|
||||
|
தை 2014 மாதப்
பதிவுகள் ஜனவரி 30, 2014 ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரியவர்களே இந்திாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (30) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாகும். இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது, '3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மூவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, '11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது. உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவே, குடியரசுத் தலைவரிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்' என்று வாதிட்டார். இந்த வழக்கில், மத்திய அரசு வழக்கறிஞர் பெப்ரவரி 4 ஆம் திகதி தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். கேரளாவில் இலங்கை துணைத் தூதரகம் இலங்கைக்கான புதிய துணைத் தூதரகமொன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்யும் வகையில் திருவனந்தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்தார். திருவனந்தபுரத்தில் இப்போது ரஷ்யா மற்றும் மாலத்தீவுகளுக்கான துணைத் தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்ற நிலையில், இலங்கைத் துணைத் தூதரகம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 'முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் கணக்கிலெடுக்கப்பட வேண்டும்' 'இலங்கையில் யுத்தக் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 'அப்படியான கணக்கெடுப்பை அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும்' என்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லை. அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறேன். எமது கோரிக்கை தமிழ் மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இருக்கும். அது தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு முரணானது இல்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், வாழ்வாதார பாதிப்புகள் போன்ற விடயங்கள் எங்குமே பதியப்பட்டதாகத் தெரியவில்லை. முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீடுகளைச் செய்ய இப்போதுதான் காலம் கனிந்துள்ளது. தற்போதுதான் போர் கால இழப்புகள் குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனாலேயே இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லைமேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது. ஆயினும் நேற்று பிற்பகல் நான்கு மணிவரை எந்தவொரு கட்சியோ சுயேச்சைக் குழுக்களோ வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கவில்லையென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார். இதேவேளை, இரண்டு மாகாணங்களிலும் 10 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். கொழும்பிற்கு 04 சுயேச்சைகளும் கம்பஹாவில் இரண்டு சுயேச்சைகளும் மாத்தறையில் 02 சுயேச்சைகளும் களுத்துறை மற்றும் காலியில் தலா ஒவ்வொரு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை செலுத்தியிருந்தன. இதன்படி, வேட்புமனுக்களை பெப்ரவரி 06 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் தாக்கல் செய்ய முடியும். அத்துடன் வேட்புமனு தாக்கல் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியான தினமான ஜனவரி 16 ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் இறுதி நாளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்பாக என்ற வகையில் பெப்ரவரி 05 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்த முடியுமெனவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. ஜனவரி 29, 2014 வெளிவந்துவிட்டது வானவில் இதழ் 36 தமிழ் மக்கள் மத்தியில் பலகட்சி ஜனநாயக முறை உருவாக்கப்பட வேண்டும்!
கடந்த செப்ரெம்பரில் நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தலின் பின்னர்,
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் முற்போக்கு - ஜனநாயக
சக்திகளிடத்தில் ஒரு சிறிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க
முடிகிறது. அதற்குக் காரணம் இத்தேர்தலில் தமிழ் இனவாத, பிற்போக்கு சக்திகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏறத்தாழ 80 வீதமான வாக்குகளைப்
பெற்றுக்கொண்டமையாகும். அதற்கு முன்னரான காலங்களில், சுதந்திர இலங்கைக்கான முதலாவது
தேர்தல் நடைபெற்ற 1947 முதல் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காலம் வரை, மாற்று
தமிழ் சக்திகள் என அழைக்கப்படுகின்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகள் வடக்கின் மொத்த
வாக்காளர்களில் மூன்றிலொரு பங்கு வாக்காளர்களின் ஆதரவை ஏதோ ஒரு வகையில் பெற்று
வந்திருக்கிறார்கள். கடந்த வட மாகாணசபைத் தேர்தலில்தான் அது 20 வீதமாக வீழ்ச்சி
அடைந்தது. இந்த வீழ்ச்சி ஒருவகையில் 1977 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிடம்,
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பெற்ற தோல்விக்குச்
சமமானதாகும். அத்தேர்தலில் ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று
பெருவெற்றியீட்டியது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி வெறுமனே 8 ஆசனங்களில் வெற்றிபெற்று
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் பறிகொடுத்து
நின்றது. இடதுசாரிக் கட்சிகளிலிருந்து சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் தடவையாக
எவருமே நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலை உருவாகியது.
(மேலும்.....) (எஸ். ஹமீத்)
கோரத் தீ கொடிது...கொட்டும் தேள்
கொடிது...
போர்கால வெடி கொடிது...போகாத
மிடி கொடிது... *****
பாரவண்டி தலையேறிப் பலிகொள்தல் கொடிது கொடிது....
ஆரமுதில் விஷம் கலந்து
அருந்துதலும் கொடிது கொடும் *****
இத்தனை கொடிதுகளும் இன்னும்பல கொடுமைகளும்
உச்சி முதல் பாதம்வரை பிணைத்து வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் - சி.வி வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார். "வட மாகாண சபை முல்லைத்தீவு, மாங்குளத்தில் இருப்பது தான் எமது விருப்பமாகும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் மாங்குளம்தான் மத்தியகமாக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில் நிலத்திற்கு கீழ் பாரிய கற்கள் இருப்பதால் அங்கு நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது. மாங்குளத்தில் நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் யாழப்பாணத்திலிருந்து மாங்குளத்திற்கு கொண்டு வர முடியும். கொரிய நிபுணர்கள் மாங்குளத்தில் நீர் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அய்வினை பூர்த்தி செய்ததும் அது பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் என்னிடம் கையளிப்பார்கள். அவ்வாறு தென் கொரிய நிபுணர்களினால் கையளிக்கப்படும் அறிக்கையில் மாங்குளத்தில் வட மாகாண சபையை நிர்மாணிப்பதற்குரிய சாதகமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டால் வட மாகாண சபையை மாங்குளத்திற்கு இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்வோம்.ஜேர்மன் தமிழரின் மொழிப் பற்றை நயந்து பாராட்டும் தூதுவர்! ஜேர்மனியில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்று ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் உபாலி சரத் கொங்கஹகே மனம் திறந்து பாராட்டி உள்ளார். 2002 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியத்துக்கான விருது{ ஆங்கில மொழி மூலம் } பேர்லினில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர் நெவில் பெரேரா எழுதிய Kitty and the Bell Necklace என்கிற நூலுக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் விருது வழங்கல் விழா இடம்பெற்றது. சுகவீனம் காரணமாக நெவில் பெரேராவால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இவருக்கான விருதை கையளிக்கின்ற பொறுப்பு தூதரகத்திடம் கையளிக்கப்பட்டது. தூதரகமும், இலங்கைச் சமூகமும் இணைந்து விருது வழங்குகின்ற விழாவை நடத்தின. இவ்விழாவில் நவில் பெரேராவின் எழுத்தாற்றலையும், சிறுவர் நூலையும் நயந்து தூதுவர் பேசினார். அப்போதே தமிழர்களின் தாய்மொழிப் பற்றை வெகுவாக தூதுவர் நயந்தார். இப்பேச்சில் சம்பந்தப்பட்ட பகுதி வருமாறு:- “ இலங்கைச் சமூகத்தினர் தாய்மொழியை கற்கின்றமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்களவர்கள் சிங்களத்தையும், தமிழர்கள் தமிழையும் முக்கியப்படுத்தி கற்க வேண்டும். ஜேர்மனில் உள்ள தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்மையை நான் அவதானித்து உள்ளேன். இது மனம் திறந்து பாராட்டப்பட வேண்டிய விடயம் ஆகும். இவர்களின் முயற்சிகளுக்கு தூதரகமும் உதவி செய்து வருகின்றது. கல்வி அமைச்சில் இருந்து தேவையான புத்தகங்களை பெற்று, இவர்களுக்கு விநியோகிக்கின்றது. ” ஜனாதிபதியின் செயலாளர் அமெரிக்காவில் மேற்கொள்ளும் சமரச முயற்சிகள் வெற்றியளிக்கும்சாட்சிக்காரன் காலில் விழுந்து மன்றாடுவதை விட சண்டைக் காரனிடம் நேரடியாக பேசினால் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற மூதாதையரின் கூற்றுக்கு அமைய, இலங்கை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை சம்பந்தமாக மற்ற அங்கத்துவ நாடுகளுடன் பேசி ஆதரவு திரட்டுவதை விட அமெரிக்காவிடமே நேரடியாக பேசி இலங்கையின் நிலைப்பாட்டை அந்நாட்டின் தலைவர்களிடம் விளக்கிக் கூறுவதென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.(மேலும்.....) யாழில் 38 இந்திய மீனவர்கள் கைது யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 38 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார். இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 06 படகுகளில் வந்த 38 இந்திய மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்;. எனது சக்திக்குட்பட்டதை தமிழ் மக்களுக்குச் செய்வேன் - உதயபெரேரா தமிழ் மக்களுக்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்கு தான் தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா தெரிவித்தார். இராணுவத்தினர் விவசாய உற்பத்திகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது, அவர்களால் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்துகொண்டு தீர்வு காண்பதற்காக நான் உங்களை அழைத்தேன். இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதும் ஆகும். தற்பொழுது இராணுவ முகாம்களை அகற்றி மக்களுடைய வீடுகளையும் விவசாய நிலங்களையும் ஒப்படைத்து வருகிறோம். இராணுவத்தினர் அகற்றப்பட்டவுடன் களவுகள் இடம்பெறுவதாக மக்கள் எமக்கு தெரிவிக்கின்றார்கள். அது சிவில் நிர்வாகப் பிரச்சினை. அதனைப் பார்க்க வேண்டியது பொலிஸார். இருந்தும், நாங்கள் இராணுவத்தை இரவு வேளைகளில் வீதி ரோந்துகளில் ஈடுபடுத்தியுள்ளோம். விவசாயிகளின் உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கும் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஜனவரி 28, 2014 இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் - வாசு தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பிற்பகல் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொள்வதாக இருந்த போதும், அவர் இந்நிகழ்விற்கு வருகை தரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் வாசுதேவ அங்கு மேலும் உரையாற்றுகையில், 'தற்போது நாட்டிலுள்ள பாரதூரமான பிரச்சினை ஒற்றுமையின்மையாகும். இதற்கு இருமொழி கொள்கையென்பது அவசியமானதாகவுள்ளது. ஆகவே நாட்டில் ஒற்றுமையாக்கலை நடைமுறைப்படுத்த ஒரு பக்கம் தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி என்றால் மறுபக்கம் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் வடமாகாண முதலமைச்சர். ஆகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒற்றுமையினை முன்னெடுக்க வேண்டும்.ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் வாபஸ் தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். அவர் இன்று புதன்கிழமை முதல் கடலுக்குச் செல்வதாக அறிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.மீனவர்கள் கச்சதீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர். அப்போது ராமேஸ்வரத்தை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகு மீது மோதி விசைப்படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 6 விசைப்படகை கைப்பற்றி சென்றனர். இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜனவரி 27 அன்று நடைபெறுவதற்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி, மீனவர்களை சிறையில் அடைத்ததைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்த போராட்டத்தில் குதித்தனர். கடந்த 27 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நான்காவது நாளோடு ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று புதன்கிழமையில் இருந்து கடலுக்கு செல்கின்றனர்.
இப்படியும் ஒரு ஜனாதிபதி. தெற்கிலுள்ளோர் தமிழை கற்றிருந்தால் முப்பது வருட அழிவை தடுத்திருக்கலாம் - லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் பந்துல பத்மகுமாரதமிழ்மொழியை தெற்கிலே இருக்கின்ற நாங்கள் கற்றிருந் தோமானால் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட நாசம் இந்த நாட்டிலே ஒருபோதும் ஏற்பட்டிருக்காது என லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவிய லாளர் பந்துல பத்மகுமார தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தைப்பொங்கல் வாழ்த்துக்களை உங்களிடம் தெரிவித்து உங்களுடைய மொழியில் உரையாற்றமுடியாமைக்கு உங்களிடம் முதலில் மன்னிப்புக் கோருகின்றேன். உங்களுடைய தமிழ் மொழியை தெற்கிலே இருக்கின்ற நாங்கள் கற்றிருந்தோமானால் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட நாசம் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்காது. இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாக இளைஞனாக இருந்தபோதுநான் மட்டக்களப்புக்கு அடிக்கடி வந்தேன். மட்டக்களப்பு சிங்கள வித்தியாலயத்திலே எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை இருந்தார். அவரையும், எனது தமிழ் நண்பர்களையும் நான் சந்திக்க ரயிலிலே மட்டக்களப்புக்கு வந்தேன். நான் மட்டக்களப்பிற்கு வந்த சிலநாட்களிலே கல்லடி பாலத்திற்குமேல் சென்று மீன்களைப் பார்ப்பது எங்களுடைய வழக்கம். கல்லடி பாலத்திற்குமேலே சென்றால் பறக்கும் மீன்களை பார்க்கலாம் என்றுசிலர் கூறினார்கள். யுத்தம் ஆரம்பித்ததற்கு பின்பு எமக்கு கல்லடி பாலத்திற்கு வரமுடியவில்லை. பிரதி அமைச்சர் முரளிதரன் போன்ற சிரேஷ்ட தலைவர்கள் துப்பாக்கியை கைவிட்டு சமாதானத்தின் புறாவை கையில் எடுத்ததையடுத்து எங்களுக்கு மீண்டும் மட்டக்களப்பை வந்தடைய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. பொங்கல் விழா 2014 கடந்த 26.01.2014 அன்று சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநகரில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்பட்ட ஊரும் உறவும் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் ஊர் கலாச்சார நிகழ்வுகளுடனும் பாரம்பரிய உணவுவகைகளுடனும்; மிக மிக விமர்சியாக இன்னிசை விருந்துடனும் கொண்டாப்பட்டது. இவ்நிகழ்வில் நடைபெற்ற கலைநிகழ்வுகளில் பெரியோர் முதல் சிறியோர் வரை கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களை சிறப்பித்திருந்தனர்.அத்தோடு மட்டுமல்லாது எங்களது உறவுகள் நீண்ட வருடங்களுக்கு பின் தங்களது உறவுகளின் அறிமுகங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டதை அவதானிக்ககூடிதாகவிருந்தது பொங்கல் விழா வெகு சிறப்பாக நiபெறுவதற்ககு பொருளாதாரம் உணவு சரீர உதவி மற்றும் பல்வேறு உதவிகளையும் புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊரும் உறவும் பொங்கல் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர். நன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்ஜயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு அனுப்ப பிரான்ஸ் நடவடிக்கைபிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் இயத்தின் செயற்பாட்டாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியின் கீழ் பிரான்ஸிலுள்ள ஷெசி நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை, குண்டுத் தாக்குதல்களை நடத்தும் குழுவொன்றையும் இவர் செயற்படுத்தி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் பொலிஸாரின் உதவி நாடப்பட்ட நிலையில், அண்மையில் இவர் கைதானார். இதனையடுத்து இவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கான அனுமதி கடந்த 17ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றத்தில் அந்நாட்டு பொலிஸாரால் கோரப்பட்டது. இந்த அனுமதி கிடைக்கும் வரையில், அவர் பிரான்ஸ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அழிவின் விளிம்பில் மேற்கு ஆபிரிக்க சிங்கம்மேற்கு ஆபிரிக்காவுக்கே உரிய பிரத்தியேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆபிரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது. செனகலில் ஆரம்பித்து நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில் இந்த பிராந்தியத்துக்கே பிரத்யேகமானதும், மரபணு ரீதியில் மற்ற ஆபிரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆபிரிக்க சிங்கங்கள் வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு சதவீத இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறது. சிங்கங்களின் வாழ்விடங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே அதன் அழிவுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 27, 2014 இன ஒழிப்பு' சொற்பதம் வேண்டாம் - சி.வி வடமாகாண சபையில் 'இன ஒழிப்பு' என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவொழிப்பு சொற்பதங்களைப் பயன்படுத்தினர். இதனையடுத்தே முதமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இனவழிப்பு என்பது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இனவழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும். அது வரையிலும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற வார்த்தை பயன்படுத்தவும் என்று எடுத்துரைத்தார். (மேலும்.....) வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்புவவுனியா தாண்டிக் குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராம வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே பழங்காலத்து நாணயங்கள் 120 இன்று மீட்கப்பட்டன. மண் பானையொன்றில் காணப்பட்ட இந்நாணயங்கள் எக்காலத்துக்குரியவை என்பதனை அறிவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திர தெரிவித்தார். சுமார் இரண்டு அடி ஆழத்தில் காணப்பட்ட மண் பானையிலிருந்து இந்நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டு சேதமடையாத நிலையில் உள்ளன. கனரக இயந்திரம் மூலம் கால்வாய் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் இந்நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த பானை உடைந்து காணப்பட்டதுடன் அதனுள் இருந்த நாணயங்களும் சிதறிக்கிடந்தன. இதேவேளை, அங்கிருந்து அகற்றப்பட்ட மண் வேறோர் இடத்தில் கொட்டப்பட்டு வருவதனால் மேலதிக நாணயங்கள் மண்ணோடு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கிழக்கு மாகாண சபையில் த.தே.கூவினர் போராட்டம்கிழக்கு மாகாண சபை அமர்வினை எதுவித காரணங்களுமின்றி ஒத்திவைத்த சபை தவிசாளரின் நடவடிக்கையினை கண்டித்து மாகாண எதிர்க்கட்சிகளினால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் தரம் இரண்டிக்கான நியமனங்களை வழங்கும் வகையில் போட்டிப்பரிட்சைகள் நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.170 பேர் இந்த நியமனத்தில் இணைக்கப்படவுள்ளனர். ஆனால் இவற்றில் 115 பேர் முஸ்லிம்களாகவும் 40 பேர் சிங்களவர்களாகவும் உள்ள நிலையில் 15பேர் மட்டுமே தமிழர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். இதில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழர்களுக்கான நியமனங்கள் புறந்தளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று அவசர பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது. அந்த கூட்டத்தின் இறுதியில் சபைக்கு வருகை தந்த தவிசாளர் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் சபையின் கூட்டத்தினை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும் திகதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்து சபையினை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து சபைக்கு முன்பாக எதிர்கட்சிகளினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். மத இணக்கப்பாட்டிற்கான சந்திப்பு வரவேற்கத்தக்கது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஏற்பாட்டில் சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டம் இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சமய தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர். ஏன் இந்த குற்ற உணர்வு சம்மந்தரே. சந்திரிகா அம்மையார் கொண்டு வரவிருந்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டதை ஆதரிப்பதாக முதல் இரவு வாக்குறுதி அளித்துவிட்டு மறு நாள் பாராளுமன்றத்தில் ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து அதனைக் கொழுத்தி இல்லாமல் செய்தததினாலோ....? வரலாறு மறைக்கப்படுவதும் இல்லை....?
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகளைத் தூண்டி இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் கூட்டணி முயற்சி செய்து வருகின்றது. நாட்டின் பிரச்சினையாக இருந்த விடுதலைப்புலி தீவிரவாதிகளை அழித்த போதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினையும் தடை செய்திருக்க வேண்டும். அன்று அரசாங்கம் கவனிக்காது செயற்பட்டமை இன்று நாட்டிற்கே பிரச்சினையாக அமைந்துள்ளது. யாழ். பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் வாசு, முதல்வர் சீ.வி. அதிதிகள்வட மாகாண பாடசாலை மாணவர் களிடையே நடத்தப்பட்ட அரச மொழிக் கொள்கை மற்றும் இன நல்லுறவு தொடர்பான விவாதப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதில் அமைச்சர் வாசுதேவநாணயக்கார, வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்வர். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் போட்டிகள் நடத்தப்பட்டதோடு சிங்கள மொழி போட்டியில் பரகும்ப மகா வித்தியாலயமும் தமிழ் மொழி மூல போட்டியில் முல்லைதீவு வித்யானந்த கல்லூரியும் வெற்றியீட்டின. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவுஇந்தியாவின் 65வது குடியரசு தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்த ஜோன் கெர்ரி வொஷிங்டனில் நேற்று தெரிவித்ததாவது, ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவின் 65 வது குடியரசு தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் உண்மையான வெற்றி அதன் நிச்சயமான எதிர்காலத்திலும், பாரம்பரியமான மரபுகளிலும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக அமெரிக்க செனட்டின் வர்த்தக குழுவில் ஒருவராக இந்தியாவுக்கு வந்தேன். அதை மறக்கவே முடியாது. அப்போது நான் பார்த்து வியந்த அந்நாட்டின் செயலாற்றல், இன்றும் தொடர்கிறது. பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இரண்டு நாட்டையும், அதன் மக்களையும் இணைப்பது வலிமை மிக்க உயிர்த்துடிப்பான ஜனநாயக மரபுதான். இந்த 20ம் நூற்றாண்டில் பல நாடுகளுக்கு சுதந்திர ஜனநாயக நாடாக இந்தியா ஒரு வலிமையான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அனைத்து வேறுபாடுகளையும் கடந்தும், மாற்றங்களை தாண்டியும், சர்வதேச அளவில் வலிமையான குடியரசுகள் உருவாக உலகத்தின் இருவேறு பெரிய குடியரசு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜனவரி 26, 2014 அனந்திக்கு மன பாதிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கட்டாயம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளார் சுவிஸில் சூரிச்சை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து - பௌத்த சங்கத் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன். நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்து உள்ள இவர் கிளிநொச்சி கச்சேரியில் எதிர்பார்த்து இராத விதமாக அனந்தி சசிதரனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறியபோதே அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவது மிக சரியான விடயம் என்றார். (மேலும்.....) ஹிட்லர் பிரேசிலில் வாழ்ந்ததாக புதிய கூற்றுஇச் செய்தி பிரபாகரன் பிரியர்களுக்கு பால்வாத்த செய்தியாக அமையுமா....?ஜெர்மன் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் உயிர்தப்பி 1984ஆம் ஆண்டுவரை பிரேசிலில் வாழ்ந்ததாக புகைப்பட ஆதாரங்களுடன் பட்டப்பின்படிப்பை தொடரும் மாணவர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 1945ஆம் ஆண்டு பெர்லினில் இருந்த நிலவரையில் வைத்து ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர் அங்கிருந்து உயிர்தப்பி பொலிவிய நாட்டு எல்லையில் இருக்கும் பிரேசிலின் சிறு கிராமம் ஒன்றில் 1984வரை உயிர் வாழ்ந்ததாக மேற்படி புத்தகம் குறிப் பிட்டுள்ளது. இதன்போது ஹிட்லர் ஆர்ஜன்டினாவுக்கு தப்பிச்சென்று பின்னர் பரகுவாவினூடாக பிரேசிலில் குடியேறியிருப்பதாக அந்த புத்தகத்தை எழுதியவர் குறிப்பிடுகிறார். வத்திக்கானில் இருக்கும் நண்பர் மூலம் கிடைக்கப்பெற்ற புதையல் ரகசியத்தை தேடியே ஹிட்லர் பிரேஸிலுக்கு சென்றதாகவும் அந்த புத்தகம் குறிப்பிடுகிறது. ரெனீ குர்ராரியோ டயஸ் என்ற மாணவியின் கூற்றின்படி ஹிட்லர் இறந்தது தனது 95 ஆவது வயதில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர் தனது கடைசி காலத்தில் கட்டங்கா என்று அழைக்கப்படும் கறுப்பின காதலியுடன் வாழ்ந்ததாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கூற்றை பல வரலாற்றியலாளர் களும் நிராகரித்துள்ளனர். டொலர் நோட்டுகளுக்காக செயற்பட்டு வந்த புலம்பெயர்ந்த தமிழர் பிளவுபட்டுள்ளார்கள் பிரிட்டனின் தமிழர் அமைப்பு, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளில் உருவாகிவரும் ஊழல் மோசடி காரணமாக உலகளாவிய தமிழர் பேரவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய தமிழர் பேரவை உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் உலகளாவிய தமிழர் பேரவைக்கு கிடைக்கும் சன்மானப் பணம் மற்றும் நிதி உதவிகளை இவ்வமைப்பு தங்களின் அங்கத்துவ அமைப்புகளுக்கு சரிசமமாக பிரித்து, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரசார பணிகளுக்கான செலவுக்காக கொடுத்து வந்தது. உலகளாவிய தமிழர் பேரவைக்கு பொறுப்பாக இருக்கும் தலைவர்கள் சுயநல நோக்கத்துடன் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை சூறையாடி வருவதனால், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு இன்று பணம் இன்றி ஸ்தம்பித நிலை அடைந்திருக்கிறது என்பதனால், தங்களுக்கு தொடர் ந்தும் இவ்வமைப்பில் இருந்து செயற்பட முடியாதென்று பிரிட்டிஷ் தமிழர் பேரவை அதிலிருந்து விலகியுள்ளது. (மேலும்.....) இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்திப்பு இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தை இன்று தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறவுள்ளது.தேனாம்பேட்டை டி. எம். எஸ். வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை இயக் குநர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இருதரப்பு மீனவர்களி னதும் சந்திப்பு ஆரம்ப மாகும். இப்பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வென இலங்கையிலி ருந்து 16 பேர் கொண்ட குழு நேற்று இந்தியா பயண மானது. மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அண்மையில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மத்திய விவசாய, மீன்பிடியமைச்சர் சரத் பவார் ஆகியோருடனான சந்திப்பினை யடுத்து இலங்கை, தமிழக மீனவர் பேச்சுவார்த் தையில் பங்கெடுக்கு மாறு இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்த அழைப்பினையேற்று அமைச்சர் ராஜித நேற்று இக்குழுவினை இந்தியா அனுப்பிவைத்தார். எல்லை தாண்டி மீன்பிடித்தலை தடை செய்யக் கோருவதே இச்சந்திப்பில் பங்கெடு ப்பதற்கான பிரதான காரணமென இதில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் உறுதியாக தெரிவித் திருந்தனர். இலங்கையின் வட பகுதியில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்கள் உபயோகிக்கும் இழுவைப் படகுகளினால் ஏற்படும் சேதம் அதனால் இலங்கை மீனவர்கள் படும் துயரம் ஆகியன குறித்து இச் சந்தர்ப்பத்தில் தமிழக பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டப்படுமென இந்தியா சென்றுள்ள மன்னார் மீன்பிடிச் சங்கத் தலைவர் ஜஸ்டின் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகம், நாகபட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள விருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்த மொழியானது அவர்களின் தாய்மொழி அல்லாதவிடத்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் போது மேலதிக புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினை உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா கோரியுள்ளார். அதாவது, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அல்லது சிங்கள மாணவரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அதற்காக பல்கலைக்கழக நுழைவின் போது அவர்களுக்கு விசேட புள்ளிகள் வழங்கப்படும். இதன் பிரகாரம் சாதாரண தரத்தில் இரண்டாம் மொழிக்கு 'ஏ' தரம் பெற்றால் அதற்காக 5 புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன், 'பீ' தரத்துக்கு 4 புள்ளிகளும் 'சி' தரத்துக்கு 3 புள்ளிகளும் 'எஸ்' தரத்துக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் மும்மொழிகளிலும் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இன ரீதியாக கலக்கப்பட்ட மாணவர் சமூகத்தை உறுதிப்படுத்தலுக்கு அமைவாக இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான் கைது செய்யப்படவில்லை, சிறீ ரெலோ செந்தூரன் மறுப்பு.
பிரதம
ஆசிரியர் அவர்கட்கு,
சிறீரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் ஆகிய நான் தங்களிற்கு அறியத்தருவது,
ஜே.வி.பி இணையத்தள ஊடகத்தில் என்னைப்பற்றி வெளியாகி இருந்த செய்தி ஆனது எனக்கு
அதிர்ச்சியை தந்துள்ளது. அவ் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி போல என்னை யாரும்
கைது செய்யவுpல்லை,தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம் என்னை காப்பாற்ற வரவுமில்லை. என்னை காப்பாற்ற அவரை அழைக்க
வேண்டிய தேவையும் எனக்கில்லை. நடந்க சம்பவத்தினையும் தங்களிற்கு தெரிவிக்க
விரும்புகின்றேன். எனக்கு எதிராக போக்குவரத்து பொலிசார் தாக்கல் செய்த வழக்கிற்கு
குறிப்பிட்ட திகதியில் என்னால் சமூகம் அளிக்க முடியாமல் போனதால் என் மீது பிடியாணை
பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகையால் கடந்த 22ம் திகதி நான் சட்டத்தரணி மூலம் மொசன்
போட்டு பிடியாணையை ரத்துசெய்யசென்ற போது எனக்கு 100000 ரூபா சரீரபிணை விதிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டேன். அத்துடன் வழக்கு அடுத்த மாதம் தவணை இடப்பட்டுள்ளது. எனவே அவ்
ஊடகத்தினர் வெளியிட்டுள்ள செய்தியினால் எனக்கும் என் கட்சியின் பெயரிற்கும்
சேறுபூசுவதற்கு அவ் ஊடகம் முயற்சிக்கின்றது என்பது தெளிவாகின்றது. இதற்கு முன்னும்
அவ் ஊடகம் இவ்வாறு எமது கட்சியின் மீது குறைகூறி பிழையான தகவல்களினை
வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னார் புதை குழியில் தமிழ் மக்களே புதைக்கப்பட்டிருக்க வேண்டும், இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம்மன்னார் புதைகுழியில் தமிழ் மக்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நாமும் சந்தேகப்படுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை செய்கின்றனர் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் வடக்கில் ஒட்டுமொத்த தமிழர்களும் அழிந்து விடுவார்கள் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி சம்பவம் இன்று இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் தொடர்ந்து எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணமே உள்ளன. இன்னும் பல எலும்புக்கூடுகள் எடுக்கப்படலாம். எனினும், இச்சம்பவம் தொடர்பில் நாம் கேட்பதெல்லாம் இதை யார் செய்தார்கள் என்பதே. யுத்த காலகட்டத்திற்கு முன்னர் இடம்பெற்றிருக்குமாயின் அவை தொடர்பில் அரசாங்கம் ஆதாரங்களை முன்வைத்திருக்கும். எனினும், இவ் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவம் தொடர்பில் அரசாங்கம் ஏன் இன்னமும் மெளனம் காக்கின்றது? இன்று ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவிருக்கும் கால கட்டத்தில் நாட்டில் இவ்வாறான அதிர்ச்சித் தகவல்கள் வெளி வருவதானது அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களையே அதிகரிக்கும். (மேலும்.....) ஜனவரி 25, 2014 வடக்கில் இந்தியாவின் அபிவிருத்தி பணிகள் தொடரும் - வே.மகாலிங்கம் 'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள், இந்திய வீட்டுத்திட்டம், வவுனியா வைத்தியசாலைப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்' என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் இன்று (26) தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வே.மகாலிங்கம், 'வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பளை வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் யாழ்ப்பாணம் வரை யாழ்.தேவி புகையிரத சேவை இடம்பெறவுள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னோடி செயற்திட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் கீழ் இதுவரையில் 10,250 வீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெகுவிரைவில் இந்தியாவின் உதவியுடன் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேபோன்று வட கடல் வலைத் தொழிற்சாலைக்கான உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்ட நிலையில் அதனுடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். 'கடந்த கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சிறு வாணிபம் மற்றும் நடுத்தர வாணிபதாரிகள் 1320 பேருக்கு அவர்களின் தொழில் முயற்சிகளுக்காகவும் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் இருநூறு படுக்கைகளுடன் கூடிய விடுதி, இந்தியா அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய திருத்தப்பணிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் புனரமைப்புப் பணிகள், மொழியியல் ஆய்வு கூடம், கைவேளை கிராமம் என பல அபிவிருத்தி செயற்திட்டங்களும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தனது காலத்தினுள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தன் ஆர்வம்துரோகிகள் என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே பின்னிற்பதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதுடன், அதனூடாகத் தனது மக்களுக்குச் சேவையாற்றும் விருப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தனது காலத்தினுள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அருண் தம்பி முத்து, எனினும் தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தனக்குத் துரோகி என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே அவர் இவ்விடயத்தில் பின்னிற்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். சம்பந்தன் அவர்களின் எண்ணப் போக்கை வரவேற்ற ஜனாதிபதி, இணக்க அரசியலை மேற்கொண்டால் அதனூடாக வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்பி, தமிழ் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்கள் சேவை செய்யலாம் எனவும் தெரிவித்ததாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது. சர்வதேசத்திடம் செல்லவேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியது - த.தே.கூ 'உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தேடி சர்வதேசத்திடம் நாம் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டிய நிலைமையினை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தெரிவித்தார். '2011ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இருப்பினும் எந்தவிட தீர்வும் எட்டப்படவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். 'நாம், தீர்வு தேடி சர்வதேசத்திடம் போகவில்லை. அவ்வாறு போக வேண்டிய நிலைமையை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது' என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்புக்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா தலைமையில் கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 14 பேரில் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இருப்பினும், இந்த பிரச்சினைக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அதனாலேயே சர்வதேசத்திடம் செல்ல வேண்டிய நிலை உருவாகியது' என்று அரியநேத்திரன் எம்.பி மேலும் கூறினார். ஆம் ஆத்மி... கானல் நீரா.. மாரீச மானா? (தமிழருவி மணியன்) 'அதிகாரத்தின் மீதுள்ள தனிமனித ஆசை இரு வகைப்படும். ஒன்று... தலைமையேற்பவரின் வெளிப்படையான விருப்பம். இரண்டாவது... அந்தத் தலைவரைப் பின்தொடரும் மனிதர்களின் அந்தரங்கமான வேட்கை. ஒரு தலைவரைப் பின்பற்றத் தொடங்கும்போதே அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவும், வெற்றியைப் பங்குபோட்டுக்கொள்ளும் நினைவும் தொண்டர்களுக்கு இயல்பாக வந்து வாய்த்துவிடுகிறது’ என்றார் பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ஆம் ஆத்மியின் வருகையும், அது பெற்ற வியத்தக வெற்றியும், ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் முடிவதற்குள் அதன் தலைவர்களுக்குள் அன்றாடம் அரங்கேறும் பூசலும் பிணக்கும், அவசரம் அவசரமாக நாடு முழுவதும் பதவி நாற்காலிகளில் அமரத் துடிக்கும் தொண்டர் படையின் ஆசைவேகமும், ரஸ்ஸலின் மேதைமைக்குச் சரியான சாட்சியங்களாகின்றன.(மேலும்.....) புற்று நோயை தீர்க்கும் துளசி எண்ணெய் மருத்துவ குணங்களை கொண்ட செடிகளில் ஒன்றாக துளசிச் செடி இருந்து வருகிறது. பல வீடுகளில் இன்றும் துளசியை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக உதவி பேராசிரியர் சந்திகாந்த் மாணி கூறியதாவது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த எண்ணெய்யை புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவினோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது. எங்களின் இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளோம் என்றார். ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை - சம்பந்தன்கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையோ அன்றேல் 2013ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோன்று வடமாகான சபையின் சீரான இயக்கத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஷ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிங்கள ஊடகங்கள் கூறுவது போன்று ஜனாதிபதியிடமிருந்து எமக்கு எந்தவித உத்தியோகபூர்வ அழைப்பும் வரவில்லை. அவ்வாறு வந்தால் அதுகுறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்.....) பல்கலைக்கழக அறையில் தனது தந்தையை தங்கவைத்து பராமரித்து வரும் மாணவன் பல்கலைக்கழக கற்கைநெறியை தொடரும் தனது கனவு நிறைவேறுவதற்காக பாரிசவாத பாதிப்புக்குள்ளாகி உடல் செயலிழந்து தனது முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலிருந்த தந்தையை அலட்சியம் செய்து பிரிந்து செல்ல விரும்பாத மகனொருவர், தனது தந்தையை பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்து பராமரித்துவரும் நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவில் அன்குயி மாகாணத்திலுள்ள லியுவான் நகரைச் சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு தனது தந்தையை பராமரித்தவாறு பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வருகிறார். குவோ ஷிஜுனின் தாயாரும் மனநலப் பாதிப்புக்குள்ளாகி பிறரின் முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக சிறு வயதிலேயே தனது தாயாரை பராமரிக்க வேண்டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார். இந்நிலையில் நிர்மாண தொழிலாளியான அவரது தந்தை பாலமொன்றில் பணியாற்றிய வேளை 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் படுகாயத்துக்குள்ளாகி பாரிச வாத பாதிப்புக்குள்ளானார். இதனால் ஏற்கனவே தனது தாயாரைக் கவனிக்க வேண்டிய நிலையிலிருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்காக அதிகரித்தது. அளவுக்கதிகமான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்வியை கைவிடாத அவர் சீனாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். தாமும் செய்யாது அடுத்தவரையும் தடுக்கும் செயல் முதலமைச்சர் விக்கியின் முயற்சிகளுக்கு இடையூறுதனது பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அரசியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. இடையூறாக இருந்து வருவது குறித்து புத்திஜீவிகள் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றல் மற்றும் அரசியல் பேசி காலத்தை வீணடிக்காது அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் யதார்த்தமான பேச்சுக்கள் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துவரும் மறைமுகமான எதிர்ப்பு அறிக்கைகள் குறித்தே புத்திஜீவிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். வடக்கு முதலமைச்சர் பணியாற்றுவதற்கு கூட்டமைப்பு தடையாக இருக்கக்கூடாது - கலாநிதி கே. விக்னேஸ்வரன்வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் வரத ராஜப் பெருமாளின் நிர்வாகத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளராகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆலோசகராகவும் பணி புரிந்தவர் கலாநிதி கே. விக்னேஸ்வரன். மாகாணசபை நிர்வாக நடவடிக்கையில் நன்கு பரிச்சயப்பட்ட கலாநிதி விக்னேஸ்வரன், தற்போதைய அரசியல் நிலவரம், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கே தொகுத்து தருகின்றோம். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களைப் பிரயோகித்து மக்களுக்கு சேவையாற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழிவிட வேண்டுமெனவும் தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அவரை தமது பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார். (மேலும்.....) நற்குணங்களை மறைத்து நின்ற அரசியல் பதவியும், நாற்காலி மோகமும் தெல்லிப்பளையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட முதலமைச்சர் விக்கி இடம், பொருள், ஏவல் தெரியாது செயற்பட்ட அரசியல்வாதியான சட்டமேதை முதல் தடவை ஒரு பிழையை செய்தால் அது தவறாக கருதப்படும். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது அதற்கு வரைவிலக்கணம் வேறு. இவ்வாறு ஒருவர் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வது கவலை தருகின்ற ஒரு விடயமாகும். சிலர் தாம் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள். ஆனால் வட மாகாண முதலமைச்சர் தனது தவறுகளில் இருந்து எதனையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அண்மையில் யாழ்ப்பாணம் தெல்லிப்ப ளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசா லையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இந்த ஆக்கத்தில் நாம் ஆராய் கின்றோம். (மேலும்.....) மத்திய கிழக்கில் பணி புரிந்த மகளை இழந்த நான் அவரது சாம்பலை கூட காணாத நிலையில் மகனையும் இழந்துள்ளேன் "எனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது அந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பரைக் கூட நாங்கள் காணவில்லை. அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாது உள்ளது இவ்வாறானதொரு நிலைமை எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது என சார்ஜhவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொம்மாதுறையினை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரவீந்திரனின் தாயாரான நாகரெட்னம் தெரிவித்தார். (மேலும்.....) ஜனவரி 24, 2014 தொப்புள் கொடி உறவும் -தகிக்கும் யதார்த்தங்களும்
(சுகு-ஸ்ரீதரன்) இன்று தமிழ், தமிழன், உலகத்தமிழர் ஒற்றுமை, தனிக்குணம், பழமை உலகில் அனைத்து மொழிகளிலும் தொன்மையானது என்றெல்லாம் சொல்லப்படுக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விதிவிலக்குகளை விடுவோம். ஈவேரா அவர்கள் தென்னிந்தியா, தமிழகத்தில் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சமயம் பற்றிய அறக் கோட்பாடுகளை முன்வைத்துச் செயற்பட்டார். ஆனால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு தீவிர மறுமலர்ச்சி சீர்திருத்த இயக்கத்தை அவர் நடாத்தினார். ஆனால் அதன் பின்புலத்திலேயே தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளும் உருவாயின. இவற்றைவிட வேறுபல இந்தப்பாரம்பரியத்தில் வந்த இயக்கங்கள் இருக்கின்றன. (மேலும்.....)
சந்திப்பும் கலந்துரையாடலும் contact 07817262980 இலங்கை இந்திய மீனவர்கள் பரிமாற்றம்இலங்கையிலும் இந்தியாவிலும் கைதாகியிருந்த இருநாட்டு மீனவர்களுள் 126 பேர் நேற்று கரை யோர பாதுகாப்பு பிரிவினரிடம் காங்கேசன் துறை கடற்பரப்பில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் கைதாகியிருந்த 56 இலங்கை மீனவர்களும் அவர்களது 4 வள்ளங்களுடன் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதே போன்று இலங்கையில் கைதாகியிருந்த 67 தமிழக மீனவர்களும் அவர்களது 15 வள்ளங்களுடன் இலங்கை கடற்படையினரால் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படை க்கப்பட்டனர். நேற்று நண்பகல் காங்கேசன்துறை கடற்பரப்பில் இலங்கை-இந்திய கடல் எல்லையில் வைத்து இந்த பரஸ்பர மீனவர் பறிமாற்றம் நடைபெற்றதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். ஒரு கிலோ மீனைப் பிடிப்பதற்காக 20 கிலோ மீன்களை அழிக்கும் தமிழக மீனவர்கள்இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்கள் ஒரு கிலோ மீனை பிடித்துச் செல்வதற்காக சுமார் 15 முதல் 20 கிலோ வரையிலான மீன் வகைகளை அழித்துவிட்டே செல்கின்றனர் என இலங்கை மீனவர் பிரதிநிதிகள் இந்திய ராஜ்ய சபையின் தமிழ் நாடு மாநில உறுப்பினர் மணிசங்கர் அய்யரிடம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் புதுடில்லி சென்ற இலங்கை மீனவர்கள் புதுடில்லியில் மணிசங்கர் ஐயரிடம் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். (மேலும்.....) ஜனவரி 23, 2014 செருப்பை செய்தியாக்கியிருக்கின்றார் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையை ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த வரலரற்று நிகழ்வில் முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா எம்.பி; சுமந்திரன் எம்.பி; மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் உட்பட சகல கட்சிகளையும் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை பல உயிர்களை காப்பாற்றுகின்ற வைத்தியசாலை மட்டுமல்லாது தமிழ்-சிங்கள இன ஒற்றுமையின் கூட்டு உழைப்பில் கட்டி எழுப்பியுள்ள உறவுப்பாலமாகவும்; உள்ளது. முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் அவரது மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டது. மேலும் சிறப்பை கொடுக்கின்றது. ஆனால் இப்படியான சிறப்பான நிகழ்வை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை அதனை வேறு நோக்கத்துடன் எழுதி முதல் அமைச்சர் விக்னேஸ்வரனின் செருப்பை செய்தியாக்கியிருக்கின்றார் தமிழ் ஊடகவியலாளர் ஓருவர்.(மேலும்.....) காலம் கனியும்வரை காத்திருக்க முடியாது - சி.வி. ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது நான் சந்தித்தேன். அன்று என்னிடம் கேட்பதை கொடுப்பேன், பிரதம செயலாளரை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.'2009இல் நடத்துவதாகக் கூறிய வடமாகாண சபைத் தேர்தலை இழுத்தடித்து வந்து, பின்னர் இந்தியாவின் நெருக்குதல் காரணமாக 2013இல் நடத்தினார். அத்துடன், அத்தேர்தலில் இராணுவத்தினர் உதவியுடன் வென்றுவிடலாம் எனவும் எண்ணியிருந்தார். எனினும், அது எதிர்விதமாக அமைந்தது. இதனை ஜனாதிபதியினால் பொறுக்க முடியவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகத் தனக்கே பழக்கமான முறையில் நடக்கத் தொடங்கினார். ஆற்றின் அடுத்த புறத்தில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று தெற்கிலுள்ள சிங்கள மக்களே கூறுவர். எமது ஜனாதிபதி ஆற்றின் அடுத்த பக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். கேட்பதைத் தருவதாக கடந்த 2ஆம் திகதி உற்சாகமாகக் கூறிய ஜனாதிபதி, அதனையெல்லாம் நிராகரித்து விட்டு கேட்காதவற்றைத் தருவதாகப் பேரம் பேசினார். அதுவும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொள்கின்றோமோ? என்பதை அறிந்தும் அறியாதது போல நடந்துகொள்கின்றார். இதனால், ஏற்படப்போகும் பாதிப்புக்களுக்கு அவரே முகம்கொடுக்கவேண்டும்.Kathleen Wynne met with Tamil man formerly linked to designated terrorist organization
Ontario Premier Kathleen Wynne traded pleasantries this with a onetime spokesman for a federally listed terrorist organization while on a visit to a Toronto temple, the premier’s office confirmed on Tuesday. Mrs. Wynne stood alongside Nehru Gunaratnam, a former spokesman for the World Tamil Movement, on Jan. 14, and a photo of the event was posted on a photography company’s Facebook page. The two – along with city councillor Michelle Berardinetti and Liberal MPP Lorenzo Berardinetti – attended the event at the Kanthasamy Hindu Temple to celebrate Thai Pongal, a Tamil festival that celebrates the end of the harvest season. (more....) ஜனவரி 21, 2014 எனது சிறிய வாசிப்பு அனுபவங்களில் தோழர் லெனின் (சுகு-ஸ்ரீதரன்) தோழர் லெனின் மார்க்சியத்தை வரிந்து கொண்டு உலகுக்கு உணர்த்திய அறங்களில் பிரதானமானவை என்று சிலவற்றைக் கருதுகிறேன். சாதாரண மக்களின் அதிகாரத்தை ஒரு நாட்டிலோ வளர்ச்சியுற்ற நாடுகளிலோ நிறுவுவதற்கான தீவிர செயற்பாட்டாளராக இருந்தார். அது ரஸ்சியாவில் தான் சாத்தியமானது. ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வாக 5 கண்டங்களிலும் இற்றை வரை அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வறியவர்களின் ஆட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டன. பல உருக்குலைந்தன. சில புதிதாகத் தோன்றின. சோவியத்யூனியனும் விதி விலக்காக இருக்கவில்லை. ஆனால் அந்த எழுச்சிகள் ஓயாத அலைகளாக இன்று வரை எழுந்து வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. (மேலும்....) அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் இலங்கை, இந்திய மீனவர் பிரச்சி னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வொன்று எட்டப்படும் வரை இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண நேற்று தெரி வித்தார். இலங்கை, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுதல், விடுதலை செய்யப்படுதல் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதும் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்து வருவதை செய்மதி நிழற்படமூடாக கண்டோம். அத்துமீறி வரும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் கைது செய்ய வேண்டுமா? என என்னிடம் கேட்டார்கள். எனினும் நான் கடற்படைக்கு எந்தவித தயவுதாட்சண்யம் இன்றி அவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன் என்றும் கூறினார். இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளன பிரதிநிதிகள் உட்பட 15 பேர் கொண்ட குழு தமிழக மீனவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித நேற்று தெரிவித்தார். இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்த பிரிட்டிஷ் பிரதமருக்கு என்ன அருகதை இருக்கிறது?2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முதல் இலங் கையில் நடைபெற்ற பயங்கரவாத யுத்தத்தின் இறுதி நாட்களில் இலங்கை இராணுவம் இழைத்த யுத்தக்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் குறித்து திருப்திகரமான விளக்கமொன்றை ஜெனீவா மனித உரிமை மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் கொடுக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூன் காலக்கெடு விதித்துள்ளார். இவ்விதம் காலக்கெடு விதிப்பது கண்ணாடி வீட்டில் இருந்து ஆடைகளை களைவதைப் போன்ற முட்டாள்தனமான செயல் என்பதை பிரிட்டிஷ் பிரதம மந்திரி உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிட்டன் 2001ம் ஆண்டில் நிறைவேற்ற ப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் கைச்சாத் திட்டு அதனடிப்படையில் தங்கள் நாட்டு ஆயுதப்படையினர் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் யுத்தக்குற்றச்சாட்டுகளில் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்படும் விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிட த்தக்கது.(மேலும்....) ஜனவரி 20, 2014 சந்திரிக்கா தலைமையில் சமயங்களுக்கிடையேயான நல்லுறவு கூட்டம் சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேரில் சென்று கேட்டுள்ளார். இதேபோல், கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களையும் தமது பிரதிநிதிகளை ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார். இந்த கூட்டத்தை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இந்த கூட்டம் பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது. தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றை வரைய முக்கியஸ்தர்களின் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தியும் மீண்டும் அத்துமீறல் 25 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடலில் கைதுஇலங்கை, இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் 25 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கரையோர பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்ததும் அல்லாமல் இலங்கையில் தடை செய்யப்பட்ட ‘Deep Sea Trolling’ முறையை பயன் படுத்தி நெடுந் தீவு க்கு அருகே மீன் பிடி த்துக் கொண்டி ருந்த போதே 6 வள்ளங்களுடன் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற் படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். நெடுந்தீவுக்கு அருகே கரையோரமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்துள்ள போதும் தமிழக செய்திகள் இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கச்சதீவு அருகே தாக்கியதாகவும், கடற்படை கப்பலினால் மோதியதாகவும் அதன் பின்னரே சிறைபிடித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளன. வியட்நாமில் போதைப் பொருள் கடத்திய 30 பேருக்கு மரண தண்டனைவியட்நாமில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 30 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அண்டை நாடான லாவோஸில் இருந்து வியட்நாம் மற்றும் சீனாவுக்கு 2006ம் ஆண்டு முதல் ஹொரொயின் உள்ளிட்ட போதை மருந்துகளைக் கடத்தி வந்த கும்பல் ஒன்று வியட்நாம் பொலிஸாரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் பிடிப்பட்டது. அவர்களில் 59 பேருக்கு எதிராகக் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோ டக், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், வியட்நாமில் நடைபெற்ற போதை மருந்து வழக்குகளிலேயே மிகப் பெரிய வழக்கு இது. இதில் பிரதிவாதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், சிறை வளாகத்திலேயே வழக்கு நடைபெற்றது." எனத் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில் போதைத் தடுப்பு சட்டங்கள் மிகக் கடுமையானவை. 600 கிராமுக்கு மேல் ஹெரோயினுடனோ அல்லது 20 கிலோவுக்கு மேல் அபினுடனோ யாராவது பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் உண்டு. கின்னஸில் இடம் பிடித்த 100 அடி நீள சொகுசு கார்
உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரின் நீளம் 100 அடி. 26 சக்கரங்களைக் கொண்ட இந்த காரில் ரயில்களில் உள்ளது போல் முன்பகுதியில் ஒரு ஓட்டுநர் அறையும் பின் பகுதியில் ஒரு ஓட்டுநர் அறையும் அமைந்துள்ளது. குறுகிய தெருக்களிலும் இலகுவாக திரும்பும் வகையில் காரின் நடுப்பகுதி வளைந்து மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது. ஹொலிவுட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்கு இணையாக இந்த காரின் உள்ளே அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குளியல் தொட்டி (ஜக்குஸி), பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் சமிக்ஞை கருவி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சிறு அரண்மனை போல் உள்ளது இந்த கார். இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. எனினும் சினிமா படப்பிடிப்பு, திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு இந்த காரை வாடகைக்கு எடுக்க உலக கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை பல இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனி வெளியாகும் ஆங்கிலப் படங்களில் இந்த கார் அதிக வரவேற்பு பெறும் என தெரிகிறது. ஜனவரி 19, 2014 இங்கு இன்னும் அறம் அழிந்து போவில்லை! நட்புறவு யாத்திரை நடத்தி பெரும் ஆரவாரம் எதுவும் செய்யாமல் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஒரு புற்று நோய் ஆஸ்பத்திரியை கட்டிக் கொடுத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சில இளம் மனிதர்களின் முன்னெடுப்பில் இது சாத்தியமாகி இருக்கிறது. இந்த வைத்தியசாலையை அமைப்பதற்கு சமூக அக்கறையுள்ளவர்கள் நிதி-நிலம் என்பவற்றை வழங்கியிருக்கிறார்கள். (மேலும்.....) நமது தலைவர்களும் சில கதைகளும்...(6) (எஸ். ஹமீத்.) நமது தலைவர் காய்கறி வாங்க சந்தைக்குப் போனார். காய்கறி விற்குமிடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த சிங்களவர் ஒருவர்தான் அன்று விற்பனையாளராக இருந்தார். ''மொகத்த ஓனே மாத்தையா..? என்று கேட்டார் விற்பனையாளர். ஒவ்வொன்றாகக் கையைக் காட்டிக் காட்டி சில மரக்கறிகளை வாங்கிய நமது தலைவருக்கு,'மறக்காமல் அவரைக் காய் வாங்கிட்டு வாங்கோ..'என்ற மனைவியின் கட்டளை ஞாபகம் வந்தது. ஆனால், அவரது கண்களுக்கு அங்கு அவரை இருப்பது தென்படவில்லை. ஒருவேளை, கடைக்குள்ளே வைத்திருப்பானோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, விற்பனையாளர் கேட்டார். ''வென மொகத்த ஓனே, மஹத்தயா..?'' சரி, கேட்டுப் பார்ப்பம் என்று தீர்மானித்து, ''அவரை...'' என்றார் தலைவர். ''அவரை இவரை...'' என்றார் அவர். 'அவரை இவரை' என்கிறானே...'இவரை' என்றால் 'இந்த ஆளை' என்றுதானே அர்த்தம்...? எந்த ஆளைச் சொல்கிறான்...? அங்கு வேறு எவரும் இல்லையே..! ''எவரை...?'' என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டார் தலைவர். அந்த சிங்கள விற்பனையாளர் சொன்னார், ''ஐயாவுக்கு சிங்களம் தெரியாது போலிருக்கு. அவரை இவரை என்று நான் சொன்னது அவரை முடிந்துவிட்டது என்ற அர்த்தத்தில்தான் ஐயா..இவரய் என்றால் முடிந்து விட்டது என்று அர்த்தம்...!'' அதற்கு மேல் நமது தலைவர் அங்கு நிற்கவில்லை. இப்படி ஒரு செய்தியை இலங்கைத் தமிழ் செய்திதாள் வெளியிட்டு இருக்கின்றதுபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை
யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம்
இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும்
கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. 300 மில்லியன் ரூபா நிதியில்
120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5
புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(மேலும்.....) இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டை இந்தியா புறந்தள்ளி விட முடியாது தமிழக மீனவர்கள் இரட் டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளையும் இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவ ற்றையும் பயன்படுத்துவதால் மீன்வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் அழிந்து வருவதாக இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டை இந்தியா புறந்தள்ளிவிட முடியாதென இந்தியாவின் முன்னணி தமிழ் நாளேடான ‘தினமணி’ தெரிவி த்துள்ளது. இது தொடர்பாக ‘வேண்டாமே விரோதம்’ எனும் தலைப்பில் ‘தினமணி’ பத்திரிகை நேற்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் தடையை மீறி செயற்படுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான் என தெரிவித்துள்ள தினமணி ஆசிரியர், தெளிவான புரிந்துணர்வுக்கு இருநாட்டு அரசுகளும் வழிகோல வேண்டுமெனவும் கேட்டுள்ளார். (மேலும்.....) தெல்லிப்பழை நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பங்கேற்பு தெல்லிப்பழை ‘ட்ரெயில்’ புற்றுநோய் வைத்தியசாலை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தி யோகபூர்வமாகத் திறந்து வைக்க ப்பட்டது. 300 மில். ரூபா செலவில் தெல்லிப் பழையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற் படி வைத்தியசாலையை திறந்து வைப் பதற்கு வருகை தந்த ஜனாதிபதி தமிழ்க் கலாசார முறைப்படி மேள தாளம் நாதஸ் வர முழக்கத்துடன் ஆரத்தி எடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன டக்ளஸ் தேவானந்தா வட மாகாண முதலமைச்சர் சி.பி. விக்னேஸ்வரன் வட மாகாண சபை தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஆளுநர் ஜீ.ஏ. சந்ரசிறி, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்களான திருமதி நித்யகலா மகேஸ்வரன், ஹர்ச டி சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். (மேலும்.....) ஜனவரி 18, 2014 ஜே.வி.பி தலைவர் சோமவன்ச நீக்கம்? மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படவிருப்பதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருக்கின்றது. பிரேமதாஸ அரசுக் காலத்தில் ஜேவிபி இன் தலைவர் அரச படைகளினால் கொல்லப்பட, கூடவே அவர்களின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டனர். அப்போது ஐ.தே. கட்சியின் ஒரு முக்கிய மந்திரியின் உதவியுடன் நாடு விட்டு தப்பி ஓடியவர் இவர். இதன் பின்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாடு திரும்பி அரசியல் நீரோட்டத்தில் இணைந்தவர். தொடர்ந்த பாராளுமன்ன அரசியலில் இனவாதத்தை கையில் எடுத்து ஜே.வி.பி செயற்பட இவர் முக்கிய காரணமாக அறியப்பட்டவர். இதனால் பாராளுமன்ற அரசியலில் இறங்கு பாதையில் கட்சி வீறுநடைபோட்டது. இவரின் பதவி இறக்கம் கட்சியின் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய இலங்கை அரசியல் சூழலில் இது அவசியமாக அமைகின்றது என்றால் அது மிகையாகாது. ஒரு பலமான எதிர் கட்சியின் அவசியம் இன்று இலங்கையிற்கு தேவைப்படுகின்றது. மன்னார் மனித புதைகுழி இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்புமன்னார்,திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 09 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை தோண்டப்பட்டது. நேற்றைய தினம் மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக இன்று சளிக்கிழமை காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண முன்னிலையில் தோண்டப்பட்டது. இதன் போது முதலில் இரண்டு மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு மனித எழும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை வரை 37 எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளின் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது. மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் ஆர்வத்துடன் தோண்டுவதைப்பார்த்தால் இந்த மனிதப் படுகொலைகளின் சூத்திரதாரி புலிகள்தான் என்று எண்ணத்தோன்றுகின்றது. தொடர்ந்து மல்லாவியிலும் தோண்டினால் இன்னும் நிறையக் கிடைக்கலாம்.....? தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் கண்காணிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்புஉலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி கையடக்க தொலை பேசி குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு கண்காணி த்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி ஸ்னோடென் மீண்டும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென் அமெரிக்கா பற்றிய இரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழ முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகம் முழுதும் தினந்தோறும் கையடகக்க தொலைபேசி பயன்படுத்தும் 20 கோடி குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு திர ட்டி, கண்காணித்து வருவதாக தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இத்தகவலை The Guardian நாளிதழும் Chanal 4 உம் பகிரங்கப்படுத்தியுள்ளன. குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், யாருடன் தொடர்பு கொள்கின்றனர், அவர்களது இரகசிய தகவல்கள் பற்றியும் அந்த அமைப்பு தகவல் திரட்டியது. மேலும் பிரித்தானி அரசுக்கும் அத்தகவல்களை அனுப்பி பரிசோதிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பரிசோதிக்க முடியும் இதற்கு டிஷ்பையர் என்று பெயர் வைத்துள்ளனர். டிஷ்பையரின் பணியானது, குறுந்தகவல் அனுப்புவது, மிஸ்ட் கோல் அலர்ட், சர்வதேச ரோமிங் கட்டணங்கள் பற்றிய அனைவரின் தகவலையும் திரட்டி ஆய்வு செய்வதாகும். மேலும் அவர்களின் வங்கி இரகசிய அட்டை எண்ணையும் கண்காணிக்கிறது. ரூ.600 கோடியை வேலைக்கார பெண்ணுக்கு உயில் எழுதி வைத்த குஜராத் காங்கிரஸ் பிரமுகர்குஜராத்தில் சமீபத்தில் உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தன் வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு 600 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை தானமாக எழுதி வைத்துள்ள விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. ராஜ்கோட் நகரில் வசித்தவர், கஜராஜ் சிங் ஜடேஜா. காங்கிரஸ் பிரமுகரான அவர், கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவர் இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த உயில் சில நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. அதில், தன், ஆசையும் மற்றும் அசையா சொத்துகள் என 600 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை தன் வீட்டில் வேலைபார்த்து வந்த வினுபாய் என்ற பெண்ணுக்கு எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து, அப்பெண் கூறியதாவது, நான், கஜராஜ் சிங் முதலாளி வீட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பெரிதாக கூறிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு சொந்த பந்தங்களும் இல்லை. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவரை நான், நன்றாக கவனித்துக் கொண்டேன். அதனால், நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த சொத்துகள் அனைத்தையும் எனக்கு எழுதி வைத்துள்ளார். அவருக்கு இவ்வளவு சொத்து இருப்பது கூட எனக்குத் தெரியாது. மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த எனக்கு, திருமணம் செய்து வைத்தவர் அவர் தான். என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தார். திடீரென இறந்த அவர், தன் சொத்து உயில் பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. இப்போது தான், அந்த விபரம் பற்றி எங்களுக்குத் தெரிய வந்துள்ளது'' என்றார். ஜனாதிபதி-தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாரம் சந்தித்து பேச்சுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் இந்த வாரம் அவசர சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகளின் மாநாடு குறித்தும் வடக்கின் தற்போதைய நிலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பியிடம் கேட்ட போது இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனத் தெரிவித்தார். இரா.சம்பந்தன் எம்பி இந்தியா சென்றுள்ள நிலையிலும் மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ள நிலையிலும் இந்த சந்திப்பு சாத்தியப்படாது எனவும் அவர் தெரிவித்தார். ஒரு வாரத்தில் 1000 பேர் பலிசிரியாவில் கிளர்ச்சியாளர் இடையே மோதல்சிரியாவில் அதிபர் பதர் ஆல் –ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புரட்சி படைக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் வடக்கு சிரியாவில் புரட்சி படையினருக்கும் ஈராக்கை சேர்ந்த ஜிகாதி (புனித போர்) மற்றும் லேவந்த் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடும் மோதல் இடம்பெறுகிறது. இதற்கிடையே ஜிகாதி பிரிவினர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் குறிப்பாக 3 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடந்த தாக்குதல்களில் 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 697 பொதுமக்களும் புரட்சி படையைச் சேர்ந்த 351 பேரும் ஜிகாதி மற்றும் லேவந்த் பிரிவைச் சேர்ந்த 246 பேரும் அடங்குவர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 தற்கொலை தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பலானவை கார் குண்டு தாக்குதல்களாகும். உலக நாடுகளுக்கு ஆப்பு வைத்திருக்கும் அமெரிக்கா! அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்களில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி ரகசிய சிப் ஒன்றை செருகி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ரகசிய தொழில்நுட்பத்தினால் இணையத் தொடர்பே இல்லாமல் கம்ப்யூட்டர்களில் உள்ள விஷயங்களைத் திருடி எடுத்துக் கொண்டு, கம்ப்யூட்டரையும் செயல்படாமல் (ஹேக்) செய்துவிட முடியும். அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியான கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் நாடுகளைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்! சீன ராணுவம், ரஷ்ய ராணுவம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள், சவுதி அரேபியா, பாக்கிஸ்தான் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த உளவுத் துறை அலுவலகங்கள். இந்தச் செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செய்தி கசிந்ததும் அமெரிக்க அரசு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நடித்து நாடகமாடியிருக்கிறது. ஜனவரி 17, 2014 புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கமில்லை - சங்கரி சில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். ஆனால், அதன் நோக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறான ஓர் அமைப்பை உருவாக்குவதல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மிகக் குழப்பமான நிலையில் உள்ள யாழ்ப்பாணத் கள நிலைபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளைச்சேர்ந்த பிரமுகர்களின் கூட்டமே அன்று நடைபெற்றது. இதில், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சிறி ரெலோவைச்சேர்ந்த உதயராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த நான் ஆகிய மூவரும், பத்பநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்)ஐச் சேர்ந்த சிறிதரனுடன் இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்க எண்ணுகின்றோம் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. உண்மையில் சிறிதரன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். (மேலும்.....)இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை ஆறுபேர் கொண்ட குழுவின் பேச்சுவார்த்தைகள் வெற்றி இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற புதுடில்லி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழு நேற்று முதல் தடவையாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தக் குழுவின் அடுத்த பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளது. இரு நாட்டு மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையை மீறுவதை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தினகரனுக்குத் தெரிவித்தார். சர்வதேச எல்லையை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மீனவர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் இருநாட்டுப் பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தையின்போது ஆராய்ந்துள்ளனர். புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் நேற்றுமுதல் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கும், இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புது நெருக்கடிமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லியின் லட்சுமி நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விநோத் குமார் பின்னி டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்த போது தனக்கு மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியை பகிரங்கமாக வெளியிட்டு இவர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் ‘மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை என்று தனது சொந்தக்கட்சி மீதே குற்றச்சாட்டுகளை கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனக்கு மந்திரி பதவி அளிக்காததால் அதிருப்தி இல்லை என விநோத்குமார் பின்னி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மந்திரி பதவி அளிக்காதது உள்ளிட்ட எந்த விஷயத்திலும் எனக்கு அதிருப்தி இல்லை. கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பல்வேறு பிரச்சினைகளில் தனது கொள்கையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி செல்கிறது. நானும் இந்த கட்சியில் அங்கம் வகிப்பதால் கட்சியின் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமையாகும் என்று தெரிவித்தார். ஜனவரி 16, 2014 நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது - அனந்தி நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நமது தலைவர்களும் சில கதைகளும்....! (5) (எஸ். ஹமீத்) கதை-5 ஒரு சிறிய ஊரில் நமது தலைவர் பேசுவதாக இருந்தது. பெரிய பெரிய போஸ்டர்கள் அடித்து ஊரெல்லாம் ஒட்டப்பட்டிருந்தும், கூட்டத்திற்குக் கிராமத்தவர்கள் ஆறு பேர் மட்டுமே வந்திருந்தார்கள். 'ஆறு பேருக்கு எதனைப் பேசுவது...? பேசாமல் கூட்டத்தை கேன்சல் பண்ணி விடலாம்...' என்று தலைவர் அபிப்பிராயப்பட்டார். கூட்டத்திற்கு வந்திருந்த ஆறு பேர்களில் ஒருவரான முதிய வயதுடைய கிராமத்தவர் தலைவரிடம் சொன்னார் இப்படி: ''ஐயா...எங்கிட்ட அறுபது மாடுகள் இருக்குதுங்க...சாயந்தரம் அந்த மாடுகளுக்குப் புண்ணாக்கு வைக்கப் போவேனுங்க. சில நேரம் மேய்ச்சலுக்குப் போன மாடுகளில ஆறு மாடுகள்தான் வந்திருக்குமுங்க. ஆனாலும் நான் அந்த ஆறு மாடுகளுக்கும் புண்ணாக்கு வைச்சிடுவேனுங்க...'' ஆறு பேர் வந்திருந்தாற் கூட, அவர்களுக்குப் பேச வேண்டியது தனது கடமை என்பதைத்தான் அந்த முதியவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நமது தலைவர் தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார். ''அன்பான மக்களே...'' உள்நாட்டு அரசியல், உலக அரசியல் என்று தலைவர் வெளுத்து வாங்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஆறு பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து ஓடிவிட்டார். பின்னர் தலைவர் பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க இன்னொருவர் ஓடிவிட்டார். இப்படியாக, தலைவரின் ஒவ்வொரு தலைப்புக்கும் ஒவ்வொருவராக ஓடிவிட, கடைசியாக முதியவர் மட்டுமே நின்று கொண்டிருந்தார். நமது தலைவர் அசடு வழிய அந்த முதியவரைப் பார்த்தார். முதியவர் சொன்னார்: ''ஐயா..சாமி...புண்ணாக்கு ருசியில்லாட்டி எந்த மாடுதான் உக்கார்ந்து தின்னும்...? மொதல்ல மாடுகளின் சுவையறிஞ்சு, அதுக்குத் தகுந்த மாதிரி புண்ணாக்கு வைக்க நாம கத்துக்கணும்ங்க...அது மட்டுமில்லீங்க...அறுபது மாடுங்களுக்குக் கொடுக்க வேண்டிய புண்ணாக்கை ஆறு மாடுங்களுக்கு ஒரு நாளும் திணிக்கக் கூடாதுங்க...!'' தலைவரின் தலை தொங்கிவிட்டது. கிளிநொச்சியை சேர்ந்தவர் பிரான்ஸில் கைது பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதான ஜெயநாதன் தர்மலிங்கம் பிரான்ஸ் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான வேலை வாய்ப்புகள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு சென்ற சமயத்தில் பொலிஸார் இவரை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும்; சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவர் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுடில்லியில் இன்று (15) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழக மீனவர்களின் படகுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இன்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதில் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் சென்னையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, 'இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவர்' என்று கூறியுள்ளார். ஜனவரி 15, 2014 என் மனவலையிலிருந்து..... தை பிறந்தால் 'வழி' பிறக்குமா...? 'வெளி' பிறக்குமா...? (சாகரன்) தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இலங்கை தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை அது பொய்யாகிக் கொண்டே வருகின்றது. படுகொலைகளும், இனவாதமும் தை பிறந்தால் 'வழி' பிறப்பதற்கு பதிலாக 'வெளி' பிறக்கும் நிலையையே ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. பல தலைவர்களையும், நல்ல மனிதர்களையும், முற்போக்கு புத்திஜீவிகளையும் எமக்குள் நாமே அழித்தொழித்து இன்று வெற்றிடமாக இருக்கும் நிலையில் இருப்பதைதான் இங்கு 'வெளி' என்று குறிப்பிடுகின்றோம். புதிய தலைமுறையில் இருந்து முற்போக்கு தலமைகள் ஏற்படாமல் பழைய மொந்தையில் புதிய கள்ளாக போதையில் தமிழ் குறும் தேசியவாதம் பிழைப்பை நடாத்த தமிழ் சமூகம் அங்கீகாரம் வழங்கிவிட்டது. முற்போக்கு சக்திகள் தமக்கிடையே பலமான ஐக்கியத்தை ஏற்படுத்தி முழு வீச்சுடன் மக்களிடம் செல்வதற்கு பதிலாக குறும் தேசியவாதத்துடன் சமரசம் செய்து தம்மை தக்கவைக்க முயல்கின்றன. பேரினவாதமோ தமிழ் பேசும் மக்களில் சிலரை தமது கூலிகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன. இந்நிலையில் எப்படி எமக்கு ‘வழி’ பிறக்கும் ‘வெளி’தானே பிறக்கும். மலையக மக்களோ நூறு வருடங்களாக வெறும் கூலிகளாக லயன்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். உலக முதலாளித்துவம் சர்வதேசமயப்படுத்தல் என்று கூறிக்கொண்டு உழைக்கும் மக்களை குறைந்த கூலியில் வேலை வாங்கும் பொருட்டு தனது கம்பனிகளை நாடுவிட்டு நாடு மாற்றிக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் உள்ளுர் தரகர்களோ வெளிநாட்டுக் கம்பனிகளால் இலட்சம் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன என்று மக்களை மயக்கத்தில் வீழ்த்தி வைத்திருக்கின்றனர். வெள்ளைச் சட்டை வேலைக்காரர் எல்லாம் 8 மணி நேர வேலை என்பதை உதறிவிட்டு 15 மணி நேரம் வேலை செய்தால்தான் தொழில் போட்டியில் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். மனிதர்கள் குழுவாகவோ, அல்லது சமூகமாகவோ மாறிவிடாமல் தனித் தனி நபர்களாக இருக்குமாறு அமைத்துக்கொண்டு நவீன முதலாளித்துவம் தனது இலாபங்களை மேலும் மேலும் சம்பாதிக்கின்றது. மக்கள் இதனை தனிமனித சுதந்திரம் என்று நம்பிக்கொண்டு 'ஜனநாயகத்தை...?' அனுபவிக்கின்றனர். வளங்களைத் திருடுவதற்காக வலிந்த போர்களை அப்பாவி மக்கள் மீது ஏகாதிபத்தியமும், உள்ளுர் கொள்ளைக்காரர்களும் நடாத்தி வருகின்றனர். உணவு உற்பத்தியை பெருக்குதல் என்று மலடாக்கப்பட்ட தாவரங்களையும், காய்கறிகளையும் உருவாக்குகின்றனர். குறுகிய காலத்தில் எடை கூடிய மாமிசத்தை உருவாக்க இறைச்சி விலங்குகள், மீன் வகைகளுக்கு ஊக்கச்சத்து வலிந்து அழிக்கப்படுகின்றது. இவ் மாமிசங்களை உண்ணும் மனிதனும் மலடாகவும், ஊதிப் பெருத்த நோயாளியாகவும் உலகில் வலம் வந்கொண்டிருக்கின்றான். மீண்டும் பண முதலைகள் மருத்துவம் என்று மக்கள் பணத்தை சுழற்சிமுறையில் அதே மக்களிடமிருந்து கறந்து விடுகின்றது. கலாச்சார பிணைப்புக்கள் என்று கலாச்சார சீரழிவுகளை நவீன முதலாளித்துவம் அரங்கேற்றுகின்றன. இதனை சிந்தித்து சீர்செய்து புதிய முற்போக்கு கலாச்சாரத்தை உருவாக்க விடாமல் சிறுசுகளை சிற்றின்பத்தில் கிடத்திவிட்டது நவீன முதலாளித்துவம். ஆனால் நாம் இன்னும் நம்பிகையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு புதிய முற்போக்கு தலைமுறையை கட்டியெழுப்பலாம் என்று. இது செய்தே ஆகவேண்டும். அன்றேல் மனித குலத்தின் அழிவிலிருந்து காப்பது கடினமாகிவிடும். இதற்கான பொறி உலகின் ஒவ்வொரு மூலையிலும் உருவாக்கப்படவேண்டும். நாம் எமது வரலாற்றுக் கடமைகளை தொடர்ந்தும் செய்வோம் என் விவசாய உழைப்பாளிகள் தினத்தில் உறுதி பூண்போம். (தை 14, 2014) ஏதோ ஞாபகம் வந்தது
அப்பொழுது யாழ் விக்னாவில்
படித்துக்கொண்டிருந்தேன். அனேகம (Suratha Yarlvanan )நமது தலைவர்களும் சில கதைகளும்...(4) (எஸ். ஹமீத்.) கதை-4. நமது தலைவரிடம் அவரது பத்து வயது மகன் கேட்டான். ''அப்பா...ஜனநாயகம் என்றால் என்ன...?'' நமது தலைவர் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னார். ''இரண்டு முட்டாள்களும் ஒரு புத்திசாலியும் சேர்ந்து மூன்று முட்டாள்களாக மாறுவதுதான் ஜனநாயகம்...!'' பையன் எரிச்சலோடு கேட்டான். ''அப்படியானால் கடவுளும் முட்டாளாகி விட்டாரா..?'' அப்பாவாகிய நமது தலைவர் கேட்டார். ''ஏன் அப்படிச் சொல்கிறாய்...?'' ''உங்கள் கட்சியை நீங்களும் அம்மாவும் சேர்ந்து ஆரம்பிக்கும் போது கடவுளையும் துணைக்கு அழைத்துக் கொண்டீர்கள்...இப்போது, உங்கள் இருவரோடு சேர்ந்து கடவுள் கூட...'' அதற்கு மேல் பேச விடாமல் மகனின் வாயைத் தன கையால் பொத்தினார் நமது தலைவர். இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் டில்லியில் இன்றுஇலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை எனவும் இலங்கைக்குப் பாதகமான எந்த விடயத்திலும் உடன்படப் போவதில்லை எனவும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன அடங்கலான 8 பேர் கொண்ட குழு நேற்று மாலை இந்தியாவுக்கு பயணமானது. எமது நாட்டின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடிப்பது, கடல் வளங்களை நாசப்படுத்தும் நடவடிக்கைகளை நிறத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆராயப்பட இருப்பதாக இந்தியா செல்ல முன்னர் மீன் பிடித்திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார். இதுதவிர இந்திய சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை கடல் எல்லைக்குள் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிப்பது தொடர்பில் அமைச்சர் கடுமையான போக்கை கடைப்பிடித்ததாலே தமிழக அரசு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்து எமது மீனவர்களை விடுவிக்க முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் நீண்டகாலம் நீடிக்கும் மீனவர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். குஜராத் காற்றாடி விழாவில் கெஜ்ரிவால், மோடிக்கு கிராக்கிகுஜராத்தில் நடைபெறும் காற்றாடி திருவிழாவில், கெஜ்ரிவால், நரேந்திர மோடியின் உருவத்தில் தயாரான காற்றாடிகளுக்கு அதிக கிராக்கி நிலவியதாக காற்றாடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தில் காற்றாடி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொட்டை மாடி மற்றும் மைதானங்களில் நின்று விதவிதமான காற்றாடிகளை பறக்கவிட்டு மகிழ்வர். அகமதாபாத் நகரில் 26வது சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் முதல்வர் நரேந்திர மோடியே கலந்து கொண்டு பிரமாண்ட காற்றாடியை பறக்க விட்டார். தற்போது அரசியலில் பிரபலமாக இருக்கும் தலைவர்கள், சினிமா வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் ஆகியோரின் உருவத்துடன் கூடிய காற்றாடியை மக்கள் அதிகமாக பறக்க விடுவர். இந்த ஆண்டு மோடி, கெஜ்ரிவால் மற்றும் வசுந்தராராஜே ஆகியோர் உருவத்துடன் கூடிய 7 அடி உயர காற்றாடிகள் அதிகம் விற்றதாக ஜெய்ப்பூரில் உள்ள காற்றாடி வியாபாரி காபர் கான் தெரிவித்தார். ஜனவரி 14, 2014 அனைத்து இனிய உள்ளங்களுக்கும் விவசாய உழைப்பாளிகள் பண்டிகை வாழ்த்துக்கள்
கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம் தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது. அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் தண்டவாளங்களை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றது. இதற்கிணங்க மடுறோட் தலைமன்னார் பியர் வரைக்கான தண்டவாளங்கள் புகையிரத நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் வேலைகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்று வருகின்றன. மேலும் மடுறோட் தலைமன்னார் தண்டவாளத்தில் அமைந்திருக்கும் 68 சிறிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. கட்டையடம்பன் மற்றும் மன்னார் கடலேரியில் உள்ள முக்கிய மூன்று பெரிய பாலங்கள் இன்னும் பூர்த்தி அடையாத நிலையில் தற்பொழுது வேலைகள் நடைபெற்று வருகின்றன. முருங்கன் மாதோட்டம் திருகேதீஸ்வரம், மன்னார் தோட்டவெளி, பேசாலை, தலைமன்னார் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்களும், புகையிரத மேடைகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதாவது மடுறோட்டிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்குமுள்ள 63 கிலோ மீற்றர் தூர புகையிரத கட்டுமானப் பணிகள் ஏப்பிரல் மாதத்துக்குள் முடிய கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் விரைவில் கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேவயானி விவகாரம் அமெரிக்க உயர் அதிகாரிகள் ஒப்புதல் தேவயானியை கைது செய்ததால் இந்தியாவுடனான நட்புறவு பாதிக்கப்பட்டு விட்டதை முழுமையாக உணர்ந்து கொண்டுள்ள அமெரிக்க உயரதிகாரிகள் தேவயானி விவகாரத்தை முட்டாள்தனமாக கையாண்டு விட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளனர். விசா மோசடி வழக்கில் கைதான தேவயானி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். இதன் மூலம் தேவயானி விவகாரத்தால் கடந்த சில நாட்களாக இந்தியாவுடனான உறவில் நிலவிய பதற்றம் ஓரளவு தணிந்து விட்டதாகக் கருதத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து இந்தியாவுடனான நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ள தற்போது அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியா அமெரிக்கா இடையே இது சவாலான கட்டமாகும். தேவயானி நாடு திரும்பிவிட்டதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இரு நாடுகள் இடையே நல்லுறவைப் புதுப்பிக்க இந்தியாதான் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் அமெரிக்க அதிகாரிகள் பலரும் அமெரிக்கா இந்த விவகாரத்தை முட்டாள்தனமாக கையாண்டு விட்டதாக கருதுகின்றனர். இந்தியா, அமெரிக்கா, இடையிலான நட்புறவைப் புதுப்பிக்க தங்கள் நாடு கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம் தேர்தலில் போட்டி?நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மீனவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நேற்று முன்தினம் கூடங்குளத்தை அடுத்த இடிந்தகரை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் பல்வேறு ஊர் குழுவினர், மீனவ அமைப்புக்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, 3 முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கைதாக வேண்டும். “ஆம் ஆத்மி” கட்சி விடுத்த அரசியல் அழைப்பை ஏற்று அவர்களுடன் இணைந்து தமிழகத் தில் செயல்பட வேண்டும். அணு உலைக்கு எதிரான கட்சிகள், இயக்கங்களுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். வருகிற 26ம் திகதி குடியரசு தினத்தன்று அடுத்தக் கட்ட கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 13, 2014 முடங்கி கிடக்கும் நாம் மக்கள் பணியாற்ற வேண்டும், அதற்கு இது பயன்பட வேண்டும். சௌகரியம் கிடைத்தால் எல்லாவற்றையும் மறந்துவிடும போக்கு மனிதர்களுக்கு இயல்பானதாய் இருந்தாலும் பொதுவாழ்கையில் உள்ளவர்கள் குறைந்தளவேனும் பொதுத்தன்மையுடன் இருக்க வேண்டும் இல்லையேல் மக்களிடம் இருந்து அந்நியப்படுவது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும். ஒருவர் வெளியில் இருந்து ஒரு பார்வையாளனாக ஆயிரம் குறைகளை கூறிவிடலாம் குறைகூறுபவர் அதிகாரமையமாகவோ தீர்மானசத்தியாகவோ வந்துவிட்டால் அவர் குறைகூறுபவர்களின் திட்டலுக்கும் இழிச் சொல்லுக்கு ஆளாவதும் தவிர்க்கமுடிததாக மாறிவிடும். இவற்றையெல்லாம் மீறி மக்களுக்கு நல்லதை தன்னலம் இன்றி செய்பவர்கள் என்றும் மக்கள் மனங்களில் இடம்கொள்வார்கள் அவர்களை மக்கள் தலையில் தூக்கி ஆடவும் தயங்கமாட்டார்கள்.(மேலும்.....) தோழர் பாலசுப்பிரமணியம் - பாலா - கபூர்.
நாம் வெகுஜன மற்றும் கிளர்ச்சி வேலைகளை எவ்வாறு மேற்கொள்வது பிரசுரங்களை எவ்வாறு உருவாக்குவது சுவரொட்டி போன்ற விடயங்களில் அவரது கருத்துக்கள் அவர் புத்திக் கூர்மையும், ஆளுமையும் மிக்கமனிதன் என்பதைப் புலப்படுத்தியது. 1984 இல் நான் கைதுசெய்யப்பட்டபின் அவருடனான தொடர்புகள் அறுந்து போயின. மூன்றாண்டுகள் கழித்து சிறையிலிருந்து வரும் போது அவர் புலிகளால் கடத்தப்பட்டிருந்தார். கடுமையான சித்திரவதைகளின் பின்னர் விடுதலையாகிய காலஞ்சென்ற தோழர் இளங்கோ புளோட் இயக்கத்ததைச் சேர்ந்த தோழர் மென்டிஸ் தோழர் கபூர் ஆகியோர் புலிகளின் சித்திரவதைக் கூடத்தின் ஒரு அறையில் அடைக்கபட்டிருந்தார்கள். பின்னர் இவர்கள் இருவரையும் பிரித்து வெறெங்கோ கொண்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் தோழர் பாலாவிற்கு என்ன நடந்ததென்று இன்று வரை தெரியாது. (மேலும்.....)
வடமராட்சி வடக்கு முனைப்பகுதி கடற்றொழிலாளர் சங்க
பிரதிநிதிகள் அமைச்சருடன் சந்திப்பு எதிர்கால அரசியல் குறித்தே கலந்துரையாடப்பட்டதுயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்கு கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறிடெலோ கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது உண்மையான விடயமேயாகும். எனினும், இந்தியாவில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க போன்று இலங்கையிலும் தமிழ் கட்சிகளுக்குள் செயற்படுவது தொடர்பாகவே இச் சந்திப்பின் நோக்கமாக இருந்தது. அது தமிழ் மக்களுக்கான பலமான அரசியல் போக்குக்காக அமைந்திருந்தது. எமக்குள் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெறும். அதன் போது அரசியலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடல் யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சுகு சிறிதரன், சிறிரெலோ அமைப்பினைச் சேர்ந்த உதயராசா, வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தமிழழகன், மாநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். லயன் எயார்11 உறவினர்கள் தடயங்களை அடையாளம் காட்டினர்இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் 11பேர் தங்களுடைய உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டியுள்ளனர் என்று பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தெரிவித்தார். யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மேற்படி 72 வகையான தடயப் பொருட்களும் கடந்த சனிக்கிழமை (11) மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆகிய இரு தினங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. பலாலியில் இருந்து புறப்பட்டு இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த லயன் எயார் நிறுவனத்தின் அன்ரனோவ் - 24 விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இரணைதீவுக் கடலினுள் வீழ்ந்தது. தொடர்ந்து அதன் பாகங்களும் பயணிகளின் உடமைகளும், பெண்ணொருவரின் அடையாள அட்டை ஆகியன கடந்த 2013 மே மாதம் 3ஆம் திகதியிலிருந்து 5ஆம் திகதி வரையும் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன. மீட்கப்பட்டவற்றில் மக்களின் உடைமைகள் நேற்றும் (12) நேற்று முன்தினமும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினரால் விமானத்தில் பயணம் செய்தவர்களினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் அவர்களின் உறவினர்களிடம் இடம்பெற்ற நிலையிலேயே 11பேரினால் அவை அடையாளம் காட்டப்பட்டுள்ளன. வடக்கு முதல்வர் மகஸின் சிறையில் தமிழ் கைதிகளுடன் சந்திப்புநீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (12) காலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைசந்தித்துப் பேசும் போதே அவர் இந்த நம்பிக்கையை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார். நீண்ட நாட்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் வட மாகாண முதல மைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சீ. வி. விக்னேஸ்வரன் தனது விஜயத்தின் பின்னர் தெரிவித்துள்ளார். மேல், தென் மாகாண சபைகள் கலைப்புமேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று (12) நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டன. இரண்டு மாகாண சபைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவிலேயே கலைக்கப்பட வேண்டிய போதும் முதலமைச்சர்களில் வேண்டுகோளு க்கமைய மேல் மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் உரிய காலத் திற்கு முன்பாகவே மாகாண சபைகளை கலைத்து ள்ளனர். இதன் படி, மேல் மற்றும் தென் மாகா ணங்களுக்கு புதிய மாகாண சபை களை நியமிப் பதற் கான மாகாண சபைத் தேர்தல்கள் மார்ச் மாத இறுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா எமது மீனவர்களையும் படகுகளையும் விடுவித்தால் நாமும் விடுவிக்க தயார்தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எமது மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பாரானால், நாமும் கைதாகியுள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தயாரென அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் கைதாகியுள்ள 181 இலங்கை மீனவர்களுடன் 34 படகுகளையும் ஜனவரி 13 ஆம் திகதியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் எம்மவர்களை அவ்வாறு விடுவித்தால் நாமும் இந்தியர்களை விடுவிக்க தயார். இவரின் கூற்று உண்மையானதாக இருக்குமானால் 181 மீனவர்களுடன் 34 படகுகளையும் விடுவித்து எமது கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும். நாமும் மீனவர்களையும் படகுகளையும் விடுவித்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க தயார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். வட பகுதியில் பலாத்காரமாக பிரவேசித்து மீன் வளங்களை பெறும் தமிழக மீனவர்களுடன் படகுகளையும் கைது செய்யுமாறு எமது கடற்படையிடம் நாம் கேட்டேன். கடற் படையினர் இக்கோரிக்கையின் பேரில் மீனவர்களுடன் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். 179 இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைதமிழக சிறைகளில் உள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள் ளார். இலங்கை சிறையில் உள்ள 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் விடுவிக்க ப்படுவார்கள். ஜனவரி 13 முதல் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக - இலங்கை மீனவர்களிடையே சென்னையில் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேவயானி வீட்டில் மிகவும் சிரமப்பட்டேன் - பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்அமெரிக்காவில் தேவயானி வீட்டில் பணிபுரிந்த போது நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று அவரது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட் குறை கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது: எனது குடும்பத்துக்குப் பணம் அனுப்புவதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவுக்கு வரமுடிவு செய்தேன். ஆனால் இங்கு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நினைத்ததில்லை. அதாவது தேவ்யானியின் வீட்டில் நான் ஏராளமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ, என் பணிகளைக் கவனிப்பதற்கோ கூட எனக்கு நேரம் இருந்ததில்லை. தேவ்யானியின் வீட்டில் பணியாற்றிய போது, அவர்கள் என்னை நடத்தியவிதம் காரணமாக இந்தியாவுக்கு திரும்பிவிட முயன்றேன். நான் அங்கு பட்ட வேதனையைப் போல் அமெரிக்காவில் பல்வேறு சிரமஙஙஙகளை அனுபவிக்கும் மற்ற வீட்டு வேலைக் காரர்களுக்கும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். உங்களுக்கு என்று சில உரிமைகள் உள்ளன. உங்களைச் சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள் என்பதுதான் அது என்று அந்த அறிக்கையில் சங்கீதா தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவை பின்தள்ளியது சீனாஉலகின் மிகப் பெரிய வர்த்தக தேசமாக பல தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்காவை சீனா பின்தள்ளியிருப்பதை தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. புதிய தரவுகளின்படி சீனா கடந்த ஆண்டில் மொத்தம் 4.16 டிரில்லியன் டொலர் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா கடந்த ஆண்டுக்கான தனது முழு அறிக்கையை வெளியிடாத போதும் அது முதல் 11 மாதங்களிலும் மொத்தம் 3.5 டிரில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடபட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சீனா உலகின் மிகப் பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக வளர்ச்சி கண்டது. சீனா தனது இறக்குமதியையும் பாரியளவில் அதிகரித்துக் கொண்டுள்ளது. "சீனா உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்திருக்க பெரும்பாலும் வாய்ப்பு இருக்கிறது" என்று சீன சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சங் யுஷெங் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தனது கடந்த ஆண்டின் வர்த்தக அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முக்கிய சாட்சியங்கள் - அமெரிக்கா பதிவு! இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம் செய்த குற்றங்களை அமெரிக்க தூதரக அதிகாரி சாட்சியங்களோடு பதிவு செய்துள்ளார். இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் இந்த போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்தன. ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இந்த பிரச்னையில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த தீர்மானத்தை ஆதரிந்திருந்தது. இந்நிலையில், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. அதற்கு முன்பாக, அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து ஆதாரங்களை திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கு பகுதியில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்க தூதர் தனது சுற்றுப்பயணத்தின்போது, இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து அவர் சாட்சியங்களை பதிவு செய்து, புகைப்பட ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜனவரி 12, 2014 தோழர் முகுந்தன் - முருகநேசன் சில நினைவுகள்
வவுனியாவில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வந்து தோழர்களை போசித்தவர். வடக்கு கிழக்கு மாகாண சபையில் அவர் ஒரு அங்கத்தவராக முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றியவர். 1990 இன் முற்பகுதியில் இயக்கத்தில் சில இடங்களில் தோன்றிய அராஜகநிலைமைகளை நிலைமைகளை நேர்சீராக்குவதில் அவர்காத்திரமான பங்களிப்புக்களை நல்கியவர். அவர் இவற்றை செய்து கொண்டிருக்கும் காலத்தில் ஜனநாயக உணர்வுகொண்ட பெருவாரியான தோழர்கள் மத்தியில் தோழர் முகுந்தனின் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அமைதிகாப்பு படையின் வெளியேறுதல் ஆரம்பமாகியது. அமைதிகாப்பு படை வெளியேற்றத்துடன் ஈபிஆர்எல்எப் உம் விலக வேண்டியது தவிர்க்கமுடியாததாகியது. ஒரு புறம் பிரேமதாச அரசு மறுபுறம் புலிகள் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை.(மேலும்.....)
நமது தலைவர்களும் சில கதைகளும்....! (3) (எஸ்.ஹமீத்) கதை-3 தனது தொண்டர்கள் சிலருடன் அந்த அசைவ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார் நமது தலைவர். சாப்பாட்டுக்கு ஓடர் பண்ணிய சில நிமிடங்களில் மேசையை நிறைத்தன சோறும் கறி வகைகளும். விதம் விதமான கறி வகைகள். இறைச்சி, மீன், முட்டை, இறால், நண்டு என்பவற்றோடு மூளைக் கறியும் இருந்தது. மூளையைக் காட்டி, ''இது என்ன..?'' என்று, அப்பாவித் தொண்டர்களில் ஒருவர் கேட்டார். தன்னைப் பெரிய 'மூளைசாலி'யாகக் காட்டிக் கொள்ளும் ஆவல் தலைவருக்கு ஏற்பட்டது. உடனே அவர் பூடகமாகச் சொன்னார்: ''இது என்னவென்றா கேட்கிறாய்...? சொல்கிறேன்... எனக்கு இருப்பதுவும், உங்கள் எவரிடத்தும் இல்லாததுமான ஒன்று எதுவோ, அதுதான் இது..'' அங்கிருந்த தொண்டர்களில் கொஞ்சம் புத்திசாலியான ஒருவனுக்குத் தலைவர் என்ன சொல்கிறார் என்பது புரிந்தது. தம்மையெல்லாம் மூளையில்லாதவர்கள் என்று மட்டம் தட்டும் தலைவருக்குத் தகுந்த பதிலடி கொடுக்க நினைத்தான். பின் சொன்னான்: ''ஆமாம் தலைவரே...நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இது உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதையும் எங்களில் எவரிடத்தும் இல்லையென்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன்...ஏனெனில்....'' கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான்... ''இது மாட்டு மூளையல்லவா...?'' தலைவரின் முகம் பேயறைந்தாற் போல ஆகிவிட்டது. அடுத்த நாளே அந்த 'மூளைச்சாலித்' தொண்டனைக் கட்சியிலிருந்து நமது தலைவர் நீக்கிவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா...? கூட்டமைப்பிற்கு மாற்றீடாக ஒரு கூட்டணி? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு மாற்றீடாக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. இதில், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் சிறிரெலோ அமைப்பினரும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதாக இருந்தவுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் நியமிப்பதை எதிர்க்கவில்லை: த.தே.கூ கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த அமைச்சில் வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த அதிகாரி இருக்க வேண்டும் எனறே கோரினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சபராஜ் இன் ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சில் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளனர். ஆதலால், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாத்திரம் தான் வேறு ஒரு இனத்தவராக பதவி வகித்தார். இவ்வாறு இருந்த நிலையில் அந்தப் பதவிக்கும் முஸ்லிம் ஒருவரை நியமிக்காது மற்றய இனத்தில் இருந்து ஒருவரை நியமிக்குமாறே கோரியிருந்தோம். எமது நோக்கம் முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிப்பதை எதிர்ப்பதல்ல அந்த அமைச்சின் கீழ் உள்ள ஒரு அதிகாரியாவது ஏனைய இனத்தவராக இருக்க வேண்டும் என்பதுதான். இதனை பிழையாக முஸ்லிம் மக்கள் கருதக் கூடாது எனத் தெரிவித்தனர். தென்,மேல் மாகாண சபைகளை கலைக்கவும் தென் மற்றும் மேல் ஆகிய இரு மாகாண சபைகளையும் கலைக்குமாறு கோரி அந்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்களிடம் கடிதங்களை கையளித்துள்ளனர். தென் மாகாண முதலமைச்சர் சாந்த விஜயலால் டி சில்வா தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவிடமும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவிடமும் கடிதங்களை கையளித்துள்ளனர். இவ்வாறான நிலையில் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் இவ்விரு சபைகளும் கலைக்கப்படலாம் என்றும், அதன்பின்னர் இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்களுக்கான திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஐ.நா தீர்மானத்திற்கு சர்வதேசத்திடம் ஆதரவு கோருவோம் - த.தே.கூ 'ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வெள்ளிக்கிழமை (10) யாழில் நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தினத்தில் தெரிவித்தார்.1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. (மேலும்.....)உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் தராதீர்கள்இராஜதந்திர நாடகமாடும் ராதிகாகனடாவில் தாம் பிரதிநிதித் துவப்படுத்தும் பிரதேசத்தில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களை திருப்திப்படுத்தி அவர்களது வாக்குகளை பெற்றுக் கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இலங்க்கு வந்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ராதிகா சிற்சபேசன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருப்பார். இருந்தாலும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மனித உரிமை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இப்போது இலங்கைக்கு வருவது ராதிகாவுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சிலர் கருதலாம். ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கைக்கு வந்து இலங்கையின் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்கு உண்மையான ஆர்வம் இருக்குமாயின், யுத்தம் முடிவடைந்தது கடந்த நான்கரை வருடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வந்து சென்றிருக்கலாம். (மேலும்.....) போலியான இனவாத பேச்சுக்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்காதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவு குழுவில் தம்மை இணைத்துக் கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்வின் அன்றாட அவசிய தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வழிகாண வேண்டும். பின்னர் 13 தீர்வினை நோக்கி செல்வதற்கான பாதையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமீது நம்பிக்கை வைத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்துமத பீடம் கூட்டமைப்பினருடன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இனவாத வெறுப்பூட்டும் உணர்ச்சியான மேடைப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒருபோதும் சுபீட்சமாக்கப் போவதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனோ நிலையை மாற்றி அவர்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கை துளிர் விடுவதற்கான மனோ சக்தியை உருவாக்குவதற்கு தமிழ் கூட்டமைப்பினரின் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். (மேலும்.....) சமூகம் வழங்கியுள்ள உயர்ந்த அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தும் மதகுருமார்மதகுருமார் தமது மதம் சார்பான விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தாம் அரசியலில் நேரடியாகக் களமிறங்கி அரசியல்வாதியாக தம்மை மாற்றிக் கொண்டு ஓர் அரசியல்வாதி போன்று அரசியலில் ஈடுபட வேண்டும். இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இல்லாத பொல்லாத சோடிக்கப்பட்ட பொய்களைக் கூறி நாட்டின் தலைமைக்கும், இறைமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்துவது எந்தவொரு மதகுருவினதும் பணியல்ல. அது வீம்பிற்காகச் செயற்படும் எதிர்க்கட்சியினரது பொய்ப் பிரசார வேலை எனச் சர்வமதத் தலைவர்களும், கல்விமான்களும், சிவில் சமூகத்தினரும் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர். (மேலும்.....) ராதிகாவினால் ஏமாற்றப்பட்ட புலம்பெயர் சமூகமும் எம்.பியும்இலங்கை வந்திருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும், கனடா பிரஜா வுரிமை பெற்ற அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினருமான ராதிகா சிற்சபேசன் குறித்த பேச்சையே கடந்த வாரம் முழுவதும் மக்கள் மத்தியி லும், ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசாங் கத்திற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தவென புலம்பெ யர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தவரால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப் பட்டவர்கள் வரிசையில் முன்னர் கவிஞர் ஜெயபாலன் பின்னர் மகாதமிழ் பிரபாகரன் இப்போது ராதிகா என்பதாக தொடர்கிறது. (மேலும்.....) மீள் இணக்கம் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் பரந்து கலந்து வாழ்ந்தாலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்று இந்த நாடு மனோரீதியாக பிளவு பட்டுப் போய்க் கிடக்கிறது. பிளவு படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை சமூகங்களை ஜனநாய அடிப்படையில் மனோரீதியாக ஒன்றிணப்பதில் பாரிய அலட்சியம் காட்டப்படுகிறது. சிறுபான்மையினரை கண்காணிப்பில் வைத்திருத்தல் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்தல் என்பன யுத்தத்திற்குப் பிந்திய பெரும் போக்காக காணப்படுகிறது.(மேலும்.....) ஜனவரி 11, 2014 சர்ச்சைக்குறிய படத்தை மாற்ற மாட்டோம் - அமெரிக்கா வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் வைத்து எடுத்து டுவிட் செய்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் மாற்ற மாட்டோம் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இருந்தனர். இந்த புகைப்படத்துடனான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் - தயான் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால்இ இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார். (மேலும்.....)மேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும் மேல் மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களும் இன்றிரவு கலைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இன்று கலைக்கப்படும் இவ்விரு மாகாணங்களுக்குமான தேர்தல் மார்ச் மாதம் நடுபகுதியில் நடைபெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பலமான எதிர் கட்சி இல்லாவிடத்து இவ்விரு மாகாணங்களிலும் தேர்தல் மூலம் தமது வெற்றியை ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணி கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரித்தானியாவில் வசித்த இலங்கைப் பெண் இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெயவாணி வாகீஸ்வரன் (33) என்ற பெண்ணே தனது 5 வயது மற்றும் 7 மாதங்கள் நிரம்பிய இரு ஆண் பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் லண்டன், ஹெரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள பெண்ணின் கணவர் சக்திவேல் வாகீஸ்வரன் (36) அங்கு கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு திரும்பியபோது சற்றும் எதிர்ப்பாராத வகையில் இந்த அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. தன்னுடைய மனைவிதான் இக்கொடூர கொலைக்குக் காரணமாக இருந்திருப்பார் என்பதை நம்ப முடியாமல் இருப்பதாகவும் இனிமேலும் அந்த வீட்டுக்கு செல்லப்போவதில்லை என்றும் சக்திவேல் வாகீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவம் குறித்து அயலவர்களிடமும் உறவினர்களிடமும் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வலி. கிழக்கு பிரதேச சபையின் பட்ஜட் 2வது தடவையும் நேற்று தோற்கடிப்புதமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மூன்று மேலதிக வாக்குகளால் இவ்வரவு செலவுத் திட்டம் தோல்வி கண்டுள்ளது. வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் சபையில் நேற்று இரண்டாவது தடவையாகச் சமர்ப்பித்தார். முதலாவது முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு வந்தமை மற்றும் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லை என சபை உறுப்பினர்களிடையே வாதவிவாதங்கள் இடம்பெற்றன. 21 உறுப்பினர்களை கொண்ட வலி. கிழக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 16 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஐவரும் இருக்கின் றனர். தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 21 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் எதிராகவும் 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களிக்க வரவு செலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோல்வி அடைந்தது. ஏற்கனவே, கடந்த 2013 நவம்பர் மாதம் சமரப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் 10 உறுப்பினர்கள் எதிராகவும், 9 உறுப்பினர்கர்கள் ஆதரவாகவும் வாக்களிக்க ஒரு வாக்கு வித்தியாசத்தால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. முதலாவது வாக்கெடுப்பின் போது இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை. சிரிய கிளர்ச்சியாளர்களிடையே உக்கிர மோதல்
சிரிய அலெப்போ நகரில் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் கிளர்ச்சிப் படையினரின் ஒரு பிரிவினரால் பிறிதொரு பிரிவைச் சேர்ந்த குறைந்தது 50 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் மேற்படி படுகொலைகளை காண்பிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு அல் - கொய்தாவுடன் தொடர்பைக் கொண்ட கிளர்ச்சிப்படை பிரிவான ஐ.எஸ்.ஐ.எல். குழுவே காரணமென குற்றஞ்சாட்டப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எல். குழு எதிர் கிளர்ச்சிப் படைகளை நசுக்கப் போவதாக ஏற்கனவே சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடையே கடந்த 5 நாட்களாக இடம்பெற்று வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எல். குழுவானது புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் அலெப்போ நகரிலுள்ள தனது பிரதான தளத்தை இழந் துள்ளது. யுத்தமில்லா பூமி வேண்டும் என்பதே நம்நாட்டு மக்களின் விருப்பமாகும்30 ஆண்டுகால யுத்தத்தின் போது பொதுமக்களும், ஆயு தப்படையினரும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை நாம் மறுக்க முடியாது. யுத்தம் நடைபெறும் போது இர ண்டு பலம்மிக்க ஆயுதப்படைகள் ஒருசாராரை எதிர்த்து மற்றசா ரார் போராடும் போது அப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் இருதரப்பினரின் துப்பாக்கி வேட்டுக்கும் இலக்காகி மரணமடை வதையும் எவரும் தடுக்க முடியாது. யூகோஸ்லாவியாவில் நடை பெற்ற பிரிவினைவாத யுத்தத்தின் போது பல பொதுமக்கள் கொல் லப்பட்டனர். மேலும் பலர் எதிரணி ஆயுதப்படையினரால் வேண்டுமென்றே குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டனர். இத்த கைய யுத்தங்கள் ஆபிரிக்க நாடுகளில் இன்றும் நடந்து கொண் டிருக்கின்றன. (மேலும்.....) ஜனவரி 10, 2014காணாமல் போனோர் என்றொரு இனம் உருவாகியுள்ளது - சி.விஇலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் இன்று (09) நடைபெறபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'காணாமற் போனோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தும் பிரேரணையொன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் வடமாகாண சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணையினை வழிமொழிந்து பேசியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் மகஜர் ஒன்றினை வட மாகாணசபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், பதுமன் ஆகியோருக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி பதவிகளையும் வழங்கியுள்ள நிலையில், ஏன் ஏனைய அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது எனவும் சிவாஜிலிங்கம் இதன்போது கேள்வி எழுப்பினார். (மேலும்.....)Press Statement on Ms. Rathika Sitsabaiesan's Visit to Sri LankaThe media publicity in Sri Lanka and Canada on the recent private visit to Sri Lanka by the New Democratic Party (NDP) Member of Parliament Rathika Sitsabaiesan has created much controversy that needs to be clarified.The information reported in the media and in some of the websites that Ms. Sitsabaiesan was under house arrest was false and was confirmed by her and Canadian Government authorities. As Ms. Sitsabaiesan was on a tourist visa she had been advised not engage in political activities which would amount to flouting Sri Lanka’s immigration laws and regulations. While Sri Lankan authorities handled this issue in a responsible manner, the statement made by Ms. Sitsabaiesan on 1st January 2014 posted in the NDP website that she was subject to ‘political intimidation’ is erroneous and is an attempt to unfairly embarrass the Sri Lanka Government. Moreover this stated position could be indicative of her seeking to engage in political activity, and being unable to do so in the interest of abiding by Sri Lanka’s immigration laws and regulations, seems to have been interpreted by her as political intimidation. The reference in the same statement on defending principles of human rights further demonstrates a self appointed role to pass judgment baselessly on a sovereign State. After 30 long years of conflict waged by the most ruthless terrorist organization in the world, Sri Lanka is at a stage addressing the complex issues to bring about healing and reconciliation. Those who genuinely wish to assist in this process should be sensitive to the needs of the country and all the people living in Sri Lanka Sri Lanka High Commission Ottawa(8th January 2014) ஜனவரி 09, 2014என் மனவலையிலிருந்து.... வடக்கிலும் இனி தமிழ் மெல்லச் சாகுமா....? (சாகரன்) அண்மையில் 'வட மாகாணசபை செயற்படவேண்டும்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இதற்க பலரிடமிருந்து எனக்கு ஈமெயில்கள் வந்தன. இக்கட்டுரை எழுதுவதற்கு அதுவே தூண்டுதலாக அமைகின்றது. இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை வடக்கு, கிழக்கு, மலையகம், தமிழ் பேசும் முஸ்ஸீம் மக்கள் என்று ஆரம்ப சுழிகளுடன் ஆரம்பித்தது. அது வெகு விரைவிலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்று சுருங்கி, கருணா மீதான் பிரபாகரன் புலிகளின் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளும் இன்று வடக்கு மாகாணத்திற்குள் முடங்கிவிட்டார்கள் என்றால் மிகையாகாது. ஆனால் நாம் ஆரம்பித்த புள்ளியிலிருந்த மக்களுக்கான பிரச்சனைகள் இன்றும், இன்னமும் கூடிய நிலமையிலேயே இருக்கின்றது. இந் நிலமைகள் ஏற்பட இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதான காரணமாக இருந்தாலும் அன்றும் இன்றும் இருக்கின்ற தமிழ் பிற்போக்கு மிதவாத பாராளுமன்றத் தலமைகளும் முக்கிய காரணமாக அமைகின்றன. இது பலருக்கு வெறுப்பேத்தும் சொற் பிரயோகமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க ஒரு பலமான, தெளிவான, செயற்பாட்டுடன் கூடிய தலமை இன்று வரை நிலைக்கவில்லை என்றால் அது மிகையாகாது. இப்படியே போனால் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட ஆயுதப்போராட்ட அனுபவம் இனிமேல் வடக்கு என்பதை யாழ்பாணத்திற்குள் குறுக்கி இன்னும் சிலகாலத்தில் அதுவும் இல்லாமல் செய்து விடுவார்கள் பேரினவாத சக்திகள். இதற்கான திறவுகோல்களை இன்றைய ஆளும் தமிழ் தரப்பு மிக நன்றாகவே செய்து வருகின்றது. ஒரு சமூகத்தின் இருப்பிற்கு அச் சமூகம் ஒரு பலமான சமூக அமைப்பை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். இது விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத்தின் பலமான சமூக அமைப்பால் தாக்கிப்பிடித்திருக்கக் கூடிய நிலமையே கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தை நான் இங்கு குறிப்பிடவில்லை. இதற்கு பலமான தூண்களாக கிழக்கின் வளர்ச்சியும் தோழனாக தோள் கொடுப்பும், வன்னிப் பெருநிலத்தின் சளைக்காத உழைப்புத் தடங்களும், மலையகத்தின் பெருந்தோட்டச் செய்கையும், முஸ்லீம் மக்களின் உழைப்புகளுடன் கூடிய சகோரத்துவமும் காரணிகளாக இருந்தன. விவசாயம், கடற்தொழில், கல்வியில் மேன்மை என்பனவற்றுடன் கலாச்சார விழுமியங்களைத் தாங்கிப்பிடித்து ஒழுக்கமான கட்டுகோப்பான சமூகமாக தமிழ் பேசும் சமூகம் தன்னை கட்டிக்காத்து வளர்த்து வந்தது. ஆனால் இன்று எம்மவரின் நிலை என்ன. மேற் கூறிய எவற்றிலும் மேன்மை தங்கியவராக தம்மை அடையாளப்படுத்த முடியாத நிலமையிலேயே இருக்கின்றனர். போர் எமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் இது என்றாலும் போருக்குப்பின்னர் சாம்பலில் இருந்து எழுந்து வரும் பீனிஸ் (Fenix) பறவைபோல் நாம் எழுந்து வருகின்றோமா என்றால் இல்லை என்பதே பதில் ஆகும். ஒரு காலத்தில் உயர் கல்வியில் இலங்கையில் முதல் தரத்தில் இருந்த யாழ் மாவட்டம் இன்று கடைசி நிலையில். காய்கறி, பழங்களுக்கு வடக்கு லொறிகளை எதிர்பார்த்திருந்த நிலமைமாறி இன்று தெற்கு லொறிகளை எதரிபார்த்திருக்கும் வடக்கு மக்கள். நாமே பிடித்த மீனை தெற்கிற்கு ஐஸ் போட்டு 12 மணி நேரத்திற்குள் கெட்டுப்போக முன்பு அனுப்பி இராஜாங்கம் நடத்திய நம் கடற்தொழிலாளிகள் எங்கே?. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடுவதால் எல்லை மீறி எமது கடல் வளத்தை அள்ளும் தமிழக முதலாளிகளிடம் சரணடைந்து ஏதும் அற்று நிற்கும் நிலை. போர்களினால் ஏற்பட்ட அனாதைகள், விதவைகள், தனிக் குடும்பத் தலமையுள்ள குடும்பம் என்று அல்லோகல்லல்படும் குடும்பங்கள். கூடவே பணத்தை சுருட்டும் என்.ஜி.ஓ கள். போர் கால நிலமைகளினால் உடல் நலத்தினால், உடல் வளத்தினால் நலிந்த உழைப்பாளிகள். இது தான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்த நிலமைகளை புரிந்து ஒரு பலம் மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டி வேலைத் திட்டங்களை வரைந்து செயற்படுத்த வேண்டியதுதான் இன்றைய வடமாகாண சபையின் உடனடிச் செயற்பாடுகள் ஆகும். அது கல்வித்துறையாக இருக்கட்டும், விவசாயமாக இருக்கட்டும், கடற்தொழிலாக இருக்கட்டும், ஒரு ஒழுக்கம் மிக்க இளம் சமூகத்தை உருவாக்க சமூக விழிப்புக் குழுக்களை உருவாக்குவாதாக இருக்கட்டும் உடன் ஆரம்பிக்க வேண்டிய வேலைகள் இவை. இலங்கை அரசும், அவர்களை நம்பி செயற்படுபவர்களும் செய்யும் அபிவிருத்திகளை அவர்கள் செய்யட்டும். நீங்கள் மாகாண சபைக்கு கிடைத்திருக்கும் அதிகாரத்தில்? செய்யக் கூடியவற்றை செய்யுங்கள். கூடவே அரசியல் அதிகாரத்திற்கான (சட்டநுணுக்க) போராட்டங்களை தனித்தும் சர்வதேச ஆதரவுடனும் நடத்துங்கள். இவற்றிற்கு சகலரையும் அணைத்து செல்ல முற்படுங்கள். அன்றேல் இன்றும் சில தசாப்தங்களில் வடக்கிலும் '....இனி தமிழ் மெல்லச் சாகும்.....?' (தை 09, 2014) மன்னார் புதை குழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும் இது இராணுவத்தினர் செய்துள்ளனரா அல்லது விடுதலை புலி இயக்கத்தினரால் செய்யப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டும். அத்தோடு மன்னார் புதைகுழி ஆய்வு விடங்களின் விசாரணைகளை சீனா முன்னெடுக்கப்போகின்றது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனை சீனா மேற்கொள்ளக் கூடாது மாறாக மேலைத்தேய நாடுகளில் நியாயமானஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரி ஜெரெப்புடனான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். மேலும் வடக்கில் தற்போது பரவியுள்ள இராணுவ அடக்கு முறைகளில் இருந்தும் காணி அபகரிப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெகு விரைவில் தீர்வு காணப்படவேண்டும். (மேலும்......) றம்பொடை பிரதேசத்தில்அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் தமிழ் மக்கள்நுவரெலிய மாவட்டத்துக்குட்பட்ட றம்பொடை டிவிசனில் அமைந்துள்ள ஆறு தோட்டங்களை உள்ளடக்கிய புரட்டொப் குறூப் ( பெரட்டாசி தோட்டம்) என்ற தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் பலவருடங்களாக அடிப்படை வசதிகள் கூட இன்றி கடும் சிரமத்துக்கு மத்தியில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கல்வி, சுகாதார, போக்குவரத்து, தபால், தொடர்பாடல் போன்ற வசதிகள் இல்லாததால் இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ந்தும் கொத்தடிமைகளாகவே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. புரட்டொப் குறூப்பில் அமைந்துள்ள பூச்சிக்கொடை, அயரி, மேரியல், ரஸ்புருக், பெரட்டாசி, மேமலை ஆகிய தோட்டங்களில் தமிழ் மக்களே முழுமையாக வாழ்கின்றனர். (மேலும்......) ஆம் ஆத்மி அலுவலகம் தாக்குதல் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பா. ஜ. க. ஆதரவு அமைப்புகள் மீது பிரஷாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது ‘பா. ஜ. க., ஆர். எஸ். எஸ். மற்றும் அவற்றின் ஆதரவு அமைப்புகளுக்கு ஆம் ஆத்மியின் அபரிமிதமான வளர்ச்சியினால் ஏற்பட்ட விரக்திதான் இந்த நிகழ்வுக்குக் காரணம். ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்’ என்றார். அதேநேரத்தில் இந்தச் சம்பவத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் கவுசாம்பி பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தின் மீது நேற்றுக் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து வாட்டும் கடும் குளிர்வடக்கு அமெரிக்காவை தாக்கியுள்ள கடும் குளிர் காலநிலையில் அமெரிக் காவின் 50 மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்டிருக்கும் ஆர்டிக் குளிர்காற்று 190 மில்லியன் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த கடும் குளிருக்கு முகம் கொடுக்க முடியாமல் கென்டுகி சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மீண்டும் சரணடைந்துள்ளார். அமெரிக்காவின் ஒருசில பகுதிகளில் தற்பவெப்பநிலை -26 செல்சியஸ் வரை குறைந்துள்ளது. ஏற்கனவே உறை பனியில் கடும் குளிரை சந்தித்து வரும் அமெரிக்க மக்கள் ஆர்டிக் குளிர் காற்றால் மேலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதில் நியூயோர்க், பென்சில்வேனியா, அலபாமா, ஜோர்ஜியா மிஷிகன், மரிலான்ட் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. மின்சோட்டா பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலையாக -37 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் குளிரை விளக்கும் வகையில், விஸ்கொஸ்ஸினில் கடும் சூடான தண்ணீரை வானில் எறிந்தபோது அது உடனடியாக பனிக்கட்டியாகமாறும் வீடியோவொன்று இணைய தளத்ததில் பிரபலமாகியுள்ளது. இந்த குளிர்கால நிலையால் நாளாந்த பிரயாணங்களும் தடைப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 2700 விமா னங்கள் ரத்துச் செய்யப்பட்டன. கனடாவும் இந்த கடும் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. சிரிய இரசாயன ஆயுதங்கள் அகற்றும் செயற்பாடு ஆரம்பம்சிரியாவின் முதல் கட்ட இரசாயன ஆயுதங்கள் டென்மார்க் கப்பலினூடே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. சிரியாவின் வடக்கு துறைமுகமான லத்கியாவிலிருந்து ரஷ்ய மற்றும் சீன யுத்த கப்பல்களின் காவலுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த இரசாயன ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன. சிரியாவின் இரசாயன ஆயுதங்களை முற்றாக அழிக்கும் ஐ.நா. ஆதரவு உடன்படிக்கையின் முதல் கட்ட நடவடிக்கையாக இது அமைந்தது. சிரிய இரசாயன ஆயுதத்தை ஏற்றிய டென்மார்க் கப்பல் இத்தாலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு டைட்டேனியம் தொட்டியில் வைத்து பன்னாட்டு கடல் பகுதியில் அவை அழிக்கப்படும். மேலும் இரசாயன ஆயுதங்களை ஏற்றிச் செல்ல மற்றொரு சரக்கு கப்பலானது லத்கியா துறைமுகத்தில் காத்து நிற்கிறது. வரும் ஜுன் மாதத்திற்குள் சிரியா வின் 1400 தொன் இரசாயன ஆயுதங்கள் அகற்றப்படவுள்ள நிலையில் முதல் கப்பலில் எவ்வளவு தொன் ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற விபரங்களை சர்வதேச இர சாயன ஆயுத தடுப்பு அமைப்பு வெளியிடவில்லை. ஜனவரி 08, 2014 திருகோணமலை மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் ஆறாம் திகதி வரை திருகோணமலை நீதவான் பி.சரவணராஜா இன்று ஒத்திவைத்தார். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் தங்கத்துரை சிவானந்தாவின் தாயார் சுகிர்தா தங்கத்துரை இன்றைய விசாரணையின்போது சாட்சியமளித்தார். புலிகளின் ஆத்திரம்மூட்டும் செயற்பாடுகளினால் பொது மக்களை பாதிப்படையச் செய்யும் செயற்பாடுகளின் ஒன்றான இச் செயலை இலங்கை இராணுவம் மேற்கொண்டது. இது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த படுகொலை சம்பவங்களில் இதுவும் ஒன்று Troubled waters
What’s happening? There are more than 250 Indian fishermen jailed in Sri Lanka. Their offence: fishing in the Palk Strait. Fishing by itself is not a crime, but ‘poaching’ is, says Sri Lanka. According to Sri Lanka, the Indian fishermen are encroaching into its territory. Ownership of Kutchatheevu, a small island in the Palk Strait (which divides the two countries) and rights to fish here are still under dispute despite a 1974-agreement drawn between India and Sri Lanka.The agreement, which cedes the island to Sri Lanka with an International Maritime Boundary, was not approved by the Indian Parliament. Hence, there have been calls from Tamil Nadu politicians and the fishermen community to review the agreement. (more...) யாழில் 'ஆவா' குழு கைது யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறான கொலை, கொள்ளைச் சம்பவங்களை 'ஆவா' எனப்படும் ஒரு குழுவே மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவுக்கு இணுவில் பகுதியினைச் சேர்ந்த குமரேசன் வினோதன் (21) (ஆவா வினோத்) என்ற இளைஞனே தலைமை தாங்குவதாகவும் தெரியவந்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார். இதனையடுத்து, அக்குழுவின் தலைவர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுத உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை, கொலைகள், கப்பம் கோரல், வீடு புகுந்து ஆட்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி கூறினார்.An open letter to Rathika Sitsabaiesan
On January 9, 1992, after the Canadian Parliamentarians, Geoff Scott
(Conservative), Beryl Gaffney (Liberal) and Svend Robninson (NDP)
arrived in China, they did not respect the arrangements the Chinese side
had made and abused the hospitality of their hosts by engaging in
activities, (like you did in Sri Lanka) incompatible with the status,
said Chinese Foreign Ministry spokesman, Wu Jiamin. The three had met
clandestinely with the wife of jailed dissident Wang Juntao, believed to
be the mastermind behind the 1989 Beijing Spring movement, and had hoped
to lay a wreath at Tiananmen Square (like Deepak Obhrai laying a wreath
at Elephant Pass, and got away easily) where pro-democracy activists
were massacred by the Chinese troops on June 4, 1989. மதமும் மொழியும் -எஸ். ஹமீத்- மதம் நமது வழி... மொழி நமது விழி...! மதம் நமது அடையாளம்... மொழி நமது அஸ்திரம்...! மதம் நமது தர்மம்... மொழி நமது கர்வம்...!
மதம்
மதம் மதம் நமது ஆன்மா... மொழி நமது அம்மா...! மதம் நன்னெறி... மொழி நா நெறி...! மதம் ஆன்மீக விசை...... மொழி லௌகீக இசை...!
மதம்
மதம் பல மொழிகள் பேசும்
ஒரு மதமுமுண்டு...
மதங்களால் ஜனவரி 07, 2014 தமிழில் வாக்குமூலம் பதியாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை தமிழ் மொழியில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அந்த உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா இன்று தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் தமிழ்மொழியில் பதிவு செய்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையின் பிரகாரம், பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாக்குமூலத்தினை தமிழில் பதிவு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவித்த அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர், திகதி, முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற நேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வடமாகாண பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு' பணிப்பாளர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை (01) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வடபகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்களின் முறைப்பாடுகளும், வாக்குமூலங்களும் தமிழ் மொழியில் பதிவு செய்யுமாறு வடமாகாண பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயாரில் பயணித்தோரை அடையாளம் காண ஏற்பாடு 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதனால், 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து உயரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் யாழ். விளையாட்டரங்குக்கு வருகை தந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.கனடாவில் இரவு நேரத்தில் அதிர வைத்த சத்தங்களால் பரபரப்புகனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வானிலிருந்து சவூதியில் விழுந்த மனித உடற்பாகங்களால் பரபரப்பு சவூதி அரேபிய தலைநகர் ஜித்தாவில் மனித உடற்பாகங்கள் வானிலிருந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விமானம் ஒன்றின் சக்கரங்கள் இருக்கம் பாகத்தில் சிக்கிய ஒருவரது உடல் பாகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். செங்கடல் நகரான ஜித்தாவின் முஷ்ரபா பகுதியில் உடல் பாகங்கள் இருப்பதாக நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இந்த உடல் எச்சங்களை ஆய்வு செய்த பொலிஸார், இவை விமானத்தின் சக்கரங்கள் இருக்கும் பாகத்திலிருந்து விழுந்தவை என அனுமானித்துள்ளனர். சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயற்சிப்போர் விமானங்களின் சக்கரங்கள் இருக்கும் பாகத்தில் ஒளிந்து பயணிப்பது வழக்கமாக இடம்பெறும் முறையாகும். இவ்வாறு பயணிக்கும் பெரும்பாலா னவர்கள் வானில் உயரப்பறக்கும் போது குளிரில் உரைந்து மரணிக்கின்றனர். அதிர்ஷ்டவசமான ஒரு சிலர் உயிர் தப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010ஆம்ஆண்டில் ஜோர்தானிலிருந்து வந்த விமானம் ஒன்றின் சக்கரம் இருக்கும் பாகத்தில் ஒளிந்து பயணிக்க முயன்ற ஒருவரின் உடலை சவூதி விமான நிலையத்தில் வைத்து பராமரிப்பாளர்களால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரான பிரசாரப் போரில் தமிழ் பிரபாகரனும் சிற்சபேசனும் (எம்.எஸ்.எம். ஐயூப்)எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் கூடவிருப்பதோடு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தாவிட்டால் அக்கூட்டத்தின் போது தாம் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரம் நவநீதம்பிள்ளையும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரனும் கூறியிருக்கின்றனர். இந்த நிலைவயில் இலங்கை அரசாங்கத்திற்கும் பல தமிழ் தரப்பினர்களுக்கும் இடையே இந்த மனித உரிமை பேரவையின் கூட்டத்தை குறிக்கோளாகக் கொண்ட பிரசாரப் போரொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வந்து விஸா நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனினதும் அதன் பின்னர் இலங்கைக்கு வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனினதும் இலங்கை பயணங்களும்; இந்தப் பிரசார போரின் அங்கங்களாகவே தெரிகின்றன. (மேலும்......) ஒற்றையாட்சி முறையை மாற்ற வேண்டும் - சி.வி புதிய அரசியலமைப்பினூடாக ஒற்றையாட்சி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (05) தெரிவித்தார். 'ஒரே நாடு, ஒரே மக்கள்... என்று மேடைக்கு மேடை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. இலங்கை வெவ்வேறு பின்புலங்கள் கொண்ட மக்களைக் கொண்ட நாடாகும்' என்று கூறினார். 'இது சிங்கள பௌத்த நாடு என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் அல்ல. தமிழர்கள் இலங்கை நாட்டின் பெரும்பான்மையினராக வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. இந்த வரலாறு தற்போது மாற்றியமைக்கப்பட்டு இலங்கையிலுள்ள ஒவ்வொரு அரச மரமும் சங்கமித்த நட்ட மரம், இராவணன் சிங்கள மன்னன் என்று வரலாறு தவறாக மாற்றப்பட்டு வருகின்றது' என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 'சிங்கள மொழி கிறிஸ்துவுக்கு பின்னரே புழக்கத்திற்கு வந்தது. ஆனால் இராவணன் அதற்கு முந்திய புராணங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்தவர். நேரடியாக இங்கு வரலாறு மாற்றியமைக்கப்படுகின்றது. இந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு எதிர்கால சிறுவர் சிறுமியரிடம் தவறாக கூறப்படுகின்றது. இதனால் பிழையான வரலாற்றினையே மாணவ, மாணவிகள் கற்கின்றனர். இதனால் இனக்கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டார். (மேலும்......) அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள பல பிரதேசங்களில் வரலாறு காணாத வெப்பநிலை வீழ்ச்சியால் வட துருவத்திலுள்ளதையொத்த உறையவைக்கும் குளிர் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவையும் வட கிழக்கு அமெரிக்காவையும் ஏற்கனவே தாக்கிய பனிப்புயல் காரணமாக பல அடிக்கும் அதிகமான உயரத்துக்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்நிலையில் மக்களை வீடுகளில் தங்கியிருக்க, அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள் வீதிகளை மூடியுள்ள பனியை தொடர்ச்சியாக அகற்ற பணியாளர்களைக் கோரியுள்ளனர். அமெரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியத்திலிருந்து மத்திய அத்திலாந்திக் பிராந்தியம் வரை கடந்த பல வருடங்களில் சந்தித்திராத மோசமான வெப்பநிலை வீழ்ச்சி நிலவுவதாக அமெரிக்க தேசிய காலநிலை சேவைகள் நிலையம் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் வட - கிழக்கு பிராந்தியங்களில் பனிப்புயலால் வீதிகளை மூடியுள்ள பனியை அகற்றுவதில் பிரதேசவாசிகள் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூ ஜெர்ஸியில் கடந்த இரு தசாப்த காலங்களில் இல்லாத மோசமான குளிர்காலநிலை நிலவுவதாக கூறப்படுகிறது. கனடாவின் ரொரன்டோ பிராந்தியத்தில் ௨௯ பாகை செல்சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் கியூபெக் நகரில் ௩௮ பாகை செல்சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் நிலவுகிறது. இது அப்பிராந்தியங்கள் கடந்த இரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலத்தில் எதிர்கொண்டிராத மிகத் தாழ்ந்த வெப்பநிலையாகும். ஒன்டாரியோவில் கடும் பனிப்பொழிவு அபாயம் தொடர்ந்து நிலவுவதாக கனேடிய சுற்றுச் சூழல் நிலையம் விசேட எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. க.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தில் கிழக்கு மாகாணம் அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரம் 2013 பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் நிலைக்கு அடைந்துள்ளதுள்ளது. இம்முடிவை அடைந்து கொள்வதற்காக உழைத்த மாகாணக் கல்விப் பணிப் பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையிலான கல்விப் பணிப்பாளர்களுக்கு தாம் விசேட நன்றியறிதலை தெரிவிப்பதாகவும் அவர் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார். இம்முறை வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முதலாம் இடத்தினை சப்ரகமுவ மாகாணமும், மூன்றாம் இடத்தினை கிழக்கு மாகாணமும் தேசிய அளவில் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் ஏழாம் இடம் அல்லது எட்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கிழக்கு மாகாணம் இம்முறை மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமையானது பெரும் சாதனையாகும். ஏனெனில் வளம் குறைந்த கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்த ஏனை மாகாணங்களை பின்தள்ளியுள்ளது. எனது முயற்சிக்கு ஒத்துழைத்த சகல பாடசாலை அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் நன்றிக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார். இலங்கையின்வடக்கு - கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு, அனர்த்த எச்சரிக்கைஇந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்குக் கடலில் உருவான கொந்தளிப்பு நிலைமையை அடுத்து நாட் டின் வடக்கு கிழக்கு பகுதிகளின் நான்கு மாவட்டங்களில் நேற்றைய தினம் முழுவதும் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியதுடன் கரையோரப் பகுதிகளில் பரபரப்பான நிலைமை காணப்பட்டது. அத்துடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்கள் கடற்கரையிலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு நேற்றைய தினம் அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்றைய தினம் முழுவதும் கடலை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் உள்ள தமது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர். அத்துடன் மீனவர்கள் எவரும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண் டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக முல்லைதீவு,கிளி நொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அச்சத்துடன் கூடிய பதற்ற நிலைமையொன்று நேற்று நிலவியது. இந்த பகுதிகளில் நேற்றைய தினம் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தமையின் காரணமாக பரபரப்பான நிலைமை காணப்பட்டது. வெற்று வார்த்தைகளைப் பேசிப் பேசி மக்களை கூட்டமைப்பு ஏமாற்ற முடியாதுதென் பகுதியின் அர சியல் நிலைமையைப் பார்க்கும் போது, பதி னெட்டாவது திறத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் இந் நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களே தெரிவு செய்யப்படுவார். இதனை விடுத்து ஜெயசிக்குறுவை நடாத்திய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்தவரும், வாத்து சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ தெரிவாகும் சூழ்நிலை இல்லை. இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகளாக நின்று அஞ்சலிக் கூட்டம் நடாத்தியுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக கூறுகின்றார். இணைக்க அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். இல்லை இதற்கு அனுமதிக்க முடியாதென கூட்டமைப்புக்குள் சிலர் முரண்டு பிடிக்கின்றனர். இவ்வாறான பல உதாரணங்களைக் காண்பிக்க முடியும். (மேலும்......) ஈராக்கில் அல் கொய்தாவுடன் மோதல்; உதவிக்கு முன்வந்தது அமெரிக்காஈராக்கின் பிரதான நகரான பலுஜாவை அல் கொய்தா ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், ஈராக்கிற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமெரிக்க இரா ஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி அறிவித்துள் ளார். ஆனால் ஈராக்கிற்கு மீண்டும் அமெரிக்க துருப்புகள் அனுப்பப்பட மாட்டாது என அவர் உறுதி அளித்தார். ஆயுததாரிகளை ஈராக் பிரதமர் நூரி மலிகி அரசு முறியடிக்கும் என ஜோன் கெர்ரி நம்பிக்கை தெரிவித்தார். ஈராக் தலைநகர் பக்தாத்திலிருந்து மேற்காக இருக்கும் பலுஜா நகரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ஈராக் அரசு உறுதி செய்துள்ளது. பலுஜா நகரின் தென் பகுதி அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள்காட்டி பி. பி. சி. செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று பலுஜாவின் எஞ்சிய பகுதிகளை அல் கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் பழங்குடியினர் கைப்பற்றியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஈராக்கின் ஷியா பெரும்பான்மை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த சுன்னி முஸ்லிம்களின் ரமதின் நகர ஆர்ப் பாட்ட முகாமை படையினர் கடந்த வாரம் அகற்றியதையடுத்தே மோதல் வெடித்துள்ளது. ஷியா அரசு தம்மை மோசமாக நடத்துவதாக ஈராக் சுன்னி முஸ்லிம்கள் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டின் சிறுபான்மையினர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இலக்காக்கப்படுவதாகவும் சுன்னி முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். அல் கொய்தா குழுவுக்கு சரணடைய சிரிய கிளர்ச்சியாளர்கள் கெடுசிரிய அரசுக்கு எதிராக போராடும் பலம்வாய்ந்த அல் கொய்தா ஆயுதக் குழுவுக்கு, சரணடைய ஏனைய கிளர்ச்சியாளர்கள் காலக்கெடு விதித்துள்ளனர். சிரியாவின் அலப்போ நகரில் இருக்கும் அல் கொய்தா குழுவான ஈராக் மற்றும் பிராந்தியத்தின் இஸ்லாமிய தேசம் (ஐ. எஸ். ஐ. எஸ்) ஆயுதப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் அரச படையினரிடம் விட்டுவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராடும் ஏனைய கிளர்ச்சி குழுக்கள் கெடு விதித்துள்ளன. அல் கொய்தா குழுவினர் அலப்போ மற்றும் இத்லிப் நகரங்களில் கிளர்ச்சியாளர்களின் கூட்டணி ஒன்றுடனான மோதல்களில் பின்னடைவை சத்தித்துள்ளது. அல்கொய்தா குழு தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரவாத போக்குடன் ஆட்சி நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. எனினும் அல்கொய்தா குழுவின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்டிருக்கும் ஒலிநாடா தகவலில், ஏனைய கிளர்ச்சிக் குழுக்கள் பிடித்து வைத்திருக்கும் தமது கைதிகளை உடன் விடுவிக்குமாறும் சோதனைச் சாவடிகளை அகற்றிக் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். தவிர மேற்குலகின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான சிரிய சுயாதீனப்படையும் அல் கொய்தா மீது தாக்குதல் தொடுத்துள்ளது. தமது போராட்டத்தை அல் கொய்தா குழு திசை திருப்பப் பார்ப்பதாக ஏனைய கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டிடெல்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி ஆலோசிக்க டெல்லியில் நேற்று முன்தினம் (04) ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுவது என்பது பற்றி நிர்வாகிகள் விவாதித்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக எவ்வளவு தொகுதிகளில் போட்டியிட முடியுமோ, அவ்வளவு தொகுதிகளில் போட்டியிட கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குறைந்த பட்சம் 300 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி தயாராகி வருகிறது. ஆம் ஆத்மியின் முதல் வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் திகதி முதல் 20ம் திகதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெப்ரவரி மாதம் 2வது வாரத்துக்குள் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு விடுவார்கள். பெப்ரவரி 3வது வாரம் முதல் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இந்தியத் தூதர் தேவயானியை சோதனை செய்வது போன்ற வீடியோ காட்சி பொய்யானது - அமெரிக்காஇந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே நியுயோர்க்கில் கைது செய்யப்பட்ட பிறகு அவரது ஆடைகளைக் களைந்து பொலிஸார் சோதனை செய்வது போல சமூக இணையத்தளங்களில் தற்போது காடப்பட்டு வரும் சி.சி.டி.வி பதிவுகள் போலியானவை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் ஆபத்தானதாகவும், ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது தேவயானி கிடையாது. எனவே, இதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வீடியோ காட்சிகளில் உள்ள நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் சில சமூக இணையத்தளங்கள் அதை ஒளிபரப்பி வருகின்றன. பொறுப்பற்ற முறையில் உருவாக்கப்பட்ட அந்த ஆபத்தான வீடியோ தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பணிப் பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய துணைத் தூதர் தேவயானி கோபரகடேவை அமெரிக்க பொலிஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அப்போது அவரது ஆடைகளைக் களைந்து, பொலிஸார் சோதனை செய்ததாகவும் குற்றவாளிகளுடன் அவரை காவலில் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 05, 2014 யுத்தத்தை நிறுத்த பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை - ப.சிதம்பரம் 'இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 'இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். (மேலும்......)
“சிங்கள அரசிடம் சிக்கிச் சீரழியும் இலங்கைத்
தமிழர்” என்கிற சித்திரம் நன்கு விலைபோகிறது நமது தலைவர்களும் சில கதைகளும்...! (2) (எஸ்.ஹமீத்) கதை-2 நமது தலைவர் இளைஞனாக இருந்த நேரமது. ஓட்டாண்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவர், ஒரு நாள் களவாய்க் கள்ளிறக்கும் ஆசையில் பனை மரம் ஏறும் போது வழுக்கி, சறுக்கிப் பிடரி அடிபடக் கீழே விழுந்தார். சுய நினைவற்றுக் கிடந்தவரைச் சில புண்ணியவான்கள் பெரிய வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு செய்கைவழி மருத்துவம் கற்பிக்கும் போதனா வைத்தியசாலை அது. பிடரியில் அடிபட்டவரின் மூளை எவ்விதம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது என்பது பற்றிப் பெரிய மருத்துவர் மாணவர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். தனது விரிவுரைக்கு ஆதாரமாக சில மிருகங்களின் மூளைகளையும் அவர் காண்பித்துக் கொண்டிருந்தார். மூளைச் சத்திர சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டிற்கு வந்தவர் யாரும் எதிர்பாராத விதமாக அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துத் தலைவரானார்; தேர்தலில் வென்று எம்.பி.யானார்; பின்னர் அமைச்சருமாகிவிட்டார். (மேலும்......) பேராசிரியர் க.கைலாசபதி நினைவுச் சொற்பொழிவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரும் மார்க்கிய வழி இலக்கியத் திறனாய்வு முன்னோடியுமான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மறைவின் 31ஆவது ஆண்டு நினைவாக நினைவுப் பேருரை 'இனத்துவ அரசியலும் சமூக முரண்பாடுகளும்' உரை நிகழ்த்துபவர்: திரு.எம்.வாமதேவன் (தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர்) தலைமை: கே.சண்முகலிங்கம் காலம்: 2014 தை (ஜனவரி) 05, ஞாயிற்றுக்கிழமை – பிற்பகல் 4 -30 மணி இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம் 58 தர்மராம வீதி – கொழும்பு – 06 (இலங்கை) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் kailashpath@yahoo.com கைதாகியோ, வீட்டுக்காவலிலோ நான் வைக்கப்படவில்லை பொலிஸாரோ அல்லது வேறு எந்த பாதுகாப்புப் பிரிவினரோ தம்மை வீட்டுக்காவலில் வைக்கவில்லையெனவும் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளை தாம் முற்றாக நிராகரிப்பதாவும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய எம்.பி. ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். தவறான பிரசாரங்கள் இணையத் தளங்கள் மூலம் சர்வதேசமெங்கும் பரப்பப்பட்டபோது இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ள அவர்; தாம் கனடாவிலிருந்து புறப்படும் போதே அந்நாட்டின் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தொடர் பில் தமக்கு அறிவுறுத்திய தாகவும் தாம் அதற் கிணங்கவே செயற் பட்டதாகவும் குறிப்பிட் டுள்ளார். நேற்று முன்தினம் முல்லைத்தீவில் குடிவரவு குடியல்வு புலனாய்வு அதிகாரிகளிடம் கனடா எம்.பி. ராதிகா சிற்சபேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டே இலங்கைக்கு வந்துள்ளேன். இதன்போது வடக்கிற்குச் சென்றேன். ராதிகா சிற்சபேசன் எம்.பி. வடக்கில் பல பிரதேசங்களுக்கும் சென்று பல வழிபாட்டுத் தலங்களையும் தரிசித்துள்ளார். அவர் தொடர்பில் தவறான செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளியானதையடுத்து அவர் தனிப்பட்ட ரீதியில் சிலரை சந்தித்துக் கலந்துரையாடவிருந்த நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்பட்டன. மாலை வேளையில் பங்களாவில் கூடும் மாகாணசபை TNA பிரமுகர்கள்?கூட்டமைப்பின் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களிற்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையே காணப் பட்ட தேவையற்ற சில முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. பெரும்பாலான வடமாகாண சபை அமைச்சர்களும் மாகா ணசபையின் கூட்டமைப்பு அங்கத்த வர்களும் மாலை வேளைகளில் ஆளுநர் பங்களாவிற்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. வடமாகாண சபையானது கடந்த மூன்று மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண நிறைவேற்று அதிகாரிகளும் வடமாகாண சபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறான ஒத்துழைப்புகள் மாகாண சபையுடனும் மத்திய அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். அத்துடன் ஒரு சிலர் தவிர்ந்த அனைவரும் தற்போது தன்னுடன் ஒத்துழைத்து மாகாணசபையின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஆளுநரும், வடமாகாண சபை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து செயற்பட்டால்தான் மக்களுக்கு நன்மை. இவ்விடயத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீட்டால் 13 ஆவது திருத்தம் இன்னுமுள்ளது' இலங்கை அரசியமைப்பிலிருந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களை நேற்று சனிக்கிழமை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான நிலைமையில், தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் பற்றியும் சம்பந்தன் விளக்கமளித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(பிபிசி) ஜனவரி 04, 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் இந்தியாவின் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் கட்சி தெரிவு செய்யும் புதிய பிர தமரிடம் நான் பொறுப்புக் களை ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்று இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் புது டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது அறிவித்தார். இளைய தலைமுறை தலைவர்கள் இந்தியாவை வழிநடத்தக் கூடிய திறமை படைத்தவர்கள் என்பதில் நான் அசை யாத நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்த டாக்டர் மன்மோகன் சிங், பிரதமர் பதவி வகிக்க ராகுல் காந்திக்கு அனைத்துவித தகுதிகளும் இருக்கின்றன. கடந்த ஒன்பது வருட காலத்தில் ஒருபோதும் கட்சி நான் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்த வில்லை என்று கூறினார். விலைவாசி உயர்வே ஆளும் கட்சி சமீபத்தில் அடைந்த தேர்தல் தோல்விகளுக்கு காரணம் என்று தெரிவித்த இந்திய பிரதம மந்திரி பல மக்களின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் பாரத மாதாவுக்கு பேராபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். இரட்டை பிரஜாவுரிமைe.documenting முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்இரட்டை பிரஜா உரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந் தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் வீஸா வழங்கும் ஆகிய நட வடிக்கைகளை இலத்திரனியல் ஆவணப்படுத்தல் e.documenting முறைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை பெறவும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புப் பதிவு மற்றும் வீஸா பெறவும் குடிவரவு குடியல்வு திணைக்களத்துக்கு பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்து வரு கின்றன. வீஸா மற்றும் இரட்டைப் பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கையை இலகுபடுத்தவும் முகாமைத்துவம் செய்யவும் என இலத்திரனியல் ஆவணப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு மேல் மற்றும் தென் மாகாண சபைகளை அடுத்தவாரம் கலைத்து அவற்றுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இரு மாகாண சபைக ளுக்குமான தேர்தல் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் இரு மாகாணசபைகளும் கலைக்கப்படும். தெற்கு மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. இம்மாகாணங்களில் நடந்துள்ள அபிவிருத்திகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தன என்றார். கனேடிய எம்.பி. ராதிகாவின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லைஇலங்கை வந்திருந்த கனடா பாராளு மன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாது. அவர் தெளி வான நிகழ்ச்சிநிரல் ஒன்றுடனேயே இங்கு வந்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக் கும் ஊடகவியலாளர் மாநாட்டில், கனடா எம்.பியின் இலங்கை விஜயம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாம் விரும்பியிருந்தால் அவரின் இலங்கை விஜயத்தைத் தடுத்திருக்க முடியும். தேசிய பாதுகாப்புக்காக ஏதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட் டிருக்கலாம். அவ்வாறு நடக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் அவரின் நடமாட்டங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு சுதந்திரமாக எங்கும் சென்றுவர இடமளிக்கப்பட்டது. எந்த இடையூறும் செய்யப்படவில்லை. கனடா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் எதுவித அடிப்படையும் அற்றவை. அவற்றை ஏற்கமுடியாது என்றார். காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பம்யுத்தகாலத்தில் காணாமல் போனவர்கள் தொடர் பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு புது வருடத்தில் தனது பணிகளை ஆரம்பித்தது. 9/8, சுரநிமல பிளேஸ், கொழும்பு 6 என்ற விலாசத் தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத் தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி மக்செல் பராக்கிரம பரணகம, தேசியக் கொடியை ஏற்றிவைத்ததுடன் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார். அங்கு உரையாற்றிய ஆணைக் குழுவின் தலைவர், விசாரணைகள் பூர்த்தியடைந் ததும் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். 30 வருட யுத்த காலத்தில் 11,000 சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர் காணாமல் போயுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கிலிருந்து பல முறைப் பாடுகளைப் பெற்றுள்ளோம். ஜனவரி 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் அமர்வுகள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறவுள்ளது என்றும் அவர் கூறினார். புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரியந்தி சுரஞ்சனா வித்யாரட்ன மற்றும் மனோஹரி ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தேர்வுசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து 140 நாடுகளில் இருந்து 20,000 இந்தியர்கள் உட்பட சுமார் 2 இலட்சம் பேர் விண்ணப்பித் தனர். இவற்றில் 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். நல்ல உடல் நலம், மன உறுதியுடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது. அங்கேயே மக்கள் வாழத்தகுந்த குடியிருப்புகள் உருவாக்கப் பட்டு தங்கவைக்கப்படுவர் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தப் பயணம் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 03, 2014 Canadian MP Rathika in hot water over Jaffna episode(by Shamindra Ferdinando) Jaffna born Canadian MP Rathika Sitsabaiesan is likely to face disciplinary action back at home for falsely claiming that she had been placed under house arrest in northern Sri Lanka. Canada based sources told The Island that the New Democratic Party (NDP) MP had caused chaos while being on a private visit to Jaffna. NDP leader Thomas Mulcair went to the extent of phoning Sri Lanka’s High Commissioner in Ottawa Chitranganee Wagiswara to inquire about Sitsabaiesan’s safety and security. Immigration authorities yesterday told the visiting MP as she was here on a tourist visa she shouldn’t engage in unnecessary activities. She had told them that she would be leaving the country on January 3. (more....) The Editor Toronto Star Dear Editor, News report stating that MP Rathika Sitsabaesan is under house arrest in Sri Lanka I refer to the news report carried on page A2 of today’s edition stating that Ms. Rathika Sitsabaesan, MP for Scarborough-Rouge River is being held under house arrest in Sri Lanka. Your report cites one Thasan Ganeshalingam who is said to be the President of the NDP’s Riding Association as the source for the story based on his not having received a response to a text message sent by him to the MP who is currently visiting Sri Lanka. Contrary to your report, I understand that the MP concerned is freely moving about in the Jaffna peninsula meeting with members of the Tamil National Alliance which is the proxy party of the Tamil Tigers, who subscribed to the position that the proscribed Liberation Tigers of Tamil Eelam (LTTE) was the sole representative of the Tamils of Sri Lanka. It is regrettable that such publicity is given to unverified news reports in your columns. It is also shocking to find that Canada’s Minister of Foreign Affairs rushes to act on an unverified news report, merely to vituperate Sri Lanka based on his misguided views aimed at wooing the votes of Tamils in the GTA who funded the 30 year terrorist violence of the Tamil Tigers in Sri Lanka from Canada. Ms. Rathika Sitsabarsan, MP, has travelled to Sri Lanka as a tourist when she is an elected representative who is required under normal protocol to notify Sri Lanka’s High Commission in Canada about her need to visit the country. She apparently decided to conceal her visit from the Sri Lankan authorities but same came to light when the local media caught up with her meddlesome activities. Furthermore, her association with the banned terrorist group as displayed in her facebook boldly standing beside the Tamil Tiger flag and hostile actions both in and outside the House of Commons would naturally cause the host country to take note of her secretive visit to that country. (January 1, 2014) Yours sincerely, Mahinda Gunasekera, 84 Tambrook Drive, Agincourt, Ontario, M1W 3L9 Tel. (416) 498-0783 ஜனாதிபதியுடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார். நேற்று பகல் வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்த போது பிறந்திருக்கும் 2014 புதுவருடத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். வடமாகாண நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிய முதலமைச்சர் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வடமாகாண சபையின் நிர்வாகம் தொடர்பாகவும் பேசியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே நடைபெற்ற இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, அமைச்சரவையின் செயலர் சுமித் அபேசிங்க, நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழ்மொழி அமுலாக்கல் முயற்சிகள் வெற்றிபெறாமையால் மனவேதனை : அமைச்சர் வாசு ஆனையிறவு புகையிரத நிலையப் பெயரை மாற்றி சிங்களப் பெயர் வைப்பது மொழி உரிமையை மீறும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ் மொழி அமுலாக்கலை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கின்றேன். ஆனால், எதுவுமே வெற்றிபெறவில்லை. இதனால் மனவேதனையுடனேயே உள்ளேன் என்றும் அமைச்சர் தனது மனக் குமுறலையும் வெளிட்டார். வெள்ளவத்தை தமிழ் சங்கம் அமைந்துள்ள வீதியின் பெயரை தமிழ் சங்க வீதியென பெயரிடுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட்டன. பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசினேன். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பேசினேன். அவரும் இப்பெயர் பலகையை நிறுவுவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு அறிவித்தார். அவர் மாகாண செயலாளருக்கும் அறிவித்தார். ஆனால், இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை தமது தீர்மானத்தை தனக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால், இன்றுவரை நான் எடுத்த எந்த முயற்சியும் நிறைவேறவில்லை. இது சிறியதொரு விடயம். ஆனால், ஏன் இவ்வளவு இழுபட்டு செல்கின்றது என்பது புரியவில்லை. மீண்டும் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். முயற்சியை கைவிடமாட்டேன். ஆனால், தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கின்றேன். எதுவுமே நிறைவேறுவதில்லை. இதனால் மனவேதனையுடன்தான் இருக்கின்றேன். என்ன செய்வது? ஆனால், எனது முயற்சியை கைவிடப்போவதில்லை. முல்லைத்தீவுக்கு கனேடிய எம்.பி. ராதிகா விஜயம் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன், அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விஜயத்தை டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்திருந்தார். நமது தலைவர்களும் சில கதைகளும்...! (எஸ்.ஹமீத்) கதை-1 ஒரு நாள் நமது தலைவருக்குக் காட்டு உலா போகும் ஆசை ஏற்பட்டது. குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் காட்டில் முகாமிட்டு, காட்டு வளங்களைக் கண்டு இரசிக்க வேண்டுமென்று தீர்மானித்துத் தனது தொண்டர்களிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்ட தொண்டர்கள் தம்மோடு ஒரு கழுதையையும் கூட அழைத்துச் சென்றனர். (மேலும்......) ஜனவரி 02, 2014 என் மனவலையிலிருந்து..... வடமாகாண சபை செயற்படவேண்டும் (சாகரன்) வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆணையை வழங்கி அவர்களை அரியாசனம் ஏற்றிவிட்டனர். அதுவும் மிகவும் அமோக வெற்றியைக் கொடுத்து திக்குமுக்காட வைத்து விட்டனர். பல குழப்பங்களின் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமது அமைச்சர் அவையை துறை சார்ந்த விற்பனர்களை அமைச்சர்கள் ஆக்கி உருவாக்கியது. அரியாசனம் ஏறியதும் முதலில் இவர்கள் முன்வைத்த கோஷம் ஆளுனரை மாற்ற வேண்டும் என்பதே. அதாவது சிவில் சேவை உத்தியோகத்தர் ஒருவரை ஆளுனராக நியமிக்கவேண்டும் என்றனர். இதற்கு மத்தியில் ஆளும் தரப்பு அமைச்சர் அவை உறுப்பினர் சிலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சிலரும், மாகாண சபை அமைச்சர்கள் சிலரும் இலங்கை அரசின் ஆளுனர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்க மாட்டோம் என்று சவால்களை விட்டும் இதனையும் நிறைவேற்றியும் காட்டினர். ஆனால் இலங்கை அரசியல் யாப்பிற்கு விசுவாசம் தெரிவித்து சத்தியப்பிரமாணம் எடுத்து பதவிகளை மட்டும் காப்பாற்றிக் கொண்டனர். இந்த நாற்காலிகளில் கிடைக்கும் சுகங்களை அவர்கள் இழக்க விரும்பவில்லை. மேலும், இதற்கு ஒரு படிமேலே சென்று சில வட மாகாண சபை அமைச்சர்கள் இலங்கை கொடியை ஏற்றமாட்டோம் என்றெல்லாம் சாவால் விட்டனர். இவை எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையைக் காணக் கூடியதாக இருந்தது. மக்களை உசுப்பேத்துவதில் இவர்கள் கடந்த 80 வருட தமிழ் பிற்போக்கு தலமைகளுக்கு நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதுதான் அது. கூடவே பதவிகளை இழக்காமல் இருக்க இலங்கையின் அரசியல் யாப்பை அனுசரித்து நடந்து தமது பதவிகளை காத்துக் கொண்டனர். அரசியல் போராட்டம் என்பது என்ன என்பதை இவர்கள் எப்போதும் உணரந்ததாக அறிய முடியவில்லை. ஒரு அரசுக்கும் அரசியல் கட்சிக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன, அரசியல் போராட்டங்களை இந்த வேறுபாடுகளின் அடிப்படையில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி மகாண சபை மட்டத்தில் மட்டும் அல்ல மத்திய அரசு மட்டத்து எம்பி மட்டத்திலும் இவரகள் அறிந்திருப்பதாக அறிய முடியவில்லை. சரியோ, பிழையோ விருப்பமோ, விரும்பம் இல்லையோ இன்று வட மாகாணத்தின் முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் என்பதுவும், அவர்களால் உருவாக்கப்பட்டதுமே எங்கள் மகாண அரசு. இதன் செயற்பாட்டை விமர்சிக்கும் உரிமை சமானிய மக்களுக்கு உண்டு. ஆனால் இந்த அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்டதால் வடமாகாணத்தின் அரசு இதுதான் என்பதை யாவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் ஆட்சியில் அமர்ந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரையும் எந்த ஒரு சிறு கல்லையும் இவர்களால் தூக்கிப் போட்டதாக அறிய முடியவில்லை. அது துறை சார்ந்த அமைச்சர்களாக் இருக்கலாம் அல்லது சாதாரண உறுப்பினர்களாக இருக்கலாம். தேர்தல் வெற்றிகளுக்கு முன்பே இவர்கள் எதிர்காலத்தில் ஆட்சி அமைத்தால் எப்படி செயற்படுவார்கள் என்று பல அரசியல் விமர்சகர்கள் கோடு காட்டியிருந்தனர். இதனையே இன்று இவர்கள் நிறுவி நிற்கின்றனர். தங்கள் செயற்பாட்டை இலங்கை அரசு முற்று முழுதாக தடை செய்கின்றது என்பதை எவ்வளவு நாட்களுக்குத்தான் இவர்களால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். இலங்கை அரசு ஒரே வீச்சில் வடக்கு மாகாணத்தின் செயற்பாட்டை ஆதரிக்காவிட்டாலும் இதே போல் முழுவதுமாக தடைசெய்ய முடியாது என்பதை சட்டம் புரிந்தவர்களும் சம்பிரதாயம் புரிந்தவர்களும் அரசியல் புரிந்தவர்களும் ஏற்றுக் கொள்வர். வடமாகாண சபையை செயற்படக் கூடிய வட்டத்திற்குள்ளாவது உங்கள் செயற்பாட்டை தொடங்கவேண்டும் என்பதே சமான்ய மக்களின் புத்தாண்டு வேண்டுகோளாக இருக்கின்றது. இலங்கை அரசைத் தவிர ஏனைய சர்வ உலகமும், ஏனைய சக்திகளும் உங்களுக்கு ஆதரவாக இருக்கையில் முன்னோக்கி நகர்வதில் பிரச்சனை என்ன.....? யான் அறிந்தவரை பிரச்சனை உங்களுக்குள்ளேயே இருக்கின்றது என்பதுதான். (ஜனவரி 02, 2014) பள்ளிவாசலைத் தாக்கிப் புதுவருடம் கொண்டாடிய பேரினவாதம்! (எஸ். ஹமீத்) இலங்கையின் கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய என்ற ஊரிலுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் என்ற பள்ளிவாசலை, 2014ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்கள் முன்பு பேரினவாதக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. கடந்த 31ம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட பள்ளிவாசலின் ஜன்னல்களுக்குக் கல்லெறிந்து அவற்றைச் சேதப்படுத்தியதோடு, கதவை உடைத்து, பள்ளிவாசலினுட் புகுந்து இந்த இனத் துவேஷ காடையர் கூட்டம் வெறியாட்டம் ஆடியிருக்கிறது. (மேலும்......) ராதிகாவிடம் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய நாடளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந்தவர் ராதிகா. ஆனால் இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புலித் தீவிரவாத ஆதரவுப் பிரிவினருடன் நெருக்கமாக அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டது இலங்கை அரசின் விசாரணைகளுக்கு காரணியாக அமைந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் புலம் பெயர் தேசத்து புலி ஆதரவு ஊடகங்கள் இவரை இலங்கை அரசு கைது செய்தாக செய்திகளை உலாவ விட்டிருக்கின்றன என அறிய முடிகின்றது. புல்மோட்டை, கொக்கிளாய் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுபுல்மோட்டை கொக்கிளாய் களப்பில் மீனவர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தடை செய்யப்பட்ட மீன்படி உபகரணங்களை பாவிக்காது பாரம்பரியமாக கையாளப்படும் உபகரணங்களையே மீனவர்கள் கையாள வேண்டுமென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார். இம் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை உறுப் பினர் அன்வர் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்துப் பேசிய போதே கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த உறுதி மொழிகளை வழங்கியுள்ளார். யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் புல்மோட்டை, கொக்குளாய் சிறுகடல் பரப்பில் வசிக்கும் மூவின மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தமது அன்றாட பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.ஆயினும் புல்மோட்டை பிரதேச மீனவர்கள் எல்லை கடந்து வேறு பிரதேசத்திற்குள் பிரவேசித்து கடற்றொழில் மேற்கொள் வதாலேயே பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. அதன் காரணமாகவே முறைப்பாட்டின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாகவும் கூறினார். உலகின் முதல் இயந்திரம் மீளத் தயாரிப்புஉலகில் முதல் இயந்திரம் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் 800 ஆண்டுகளுக்கு முன்னைய அரபு மொழி புத்தகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் 174 இயந்திரங்களை தயாரிப்பது தொடர்பான 1206 வரைபடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த வரைபடங்களை பயன்படுத்தி வரலாற்றியலாளர் பேர்ட் ஹோல் கைகழுவும் இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக தயாரித்துள்ளார். தண்ணீரின் சக்தியை கொண்டு இயங்கும் இந்த இயந்திரம் கை கழுவ உதவுவதோடு அதன் பின்னர் கை துடைப்பதற்கான துண்டையும் எடுத்து தருகிறது. ஈராக் நாட்டைச் சேர்ந்த அல் ஜஸரி என்ற கண்டுபிடிப்பாளரால் இந்த இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பல்கலை வல்லுநரான இவர் இஸ்லாமிய பொற்காலத்தில் வாழ்ந்துள்ளார். இவர் இயந்திரப் பொறியியலாளராகவும் கணிதவியலாளராகவும் வடிவமைப்பாளராக வும் நீரோட்டத்தின் சக்தியை கொண்டு பல்வேறு இயந்திரங்களையும் வடிவமைத் துள்ளார். இந்த இயந்திரங்கள் அனைத்தும் 13 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட் டுள்ளன. இதில் அவர் எழுதிய இயந்திரம் தொடர்பான புத்தகமும் உள்ளடங்குகிறது. ஜனவரி 01, 2014 அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
கனேடிய எம்.பியான ராதிகா 'வீட்டுக்காவலில்' - இலங்கை மறுப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் தெரிவித்துள்ளது. அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்விதமான அதிகாரங்களும் இல்லை என்று யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கமலேந்திரன் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும்
எதிர்வரும் ஜனவரி 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான்
உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெVசன் கொலை விவகாரம்
தொடர்பில் கமலேந்திரன், றெசனின் மனைவி மற்றும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு
கடந்த 17ம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை நேற்று
31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில்
ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.எம்.ஆர்.மகேந்திரராஜா முன்னிலையில் அவர்களை நேற்று
ஆஜர்படுத்திய மூவரையும் எதிர்வரும் ஜனவரி 09 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |