Contact us at: sooddram@gmail.com

 

தீவுப் பகுதியில்

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல்பிரச்சாரம்

29-08-2013  ேலணை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பத்மநாபா ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் 1970 களிலிருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையில் அகிம்சைவழியில் போராடியதை குறிப்பிட்டார். 25வருட போராட்டக் காலத்தில் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அது உயிர் உடைமைகள் இழப்பு என வார்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு இருந்திருக்கின்றன.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆயுதம் போராட்டம  ோல்வியில் முடிந்துள்ளது. அகிம்சைவழியில் சென்ற போதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் உயிரிழப்பு, சொத்துக்கள் இழப்பு, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த சிறுவர்கள், அங்கவீனமுற்றோர், நிரந்தர அகதிகள் முகாம் வாழ்க்கை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடப்பெயர்வு என கணக்கிடப்பட முமடியாதவைகள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கான இழப்பு என்பது மிக மிக அதிகமானவை. ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களுக்கு பெண் என்பவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக, நண்பியாக, மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய போராளிகளாகவும், உணவளித்தும், பாதுகாப்பு வழங்கியும் செயற்பட்ட இவர்கள் அன்றும் சரி இன்றும் சரி  அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானவர்களாகவே காணப்படுகிறார்கள்.

சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். தனிமையில் சென்று திரும்பும் போது சமூகம் தவறான கண்ணோட்டத்துடனனேயே நோக்குகிறது. குடும்பத்துக்கு, கட்டுப்படாதவள், தான்தோன்றிதனமாக செயற்படுகிறார்கள் என்ற வசவுகள் வேறு. பெண்கள் இவ்வாறு பல வலிகளுடன் சமூகத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. குடும்பத் தலைவியாக, குடும்பத்தில் பொருளாதாரத்தை, குழந்தைகளையும், குடும்ப பொறுப்புக்களையும், சுமக்க வேண்டியுள்ளது இந்த நிலைமை மாற வேண்டுமானால் பெண்கள் அச்சத்துடன் இல்லாமல் அரசியலில் அறிவு ரீதியாக சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியலில் இன்று பெண்களில் 55 சதவீதமானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிக மிக குறைவானதாகவே காணப்படுகின்ற இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஊர்காவற்துறையில் உரையாற்றும் போது பெண்கள் சார்ந்த அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து மிகவும் வறுமையுடன் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தன்னாலான தீர்வுகளை செயற்படுத்தி வருகிறேன். பெண்கள் சுதந்திரமாக வேலை செய்ய முடியாத நிலை குடும்பமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, காரியாலயங்கள், வேலைத்தலங்கள் எங்கும் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. பெண்கள் அரசியலில் பலம் பொருந்தியிவர்களாக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் எமக்கான அங்கீகாரத்தை சமூத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறது. நாம் ஏன் சமத்துமற்ற முறையில் இருக்கிறோம் என்பதை பெண்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் சமூகத்தில் எமது பிரச்சினைகளக்கு என்ன தடையாக இருக்கின்றது என்பதை சற்று ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது.

குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் பல தடைகள் காணப்படுகின்றன. அரசியலில் பலமுள்ளவர்களாக காணப்படுவதற்கும், எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தெளிவான கொள்கையை முன்னெடுப்பதே சிறந்தது. அந்த வகையில் சரியானவர்களை தேர்ந்தெடுப்பது உங்களின் கடமையாகும். தொடர்ந்து தமிழ் மக்களை உருவேற்றும் அரசியல்தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் இதுவரை கடந்த 60 வருடங்களாக இருந்த அரசியல் நிலைமையை விட மிக மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விடும். இணக்கப்பாடான அரசியல் கொள்கையை கொண்டு சின்ன சின்ன அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அரசியல் தீர்வு பேச்சுவாhத்தை என்னும் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென் சரணாகதி அரசியல் அல்ல. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து செயற்படுவது என்பதல்ல. இணக்க அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சிறுபான்மை கட்சிகள், முற்போக்கான இடதுசாரிகள் என்பன இணைந்து காரியமாற்றுகின்றன. இவ்வாறு குறிப்பிட்டார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com