|
||||
|
மீண்டும்
நழுவிப்போகும்
வரலாற்றுச்
சந்தர்ப்பம்?
- தோழர் சுகு-
ஸ்ரீதரன்
பத்மநாபா
ஈபிஆர்எல்எஃப் கிழக்கு மாகாணத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம்
காங்கிரசும்
இணைந்து ஆட்சி அமைக்க
முடியுமனால்
அது சரித்திர
முக்கியத்துவம்
வாய்ந்த விடயமாக அமையலாம். இலங்கையை பல்லின
நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு
வலுச் சேர்ப்பதாக
அமையலாம்.
இன்று இலங்கையை ஜனநாயக மயப்படுத்துதல்
இலங்கையில்
எண்ணிக்கையில்
சிறுபான்மையான
தேசிய சமூகங்களான
தமிழர்கள்,
முஸ்லீம்கள்,
மலையகமக்கள்,
பறங்கி, மலாய் இன
மக்கள் பெரும்பான்மைச்
சமூகத்தின்
ஜனநாயக உணர்வு கொண்ட பெருவாரியான
மக்கள் இணந்து செயற்படவேண்டிய
தேவை இருக்கிறது.
அந்த வகையில்
தமிழ் முஸ்லீம் கட்சிகள் கிழக்கில்
இணைந்து ஆட்சி அமைப்பதற்கு
வாராது வந்துற்ற சந்தர்ப்பம்
இதுவாகும்.
கடந்த காலத்தில்
முஸ்லீம்
மக்களுக்கு
தமிழர் தரப்பிலிருந்து அநீதிகள் இழைக்கப்பட்டடுள்ளன.
பாரதூரமான தவறுகள்
நேர்ந்துள்ளன.
இந்த
அநீதிகள்
தவறுகள் தொடர்பாக பகிரங்க சுயவிமரிசனம்
தமிழர் தரப்பிலிருந்து
செய்யப்படவேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாண சபையில்
முஸ்லீம்
ஒருவர்; முதலமைச்சராக
வருவதை தமிழ் தரப்பு
ஆதரிக்கவேண்டும்
.இது பல
மனச்சங்கடங்கள்,
கசப்புக்கள்,
நெருடல்கள் நீங்குவதற்கு,
இரு சமூகங்களிடையேயும்
நல்லுறவு
ஏற்படுவதற்கான
தருணமாகவும்
அமையும். இந்த
சந்தர்ப்பமும்
நழுவ விடப்படக்
கூடாது. முஸ்லீம் தமிழ் சமூகங்களின்
இருப்பு நீண்டகால நலன்கள் அன்றாட சவால்கள் பிரச்சனைகள்
தொடர்பில்
பலமாகவும்
ஆக்க பூர்வமாகவும்
செயற்படுவதற்கு
இது பெரும்
வாய்ப்பாகும்
இனப்பிரச்சனை
தீர்வு என்று வரும்
போது இஸ்லாமிய , மலையக மக்களுடன்
பேசாமல் பிரச்சனைக்கு
தீர்வு காணமுடியாது.
இந்த அடிப்படையான
எளிமையான
உண்மை தமிழர் தரப்பில் பல சந்தர்ப்பங்களில்
விளங்கிக்
கொள்ளப்படுவதில்லை.
விளங்கிக் கொள்ள விரும்புவதும்
இல்லை. இனப்பிரச்சனை
தீர்வு என்று வரும்
போது இலங்கையில்
பல்வேறு மொழிகலாச்சார
மத சமூகங்கள்
இருக்கின்றன
என்பதை முதலில் மனதில் இருத்தியாக
வேண்டும். இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேசும் கடப்பாட்டை
கொண்டிருப்பது
போல் முஸ்லீம் ,மலையகதமிழ் சமூகங்களுடன்
பேசியே ஆகவேண்டும்.
ஏதோ ஒரு இடத்திலாவது
இணைந்து பணியாற்றினால்தான்
நல்லெண்ணங்கள்
வளரும். தனித் தனி தீவுகளாக
சமூகங்கள்
இருந்து கொண்டு காழ்ப்பையும்,
விரோதத்ததையும்
உமிழ்ந்து
கொண்டு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும்
சமூகங்களை
மேலும் துன்பத்தில
ஆழ்த்துவதை
தமிழ் முஸ்லீம் தரப்புக்கள்
தவிர்க்கவேண்டும். கிழக்கு மகாண சபைத்
தேர்தலில்
முஸ்லீம் ,தமிழ் தரப்புக்கள்
இன சமூக
அபிலாசைகளைப்
பிரதானப்படுத்தியே
தேர்தல் பிரசாரத்தில்
ஈடுபட்டன. அந்த
தேர்தல் வாக்குறுதிகள்
மழைக்கு முளைத்த காளான்கள்
என்ற மன
நிலை மாறவேண்டும். “அந்தோனியாருக்கு
பகிடியும்
விளங்காது
வெற்றியும்
விளங்காது”
என்ற சிலேடை
மாதிரி இருக்கக் கூடாது. மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளுக்கு
மதிப்புக்
கொடுக்கவேண்டும்.
இருதரப்பு மக்களுக்குமே
நிலப்பிரச்சனை
இருக்கிறது.
கலாச்சார
ஆக்கிரமிப்பு ,இராணுவமயமக்கல்
என்பன பிரச்சனையாக
இருக்கின்றன. சிவில்
நிர்வாகத்தில்
இராணுவ தலையீட்டை
முஸ்லீம்
தலைவர்களும்
ஆட்சேபிக்கிறார்கள். முஸ்லிம் ,தமிழ் உறவு
அரசு தரப்பினால்
விரும்பப்படுவதுமில்லை.
சமூகங்களை மோதவிட்டு
ஆட்சி அதிகாரத்தை
பலப்படுத்துவது
என்னவோ இலங்கையின்
அரசியல் பாரம்பரியம். முரண்பாடுகள் பிரச்சனைகள
அவ்வப்போது
எழத்தான்
செய்யும் . ஆனால் பேசுதல் ,கலந்துரையாடுதல்,
பரஸ்பர விட்டுக் கொடுப்பு
போன்ற முறைகள் இடையறாது பின்பற்றப்படவேண்டும். பேரினவாதம் மற்றும் யாழ்மையவாத
சிந்தனையின்
செல்வாக்கை
தவிர்த்து
இலங்கையின்
வௌ;வேறு
சமூக யதார்த்தங்கள்
அபிலாசைகளை
கருத்திலெடுத்து
பிரச்சனைகளுக்கு
தீர்வு காணமுயலவேண்டும்
. மாகாண சபை உறுப்பினர்களை
விலை கொடுத்து
வாங்கும்
முயற்சி , அச்சுறுத்தல்
இவற்றுக்குப்
பணிவது வாக்களித்த
மக்களை இழிவு படுத்தும்
செயல் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சிறுபான்மைச்
சமூகங்களின்
போராட்டங்களின்
பின்னடைவு
-தோல்விகளின் பிரதான
காரணி இந்த சமூகங்களிடையேயும்
,சமூகங்களுக்குள்ளேயும்
அடிப்படைபுரிந்துணர்வு
இன்மையே. கற்பிதமான விரேதங்கள்
களையப்படவேண்டும் . “சண்டைசெய்தாலும்
சகோதரர் அன்றோ” என்ற
மனநிலைவேண்டும்.
சாதாரண மக்களிடையே
நல்லெண்ணத்தை
ஏற்படுத்த
இந்த அரசியல்
வாதிகள் பங்களித்தால்
அது ஒரு
மாபெரும்
வரலாற்றுக்
கடமையாக இருக்கும் . கிழக்கு
மாகாண சபை இவ்இரு
சமூகங்களின்
இணைவுடன்
அமையுதோ இல்லையோ நல்லெண்ண முயற்சிகள்
தொடரவேண்டும். வரலாறு வாய்ப்புக்களை
உருவாக்கி
தந்திருக்கிறது . நாம் தான்
பற்றிப் பிடிக்கவேண்டும் . கிழக்கின்
அனைத்து சமூகங்களும்
ஜனநாயக பண்பாட்டின்
அடிப்படையில்
வாழ்வதற்கான
நிலைமையை ஏற்படுத்துவது
இலங்கை தழுவிய ஜனநாயக அதிர்வலைகளை
ஏற்படுத்தக்
கூடியது. “சிறு பொறி
பெருங்காட்டுத்தீயை
மூட்டலாம்”;. இலங்கை
ஒரு பல்லினங்களின்
நாடாக மாறுவது தானே நம்
விருப்பம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |