Contact us at: sooddram@gmail.com

 

மாசி 2014 மாதப் பதிவுகள்

பெப்ரவரி 28, 2014

ராஜீவ் கொலை

நால்வரை விடுவிக்க இடைக்கால தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜீவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகத்தான் அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அப்போது எஞ்சிய 4 பேர் விடுதலைக்கும் மத்திய அரசு சார்பில் தடை கோரப்பட்டது. அதற்கு தனியே மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நளினி உட்பட 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.

தேசத்தின் மகுடத்தில் நாட்டியம் ஆடும் முன்னாள் புலிகள்!

குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சியில் ஆண்களும், பெண்களுமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்டார்கள். புனர்வாழ்வு பெற்று சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் கடமையாற்றுகின்ற முன்னாள் புலிகள் நடன கலைஞர்கள் குழு ஒன்றை வைத்திருக்கின்றனர். தேசத்தின் மகுடத்தில் நடனம் ஆடுகின்றமைக்கு இக்குழுவினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படைப் பிரிவும், ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இதற்கான களத்தை அமைத்துக் கொடுத்து உள்ளன. இவர்களின் திறமைகளை உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளிலும் வெளிப்படுத்த ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் நந்தன விஜேசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

பெப்ரவரி 27, 2014

'ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வை அடிப்படையாகக் கொண்டு காய் நகர்த்தும் சக்திகள்

சந்தர்ப்பவாதம் என்பது சந்தர்ப்பத் திற்கு ஏற்ற வகையில் நடந்து தனக் கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அனுகூலத்தைப் பெற்று தருவது என்று பொ ருள்படும். இருந்த போதிலும் சந்தர்ப்பவாதம் ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடிய செய லென்று பலர் கூறுவர். நாம் எப்போதும் எமது நடத்தை, கொள்கை மற்றும் அன்றாட செயற்பாடுகளில் நேர்த்தியான வழிகாட்டல் களை பின்பற்ற வேண்டும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக் கொள்வது பல சந்தர்ப்பங்களில் பொருத்தமாக இருக்காது. (மேலும்....)

கிழக்கில் அமோக விளைச்சல் தரும் பப்பாசி செய்கை

இன்று தொழில்வாய்ப்பு இல்லை என எத்தனையோ இளைஞர் யுவதிகள் தங்கள் எதிர்காலத்தை கழிக்கின்றனர். அரச வேலை செய்தால் மட்டும்தான் உயர்வானது, கெளரவமானது எனப் பலர் நினைப்பதினாலேதான் தொழில் இன்றி கஷ்டப்படுகின்றனர். அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் மக்களின் வறுமையை விரட்டியடிக்கக் கூடிய வகையில் பல்வேறு சுயதொழில் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அரசின் வழிகாட்டல்கள் மற்றும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றிப் பிடிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர் நிலையை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். சில சோம்பேறிகள் இன்னும் சோம்பேறிகளாகவே காலத்தைக் கழிப்பதையும் காண்கின்றோம். (மேலும்....)

ஜெயலலிதாவின் அரசியல் அவசரத்தால் 7 பேர் விடுதலை ஆவதில் சிக்கல் - கருணாநிதி

ஜெயலலிதாவின் அரசியல் அவசரத்தால், ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:-ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதில் சிக்கல் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே; அந்த சிக்கலுக்குக் காரணமானவர்கள் யார்?
பதில்:-2011 ஆம் ஆண்டிலேயே, அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று தண்டனையைக் குறைத்த முன்மாதிரி இருக்கிறது, அதைப் பின்பற்றலாம் என்று நான் கருத்து தெரிவித்தபோது, அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் காலம் கழித்தார்கள். தற்போது இந்தப் பிரச்னையை முறையாக, ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்காமல் எப்போதும் போல “எடுத்தேன், கவிழ்த்தேன்” பாணியில் செயல்பட்டதால் “திரிசங்கு” சொர்க்கத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். இவர்கள் காட்டிய “அரசியல் அவசரம் - ஆதாயம்” என்ற காரணத்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இதற்குள் விடுதலையாகியிருக்க வேண்டியவர்கள், இன்னும் வெளிவர முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

7 பேர் விடுதலைக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜீவ் காந்தி கொலையில், நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருகின்ற மார்ச் 6 ஆம தேதி வரை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெயலலிதாவின் முடிவினை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இது போன்ற முடிவினை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன். இந்த மாதிரியான முடிவினை அரசு எடுக்க ஆரம்பித்தால் பலரும் இதனை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். இது தவறான செய்தியாக அமையும்" என்றார்.

அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்; சதி திட்டம் காரணமா?

இந்திய கடற்படைக்கு சொந்தமான நிர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 6 மாதங்களில் கடற்படையில் 11 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மும்பையில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 18 மாலுமிகள் பலியாகினர். இந்நிலையில், தற்போது மும்பை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ. என். எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கி உள்ளது. பெரும் சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ. என். எஸ். சிந்துரக்ஷத் நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல், மும்பை கடற்கரையிலேயே விபத்தில் சிக்கி உள்ளது. (மேலும்....)

பெப்ரவரி 26, 2014

கிளிநொச்சி - பளை ரயில் சேவை மார்ச் 04ல் உத்தியோகபூர்வ பயணம்

23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையும் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடபகுதி ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர் லியோ பெர்ணாந்து தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை பயணிக்க உள்ளதோடு யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான நிர்மாணப் பணிகள் ஜூனில் பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான ரயில் சேவை கடந்த வருடம் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டது. வட பகுதிக்கான ரயில் பாதை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் தெற்கிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

If the Canadian Tamil Congress did not have links to the LTTE, it’s wrong to say Velupillai Prabhakaran was the leader of the LTTE, Pottu Amman was the head of the LTTE’s  Intelligence Wing and Soosai was the Sea Tiger leader! However, according to Justice Stephen E. Firestone of the Ontario Superior Court of Justice In Canada – who had  ruled in favour of the CTC, awarding it $37,000 in damages and imposing $16,000 in costs on Rohan Gunaratna – CTC had not had any links with the LTTE. In article published by Lakbima News in 2011, Gunaratna was quoted as saying: "The LTTE is operating under the name of the Canadian Tamil Congress, which is the main LTTE front organization in Canada." (more....)

கலைகள் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் 

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டம் மாணவர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டு கெபிதிகொல்லாவ கிளேமோர் குண்டு வெடிப்பு துயரியல் சம்பவம் இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணங்கள், உளவியல் உதவிகள் ஆகியவற்றை வழங்கவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு இன மற்றும் சமய நல்லிணக்கத்தை நாடு முழுவதிலும் மலரச் செய்வதை பிரதான நோக்கமாக கொண்ட தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கின்ற வேலைத் திட்டமாக இது பரிணமித்தது. சமாதானத்தின் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான இலக்கு ஆகும், இன மற்றும் சமய நல்லிணக்கம் மூலம் நிரந்தர சமாதானம், சமூக அபிவிருத்தி ஆகியவற்றை அடைவதற்கான அம்சங்களை இத்திட்டம் கொண்டு உள்ளது. நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன நடத்தப்படுகின்றன. அமைதியும், சுபீட்சமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதே சிசுதிரிய வேலைத் திட்டத்தின் நிறைவான பயனாக அமைகின்றது. (மேலும்....)

மகஸின் சிறைச்சாலையில் கைதி இறந்ததற்கு மாரடைப்பே காரணம்

மகஸின் சிறைச்சாலையில் வைத்து இறந்த புலி சந்தேக நபரின் மரண த்தில் எதுவித மர்மமும் கிடை யாது எனவும் மாரடைப் பினாலே அவர் இறந்திருப்பதாகவும் சிறைச்சாலைத் திணைக்களம் கூறியது. இறந்த கைதியின் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற ஏற்பாடாகியிருந்ததோடு, இந்த மரணத்தின் பின்னணியில் எதுவித சதியோ சந்தேகமோ கிடையாது என சிறைச்சாலை ஆணை யாளர் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதாகி நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மந்திகையை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய குடியுரிமையுள்ள விஸ்வலிங்கம் கோபிதாஸ் (42 வயது) என்பவர் நேற்று முன்தினம் காலை மகஸின் சிறையில் வைத்து உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கேதரியிருந்தது. புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் 2007 ஆம் ஆண்டு இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றதோட 2012 ஜுலை 23ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவரின் தண்டனை அடுத்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையிலே திடீர் நோய் வாய்ப்பட்டு இறந்தாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு மலசல கூடத்துக்குச்சென்ற குறித்த கைதி 7.20 ஆகியும் வெளியில் வராததால் ஏனைய கைதிகள் மலசல கூடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். கைதி நெஞ்சைப் பிடித்தவாறு முனங்கியபடி கீழே வீழ்ந்து கிடந்துள்ளதோடு 7.35 மணிக்கு சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஆணையாளர் கூறினார். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கையில் கைதி இறந்திருந்ததாகக் கூறிய அவர் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணை நேற்று இடம்பெற ஏற்பாடாகியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு

நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை ஏற்குமாறு விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கையை பிளவுபடுத்தும் எந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தனது தென் ஆபிரிக்க விஜயத்தின்போது பல தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்ததாக கூறிய அவர், இலங்கை மக்கள் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவதை காண்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் குறிப்பிட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும், தமக்கு தேவையானவாறு ஆட்டக்கூடிய பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கவுமே மேலைத்தேய நாடுகள் முயல்கின்றன. தேசிய நோக்கின் அடிப்படையில் செயற்படுவதாலே சில சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை. மேலைத்தேய நாடுகளின் முன் தலை சாய்ப்பதற்கு அவர் தயாராக இல்லை.

மோடியின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக சீனா மீது நரேந்திரமோடி கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. ‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தைக் கைப்பற்றக்கூட போரிட்டது. இல்லை என்று அந்நாடு கூறியுள்ளது. குஜராத் மாநில முதல் மந்திரியும், பா. ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, சமீபத்தில் அருணாசல பிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார். நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் குணத்தை சீனா கைவிட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலப் பிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ மோதல்கள் நடந்தது இல்லை. எல்லையில் அமைதியை கட்டிக்காக்கும் திறன் எங்களுக்கு உண்டு. என்பதற்கு இதுவே சாட்சி.இது, வருங்காலத்தில் இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு நல்லது. இது இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் நல்லது. இந்தியாவுடன் எல்லப் பிரச்சினை இருப்பது உண்மைதான் அந்த பிரச்சினையை மட்டுமன்றி, எல்லாப் பிரச்சினைகளையும் அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்கதையே சீனா விரும்புகிறது. இதற்காக இரு நாடுகளும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கருதுகிறோம். இந்தியாவுடனான நல்ல அண்டை நாட்டு உறவை கடைப்பிடிப்பதையே சீனா விரும்புகிறது. அமைதியான வளர்ச்சிப் பாதையில் செல்லவே உறுதி பூண்டுள்ளது.

பெப்ரவரி 25, 2014

ஜெயாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி ஈழ வாக்குறுதி

இலங்கையில் தனி ஈழம் அமைக்க இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவினால் இன்று (25) வெளியிடப்பட்டது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையில் வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று அந்த விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலமா' போனது போனதுதான்

வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட ஆளில்லா விமானம் 'கேலமா' இன்றுவரையிலும் திரும்பவில்லை என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்த காலத்தில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை திரட்டிவந்து இராணுவத்திற்கு வழங்கிய ஆளில்லா விமானமே 'கேலமா' இந்த செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. உடவளவ வனாந்தரத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் வானத்திற்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் திரும்பவில்லை. சிங்கபூர் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆளில்லா விமானம் வனாந்தரத்திற்குள் காணாமல் போகியிருக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தனர்.

அ(எ)ங்கும் ஒரேயளவு கூட்டம்தான்........?

நிழல் இல்லாத மனிதர்கள்.

(சுகு-ஸ்ரீதரன்)

தர்மஸ்ரீபண்டாரநாயக்காவின் இயக்கத்தில் தெற்கின் கலைஞர்களால் இந்த அரங்காற்றுகை வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளானவர்கள் முன் நிகழ்த்தப்பட்டது. ஸேன் போல் சாத்திரேயின் நிழல் இல்லாத மனிதர்கள் . சாத்தரேயின் நாடகத்தின் சிங்கள வடிவம் 'தவல பீஸன' இதனைக் கிரகிப்பதற்கு பெரிதாக மொழி அவசியப்படவில்லை. நாடகம் எம்முடன் எமது அனுபவங்க ளூடாக உரையாடியது. சாத்தரேயின் அனுபவங்கள் பண்டாரநாயக்காவின் நெறியாள்கையில் இலங்கையின் செழுமை மிகு கலைஞர்களின் உடல்மொழி -மொழி ஒலி-ஒளி-இருள்  ஊடாக உலகம் முழுவதும் இறைந்து கிடக்கும் நிழலில்லாத மனிதர்களைப்பற்றிப் பேசியது. (மேலும்....)

நாஸி வதை முகாமில் இருந்த உலகின் வயதானவர் மரணம்

நாஸி படுகொலை முகாமில் இருந்து உயிர்தப்பி வாழும் மிக வயதானவர் என கருதப்படும் அலிஸ் ஹெர்ஸ் சொம்மர் என்பவர் தனது 110 ஆவது வயதில் லண்டனில் காலமானார். கடந்த 1903 ஆம் ஆண்டு பரகுவேயில் யூத குடும்பத்தில் பிறந்த அலிஸ் ஹெர்ஸ் சொம்மர், டெரசினில் இருந்த நாஸி வதை முகாமில் இரண்டு ஆண்டுகளை கழித்துள்ளார். சிறந்த பியானோ வாசிப்பவரான இவர் 1986 வரை ஜெரூசலம் இசைப்பள்ளியில் ஆசிரியராக செயற்பட்டு பின்னர் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட குறுந்திரைப்படம் அடுத்த மாதம் இடம்பெறும் ஒஸ்கார் விருதில் குறுந்திரைப்படம் அடுத்த மாதம் இடம்பெறும் ஒஸ்கார் விருதில் சிறந்த ஆவண குறுந்திரைப்படத்திற்கான போட்டியில் உள்ளது.(மேலும்....)

பெப்ரவரி 24, 2014

ஜெயலலிதா ஆட்சியை கலைக்க வேண்டும் - சுப்பிரமணியசாமி சூழுரை

(தினமலர் நாளிதழுக்கு பா.ஜ மூத்த தலைவர்,சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி)

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளை,விடுதலை செய்ய,தமிழகஅரசு முடிவு எடுத்ததும்,தமிழ் ஆர்வலர்கள் அதை சந்தோஷமாக கொண்டாடினர்.ஆனால்,தமிக அரசின் முடிவை நீங்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை விவகாரத்தை,ஒரு தரப்பினர் சீரியஸாக பார்க்கவில்லை என்பதால்,அதை கொண்டாடுகின்றனர்.அப்படி கொண்டாடுவோருக்கு,நாட்டின் மீதும்,இந்திய இறையான்மையின் மீதும் கொஞ்சமும் அக்கறை இல்லை.அப்படிபட்டவர்கள்,நினைத்ததை எல்லாம் செய்ய,நாம் அனுமதிக்க முடியாது. 'பயங்கரவாதத்தை,ஆதாரிக்க கூடாது' என்ற சாதாரண சிந்தனை கூட இல்லாதவர்கள் எல்லாம்,தமிழக பொறுப்பில் அமர்ந்தது,தமிழகத்தின் துரதிருஷ்டம் சட்டம்-ஒழுங்குகை காப்பாற்ற வேண்டியவர்களே,சட்டம்-ஒழுங்கிற்கு சவாலாக அநை;திருப்பதுதான்,கூடுதலான வேதனை,அவர்களின் செயல்களை எல்லாம,நாம் வேடிக்கை பர்க்க முடியாது. (மேலும்....)

தோழர் அமீன்

தோழர் மட்டுவில் அமீனின் நினைவு தினம் இன்று! 1986ம் ஆண்டு தோழர் அமீன் புலிகளால் படுகொலை தோழர் அமீன் அவர்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பொன்றில் பயிற்சியை முடித்து யாழ் வந்து ஒரு சில மாதங்களிலேயே புலியினரால் படுகொலைசெய்யப்பட்டார். தோழர் அமீன் அவர்களின் கம்பீரமான தோற்றமும்,அவரது இராணுவ செயற்பாட்டு திறனும் கிட்டனுக்கும்,ஒட்டுமொத்த புலியிற்கும் அச்சத்தை கொடுத்தது.தோழர் அமீன் அவர்கள்,யாழ் கோட்டையைச்சுற்றியுள்ள எமது காவலரண்களில்உள்ள தோழர்களை கண்காணிக்கச் சென்றவேளை திட்டமிட்டபடி கோழைப்புலியினர் படுகொலைசெய்தனர்.அந்தவேளை தோழர் நாபாவும் ஈழத்தில் நின்றிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.தோழர் அமீன் அவர்களின் இறுதி ஊர்வலத்திலும் தோழர் நாபா கலந்துகொண்டிருந்தார். தோழர் அமீன் ஒரு இராணுவ திறமைகளுள்ள சிறந்த போராளி.எங்கள் இனிய தோழனுக்கு சிவப்பு அஞ்சலிகள்.

பெப்ரவரி 23, 2014

 ராஜீவுடன் கொல்லப்பட்ட அப்பாவிகள் 15 பேரின் உறவுகள் கதறல்

கொலையாளிகளின் விடுதலையை வரவேற்போர் கொலையானோர் பற்றி கவலைப்படாதது ஏன்?

தமிழ்நாட்டிற்கு வந்து அப்பாவி 15 தமிழர்களை கொன்ற கொலையாளிகளை ஆதரிப்பவர்கள், அன்று கொல்லப்பட்ட அப்பாவி 15 தமிழர் களின் நிலை பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஏனோ? ராஜீவ்காந்தி உட்பட வெடி வைத்து சிதறப்பட்ட அந்த 15 அப்பாவி தமிழர்களின் உயிர்களை பற்றி கவலைப்பட தமிழ்நாட்டில் யாரும் இல்லையா? புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம், நம் நாட்டைச்சேர்ந்த தேசத்து ரோகிகளின் உதவியுடன், நம் நாட்டின் முன்னாள் பிரதமரை, நமது மண்ணிலேயே வைத்து படுகொலை செய்வதை ஏற்கவே முடியாது. குண்டு வெடிப்பில் இறந்த பல அப்பாவி உயிர்களை விட, கொலைக்கு உதவிய இவர்கள் விடுதலையாவது முக்கியமாகி விட்டது. (மேலும்....)  

மாந்தை மனித புதைகுழியில் இருந்து இதுவரை 79 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு

திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இது வரை 79 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 29 ஆவது தடவையாக புதை குழியில் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது  மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அகழ்வுப்பணியின் போது அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தலைமையிலான குழுவினர்   சமூகமளிக்கவில்லை. இதனால் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படவில்லை.  மன்னார் நீதவான் முன்னிலையில் பொலிஸாரும்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து பணியில் ஈடுபட்டனர். மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை 30 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளது. 

தண்டனைகள் குறையும்போது குற்றச் செயல்கள் அதிகரிக்கும்

மனிதநேயம் செத்துவிடவில்லை, அப்பாவிகளது உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டது என்பதாக தமிழக அரசியல்வாதிகள் பலரும் கருதுகின்றனர். இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தமது தாய் நாட்டின் பிரதமர் கொல்லப் பட்டபோது கொதித்தெழுந்து அவரைக் கொன்ற புலிகளைக் கொன்றொழிக்க வேண்டும் என ஆர்ப்பரித்தவர்கள் இன்று அக்கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் விடுதலையில் மகிழ்வடைகிறார்கள். ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றுதான். ஆனால் அன்று பாரதப் பிரதமரின் உயிருடன் பொலிஸ் அதிகாரிகள், பத்திரிகைக்காரர்கள், பொதுமக்கள் எனப் பதினைந்து பேரின் உயிர்களை ஒரு நிமிடத்தில் காவு கொண்டவர்கள் அல்லது கொள்ளத் துணைக் காரணமாக இருந்தவர்கள் என நன்கு தெரிந்திருந்தும் அத்தகை யவர்களின் விடுதலையில் இன்று பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.(மேலும்....)  

பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன்

அவதானமாக இருக்க வேண்டும் அரசாங்கம் - பொது பல சேனா

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாது போனவற்றை செய்ய முயலும் பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியான விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளை பற்றி பேசுவதானது, மீண்டும் பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் எனவும் அவர் தெரிவித்தார். மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தினால் இன, மத பேதமின்றி எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வட ,கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கினார்கள். எனவே அந்த நிலைமை மீண்டும் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது. அதே போன்று பிரபாகரனின் ஆவியாக செயற்பட்டுவரும் விக்னே௧ஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல மட்டக்களப்பு

தமிழ்க் கூட்டமைப்பின் இனவாத கருத்துக்கு வன்மையாக கண்டனம்

அண்மைக் காலங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமாக இரண்டு சமூகங்க ளுக் கிடையில் பிரச்சினையை உண் டாக்குவதன் மூலம் ஒரு வங்கு ரோத்து அரசியலை செய்ய முற்ப டுகின்றனர் என கிழக்கு மா காணசபை உறுப்பினர் பொறி யியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார். அரசாங்கம் எல்லா வகையான வளங்களையும் அதாவது வீதி அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்று எல்லா துறைகளையும் பொதுவாகவே தமிழ் மக்களுக்காக செய்கின்ற இந்த வேளையில், தாங்கள் அரசியலில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதா னால் இனவாதத்தினூடாகவும், பிரிவி னையினூடாகவும் மாத்திரமே அரசியலில் நிலைத்திருக்க முடியும் அல்லது போனால் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து எங்களை ஓரங்கட்டி விடுவார்கள். என்ற அச்சத்தினால் அவ்வப்போது இனமுறு களை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை மக்கள் முன் தெரிவித்து அரசியல் செய்ய முற்படுவதை மாகாண சபை உறுப்பினர் வன்மையாக கண்டிப்பதாகக் கூறினார்.

பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்...

எஸ். ஹமீத்

*இன்னும் எரிகிறது நெருப்பு...
போதாதைக்குப் பெருங் காற்று வேறு;
தீக் கங்குகள்
எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன

(மேலும்....)

பெப்ரவரி 22, 2014

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை

(தோழர் ஸ்ரனிஸ்)

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களும் அவர்களது தியாகங்களும் என்றுமே வஞ்சிக்கப்பட்டே கொண்டிருக்கிறது. இது திட்டமிட்டே சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வஞ்சித்தல் ஏன் எதனால். இதில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. புலிகளில் இருந்து கொல்லப்படட்வர்களுக்காகவும் அவர்களது நலன்கள் தொடர்பாகவும்  இந்த உலகமே ஓர் அணியில் நிற்பதைப்போல் ஒரு தோற்றம் உள்ளது. ஆனால் புலிகளால் கொல்லப்பட்டவர்களின்  நிலைமை பரிதாபாக உள்ளது. யாரும் அவர்கள் தொடர்பாக கதைப்பதே இல்லை அந்தக்குடும்பங்கள் என்ன நிலைமையில் வாழ்கிறார்கள் என்பதையோ அவர்கள் நலன்கள், மறுவாழ்வு தொடர்பாகவோ எவரும் கண்டுகொள்வதாக இல்லை இன்று புலிகளில் இருந்து கொல்லப்பட்டவர்கள் தொடர்பான நலன்கள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுபற்றி பேசுபவர்களின் அரசியலே கோலோச்சுகிறது. (மேலும்....)

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் தேசத்தின் மகுடம்!

தேசத்தின் மகுடம் 2014 கண்காட்சி குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி நகரத்தில் சம்பிரதாயமாக ஆரம்பம் ஆகின்றது. உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம் என்கிற தொனிப் பொருளிலான இக்கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கின்றார். தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு இது 08 ஆவது வருடம். அனைத்து அரச துறையினரும் ஓரே கூரையின் கீழ் உற்பத்திகள், தயாரிப்புக்கள், சேவைகள், ஆவணங்கள் ஆகியவற்றை காண்பிக்கவும், வழங்கவும், விளங்கப்படுத்தவும் இக்கண்காட்சியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வட மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற பிற்பாடு இடம்பெறுகின்ற முதலாவது தேசத்தின் மகுடம் இது ஆகும். ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் இக்கண்காட்சியில் வட மாகாண சபையின் காட்சிக் கூடங்களை திறம்பட காண்பிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக ஈடுபடுகின்றனர். மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு பொறுப்பான கடமைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அருமையான காட்சிக் கூடங்களை வடிவமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை காட்டக் கூடிய காட்சிப்பாடுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதே நேரம் ஜனாதிபதி செயலகமும், ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இக்கண்காட்சியில் காத்திரமான காட்சிப்பாடுகள், அரங்காற்றுக் கலைகள் ஆகியவற்றை வழங்க உள்ளன. குறிப்பாக தேசிய நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க ஆண், பெண் உறுப்பினர்களின் நடனங்கள் இவற்றில் சிறப்பிடம் பெறுகின்றன. ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பணிப்பாளர் நந்தன விஜேசிங்க இவற்றுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை திறம்பட மேற்கொண்டு உள்ளார். இவரது ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர்கள் குழு கண்காட்சியில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையை கண்டித்து இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்

(நன்றி: தமிழகத்திலிருந்து அருள்)

ராஜீவ்காந்தி  கொலைவழக்கு குற்றவாளிகள் 7பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ர்pம் கோட்டில் மனு செய்யது. இதையடுத்து  குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோட்ட தடைவிதித்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் யாரையும் விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும்,ராஜீவ்காந்தியுடன் உயிரழந்த 15 தமிழர்களுக்கும் நீதி கேட்டும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. அண்ணாசாலை மின்சாரவரியம் பின்புறம் உள்ள சாலையில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரத பந்தலை சுற்றியும் ராஜீவ்காந்தி மார்பில் சிறுபிள்ளையாக ராகுல்காந்தி சாய்ந்திருக்கும் காட்சி, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்த காட்சிகள் பேனர்களாக வைக்கப்பட்டிருந்தன. (மேலும்....)

பெப்ரவரி 21, 2014

இந்திய இராணுவ அதிகாரிகள் யாழில் மலர் அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் வருகைதந்த இந்திய தெற்கு இராணுவத் கட்டளைத்தளபதி லெப்டினல் ஜெனரல்  அசோக் சிங் மற்றும் துணை இராணுவ கட்டளைத் தளபதி ஆகியோர் பலாலியிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர். ஜெனரல் உதயப் பெரேராவையும் பலாலி படைத் தலைமையகத்தில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.பலாலி படைத்தலைமையகத்திற்கு  இன்று காலை வருகைதந்த இந்திய இராணுவ கட்டளைத்தளபதி யாழ்.மவட்ட கட்டளைத்தளபதி கைலாகுகொடுத்து வரவேற்றார். இதனையடுத்து செங்கம்பள வரவேட்பும் இந்திய இராணுவ கட்டளைத்தளபதிக்கு வழங்கப்பட்டது. பலாலி படைத் தலைமையகத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் வி.மாகாலிங்கமும் பங்கு கொண்டிருந்தார். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் உள்ளிட் குழுவினர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதோடு யாழ்.கோட்டையினையும் பார்வையிட்டனர். இதனையடுத்து கிள்நொச்சி மாவட்டத்திற்கு அந்தக்குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ராஜீவ் கொலையாளிகள்

7 பேர் விடுதலையை வைத்து அரசியல் சதுரங்கம் நடக்கிறது

(ஞானதேசிகன்)

(நன்றி: தமிழகத்திலிருந்து அருள்)

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கருணைமனு மீது முடிவெடுக்க 11 ஆண்டுகள் ஆனதால் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் இதே உச்சநீதிமன்றத்தில கருணைமனு காலதாமதத்துக்கும் மரண தண்டனைக்கும் சம்மதம் இல்லை என்று தீர்ப்பும் வழங்கப்பட்டு உள்ளன.சுப்ரீம்கோட் தீர்ப்பை விமர்சிக்க தகுதி இல்லை ஆனால் நடந்தது சாதாரண கொலை அல்ல முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.அதுவும் வேற்று நாடான இலங்கையில் கொலைத் திட்டம் தீட்டப்பட்டு அங்கிருந்து ஒரு பிரிவை அனுப்பி இங்குள்ளவர்கள் துணையோடு நிறைவேற்றி இருக்கிறார்கள் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கும் இலங்கையில் இருந்து இவர்கள் வந்து ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (மேலும்....)

7பேர் விடுதலை தமிழக அரசின் முடிவுக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு

ராஜீவ் கொலை கைதிகள் 7பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ வும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க ஏற்கவில்லை அந்த முடிவுகள் ஏமாற்றம் தருகிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு வேதனையை தருகிறது. அந்த முடிவை மாற்ற வேண்டும். அருண்ஜெட்லி கூறியுள்ள கருத்துக்கு மற்ற பா.ஜ.க மூத்த தலைவர்களும்ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணைமனு மீது முடிவெடுக்க தாமதம் ஆனதை காரம் காட்டி மரண தண்டணையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதையும் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் தேசிய தலைவர்களிடம் இருந்து மாறுபட்டநிலை எடுத்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிற்புக்கு நன்றி தொவித்துள்ளர். (நன்றி: தமிழகத்திலிருந்து அருள்)

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.  7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரன்க்பர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
(மேலும்....)

வடமாகாண சபையின் தீர்மானம் நிராகரிப்பு

இலங்கையில் மூன்றாவது விமான நிலையத்தை நிர்மாணிக்கும் யோசனை இல்லை என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை நடத்தப்பட வேண்டும் என்று வட மாகாண சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சிவில் விமான சேவையொன்றை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கே உள்ளது. இவ்வதிகாரம் மாகாணசபைக்கு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மகளுடன் சேர்ந்து லண்டன் வாசியாக மாற விரும்பும் முருகன் - நளினி தம்பதியினர்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து  அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார். விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.

சொந்த மண்ணில் குடியேற ஆசை

'எனது சொந்த இடமான வலி. வடக்கில் மீள்குடியேறி வாழ்வதற்கு ஆசைப்படுகின்றேன்' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.  'வலி வடக்கில் மீள்குடியேறுவது தொடர்பில் நீங்கள் என்னிடம் உதவியை நாடி வந்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் உதவியினை எந்தவித மறுப்புமின்றி நிச்சயமாக செய்வேன். என்னுடைய சொந்த இல்லம் கூட வலி.வடக்குப் பிரதேசத்திலேயே தான்; உள்ளது என்பதுடன், எனக்கும் அங்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதனால் வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை மேற்கொள்வது எனது பொறுப்பும் கூட. நீங்கள் இவ்வளவு காலமும் சொந்த நிலங்களை இழந்து அனுபவித்த இன்னல்கள் ஏராளம். யுத்தத்தின் பின்னர் ஏனைய பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் உங்களுடைய பகுதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது வேதனையான விடயம். உங்களுடைய பிரச்சினை தொடர்பாக அண்மையில் நான் ஜனாதிபதியிடம் உரையாடியுள்ளேன். அது மட்டுமன்றி தற்போது பொறுப்பேற்றிருக்கும் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுடன் கலந்துரையாடவுள்ளேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம்

சுகாதார அமைச்சின் 101 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் இணைந்து 'புகை எமது வாழ்வுக்கு பகை' என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர் இன்று (20) தெரிவித்தனர். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னாலுள்ள தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த ஊர்வலம் மல்லாகம் சந்தியினூடாக சுன்னாகம் பேரூந்து நிலையத்தினைச் சென்றடையவுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தெல்லிப்பளை, உடுவில் பிரதேச செயலகங்களின் அலுவலர்கள், பிரதேச சபைகளின் அலுவலர்கள், சிவத்தொண்டன், சிவமங்கையர் கழக அமைப்புக்கள் பிரதிநிதிகள், வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக வைத்தியதிகாரி பிரிவினர் மேலும் தெரிவித்தன.

ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை நீதியின் கொள்கைகளுக்கு முரணானது

ராஜீவ் காந்தியையும் இந்திய குடிமக்கள் பலரையும் கொன்றவர்களை விடுதலை செய்வது என்பது அனைத்து விதமான நீதியின் கொள்கைகளுக்கு முரணானது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்த ஒரு அரசோ, கட்சியோ மென்மையான போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக எழுந்துள்ள சட்டத்தின் அடிப்படை விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்கிறது. மேலும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் நடவடிக்கை சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்றும் அந்த நடவடிக்கைகளைத் தொடரக் கூடாது என்றும் தமிழக அரசிடம் தகவல் தெரிவித்து விட்டோம். ராஜீவ் காந்தி படுகொலை என்பது இந்திய ஆன்மா மீதான தாக்குதல் நம்முடைய மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் பிரதமரையும், இந்திய குடிமக்கள் பலரையும் கொன்றவர்களை விடுதலை செய்வது அனைத்து விதமான நீதியின் கொள்கை களுக்கு முரணானது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட் டத்தில் எந்த ஒரு அரசும், கட்சியும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பெப்ரவரி 20, 2014

இந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்

பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது. வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையினையே சிவாஜிலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.

அமிர்தலிங்கம் பகீதரன் - ஜனாதிபதி சந்திப்பு

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். கோடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன்  நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் இனம்,மதம் மற்றும் மாகாண பேதமின்றி முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை கெமரூன் கோருவார்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்  பேரவையில் இலங்கைக்கு மீதான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முன்னெடுத்து வருகிறார் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று 19) சந்தித்து உரையாற்றும் பொதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், 'நடைமுறையில் என்னென்ன நடக்கிறது என்பதை ஆராயும் நோக்கில் பிரித்தானிய உயர்ஸ்தானிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். வடமாகாண ஆளுநரைச் சந்தித்த பின்னர் என்னையும் சந்தித்து கலந்துரையாடி இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்' என்று கூறினார்.

அரசாங்கம் - வட மாகாண சபை இடைவெளி குறைய வேண்டும்

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி குறைபட வேண்டிய அதே நேரம், அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமெனவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு சமூக தரத்தில் முன்னெடுக்கப்படும் அதே நேரம் அரசியல் தரத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டுக்கான மாநாடு ஏப்ரல் மாதம் 7ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)  

‘அம்மா’ உணவகம் திறந்து ஓராண்டு நிறைவு

ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. மலிவான விலையில் உணவு விற்கப்படுவதால் இந்த உணவகத்திற்கு பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சென்னையில் தொடங்கிய இந்த திட்டம் மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அம்மா உணவகம் இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சமீபத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இது அங்கு வரும் நோயாளிகள் மட்டுமன்றி உறவினர்கள், பார்வையாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள மேலும் 6 அரசு ஆஸ்பத்திரி வளாகங்களில் உணவகம் வருகிற 21ந் திகதி திறக்கப்பட உள்ளது. அம்மா உணவகம் திறந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நேற்று வரை சுமார் 9 கோடி இட்லி விற்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று வரை 8 கோடியே 93 லட்சம் இட்லியும் ஒரு கோடியே 54 லட்சம் சாம்பார் சாதமும் விற்பனையாகி உள்ளது. அம்மா உணவகம் மூலம் இதுவரை கிடைத்த வருவாய் ரூ. 26.24 கோடியாகும். சென்னையில் இதுபோன்று ஆயிரம் உணவகங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். அதன் அடிப்படையில் மேலும் உணவகங்கள் திறக்க மாநகரங்களில் இடங்களை தேர்வு செய்து வருகிறது.

கணித சூத்திரம் புரியும்போதும் கலாரசனை அழகுணர்ச்சி ஏற்படுவது கண்டுபிடிப்பு

அற்புதமான கலைப் படைப்புகளையும் இசையையும் நுகரும்போது ஒருவருக்கு மூளையில் ஏற்படும் அழகுணர்ச்சி, கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும் எழுத்துக்களையும் காணும்போதுகூட கணித வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. லண்டனின் யுனிவர்சிட்டி காலலேஜ்ஜில் கணித வல்லுநர்களை மூளை ஷ்கேன் செய்த நேரத்தில் அவர்களிடம் விதவிதமான கணித சூத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிட்ட சில சூத்திரங்களை அவர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டன. மனதில் ஏற்படும் அழகுணர்ச்சிக்கு நியூரோ பயாலஜிக்கல் நரம்பியல் அடிப்படை ஒன்று இருக்க வேண்டும் என அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானி கள் தெரிவித்தனர். கணித சூத்திரங்களை ஒருவர் புரிதலுடன் பார்க்கும்போது அவ ருடைய மூளையின் பல்வேறு பாகங்களும் பயன்படுத்தப்படு கின்றன. சில நல்ல சூத்திரங்களை பார்க்கும்போது அவர்களு டைய மூளையின் உணர்வு ரீதியான பாகமான மீடியல் ஒர்பைடோ ஃபிரண்டல் கார்டெக்ஸ் செயலூக்கம் அடைகிறதாம். ஒரு நல்ல இசையைக் கேட்கும்போது ஒரு அற்புதமான ஓவியத்தை பார்க்கும்போது எவ்வித மாற்றம் அடையுமோ அவ்விதத்தில் அது மாற் றம் அடைகிறதாம்.

7 பேர் விடுதலை அரசியல் நோக்கோடு எடுக்கப்பட்ட முடிவு - காங்கிரஸ்

ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுவிப்பது என்பது முழுக்க அரசியல் நோக்கோடு, பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றம் மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய மட்டுமே உத்தரவிட்டது. தமிழக அரசோ எஞ்சிய நான்கு பேரின் ஆயுள் தண்டனைகளையும் குறைத்து அவர்களை விடுவிக்க முடிவு செய்திருக்கிறது. இது முழுக்க அரசியல் நோக்கோடு, பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு. இந்த முடிவின் மூலம் தமிழக அரசு குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிட்டது. மற்ற மாநில முதலமைச்சர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் சட்டத்தை மீறி இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்'' எனக் கூறியுள்ளார்.

பெப்ரவரி 19, 2014

திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன்
ஓர் இதயம்...!

எஸ். ஹமீத்.

**மன்னார் குடாவை
   மரணக் குழியாய் மாற்றிய
   மா பாதகர் யார்...?

 

**மாந்தை வயல்களில்
  மனிதர்களை விதைத்த
  மனசாட்சியற்றோர் யார்..?

(மேலும்....)  

"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்" பொதுக்கூட்ட அறிவித்தல்!! 

'மண்ணின் சேவையே மகத்தான சேவை'

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 

சுவிற்சர்லாந்து

SOCIETY FOR AWARENESS OF PUNGUDUTIVU PEOPLE SWISS

PASP, Postfach 536, 3011 Bern

***பொதுக்கூட்டம்... 

அன்புடையீர், 

"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்தின்" பொதுக்கூட்டம் எதிர்வரும் 23.02.2014 காலை 10 மணிக்கு BERN மாநிலத்தில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்தில் 2014ம்  ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும், எமது ஊரிற்கான அபிவிருத்தி திட்டங்களை  முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் பற்றியும், கலந்து ஆலோசித்து முடிவு செய்ய விருப்பதனால் சுவிற்சர்லாந்தில் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், செயற்பாடுகளையும் தந்துதவுமாறு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறது. 

நிகழ்ச்சி நிரல்: 

• இறைவணக்கம் 

• தலைமையுரை 

• செயலாளர் அறிக்கை 

• பொருளாளர் அறிக்கை 

• யாப்பு மீள் அறிமுகம் 

• மக்கள் கருத்துப்பகிர்வு 

• புதிய நிர்வாகத்தெரிவு 

• புதிய நிர்வாக உறுப்பினர் கருத்துரை 

• நன்றியுரை 

*முக்கிய குறிப்பு: ஒன்றியத்தின் மாதாந்த அங்கத்துவப்பணமான 10 x 12 - Sfr. 120.00வருட சந்தாவை செலுத்தி, அங்கத்துவராக இணைந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

கூட்டம் நடைபெறும் இடம்: 

Kleefeldzentrum

Mädergutstrasse 05

3018 Bern 

தொடர்புகளுக்கு: 

தலைவர் - இரா.ரவீந்திரன் -079 218 70 75 

பொருளாளர் - இ.சிறிதாஸ் -079 228 67 45 

செயலாளர் - அ.நிமலன் -079 124 45 13

**உங்கள் வருகை ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும் என்பதே எம் அனைவரின் அவா! 

'மண்ணின் சேவையே – மகத்தான சேவை'

நன்றி.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை இரத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் உள்ளிட்ட மூவரின் தண்டனையை ரத்துச் செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையும், மேலும் 24 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டது. நளினியின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். (மேலும்....)   

பெப்ரவரி 18, 2014

யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் உறவுகளும் சாட்சியமளிப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று 17ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது. யுத்த காலத்தில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றியும் அவர்களின் உறவினர்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இறுதி நாளான நேற்றையதினம் யாழ்ப் பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில், புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட தனது மூன்று மகன்மார் தொடர்பில் 95 வயது மூதாட்டியொருவர் ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச முன்னிலையில் சாட்சியங்களைப் பதிவுசெய்தார்.(மேலும்....)

Will the UN allow the woman whose husband recruited CHILD SOLDIERS into Geneva?


ANANDI  SASITHARAN 

 The TNA -  LTTE Nexus

[TNA hand picked by the former Tamil tiger leader in 2004]

We hope The UN will not support the LTTE proxy - the advocates of Child Recruitment!

The STAR of Geneva

TNA Candidate’s Husband Wanted For War Crimes – Terrorist Child Recruiter

The IRONY of TNA candidate ANANDI  SASITHARAN speaks on behalf of women and children?

Her husband was in charge of recruiting thousands of youths and children to the LTTE forcefully. These families mourn their children taken away by Mrs Anandi Sasitharan’s loving Husband. These families never got their children back.. (more....)

விசா மறுப்பு செய்தி பொய்; மீண்டும் ஜெனீவா செல்வேன் - அனந்தி

ஜெனீவா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதான செய்திகள் பொய்யென மறுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவில் சட்ட அலுவலராக சட்டத்தரணி சமிந்த அத்துகோரல இருப்பது புரியாத புதிராக இருப்பதாகவும் இதனாலேயே காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் நாங்கள் கேட்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அனந்திக்கு ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்ற பிரசாரத்தினை அரசாங்கம்; தென்னிலங்கை ஊடகங்களின் ஊடாகப் பரப்பி வருகின்றது. மக்களின் பிரதிநிதியான என்னை ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்று செய்தியினை வெளியிடுவதினால் மக்களின் பிரச்சினைகளை நான் ஜெனீவா மாநாட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான பொய்யான செய்தியினை வெளியிடுகின்றது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 'காணாமற்போன மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களைத் தேடும் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாட்டினை கூற வேண்டுமென வலியுறுத்துவதற்காக ஜெனீவா மாநாட்டில் நான் கலந்துகொள்ளச் செல்லவுள்ளேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கு, நாளை தீர்ப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும் மனுமீதான தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. 3 பேரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதற்காக, ஜனாதிபதி அதிக காலம் எடுத்துக் கொண்டதால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் எழுத்துபூர்வமான விளக்கங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் தரப்பில் எழுத்துபூர்வமான விளக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வே தீர்ப்பை வழங்கவிருக்கின்றது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

மகனை கேட்ட கணவனை அடித்துகொன்றது இராணுவம் - மனைவி

'எனது 20 வயது மகனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அவனை தேடி சென்ற எனது கணவனை இராணுவத்தினர் அடித்ததினால் இருதய நோயாளியான அவர் அவ்விடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார்' என ஐயம்பிள்ளை பூரணம் என்ற பெண் திங்கட்கிழமை (17) சாட்சியமளித்துள்ளார். 'எனது மகனான ஐயம்பிள்ளை நிரூபன் (20)  மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்தார். வீட்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று வந்த அவரை மானிப்பாய் கஜபாகு இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினர் கைதுசெய்து கொண்டுசென்றனர். எனது மகனோடு பக்கத்து வீட்டிலுள்ள இரு இளைஞர்களையும் அவர்கள் கொண்டுசென்றனர்
எனது மகன் பிடித்துச் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்பதற்காக குறித்த முகாமிற்கு சென்ற எனது கணவன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் இருதய நோயாளியான அவர் சம்பவ இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார்.  இதேவேளை எனது மகனை இராணுவத்தினர் உடுவில் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் இதனை தான் தெரிவித்ததாக வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் எனக்குத் தெரிவித்திருந்தார். எனது மகனுடன் பிடிக்கப்பட்ட மற்றைய இரு இளைஞர்களும் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எனது மகனை அவர்கள் விடுதலை செய்யவில்லை' என்றார்.

பெப்ரவரி 17, 2014

கணவர் பாதுகாப்பாக இருக்கிறார் என நம்புகிறேன் - யோகியின் மனைவி

வட்டுவாகலில் வைத்து 2009 மே மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு 50 பேருடன் கொண்டு செல்லப்பட்ட எனது கணவர் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றார் என்று நம்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த யோகரட்ணம் யோகியின் மனைவி யோகி ஜெயவதி நேற்று (16) சாட்சியமளித்தார். அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், '2009 மே 17ஆம் திகதி வட்டுவாகலில் நானும் எனது கணவர் மற்றும் பிள்ளைகளுமாக இராணுவத்தினர் இருந்த பக்கம் வந்தோம். இதன்போது இராணுவத்தினர் உங்களில் யாராவது விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தால் வந்து சரணடையுங்கள். இதுவரையிலும் எங்களிடம் 11,886 பேர் சரணடைந்துள்ளனர். நீங்கள் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அறிவித்தனர். அதற்கிணங்க எனது கணவர் சென்று சரணடைந்தார். அவருடன் மேலும் 50இற்கும் மேற்பட்டவர்கள் சென்று சரணடைந்தனர். அவர்களுடன் துணையாக பாதிரியார் ஒருவரும் கூடச் சென்றார். இதன்போது அவர்கள் அனைவரது பெயர்களும் பதியப்பட்டு அவர்களை பேரூந்து ஒன்றில் ஏற்றி ஓமந்தை கொண்டு செல்லப்படுவதினை நான் கண்டேன்' என்று ஜெயவதி குறிப்பிட்டார். என் கணவர் திரும்பி வரவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதனால் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது

வடக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பிரிந்து நிற்பதனால் எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முரண்பாடுகளை களைந்தெறி ந்து விட்டு அனைவரும் ஒன்று படுவதனாலேயே எமது சகல உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறினார். முல்லைத்தீவு கோட்டத்திற் குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருடந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இறுதி கட்ட யுத்தத்தின் போது ஓமந்தைக்கு வந்த சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை இரவு, பகலாக நின்று அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், பாதுகாப்பு, இருப்பிட வசதி என்பனவற்றை அமைச்சராக இன்றி ஒரு சாதாரண மகனைப் போல களத்தில் நின்று உதவி செய்திருக்கிறேன். இவ்வாறு வந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றியதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்திருக்கிறேன் மட்டுமன்றி மெனிக்பாமிலிருந்த உயர்தர மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கு கொழும்பிலுள்ள இந்துக் கல்லூரி, சாஹிரா கல்லூரி, ரோயல் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து திறமையான ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியேகமாக வகுப்புகளை நடத்தினோம். வட மாகாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இருப்பதற்கு காணி, வீடு, படிப்பதற்கு ஒரு பாடசாலை, தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் இதைத் தவிர அவர்கள் எதுவும் கேட்கவில்லை. எனவே, வடக்கில் வாழும் முஸ்லிம்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இந்த வட மாகாண சபைக்கும், அதனைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. எனவே, தனித்து நின்று நாம் இந்த மாகாணத்தையும், ஐந்து மாவட்டத்தையும் அபிவிருத்திசெய்ய முடியாது. அனைவரும் ஒன்றுமைப்பட்டே அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்றார்.

மகனுக்கு இராணுவ வேடமிட்டு தேடுதல் நடத்தப்பட்டது

'எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர்  மகனுக்கு இராணுவ சீருடை  அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்' என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தந்தையொருவர் தெரிவித்தார்.  இதேவேளை, 'எனது மகன் காணாமல் போகவில்லை. அவரை இராணுவத்தினர் கைது செய்தனர். எனவே அவரை காணாமற் போனவர் என்று கூறாதீர்கள்' என்றும் ஆணைக்குழுவினருடன் மேற்படி தந்தை முரண்பட்டுள்ளார். அத்துடன், 'எனது மகனான அருணகிரிநாதர் சுதன் காணாமற்போகவில்லை. எனது மகன் 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் நல்லூர் பகுதியிலுள்ள எமது வீட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுகொண்டிருந்த போது நல்லூர் அரசடி இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்' என்று கூறினார். இதனையடுத்து, 'எனது மகன் காணாமற்போன சில நாட்களின் பின்னர் கல்வியங்காட்டுப் பகுதியில் இரவு 1.30 மணியளவில் பச்சை நிறக் கண்ணாடி பொறுத்தப்பட்ட பிக்கப் வாகனமொன்றில் முகத்தை கறுப்பு துணியால் கட்டியவாறு வந்த இராணுவத்தினர் மக்களைத் தாக்கியதுடன், பாரிய சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்' என்று கூறினார். 'இந்திய அரசியல்வாதியொருவர் பூஸா சிறைச்சாலையில் இருப்போரைப் பார்க்கச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எனது மகன் இருக்கின்றார். அந்த புகைப்படம் எனக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தது' என்று சுதனின் தந்தை மேலும் சாட்சியமளித்தார்.

யுத்த குற்ற விசாரணை ரஷ்யாவால் முற்றாக நிராகரிப்பு

இலங்கை மீது யுத்தக்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென்று மேற்குலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ரஷ்யா முற்றாக நிராகரித்துள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமைகள் குழுவின் பணிப்பாளர் ஹெனடொலி விக்டோரவ் இதனைத் தெரிவித்தார், மேற்கு நாடுகள் இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணையை நடத்த முயற்சிப்பது எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் பிரிட்டனும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென்று கேட்கவுள்ளனர். கொழும்புக்கு வருகை தந்திருந்த ஹெனடொலி விக்டோரவ், இத்தகைய சர்வதேச விசாரணைகள் மூலம் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டுக்குள் நடைபெறும் ஆயுதப் போராட்டத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யார் மனித உரிமைகளை மீறினார்கள் என்பதை நிரூபிப்பது கடினமான செயல் என்றும் அவர் தெரிவித்தார். இவ்விதம் சர்வதேச விசாரணையை நடத்துவது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அமையுமென்றும் கூறினார். சீனாவும் எதிர்க்கிறது.

கனடா பிரஜை யாழில் உயிரிழப்பு

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையினர் தெரிவித்தனர். கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (14) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (15) உயிரிழந்தார். 'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம் என வைத்தியசாலையில் கடமை புரிபவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இவருடைய மரணத்திற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லையெனவும'; உறவினர்கள் தெரிவித்தனர்.  உயிரிழந்த நபர் திருமணமாகி ஒரு வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 16, 2014

சம்பந்தன் எதேச்சதிகாரமாம்

மாவை பதவி துறப்பு முயற்சி!

பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு. அப்போதெல்லாம் மாவை, நான் உங்களோட நிறைய பேசவேணும், இதில் பேச விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வந்தார். மாவையின் இந்த பேச்சின் அர்த்தம், அதன் உள்நோக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் ஏனையவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாவை மட்டும் ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏறத்தாழ ஆறு மாதங்களாக காத்திருந்தார். அப்படி என்ன வாய்ப்பு? அது தான் கடந்த 26.01.2014 அன்று கூடிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் சந்திப்பு!(மேலும்....)

தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஹீமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ள விரும்பினால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து தங்கள் நிலைப்பாட்டினை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் அரசாங்கக்கட்சியுடனும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் மற்ற கட்சிகளுடன் பேசுவது அவசியமென்று ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்ற போதிலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுவதற்கு பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்திருக்கிறார். (மேலும்....)

13 ஐ முழுமையாக அமுலாக்க ஜனாதிபதி தயாரில்லை - வாசுதேவ

இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் '13 ஆம் அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கலுக்கு அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி, தயாராக இல்லை' என்று சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகிறார். நாட்டில் 13 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக உள்ள சில அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அழைத்து சமூக நல்லிணக்க அமைச்சு நடத்தியுள்ள சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் வாசுதேவ இவ்வாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

நீங்களும் காணாமற் போயிருப்பீர்கள் - முருகன்


'எனது இரண்டு மகன்களும் காணாமற்போன நேரம் நீங்களும் (விசாரணைக்குழுவினர்) இங்கு இருந்திருந்தால் இந்நேரம் காணாமற்போய் காணாமற்போனோர் பட்டியலில் இணைந்திருப்பீர்கள் என்று' தனது இரண்டு பிள்ளைகள் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்த சாவகச்சேரியினைச் சேர்ந்த முருகன் தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.   கோப்பாய் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது.
(மேலும்....)

டில்லி முதலமைச்சர் அரவிந்த ராஜினாமா

டில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டில்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, டில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய முற்பட்டார். இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனத்தா கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கிடையே மசோதாவை டில்லி முதலைச்சர் தாக்கல் செய்தார் . எனினும் தொடர்ந்து அமளி நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. (மேலும்....)

தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு

இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்து தரப்பினரும் இணைந்து அனைவரது ஒத்து ழைப்புடனும், சிறந்த தீர்வொன்றை அடைய முன் வருவதே சிறந்த வழியாகுமென இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இவ்வாறு தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டம் திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனை தானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இரு நாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப் பட்டது. ஆக, இணக்கமில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என்றார். 13 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான். ஆனாலும், சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறார்கள். எம்மைப் பொறுத்த வரையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடைய முனைவதே சிறந்த வழி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பிரச்சினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

ஜெனீவாவில் தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேச தமிழ்த் தரப்பினருக்கு அருகதை கிடையாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழரைக் கொன்றதுதானே பிரச்சினை என்றால் அதற்குத் தலைமை தாங்கிய தளபதி சரத்திற்கே வாக்களித்து ஜனாதிபதியாக்க முனைந்தவர்கள் எப்படி அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்? ஒருவேளை ஜனாதிபதியாக சரத் பொன்சேகா வந்திருந்தால், தமிழ்த் தரப்பு வாயை மூடிக்கொண்டிருந்திருக்குமா, அவரது சுயரூபம் தெரியாது அவரை வெல்ல வைக்க முனைந்தவர்கள் இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்?

தமிழர் ஒற்றுமை, தமிழர் பலத்தை உலகறியச் செய்வோம்

ஆளுந்தரப்பில் அதிகாரம் கொண்ட தமிழர் ஒருவரை தெரிவு செய்ய அரிய சந்தர்ப்பம்

மக்கள் சேவைக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிவரும் நான் ஆளுங்கட்சியில் அதிகாரம் மிக்கதோர் இரும்புக்கரமாக உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேவை செய்ய வந்துள்ளேன். இதற்குத் தலைநர் வாழ் தமிழ் மக்கள், தமது ஒற்றுமையையும், பலத்தையும் உலகறியச் செய்யும் வகையில் என்னைத் தெரிவு செய்ய வேண்டும் என எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான கந்தசாமி கருணாகரன் வாரமஞ்சரிக்கு வழங் கியுள்ள விசேட பேட்டியில் தெரிவித்தார். ஜனாதிபதியின் நேரடியான வேட்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளருமாகிய என்னைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதன் மூலம் அரசாங்கத்தின் சகலவிதமான அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் தமிழ் மக்களையும் பங்குதாரர்களாக்குவேன் எனவும் கருணாகரன் தெரிவித்தார்.

 

பெப்ரவரி 15, 2014

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் -  த ஹிந்து

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம், மனிதஉரிமை மீறல்கள் மதிப்பீடுகள் வரும் போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, இந்திய அதிகாரி ஒருவர் த ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி, இதுதொடர்பாக மேலும் தகவல் வெளியிடுகையில், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான முயற்சியாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், கொழும்பு அதை வீணடித்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையுடன், முரண்டு பிடிப்பதாகத் தெரிகிறது. இலங்கையின் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கில், கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்த போதிலும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் தவிர, அவர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரியை அடையாளம் காட்டுவேன்

புலிகளின் மருத்துவப்பிரிவு பொறுப்பாளரின் மனைவி சாட்சியம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது கணவரை இராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும் அந்த இராணுவ அதிகாரியை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவப்பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா இன்று (14) சாட்சியமளித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப்புலிகளின் அங்கத்துவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் நானும் எனது கணவரும் பிள்ளைகளுமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எனது கணவரைப் தனியாகவும் என்னை தனியாகவும் விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர் எனது கணவரை வைத்தியர் சிவபாலன் மற்றும் விடுதலைப்புலிகளின் துணைமருத்துவப் பொறுப்பாளராக இருந்த மனோஜ் என்பவருடன் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். நாம் தனியாக ஒமந்தைச் சோதனைச் சாவடிக்குக் கொண்டு வரப்பட்ட போது அங்கு ஒரு வாகனத்தில் எனது கணவரும் மேற்குறிப்பிட்ட இருவரும் அமர்ந்திருப்பதை நான் அவதானித்தேன். அப்போது அங்கு விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுப்பொறுப்பாளர் தம்மோடு சரணடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் அறிவித்தனர். அங்கு எனது கணவர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு  ஒரு உயரதிகாரிக்கு முன்னால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நான் கண்டேன். அப்போது என்னை வட்டுவாகல் பிரதேசத்தில் விசாரணை நடத்திய அதிகாரியும் எனது கணவர் அங்கே இருக்கின்றார் எனக் காட்டினார். வட்டுவாகலில் எனது கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார். எனது கணவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் இருந்தாலும் அவரை சட்டத்திற்கு முன்பாக நிறுத்துமாறு நான் கோருகின்றேன்.

சட்டபூர்வமானாலும் தேர்தல்கள் நீதியானவையாவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய நிலையில் வட மாகாண சபையை அரசாங்கம் இவ்வாறு கலைக்க முடியாது. ஏனெனில் அது ஆளும் சட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அரசாங்கம் அம் மாகாண சபையை கலைப்பதாயின் அங்கு நிர்வாகத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்பட வேண்டும். அல்லது அவ்வாறான நிலைமையை அரசாங்கமே உருவாக்க வேண்டும். அதுவும் நடக்கலாம். மாகாண சபை பிரிவினை வாதத்திற்கு துணை போகிறது என்ற என்ற நிலைமை உருவாகினாலும் அரசாங்கம் மாகாண சபையை கலைக்க முடியும். மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தீவிரவாத போக்குள்ள உறுப்பினர்கள் அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்கலாம். ஏனெனில் தமது மக்களின் நலனை காப்பதை விட தமிழ் மக்களை நோவினை செய்வதில் இன்பம் காணும் சிங்கள சக்திகள் இருப்பதைப் போலவே தமிழ் மக்களின் நலனை காப்பதைப் பார்க்கிலும் சிங்கள தலைவர்களை நோவினை செய்வதில் இன்பம் காணும் தமிழ் சக்திகளும் இருக்கின்றன. இவ்வாறானவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் இருக்கிறார்கள்.
(மேலும்....)

அமெரிக்க நவீன பூர்வீகக்குடிகள் ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

12,600 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ஆண் குழந்தையொன்றின் எச்சங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுவானது நவீன அமெரிக்கர்களினது பூர்வீகக் குடியினர் ஆசியாவிலிருந்து நீண்ட காலத்திற்கு முன் மறைந்த நிலப்பாலமொன்றினூடாக அமெரிக்காவை வந்தடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றின் ஆய்வொன்று கூறுகின்றது. 12600 ஆண்டுகளுக்கு முன்னர் மொன்டானாவில் புதைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையினது எச்சங்கள் கொல்விஸ் கலாசாரத்தை சேர்ந்த அங்கத்தவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அமெரிக்காவில் முதன்முதலாக குடியேறிய பூர்வீக குடிகள் சுமார் 15000 வருடங்களுக்கு முன் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என நிரூபணமாகியுள்ளதாக மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய டொன்மார்க்கின் கொப்பெனேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இஸா வில்லர்ஸ்லெவ் தெரிவித்தார். இதுவரை காலமும் அமெரிக்க பூர்வீக குடிகள்  அமெரிக்காவிலிருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. மேற்படி கொல்விஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாலகனின் குடும்பத்தினர் தற்போது நவீன அமெரிக்கா பூர்வீக குடிகள் 80 சதவீதத்தினரது  நேரடி மூதாதைகளாவர். இந்த பாலகனது மரபணுக்களானது கனடாவிலுள்ள பூர்வீகக் குடிகளை விட மத்திய மற்றும் தென் அமெரிக்க பூர்வீக குடிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக உள்ளது.

பெப்ரவரி 14, 2014

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறது சோனியாவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு

லோக்சபா தேர்தலில் தி. மு. க. காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக சோனியா காந்தியை கனிமொழி திடீரென சந்தித்து பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று தி. மு. க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தி. மு. க. காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று கருணாநிதி மற்றும் மு. க. ஸ்டாலின் அறிவித்தனர். ஆனால் தி. மு. க.வில் மு. க. அழகிரி, தயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் தி. மு. க. - காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சிகளை மும்முரமாக்கினர். தி. மு. க., காங். கூட்டணியை ஏற்பார்கள். இந்த சந்திப்புக்குப் பின்னர் தி. மு. க., காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் மக்கள் ஏற்பார்கள் என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்து பேசிவருகிறார். இதனால் தி. மு. க. காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனிடையே வீரப்ப மொய்லி அல்லது ஏ. கே. அந்தோணி சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி திடீரென சந்தித்து பேசியிருப்பது தி. மு. க., காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவாக இருந்த கனிமொழியை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக கனிமொழி டில்லி சென்றார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற கனிமொழி, டில்லியில் சோனியாகாந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். தி. மு. க., காங். கூட்டணி உறுதியாகிறது.

நகர வாழ்வுக்கு ஏற்ப பறவைகள் பரிணாம மாற்றம்

உலகின் பல பகுதிகளில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் ஏராளமான பறவை இனங்களும், தாவர இனங்களும் சூழலுக்கேற்ப தம்மை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதாக பெரிய அளவில் செய்யப்பட்ட உயிரியல் ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காக உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் பறவை இனங்களும் தாவர இனங்களும் ஆராயப்பட்டன. இந்த ஆய்வின்படி பறவை இனங்களில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை நகர்ப்புறங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசுமையான வெளிகளையும் தாவரங்களுக்கு சாதகமான சுற்றாடலையும் பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதையே இது வலியுறுத்தியிருக்கிறது. நகர்புற வாழ்க்கைக்கு தம்மை மாற்றிக் கொண்ட பறவை இனங்களுக்கு உதாரணமாக, புறாக்களையும் சிட்டுக்குருவிகளையும் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள் தாவரங்களுக்கு உதாரணமாக புல்வெளிகளில் வளரும் புற்களை குறிப்பிடுகின்றனர்.

தனியார் மயமாக்கலிலிருந்து வங்கிகளை மட்டுமல்ல அரச நிறுவனங்களையும் பாதுகாத்துள்ளோம்

பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பயனை மக்கள் அனுபவிக்கின்ற தற்போதைய சூழலில் அதற்கான எதிர் பிரதிபலன் தமக்கு ஜெனீவாவிலிருந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரும் போதும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டமை பெரிதெனக் கருத முடிவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்காவிட்டால் நாட்டில் இன்றைய நிலையைக் கட்டியெழுப்ப முடிந்திருக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவிருந்த டி. பி. இலங்கரத்னவினால் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தின் மூலம் மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த வங்கிகளில் ஏகாதிபத்தியவாதிகளின் நிர்வாகமே இருந்தது. ஆங்கிலத்தில் மட்டுமே அது தொழிற்பட்டது. கிராமிய மக்கள் பயனடையும் வகையில் அவர்களின் விவசாயம், கைத்தொழில்களுக்கு கைகொடுக்கும் வகையில் அவர்களுக்கான கடன்களை வழங்கும் பாரிய எதிர்பார்ப்புடனேயே மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னரே சிங்களத்திலும் தமிழிலும் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

நெடுந்தீவு கடற்பரப்பில் 29 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் நுழைய மாட்டோம், தடை செய்யப்பட்ட மீன் பிடிவலைகளை பயன்படுத்த மாட்டோம் என்ற அறிவித்தலை விடுத்த ஒரு சில மணி நேரத்திலேயே இலங்கை கடற்பரப் பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 29 பேர் நெடுந்தீவுக்கு அருகே நேற்று கைது செய் யப்பட்டுள் ளனர். 29 தமிழக மீனவர்களுடன் அவர்களது 7 வள்ளங்களையும் கைப்பற்றியதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். தமிழகத்தின் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். நாகை மற்றும் புதுக்கோட்டை இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கூடிய தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதில்லை, தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை உபயோகிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருந்தனர் எனினும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே வந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.

காதலர் தினத்தில்

இராணுவத்தின் வித்தியாசமான காதல் பரிசு

உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்க தீர்மானித்துள்ளது. 2008 ஜுலை 25 ஆம் திகதி மாங்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கரொன்றை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நளின் குமார எனும் இராணுவ வீரர் காயமடைந்ததோடு இவரின் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னர் நளின் குமாரவுக்கு பெண் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் காணாமல் தொலைபேசியிலே காதல் செய்துள்ளனர். இருவருக்கும் நேரில் சந்திக்க அவகாசம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் நZன் பார்வையை இழந்து அங்கவீனமுற்ற போதும் அவரின் காதலி அவரை கைவிடவில்லை. இருவரும் திருமணம் செய்துகொண்டதோடு இவர்கள் நளினின் சிறிய வீட்டிலே வாழ்ந்து வந்தனர். இது குறித்து அறிந்த இராணுவ சமிக்ஞை படைப் பிரிவு தளபதி ஜெனரல் அபேசேகர இவர்களுக்கு தலாவ பகுதியில் வீடொன்றை கட்டியுள்ளதோடு காதலர் தினமான இன்று அதனை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரி 13, 2014

புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்

புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார். (மேலும்....)

இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்

 தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இயக்குநர்கள் பாலா, அமீர்இ ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை குறித்து விசாரித்தனர்.   உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் 11 மணியளவில் அவர் காலமானார். (மேலும்....)

13ஆவது திருத்தத்தை திணிக்கவில்லை - சல்மான் குர்ஷித்


13ஆவது திருத்தத்தை இலங்கை அரசின் வேண்டுதலில்லாமல் நாங்கள் ஒருபோதும் திணிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை ஊடகவியலாளர்களை புதுடில்லியில் இன்று சந்தித்துரையாடும்போது தெரிவித்தார். இலங்கையிலுள்ள உயர்மட்ட ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் புது டில்லியை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இலங்கை ஊடகவியலாளர்கள் இன்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(மேலும்....)

காகித ஆலை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காகித ஆலை வளவிற்குள் நேற்று செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டமானது தங்களுக்கு  வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சம்பளக் கொடுப்பனவானது கடந்த  2 மாதங்களாக இது வரை வழங்கப்படவில்லையென்று தெரிவித்து தொடர்ந்து 22 நாட்களாக ஆலை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடாமல் தங்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப் பெற வேண்டுமென கோரி கோஷங்கள் எழுப்பியும் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறும் ஆலை முகாமைக்கு கண்டனம் தெரிவித்து இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காகித ஆலை நிர்வாகமே 75 ற்க்கு மேற்பட்ட இரும்பு லொறிகள் விற்ற பணம் எங்கே. இரண்டு மாதச் சம்பளப்பணத்தை தராமல் ஏமாற்றும் முகாமையே வெளியேறு, ஏழை ஊழியர்களின் இரத்தம் உறிஞ்சும் தலைமை அதிகாரியே உன்னை வெளியேற்றுவோம், தொழிலாளர்களுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகாமையே இது உனக்குத் தேவையா,  எமது பிள்ளைகளின் பசி, பட்டினியோடு தவிசாளர் சுகபோக வாழ்க்கை என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டுவதில்லை; தமிழக மீனவர்கள் முடிவு

தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்கு மடி வலைகள், இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது இல்லை என்றும் இன்று 13 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இந்திய எல்லை தாண்டி செல்வதில்லை என்றும் இராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், நாகை, திருவாரூர், இராமனாதபுரம் ஆகிய ஆறு மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இவ்வாறு முடிவு செய்துள்ளனர். இந்த அறிவித்தலை தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்காக சென்ற இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு நேற்று தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சும், மன்னார் மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் அல்பர்ட் ஜஸ்டின் சொய்ஸாவும் தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கடந்த 10 ஆம் திகதி முதல் இந்த முடிவை எடுப்பதாக இணக்கப்பாடு எட்டப் பட்டிருந்தது. எனினும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமிழகத்திலுள்ள கரையோர மாவட்டங்களிலுள்ள மீனவர் சங்கத் தலைவர்களைச் சந்தித்து கூட்டங்களை நடத்தி அறிவிப்பதற்கு முடியாமல் போன காரணத்தினாலேயே இன்று 13 ஆம் திகதி முதல் இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக மீனவ பிரதிநிதிகள் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

நியூசிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 75 பேரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். படகுகள் மூலம் கடல் வழியைப் பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த இவர்கள் பேருவளை, மொரகல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று அதிகாலை 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 60 ஆண்களும் 9 பெண்களும் மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பொதிகள் மற்றும் உடைகள் மீட்டெடுக்க ப்பட்டுள்ளதுடன் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் பட்ட வான் ஒன்றையும் பேருவளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 75 பேரில் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் செயற்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட ‘அம்பி’ என்று அழைக்கப்படும் கணபதி நிமலதாஸ் என்பவரும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கிளிநொச்சி, பளை, பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 2007ம் ஆண்டு கடற்புலிகள் பிரிவில் இணைந்து பயிற்சி பெற்றுள் ளதுடன் கடற் புலிகளுக்கு மருத்துவ உதவியாளராக செயற்பட்டுள்ளார் என்றார்.

அமெரிக்க தூதருடன் மோடி சந்திப்பு

பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு எதிரான, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதர், நான்சி பவல் இன்று மோடியை சந்தித்து பேசவுள்ளார். குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.ஆட்சியில் உள்ளது இங்கு, 2002 ல் நடந்த, மத கலவரத்தை, முதல்வராக இருந்த மோடி, கட்டுப்படுத்த தவறிவிட்டார் என, அவர் மீது, பலதரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இதை காரணமாக வைத்து, அமெரிக்கா செல்ல, மோடிக்கு, ‘விசா’ வழங்க, அமெரிக்கா மறுத்து வந்தது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப் பட்டார். மோடிக்கு ஆதரவாக, நாடு முழுவதும் அலை வீசுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நட த்திய கருத்துக்கணிப்புகளில், வரும் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அமெரிக்காவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உள்ளது. மோடி புறக்கணிப்பை கைவிட, அதிபர், ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர், நான்சி பவல், இன்று வியாழக்கிழமை மோடியை சந்தித்து பேச உள்ளார். இதற்கான, அனுமதி கோரி, மத்திய அரசிடம் அவர் விண்ணப் பித்துள்ளார். குஜராத் கொலைகாரன் என்று குற்றம்சாட்டி இரட்டை வேடம் பூண்ட அமெரிக்கா தற்போது தனது வேஷத்தைக் கலைத்து தன்னைப் போன்ற கொலையாளியுடன் கை கோர்கின்றது.

13 மாதங்கள் கடலில் தத்தளித்தவர் நாடு திரும்பினார்

பசிபிக் பெருங்கடலில் 13 மாதங்கள் தனியே படகில் பயணித்து உயிர் தப்பி அவுஸ்திரேலியாவின் தீவொன்றில் கரையொதுங்கிய எல் சால்வடார் நாட்டுக்காரர் ஜோசே சால்வடார் ஆல்வரெங்கா மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் மார்ஷல்ஸ் தீவுகளில் கரையொதுங்கிய ஜோசே ஆல்வரெங்கா அங்கிருந்து விமானம் மூலம் எல் சால்வடார் நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டார். விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்களுடன் அவரால் பேசக்கூட முடியவில்லை. தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்ட அவர், உணர்ச்சிவசப்பட்டு அழும் நிலைக்கு வந்துவிட்டார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்திருந்த அவரது மகளால்கூட அவரை நினைவுகூர முடியவில்லை. ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக அவர் மெக்ஸிகோவில் வசித்து வந்திருக்கிறார். பசிபிக் பெருங்கடலில் அவர் ஒரு சிறிய படகில் 13 மாதங்கள் தனித்து விடப்பட்ட நிலையிலும் தப்பிப் பிழைத்ததாக அவர் கூறும் கதையை பலர் நம்ப மறுத்தாலும், மெக்ஸிகோவிலிருந்து வரும் விவரங்கள் அவரது கூற்றை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

பெப்ரவரி 12, 2014

மூன்றாம் தரப்பின்றி முடியாது - சி.வி.

மூன்றாம் தரப்பின் உதவி இல்லாமல் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதென்பதுடன், இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித தீர்வையோ, வேறு எதனையோ பெற்றுக்கொள்ள முடியாதென்றும்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு  செவ்வாய்க்கிழமை (11) விஜயம் செய்த ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஹாலியாங் சூவுடனான  சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.  (மேலும்....)

கமலேந்திரனின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் விடுவிக்க கோரி யாழ். மேல் நீதிமன்றில் அவரது சட்டத்தரணியான முடியப்பு ரெமீடியஸினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.குறித்த மனுவில், "கந்தசாமி கமலேந்திரன் நீண்ட காலமாக ஜனநாயக செயற்பாட்டில் ஈடுபட்டு, தற்போது வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக கடமையாற்றி வருகின்றார். கடந்த 2 மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் இருக்கின்றதாகவும், ஆதரவாளர்களின் கொள்கைக்கு ஏற்றவாறு மாகாண சபையில் மக்களின் தேவைகளை எடுத்துக்கூற வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இவரின் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், இது தொடர்பில் றெக்ஷசினின் மனைவியும், ஜசிந்தன் என்ற இளைஞனும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 11, 2014

கல்முனையில் தமிழ், சிங்கள் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கல்: ரண்முத்துகல சங்கரத்ன தேரர்

தமிழ், சிங்கள மக்கள் திட்ட மிடப்பட்ட வகையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்க முன்  வர வேண்டும் என கல்முனை ஸ்ரீ சுபத்திர ராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனைப் பிரதேசத்தில் மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் இங்குள்ள தமிழ் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அபிவிருத்தித்திட்டங்கள் போதியளவு முன்னெடுக்கப்படாதுள்ளது. இதனால் கல்முனை வாழ் தமிழ் சிங்கள மக்கள் அபிவிருத்தி திட்டங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர். (மேலும்....)

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மேலும் ஒரு மனித எலும்புக்கூடு மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி  21 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை  மீண்டும் தோண்டப்பட்ட போது குறித்த புதை குழியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றது. இதன் போது மேலும் 1 மனித எலும்புக்கூடு  உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும்  உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 59 ஆக அதிகரித்துள்ளது. கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் மேலும் 2 மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது வரை 33எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாளை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5000 கிலோ மீன்களுடன்

30 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல் படையால் கைது

5000 கிலோ மீன்களுடன் 30 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது. திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இம்மீனவர்களின் 5 வள்ளங்களையும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் 30 பேரும் தமிழக எல்லைப் பகுதியில் நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணியிலிருந்து 48 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்தபோதே கைதாகியுள்ளனர் என்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கிறது.

தெலுங்கானா விவகாரத்தால் நேற்றும் நாடாளுமன்றின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

தெலுங்கானா உள்ளிட்ட விவகாரங் களால் நாடாளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. அமளி காரணமாக மக்களவையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர். 15வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 5 ஆம் திகதி தொடங்கியது. இதில் பல முக்கிய சட்டங்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல்நாளே தெலுங்கானா விவகாரம், சீக்கிய கலவர பிரச்சினை, ஹெலிகொப்டர் ஊழல் விவகாரம், அருணாச்சல் பிரதேச மாணவர் கொலை விவகாரம் உட்பட பல பிரச்சினைகளை வலியுறுத்தி பல கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த வாரம் முழுவதும் தெலுங்கானா பிரச்சினையை ஆந்திர மாநில எம்.பிக்கள் எழுப்பினர். இந்நிலையில் 2 வது வாரத்தின் முதல் நாளாக நாடாளுமன்றம் நேற்றுக் காலை கூடியது. மக்களவை தொடங்கியதும் தெலுங்கானா பிரச்சினையை ஆந்திர எம்.பிக்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநிலங்களவை 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மக்களவையிலும் தெலுங்கானா உள்ளிட்ட விவகாரங்களில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளும் கூடிய ஓரிரு நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப் பட்டன.

புற்றுநோய் என்பது வாழ்வின் முடிவல்ல் அவதானமாக இருப்பின் மீட்சி பெறலாம்

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் இன்று பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த புற்றுநோய் காரணமாக அநேகமான பெண்கள் உயிரிழப்பதற்குக் காரணம் அவர்களைப் பற்றியிருக்கும் வெட்கம் மற்றும் அக்கறையின்மை ஆகும். 'புற்றுநோய்' என்றதுமே இறுதி முடிவு 'மரணம்' தான் என எண்ணுவது மூடநம்பிக்கையாகும். விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் புற்றுநோயினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது என்னவோ மறுக்கமுடியாத உண்மையாக இருந்த போதிலும், அதே விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிகாரங்களை எமக்காக பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. (மேலும்....)

பெப்ரவரி 10, 2014

பிரேம்ஜீ ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நீண்டகால செயலாளரும் தினகரன் ஆசிரியர் பீட முன்னாள் ஆலோசகருமான பிரேம்ஜீ ஞானசுந்தரம் நேற்று கனடாவில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 84 ஆகும். இலங்கையிலிருந்து 1990 ஆம் ஆண்டு முதல் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த இவர் திடீர் சுகயீனமுற்று நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அச்சுவேலி கிராமத்தில் 1930.11.17ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு - 15 மட்டக்குளியில் நீண்ட காலமாக வசித்து வந்தார். இலங்கை கம்யூனிஸ் கட்சியின் (ரஷ்யன் வில்) நீண்டகால செயற்பாட்டாளராக இருந்த இவர் முற்போக்கு இலக்கியங்களை படைப்பதற்கு தன்னை அர்ப்பணித்து முழுமையாக செயற்பட்டவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாட்டிற்கு ஜீவநாடியாக திகழ்ந்த இவர் தேசாபிமானி, சுதந்திரன், புது யுகம் சோவியட் நாடு, சோவியட் செய்தி மடல், சக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அவர் பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அத்துடன் துரைவி நினைவு விழாவில் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார்.

வட பகுதியில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை கண்டறிய வேலைத் திட்டம்

வட பகுதியில் பெண் கள், சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் கண்டறியும் ஒரு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இது பற்றித் தெரிவித்தார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்விடயமாக மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். யாழ்ப்பாணம், ஸ்ரீஜயவர்தனபுரம், களனி, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டது. கெயார் சர்வதேச நிதி உதவியுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த ஆய்வின் முதற் கட்டம் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாண மாவட்ட, பிரிவுச் செயலகங்களில் சிறுவர், மகளிர் அபிவிருத்தி பிரிவுகள் மூலமாக இத்திட்டத்தை மேற்கொள்ளவும் அமைச்சு கருதியுள்ளது.

பெப்ரவரி 09, 2014

எமது அரசியல் தலைவர்களை நாமே கொன்றமையை மன்னிக்க முடியாது - முதலமைச்சர் சி.வி.

நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொலை செய்தமையினாலேயே என்னைப் போன்ற ஓய்வுபெற்றவர்களும் அரசியலுக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொன்றமை மன்னிக்க முடியாத குற்றமாகும் எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “எங்களுடைய இனம் போரினால் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எம்மில் புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களில் பலர் இன்று புத்திஜீவிகளாகத் திகழ்கின்றனர். ஆனால் போரினால் மிகவும் பாதிப்படைந்துள்ள நாம் இன்று எமது கல்வியைத் தொலைத்தவர்களாக பின்னிலையிலுள்ளோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குகின்ற பொழுது இங்கிருக்கின்ற எம்மவர் மட்டும் கல்வியைத் தொலைத்தவர்களாக இருக்கின்றமைக்கு நாம் வாழ்ந்த சூழலே காரணமாக அமைந்துள்ளது. இதேவேளை எமது அரசியல் தலைமைகளை நாங்களே கொலை செய்தமையினாலும் நாம் நீண்டதொரு வெற்றிடத்தினை எதிர்கொண்டு வருகின்றோம். எமது தலைமைகளை நாங்களே கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பினரால் ஏமாற்றப்படுகிறோம்

பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்த போதிலும் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகின்றோம் என பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள் இன்று (09) தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவனாந்தாவின் செயலகத்தில் இன்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன்போது, பருத்தித்துறை நகரப் பகுதியில் அமையப்பெற்றுள்ள அங்காடியின் மேற்தளத்தில் மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளின் போது தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் எடுத்துரைத்துள்ளனர். குறித்த அங்காடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கடைத்தொகுதியும், மேற்தளத்தில் மரக்கறி கடைத் தொகுதியும் இருப்பதனால் நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் தமக்கு கீழ்தளத்தில் மரக்கறி கடைத்தொகுதிகளை அமைத்து தருமாறு நகரசபைத் தலைவரிடம் தாம் கோரியிருந்த போதிலும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தாத நகரசபைத் தலைவர் தமது கோரிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் மரக்கறி வர்த்தகப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் கபடத்தினை வெளிக்கொண்டு வருவது காலத்தின் தேவை

போரில் பாதிக்கப்பட்டது தமிழினம் மட்டும்தானா?

கொன்று குவிக்கப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை கருத்திலெடுக்காது ஏன்?

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அரசினை பொறியில் சிக்க வைப்பதற்கான பிரேரணை ஒன்றை அமெரிக்கா கொண்டுவந்தே தீரும் என்ற கருத்துக்களும் அது தொடர்பில் வாதப்பிரதி வாதங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக் காவிற்கு திடீரென பாசம் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? இந்த நாட்டில் காணப்படும் மற்றுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தை கருத்திலெடுக்காது தனியே வடக்குத் தமிழினம் மட்டும் தான் பாதிப்படைந்தது என்றவாறான ஒரு தோற்றப்பாட்டையே மிகைப்படுத்தி வருகின்றமைக்கான காரணம் தான் என்ன? என்பன தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது தற்போது அத்தியாவசியமாகின்றது. இவ்வாறான ஓர் அவதானம் செலுத்துவதென்பது வடக்கு தமிழ் சகோதரர்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களை புண்படுத்துவதற்காகவோ அல்ல. மாறாக அமெரிக்காவின் கபடத்தினை வெளிக்கொண்டு வருவதே இங்கு பிரதான நோக்கமாகும்.(மேலும்....)

புலிகளினால் காணாமல் போயுள்ள முஸ்லிம்கள்

சுமார் 5,000 முஸ்லிம்கள் புலிக ளினால் காணாமல் போயுள்ளதாக காணாமல் போயுள்ளோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விடம் இதுவரை முறையிடப் பட்டுள்ளது என இந்த ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தலைமையி லான குழுவினர் குறித்த ஆணைக்குழுவின் தலைவ ரினை கொழும்பிலுள்ள ஆணைக் குழுவின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது புலிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடுவதற்கு அவர்களை கொழும்புக்கு அழைத்து வரும்படியும் அவர் தெரிவித்தார். அத்துடன் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை ஆணைக்குழுவிடம் வழங்குமாறும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் 2ஆம் வாரத்தில் மட்டக்களப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்புடன் செயற்பட்டேன் -  சந்திரிக்கா

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்  சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்புடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பெங்களூர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே வலியுறுத்தினேன். ஆனால் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதனை புலிகள் விரும்பவில்லை. இதேவேளை சர்வதேச மத்தியஸ்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரினேன். இந்நிலையில் தமது உயிருக்கு விடுதலைப் புலிகளால்அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்னதாகவும், அதன் பின்னரும் புலிகள் என் உயிரை காவு கொள்ள முயற்சித்தனர். ஆனால் நான் ஆரம்பித்து வைத்த வைத்தியசாலைகளில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஒரே நேரத்தில்முன்னெடுத்து வந்தேன் என்றார்.

சம்பந்தனின் சர்வாதிகார போக்கு தமிழ் தேசிய ஓற்றுமையை சிதைத்து விடும் இரா.துரைரத்தினம்

சில தினங்களுக்கு முதல் என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது கூறிய விடயம் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் மீது தமிழ் மக்கள் எவ்வளவு வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. என்னை சம்பந்தனுக்கு சார்பான ஆளாக காட்டிக்கொள்ள வேண்டாம். நான் சம்பந்தனின் ஆளும் இல்லை, இப்போது இருக்கும் சூழலில் சம்பந்தனின் ஆள் என்று என்னை அடையாளம் காட்டினால் நான் யாழ்ப்பாணத்தில் கால் வைக்க முடியாது என எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் அந்த நண்பர் என்னிடம் கூறினார். அடிமட்ட மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மதிக்க தெரியாத நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் இருக்கிறார் என்பதற்கு இது போன்ற பல காரணங்களை கூறலாம். (மேலும்....)

உள்வீட்டு மோதல்களினால் சிக்கித் தவிக்கும் கட்சிகள்

  • மனைவிக்கு ஆசனம் வழங்கப்படாமையால் UNP யுடன் மேயர் கடும் சீற்றம்

  • தலைவர் மாற்றத்தினால் JVP கட்சி இரண்டு குழுக்களாகப் பிளவு

  • மனோ தம்மை பலிக்கடாவாக்குவதாக ஜ. ம. மு. வீரர்கள் மெளன யுத்தம்

  • தன்னிச்சையான கருத்துக்களால் தமிழ்க் கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு

மேல் தென் மாகாண சபைத் தேர்தல் களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ததிலிருந்து பிரதான எதிர்க்கட்சிகள் சகலவற்றுக்குள்ளும் பாரிய உட்கட்சி மோதல்கள் ஆரம்பித்துள்ளது அவதானிக்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடையே இந்த உட்கட்சி மோதலைக் காணக் கூடியதாகவுள்ளது. (மேலும்....)

பெப்ரவரி 08, 2014

புலி சந்தேகநபர்கள் 13 பேர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில்  வைத்து கைது செய்யப்பட்ட 13 பேர் சென்னை நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் 12 பேர் உட்பட்ட 25 பேர் செய்மதி தொலைபேசிகள் உட்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?: 

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். (மேலும்....)

சபாலிங்கத்தின் கொலையை வழிப்படுத்தியது யார்? சபாலிங்கத்தை கொலை செய்யும் கட்டளை தலைமையிடம் இருந்து வந்ததா?

சபாலிங்கத்தை கொல்லும் கட்டளை தலைமையிடமிருந்தே வந்ததாகத்தான் அறிகிறேன். காரணம் சபாலிங்கமும் ஈழபோராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையில் இருந்தவர் ஆரம்ப காலத்தில் பிரபாகரனிற்கும் நெருக்கமாக இருந்ததோடு அவரது தலைமறைவு வாழ்க்கை காலத்தில் பரந்தன் உப்பள பகுதியில் பிரபாகரன் மறைந்திருக்க உதவியவர். இவர் பின்னர் பிரான்சிற்கு இடம்பெயர்ந்த பின்னர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் பற்றி ஒரு ஆவணப் படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆவணப்படம் வெளியானால் பிரபாகரனின் பெயரிற்கு களங்கம் ஏற்படும் என்பதாலேயே சபாலிங்கத்தை கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தை விபரமாக தாராகி சிவராம் அவர்களே தாயகம் பத்திரிகையில் முன்பு எழுதியிருந்தார்.

காற்றாலை மின்னுற்பத்தியை அதிகரிப்பதனால் உலகில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணலாம்

காற்றுத் திறன்  (Wind power)  அல்லது காற்று மின்சாரம் (wind electricity)  எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின் திறன் செலுத்தல் தொகுதிகளில் இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருள் சக்தியின் மாற்றுச் சக்தி முறையொன்றாகக் காற்றுத் திறன் காணப்படுகின்றது. (மேலும்....)

நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப்படுத்தியது யார்?

புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவு பொறுப்பாளராகவும் பிரான்ஸ் பொறுப்பாளராகவும் இருந்த லோறன்ஸ் திலகரே நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப் படுத்தினார். ஆனால் இந்தக் கொலைகளை பல கோணத்தில் ஆராய்ந்த பிரெஞ்சு காவல் துறை புலிகளே இதனை செய்தார்கள் என்று தீர்மானித்து அவர்களை நோக்கி விசாரணைகளைத் திருப்பினர். கைதாவதில் இருந்து தப்பிக்கும் முகமாக லோறன்ஸ் திலகர் வன்னிக்கு தப்பிச் சென்றார். நாதன், கஜன் கொலையை நன்கு திட்டமிடாமல் சொதப்பியதற்காக தலைமையால் திலகரின் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிலகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். வன்னி சென்றிருந்த திலகரின் தொடர்புகள் ஏதும் கிடைக்காததால், பிரான்சில் வாழ்ந்து வந்த அவரின் மனைவி அவரின் உறவினர்களிடம் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 07, 2014

நம்பிக்கைக் கீற்று

(சுகு-ஸ்ரீதரன்)

அமைச்சர் டக்ளஸ்- தேவானந்தாவின் முன்முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர குமார்; இணைந்து ஜனாதிபதி-அரசின் உதவியுடன் கிளிநொச்சியில் அறிவியல் நகரம்- பொறியியல் கல்லூரி- விவசாய பீடங்களைச் சாத்தியமாக்கியது வன்னியின் கிழக்கு வடக்கின் எதிர்காலத்திற்கான பெரு நம்பிக்கைக் கீற்று. இவை சாதாரண காரியங்கள் அல்ல. இவை வன்னியைப் பொறுத்தவரை வன்னியின் வாழ்வில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.   வன்னி மற்றும் வடக்கு- கிழக்கின் கல்வி அறிவியல்- தொழில் நுட்ப -தொழில் துறை -விவசாய மீன்பிடி- இயற்கைப்பாதுகாப்பு -வறுமை ஒழிப்பு- சூழலியல் விடயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அறிவுத்தாகமும் சமூக மலர்ச்சியும் விளைவோருக்கு இது நம்பிக்கை அளிக்கும் செய்தி. (மேலும்....)

பொறியியல் பீட அங்குரார்ப்பணம்

கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பொறியியல் பீடம், உயர் கல்வி அமைச்சின் 1.54 பில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் 4 கட்டிடங்களைக் கொண்டதாகவும் மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது என உப வேந்தர் தெரிவித்தார். இதில் முதலாம் வருடத்தில் 50 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதுடன், பொறியியற் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி டாக்டர் அற்புதராஜா கடமையாற்றவுள்ளதாக உப வேந்தர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் பொலித்தீனுக்கு தடை

உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்  05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில்  20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்படுமென்பதுடன், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்னும் தலைப்பில் வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறினார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '20 மைக்ரோவும் அதற்கு குறைவான தரமுள்ள பொலித்தீன் பைகள் பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம்  தடைசெய்துள்ளது. இருப்பினும்,  தரம் குறைந்த பொலித்தீன் பைகள் தென்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வடமாகாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு  20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன்களை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்.

இலங்கையை புறக்கணித்தது இந்தியா

180 நாடுகளுக்கான உடனடி வருகை விசா மற்றும் மின்னணு பயண அங்கீகாரத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ள இந்திய அரசாங்கம், இந்த திட்டத்துக்குள் இலங்கை, பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட எட்டு முன்குறிப்பு நாடுகளை புறக்கணித்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் இணையதளம் மூலம் பயண அனுமதிக்கு விண்ணப்பித்தால் அதனைத் தொடர்ந்த ஐந்து வேலை நாட்களுக்குள் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கான உட்கட்டமைப்பு வேலைகள் நிறைவுபெற 5, 6 மாதங்கள் ஆகக்கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று இந்திய திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 180 நாடுகளுக்கு அளிக்கக்கூடிய இந்தத் திட்டம், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சின், ஹைதராபாத், கோவா, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஒன்பது விமான நிலையங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு இந்த உடனடி விசா வருகை நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.பிற நாடுகளுக்கான இந்த விஸ்தரிப்பு சுற்றுலா, உள்துறை, வெளியுறவுத்துறை, பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட திட்டக்கமிஷன் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பெப்ரவரி 06, 2014

எக்ஸோடஸ் 84--  5

சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.

(நடேசன்)

அமிஞ்சிக்கரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரடசிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார். என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. (மேலும்....)

ஐ.நா இற்கு உரிமைக் குரல் கொடுக்க போகமாட்டேன் - அனந்தி

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தான் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை கடந்த 27 ஆம் திகதி அனுமதி வழங்கியது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனந்தி மாகாண சபையில் அன்றைய தினம் முன்வைத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அனந்தி, 'அனந்தி மட்டுமல்ல இன்னும் பல உறுப்பினர்கள் அங்கு செல்ல வேண்டும்' என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த சபைத் தவிசாளர், 'அது மாகாண சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டது. இதனால் அவர்கள் தீர்மானம் எடுத்து ஜெனீவா செல்லலாம்' என்றார். அத்துடன், அங்கு கூட்டத் தொடரில் கலந்துகொள்ள முடிந்தால் கலந்துகொள்ளலாம் இல்லையேல் வெளியில் நின்று ஆதரவளிக்கலாம் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

அமெரிக்கா கோரிய ரகசிய தகவல்கள் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக்

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கோரிய ரகசிய தகவல்கள் குறித்த பட்டியலை கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களாக கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் நிறுவனங்களிடம் இருந்து பெருவாரியான ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு அமைப்புகள் உறிஞ்சி எடுத்துள்ளன. அந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுசெயல்படுகின்றன. இதனால் வெளிநாட்டு உளவு பார்ப்பு சட்டத்தின் (எப். ஐ. எஸ். ஏ.) மூலம் பெரும்பாலான நிறுவனங்களை மிரட்டி கொத்து கொத்தாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உலகம் தழுவிய உளவு வேட்டையை அந்நாட்டின் உளவு அமைப்பான என். எஸ். ஏ. வின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். (மேலும்....)

ரொரன்ரோவின் கோவில்கள்

அண்மையில், எனது நண்பி ஒருவர் டொராண்டோவில் ஒரு warehouse இல் புதிதாக தொடங்கிய அம்மன் கோவிலுக்கு கூட்டிச்சென்றார். சிறிய இடத்தில், இந்து சமயத்தில் எத்தனை சாமிகள் இருக்கோ அத்தனை சாமிகளையும் நாலாபக்கமும் வைத்திருந்தார்கள். அதைவிட ஊர் சாமிகளின் பெயரில் சிலைகள் அதற்கும் மேலாக ஊரில் புழக்கமில்லாத ஐயப்பன்சாமி சிலை அதற்கு ஏணிப்படி வேறு , அதைவிட சுத்தி கும்பிட இடமில்லாமல் காலுக்குள் இடறுப்படும் ஆயிரத்தெட்டு உண்டியல்கள், மேலும் கைகளுவுவதற்கு வாஸ்ரூம் போனால் அது இன்னும் ஒருபடி மோசம். கடைசியாக வெளியே வரும்போது கோவில் தொண்டர் ஒருவர் ஆளுக்கு ஒரு பிரசாத பெட்டியை தந்தார், நான் கையை பிசைந்து கொண்டு என் நண்பியை பார்த்து ஒன்று போதும் என்றேன், நண்பி என்னை முறைத்து பார்த்தார், உடனே நானும் வாங்கிகொண்டு வந்தேன். பின் காருக்குள் இருந்துகொண்டு நண்பி பெட்டியை திறந்து பிரசாத்தை வாயில் வைக்க "இங்கயப்பா அந்த வாஸ்ரூம் பக்கத்தை போய் பாத்தனீரா என்று நேரம் தெரியாமல் கேட்டுவிட்டேன். நண்பிக்கு கோபம் வந்துவிட்டது உமக்கு எந்த நேரத்தில் என்ன கதைக்கறது என்று தெரியாதா என்றுவிட்டு பிரசா தத்தை மூடி வைத்துவிட்டார், பின் என்னை வீட்டில் இறக்கும்போதும் பெட்டி வேணுமா என்று கேட்டேன் "அதற்கு அவர் சாமி கோவிக்கும் சத்தம் போடாமல் கொண்டுபோய்ச்சாப்பிடும்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சாப்பாட்டு மேசையில் வைத்தால் எல்லாரும் திறந்து பார்த்துவிட்டு பத்திரமாக மூடி வைத்துவிட்டு போய்விட்டார்கள் (மச்சம் மாமிசம் என்றால் மாயமாய் போயிருக்கும்). அன்றிரவே அதை கடவுளை வேண்டிக்கொண்டே garberge tin இற்குள் போட்டுவிட்டேன். இரண்டு நாட்களின் பின் நண்பி போன் பண்ணி பிரசாதம் சாப்பிட்டநீரா என்று கேட்டார். அதற்கு நானும் ஓ நல்லா இருந்திச்சு அடிக்கடி உதுக்காகவாவது போகவேணுமப்பா என்றேன். நண்பியும் அதையேதான் செய்தார். இப்படி எத்தனை பேர் செய்கிறார்களோ. வீட்டை கோவில் மாதிரி வைத்திருக்க வேண்டும் என்பார்கள் அதாவது சுத்தமாக. ஆனால் இங்கு பல கோவில்களை அசுத்தமாக வைத்திருக்கிறார்கள். காரணம் ஆயிரம் சாமி சிலைகள். ஒரு கோவிலுக்கு ஒரு சாமியும் வீதியான தியான பீடமும் போதும். (தனு)

பிரபாகரன்மீதான விசாரணையை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

சுற்­றுலா வீஸாவில் இலங்கை வந்து பாது­காப்­புடன் தொடர்­பு­டைய தளங்­களை படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட தமி­ழ­கத்தை சேர்ந்த மகாதமிழ் பிர­பா­கரன் கொழும்­பி­லுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் கட்­டுப்­பாட்டில் தடுத்து வைக்­கப்­பட்டு தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். வீஸா விதி முறை­களை மீறி செயற்­பட்­டமை, நாட்டின் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய தளங்­களை படம் எடுத்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்டின் கீழ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 24 வய­தான மகாதமிழ் பிர­பா­கரன் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்ட நிலை­யி­லேயே பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளி­யாகும் விப­ரங்­க­ளுக்கு அமை­வாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன குறிப்­பிட்டார். கிளிநொச்சி வேரவில் பகு­தியில் வைத்து கடந்த புதுன்­கி­ழமை இவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர், வட மாகா­ண­சபை உறுப்­பினர் பசு­ப­திப்­பிள்ளை ஆகி­யோ­ருடன் இவர் பயணம் செய்­தி­ருந்தபோதே படை­யி­ன­ராலும் பொலி­ஸா­ராலும் இவர்கைது செய்யப்­பட்­டி­ருந்தார். இவர் தமி­ழ­கத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்­சி­கையில் சுயா­தீன ஊட­க­வி­ய­லா­ள­ராகப் பணி­யாற்றி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

வடபகுதி மீனவர் நிலைப்பாட்டினால் தமிழகத்தில் பெரும் மனமாற்றம்

வடபகுதி மீனவர்களின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடாப்பிடியான போக்கிலும், தமிழக மீனவர்களின் செயற்பாடுகளிலும் பாரிய தளர்வுப்போக்கு ஏற்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது முற்றாக நிற்கும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது என்று தெரிவித்த அவர், இதன்மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 95 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டமுடியும் என்றும் கூறினார். இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். மீனவர் விவகாரத்தில் இவ்வளவு காலமும் கடும்போக்கை கடைப்பிடித்துவந்த அவரின் இந்த தளர்வுப்போக்கு இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும். தமிழக ஊடகங்களும் அண்மைக் காலமாக இலங்கை தரப்பு நியாயத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த மனமாற்றம் எதிர்காலத்தில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. யுத்தத்திற்கு முன் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 43 வீதம் வடபகுதியிலிருந்தே கிடைத்தது. அது 7 வீதமாக பின்னர் குறைவடைந்தது. தற்பொழுது மீன் உற்பத்தி 18 வீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த மீனவர் விவகாரத்தில் வடமாகாண சபையின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதில் தெளிவில்லை என்றார்.

பெப்ரவரி 05, 2014

முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். வெளிநாட்டு சக்திகளான போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டுவதற்கு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பை வகித்தனர் என்று வரலாறு பெருமையாக பேசுகிறது. சீத்தாவக்கை இராச்சியத்தில் மாயாதுன்னவின் படையின் முன்னணி வீரர்களாக போராடியவர்கள் பிச்சை மரிக்கார், குஞ்செலி மரிக்கார், அலி மரிக்கார், இப்றாஹிம் மரிக்கார் போன்றவர்கள் என்பதை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் கூட மறுப்பதில்லை. ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் வடக்கிலிருந்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே இரவில் விரட்டப்பட்டமை, காத்தான்குடி, ஏறாவூர், பள்ளியகொடெல்ல அளிஞ்சிப்பொத்தான பகுதிகளில் பள்ளிவாசல்களில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஆணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும்.

ராஜீவ் கொலையாளிகள்: பேரறிவாளன், முருகன், சாந்தன்

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்ட னை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க இந்திய மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித் துள்ளது. மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. அவர்களது குற்றத்தை ஆராய்ந்து பார்த்து தீர்ப்பு வழங்க வேண் டும். இவர்கள் மூவரும் சித்திரவ தைக்கோ மன வேதனைக்கோ ஆளாக வில்லை என சட்டமா அதிபர் வாஹன்வதி சென்னை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். தூக்குத் தண்டனையை ரத்துச் செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். மூவரின் சார்பில் வாதங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முடிந்துவிட்டன. ராஜீகாந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது சீராய்வு மனு மீதான இரு தரப்பு வாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அப்போது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. அவர்களது குற்றத்தை ஆராய்ந்து பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

குறுந்தகவல்களை உளவு பார்க்கும் பேஸ்புக்

சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது கையடக்க தொலைபேசி பயனாளர்களின் எஸ். எம். எஸ். மற்றும் எம். எம். எஸ். களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் சாட் என்ற சேவையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எஸ். எம். எஸ். வசதி போன்றே பேஸ்புக்கில் சாட் செய்யும் வசதி அளிக்கப்படுகிறது. பதிவு செய்த அலைபேசி எண், வலைத்தளத்தில் தங்கி விடுகிறது. அதை அழிப்பதற்குரிய வசதிகள் இல்லை. இந்நிலையில் பேஸ் புக் வலைத்தளம், தனது வாடிக்கையாளர் களின் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல் களையும், கருவியில் உள்ள நாட்காட்டி முதலான தனிப்பட்டத் தகவல்களையும் உளவு பார்ப்பதாக பிரபல இணைய கண்காணிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இதுவரை பேஸ்புக் பதில் எதுவும் தரவில்லை. அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட அதன் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், உளவு ரகசியங்களை அறிவதற்கு பேஸ்புக் வலைத்தளம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குட்டி விமலின் சில அனுபவப் பகிர்வுகள்

ஒரு சமூகப்போராளி பற்றிய ஊடகக் கொலை வெறி

உளச்சோர்வும், மண்டைக் கொதியும் வரவைக்குமளவுக்கு பொய்களையும், அவதூறுகளையும் சரளமாக அள்ளி எறிவோரை நோக்கி நாமும் நாலு கடுஞ் சொற்களால் பதில் சொல்லப்போனால் உடனே மொழிப்பிரயோகம் குறித்த கண்டனங்களைத் தூக்கி நண்பர்கள் முன் நிறுத்துகிறார்கள். பொதுவெளி தூயமொழியால் கட்டப்பட்டது, மொழித்தூய்மை சார்ந்துதான் இயங்கவேண்டுமாம், இயக்கப்பட வேண்டுமாம். அறம் இருக்கிறதோ இல்லையோ தூயமொழிக் கையாளல் தெரிந்திருந்தால் போதும் யார்மீதும் எவ்வகையான அவதூறுகளையும் செய்யலாம் என்பதே ஏகோபித்த விதியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. நிர்மலனை 80களிலேயே ஒரு மிக அர்ப்பணிப்புள்ள, மூர்க்கமான போராளியாக அறிவேன். புலிகள் ரெலோவைத் தேடித் தேடி அழித்தபோது அதற்குள் கொல்லப் பட்டு விட்டான் என்றே நினைத்திருந்தேன். ஆனால் 2004ம் ஆண்டு ஸ்ருக்காட்டில் நடைபெற்ற 31வது இலக்கியச் சந்திப்பில் சந்தித்தேன். தானும் சில ரெலோப் போராளிகளும் தப்பிவந்த கதைகளைச் சொன்னான். இன்றுவரை நிர்மலன் எந்த அரசியல் சார்ந்து இயங்கினான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ரெலோப் போராளிகளை உயிரோடு டயர் போட்டுக் கொழுத்தியும், பனையோடு சேர்த்து நிற்கவைத்து ஆர்,பி.ஜியால் அடித்துச் சிதறடித்தும் புலிகள் கொன்றதை வேடிக்கை பார்த்த யாழ்.மக்கள் மீது சிறு மனத்தாங்கல் இருப்பினும், அதே மக்கள்மீதும், மக்களின் சுபிட்சமான வாழ்வின்மீதும் அளப்பபரிய அக்கறையுடனேயே இருந்தானென்பதை அறிவேன். (மேலும்....)

தமிழ்த் தேசியக் கட்சிகளின் விசுவாசம்....?

தமிழரசு கட்சி எங்களை அடித்து உதைத்தலும் நாங்கள் போகமாட்டோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இயங்குவதோ அல்லது வட மாகாண சபையை புறந்தள்ளவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளொட் அமைப்பினர் யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். (மேலும்....)

அரியநேந்திரனின் அறிக்கைகள்

அரியமே எண்ணி பார்..தூங்கினால் .... யாருன்னை மன்னிப்பார்? தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிக முக்கியமான ஒருவராக காட்டப்பட்டு வருபவர் பா. அரியநேத்திரன். அறிக்கை விடுவதில் அரியநேத்திரன் என்று இவரை ஊடகவியலாளர்கள் இரகசியமாக நக்கல் அடிக்கின்றமை வழக்கம். அறிக்கைநேத்திரன் என்றும் கிண்டல் அடித்துக் கொள்வார்கள். (மேலும்....)  

சரவணபவன்கள் இன்னமும் மக்களை ஏமாற்றுகின்றார்கள்

வடக்கில் சில அதிகாரிகள் இன்னமும் மாறாதுள்ளமை கவலையளிக்கிறது- ஈ. சரவணபவன் மாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு வடக்கில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு  நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்....)

சம்மந்தரின் வெளிநாட்டுச் சுற்றல்கள்......?

நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது கனடாவில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. கனடா டொரன்டோவில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் கிளை ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் நாம் பங்கேற்றிருந்தோம். அதில் 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். நான் பேசி முடிந்ததும் அவர்கள் எழுந்துநின்ற எனது பேச்சுக்கு வரவேற்பளித்தனர். அந்தச் சந்திப்பில் நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கனடா சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய செயற்பாடு அரசியலமைப்பினை மீறும் விடயமாகும் என்று கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்தும் கனடா மற்றும் பிரித்தானியாவுக்கான விஜயம் தொடர்பிலும் கருத்துக்கேட்டபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். 

அதிரவைக்கும் கூகுள் சாதனம்

அதிரவைக்கும் கூகுள் சாதனம் மீண்டும் ஒருமுறை உலகையே அதிரவைத்துள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமல்லாது அப்பிள் நிறுவனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவும் இது அமைந்துள்ளது. தற்போது பலரது வீட்டில் உள்ள TV க்களில் இன்ரர் நெட் வசதி இருப்பது இல்லை. எனவே ஒரு இணையத்தில் இருக்கும் புது சினிமாப் படத்தை நாம் பார்க்கவேண்டும் என்றால் லாப்-டொப் பில் அல்லது கணணியில் தான் பார்க்கவேண்டி உள்ளது. அதனை TV ல் பார்க்க நாம் HDMI எனப்படும் கேபிளை, லாப் -டொப்பில் பொருத்தி பின்னர் அதன் மறு முனையை TV ல் பொருத்தினால் தான் புது சினிமாப் படங்களை நாம் TV ல் பார்க்க முடியும். (மேலும்....)

பெப்ரவரி 04, 2014

மலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து நீக்கம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  அங்கத்துவத்தில் இருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 16 ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முடிவிற்கு அமைய அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாக செயலாளரினால் கடந்த ஜனவரி 29ஆம் திகதி யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக கடிதம் மூலம்; கமலேந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

யாழில் இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

யாழ். தீவுப்பகுதிக்கு அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேரை  காங்கேசன்துறை கடற்படையினர்  திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் தற்போது யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, காங்கேசன்துறை கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (02) கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த 19 மீனவர்களும் இந்தியாவின் ஜனதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்து காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோதே கைதுசெய்யப்பட்டனர்.

5000 முஸ்லிம்கள் காணாமல் போனதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இவற்றில் அநேகமானவை 1990 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில் புலிகளால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பானவை எனவும் அறிய வருகிறது. மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் வைத்து 1990 ஆம் ஆண்டு 68 முஸ்லிம்கள் ஒரே தடவையில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்படி அமைப்பினால் ஆணைக் குழுவுக்கு முறையிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் மேலும் விபரங்கள் சேகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி முறைப்பாடு அடங்கலாக கிழக்கில் இருந்து காணாமல் போன முஸ்லிம்கள் குறித்த முறைப்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக அடுத்த மாத முதல் வாரத்தில் மட்டக்களப்பிற்கு செல்ல இருப்பதாக மெக்ஸ்வல் பரணகம குறிப்பிட்டார்.

வட மாகாண சபை தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது. மாகாண சபை அதிகாரத்திற்குள் மனித உரிமை தொடர்பாக விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்த மேற்படி அமைப்பு அரசியல் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்க இணைப்பாளர் சட்டத்தரணி கபில கமகே, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமது விடய பரப்பிற்கு அப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை செயற்படுத்துவதானால் அதற்கு ஆளுநரின் அனுமதி தேவை. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வட மாகாண சபை முயன்றால் அதனை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஜெனீவா மனித உரிமை மாநாட்டை கருத்திற்கொண்டே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கெஜ்ரிவால் அரசுக்கு சிக்கல்

4 எம். எல். ஏ.க்கள் எனக்கு ஆதரவு; அரசை கவிழ்க்கப் போவதாக பின்னி மிரட்டல்

புதுடில்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கப் போவதாக ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம். எல். ஏ. வினோத்குமார் பின்னி மிரட்டியுள்ளார். டில்லி மந்திரி சபையில் இடம் கிடைக்காத வினோத்குமார் பின்னி எம். எல். ஏ. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஆம்ஆத்மி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை அடுத்து கடந்த வாரம் வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறி 4 மணி நேரங்களில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்நிலையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம். எல். ஏ. வினோத்குமார் பின்னி தனக்கு 4 எம். எல். ஏ.க்கள் தனக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். அரசை கவிழ்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஓர் ஆண்டுக்கு மேல் பசிபிக் கடலில் தத்தளித்த மெக்ஸிகோ நாட்டவர் மீட்பு

பசுபிக் கடலில் ஓர் ஆண்டுக்கும் அதிக காலம் படகொன்றில் வழி தவறி சிக்கிக்கொண்ட மெக்சிகோ நாட்டவர் ஒருவர் மார்ஷல் தீவுகளில் கரையொதுங்கியுள்ளார். மோசமான நிலையில் மீட்கப்பட்ட அவர் தனது சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். மார்ஷல் தீவுகளின் தலைநகர் மஜுரோவுக்கு மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜோஸ் இவான் என்ற மேற்படி நபர், நான் மெசிக்கோவுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் தனது நண்பருடன் கண்ணாடியிழை படகில் பயணத்தை ஆரம்பித்ததாக இவான் குறிப்பிட்டார். இவரை இபோன் யடோல் என்ற தீவிலிருக்கும் மக்கள் கடந்த வியாழக்கிழமை மட்டனர். உடல் தெலிந்த நிலையில் கிழிந்த உள்ளாடை ஒன்றடன் மாத்திரம் இருந்த இவான், தான் இருந்த படகு சிறு கடற்பாறைத் தொகுதியை ஏட்டியதையடுத்தே கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது. (மேலும்....)

பெப்ரவரி 03, 2014

ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு

ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக  அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், பா. ஜ. கவுக்கு மாற்றாக புதிய அணி உருவாக்க நடவடிக்கை

மக்களவைக்குத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ், பா. ஜ. க.வுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். புதிய அணியில் இடதுசாரிக் கட்சிகளுடன், அ. இ. அ. தி. மு. க., பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்தியில் காங்கிரஸ், பா. ஜ. க.வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பிகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தாராளமயக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது. பா. ஜ. க.வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடியும் ஏறக்குறைய இதேபோன்ற கொள்கையைத்தான் முன்வைக்கிறார். மக்களவைத் தேர்தல் சமயத்தில் எங்கள் புதிய அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்படும். ஆம் ஆத்மி கட்சிக்கு டில்லியைத் தவிர வெளியிடங்களில் போதிய வரவேற்பு இல்லை. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, சில இடங்களில் வேண்டுமானால் வேறு சிறிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கலாம். ஆனால், இடதுசாரிக் கட்சிகளுக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது.

கெஜ்ரிவாலின் 'ஊழல்வாதி' பட்டியலில் அழகிரி கனிமொழி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவருக்கு எதிராக தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியையும் "ஊழல்வாதிகள்' படடியலில் சேர்த்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், மோடியும் ராகுலும் தங் களை மக்கள் மத்தியில் முன்னிலைப் படுத்துவதற்காக ரூ. 500 கோடி செல விட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவால் 'ஊழல் அரசியல்வாதி கள்' பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் ப.சிதம்பரம், அழகிரி, கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இலவச உணவுக்காக 300 முறை விமான டிக்கெட்டை நீட்டித்தவர் கைது

சீனாவில் விமான நிலையத்தில் கிடைக்கும் இலவச உணவை உண்பதற்காக தனது டிக்கெட்டை 300 முறை நீட்டிப்பு செய்த நபர் பிடிபட்டார். சீனாவில் விமானத்தில் செல்ல முதல் வகுப்பு விமான டிக்கெட் முன்பதிவு செய்ய, வாங்க, திகதி மாற்ற வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெடடின் திகதியை மாற்றிக் கொள்ள கட்டணம் இல்லை. இந்நிலையில் ஜியான் விமான நிலையத்தில் கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முன்பதிவு செய்த ஒருவர், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பகுதிக்கு சென்று தினமும் இலவச உணவை சாப்பிட்டு வந்துள்ளார். இதற்காக தனது முதல் வகுப்பு பயண சீட்டின் திகதியை 300 முறை நீட்டிப்பு செய்தும் வந்துள்ளார். ஷான்சி மாகாணத்தில் இவ்வாறு தனது டிக்கெட்டை கொடுத்து கால நீட்டிப்பு செய்ய முயன்ற போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அப்போது அந்த டிக்கெட் குறித்த விபரங்களை கணனியில் பார்த்த போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 முறை கால நீட்டிப்பு செய்துள்ளது. தெரிய வந்தது. இதையடுத்து அவரை பொலிசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது முக்கிய பிரமுகர்கள் பகுதியில் இலவசமாக கிடைக்கும் தரமான உணவை சாப்பிடுவதற்காக இவ்வாறு நூதன முறையில் கால நீட்டிப்பு செய்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 02, 2014

கூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்?

ஆதாரங்கள் பல உள்ளதால் ஆபத்து தேடி வருகிறது

போர்க் குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று தாம் புலிகளுடன் வைத்திருந்த உறவுகளை மறந்தும் மறைத்தும் இன்று செயற்பட்டு வருகின்றனர். இதனால், இவர்கள் புலிகளுடன் எத்தகைய உறவினை வைத்திருந்தார்கள், புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எவ்வகையில் ஆதரவு வழங்கினர் என்பது குறித்த விசாரணைகள் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப் படலாம் எனத் தெரிய வருகிறது. (மேலும்.....)

மீனவர் விடயத்தில் மூச்சும் விடாத தமிழ்க் கூட்டமைப்பு

எல்லை தாண்டி வந்து எமது நாட்டின் வடபகுதிக் கடற்பரப்பில் வடபகுதி மீனவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மீன்களைச் சூறையாடும் இந்திய மீனவர்கள் குறித்த பிரச்சினை இரு நாடுகளுக்குமிடையில் பற்றி எரியும் ஒரு சமகால அரசியல் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையிலும் அது குறித்து மூச்சும் விடாது அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கு பலருக்கும் பலவிதமான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இந்திய மீனவர்கள் அதிலும் குறிப்பாக தமிழக மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்களைப் பிடித்து வருகின்றனர். இவர்கள் குறிப்பாக வடபகுதிக் கடற்பரப்பைக் குறிவைத்தே நமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எமது நாட்டு கடற்படையினர் பல தடவைகள் எல்லை கடந்து வரும் மீனவர்களைக் கைது செய்துள்ளபோதும் அவர்களது அத்துமீறல்கள் குறைந்தபாடாக இல்லை. (மேலும்.....)

வட மாகாண சபையை கலைக்கும் எண்ணம் இல்லை

வடக்கு மாகாண சபை சர்ச்சைக்குரிய பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ள போதிலும் மாகாண சபையை கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதற்கு முன்னரும் சவால்களை எதிர்நோக்கியது. அதேபோல் வடக்கு மாகாண சபையில் இருந்து வரும் சவால்களையும் அரசாங்கம் எதிர்கொள்ளும். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியதன் விளைவுகளை அரசாங்கம் சந்தித்து வருவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் வடக்கு மக்களின் உரிமைகளை அரசாங்கம் பறிக்க விரும்பவில்லை. தெற்கில் மக்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் வடக்கு மக்க ளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். வடக்கு மாகாண சபையை அரசாங்கம் கலைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்திருந்தது.

ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதித்து நடக்காமையே புலிகளுக்கு வீழ்ச்சி - சம்பந்தன்

ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை யும் மதிக்கத் தவறியதாலேயே புலிகள் சர்வதேச ரீதியில் பின்னடைவைச் சந்தித்து இறுதியில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் த இந்து தமிழ் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே சம்பந்தன் இவ் வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் மிகப் பெரிய தவறுகளாக எவற்றைக் கருதுகிaர்கள்? எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மனித உரிமைகளை அவர்கள் மதித்திருக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்திருக்க வேண்டும். இந்தக் குறைகளே சர்வதேச அளவில் அவர்களுடைய பின்னடைவுக்குப் பெரும் காரணமாக அமைந்தன என்று கூறினார்.(மேலும்.....)

பெப்ரவரி 01, 2014

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிஸ்வாலிடம் எடுத்துரைத்தோம் - சம்பந்தன்

அரசாங்கத்தின் செயற்பாடுகள், இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் தமது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதி தம்முடன் பேச்சு நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்; தெரிவித்துள்ளார். இலங்கையின்  கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகள் செய்யப்பட்ட பின்னர், மனித உரிமைகள் பேரவையில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பின்னர் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி கேட்டறிந்தார்.

NASA Images Find 1.7 Million Year Old Man-Made Bridge

The 18-mile bridge is said to have been passable by foot until the 1400s. Image courtesy NASA. The NASA Shuttle has imaged a mysterious ancient bridge between India and Sri Lanka. The bridge was purportedly passable on foot until 1480 AD when a cyclone moved the sand around. This recently-discovered bridge has been found to be made of a chain of limestone shoals. Its unique curvature and composition by age reveals that it is man made. The bridge currently named as Adam’s Bridge (most popularly known as Ram Setu) is about 18 miles (30 km) long. This information is a crucial aspect for an insight into the mysterious legend called Ramayana, according to which the bridge was built under the supervision of Lord Rama who is supposed to be the incarnation of the supreme. This bridge starts as chain of shoals from the Dhanushkodi tip of India’s Pamban Island and ends at Sri Lanka’s Mannar Island. Water between India and Sri Lanka is only 3 to 30 feet (1 to 10 meter) deep. Owing to shallow waters, this bridge presents a problem in navigation as big ships cannot travel in the shallow waters of the Pamban channel. The discovery of this bridge is not only important for archaeologists, but it also gives an opportunity to the world to know an ancient history linked to the Indian mythology.

Nidhi (Nidhi is a gold medalist Post Graduate in Atmospheric and Oceanic Sciences.)

பரம்பரை இயல்புகளை அடுத்த சந்ததிக்கு கடத்துகின்ற டி.என்.ஏ. நிறமூர்த்தங்கள்

ஒரு குழந்தையின் பெற்றோரை துல்லியமாக நிச்சயித்துக்கொள்ள டி. என். ஏ. பரிசோதனை செய்யப்படுவதை அறிவீர்கள். அத்தோடு ஒரு கொலைக்குக் காரணமான கொலையாளியின் தடயங்களிலிருந்து, டி. என். ஏ. பரிசோதனையின் மூலமாக திட்டமாக இன்றைய காலத்தில்கொலை செய்தவர், செய்யப்பட்டவரை அறிந்து கொள்கின்றனர். எமது உடலிலுள்ள எல்லாக் கலங்களிலும் கரு உண்டு. ஆனால் செங்குருதிக்கலத்தில் மட்டும் கருஇல்லை. கருவினுள் நிறமூர்த்தங்கள் சோடியாகக் காணப்படும். மனித இனத்தில் ஒவ்வொரு கலத்திலுள்ள கருவில் 23 சோடி நிறமூர்த்தங்கள் உண்டு. இது இனப்பெருக்கக் கலம்தவிர்ந்த ஏனையவற்றில் மாறாது காணப்படும். (மேலும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com