|
||||
|
தை 2012 மாதப் பதிவுகள் தை 31, 2012 இனப்பிரச்சினை தீர்வில் அரசு அசமந்தப் போக்கு, குற்றச்சாட்டுகள் சரியல்ல என்கிறார் ஜனாதிபதி நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை நேற்று காலையில் சந்தித்த போது தெரிவித்தார். அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (மேலும்....) தை 31, 2012 ஒற்றைச் செருப்பின் விலை இணக்கம் (மறவன்புலவு க. சச்சிதானந்தன்)
கெனியாவில் பிறந்தவர், கருந் தோலர், முகமதியர், பராக்கு ஒபாமா. மாணவனாகப் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்கா வந்தார். அவாய்த் தீவில் பட்டப் படிப்பு. ஆன் சக மாணவி, வெண் தோலர், கிறித்தவர். காதலித்த இருவரும் 1961இல் மணந்தனர். கலப்பு மணத்தால் விளைந்த கருந் தோலர், சுருள் முடியர், முகமதியப் பெயராளர், மகன் பராக்கு உசேன் ஒபாமா. 2009 தையில் அமெரிக்க மாநிலங்களின்குடியரசுத் தலைவர் பராக்கு ஒபாமா! கருந் தோலும் சுருள் முடியும் தடித்த உதடுகளும் முகமதியப் பெயரும் கொண்ட அவரை, வெண் தோல் பெரும்பான்மை வாக்காளர் தம் அடுத்த குடியரசுத் தலைவராக 2008 கார்த்திகையில் தேர்ந்தனர். (மேலும்....) தை 31, 2012 The Amazon The greatest river in the world
The Amazon is the greatest river in the world by so many measures; the volume of water it carries to the sea (approximately 20% of all the freshwater discharge into the oceans), the area of land that drains into it, and its length and width. It is one of the longest rivers in the world and, depending upon who you talk to, is anywhere between 6,259km/3,903mi and 6,712km/4,195mi long. For the last century the length of the Amazon and the Nile Rivers have been in a tight battle for title of world's longest river. The exact length of the two rivers varies over time and reputable sources disagree as to their actual length. The Nile River in Africa is reported to be anywhere from at 5,499km/3,437mi to 6,690km/4,180mi long. But there is no question as to which of the two great rivers carries the greater volume of water - the Amazon River. (more...) தை 31, 2012 ஐ.நா. பேரவையில் த.தே.கூ. சாட்சியமளித்தால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சாட்சியமளித்தால் உள்நாட்டின் நீதிமன்றம் ஊடாக ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையை சர்வதேச விசாரணை பொறிமுறையில் சிக்கவைக்க அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சூழலை அமைத்து விட்டன. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து கடுமையாக போராட வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் தற்போதுவெளியில் வர ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகள் தற்போது தீவிரம் கண்டுள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என இந்தியாவின் தலைமையில் உள்நாட்டில் பேசும் போதே அதனை நிறுத்தியிருக்க வேண்டும். அதேபோன்று இதுவரை காலமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை. இவர்களே போலியான தகவல்களை சர்வதேசத்திற்கு பரப்பி வருகின்றனர். மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார். தை 31, 2012 2066 Kings Grove Crescent . Gloucester . Ontario . K1J 6G1 30 January 2012 Hon. John Baird, MP, PC. , Canadas Minister of Foreign Affair, House of Commons, Ottawa. Dear John: I have just read in Colombo Telegraph the news item, Canadian Foreign Minister Strikes Again This Time In London Against Sri Lanka. John you got my goat and I am seething. You are obviously in your element when you get on your High Horse and try your Nepean Song and Jig when you comment on Sri Lanka. Stop being so God damn arrogant, so God damn pompous, so God dam pretentious, and cut out your White Colonial mentality. (more...) தை 31, 2012 இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் நடத்த ஏற்பாடு _ இலங்கையின் 64 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு வலுவடைய மேற்படி சுதந்திர தின விழா அமையுமென்று சென்னை மஹா போதி நிலையத்தின் பீடாதிபதி கலவானே மஹநாம தேரர் குறிப்பிட்டார். கடந்த 12 ஆண்டு காலமாக சென்னையில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் மஹாபோதி நிலையத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் முறையும் இலங்கையும் சுதந்திர தினத்தை சென்னையில் நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். சென்னையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாக உள்ள இலங்கையின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்நாட்டு கலை, கலசார பாரம்பரிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. அத்தோடு இசை நிகழ்ச்சி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற உள்ளதுடன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி விசேட உரையாற்ற உள்ளார் எனவும் கூறினார். ___ தை 30, 2012 தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்? - இரா.துரைரெட்ணம் வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(மேலும்....)
தை
30,
2012
திருகோணமலையின் புறநகர் பகுதியான விநாயகபுரத்தில் இனந்தெரியாவர்களால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் துரைநாயகம் சஞ்சீவன் (வயது-32) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இளைஞர் வீரகேசரி பத்திரிகையின் திருகோணமலை கிளைக் காரியாலயத்தின் ஊழியராக கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தை 30, 2012 இலங்கைக்கான என் அமைதிப் பயணம் - ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (முன்னாள் இந்திய ஜனாதிபதி) இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை வளர்க்கும் விதத்தில், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது என்பது ஒரு வகை. இரண்டு, இலங்கைக்கு சென்று, அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் அறிந்து, அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, உரையாடி, இப்போது இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் கலந்தாலோசித்து, பேச வேண்டிய விதத்தில், பேசவேண்டிய இடத்தில் பேசி, இந்தப் பிரச்னைக்குரிய தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பது இரண்டாவது வகை. நான் தெரிந்தெடுத்த வழிமுறை, இரண்டாம் வகையிலானது. (மேலும்....)தை 30, 2012 பாராளுமன்ற தெரிவுக் குழு தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நியமனத்துக்காக அரசு காத்திருப்பு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களுடைய பெயர்களின் பரிந்துரைக்காக அரசாங்கம் காத்திருப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்க நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகளின் பெயர்களைப் பரிந்துரைக் குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கத் தரப்பில் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதுவரை அவர்களி டமிருந்த எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படவில்லை. தெரிவுக்குழுவுக்கான பெயர்களை அவர்கள் பரிந்துரைத்ததும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடரும். இது நிபந்தனையல்ல, எனினும், அவர்களின் பரிந்துரைக்காக நாம் காத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் இதுவரை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை யென்றும் குறிப்பிட்டார். இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தேவையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த ரஜீவ விஜேசிங்க, இந்தக் கருத்து சுரேஷ் பிரேமச்சந்திரனுடைய சொந்தக் கருத்தாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான கருத்து இதுவாக இருக்கும் என நான் கருதவில்லை என்றார். அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாதகமாக நோக்குவதாக ஊடங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் எம்மால் அறியக் கூடியதாக உள்ளது என்றும் ஆளும்தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்தார். தை 30, 2012 வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்வடக்கில் தற்போது கடுங் குளிர் காலநிலை நிலவி வருகிறது. இந்தி யாவில் நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை வடக்கில் நேரடியாக தாக்கம் செலுத்தி வருவதாக வானிலை அவதானத்தின் அதிகாரி யொருவர் தெரிவித்தார். கடந்த 16 ஆம் திகதி முதல் வடக்கில் வெப்பநிலை மாறுபட்டளவில் குறைவ டைந்து வருவதாகவும் இதனால் அப்ப குதியெங்கிலும் பனிமூட்டம் ஏற் பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை வடக்கின் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்ப நிலை ஓரளவு வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக குளிர் காலநிலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. கிழக்கில் அதிகரித்த பனி காரணமாக மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீர் காலநிலை மாற்றத்தையடுத்து காய்ச்சல், இருமல், தடிமல் நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உதடு மற்றும் குதிகால் வெடிப்பு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். குறித்த காலநிலையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தை 30, 2012 வட மாகாணத்தின் முதலாவது நீச்சல் தடாகம் பெப். 6 இல் ஜனாதிபதியால் திறப்புவட மாகாணத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள முதலாவது பாரிய நீச்சல் தடாகம் உட்பட பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 6ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அவர்கள் நீச்சல் தடாகம் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை மூன்று கட்டடத் தொகுதிகளை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பார். 60 மில்லியன் ரூபா செலவில் வட மாகாண பாடசாலைகளின் முதலாவது நீச்சல் தடாகம் யாழ். மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு ள்ளது. வட மாகாணத்தின் வரலாற்றில் அதிநவீன முறையில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட முலாவது நீச்சல் தடாகம் இதுவாகும். இதேவேளை சாவகச்சேரிக்கு வியஜம் செய்யும் ஜனாதிபதி அவர்கள், சுமார் 158 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சொந்தமான மூன்று கட்டடத் தொகுதிகளையும் திறந்து வைக்கவுள்ளார். சகல வசதிகளையும் கொண்ட நவீன முறையிலான ஆண், பெண் வார்ட் தொகுதிகளும் டாக்டர்கள் தங்கும் விடுதியையுமே ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளிக்கவு ள்ளார். தை 30, 2012மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பிரிவினைக்கு வழிவகுக்கும்மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள். ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது. தை 30, 2012 தமிழனை காக்க இதுவா வழி (இரா. ஆஞ்சலா ராஜம்) "தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள், சுய மரியாதை உள்ளவர்கள், தன் ரத்த பந்தங்களுக்கு ஒன்றென்றால், அதை, ஒரு போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்...' இப்படித் தான், தமிழ்த் தாயின் தன்னிகரற்ற தவப் புதல்வராகவும், "தமிழ் இனத்' தலைவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், மேடைதோறும் கூவிக் கொண்டிருக்கின்றனர். "தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒன்று என்றால், அதைவிட இந்த உயிர் இருந்தாலென்ன, போனால் என்ன' என்றெல்லாம், வீராவேசமாக இவர்கள் பேசும் போது, உள்ளமெல்லாம் துடிக்கிறது; உடலில் மின்சாரம் பாய்கிறது. இதெல்லாம், கேட்பவர்களின் உணர்ச்சியைத் தூண்ட மட்டும் தான். மேடையை விட்டுக் கீழே இறங்கி விட்டால், துண்டை உதறி தோளில் போட்டுச் சென்று விடுவர், தன் ஜோலியைப் பார்க்க; அதோடு அவர்கள் காரியம் முடிந்தது; நாம் விக்கித்து நிற்போம், அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்! தாய்த் தமிழனுக்கு ஒன்று என்றாலும், தொப்புள் கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்று என்றாலும், மேடைகளில் தான் முழங்குகின்றனரே தவிர, காரியம் ஏதும் நடைபெறவில்லை. உண்மையில், எம் "தமிழினத்' தலைவர்கள், புதிதாக எதையும் செய்ய வில்லை; புரட்சிக்குத் தலைமை தாங்கவுமில்லை. புரட்சி செய்து கொண்டிருப்பது போல, "பிலிம்' காட்டிக் கொண்டிருக்கின்றனர். (மேலும்....) தை 29, 2012 பேச்சுவார்த்தையில் வ/கி இணைப்பில் தீவிரம்: தேர்தலை தனித்து நடத்த தொடர் கோரிக்கை வடமாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார்? UPFA சார்பில் டக்ளஸ் உறுதி, TNA சார்பில் மாவை, சுரேஸ், மனோ? முற்போக்குச் சக்திகளின் சார்பில் வரதரா.....? அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட கட்சி யின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள் ளதுடன் தம்மைத்தான் நிறுத்த வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இதற்காக பலர் தமது பாராளு மன்றப் பதவியைத் துறக்கவும் தயாரெனத் தெரிவித்துள்ளனர். இதனால் கட்சியின் தலைமைக்குப் பெரும் நெருக்கடி நிலை எழுந்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தாமல் விட்டாலே இப்போதைக்கு நல்லது என எண்ணு மளவிற்கு தலைமை தள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் ஐக்கிய முன்னணியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றமையால் அரசியலில் புதிய முகங்களை நிறுத்தி எதிர்க்கட்சியாக வரும் நிலையையும் இழந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்....) தை 29, 2012வந்தேன், கண்டேன், வென்றேன்யாழில் தேன்மாரி பொழிந்த அப்துல் கலாம்பறக்கும் பல்கலைக்கழகம் பற்றி கேள்விப்பட்டிருக்கின் aர்கள் தானே? அப்படியான ஒரு கப்பலில் பறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது! சர்வ கலைகளையும் கற்று சர்வதேச புகழை தன் சொந்தமாக் கிக் கொண்டு சர்வதேச கீர்த்தி திறமையை முழுமையாக தன் வசப்படுத்திக்கொண்டுள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் ஒரு தனியான பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார். அவர் பிரயாணம் செய்கின்ற ஒவ்வொரு வாகனமும் - அது தரை வாகனமாக இருந்தாலென்ன வானூர்தியாக இருந்தாலென்ன, அத்தனை இருப்பிடங்களிலும் ஒரு பூரண அறிவுப் பெட்டகமாக அவர் விளங்குகிறார். எனவே தான், அறிவுக் கலசத்தை அப்படியே ஏந்திச் செல்லும் அவரது பிரயாண வாகனமும் ஒரு பல்கலைக் கழகத்தை ஒத்தது என்பேன். (மேலும்....) தை 29, 2012 தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் அதற்கான காரணங்களும் (இரா. துரைரட்ணம் ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் இணைந்த கூட்டுக் கட்சியாக பதிவு செய்யப்படாமை உள்ளக முரண்பாட்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயம் பெற்று இன்று 12 வருடங்கள் கடந்து விட்டன. அதன் ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் இயங்கலாம் என சிலரும், இல்லை இல்லை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என சிலரும் அடம்பிடித்து நின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிதான் தமிழ் கட்சிகளில் மூத்த கட்சி, எனவே அக்கட்சியின் சின்னத்தையே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அந்நேரத்தில் வாதிட்டதையும் நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும் என 2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்றுக் கொண்டனர். அக்காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த செல்வம் அடைக்கலநாதன், ஜோசப் பரராசசிங்கம் ஆகிய தலைவர்கள் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணங்கியிருந்தனர். இன்றைக்கு இந்த இணக்கம் ஏற்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன. கட்சியை பதிவு செய்வதில் இழுபறிக்கான காரணம் என்ன? (மேலும்....) தை 29, 2012 தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை அமைப்பு விவகாரம் சூடுபிடிப்பு
தீர்வுக்காக
ஒற்றுமையுடன்
செயற்படும்
TNA யை
தமது சுயலாபத்திற்காக
கூறுபோட சிலர் முயற்சி? தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டமை தொடர்பாக அக்கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் பாரிய முரண்பாடான கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தமிழ்க் கூட்டமைப்பாக ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகையில் தமிழரசுக் கட்சியை மட்டும் தன் தலைவர்கள் பலப்படுத்தி வரும் செயற்பாடு குறித்து அதன் சகோதரக் கட்சிகளின் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கிளை அமைக்கப்பட்டமை தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் வெளிக்கிளம்பி யுள்ளன. ஈ. சரவணபவன் எம்.பி. உட்பட முக்கியமான பலர் தமக்கு இக்கிளை தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பதுடன் இவ்விடயத்தைத் தாம் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டதாகவும் கடுமையாக விசனம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான தகவல் தெரிவிக்கிறது. (மேலும்.....)
தை 29, 2012 கிழக்குப் பல்கலையின் புதிய உபவேந்தர் நியமனம் ரத்து, தமிழ் பேசும் ஒருவரை நியமிக்கவும் இணக்கம்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் அடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட உபவேந்தருக்கான நியமனத்தை ரத்துச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்பேசும் ஒருவரே உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் எனக்கோரி நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை கல்விச் சமூகத்தின் ஆதரவுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுடன் தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக தமிழர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....) தை 29, 2012 மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள் (பகுதி 1) (S. மோகனராஜன்) உலகம் இரு மகா யுத்தங்களை சந்தித்தப்பிறகு அதிகம் பேசப்படுகின்ற, அண்மைய காலங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக மனித உரிமைகள் மாறியுள்ளன. இயற்கைச்சட்டம், இயற்கை நீதி, சனநாயக கோட்பாட்டின் வளர்ச்சி, தேசியரசுகளின் தோற்றம் என நாகரீகத்தினதும் அரசியல் கோட்பாட்டினதும் வளர்ச்சியினால் கொடுரமான ஆட்சி முறைமை ஏற்படவே மனித உரிமைகள் எனும் மனிதத்துவத்தினை பாதுகாக்கும் எண்ணம் வலுப்பெற்றது. கிரேக்க காலத்துக்கு முற்பட்ட காலம் முதலே கொடுரமாக நடாத்தப்பட்டு வந்த ஆட்சி முறைகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் இடையிடையே நமது எதிர்ப்புக்களை காட்டியும் வந்துள்ளனர் ஸ்பாட்டகஸ் போராட்டம், 1215, 1688 கால போராட்டங்கள் 1789 ஐக்கிய அமெரிக்க, பிரான்சிய சுதந்திரப்போராட்டங்கள் உட்பட, 18ம் 19ம் நூற்றாண்டுகளிலும் அதற்கு முற்பட்ட காலங்களில் தோன்றிய எதிர்ப்பு எண்ணமும் ஏதோ ஒரு வகையில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே. (மேலும்....) தை 29, 2012 சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும் - பகுதி 1 (அ. ஆனந்தன்) சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது. இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார். (மேலும்.....) தை 28, 2012 அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. குறிப்பாக மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கான தீர்வில் ஏனைய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஆதரவு பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகளுக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவது என்பது மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அரசியல் தீர்வாக வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாகவே எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்போது அது நாட்டிற்கு ஆபத்தானதாகவே அமையும். அரசியல் தீர்வு விடயத்தில் ஏனைய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. ஜே.ஆர். ராஜீவ் ஒப்பந்தம், சந்திரிகா பிரபாகரன் ஒப்பந்தம், ஜீ.எல். பாலசிங்கம் ஒப்பந்தம் போன்றவைகளால் நாட்டுக்குத் தேவையற்ற பிரச்சினைகளே வந்தது. இந்நிலையை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்றார். ___ தை 28, 2012 சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம்: நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது - அமைச்சர் டலஸ் அழகபெரும! சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகத்துடன் ஒன்றித்துப் பயணிக்க முடியும்" என்றார். தை 28, 2012 மீனவர் பிரச்னை கலாமின் இரண்டு யோசனைகள்!
தமிழக - இலங்கை மீனவர் பிரச்னையில் இரண்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார்,
முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம். தை 28, 2012 ஆனந்தகுமார சுவாமி வீதியின் பெயர் மாற்றம் தமிழருக்கு செய்த துரோகம் - முஜீபுர் ரஹ்மான் _ ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை ""நெலும் பொக்குன'' வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன என்று மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர்களை கலைஞர்களை கௌரவிக்கும் கலாசாரம் ஆரம்பக் காலம் தொட்டே காணப்படுகின்றது. உதாரணமாக கன்னங்கர வீதி, டி.பி. ஜயா வீதி, மஹிந்த தேரர் வீதி என்று பலரினதும் பெயர்களை வைத்து வீதிகள் காணப்படுகின்றன. இவை எதுவும் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல. அப்போதைய அரசாங்கங்கள் அவர்களை கௌரவிக்கும் முகமாக வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்தன. ஆனந்த குமாரசுவாமி வீதியை நெலும்பொக்குன என்று மாற்றியமை அநாகரிகமான செயலாகவே கருதப்பட வேண்டும். கலைக்காகத் தொண்டு செய்து நாட்டிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த ஆனந்த குமாரசுவாமிக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது என்றார். ___ தை 28, 2012 இலங்கை மீது பொய்க் குற்றம் சுமத்தும் அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் இல்லை ஊடக சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறதென்று சர்வதேச அரசியல் சக்திகளின் கைப்பொம்மைகளும் எல். ரி. ரி. ஈ.யின் டொலர்களுக்காக வாலை ஆட்டிக் கொண்டு எல். ரி. ரி. ஈயின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்று அரசாங்கத்திற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் சுயநலவாத சக்திகள் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் ஊடக சுதந்திர மீறல்கள் குறித்து வாயடைத்து போயிருக்கின்றன. எல்லைகளைக் கடந்த பத்திரிகையாளர் என்ற சர்வதேச அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் ஊடக சுதந்திரத்தை மீறிய நாடுகளில் 27 ஆம் இடத்தில் இருந்து வந்த அமெரிக்கா தற்போது 47 வது இடத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளது என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, கெமரோஸ் மற்றும் தாய்வானுக்கு பின்னால் மனித உரிமை மீறல் பட்டியலில் இருந்து வருகின்றது.(மேலும்....) தை 28, 2012 வேலைப்பளு அதிகரிப்புக்கு எதிர்ப்பு ஹட்டன் போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தம் நாளொன்றின் அடிப்படைச் சம்பளத்திற்கான வேலையின் அளவை அதிகரிக்கக் கோரியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிக்கோயா போடைஸ் தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். டிக்கோயா பிரதேசத்திலுள்ள போடைஸ் கொனகொல்லை, 30 ஏக்கர், என்ஸி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இந்த பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களில் ஆண் தொழிலாளர்கள் ஒரு நாள் அடிப்படைச் சம்பளத்திற்காக இதுவரை காலமும் 14 கிலோ கொழுந்தினையும் பெண் தொழிலாளர்கள் 16 கிலோ கொழுந்தினையும் பறித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தோட்ட நிருவாகம் அடிப்படைச் சம்பளத்திற்காக ஆண், பெண் தொழிலாளர்களை 18 கிலோ கொழுந்தினைப் பறித்தால் தான் ஒரு நாள் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமென்று தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ___ தை 28, 2012 காணவில்லை கடந்த 2011ஆண்டு ஜூன் 15 முதல் மாதத்திலிருந்து கனடா - டொரோண்டோவில் காணாமல் போன சிவலதா செல்லத்தம்பி வயது 31 என்ற பெண்ணை டொரோண்டோ போலீஸ்சார் தேடிவருகின்றனர் இவரின் சொந்தவூர் தமிழ் நாடு என்றும் இவரின் கணவர் டொரோண்டோ மேற்பகத்தில் விமிக்கா உணவகத்தை நடத்துபவர் என்றும் சிவலதா செல்லத்தம்பி அங்கு வேலை செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது இவரின் கணவரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிசார் தனது மனைவிக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் போலீஸ் மேலதிக விசாரணைக்கு மறுத்ததாக கனேடிய தொலைக்காட்சி CBC செய்தினை நேற்று வெளியிட்டுள்ளது கனடா - டொரோண்டோ போலீஸ் தகவல்: http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/22657.pdf தை 28, 2012 நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளின்படி முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் - ஜனாதிபதி இலங்கையில் கடந்த முப்பதாண்டு காலமாக காணப்பட்ட யுத்தத்திற்கு ஒரே நாளில் தீர்வை ஏற்படுத்தி விட முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புலிகளிடமிருந்து நாட்டை மீட்டு சுதந்திரத்தையும் நிலையான சமாதானத்தையும் ஸ்தாபித்துள்ளோம். பொதுமக்களின் நலன்களுக்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டியதே அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். "கடந்த காலங்களில் புலிகளின் பிரச்சினையே சவாலாகக் காணப்பட்டது. அதனை முழு அளவில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். தற்போது பொது மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது. உலகத்திலேயே யுத்தம் முடிவடைந்து மிகவும் குறுகிய காலத்தில் கூடிய அபிவிருத்திகளை அடைந்த நாடு இலங்கையே. வீதிகள், மின்சாரம், பொருளாதாரம் என்று பல்துறைகளிலும் அபிவிருத்திகள் ஏற்பட்டு வந்துள்ளது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அதனடிப்படையில் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நவீன தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியதுள்ளது. அதற்கான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. நாட்டுக்கான பொறுப்பிலிருந்து அரசு ஒரு போதும் விலகாது" என்றார். ___ தை 27, 2012 உடைக்கப்பட வேண்டிய பிற்போக்குத் தமிழ்த் தேசியம் புனிதமானவையாகவும் உயர்வானவை யாகவும் சித்திரிக்கப்பட்டு என்றென்றும் கட்டிக்காக்க வேண்டினவாகக் கூறப்பட்டு தமிழ்த் தேசியத்தினுள் படிந்திருக்கும் பிற்போக்குக் கூறுகளாகும். இவை உடைக்கப்படா விடின் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் உண்மையான விடுதலைப் பாதையில் பயணிப்பது இயலாததாகும். முற்போக்கான தமிழ்த் தேசியம் உருவாக்கப் படுவதை மாக்சிச லெனினிசவாதிகள் வரவேற்கிறார்கள். அவ்வாறு உருவாகும் முற்போக்கான தமிழ்த் தேசியத்துடன் நட்புறவுடன் இணைந்து பயணிப்பதில் மாக்சிச லெனினிசவாதிகளுக்கு எவ்வித சிரமமோ தடைகளோ இருக்க மாட்டாது. இது காலத்தின் தேவையாக இருப்பதை உணர்ந்து தமிழ்த் தேசியத்தின் பிற்போக்குத்தனங்களால் ஏமாற்றப் படுவதைத் தடுக்க இளந் தலைமுறையினருக்கு உள்ள ஒரு வழியாக இம் முற்போக்குத் தமிழ் தேசியம் உருவாக்கப் படுவது தேவையாயும் பயனுடையதாயும் இருக்கும். (மேலும்....) தை 27, 2012 Visit of Canadian Parliamentary Delication to Srilanka
On the invitation of the Acting Minister of External Affairs Hon. Neomal Perera, a Parliamentary delegation from Canada comprising Hon. Chungen Leung (M.P.), Parliamentary Secretary for Immigration and Multiculturalism and Deputy Minister of the Government of Canada, Hon. Joe Daniel (M.P.), and Marlene Gallyot, Member of the Conservative Party visited Sri Lanka from 8th to 11th January, 2012. The delegation paid a courtesy call on the Acting Minister at the Ministry of External Affairs. (more.....) தை 27, 2012 முகம் பார்.
சூரிய வெளிச்சத்துள் புகுந்துகொள். நிறங்களாய்ப் பிரிந்து போ. திரைந்து இலைகளுக்குள் பச்சையமாக இறுகி பூக்களாக வெளியில் வா. விதையாகு. வீரியப்படு. முளைவிடு. விருட்சமாகி வெளிச்சம் வாங்கு. உனக்குள் உன்னைத்தாங்கு. வாழ்க்கை உருசிக்கும்.
சுற்றிப் பாலைவனமென்றால் புற்தரையாக விரித்துப்போடு உன்னை.
கடலுக்குள் முகம் பார்க்கும் வானத்தை கண்ணுக்குள் சிறைப்படுத்து. மேகமாகி மண்ணில் விழு. ஒவ்வொரு துளிப்பொழுதிலும் உன் பெயரெழுது. வாழ்க்கை உணர்ச்சிகளின் நாட்குறிப்பு. எழுது. வாசி. வார்த்தையில் கஞ்சனாகு. கவிதையில் வள்ளலாகு. வாழப்பழகு. வாழ்க்கை உருசிக்கும். மு.கு.சிவசோதி. January 9,1999. தை 27, 2012 லிபிய நிலவரம் குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை, கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு லிபியாவில் நிலவும் மோதல் மற்றும் அங்கு கைது செய்யப்பட்டுள்ள கடாபி ஆதரவாளர்கள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் லிபியாவின் திரிபோலி, பானிவலித் மற்றும் பெங்காசி நகரங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மோதல் அங்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக பாதுகாப்புச் சபை உறுதி செய்துள்ளது. தவிர 8000 க்கும் மேற்பட்ட கடாபி ஆதரவாளர்கள் லிபிய சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக பாதுகாப்புச் சபையில் அறிவுறுத்தப்பட்டது. (மேலும்....) தை 26, 2012 நாசார் என்ற பெருமனிதனின் பொங்கலுக்கான அறைகூவல்! (ப.வி.ஸ்ரீரங்கன்) இந்தக் குரல் பரவலாகவேண்டும். நாசாரது குரல், பரவலான தென்மாநில மக்களது சமுதாய ஆவேசமாகும். குறிப்பாக, இந்திய மத்திய அரசின் தாரளவாதப் பொருளாதார இலக்கால்-அந்நியப் பெரு பகாசூரக்கம்பனிகளால் பழிவாங்கப்பட்ட விவசாயிகளின் குரல் இது. இஃது, முழுமொத்த மக்களதும் உரிமைக்குரலாகிறது. உணவு உயிர்வாழ்வுக்கு அடிப்படை. அந்தவுணவுக்கு உழவு-விவசாயம் அடிப்படை.அந்த விவசாயி- உழவன் தன் விளைச்சலுக்குக் காரணமான சூரியனுக்கும்,வானுக்கும் நன்றி செலுத்தும் இன்றைய நாளை, நான் பெரிதும் மதிப்பவன். அந்த நன்றி செலுத்தும் விழாவுக்கு நானும் சொந்தக்காரனுங்கூட. எனது தந்தை சிறு விவசாயி. அந்த விவசாயமே நமக்கு அடிப்படை. தமிழகச் சினிமா இயக்குநர்-நடிகர் நாசாரது குரல் இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் பெரிதான விடையம். பாராமுகமாக இருக்கும் தமிழக நடுத்தரவர்க்கச் சூழலில், நாசார் மக்களோடும்,மண்ணோடும் ஒன்றித்திருந்து, தன்னை மண்ணிலிருந்து பிரிக்காதவொரு மகத்தான கலைஞனாகக் காட்டிக்கொண்டிருகிறார். (மேலும்....) தை 26, 2012 கடாபி ஆதரவாளர்களிடம் சிக்கியது பானி வாலித் நகர் லிபியாவில், புதிய அரசு அமைந்து மூன்று மாதங்களுக்குப் பின், கடாபி ஆதரவாளர்கள், பானி வாலித் நகரைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது. லிபியாவில் கடந்தாண்டு நவம்பரில், அப்போதைய தலைவர் கடாபி கொல்லப்பட்டார். இதையடுத்து புதிய அரசு அமைந்தது. இந்நிலையில் தலைநகர் திரிபோலியில் இருந்து 150 கி.மீ. தெற்கில் உள்ள பானி வாலித் நகரை நேற்று முன்தினம் மீண்டும் கடாபி ஆதரவாளர்கள் கைப்பற்றினர். அந்நகரில் இருந்த புரட்சிப் படைத் தளபதி அலி அல் படாம்னி, மிஸ்ரட்டா நகருக்குத் தப்பித்துச் சென்றார். நகரின் பல உயர்ந்த கட்டடங்களில், கடாபி ஆட்சியில் இருந்த பச்சைக் கொடியை அவரது ஆதரவாளர்கள் ஏற்றி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது. தை 26, 2012 மெகஸின் சிறைச்சாலை தாக்குதல் சம்பவங்கள் 3 விசேட குழுக்கள் விசாரணை, ரூ. 45 இலட்சம் சொத்துக்கள் சேதம்வெலிக்கடை நியூ மெகஸின் சிறைச்சாலையில் நடந்த வன்முறைகளால் 45 இலட்சம் ரூபா வரையும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார். கைதிகளின் அடாவடித்தனம், தாக்குதல் காரணமாக சிறைச்சாலையின் நூலகம் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது என்று தெரிவித்த செயலாளர் திஸாநாயக்கா, இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென மூன்று வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்னும் இரண்டொரு தினங்களில் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மேற்படி மூன்று விசாரணைக் குழுக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று குழுக்களினதும் அறிக்கை கிடைத்த பின்னரே இத்தாக்குத லுக்கு சூத்திரதாரியாக செயற்பட்ட கைதிகளுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை சிறைச்சாலையின் ஒழுக்காற்றுக் குழு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்க் கைதிகள் யாவரும் (181 பேர்) வெலிக்கடை, களுத்துறை உட்பட ஏனைய சிறைகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். எரிந்து நாசமான வழக்கு பிரதிகளுக்கு பதிலாக அவற்றின் பிரதிகளை மீண்டும் எடுத்துவிட முடியும் என்றும் செயலர் ஏ. திஸாநாயக்க கூறினார். தை 26, 2012 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த வருடத்தில் 50 வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இவ் வருடத்தில் 36 வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாகன விபத்துக்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதியே தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. குறித்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 24 மணித்தியாலத்துக்குள் முதலாவது வாகன விபத்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாகனம் செலுத்திய 9070 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் இதுவரை 999 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களை இவ்வருட வாகன விபத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவ்வருடம் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தை 26, 2012 'வடக்கு புகையிரதப்பாதை 2013 இல் நிறைவடையும்' இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வட பகுதியிலும் மேற்கொள்ளப்படும் புகையிரதப் பாதை அமைப்புப் பணிகள் 2013 முடிவில் நிறைவடையும். அத்துடன் வட மாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான நெருங்கிய சகோதரத்துவ உறவிலான அபரிமிதமான முன்னேற்றம் இவ்வாண்டிலும் தொடரும். இதன் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போதுள்ள இறங்கு துறைக்குச் சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல்கள் திரும்பவும் வர முடியும். இதனால் யாழ்ப்பாணத்தின் கடல் வாணிபம் முன்னேற்றமடையும். தென் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாதை ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்றார். தை 26, 2012 விரைவில் மோதவுள்ள ஐபோன் 5 மற்றும் செம்சுங் கெலக்ஸி
செம்சுங் கெலக்ஸி வரிசையில் வெளியாகிய கையடக்கத்தொலைபேசிகள்
வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.குறிப்பாக கெலக்ஸி மற்றும்
கெலக்ஸி II ஆகியன விற்பனையில் சாதனை படைத்தன. கெலக்ஸி II கடந்த வருடத்தின்
மிகச் சிறந்த ஸ்மார்ட் போன் ஆகவும் தெரிவாகியது. கெலக்ஸி I , கெலக்ஸி II
ஆகியன செம்சுங் நிறுவனத்தால் இதுவரை வெளியாகிய ஸ்மார்ட் போன்களில் மிகச்
சிறந்ததாகவும் வர்ணிக்கப்பட்டன. கடந்த வருடம் வெளியாகிய அப்பிளின் ஐ போன்
4S இன் விற்பனையையும் கெலக்ஸி II முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் ஸ்மார்ட் போன்கள் மற்றையவற்றை விட சிறந்ததாக சந்தையில் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இவற்றின் வருகையை அடுத்தே. இந்நிலையில் செம்சுங்
கெலக்ஸி III ஸ்மார்ட் போனையும் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள்
கசிந்துள்ளன.
(மேலும்....) இது இப்படியிருக்கு.....?
தை 25, 2012 இலங்கையின் நல்லிணக்கத்துக்கு மும்மொழி கொள்கை சிறந்த அடித்தளம் - அப்துல் கலாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வரும் மும்மொழிக் கொள்கை இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் நாடு பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் வளம்பெற முடியுமென்று தாம் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார். ஊடகங்களின் சிரேஷ்ட ஆசிரியர் களுடன் நேற்று நடத்திய கலந்துரை யாடலின் போதே அப்துல் கலாம் இதனை தெரிவித்தார். (மேலும்....) தை 25, 2012 தடைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முயற்சி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கண்டியில் நடத்த இருந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு விதித்த நிலையில் இதனையும் மீறி மாணவர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பகிடிவதை தொடர்பில் 25 மாணவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருப்பதற்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது பேராதனை பல்கலைகழகத்தில் இருந்து கண்டி வரை ஊர்வலமாகச் சென்று அஸ்கிரி, மல்வது பெளத்த பீடாதிபதிகளுக்கு மகஜர் கையளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டனர். இதனை தடுக்க கலகா சந்தியில் வீதித்தடைகள் இடப்பட்டன. இதனால் பதற்றநிலை ஏற்பட்டது. இந்த பதற்றநிலை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டதோடு போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது. மாணவர்கள் பஸ்ஸில் சென்று மகஜரை கையளிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக அஸ்கிரிய, மல்வத்த பெளத்த பீடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தை 25, 2012 "தமிழர்களின் பிரச்சினையை முடித்து வைப்பதென அமெரிக்கா முடிவெடுத்து விட்டது" யாழ்ப்பாண வலம்புரியின் நகைச்சுவை! (நக்கீரன்) முதலில் நான் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டு விடுகிறேன். புலத்தில் உள்ளவர்களை நிலத்தில் உள்ளவர்களோடு ஒப்பிட்டால் புலத்தில் உள்ளவர்கள் ஒரு முழம் கட்டை. நாம் ஏதாவது கருத்துத் தெரிவித்தால் உடனே "வெண்பனி நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு தாயகத்தின் கள நிலை தெரியாது" என்று ஒரே போடாகப் போட்டுத்தள்ளி எங்கள் வாயை ஒரு சில ஆய்வாளர்கள் அடைத்து விட முயற்சிக்கிறார்கள். ஆனால் நிலத்தில் இருந்து போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள், கால்தடம் போட்டு விழுத்துபவர்கள் அல்லது குறுக்குச் சால் ஓட்டுபவர்கள் ஆகியோரை விட புலத்தில் இருந்து போராட்டத்துக்கு தோள் கொடுப்போர் குரல் கொடுப்போர் மேலோர். இதில் எந்த அய்யமும் இல்லை. (மேலும்....) தை 25, 2012ராஜீவ் கொலைக் கைதி பேரறிவாளனுக்கு பொலிஸ் காவலில் செல்ல மறுப்புராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஏற்று சென்னை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றில் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரை அடுத்த விருதம்பட்டு வெண்மணி மோட்டூரில் உள்ள பேரறிவாளனின் பாட்டி கிருஷ்ணம்மாள் (வயது 80) உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர், பேரறிவாளனின் அம்மாவான அற்புதம்மாளின் தாயார் ஆவார். அதைத் தொடர்ந்து பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் பேரறிவாளன் சார்பில் பொலிஸ் காவலில் செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தை 24, 2012 புலிகளின் தலைவர் பிரபாகரனை விடவும் கருணா சிறந்த தளபதி, இந்திய முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஹரிகரன்! - விக்கிலீக்ஸ்!
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காட்டிலும் கருணா சிறந்த தளபதி என இந்திய அமைதிப் படையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிகரன் தெரிவித்திருக்கிறார். பிரபாகரன் - கருணா முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவின் சென்னை துணைத் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள எழுத்துமூல ஆவணமொன்றில் இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஹரிகரன். பிரபாகரனைக் காட்டிலும் சிறந்த தளபதி கருணா என்றும் எந்தவொரு மரபுவழிப் போரிலும் கருணா வெற்றிபெறக் கூடியவர். அத்துடன் பிரபாகரனால் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலேயே கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். 2004 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் திகதி சென்னை துணைத் தூதரகத்தில் இருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணமொன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. தை 24, 2012 பாதுகாப்பு கருதி தமிழ் அரசியல் கைதிகள் இடமாற்றம் கொழும்பு மெகசின் சிறைசாலையில் ஏற்பட்ட மோதலை தொடரந்து 185 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்கள் பாதுகாப்பு கருதி வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். இன்று காலை மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை சம்பவத்தையடுத்து 6 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடங்கலாக 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். தை 24, 2012 சிறைச்சாலையில் மோதல்: இருவர் கவலைக்கிடம், 21 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 காயமடைந்துள்ளதுடன் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக்காக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இந்த மோதல் சம்பவங்களையடுத்து பேஸ்லைன் முதல் மெட்கொட வீதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தை 24, 2012 மகசின் சிறையில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம்
புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகரை நீக்கக் கோரி சிறைக் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மோதலையடுத்து சிறைச்சாலை பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டதுடன் இதன்போது சுமார் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிக்கூடியதாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இந்த சிறைச்சாலைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் எமில்ரஞ்சன் கைதிகளுடன் கடுமையாக நடந்துகொள்வதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைச்சாலை அமைச்சின் செயலாளர் இந்தச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தபோது குறித்த சிறைச்சாலை அத்தியட்சகரை இடமாற்றம் செய்யுமாறு அங்குள்ள 1800 கைதிகளும் சிறைச்சாலைக்குள் ஆரப்;பாட்டம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையே தற்போது கலவரமாக மாறியுள்ளது. இதனால் தமிழ் அரசியல் கைதிகளும் அச்சத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக இராணுவ அதிகாரிகள் குவிக்கப்பட்டு இப்பகுதி வீதிகளை தற்காலிகமாக மூடியுள்ளதுடன் இப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா பாதுகாப்புடன் இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தை 24, 2012 13 வது திருத்தம் பற்றி அறிந்திராதவர்களே வீண் விமர்சனம் - இலங்கை அமைச்சர் இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டி ருக்கும் 13வது திருத்தம் பற்றிய போதிய அறிவில்லாதவர்களே அதுகுறித்து வீணாக அச்சமடைகிறார்கள். நாடு பிளவுபடுவதனை தவிர்க்கும் முகமாக அதில் அதிகார பரவலாக்கமே வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது எமது நாட்டிற்கு பொருத்தமானது. அதிகார பரவலாக்கல் முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் முதலமைச்சர் களின் கரங்கள் பலப்படுத்தப்படும். 13வது திருத்தம் பற்றி சரியாக அறிந்து வைத்திராதவர்களும் அதுகுறித்து வாசித்திராதவர்களும், 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் நாடு இரண்டாக பிளவுபடப் போவதாக நினைத்து வீணாக அச்சமடைந்துள்ளார்கள். அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக் கும் 13வது திருத்தத்தில் அதிகாரத்தை பிரித்துக் கொடுப்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரம் பிரித்து வழங்கப்படுகிறது. முதலமைச்சர்கள் மிகவும் பொறுப்புடையவர்களாகிறார்கள். (மேலும்.....) தை 24, 2012 இலங்கையில் இந்தியா மக்களின் ஏகொபித்த தலைவன்
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார். (மேலும்.....) தை 24, 2012 மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள் புலிகள் 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி. சுமார் அறுநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண நகரம் என்று மில்லாதவாறு அன்று வெற்றிச்சோடிக் காணப்பட்டது. வீடுகளுக்குள்ளும் மக்கள் இல்லை. வீதிகளிலும் மக்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினர் விடுத்த கடுமையான எச்சரிக்கை மற்றும் மிரட்டல், தாக்குதல் ஆகிய வற்றையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் யாழ். நகரத்தைவிட்டு வெளி யேறியிருந்தனர்; வெளியேற்றப்பட்டனர். ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் போன்ற வளர்ப்பு மிருகங்களையெல் லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்டனர். நான்காவது ஈழப்போர் மையம் கொண்டது வன்னிக்குள். மூன்றாவது ஈழப்போர் யாழ்ப்பாணத்துக்குள் மையம் கொண்டது. சந்திரிகா அரசாங் கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த புலிகள் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து புலிகள் இரு கடற்படைக் கப்பல்கள் மீது திடீர்த் தாக்குதலை நடத்தினர். இதுவே மூன்றாவது ஈழப் போருக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. (மேலும்.....) தை 24, 2012
இந்தியா புலிகளை அழித்ததா? (யதீந்திரா) ஆழமாகப் பார்த்தால் நோர்வேயின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை சமாதான முன்னெடுப்பானது, தோற்றப்பாட்டில் இரண்டாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் போன்றது எனலாம். ஆனால் இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு மறைமுக அதிகாரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். பிரபாகரனும் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எவ்வாறு கையாண்டாரோ அவ்வாறே இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி நோர்வே தலைமையிலான முயற்சியையும் கையாண்டிருக்கிறார். முதலாவது இந்திய இலங்கை ஒப்பந்தத்தைச் செயலிழக்க ரணசிங்க பிரேமதாசவைத் தெரிவுசெய்திருந்த பிரபாகரன், நோர்வேயின் முயற்சியைச் செயலிழக்கச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ஷவைத் தெரிவுசெய்தார். எல்லாக் காலத்திலும் ஒரே உபாயம் கைகொடுக்கும் என்னும் பிரபாகரன் கணக்கு இம்முறை தவறாகப்போனது. அவரது தந்திரோபாயம் இறுதியில் அவரையும் பலியெடுத்தது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் விழுந்த கதை. ஆனால் இதை ஏற்றுக்கொள்வதில் தான் நம் மத்தியில் சங்கடங்கள் தொடருகின்றன. (மேலும்.....) தை 24, 2012 எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கப்போகும் உலோகம் தங்கத்தை போல மதிப்புமிக்க உலோகம் உள்ளதா என்றதும் எல்லோர் நினைவிலும் வருவது பிளாட்டினம் தான். பிளாட்டினத்தை காட்டிலும் மதிப்பு மிக்க ஒரு உலோகம் உண்டு அது தான் பல்லேடியம். இது ஒரு அறிய உலோகம் மட்டுமின்றி ஐசோ டோப்களில் ஒன்றும் என்பது குறிப்பிட த்தக்கது. நீண்ட நாட்களாக இரசாயன துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த உலோகம் 1939ம் ஆண்டுக் குப் பிறகு வெள்ளை நிற தங்க ஆபரணத்திற்கு மாற்றாக சந்தையில் விற்பனைக்கு வந்தது. கடந்த 2008 இல் உலகம் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்ட பல்லேடியத்தின் அளவு 6.8 மில்லியன் அவுன்ஸ் மட்டுமே. ஆனால் இதே காலகட்டத்தில் உலகம் முழுவதும் வெட்டி எடுக்கப் பட்ட தங்கத்தின் அளவு 79.2 மில்லியன் அவுன்ஸ€ம் பிளாட்டினம் 6.4 அவுன்ஸ€ம் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும். (மேலும்.....) தை 24, 2012 யாழ் வைத்தியசாலையை மூடிவிடுமாறு உத்தரவிட்ட புலிகள் அகதிகளையும் விரட்டினர் நிலைமைகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு வட பகுதியின் பூகோள நிலைமைகளைப் புரிந்துகொள்வது அவசியம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப் பரப்பு தீவு என அழைக்கப்படுகிறது. மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பு குடாநாடு என்று அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. யாழ் குடாநாட்டுக்கு அண்மித்ததாக அனலைதீவு, மண்டைதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு, நயினாதீவு உட்பட பல தீவுகள் உள்ளன. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இத்தீவுகளை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போதைய இராணுவ நடவடிக்கையின்போது தீவுப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் தீவுப் பகுதிகளுக்குச் செல்லப் புலிகள் அனுமதிக்கவில்லை. (மேலும்.....) தை 24, 2012 21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம். (கு.கதிரேசன்)
கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் . (மேலும்.....) ஒரு மாத இடைவெளியின் பின்பு மீண்டும் தொடரும் சூத்திரத்தின் பணிகள். ஒருமாத இடைவெளியை வாசிப்பு ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம். இந்த இடைவெளியை எம்மால் தவிர்க்க முடியவில்லை. இதற்காக வருந்துகின்றோம். - ஆசிரியர் குழாம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |