Contact us at: sooddram@gmail.com

 

ஈபிடிபி மக்களின் அங்கீகாரம்  ெற்ற ஒரு அரசியல் கட்சி - டக்ளஸ் தேவானந்தா

நாம் தமிழ் பேசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியே தவிர வன்முறை நோய் கொண்டு அலையும் துணை இராணுவக்குழு அல்ல. இந்த உண்மையை அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட்பிளேக் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட்பிளேக் வழமை போல் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு எம்மீதான ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் துணை இராணுவக்குழு என்றும், ஆயுதங்களோடு நடமாடுவதாகவும் தெரிவித்திருந்த அவர் நாம் வைத்திருப்பதாக அவர் கூறும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தவிர யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு தோற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தான் சந்திக்கவிருந்ததாக பொய்யுரைத்து, தமது சந்திப்பை நாமே தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இவைகள் உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதும் எம்மீது அவதூறு பரப்புவதுமான ஓர் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆரபங்களில் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக செயற்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்தவர்கள், ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் எமது தலைமை பங்கெடுத்திருக்கவில்லை என்பதும், அதன் சாதக பாதகங்களில் எமக்கு சம்பந்தம் இருந்திருக்கவில்லை என்பதும், சகலரும் அறிந்த விடயம். எமது மக்களின் அரசியலுரிமைக்காகவும், அபிவிருத்தி மற்றும் அன்றாட அவலங்களுக்கான தீர்வுக்காகவும் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் மத்தியில் நின்று உறுதியுடன் நாம் உழைத்து வந்திருக்கின்றோம். எமது சொந்த பாதுகாப்பிற்காக ஏனைய தமிழ் கட்சிகளைப் போலவே நாமும் வைத்திருந்த சிறு ஆயுதங்களையும் 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து முழுமையாக நாம் ஒப்படைத்திருந்தோம். அதன் பிறகு எமது கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறுகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எமது கட்சி உறுப்பினர்கள் ஆயுதங்கள் இன்றி நிராயுத பாணியாக நின்றிருந்த காரணத்தனாலேயே தமது இன்னுயிர்களை இழக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்தன என்பதை சகலரும் ஏற்றுக்கொள்வார்கள்.

ரணில் புலிகள் ஒப்பந்தம் முதல் இன்று வரை எமது கட்சி சார்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அரச பொலிஸார் மட்டுமே சட்ட ரீதியிலான பாதுகாப்பை வழங்கி வருகின்றார்கள். இந்நிலையில் எமது கட்சி உறுப்பினர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவோ, ஆயுதங்களால் எவரையும் அச்சுறுத்தியதாகவோ எமது மக்களிடம் இருந்து எந்த வித புகார்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் றொபேர்ட்பிளேக் அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தாக வேண்டும். சமாதானத்திற்காகவும், நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான கெளரவமான ஓர் அரசியல் தீர்விற்காகவும் எம்மை ஆதரித்து எமக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியிருக்கும் தமிழ் மக்களின் விருப்பங்களை நிராகரிக்கும் றொபேர்ட்பிளேக்கின் அவதூறான கருத்துக்களை நாம் கண்டிக்கின்றோம்.


எமது மக்களின் நிரந்தர அமைதிக்காகவும், அரசியலுரிமைச் சுதந்திரத்திற்காகவும் நாம் இழந்தவைகள் ஏராளம். அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர விரும்பும் எமது மக்களுக்கான நிரந்தர மகிழ்ச்சிக்காக றொபேர்ட்பிளேக் எதையும் ஆற்ற விரும்பினால் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றும் மாறாக எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் எம் மீது இது போன்ற பொய்யான அவதூறுகளை உள்ளோக்கத்தோடு திட்டமிட்டு பரப்புவது என்பது குழப்பங்களை விழைவிக்கும் கபட நோக்கங்களில் ஒன்றாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com