|
||||
|
மர்ம மனிதன்
பற்றிய உண்மைகள்
புதிய-ஜனநாயக மாக்சிச
லெனினிச கட்சி மர்ம மனிதனின் நடமாட்டம்
பற்றி மக்கள் மத்தியில்
பேசப்படுவது
கட்டுக்கதைகளோ
வெறும் இட்டுக்கட்டுதல்களோ
அல்ல. அல்லது
சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ,
மாயையோ அல்ல. கடும்
கறுப்பு நிறம் கொண்ட
உருவ அமைப்பும்
கோரமான முகமூடியும்
கொண்ட தோற்றத்துடனேயே
இம் மர்ம
மனிதன் இரவு வேளைகளில்
வீடுகளுக்குள்
இறங்கிக்
கொள்கிறான்.
குறிப்பாகப் பெண்கள்
மீது தாக்கியும்
பயப்பீதி
கொள்ள வைப்பதிலும்
இம் மர்ம
மனிதன் அட்டகாசம்
செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும்
மக்கள் நேரடியாகக்
கண்டுள்ளனர்.
அது பற்றி அச்சம் பீதியுடன்
விபரிக்கின்றனர்.
அதேவேளை இம் மர்மமனிதனைப்
பிடிப்பதற்காகத்
துரத்திச்
செல்லும்
மக்களை ராணுவத்தினர்
அவ்வப் பகுதிகளில்
தாக்கியும்,
வீடுகளைச்
சேதப்படுத்தியுள்ளதையும்
மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப்
பார்த்த கதைகளையும்
எடுத்துரைத்தனர்.
அத்துடன் இம் மர்ம மனிதனை
ராணுவத்தினர்
பாதுகாத்து
வருவதைத்
தாம் நேரடியாககக்
கண்டதாகவும்
மக்கள் கூறுகின்றனர். இத்தகைய மர்ம மனிதனின்
அட்டகாசங்கள்
நிகழ்ந்த
குடாநாட்டின்
வலிகாமம்,
வலிமேற்கு,
வலிவடக்கு,
வலிகிழக்கு,
வடமராட்சி
ஆகிய பிரதேசங்களின்
பல கிராமங்களுக்கு
எமது கட்சியின்
வடபிராந்தியக்
குழு உறுப்பினர்களும்
நானும் நேரடியாகச்
சென்று மக்களிடம்
கேட்டறிந்த
போது அவர்கள்
தாம் நேரில்
கண்ட மர்ம
மனிதன் பற்றிய விபரங்களை
எடுத்துரைத்தனர.
நாங்கள் இரவு எட்டுமணியளவில்
வலிகிழக்கின்
ஒரு கிராமத்தின்
சனசமூக நிலைய முன்றலில்
மக்களுடன்
உரையாடிக்
கொண்டிருநந்த
போது பக்கத்துக்
கிராமத்தில்
மக்கள் பெரும் கூச்சலிட்டு
அவலக்குரல்
எழுப்பியதைக்
கேட்க முடிந்தது. அவ்விடத்திற்குச் சென்று விசாரித்த போது மர்ம மனிதன் வீட்டுக்குப் பின்னால் வந்ததைக் கண்டதாகக் கூறினர். மக்கள் ஒன்று சேர்ந்து கலைத்துச் செல்ல அவன் ஓடி மறைந்தாகவும் கூறினர். அங்கு பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் முதியவர்கள் மிகுந்த அச்சத்தில் பீதியில் இருந்ததைக் காணமுடிந்தது. இவ்வாறு தான் பெரும்பாலன பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.
இத்தகைய சூழலில் இம் மர்ம
மனிதன் நடமாட்ட அச்சத்தினால்
மக்கள் இரவு முழுவதும்
நித்திரை
இன்றி குடும்பங்கள்
ஒரே இடத்தில்
குழுமி விழித்திருக்க
வேண்டிய துயர நிலையை
எடுத்து விளக்கினர்.
இதனால் தொழில்களுக்குச்
செல்ல வேண்டியவர்களும்
மாணவர்களும்
கடும் பாதிப்பைப்
பெற்று வருகிறார்கள்.
பெண்கள் தத்தம்
தொழில்களுக்கு
பகல் வேளைகளில்
கூடச் செல்வதற்கு
அஞ்சும் நிலையே காணப்படுகின்றது.
வன்னி இழப்புக்கள்
அவலங்களுக்குப்
பின்பு இப்படி ஒரு நிம்மதியற்று
அச்சம் பீதியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையை
அவர்கள் கடும் துயரத்ததுடன்
எடுத்துக்
கூறினர். இவ்வாறு தாங்கள் மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தவற்றை ஊடகங்களுக்கு எடுத்துக் கூறும் போது புதிய – ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் கூறினார்.
அவர் மேலும்
கூறுகையில்
இம் மர்ம
மனித நடமாட்ட
அச்சுறுத்தலால்
பாதிக்கப்பட்ட
கிராமங்களையும்
மக்களையும்
பார்க்கும்
போது முற்றிலும்
உழைப்பாளி
மக்களான அன்றாடம் தொழில் புரியும் தொழிலாளர்கள்,
விவசாயிகள்,
மீனவர்கள்
என்போராக
இருப்பதை
அவாதானிக்க
முடிந்தது. பொருளாதார, ரீதியிலும்
சமூக ரீதியிலும்
பின்தங்கிய
மக்கள் வாழ்ந்து வரும் கிராமங்களிலேயே
மர்ம
மனிதனின்
நடமாட்டமும்
அச்சறுத்தலும்
ராணுவத்தின்
தாக்குதல்களும்
அதிகம் இடம் பெற்றிருப்பது
அவதானிக்கக்
கூடியதாக
இருந்தது.
இது ஏன் என்பது மக்களுக்குப்
புரியாத புதிராகவே
இருந்து வருகிறது. எவ்வாறயினும் மலையகத்தில் தொடங்கி கிழக்கு மாகாணத்தின் ஊடாக இப்போது வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் உச்சமாகத் தலை விரித்தாடிவரும் மர்ம மனிதன் அச்சுறுத்தலுக்குப் பின்னால் பேரினவாத ஆளும் வர்க்க அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருந்து வருகிறது. என்பதில் ஐயம் இல்லை. தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவமாகவே இம் மர்ம மனிதன் அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்ற முடிவிற்கே வரவேண்டும். அதன் உச்ச நிலையே இப்போது குடாநாட்டின் கிராமங்களில் பரவலாக இடம் பெற்றுவருகிறன.
எனவே இம்
மர்ம மனிதன்
நடமாட்டத்திற்கும்
அச்சுறுத்தலுக்கும்
எதிராக மக்கள் ஒன்று திரண்டு
தங்களையும்
தமது கிராமங்களையும்
பாதுகாத்து
வரும் தற்காப்பு
நடவடிக்கை
முற்றிலும்
நியாயமானதேயாகும்.
அத்துடன்
இம் மர்ம
மனிதன் நடமாட்டத்தை
முற்றாக நிறுத்தக்
கோரி தமிழ்க்
கட்சிகள்
சிவில் அமைப்புக்கள்,
மதத்தலைவர்கள்
ஏற்பாடு செய்து வரும் ஒரு
நாள் உண்ணாவிரத
நடவடிக்கையை
எமது புதிய
– ஜனநாயக மாக்சிச –லெனினிசக்
கட்சி பூரணமாக ஆதரிக்கின்றது.
அதில் பங்கு கொள்ள முன்வந்துள்ளது
என்பதையும்
செந்திவேல்
தனது ஊடகக்
கருத்துரையில்
தெரிவித்தார். (புலிகளின் பிரசன்ன காலத்தில் இதே செந்தில் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் ஒரே ஒரு மாற்றுக்கருத்தாளர் புலிகளின் ' மாற்றுக் கருத்தாளர்கள் உயிர்வாழ்தல் மறுத்தலை' சந்திக்காமல் யாழ்பாணத்தில் இருந்து கொண்டு அரசியல் நடத்தியவர். மேலும் புலிகளின் பாசிச மனித குல விரோத செயற்பாடுகளை அங்கீகரித்து புலிகளின் ஆயுத செயற்பாட்டை முற்போக்கானது என்ற கருத்துப்பட 'மறைமுகமாக' செயற்பாட்டவர். – ஆர்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |