்லை. தச்சு தொழிலில் பல தலைமுறையாக ஈடுபட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தச்சு தொழிலில் ஈடுபட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள். அப்படியானால் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன் தச்சுத் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று நியதி இல்லை. ஆனால் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனும் பாராளுமன்றம் செல்ல விரும்புகின்றார். ஓர் சிகை அலங்கார தொழிலாளி தன் மகனை வைத்திய கலாநிதியாக்க விரும்புகின்றார். கிளிநொச்சி தனி மாவட்டமாக ஆக்கப்பட்டதன் பின் உயர் கல்வி கற்க பல வாய்ப்புக்கள் கிடைத்தன. முதல் தடவையாக அத்தகைய படிப்பை மேற்கொள்ள கிளிநொச்சி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று சில வீடுகளில் 2 அல்லது 3 வைத்திய கலாநிதிகள் உருவாகியுள்ளனர்.

தொழிற் பயிற்சி வழங்கும் முகாம்களுக்கும் நான் விஜயம் செய்துள்ளேன். அங்கு தையல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓர் இளைஞனிடம் இந்த தொழில் உனக்கு விருப்பமா என ரகசியமாக கேட்டேன். அப்போது அவரின் முகம் மாறியது. பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த இளைஞன் உரிய நேரத்தில் விடுவிக்கப்பட்டிருந்தால் ஓர் டாக்டராகவோ அல்லது ஒரு எஞ்ஜினீயராகவோ உருவாகியிருப்பான். இந்த பையன் யாருடைய உடைகளை தைக்கப் போகிறான். தனது சொந்த உடைகளையா? யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் தையல்காரர், கட்டிட தொழிலாளி, தச்சுத் தொழிலாளி எத்தனை பேர் தேவைப்படுவர். போதுமானவர்கள் எம்மிடம் இருக்கின்றனர். இதுகூட நாம் கற்ற பாடத்தில் ஒன்றுதான்.

இனப்பிரச்சினை

இலங்கை இனப்பிரச்சினை 50 வருடத்திற்கு மேற்பட்டது. அந்த காலத்தில் இருந்து நான் வாழ்கின்றேன். 1948ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் இருந்து கொழும்புக்கு மாணவர்கள் மரதன் ஓட்டம் மூலம் வாழ்த்து செய்தி கொண்டு வந்ததையும், கையில் கொடியுடன் மாணவனாக இருந்து நான் கண்ட காட்சி இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 1956 தொடக்கம் எமது பிரச்சினை ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதற்குரிய தீர்வு என்ன என்பதை நாம் அறிவோம். நாடு ஓர் தீர்வுக்கு தயாராக உள்ளது. 2005ம் ஆண்டு தனது முதல் சுதந்திர தின உரையில் மேண்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் கூட திரு. ஆனந்தசங்கரி, திரு டக்ளஸ் போன்றோரின் வேண்டுகோளுக்கமையவேனும் செயற்பட வேண்டாமா?” என  கூறியிருக்கின்றார். இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் அவருக்கு எமது பிரச்சினை என்னவென்று தெரியும். அவரே அந்த உரையில் தமிழர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் அவர்களின் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை என கூறியுள்ளார். ஆகவே இப்போது நாடு தயாராகி விட்டது.

இராணுவ முகாம்கள் அவசியமா?

இப் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது. அது மீண்டும் தலைதூக்கும் என யாராவது நினைத்தால், வேறு சிலரோ அல்லது இன்னுமொரு பிரபாகரன் மீண்டும் வந்து பெரியவொரு இராணுவத்தை உருவாக்க முடியும் என நினைத்தால் அதுவொரு முட்டாள்தனமான சிந்தனையாகும். ஆனால் எமது பகுதியில் இராணுவ முகாம்களை தொடர்ந்து வைத்திருப்பதற்கு கூறப்படும் காரணம் ஒரு நொண்டிச் சாட்டாகும். யாழ்ப்பாண பிரதேசத்தில் நிரந்தர இராணுவ முகாம்கள் தேவையற்றதாகும். அப்படியெனின் எத்தகைய விடுதலை எமக்கு கிடைத்துள்ளது. எதை எண்ணி நாம் பெருமை படுவது? இது எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்புக்குள் வீழ்ந்த கதைக்கு ஒப்பானதாகும். கிளிநொச்சிதான் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம். கிளிநொச்சி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் செயற்பட்டுவந்த நான் இப்போது அதே மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளளேன். அதற்குரிய காரணம் எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த நண்பர்கள் தமது பெண் உறவினர்கள் துப்பாக்கியை கண்டதும் பயந்து மன நோயாளிகள் போல் மிரண்டு ஓடுகின்றார்கள் என கூற கேட்டுள்ளேன். ஆகவே எமது மக்கள் துப்பாக்கியை, விளையாட்டுத் துப்பாக்கியை கூட காண விரும்புகிறார்கள் இல்லை. இப்போது மக்களின் பாதுகாப்புக்காக எல்லா இடமும் இராணுவ முகாமாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாருடைய பாதுகாப்புக்காக என கேட்கிறேன் ?. அப்படியே அந்த மக்களை இப்போது இருப்பது போல விட்டுவிடுங்கள். பிரபாகரன் இறந்ததன் பின்னர் ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கூட அப்பகுதியில் கேட்கவில்லை என்பதை யாராவது மறுத்துரைக்க முடியுமா? என நான் சவால் விடுக்கிறேன். இதன் அர்த்தம் இந்த நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பதே. அவர்கள் மீண்டும் தலைதூக்க முயற்சித்தால் அங்கும் இங்கும் சில மாற்று ஏற்பாடுகள் செய்தால் போதுமானது. கடந்த காலத்தில்  இவவாறே சில முகாம்கள் அமைந்திருந்தன. அவ்வாறு சிறிய ஐந்து பேரை கொண்ட முகாமை நான் பூநகரியில் பார்த்திருக்கிறேன். ஆகவே நாம் கற்ற பாடங்கள் சரியான முறையில் செயற்படவிலலை. எமது பிரச்சினை 50 வயதை தாண்டியதாகும். அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். எத்தகைய தீர்வு ஏற்புடையதாக இருக்குமென அனைவரும் அறிவர். ஏற்புடைய தீர்வு முன் வைக்கப்பட்டால் இராணுவ முகாம்களுக்கு தொடர்ந்து வேலை இருக்காது. ஏற்கமுடியாத தீர்வு முன் வைக்கப்பட்டால் இராணுவ முகாம்களுக்கு நிறைய வேலை இருக்கும். அப்படியானால் நிர்வாகத்தை இராணுவத்தினரிடமிருந்து மீளப்பெற்று சிவில் நிர்வாகமாக மாற்ற வேண்டும். அந்த பணியை அரச அதிபர்களிடம் விட்டுவிட வேண்டும்.

தற்போது இராணுவ அதிகாரியிடம் இருந்தே அரச அதிபர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இந்த இராணுவ அதிகாரி யார்? அவருக்கு சிவில் நிர்வாகம் பற்றி என்ன தெரியும்? நான் மிகத் தெளிவாக உதாரணமாக ஒன்றை கூற விரும்புகின்றேன். இரணைமடு குளத்தில் இருந்து 25,000 தொடக்கம் 30,000 ஏக்கர் பயிர்செய்ய நீர் விநியோகம் செய்யப்படுகிறது. யாராவது இதில் தலையிடுவார்களேயானால் கிளிநொச்சி நெற்செய்கை பெருமளவில் பாதிக்கப்படும். ஆனால் யாரோ ஒருவரின் சிபாரிசில் இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாண பிரதேசத்துக்கு குடிநீர் விநியோகிக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பற்றி யாரும் முறையிட்டதாக தெரியவில்லை. அங்கும் இங்குமாக ஒரு சில கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இரண்டு பவுசரால் இப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவசியம் ஏற்படின் மேலும் இரு பவுசர்களை வழங்கலாம். பெருந்தொகை செலவில் இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதால் கிளிநொச்சி நெற்செய்கை பாழாகி விடும். யாழ்ப்பாணத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய அபிவிருத்திதான் தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.

கடந்தகால நிர்வாக அமைப்பே இன்னும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்கள் முட்டாள்தனமான சில முடிவுகளை மேற்கொள்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்று மீண்டும் அதிகார பீடத்திற்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டு தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக 95 வீதமான வாக்குகள் கிடைத்தமைக்கும் திரு டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி  தேர்தல் முகவர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தற்போது அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். விடுதலைப் புலிகள் எங்கே செயற்பட்டார்கள்? எங்கே பலமாக இருந்தார்கள், மற்றும் என்னென்ன செய்தார்கள் என்பதை இந்த அரசாங்க அதிபர் அறிந்திருந்தார். எதிர்கால பாவனைக்கு விடுதலைப் புலிகள் என்னென்ன மறைத்து வைத்துள்ளார்கள் என்பதையும் இவர் நிச்சயமாக அறிந்திருப்பார். இத்தகைய நபரால் எமது உயிருக்கு ஆபத்தில்லையா?  இந்த நாட்டிலே புத்தி ஜீவிகளுக்கு பஞ்சமில்லை. எம்மிடம் தேவையானவர்கள் நாடு முழுவதும் இருக்கின்றார்கள். இதுவும் நாம் கற்றறிந்தும் அமுல்ப்படுத்தாத பாடங்களில் ஒன்றாகும். இன ஒற்றுமை ஒரு போதும் ஏற்படாது என நான் உறுதியாக கூறுகின்றேன். எனக்கு இப்போது வயது 78 இன்னும் எவ்வளவு காலம் நீடிப்பேன் என எனக்குத் தெரியாது. ஆனால் இராணுவத்துக்கு பயந்த மக்கள் அவர்களால் எதிர்காலத்தில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் என்ற பயம் இருக்கும் வரை இன ஒற்றுமை சாத்தியமற்றதாகும். தற்போதைய இராணுவத்தை பற்றி நன்கு அறிவோம். நான் இராணுவத்தினருக்கு எதிராக எவ்வித முரண்பாடாகவும் கூறவில்லை. அவர்கள் மிக நல்லவர்கள். மனிதாபிமான செயற்பாடுகளில் மிகச் சிறந்தவர்கள். வெளிநாட்டிலுள்ள எமது நண்பர்களும் உறவினர்களும் அவ்வாறே கூறுகின்றார்கள். இடம் பெயர்ந்த மக்களுக்கு இராணுவத்தினர் பெரிதும் உதவினர் என கூறுகின்றனர். அகதி முகாம்களிலுள்ள பிள்ளைகளுடன் பொலிசார் சேர்ந்து விளையாடி மகிழ்வது சந்தோஷமானவொரு விடயமே. இவையெல்லாம் உண்மைதான். மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இராணுவ முகாம் அமைக்கப்படுவதாக இருந்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவருடைய பாதுகாப்பின் நிமித்தம் அவர்கள் அங்கே நிலை கொண்டுள்ளார்கள் என்றால் நான் மட்டுமல்ல அனைவரும் அதனை எதிர்க்கின்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது. இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் தத்தமது வீடுகளிலிருந்து வெளியே வர மக்கள் பயப்படுகிறார்கள். பேச்சு சுதந்திரமின்மையால் பேச பயப்படுகின்றார்கள். அவர்கள் விரும்பிய இடத்திற்கு போக முடியாததால் சுதந்திரமாக நடமாடும் உரிமையை இழந்து நிற்கின்றனர்.

கிளிநொச்சி சாந்தபுர மக்களின் பரிதாபநிலை

அங்கே 750 குடும்பங்கள் பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் கீழ் பல கஷ்டங்களை அனுபவித்து அகதி முகாம்களில் ஒரு வருடத்திற்கு மேலாக நரக வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் குடியேற்றப்பட்ட நிலையில் தம் சொந்த காணிகளுக்கே செல்லும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் 250 குடும்பங்கள் கிளிநொச்சி பாடசாலை நிலங்களிலும் ஏனையோர் மனிக்பார்ம் முகாமிலும் வாழ்கின்றனர். அவர்களை கடந்த வாரம் நான் சந்தித்தேன். புறாக் கூடு போன்ற சிறிய கூடாரங்களில் வாழ்கின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும். இவர்கள் மத்தியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சேவையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மத்தியில் செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி இருந்தன. வள்ளங்கள் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு அரச சார்பற்ற நிறுவனத்திடம் அப்பகுதியில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் தனக்கு தேவையான வகையில் இரு வள்ளங்கள் குறிப்பிட்டகால எல்லைக்குள் செய்து தரப்பட வேண்டுமென உத்தரவிட்டால் அந்த அரச சார்பற்ற நிறுவனம் அக்கட்டளைக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதால் அந்த அரச சார்பற்ற நிறுவனத்தை விடுதலைப் புலிகளுக்கு சார்பானது என முத்திரை குத்த முடியாது என்பதே யதார்த்தம். இத்தகைய பாடங்கள் பலவற்றை கற்றறிந்த நாம் இன்னும் பல விடயங்கள் பற்றி குறிப்பிட முடியும். தொடர்ந்து கேள்வி நேரம் இருப்பதால் கேள்வி மூலம் சில சந்தேகங்களை தீர்க்கலாம் எனக் கூறி இத்துடன் முடிக்கிறேன்

நன்றி

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com