Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2013 மாதப் பதிவுகள்

வைகாசி 31, 2013

ஒற்றையாட்சியின் கீழ் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - த.தே.கூ

'ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது' என்று தமிழ் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 'இலங்கையில் இன்று பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதிகாரங்களை பகிர்தல் என்பது கேள்விக்குறியான ஒன்று' என்றார். 'ஐக்கிய தேசியக் கட்சியானால் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்ற அரசியல் அமைப்பின் நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது சுமந்திரனின் கருத்து' என்று மறுத்த மாவை சேனாதிராசா, 'இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி தீர்மானிக்கும்' என்றார். 'ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் நாங்கள் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளளோம்;. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஒரு வருடம் ஆகியும் அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் தரவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

விமானத் தாக்குதல் நடத்திய இரு புலிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

விமானத் தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவ விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக குறித்த புலி உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வில்பத்து காட்டிலிருந்து அன்டனோவ் 32 ரக விமானத்தை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 30 இராணுவப் படைவீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அனுராதபுர உயர் நீதிமன்றில் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலி சந்தேகநபர்கள் 10 பேர் விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலைச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த  குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இந்த சந்தேநபர்கள் 10 பேரும் 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் விரிவரையாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரான சொ.இளங்குமரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நேற்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இப் போராட்டங்களின் போது குறித்த விரிவரையாளரின் கொடும்பாவி மாணவர்களால் எரிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய பிரத்தியேக அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மதிப்பிற்குரிய ஆசான்களே காமுகர்களை வெளியேற்ற உதவுங்கள், நிர்வாகமே படிக்க வந்த எங்களை தீய எண்ணங்கொண்டு அணுகும் கொடியவர்களை உடன் வெளியேற்று, இச்சைக்கு ஆசைப்பட்டு புள்ளிகளை பிச்சை போட நினைக்காதே, காமவெறியனை இனங்காட்டியும் குற்றவாளி என நிரூபித்துத் தண்டனை வழங்க நிர்வாகமே தயங்குவது ஏன்?, காமுகனைக் காப்பாற்றத்துடிக்கும் கயவர்களே நீங்களும் காமுகர்களா?, நிர்வாகமே குற்றம் இழைத்த கயவனை பரீட்சைவிடயங்களில் இருந்து உடன்விலக்கு, ஆசிரியம் என்ற புனிதத் தொழிலை நாசம் செய்வதா உனது தொழில் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்...
 

ஆளுமைமிகு ஒரு கவிஞராக
அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை.
ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது
கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம்

காலம்- 18 ஜுன் 2013 (புதன்)
TRINITY CENTRE,EAST AVENUE
EASTHAM- E12 6SG
மாலை 6 மணி
எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள்.
வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.

வைகாசி 30, 2013

புலனாய்வு பிரிவினரால்

பிரித்தானிய பிரஜா உரிமை பெற்ற தமிழர் இலங்கையில் கைது

கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய மயில்வாகனம் கணேசரூபன் என்றும், நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பிரித்தானிய பிரஜை என்றும் 18 வருடங்களின் பின்னர் தாயகத்திற்கு அதுவும் ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்தவர் என்றும் அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேர்த்திக்கடனை முடித்துக்கொண்டு அடுத்த வாரமே தாங்கள் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த வேளையிலேயே, இவ்வாறு தனது கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய மனைவி சுகந்தினி தெரிவித்துள்ளார்.(மேலும்......)
 

ஆளில்லா விமான தாக்குதலில் வாலி-உர்-ரஹ்மான் பலி

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன இன்று அதிகாலை காலமாகியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அங்குள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இன்று அதிகாலை டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன காலமாகியதாக கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.ஐ.தே. கட்சி வட்டாரத்தில் மிகவும் பலம் மிக்க தழலவராக விளங்கியவர் இவர். மேலும் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்கப்படவேண்டும் என்பதில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தை பேரினவாதத்திற்கு அப்பால் இவர் கொண்டிருந்தார்.

 

Report on Syria – Nobel Peace Laureate Mairead Maguire: “The Syrian State is Under a Proxy War Led by Foreign Countries”

Report and Appeal to the International community to support a process of dialogue and reconciliation in Syria between its people and Syrian government and reject outside intervention and war.
After a 10 days visit to Lebanon and Syria, leading a 16 person delegation from 8 countries, invited by Mussalaha Reconciliation Movement, I have returned hopeful that peace is possible in Syria, if all outside interference is stopped and the Syrians are allowed to solve their own problems upholding their right to self-determination. (more....)

ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்படவில்லை

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படை வீரர்களால்  சுட்டுக் கொல்லப்படவில்லையெனவும், அவர் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார். அவரது தகவலானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒசாமாவை அமெரிக்கப்படைகள் கொல்லவில்லையெனவும். அமெரிக்கப் படைகள்  அபோதாபாத்திலுள்ள வீட்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர்  ஒசாமாவின் தொடையில் சுட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும்.  நடந்தபோது தான் அங்கு இல்லையென்ற போதிலும்  உறவினர்கள் மூலம் இதனைத் தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இறந்தபிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பொய் கூறியுள்ளதாகவும் அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு அங்கியை கட்டிக் கொண்டு இருந்தார் எனவும் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Martin Collacott

How Canada became the odd man out in Sri Lanka

Canadian Foreign Minister John Baird has announced that he will not attend the Commonwealth Heads of Government Meeting in Sri Lanka this November because of that country’s sub-par human rights record. No other members of the Commonwealth, including Britain, Australia and New Zealand, have followed Canada’s example. There is no question that Sri Lanka has a poor human rights record — one that might have been expected to improve after the long civil war ended in 2009, but which did not. Judges have been threatened and impeached, and many journalists murdered or driven from the country. There is little tolerance for criticism of Sri Lankan President Mahinda Rajapaksa’s government from any quarter. (more.....)

மாகாண சபை முறைமையை ஒழித்து மாவட்ட அடிப்படையில் புதிய முறை - தினேஷ் குணவர்த்தன

எமது நாட்டை பொறுத்தவரை மாகாண சபை முறைமை என்பது பொருத்தமற்றதும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதுமாகவே உள்ளது. மாகாண சபை முறைமையினால் தமிழ்-சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கவில்லை. கிடைக்கப்போவதுமில்லை. எனவே மாகாண சபை முறைமைக்கு பதிலாக அதிகாரங்கள் கூடிய மாவட்டங்களை அடிப்படையாகக்கொண்ட புதிய முறைமை ஒன்றுக்கு செல்வதே சிறந்தது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். மாகாண சபை முறைமையினால் வட மாகாணத்துக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை. வெறுமனே நிதி விரயம் மட்டுமே ஏற்படும். அமைச்சர்களும் உறுப்பினர்களும் நியமனம் பெறுவது மட்டுமே மீதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவு வழங்கு என்றும் இது தொடர்பில் ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாகவும் தேவையெனின் எதிர்க்கட்சிகளுக்கும் விளக்கமளிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார். 13 ஆவது திருத்தச் சட்டம் விவகாரம் மற்றும் மாகாண சபை முறைமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Four new projects implemented in kilinochchi & Mulathivu districts will be peoplized.

Four new projects which were constructed by expending an amount over Rs.5000 lacks that assists for the livelihood development, health facilities and drinking water required for the resettled people in kilinochchi and Mulathivu Districts were peoplized by Hon. Basil Rajapaksa, Minister of Economic Development. Pandiyamkulam irrigation scheme of Mulathivu District constructed by expending an amount of Rs. 1985 lacks and Mallavi irrigation scheme constructed by expanding an amount of Rs.1922 lacks were declared open by Hon. Minister yesterday morning. (more....)

வடக்கில் 2000 குளங்களை புனரமைக்க விசேட திட்டம்

வடமாகாணத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் இரண்டாயிரம் குளங்களை புனரமைக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். கிழக்கில் திருகோணமலை உட்பட வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கியதாக இந்த இரண்டாயிரம் குளங்களைப் புனரமைக் கும் விசே செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பிரதி யமைச்சர் இத்திட்டத்திற்கென விசேட அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தப் போவதாகவும் தெரிவித்தார். யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மக்க ளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப் பும் பல்வேறு நடவடிக்கைகளை அர சாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அம்சமாகவே விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த 2000 குளங்கள் புனரமைக்கும் திட்டம் நடைமுறைப்படு த்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

வைகாசி 29, 2013

புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பிள்ளையாராடியில்  புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்தும் இன்று காலை மட்டக்களப்பு, பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு பிள்ளையாரடி பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட பொதுமக்களும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் சுலோகங்களை தாங்கியவாறு ஊர்வலமாக பிள்ளையாரடி சந்தி வரை சென்றனர். 'அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்', 'பௌத்தர்கள் இல்லாத ஊரில் புத்தர் எதற்கு', 'புத்தர் பகவானை ஆக்கிரமிப்பு சின்னமாக மாற்றதே', 'மதப்பிரச்சினை உருவாக்கும் புத்தர் சிலை வேண்டாம்' போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

தப்பியோடிய புலி சந்தேகநபருக்கு வலைவீச்சு

வெசாக் காலத்தில் தப்பியோடிய தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தேடிவருகின்றனர். குறித்த சந்தேகநபர் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கிலிருந்து கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தப்பியோடியுள்ளார். சந்தேக நபரான பாலசுப்ரமணியம் ஜடேஷன் என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக அறிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனையும் அனுபவித்து வந்துள்ளார் என்றும் அறிவித்துள்ளனர். வெசாக் வலயத்தில் மாத்தறை சிறையினால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடுகளை சோடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேநபரே சிறைக்காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபருடன் மற்றுமொரு சிறைக்கைதியும் தப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்த்திருத்த மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர் வவுனியா- நெடுங்கேணியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பற்றிய தகவல்களை 011-2451634,011-2451636 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

போலி கடனட்டை தயாரிப்பு: இலங்கை தமிழர்கள் கைது!

இந்தியாவின் மதுரையில் போலி கடனட்டை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர்கள் நால்வரை பேங்கொக்கில் தமிழக கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மோசடி சம்பவங்களில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் சிலர் பேங்கொக்கில் பதுங்கியிருப்பதாக தமிழக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலையடுத்து கியூ பிரிவில் எட்டு பேர் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், அவர்கள் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறப்பு தனிப்படையினர் சமீபத்தில் பேங்கொக் சென்றுள்ளனர். அங்கு அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து, இரவு 11:30 மணிக்கு சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கைதின்போது அவர்களிடம் இருந்து  27 லட்சம் (இந்திய நாணயம்) ரூபாய் பணம் போலி கடனட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்த  23 முதல், 28 வயதுடையவர்கள் என்பது தெரிந்தது. இவர்கள் தற்போது கனடா குடியுரிமை பெற்றுள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஏர்-இந்தியா விமானத்தில் வந்த முகமது இம்ரான் என்பவனையும் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரையும் சென்னை கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளதுடன். விரைவில் இவர்கள் மதுரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஆஸி செல்ல முயன்ற 52பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றதாக கூறப்படும் 52 பேர் சிலாபம், தொடுவாவ கடற்பிரதேசத்தில் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 11 பெண்களும், 20 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் கடல் மார்க்கமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதா கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது - இராணுவம்

மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.கோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறப்பினர்கள் கூட்டாக பிரிகேடியர் சுதந்த திலகரத்னவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போதே குறிப்பிட்ட பகுதியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட மாட்டாது என பிரிகேடியர் திலகரத்ன உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறப்பினர் பொன் செல்வராசா குறி;ப்பிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் வெளியுறவு செயலரை பதிலளிக்க உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை நடத்தகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வெளியுறவுத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை இன்று புதன்கிழமை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம் ஜுன் 5க்குள் வெளியுறவுத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளதுடன்  ரோ அமைப்பு, மற்றும் சி.பி.ஐ. துணை இயக்குநரும் அன்றையதினம் பதில் அளிக்க வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டறிய மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வீடியோ ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படும். விசாரணை முழுவதும் நிறைவடையாமலேயே முருகன், பேரரிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மூவருக்கும் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தாது சென்ற கார் மீது சூடு, இருவர் காயம்

பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றுகொண்டிருந்த கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியில் இந்தக் கார் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்தக் கார் நிறுத்தாமல் செல்வதை அவதானித்த பொலிஸார், வவுனியா  6ஆவது மைல்கல்லில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு தகவலை வழங்கினர். இதனைத் தொடர்ந்து 6ஆவது மைல் கல்லில் பொலிஸார் காரை இடைமறித்தபோதும், இந்;\தக் கார் நிறுத்தாமல் சென்றமையால் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன்போது காரில் பயணித்த 4 பேரில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் தப்பியோடிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைகாசி 28, 2013

மாகாண சபை முறைமையை நீக்கும்

அரசின் முயற்சிக்கு வடமத்திய மாகாண சபையில் எதிர்ப்பு

மாகாண சபை முறைமையை நீக்கிவிடுவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு வடமத்திய மாகாண சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு கறுப்பு பட்டிகளை கட்டிக்கொண்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு மக்களும் இலங்கையர்களே

வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் இலங்கையர்களே எனவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோன்காகே தெரிவித்தார். அரசாங்கம் வடக்குத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் உள்ள சிலர் அதனை தடுத்து நிறுத்த பல்வேறு காரணங்களைக் கூறி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் வடக்கில் உள்ள மக்கள் சுதந்திரமான தேர்தல் இடம்பெற்று தமக்கு ஜனநாயக உரிமை கிடைக்காதா என ஆவலாய் உள்ளனர். பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் நாட்டில் சுதந்திரமாக உரிமைகளை அனுபவித்து வாழ முடியும் என்றால் ஏன் வடக்கில் வாழும் சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக வாழக் கூடாது. வடக்கில் வாழ்கின்றவர்களும் இலங்கையர்களே. ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் சுததந்திரமும் உரிமைகளும் வடக்கில் வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே, அரசாங்கம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராணுத்தினருக்கு தமிழ் மண்ணில் பயிற்சி கிடையாது - இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்கப்படமாட்டாதென இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார். தஞ்சையில் 180 கோடி ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய ஓடுதளத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு, தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்காது. அமைதியை இந்தியா விரும்பினாலும் பாதுகாப்பு விடயத்தில் எதையும் விட்டுகொடுக்காது என்றார். இதனிடையே, தஞ்சை விமான நிலையத்தை மேலும் விரிவாக்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வீரர்களை தெரிவுசெய்ய தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய யாழ்.விஜயம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து துடுப்பாட்ட வீரர்களைத் தெரிவு செய்யும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்களை இரு அணிகளாகப் பிரித்து, அர்ஜுன ரணதுங்க அணி என்ற பெயரில் ஒரு அணியும், அரவிந்த டி சில்வா அணியென்ற பெயரில் மற்றைய அணியும் 50 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட போட்டியொன்றில் நேற்று சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் விளையாடின. இந்நிலையிலேயே இப்போட்டியில் சிறப்பாகச் செயற்படும் வீரர்களை தெரிவு செய்வதற்காக சனத் ஜயசூரிய நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அருகிவரும் உயிரினங்களின் இறைச்சியை வைத்திருந்த சீனப் பிரஜை கைது

ஹம்பாந்தோட்டை, மிரிச்சவில பிரதேசத்தில் அருகிவரும் உயிரினங்களின் இறைச்சியை வைத்திருந்த சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சீனப் பிரஜைக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ஆமையொன்றும் மற்றும் இலங்கைக்கே உரித்தான சில உயிரினங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

26 ஆங்கில எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய சிறிய சொற்றொடர்

ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்க ளும் வரும் வகையில் வசனமொன்றை அமைத்தால் எப்படியிருக்கும். அவ்வாறு அமைக்கப்பட்ட மிகச்சிறிய சொற்தொடர் என்ன தெரியுமா? டெலக்ஸ் ஆபரேட்டர்களுக்காக வெஸ்டர்ன் யூனியன் என்ற கம்பெனி ‘தி க்விக் பிரெளன் ஃபாக்ஸ் ஜம்ப்ஸ் ஓவர் தி லேஸி டாக்’  (The Quick Brown Fox Jumps Over The Lazy Dog)  என்ற 35 எழுத்துக்களைக் கொண்ட சொற்றொடரை உருவாக்கியது. ஆயினும் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய மிகச் சிறிய சொற்றொடர் இதுவல்ல. ஜேக்டாஸ் லவ் மை பிக் ஸ்ஃபின்க்ஸ் ஆஃப் க்வார்ட்ஸ்  (Jackdaws Love My Big Sphinx Of Quartz)  என்ற 31 எழுத்துக்களைக் கொண்ட இச்சொற்றொடரே மிகச் சிறியது என்று கருதப்படுகிறது. இதை உருவாக்கியவர் யார் என்பது தெரியவில்லை.

பலஸ்தீனத்தில் எக்வடோர் தூதரகம்

ஆக்கிரமிப்பு பலஸ்தீனத்தில் தூதரகத்தை திறக்க எக்வடோர் அரசு தீர்மானித்துள்ளது. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து இரண்டு ஆண்டுகள் கழித்தே எக்வடோர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எக்வடோர் தலைநகர் குவைடோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிகார்ட் படினே மற்றும் பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மல்கி இடையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோன்று எக்வடோரிலும் பலஸ்தீன தூதரகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பலஸ்தீனம் ஐ. நா. அங்கத்துவத்தை பெற 2011ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது அதற்கு ஆதரவளித்து எக்வடோர், பலஸ்தீனத்தை சுதந்திர தேசமாக அங்கீகரித்தது. “பலஸ்தீன மக்களின் வரலாற்று போராட்டத்தையும் அது ஐ. நா.வில் பங்கேற்கும் உரிமையையும் நாம் ஏற்கிறோம்” என எக்வடோர் ஜனாதிபதி ரபெல் கொர்ரயா அப்போது குறிப்பிட்டிருந்தார்.

சவூதியில் சட்ட விரோதமாக தங்கியுள்ளோர்

பொது மன்னிப்புக் காலம் முடிவடைய இன்னும் 06 நாட்கள்

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பொது மன்னிப்புக் காலம் முடிவடைய இன்னும் 06 நாட்களேயுள்ளன. எனவே அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்போரை உடனடியாக நாடு திரும்பி வர இலங் கையில் உள்ள உறவினர்கள் வலியுறு த்த வேண்டுமென இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார கேட் டுக் கொண்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் சவூதி யில் தங்கியிருப்போர் வழங்கப்பட்டு ள்ள பொதுமன்னிப்புக் காலத்திற்குள் நாடு திரும்பாத விடத்து அந்நாட்டு அரசாங்கத்தினால் சுமார் 34 தொடக்கம் 35 இலட்சம் ரூபாய்கள் வரை தண்டப் பணம் விதிக்கப்பட்டு இரண்டு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படுவர். அவர்களுக்கு மீண்டும் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கும் நிரந்தர தடை விதிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த அவசர கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் சாரதி, பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளி நொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் வாகன சாரதியும் இனந்தெரியா தோரினால் தாக்குதலுக்குள்ளாகியுள் ளனர்.வவுனியா, வைரவபுளியங்குளம் பிர தேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்ப வம் இடம்பெற்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோ கத்தர்கள் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்பிய அமைப்பாளரை வவுனியாவிலுள்ள வீட்டில் இறக்கி விட்டு வாகன சாரதியும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரவு உணவை பெறுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். இதன்போதே அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியாத நிலையில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பீஜிங் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவரது பாரியாரும் முதற் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் பீஜிங் நகர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் லியு சென் மின்னுடன் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் உயங்கொடவும் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவர் தலை மையிலான குழுவினரையும் விமான நிலையத்தில் கோலாகலமாக வரவேற்றனர். சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். சீனாவின் புதிய தலைமைத்துவம் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றபின் அந்நாட்டுக்கு விஜ யம் செய்கின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் சிலரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஒருவராவார். சீன மக்கள் குடியரசை முதலாவதாக ஏற்றுக்கொண்ட நாடுகளிடையே இலங்கையும் ஒன்று. இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் சீனா ஒத்துழைப்பு நல்கியுள்ளது.

வைகாசி 27, 2013

ஓகஸ்டில் நவிபிள்ளை இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் அவர் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளை  2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும் அவர் விடுத்திருந்த உத்தியோகபூர்வ அழைப்பை இலங்கை அரசாங்கம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோட்டாவுடன் பேச தயாரில்ல - சம்பந்தன்

'வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து நான் அவரோடு பேச தயாரில்லை. காரணம், அவர் அரசாங்கம் இல்லை' என்று இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 'தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் விவாதங்களை நடத்தியது. இவ்வாறானதொரு நிலையில், 2 கிலோமீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது' என்றார். 'விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இது அமெரிக்காகவா இருந்தாலும், இந்தியாவாக  இருந்தாலும் சரி. எமக்கு தீர்வு ஒன்றே தேவை. அதற்கான கடமைப்பாடு அந்நாடுகளுக்கு உண்டு' என்றும் வலியுறுத்தினார். 'பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைத்த 5 மில்லியன் ரூபாய்கள், 11 கோயில்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தோடு இணைந்திருந்தால் 100 மில்லியன் ரூபாய்கள் வரை அபிவிருத்திக்காக கிடைக்கும். இதற்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஜூனில் கொழும்பு வருகிறார்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான யஷ்வர்தன் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் மாத நடுப்பகுதியில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார். இலங்கைக்கு இந்தியத் தூதுவர்களாக வருபவர்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும் போது அவர்களுக்கு இந்தியாவில் பெரும் பதவிகள் காத்திருக்கின்றன. வரகாகிரி வெண்கட்டகிரி என்ற இராஜ தந்திரி பொதுவாக வீ.வி.கிரி என்றே அழைக்கப்படுவார். இவர் இலங்கையில் முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகராக இருந்தவர். பின்னர் அவர் இந்தியாவின் ஜனாதிபதி என்ற உயர் பதவிக்கு நியமனம் பெற்றார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற பீம்சிங் சச்சாரும் கொழும்பில் இந்திய தூதுவராக பதவி வகித்து இருக்கிறார். இந்தியாவின் சுதந்திரத் தலைவர் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் உயர் பதவி வகித்திருக்கிறார். இலங்கையில் இந்திய தூதுவர்களாக இருந்த வை.வீ.கண்டேபியா, ஜோதிந்தரநாத் திக்சித், ஷிவசங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் ஆகியோர் பின்னர் இந் திய வெளிவிவகார அமைச்சின் செயலா ளர்களாக பதவி உயர்வு பெற்றார்கள்.

இலங்கை - இந்திய கடற்பரப்பில் கூட்டாக மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் - இந்திய மீனவர்கள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை எக்காரணத்துக்காகவும் அனுமதிக்க முடியாது என யாழ். மாவட்ட மீனவர் சங்க சமாஜங்களின் சம்மேளனத் தலைவர் ஏ. எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். இந்திய மீனவர்கள் தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க முடியும். இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து அவர்கள் மீன்பிடிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்துக்காக 45 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய காரைக்கால் மீனவர்கள், இலங்கை இந்திய மீனவர்கள் கூட்டாகக் கலந்துபேசி, இலங்கை-இந்திய கடல் எல்லைக்குள் இணைந்து மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கூறியிருந்தனர். காரைக்கால் மீனவர்களின் இந்தக் கருத்துப் பற்றி தொடர்புகொண்டு கேட்ட போதே எமிலியாம்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார். அதேநேரம், இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன்பிடிப் பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதைத் தடுக்க இந்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் ரோலர் மீன்பிடி தடுக் கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்

இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் என பெயர் மாற்றம்

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கம் என்ற பெயரை இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய இறுதியாக நடந்த பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கம் நீண்டகால தொழிற் சங்க வரலாற்றை கொண்ட இடதுசாரி தொழிற்சங்கமாகும். இச்சங்கத்தில் நீண்ட காலமாக பொது செயலாளராக செயற் பட்டு வந்த தோழர் ஓ.ஏ. இராமையா 18ம் திகதி மே மாதம் காலமானார். இவர் நீண்டகாலமாக சுகயீனமுற்று இருந்த காலகட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு சங்கத்தை நடாத்தி சென்றது. இவரது கடைசி காலகட்டத்தில் ஒரு பொதுச் செயலாளராக சங்கத்துக்கு இவரது பங்களிப்பை செய்ய முடியாது போனதற்கு இவர் சுகயீனமுற்ற நிலை ஒரு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக சங்கத்தின் நிர்வாக குழு எடுத்த தீர்மானத் திற்கிணங்க வருடாந்த பொதுக் கூட்டம் 21.04.2013 அன்று நடைப்பெற்றதுடன், சங்கத்தின் பொதுச் செயலாளராக மேனகா கந்தசாமி அவர்கள் நியமிக் கப்பட்டார். (மேலும்....)

வடமத்திய மாகாணத்தில் காணப்பட்ட சிறுநீரக நோய் நாடெங்கும் பரவும் நிலை

வடமத்திய மாகாணத்திலும் குருணாகல், பொலன்னறுவை மாவட்டத்திலும் உள்ள சில பகுதிகளில் இருந்து மாத்திரம் அறிவிக்கப்பட்ட சிறுநீரக நோய் தற்பொழுது நாடு பூராவும் பரவி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நாடு பூராவும் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். (மேலும்....)

சிரியாவில் அஸாத் வெற்றிக்கு ஹிஸ்புல்லா அமைப்பு வாக்குறுதி

சிரிய யுத்தத்தில் பஷர் அல் அஸாத் அரசு வெற்றி பெறும் என லெபனானின் ஷியா ஆயுத குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளார். தமது அமைப்பு அஸாத் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த யுத்தம் எம்முடையது. வெற்றியை நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என அவர் தொலைக் காட்சியியல் உரையாற்றும் போது குறிப்பிட்டார். சிரியாவின் லெபனான் எல்லையிலுள்ள குசைர் நகரில், உள்ள கிளர்ச்சியாளர்கள், நகரத்தின் மீது ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். குசைர் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் மோதல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஷியா பெரும்பான்மையைக் கொண்ட ஈரான் ஆதரவளித்து வருவதாக கூறியபோதும் அதனை ஈரான் மறுத்துள்ளது. ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு ஷியா ஆதிக்கம் கொண்டுள்ளதோடு, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தும் ஷியா பிரிவான அலாவித் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.

பிரான்ஸிலும் இராணுவ வீரர் மீது கத்திக் குத்து

பிரான்ஸில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இராணுவத்தினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வீரரின் பின்புறமாக கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவர் இராணுவ வீரர் என்பதனாலேயே கொலை செய்ய முயற்சித்திருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் ஸிவஸ் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கத்திக் குத்துக்கு இலக்கான 23 வயது இராணுவ வீரருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர் வட ஆபிரிக்க நாட்டவர் அணியும் கலாசார அங்கியை அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரியை தேடி தீவிர சோதனை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டனில் கடந்த வாரம் இராணுவ வீரர் ஒருவர் இரு ஆயுததாரிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வைகாசி 26, 2013

கனடாவில்

'வாழும் மனிதம் - 4'

வருடா வருடம் கனடாவில் சிறப்பாக நடாத்தப்பட்டு வரும்

வாழும் மனிதம் - 4 இன் நிகழ்வு இவ்வருடமும் சிறப்பாக நடாத்தப்படவுள்ளது

இந்நிகழ்வில்

'2009 இற்குப் பின்பு இலங்கையில் அடிப்படைவாதமும் எழுச்சியும்'

என்னும் தலைப்பில் பின்வருவோர் உரையாற்றுவர்.

பேராசிரியர் கனிஸ்க குணவர்த்தன

(ரொறன்ரோ பல்கலைக்கழகம்)

எஸ்.ராஜேந்திரன்

(சமூக ஆர்வலர்)

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre)

காலம்: 2013 மே 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: தேவன்

தொடர்புகளுக்கு: தேவன் - தொலைபேசி: 416 – 284 - 4166

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்தால் அதற்கு ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகாது என நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸனலி  தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் அவர்களுக்கு அதிகாரத்தை பகிரும் ஒரு தற்காலிக தீர்வாகும். இதை மீளப் பெறுவதற்கு ஒருபோதும் சிறுபான்மைச் சமூகம் அனுமதிக்காது. இந்தத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் எதிர்த்து வாக்களிக்கும். நாட்டில் யுத்தம் பெரும்பான்மையினருக்கு மாத்திரமே முடிவடைந்துள்ளது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இப்போதும் யுத்தகாலத்தில் இருந்த அந்த அச்சமும் நெருக்கடியும் நிறைந்த சூழலில்தான் காணப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தற்காலிக தீர்வாக வழங்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இரத்துச் செய்ய முனைவது கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவன் ஒரு தடியைப்பிடித்து தப்பிக்க முயற்சி செய்யும்போது அந்த தடியையும் பறித்தெடுத்து அவனை மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் செயலாகும்.

அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட நிலையில் வடக்குத் தேர்தல்

போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்தே இறுதி முடிவு என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் மேலும் திருத்­தங்­களைக் கொண்டு வந்து அத­னூ­ட­கவே வட மாகாண சபைத் தேர்­தலை அரசு நடத்­து­மாயின் அந்தத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­மைப்பு போட்­டி­யி­டு­வது தொடர்பில் ஆராய்ந்தே முடி­வெ­டுக்கும். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள 13 ஆவது திருத்தச் சட்ட மூல­மா­னது 1989 இல் உரு­வாக்­கப்­பட்ட அசல் சட்ட மூல­மல்ல. காணி, பொலிஸ் மற்றும் நிதி போன்ற அதி­கா­ரங்­களை மாகாண சபைகள் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யி­லேயே இந்தச் சட்டம் இன்று காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில், வட மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் இந்தச் சட்­டத்­தி­லுள்ள காணி, பொலிஸ் உட்­ப­ட­லான பல அதி­கா­ரங்­களைச் சட்ட ரீதி­யாக நீக்கி விட்டு, புதிய சட்­டத்­தி­ருத்­தத்தின் கீழ் வட­மா­காண சபைத் தேர்­தலை நடத்­து­வதன் மூலம் தமி­ழ­ருக்கு எதுவும் கிடைக்கப் போவ­தில்லை. இதனை பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் உட்­பட ஏனைய சிங்­கள சக்­தி­களும் புரிந்து கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் என்­பது வெறும் அபி­வி­ருத்­தியை மட்டும் நோக்­காகக் கொண்­ட­தல்ல. முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் கொண்­ட­தாக அது அமைய வேண்டும். இந்த நிலையில், அதி­லுள்ள சில அதி­கா­ரங்­க­ளையும் சட்­டப்­படி பிடிங்கி விட்டு வட மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடத்­தப்­ப­டு­மாயின் அதில் பங்­கேற்­பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆராய்ந்தே முடி­வெ­டுக்கும்.

வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை

காரைக்காலை சேர்ந்த வினோதினி என்ற பெண் என்ஜினியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, ஜாமீனில் விடுதலையானார்.  காரைக்கால் எம்.எம்.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்காக இவர் காரைக்கால் வந்தார். தீபாவளி கொண்டாடிவிட்டு நவம்பர் 14-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டபோது வழியில் காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் அவர் மீது ஆசிட் விசினார். இதில் படுகாயமடைந்த வினோதினி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இறந்தார். (மேலும்.....)

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தால் உஷ்ணத்தின் உச்சியில் தகிக்கிறது சென்னை. மும்பை போலீஸின் உயர் அதிகாரிகள் சென்னையின் சௌகார்பேட்டை ஏரியாவுக்கு ரகசியமாக  வந்து விசாரிக்கிறார்கள். இங்குதான் கிரிக்கெட் சூதாட்​டத்தின் முக்கியப் புள்ளிகளின் 'ஹப்' இயங்குகிறது. ஆங்காங்கே வி.ஐ.பி-கள் வீடுகளில் ரெய்டு என்று அல்லோலகல்லோலம்.  மும்பையின் ரமேஷ் வியாஸ் போலீஸில் பிடி​பட்ட பிறகுதான் சென்னை சௌகார்பேட்டை பற்றிய லிங்க் வெளிப்பட்டது. மும்பையில் இந்தி நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போன் எண்​களை கிராஸ் செய்தபோது, சென்னையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனுக்கும் அடுத்து சூதாட்ட புக்கி ஒருவருடனும் பேசியிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த போன் கால்கள் பேசியது பற்றி விசாரித்தபோதுதான், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. டெல்லியில் கைதான 11 புக்கிகளில் ஏழு நபர்களின் லேப்டாப்களில் இருந்த முக்கியமான பெயர்கள்... சென்னையைச் சேர்ந்த கிட்டி மற்றும் சஞ்சய் பாஃனா. (மேலும்.....)

தீக்குளித்த பிக்கு பலி

தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பௌத்த பிக்கு சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படக் கூடாது எனத் தெரிவித்து போவத்தே இந்திரரட்ன தேரர் என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு அருகாமையில் குறித்த பௌத்த பிக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தார். கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளான குறித்த பௌத்த பிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த பௌத்த பிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் இன்னாள் உறுப்பினருமாகும். இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பல பௌத்த பிக்குகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்தத் தற்கொலைச் சம்பவமானது பிழையான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என பிரித்தானிய இலங்கை அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளை ஊக்கப்படுத்தி  யுத்தத்தில் ஈடுபடுத்திய அடெல், தென் லண்டனில் அமைதியாக வாழ்ந்து வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் க்ளாகிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வைகாசி 25, 2013

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் காலமானார்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் இன்று மாலை காலமானார்.  மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னையால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை முடிந்து கடந்த 19 ஆம் தேதியன்றுதான் வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 3.50 மணி அளவில் காலாமானார். அவருக்கு வயது 90. மறைந்த டி.எம்.சவுந்தர்ராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.(மேலும்.....)

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம். இறுதிவரை இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்ப்பார்க்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து எதிர்வரும் ஆறாம் திகதி அதனை நிறைவேற்றவுள்ளோம். தமிழ்க் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமென என்றும் பஷில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் - கருணாநிதி

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அதிகளுக்கு மத்திய அரசாங்கம் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் 2.6 லட்ச இந்தியர்களுக்கு எந்தவிதமான ஆவணங்களும் இன்றி அமெரிக்கா குடியுரிமை வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று இலங்கையர்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கம் குடியுரிமை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கள்ள நோட்டு குற்றவாளிகளுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! தமிழக காவல்துறையினர் தெரிவிப்பு

ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபத்திர வீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு 2 பேர் மது குடிக்க வந்தனர். பின்னர் அவர்கள் ரூ.500 நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கி கொண்டு பாரில் அமர்ந்து குடித்தனர். அப்போது டாஸ்மாக் விற்பனையாளருக்கு அவர்கள் கொடுத்த ரூ.500 நோட்டு கள்ளநோட்டு போல இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விற்பனையாளர் வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சம்பவ இடம் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதல்நாடு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 46). திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பட்டி பவித்ரம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (28) என்பதும், அவர்கள் கள்ளநோட்டு வைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. (மேலும்.....)

An Amazing sentence in English

“I do not know where family doctors acquired illegibly perplexing  handwriting; nevertheless, extraordinary pharmaceutical intellectuality counterbalancing indecipherability transcendentalizes intercommunication’s incomprehensibleness.”

The person who made this sentence must be a vocabulary GENIUS.
Reason:
This is the sentence where the first word is one letter long, the second word is two letters long; the third word is three letters long…the eighth word is eight letters long and so on…the twentieth word  is twenty letters long!

அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசாங்கம் பிரித்தறிந்துகொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு அநியாயம் இடம்பெறும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள்ளே எதிரியாக கைவத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசிற்கு உள்ளே உள்ளவர்களும், வெளியே உள்ளவர்களும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் அவதானமாக இருக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸை அரசாங்காத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் எத்தி வைத்துள்ளேன் எனக் கூறினார்.

Ex-ICICI employee dupes Canadian of Rs 30lakh online and more

A former employee of ICICI bank hacked into the bank account of a Canadian national and stole Canadian dollars worth more than Rs 30 lakh via online transactions from his account. Cyberabad cyber crime police nabbed the accused, Bijjala Raghu Kishore Reddy, 27, a former phone banking officer at the ICICI bank head office at Gachibowli, and found that he had made a fake account and transferred the money. Kishore Reddy took down account details of one Pierre Courtot, when he called him up for phone banking assistance three months ago. “The accused noted down all the needed information while giving assistance to the victim. Later, he hacked into Mr Courtot’s account and transferred Canadian dollars 61,451.48 from it,” Cyberabad cyber crime ACP Pratab Reddy said. “In order to conceal his identity, Kishore Reddy created a fake account in the name of another customer named K. Ramesh Babu, and transferred the money to that account,” the ACP said. The incident came to light when Mr Courtot approached ICICI senior officials, and stated that an unauthorised transaction has been done from his bank account. Police booked a case, traced the transaction details, and found the fake account. “Later, we found the account was started by the accused with the help of another person named Chimili Srinivas, an employee of the Narayana group of educational institutions, who is now absconding. We have launched a manhunt to arrest Srinivas,” Mr Pratap Reddy said. The accused was sacked from ICICI bank due to his misconduct in the past.

சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இலங்கையர் மீது பிரித்தானியாவில் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான சுப்ரமணியம் என்பவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்ட விரோத அவுஸ்திரேலிய பயண முயற்சி

படகுக்காக காத்திருந்த இலங்கையர் 21 பேர் கேரளாவில் அகப்பட்டனர்

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூ கொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர். சுபாஸ் எனப்படும் முகவர் இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து தலா ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீன் பிடி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர்.

புகலிடம் கோரிய 16 இலங்கையரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

சட்டவிரோதமாக அவுஸ்திரே லியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நேற்று நாடு திருப்பியனுப்பியது. படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வி டுத்துவருகின்றபோதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரி வித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கை யாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது. இதற்கமைய இதுவரை 1177 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 966 பேர் பலவந்தமாக நாடு திருப்பியனுப்பப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வைகாசி 24, 2013

'5 கட்சிகளும் இணைந்து கலந்துரையாட தீர்மானம்'

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் மேற்கொள்வதற்கான திகதி மற்றும் நேரம் இடம் என்பவற்றினை பின்னர் அறிவிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழுள்ள ஏனைய கட்சிகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலை இயக்க உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களாக புளொட், தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி. ஆர். எல்.எப். ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகளுடன்  கலந்துரையாடினர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் இலங்கைக்கான தமிழர்கள் அமைப்பை தோற்றுவித்தவருமான அருண் தம்பிமுத்துவே மேற்கண்டவாறு கோரியுள்ளார். மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்று தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும் அவர் கூறினார். இலங்கையிலுள்ள தமிழ் மக்களில் ஒரு சிறுபகுதியினர் அதாவது 21 சதவீதமானவர்கள் மட்டுமே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் மீது கவனம்செலுத்தப்படுகின்றது. இதனால் நாட்டில் இதர பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கை சனத்தொகையில் 15 சதவீதமாக உள்ள தமிழர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் 15 சதவீத பிரதிநிதித்துவத்தை கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு

'தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாக பயன்படுத்தினார்'  

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி ஒரு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை செய்தார். இராஜாங்க அமைச்சர் நாராயணசாமி மே மாதம் 20 ஆம் திகதி விடுத்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாக பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். இந்த அமைச்சரின் கூற்றானது பொறுப்பில்லாத ஒன்றாகும் எனவும் இறந்துபோன ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதாகும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். நாராயணசாமிக்கு எதிராக இந்திய தண்டனைக்கோவை பரிpல 153( ஏ) யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

நெடுங்கேணி சிறுமி வன்புணர்வு, இராணுவ வீரர் கைது

வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைகாசி 23, 2013

வடக்கு களத்தில் குதிக்க புது வியூகம் - மு.கா

பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்தபொழுது அது குறித்து அலசி ஆராயப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மேற்கண்ட முடிவுகளை கருத்திற்கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்ற விடயத்தில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  எவ்வாறாயினும், தேர்தல் தினம் பற்றிய அறிவித்தல் வெளியான பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

'அரசியலமைப்பு திருத்தங்களை தெரிவுக்குழுவே பிரேரிக்க முடியும்'

நாடாளுமன்ற  தெரிவுக்குழு மட்டுமே இலங்கையில் அரசியலமைப்புக்கான திருத்தங்களை பிரேரிக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்திக் கூறியுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு வடமாகாண சபை தேர்தலை ஒத்திப்போடும், 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் அல்லது மாகாணங்களுக்குள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எண்ணங்கள் இல்லை எனவும் அவர் கூறினார். வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய  மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை எதிர்ப்பு காட்டுவது பற்றி கேட்கப்பட்டபோது அவைக்கு தமது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபை தேர்தலில் பங்குபற்ற ஆயத்தமாகி வருவது மகிழ்ச்சியை தருகின்றது. இதன் மூலம் அவர்கள் ஐக்கிய இலங்கை என்ற எண்ணக்கருவை ஏற்றுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  ஒற்றுமையேயாகும் என வலியுறுத்தினார்.

வைகாசி 22, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்!

இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76! ''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன. (மேலும்.....)

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும், நைரோபிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதான தேவ சதீஸ் குமார் எனபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து குறித் நபரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

இந்தியா, சீனா இடையே நீண்ட காலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இருநாட்டு பிரதமர்களும் உறுதி அளித்துள்ளனர்.  டில்லியில் இரு நாடுகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சீன பிரதமர் லீ கேகியாங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன்சிங்; எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக கூறினார். இப்பிரச்சினை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய சீன பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினை இருப்பதை மறுக்க முடியாது என்று கூறினார். இந்தியா மற்றும் சீனா நெருங்கிய நட்புநாடுகள் என்பதால் ஒருநாட்டின் நலன் பாதிக்கப்படும் வகையில் மற்றொரு நாடு செயல்படாது என்று அவர் உறுதி அளித்தார். நீண்ட காலமாக உள்ள எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று சீன பிரதமர் லீ கேகியாங் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக சீனா, இந்தியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், சீனா வரும்படி சீன பிரதமர் லீ கேகியாங் விடுத்த அழைப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டதால் அவர் விரைவில் சீனா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகாசி 21, 2013

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி - அசோக் கே. காந்தா

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஒப்புக்கொண்டுள்ளார் என்று , தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய சமத்துவமிக்க தீர்வொன்றினைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்தும் தனது முயற்சிகளை எடுக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்ததாக த.தே.கூ.பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (மேலும்.....)

சிவசக்தி ஆனந்தனிடம் 4 ஆம் மாடியில் 2 மணி நேரம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடியில் வைத்து இரண்டு மணிநேரம் இன்று செவ்வாய்க்கிழமை விசாரித்துள்ளனர். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.(மேலும்.....)

கூலிக்கேற்ற வேலை என்று வினையை விதைத்த சீமான்!

(ஈழப் பித்தன்)

18-05-2013 சனிக்கிழமை கடலூரில் சிறப்பான ஓர் கூட்டத்தை நடத்தி ஈழத் தமிழ் இனத்தை மீழமுடியாத சிக்கலுக்குள் அமுக்கியுள்ளார் செந்தமிழன் சீமான். தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்லி அவர்களை ஏமாற்றிப் படம் எடுத்து அதில் சம்பாதிப்பதை விடவும் அதே கதையை புலிகளுக்காக மேடையில் பேசினால் கோடிகளைச் சுருட்டலாம் என்று மிகவும் காலதாமதமாக ஈழத்துப் படகில் ஏறிய சீமான் தனது லட்சியத்தில் பாதியை எட்டிவிட்டார். மீதி இனி முதலமைச்சர் ஆவதுதான் பாக்கி! (மேலும்.....)

Launching Of The North East Provincial Council

(S. Sivathasan)

The election of R. Premadasa as President of Sri Lanka was needed to give life to the North East Provincial Council (NEPC), and to get it moving. No sooner was he elected President, Varadaraja Perumal, the Chief Minister in waiting called on HE  R. Premadasa the newly elected President. What is happening in the NEPC? inquired the President. Sir, nothing is moving and to make the Council work, I don’t have officers. When the President gave kinetic energy to the Council ‘Premadasa Style’, it got started immediately and changed to top gear. (more.....)

'புலிகளுக்கு பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?'

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்பிரேமதாஸா தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித்பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார். (மேலும்.....)

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை - தயா மாஸ்டர்

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது பேச்சுவார்த்தை நடாத்த தம்மை அழைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையோ அல்லது வேறும் உறுப்பினர்களையோ தாம் சந்திக்கவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தயா மாஸ்டர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் தொழிலாளர்கள் அரிதான ஆர்ப்பாட்டம்

துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் செயற்பாடுகளுக்கு தடையுள்ள வளைகுடா நாட்டில் இவ்வாறான வேலை நிறுத்தம் இடம்பெறுவது அரிதானதாகும். உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தை அமைக்க ஒப்பந்தம் பெற்றது. அரப் டெக் நிறுவனத்தின் தொழிலாளர்களே இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் உரிமைகளைக் கோரி போராட்டத்தில் இறங்கியிருக்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக பணிக்குத் திரும்பவில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழிலாளர் அமைச்சு மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். “பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்குகிறார்கள். மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவுகளையும் தருவதில்லை” என பணியாளர் ஒருவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தம்முடன் பணிபுரிபவர்கள் மாதத்திற்கு 160 முதல் 190 டொலர் வரையே சம்பளம் பெறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். வளைகுடா நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு தெற்காசிய நாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு தொழிலாளர் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வைகாசி 20, 2013

வடமாகாணத் தேர்தலில்

டக்ளஸ் போட்டியிட விருப்பம்

ஆனால்.......

மகிந்தா இதனை விரும்பவில்லை

'ஜனாதிபதி என்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறினார். அவர், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க விரும்பவில்லை. ஆனாலும், நான் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்' என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். 'வடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும். இந்த அதிகாரங்களை கையளிப்பது தொடர்பாக தெற்கில் கடுமையான கருத்துக்கள் வெயிடப்பட்டு வருவதால் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்வரையில் இதனை நிறுத்தி வைக்கவேண்டும். வன்முறை, அபிவிருத்தியின்மை, அரசியல் உரிமை மறுப்பு என்பன தமிழ் சமுகத்தை நீண்டகாலமாக வாட்டியெடுத்த பிரச்சினைகளாகும். இப்போது, பயங்கரவாதம் பூரணமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடக்கில் துரித வேகத்தில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது. நான் சூரியனையோ, சந்திரனையோ கேட்வில்லை. ஒரு தொடக்கமாக, தறபோதைய அரசியலமைப்பை செயற்படுத்துமாறுதான் கேட்கிறேன்' என்றார். வெற்றிலை வெல்லுமா? அல்லது வீணை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதல் அமைச்சராக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது டக்ளஸ் இன் நீண்ட நாள் ஆசை. இதனை அவர் நிறைவேற்ற மக்கள் ஆதரிப்பார்களா? என்பது செப்டம்பரில் தெரிந்துவிடும்

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 11)

(வரதர் பெருமாள்)

த.தே.கூ எந்த நேரத்திலும் சிதறிப் போகலாம் அல்லது சிதறடிக்கப்படலாம் என்ற வகையிலேயே அதனுள்ளே நெருக்கடிகள்  வேகமாகப் புகைந்து கொண்டிருப்பது வெளிப்படை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என திரு சம்பந்தர் அவர்கள் கூறுவது ' எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது. இப்போது எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே ஒரு பெயரளவு அமைப்பாக தமிழரசுக் கட்சியின் சட்ட அங்கீகாரத்தில் தொங்கியதாகவும் வீட்டுச் சின்னத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனவும்  உள்ளதோ அவ்வாறே இருக்க வேண்டுமென தமிழரசுக்கட்சிக்காரர்கள் பிடிவாதமாகவே உள்ளனர். தமிழரசுக் கட்சிக்காரர்கள் தமது கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளை தமக்கு சமத்துவமான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தற் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நிற்பவர்கள்; தமிழரசுக் கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு ஸ்தாபன அமைப்புத் திட்டத்தைக் கொண்டவர்களாக இல்லை. (மேலும்.....)

ரோஹண விஜயவீரவின் மகள் கைது

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர். கைது செய்யப்பட்டவர் ரோஹண விஜயவீரவின் மூத்த மகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே மகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை யூன் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல் 

எங்களுக்கும் பதிய தலைமுறையினருக்குமிடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. அவர்கள் யுத்தமொன்றுக்குள் வாழ நேர்ந்தவர்கள். யுத்தம் இன முரண்பாடு போன்றவற்றுள் வாழ நேர்ந்த அனுபவம் அவர்களுக்கிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அது அவ்வளவாக இல்லை. உண்மையில் அவர்களின் அன்றாட வாழ்வு LTTE யினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பிளவுற்று தளர்ந்த நிலையிலும், குண்டுச் சத்தங்களால் அலைக்கழிக்கபட்டதாகவுமிருந்தது. இன்று அவர்களின் அனைத்துவிதமான அரசியல் புரிதல்களும் முடிவுகளும் யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் என்ற கருத்தினடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் தான் புலிகளை அழித்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. நான் நினைக்கிறேன் இது உண்மையிலேயே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நான் தென்னிலங்கை சிங்கள மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். வட-கிழக்கு தமிழ் மக்களின் கருத்தியல்களும் யுத்தத்தினாலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் LTTE யினரின் அழிவைப் பார்த்து விட்டனர். அவர்களது அன்றாட வாழ்வும் இன்று பல அழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான உள்ளார்ந்த சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லாமலுள்ளது. இந்த நிலையில் அதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே நமது வரலாற்றில் இது ஒரு பின்தங்கிய தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த 2,3 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாம் என்ற எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை.(மேலும்.....)

த.தே.கூ.பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆட்கள் பிரதேச சபைக்கு மிரட்ல்கள் விடுத்தாலும், அவற்றினை மீற நாம் செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரமாக  தமிழரசு கட்சி எப்போதும் இருக்குமென்றும். தமிழரசுக் கட்சியும், தழிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்ததுதான் அதை நாம் காப்பாற்றிக கொள்ள வேண்டும். ஜனநாயக விழுமியங்களை முடக்கும் முயற்சியில் அரசும் அரசின் ஆடுகளும் முயற்சிக்கின்றதாக அவற்றினை எதிர்த்து நாம் தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.

ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்

(யோ.கர்ணன்)

பிரபாகரன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னர், தனது மந்திரிகளையும், பிரதானிகளையும் அழைத்து, அவர்கள் குடும்பங்களிருந்து ஒவ்வொருவரை படைக்கனுப்பி வைக்க சொன்னார். தீவிரமான புலிகள்- அதாவது கேள்விக்கிடமின்றி அவரையும், அந்த அமைப்பையும் நேசித்த பிரதானிகள் எல்லோருமே புத்திரதானம் செய்தார்கள். விடுதலைகடலில் தத்தளித்து, போக்கிடமற்று கரையொதுங்கிய கிளிஞ்சல்கள் சுழித்தபடியே இருந்தன. தங்கள் பிள்ளைகளிற்காக ஒன்றிற்கு நூறாக யாருடையதோ பிள்ளைகளை படைக்கிணைத்து மேலிடத்தை மகிழ்வித்தபடியிருந்தனர். இனி எதுவுமே செய்ய முடியாதென்ற நிலை வந்த போதுதான், இந்த வகைக்குள் அடங்கிய புதுவை இரத்தினதுரை தனது மகனை இணைத்தார். பாலகுமாரன் இறுதிவரை இணைக்கவேயில்லை. (மேலும்.....)

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - சுமந்திரன்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கையை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் - அரசாங்கம்

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கடலூர் கூட்டம் பிசுபிசுப்பு

பொலிஸாரை கண்ட சீமான் மேடையிலிருந்து தப்பி ஓட்டம்

தமிழ் நாடு கடலூரில் நேற்று முன் தினம் 18ம் திகதி நடை பெற இருந்த இயக்குநர் சீமா னின் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்திற்கு அம்மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தடை விதித்ததால் அக் கூட்டம் பிசுபிசுத்துப் போனது. நாம் தமிழர் கட்சி யினர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவரின் படத்தை கொண்ட பனர்களை பயன்படுத்தியதனால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்காக கடலூர் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பிரபாகரன் உருவம் பதிக்கப்பட்ட பேனர்களை தமிழக பொலிஸார் அகற்றினர். இதேவேளை, தமிழக பொலிஸார் முற்றுகையிட்டதினால் கூட்டத்தில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் சீமான் அங்கிருந்து பக்கவாட்டு வாசல் வழியே தப்பி ஓடியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 10.20 மணி அளவில் பொலிஸார் ஒட்டுமொத்தமாக மண்டபத்துக்குள் நுழைந்து மேடைப் பக்கம் சென்றனர். ஆனால், மேடையில் அதுவரை பேசிக்கொண்டிருந்த சீமான், பொலிஸார் வந்த நொடிப் பொழுதில் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென பக்கவாட்டுக்கதவு வழியே வெளியேறி, வேகமாக காரில் ஏறிப் பறந்துவிட்டார். அவரை மண்டபத்தில் இருந்த தொண்டர்களும் பொலிஸாரும் தேடினர்.

சீன பிரதமர் இந்தியா விஜயம்

சீன பிரதமர் லி கெகியாங் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீனாவுக்கும், இந்தியாவுக்குமிடையில் இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங் தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீனப்பிரதமர் லி கெகியாங்குடன் உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது. இந்த குழுவில் சீன அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடம்பெற்று ள்ளனர். திங்கட்கிழமை இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. லி கெகியாங்கின், மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பைக்கும் செல்கிறார். அங்கு பல ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடலாம் என கூறப்பட்டுள்ளது. இரு பிரதமர்களின் பேச்சுவார்த்தைகளின் போது, எல்லையில் அடிக்கடி நிகழும் பதற்றமான சூழல் சமீபத்தில் லடாக்கில் நடந்த அத்துமீறல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்படும்.

வைகாசி 19, 2013

'பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை'

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிதுகாலம் இருந்துள்ளனர். இந்தநிலையில் நந்திக்கடல் களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என்பதை அவருடைய சகாக்களே அடையாளம் காண்பித்துள்ளனர். பலியானது பிரபாகரன் என்பதுடன் அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருக்கின்ற புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரிவினை வாதத்திற்கு நிதி சேகரிப்பதற்காக இவ்வாறான பேய் கதையை பரப்பிவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

குதிரை கஜேந்திரன் கைது, பத்மினி சிதம்பரநாதன் தப்பியோட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அந்த கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மன்னார் பொலிஸாரினாலேயே இவர்கள்  கைது கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன்இ அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை

 இறந்தவர்களுக்காக  ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்கு முறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வன்னியில் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுவிட்டு அரசாங்கம் கொழும்பில் இராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. தமிழர் தாயகப் பிரதேசங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்த முடியாத படி இராணுவ அடக்கு முறை இங்கு பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு நாகரீகமற்ற ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த காலம் தொடங்கி எம்மை தோற்றுப் போன சமுதாயம் என்ற சித்தாந்தத்தை ஏற்படுத்தி எம்மைப் பலவீனப்படுத்த வந்துள்ளார்கள் இதற்கு இங்குள்ள சிலரும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். தமது தலைவர் அமிர்தலிங்கத்தின் மரணத்திற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடமுடியவில்லை என்பதையும் தமிழரசுக்கட்சித்தலைவர் சேர்த்துக் கூறியிருந்தால் இன்னும் நல்லாக இருக்கும்.

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்

'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் தேவைக்கேற்ப கொண்டுவரப்பட்ட திருத்தம் ஒன்றின் மூலமே அரசாங்கத்திற்கு மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் கிடைத்தது.'

1989 ஆம் ஆண்டுகளில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப்) முதலான கூட்டணியொன்றே வடக்கு கிழக்கு மாகாண சபையை நிர்வகித்தது. வரதராஜப் பெருமாளே முதலமைச்சராகவிருந்தார். எனவே இந்த மாகாண சபையை கலைத்து விடுமாறு புலிகள் பிரேமதாசவிற்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இருக்கவில்லை. மாகாண அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்கும் அதிகாரம் இருந்த போதிலும் மாகாண சபையை கலைக்க அதிகாரம் இருக்கவில்லை. எனவே மாகாண சபைகளை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மாகாண சபை சட்டத்திற்கு திருத்தம் ஒன்று 1990ஆம் ஆண்டு முற்பகுதியில் வகுக்கப்பட்டது. அச்சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே, அதாவது 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி புலிகள் மீண்டும் போரை ஆரம்பித்தனர். ஆனால் புலிகளை மீண்டும் வளைத்தெடுக்க அரசாங்கம் முயற்சி செய்தது. மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பை கைவிடவும் அரசாங்கம் விரும்பவில்லை. எனவே போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நறைவேற்றப்பட்டது.
(மேலும்.....)

குதிரை கஜேந்திரன் மீது சுரேஸின் 'திடீர்' பாசம்

கஜேந்திரன் கைதுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் கண்டனம்

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உயிர்நீத்த சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்தும் உரிமைகூட தமிழ் மக்களுக்குக் கிடையாதா? தமது சொந்தங்களை நினைத்து கண்ணீர் சிந்துபவர்களை கைதுசெய்வதனூடாக அரசாங்கள் எதனை சாதிக்க முயல்கிறது என்பது தெரியவில்லை. சர்வதேசத்திற்கு ஒரு முகத்தினையும் தமிழ் மக்களுக்கு பல முகத்தினையும் அரசு காட்டமுனைவது கண்டிக்கத்தக்கது. தமது இயக்கத் தலைவர்கள் பலர் கொல்லபட்டுள்ளனர் இவரின் சகாக்களால். அவர்களுக்கும் 'தலைவர்' சுரேஸ் கண்ணீர் அஞ்சல்செலுத்தினாரா..? செலுத்துவாரா...?

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வைபவங்கள் வடக்கு, கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில், தமிழரசுக்கட்சியின்  தலைமை அலுவலகத்தின் பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் தலைமையில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக தீபங்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மதப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு தீபங்கள் ஏற்றி வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வுகளில் 100 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தினர். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

 வைகாசி 18, 2013

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டாம் -  இந்தியா

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26 பேரையும்விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலையில் பலத்த பாதுகாப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக் காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எனினும், இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராசிரியர்கள் பலர் சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

UNPers given special training

(By Manoj Prasanna)

The Friedrich Naumann Foundation, a Germany-based International Non-Government Organization (INGO), has held a two-day special workshop for United National Party (UNP) Members of Parliament, Local Government bodies and Provincial Councils, at the official residence of the Mayor in Colombo on ‘how to defeat the present government and bring the UNP back into power.’The workshop was conducted on 14 and 15 May. The chief speakers at the workshop included Manfred Risher, former Mayor of Germany and a senior Liberal Party committee member. It is especially significant to note that despite Colombo Mayor, A.J.M. Muzammil, repeatedly telling the party leadership the Mayor’s residence is an official residence given by the government, and a political workshop of this kind cannot be conducted there, Party Leader Ranil Wickremesinghe has given permission to the Fredrich Neumann Foundation to conduct the workshop aimed at overthrowing the government. At the same time, it is also noteworthy the UNP Leader, who made announcements in Parliament and outside of it that public property is being misused by the government to win elections held in the past, is now using government property to plan the overthrow of the government, a UNP MP quipped. It is learnt the Fredrich Neumann Foundation had agreed to provide the necessary plans, funds and advice to oust the present government in power, and install a UNP government.

வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும் - ஜனாதிபதி

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதைதந்தனர். அதற்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்டால் வடக்கு தேர்தலை நடத்த முடியாது - வாசுதேவ நாணயக்கார

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும். எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடக்கில் தேர்தலை நடத்தி அம் மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்ற நிர்வாக முறையை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியமர்த்தி விட்டு தேர்தலை நடத்தப்போனால் தமிழ் மக்களும் அதே கோரிக்கையினையே அரசிற்கும் சர்வதேசத்திற்கும் முன் வைப்பார்கள். இந்தியாவில் மாத்திரம் 40,000 இலங்கை தமிழர்கள் முகாம்களில் வாழ்கின்றனர். ஆகவே உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள வட மாகாணத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் வாக்களிக்கக்கூடிய புதிய சட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனவு காண்கின்றார் மீண்டும் சிவாஜிலிங்கம்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (மேலும்.....)

வடபகுதியில் பணிபுரிந்த டாக்டர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம்

தமிழர் யுத்தத்தின் பின்னர் கெளரவமாக நாட்டில் எந்தப் பகுதியிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் இராணுவத்தினரைப் பாராட்டுகிறார்கள். வடமாகாணத்தில் பெருமதிப்புக்குரிய வைத்திய நிபுணராக இருக்கும் டாக்டர் பி.சிவபாலன் இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் 2009 ம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், இலங்கை அரசியல் சாசனத்தில் தமிழர்கள் இப்போது சம உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். நான் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அனுபவித்த வேதனைகளை நேரில் பார்த்து இருக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழர்களாகிய எங்களுக்கு கெளரவமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழியமைக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதிபட கூற விரும்புகிறோன். (மேலும்.....)

வைகாசி 17, 2013

தேவைதானா இது.....?

காலி முகத்திடலில் இன்று யுத்த வெற்றி விழா அணிவகுப்பு

யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு எவருமே இனிமேல் உதவி வழங்கக் கூடாது!

‘முன்னாள் புலி உறுப்பினர்கள் பலரும் தற்போது அரசுக்கு விசுவாசியாக மாறி வருகின்றனர்’

2007.09.05 ம் திகதி பயங் கரவாத விசாரணைகள் பிரிவினால் கைது செய்யப்பட்ட அயர்லாந்து நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற குணசுந்தரம் ஜெயசுந்தரம் எனும் சந்தேக நபர் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை வயதுக்காலம் முதல் ஒரே வகுப்பில் கல்வி கற்ற நீண்டகால நண்பன் எனவும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்துகொண்டு எல். ரீ. ரீ.ஈ. இயக்கத்திற்குத் தேவையான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வன்னிக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்திற்காக கப்பல் ஒன்றினை விலைக்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டார். இந்த சந்தேக நபரை கைது செய்யும்போது அவரிடமிருந்த மடிக்கணனியில் மேற்படி விடயங்களை நிரூபிக்கக் கூடிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

பிரபாகரன் குடும்பத்தினர் மறைந்திருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொதுபல சேனா

விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தாம் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடுகளை புலம் பெயர் புலிகள் சீர்குலைத்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.  அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுக்ள இந்த நாட்டில் எந்தளவுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனால் நாங்கள் நேரடியாக புலிகளுடன் தொடர்பில்லாத, பிரிவினைவாததுடன் தொடர்பில்லாத புலம்பெயர் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள தீரமானித்தோம். அந்த குழுவுடன் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கிடைக்கும் நிதியுதவிகளை நேரடியாக மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்ல முடியும்.  எனினும் துரதிஷ்டவசமாக உண்மையான புலிகள் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளுடனான வேலைத்திட்டத்தை எதிர்த்தனர். அத்துடன் அந்த முன்னெடுப்புகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

பிரபாகரனின் வகுப்பு நண்பனுக்கு 15 மாத சிறை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வகுப்பு நண்பன் ஒருவருக்கு 15 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவு பற்றிய தகவலை வெளிப்படுத்தாமை உட்பட 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு 15 மாதகால சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. குணசுந்தரம் ஜேசுதாஸன் என்பருக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 15 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு மாதமென 15 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 15 மாதகால சிறைத்தண்டயையும் இவர் ஒரே சமயத்தில் அனுபவிக்கமுடியும். எனவே, இவர் ஒருமாதகாலத்திற்கு மட்டுமே சிறையிலிருப்பார். அதன் பின்னர் அவர் ஒருவருடகாலத்திற்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார். அப்படியாயின் 1 மாதத்திற்கு பின்பு கேபி உடன் அல்லது தமிழினியுடன் இணைந்து இலங்கை அரசுக்கு விசுவாசமாக செயற்படுவார் என்று கூறுங்கள்.

சிவசக்தி ஆனந்தன் எம்.பியையும் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் எந்தவிடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தனக்கு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு சிறிதரன் எம்பி உம் கடந்த மாதம் சுரேஸ் பிரேமசந்திரன் எம்பி உம் இதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்தன் கீழ் 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. புலிகளின் பிரசன்ன காலத்தில் புலிகளுடன் இணைந்து மக்களுக்கு எதிராகவும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராக செய்பட்டும் புலிகளின் கொலைகளுக்கு உடந்தையாக இவர்கள் செயற்பட்ட போது இவர்கள் உண்மையில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக தற்போது அரசு இவர்கள் விடயத்தில் விசாரணை என்று புறப்படுவது த.தே. கூட்டமைப்பின் ஆதிக்க சக்தி தமிழரசுக்கட்சியின் வருப்புக்களை நிறைவேற்ற அரசு விளைவதாவே பார்க்கப்படுகின்றது. மேலே கூறிய மூவர மட்டும் அல்ல த.தே. கூட்டமைப்பு யாவரும் மக்கள் மன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே. இன்று இது நடைபெறாவிட்டாலும் வரலாறு இவர்களைத் தண்டித்தே தீரும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரின் வீசா இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளருக்கு தற்காலி வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழில். மக்கள் முன்னணியின் சுவரொட்டிகள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.ஆஸ்பத்திரி வீதி மற்றும் யாழ்.நகரப் பகுதிகளிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி உரிமை கோரியுள்ளது.

 

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 32 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 32 பேர் சிலாபம் முன்னேஸ்வரம் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது இன்று சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும்,23 ஆண்களும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலீஸார் தெரிவித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் நபர் குறித்த விபரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை இந்தப் பயணத்திற்காக பல இலட்சம் ரூபாவரை முகவர் அறவிட்டுள்ளதாக பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ளவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் விசாரணையின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பழம்பொருட்களில் கிடைத்த ‘கொகா கோலா’ தயாரிப்பு ரகசியத்தை ஏலத்தில் விட முயற்சி

புகழ் பெற்ற குளிர்பானமான கொக்கா கோலா செய் முறை ரகசியம் அடங்கிய ஆவணத்தை கண்டறிந்ததாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அதனை பாரிய தொகைக்கு ஏலத்தில் விடவும் முயற்சித்து வருகிறார். ஜோர்ஜியாவைச் சேர்ந்த கிளிப் கிளுகெ என்ற நபர் ஈபே இணையதளத்தின் ஊடே ஏலத்தில் விட திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பண்ணையில் உள்ள பழங்கால பொருட்களை நானும் எனது மனைவி அர்லெனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது. பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கொக்கா கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என கொக்கா கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்பு கொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை. எனவே அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 5 மில்லியன் டொலர்களை முன்னர் அறிவித்தேன். இப்போது 15 மில்லியன் டொலர்களாக உயர்த்திவிட்டேன். விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என கிளிப் கிளுகெ குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் நலத்திற்கு கேடான ஒரு பானத்தின் ரெசிப்பியை யாருக்கும் தெரியவராமல் அழித்துவிடுவதே சரியான முடிவாக அமையும். செய்வார்களா இதனை...?

இனி, விவசாயம் இளைஞர்கள் வசம்!”

(டி.அருள் எழிலன்)

''தண்ணீர் அதிக அளவு தேவைப்படாத, நிதி வசதி அதிகம் தேவைப்படாத, ஏகமாக தொழிலாளர்கள் தேவைப்படாத விவசாய முறையே நம் இயற்கை விவசாயம். நிலம் வாங்கியோ அல்லது குத்தகைக்கு எடுத்தோ, இன்று இளைஞர்கள் விவசாயம் செய்ய வருகிறார்கள். இயற்கை நெல் ரகங்களைப் பொறுத்தவரை வருடம் முழுக்கத் தண்ணீர் தேவை இல்லை.  நிலம் வெடித்துப் பாளம் ஆகாமல் ஈரமாக இருக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தாலே போதும். மாப்பிள்ளைச் சம்பா, சம்பா மோசனம், மடு முழுங்கி, காட்டுயானம், சீரகச் சம்பா என சுமார் 63 ரகங்கள் இப்போது இருக்கின்றன. பசுமைப் புரட்சிக்கு முன்னர் பல லட்சம் இயற்கைப் பயிர் வகைகள் இந்தியாவில் இருந்தன. இந்த இயற்கை விதைகளைத் திருடித்தான் ரசாயனப் பயிர்களான வைக்கோல் இல்லாத முக்கால் அடி உயரப் பயிர் ரகங்களை உருவாக்கினார்கள். ரசாயன மருந்து தெளித்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் நோய்களைப் பெருக்கிவரும் நிலையில், இப்போது இயற்கை உணவுகளுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரசாயன விவசாயத்தைவிட இயற்கை விவசாயம்தான் இன்றைய தேதியில் லாபமானது. (மேலும்.....)

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

‘தொடரும் மரக்காணம் மரணங்கள்’

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேருந்து தாக்குதலில் நிகழ்ந்த பயங்கரங்களுக்கு அளவே இல்லை.  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், திருவண்ணாமலையில் பலியான ஹரியானாவைச் சேர்ந்த சக்கர் கான் ஆகியோரைத் தொடர்ந்து வாழப்பாடி அருகே செல்வம் என்ற பயணியும் கல்வீச்சுக்குப் பலியாகி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு 12.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து மீது வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்கியதில் செல்வம் என்பவர் உயிரிழந்திருக்கிறார். (மேலும்.....)

வைகாசி 16, 2013

வியர்வைக் கடைகள்!

'நாம் அணிந்திருக்கும் பிராண்டட் ஆடைகளில் உலகத் தொழிலாளர்களின் உதிரம் படிந்திருக்கிறது! '

(பாரதி தம்பி)

“அம்மா, அப்பா... என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி... அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?''- தன் மீது இடிந்து விழுந்துகிடக்கும் எட்டு மாடிக் கட்டடக் குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் தருணத்தில் 15 வயதுச் சிறுமி, துண்டுச் சீட்டில் எழுதிவைத்த குறிப்பு இது. அதை எழுதும்போது அவள் மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? வலியால், வேதனையால் எப்படித் துடித்திருப்பாள்? மரணம் தொட்டுவிட்டது என்று தெரிந்ததும் இறுக்கி அணைத்தபடி உயிர்விட்ட அந்தத் தம்பதியின் மன நிலையை நம்மால் உணர முடியுமா? (மேலும்....)

New Vanni Street in the City of Markham

I had an e-mail yesterday from a Tamil friend from Toronto which said “Please read below News – Vannie Street Opening Ceremony Media Promotion by Elliyabarathu Radio (TBC).  This is a New Street in City of Markham…..” Hmmm……interesting I thought!  My memory raced back to just two years ago when I sent you an e-mail of my Crystal Ball Reading to be entombed as a Time Capsule somewhere in the City of Markham to be opened in 25 years. In it I predicted that the City of Markham will evolve and will be re-named as the City of Eelam-Markham or Markham-Eelam.  Its Mayor will be a Tamil and more than half the members of the Council will be Tamils. (more....)

யாழ். காணி சுவீகரிப்புக்கு எதிராக 1,474பேர் ரிட் மனு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், இன்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். தங்களது சொந்த காணிகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையின்  தலைமையகத்தை அமைப்பதற்கு என 6,381 ஏக்கர் 38.97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2 கீழ் பிரகடணம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் பலாலி மற்றும் காங்கேசன்துறை அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரதேசத்தை கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ”சதுர கிலோ மீட்டர் 25.8 பரப்பளவுள்ள இந்த பிரதேசமானது, சதுர கிலோ மீட்டர் 37.21 உள்ள கொழும்பு நகரத்தை போன்று 2/3 பரப்பளவு கொண்டதாகும்.

தங்காலை கிராமத்துக்குள் புகுந்த கும்பல் தாக்குதல், 16 வீடுகளுக்கு சேதம்

தங்காலை, மரியாவத்தை தமிழ் கிரா மத்திற்குள் புகுந்து ஒருவரை வெட்டி, 16 வீடுகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள தாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன மேலும் தகவல் தருகையில்:- தங்காலை, பொது மயான வளாகத்திற்கு அருகிலுள்ள மரியாவத்தை தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்கள நபர் ஒருவர் அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டிக் குத்தி காயப்படுத்தியுள்ளதுடன், அந்த கிராமத்திலுள்ள 15 தமிழர்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவருடைய வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். தமிழ் கிராமத்திலுள்ள பெண் ஒருவருக்கும் சிங்கள கிராமத்திலுள்ள ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. குறித்த பெண்ணின் மகன் சம்பந்தப்பட்ட நபரை கடந்த 12ம் திகதி கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதன் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது.  

வைகாசி 15, 2013

வடக்கு எல்லையிலேயே காணமல் போகும் அமைச்சர்....?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப் போகிறதா?

(கே.சஞ்சயன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவற்காக, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை தலைமையில் நடத்தப்பட்ட கூட்டம் இணக்கப்பாடு ஏதுமின்றி முடிவடைந்துள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பான சிக்கலும் தீவிரம் பெற்று வருகிறது. இந்தப் பதிவுச் சிக்கல், இதற்குத் தீர்வு காண்பதற்காக நடத்தப்பட்டுள்ள கலந்துரையாடல்கள் எல்லாமே – மேன்போக்காக ஒரு விடயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துப் பலவீனப்படுத்துவதற்கான தூண்டுதல்கள் அதிகரித்துள்ளன என்பதே அது. இது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இத்தகைய தூண்டுதல்களும், முயற்சிகளும் தான், இந்தவேளையில் அவசர பேச்சுக்கள், கலந்துரையாடல்களில் இறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.
(மேலும்....)

ஆச்சிரமம் என்ற பெயரில் கிளிநொச்சியில் பாலியில் வல்லுறவுகள்!

 

ஆச்சிரமம் என்னும் பெயரில் சிறுவர்களை வைத்து பாலியல் வல்லுறவுகள் நடைபெறுவது தமிழர்பகுதியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் 15 வயதுச் சிறுமியை கை, கால்கள் கட்டிய பின் கடும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் ஆச்சிரமத்து ஆசிரியர். 15 வயசு சிறுமி கை கால் கட்டப்பட்டநிலையில் மலசலகூடத் திற்குள்வைத்து அங்கு ஆசியராக பணிபுரிந்த குடும்பஸ்தர் ஒருவரால் மிகவும் மிருகத்தனமாக பாலியல் பலாத் காரத்திற்கு உட்படுத்தப் பட்டதோடு மனநோயாளி என்று முத்திரை குத்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளாள். இந்த கொடூரசம்பவத்திற்கு ஆசிரம நிர்வாகமும் உடந்தையாகயிருந்துள்ளதாவும் அதிகாரிகள் தரப்பில் குற்றம் கூறப்படுகிறது. (மேலும்....)

தமிழ்க் கட்சிகளின் முயற்சி தோல்வி

விரைவில் நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்ற உறுதிமொழியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொடுக்க மறுத்ததை தொடர்ந்து தேசிய பிரச்சினை தொடர்பில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமது கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்து விட்டு தேசிய பிரச்சினை தொடர்பாக ஒரு பொது கொள்கையை வகுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளை சிவில் சமூக ஆர்வலர்கள் கேட்டதன் பின் சில  நாட்களில் இவர்களுடைய பேச்சு இவ்வாறு தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவொன்று இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. தாங்கள் தேசிய பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை முன்வைத்தோம். எனினும் வரவுள்ள வட மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்காவிடின் இதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். பதிலுக்கு எம்மை ஒரு சுயேட்சை குழுவின் பிரதிநிதிகளாக தேர்தலில் போட்டியிடுமாறு அவர் எம்மிடம் கூறினார். நாம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கிற்கு மட்டுமே செப்டம்பரில் தேர்தல்

வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு தேர்தலை மட்டும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவருடத்திற்கு முன்பதாகவே வடமேல் மற்றும் மத்திய ஆகிய இரு மாகாண சபைகளை கலைப்பதற்கு ஆளுநர்கள் நடவடிக்கைகளை எடுப்பர் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதியின் கட்டளைக்கு பின்னரே வடமாகாணசபைத்தேர்தலை நடத்தமுடியும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஜனாதிபதி அடுத்தமாதம் முற்பகுதியில் தேர்தல்கள் ஆணையாருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அவ்வாறான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் செப்டெம்பர் முதல் வாரத்தில் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய இருமாகாண சபைகளின் தேர்தல்களையும் வடமாகாண சபை தேர்தலுக்கு பின்னரே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தூதரகத்தை நிர்மாணிக்கும் அமெரிக்கா

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுதரகம் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்க உள்ளது. இதற்காக தற்போது காலி வீதியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அடுத்ததாக உள்ள கட்டிடத்தை கொள்வனவு செய்துள்ளது. இந்த கட்டிடத்தில் முன்னர் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகாரலயம் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இந்த கட்டிடத்தின் உரிமை மாற்ற நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானியா பிரதி உயர் ஸ்தானிகர் ரொபி புளுச் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை, மெரைன் ட்ரைவ் வீதி விஸ்தரிப்பிற்கு தேவையான காணியினை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்

சுமார் 27 வருடங்களின் பின்னர் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு” என்பதனை நிறைவேற்றும் நோக்குடன் போக்குவரத்தில் காணும் மறுமலர்ச்சியில் இன்னுமோர் மைல்கல்லாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த புகையிரத சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை புனரமைப்பிற்கு 81.34 மில்லியன் டொலரை இந்திய நிறுவனமொன்று வழங்கியிருந்தது. அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமான இப்புகையிரத பயணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ,போக்குவரத்து உதவி அமைச்சர் ரோகன திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆயிரக்கனக்காண பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வைகாசி 14, 2013

தீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை; விடுதலையை நோக்கி நாம் முன்னேற வேண்டுமாயின் ஒரு பலம் பொருந்திய அமைப்பு அவசியம்! - புளொட் தலைவர் சித்தார்த்தன்

வெளிநாடு ஒன்றில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியா பறித்தமையே எமது இயக்கம் பலவீனப்படுவதற்கு காரணம், ‘புளொட்டினால் வெளியிடப்பட்ட ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல் இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும், புளொட்டின் ஆயுதப் போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் எமது பின்னடைவிற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது.’ -தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தந்திக்கு வழங்கிய செவ்வி...
(மேலும்....)

தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் தமிழினி, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விடுதலையாகவுள்ளார் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார். தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வரலாம். ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

பெரியவரின் மனசு பெரிது

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார்.
சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்.
முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.
"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா?" என கேட்டார்.
எரிச்சலடைந்த சர்வர்,
"பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா..? 45 ரூபாய்தான்" என்றார்.
பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார்.
சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில்
வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார்.
மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது, முதியவர் சொன்னார்"
"வச்சுக்கோ...உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை...!"

பன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...!

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ஒன்பது மாடிக்கட்டிட இடிபாட்டில் ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள், ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக நாளாந்த போராடும் ஏழை உழைப்பாளியின் உயிர் தீ விபத்துக்குள்ளும், கட்டிட இடிபாடுகளிலும் அர்த்தமற்று அழிந்து போகிறது. எல்லாரையும் போல நானும் வாழ வேண்டும், குடும்பம் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற நினைப்போடு தொழிலுக்கு செல்லும் மனிதன் பிணமாக மீட்கப்படுகிறான். (மேலும்....)

கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

'வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு' வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினிசூறாவளியினால் கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள வலிகாமம் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கண்டறிவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சென்றபோது, அம்மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இதன்போது தொடர்ந்து சுரேஸ் எம்.பி.யிடம் உரையாற்றிய அம்மக்கள், '23 வருடங்களுக்கு மேலாக எமது நிலங்களை நாங்கள் விட்டு வெளியேறி இன்று சொல்லனா துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றோம். ஒருவரின் முற்றத்தில் இன்னொருவர் வீடு கட்டி வாழும் நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்' என்று குறிப்பிட்டனர்.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விமல் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவேண்டும். அவ்வாறல்லாது தேர்தலை நடத்துவது பிரிவினை வாதத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என்று விமல் வீரவன்ச தெரிவித்து இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோத்தில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்தில் புயல்; மின்சாரம் தடை, உடைமைகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6.35 மணியளவில் வீசிய புயல் காற்றால் மல்லாகம் கோணக்குளம் முகாமில் உள்ள தற்காலிக குடிசைகள் மேல் சுமார் 25 பனை மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், இதில் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இடி, மின்னலுடன் கூடிய மழையோடு வீசிய இம்மினி புயல் காற்றால் மக்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மாவை கலட்டி எனும் இடத்தில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் சதீஸ்வரன் (43) என்பவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன் பனை மரங்கள் பரவலாக முறிந்து வீழ்ந்துள்ளன. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ஜன்டீனாவில் 25 ஆண்டுகளின் பின் வெளிப்பட்ட நகர்

ஆர்ஜன்டீனாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீரில் மூழ்கியிருந்த முன்னாள் சுற்றுலா தலமான எபிகியுன் நகர் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. எனினும் இந்த நகர் முழுமையாக அழிவடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த வாகனங்கள், தளபாடங்கள், இடிபாட்டு குவியலாகி இருக்கும் வீடுகள் மற்றும் ஹோட்டல்களை பார்வையிட மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். ஏரிக்கரை நகரான எபிகியுனில் சுமார் 1,500 க்கும் அதிகமானோர் வாழ்ந்துவந்ததோடு ஒவ்வொறு பருவகாலத்திலும் 20,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். எனினும் 1985 ஆண்டு கட்டுக்கடங்காத மழையால் இந்த பகுதியை பாரிய வெள்ளம் சூழ்ந்ததோடு அது நகரையே மூழ்கடிக்கச் செய்தது. இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் ஒரு சில மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டனர். 33 அடிக்கு உப்பு நீரால் நகரம் முழுமையாக மூழ்கியது. இந்நிலையில் கால் நூற்றாண்டுகள் கழித்து இங்கு தண்ணீர் வற்ற ஆரம்பித்துள்ளது. இந்த பகுதி மீண்டும் சுற்றுலா தலமாக மாறும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைகாசி 13, 2013

வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கை தமிழ்ச் சமூகத்துக்கு ஆபத்து

பிரபாகரனின் சிறுபராய நண்பரும் நெருங்கிய தோழருமான குணசுந்தரம் ஜெயசுந்தரம்  உச்சநீதிமன்றில் வாக்குமூலம்

2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிறுபராய நண்பரும், நெருங்கிய தோழருமான குணசுந்தரம் ஜெயசுந்தரம் அந்த பயங்கரவாதத் தலைவரின் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவித்துள்ளார். மே 10 ஆம் திகதி கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த போது இந்த எல்.ரீ.ரீ.ஈ. முன்னணி உறுப்பினரான குணசுந்தரம் இதனைத் தெரிவித்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததையும் அந்த இயக்கத்துக்கு கப்பல்களைக் கொள்வனவு செய்ததையும் குணசுந்தரம் ஏற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (மேலும்....)

வெளிவந்துவிட்டது வானவில் 28

இனவாத மதவாத சக்திகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்க வேண்டும்!

புலிகளுடனான போர் முடிவுற்று 4 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நாட்டில் பூரணமான தேசிய நல்லிணக்கமோ, ஜனநாயகமோ, சமாதானமோ ஏற்படாத ஒரு சூழலே நிலவுகின்றது. அத்துடன் தெற்கிலும் வடக்கிலும் சில நாசகார சக்திகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளறி, தமது தீய நோக்கங்களை நிறைவேற்றவும் முயன்று வருகின்றன. நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலைமைகளுக்கு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் மீது குற்றம்சாட்டி வருகையில், மறுபக்கத்தில் அரசாங்கமே இதற்குக் காரணம் என, எதிரணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. போர்க் காலத்திலும்  அதன் பின்னரான சிறிது காலமும் சற்று பின்வாங்கியிருந்த தமிழ் பிரிவினைவாத பிற்போக்கு சக்திகள், அரசாங்கம் தமக்கு எதிரான தீவிரமான நடவடிக்கை எதனையும் எடுக்காது என்று கண்ட தைரியத்தில், மீண்டும் தமது அசிங்கமான தலையைப் படிப்படியாகத் தூக்கி, இப்பொழுது முழு அளவிலான தேசத் துரோகச் செயலுக்குத் தயாராகிவிட்டார்கள். இவர்களது இந்தச் செயலுக்கு புலிகளின் அழிவால் இலங்கையில் தமது திட்டங்கள் தவிடுபொடியானதைக் கண்டு ஆத்திரமுற்ற சில வெளிநாட்டுச் சக்திகளும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களும்  தமிழகத்திலுள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகளும், ஏகாதிபத்தியத்துக்குச் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியும் கைகொடுத்து வருகின்றன. இன்று அவர்களது நாட்டுக்கு எதிரான செயல்பாடு, ஒன்றிணைந்த முழு அளவிலான வடிவத்தை எட்டியுள்ளது. (மேலும்....)

US strategy could result in nuclear war

(David Wroe)

A US military strategy being mapped out to deal with the growing power of China in the western Pacific - a plan that would inevitably involve Australia - could escalate into a nuclear war, a leading think tank has warned. The Australian Strategic Policy Institute has written in a new paper that the fashionable ''AirSea Battle'' concept, which Washington strategists are developing to keep the US's grip on its sea and air power near China, contains ''uncertainties and potential shortfalls'' that could heighten the nuclear risk. The concept risks making the Chinese military an enemy. (more...) 

50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் என். வேதநாயகம் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதுயுதீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த குடியேற்றத்திற்காக ஒட்டுசுட்டான் வீதி, குமுழமுனை, குழா முறிப்பு, சிலாவத்தை தியோநகர் ஆகிய ஐந்து இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பாக்.தேர்தல்

நவாஸ் ஷரீப் பெரு வெற்றி, 130 ஆசனங்கள் அறுதிப் பெரும்பான்மை, ஆளும் கட்சி படுதோல்வி

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளின்படி நவாஸ் ஷரீபின் முஸ்லிம் லீக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதிகமானோர் தமது வாக்குகளை பதிவுசெய்தனர். பாகிஸ்தான் வரலாற்றில் ஜனநாயக முறையில் முதல் முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் தேர்தலாக இது பதிவானது. தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று காலை வரை மந்தமாக வெளிவந்த நிலையில் நவாஸ் ஷரீபின் கட்சி மொத்தமுள்ள 272 ஆசனங்களில் 119க்கும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ், ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி, இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவின. இதில் நவாஸ் ஷரீப் கட்சிக்கு நேற்று மாலை வரை 130 இடங்கள் கிடைத்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த கட்சிக்கு 35 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்துக்கு முன்னேறி எதிர்க்கட்சியானது. சிறிய கட்சிகள் சுயேச்சைகள் 61 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க வேண்டு மானால் 137 இடங்கள் தேவை. நவாஸ் ஷரீப் கட்சிக்கு தனி பெரும்பான்மைக்கு 7 இடங்களே தேவைப்படுகிறது. நேற்று மாலை வரை இன்னும் 9 தொகுதி முடிவுகள் மட்டுமே வரவேண்டி இருந்தது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கைவிட முடியாது - சம்பந்தன்

தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை - சுரேஸ்

த.தே. கூ. ஐ பதிவது  என்ற  நோக்கம் நிறைவேறவில்லை - ஆனந்தசங்கரி

தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார். இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாவில்லை என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

கொலன்னாவ தேர்தல் தொகுதியின்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமனம்

கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, கொலன்னாவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், துமிந்த சில்வா படுகாயமடைந்திருந்தார். நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துமிந்த சில்வாவிற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொலன்னாவ நகரசபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக ஹிருனிகா அறிவிப்பு

அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

பாட்டி, அம்மா பாணியில் கர்நாடகாவிலும் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி!

தமது பாட்டி, அம்மா பாணியில் கர்நாடக மாநிலத்தின் லோக்சபா தொகுதி ஒன்றில் காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் காந்தி போட்டியிடக் கூடும் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநில முதல்வர் வேட்பாளரை சட்டென காங்கிரஸ் அறிவித்ததில் ராகுல் காந்தியின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி ஏற்கெனவே கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். ராகுலின் அம்மா சோனி யாவும் கூட கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் அமேதி தொகுதி மற்றம் கர்நாடக மாநிலத்தின் ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வேண்டும்என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ராகுல் காந்தியும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டாராம். ஆக கர்நாடகாவில் ராகுல் போட்டியிடுவதும் உறுதியாகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி. எம். செளந்தரராஜன்

திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். செளந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தை வெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் செளந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

வைகாசி 12, 2013

அமீனா சாலியின் பெயரால் ஜப்னா முஸ்லிம் ஊடக மோசடி!

ஊடகங்களுக்கு இடையில் போட்டி இருக்கத்தான் வேண்டும், அதற்காக செய்திகளை தாமாக செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் பரபரப்பு மற்றும் புகழ் தேட நினைப்பது மோசமான ஒரு செயலாகும். அமெரிக்க ஊடக ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட ரூபர்ட் முர்டொக் என்பவர் செய்திகளை செயற்கையாக உருவாக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உலக அரங்கில் கேவலப் பட்டுப் போனதும், அவருக்கு சொந்தமான "நியூஸ் வீக்" வாராந்த சஞ்சிகை  பதிப்பகம் இழுத்து மூடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அஸாத் சாலி அவர்கள் கைது செய்யப் பட்டது, அது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன. வழமை போலவே இணைய ஊடகங்களுக்கு மத்தியில் செய்திகள், நிகழ்வுகளை விரைந்து வெளியிடுவதில் உள்ள போட்டி இதிலும் காணப் பட்டது. நேர்மையான போட்டி, எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும். (மேலும்....)

6 Cheap Places to Retire Abroad

Over the 20th century, many retirees moved from New England, California and the Midwest to the sunny and sparsely populated Sun Belt, where low taxes and warm weather beckoned. Today, many Americans are moving much farther afield to enjoy a new life at a low cost. Thousands are migrating to Asia, South America, Europe and beyond to stretch their retirement dollars. And foreign countries, eager for the boost to their economies, have taken notice. With so many nations interested in attracting retirees from abroad, Americans are spoiled for choice. Bankrate uncovers six up-and-coming destinations where retirees can easily live on an income of $2,000 a month. In some cases, retirees are already living there for far less. Read on to discover the affordability of housing, food and medical care at these retirement destinations. (more....)

வைகாசி 11, 2013

காத்தான்குடியில் பதற்றம்

பொலிஸ், இராணுவம் குவிப்பு

மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகிய தகவலையடுத்து இன்று இரவு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததையடுத்து மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும்,இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகத் தடுப்பு படையினரும்,போக்குவரத்து பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அப்பகுதி சுமூக நிலைக்கு திரும்பியுள்ளதாக பின்னர் கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பதிவு செய்வமா..?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். புலிகளின் காலத்தில் தமிழ் செல்வனுடன் இணைந்து தமிழ் மக்களின் போராட்டத்தை நாசப்படுத்திய வெள்ளை அங்கிகள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அரசுடனும் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைக்க திட்டம் போடுகின்றனரா என்று தமிழ் சமூகம் கேள்வி கேட்டு நிற்குமா....?

தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை எமக்கு இருக்கின்றது - ஞானசார தேரர்

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம் உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வே பிரஜை ஒருவரின்  அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும் தேவை இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும் துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். போரில் வெற்றியோ தோல்வியோ இல்லை என்பதால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் முதல் நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும்  ஜெனிவாவுக்கு சென்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அது ஜனநாயக உரிமை எனவும் தேரர் கூறியுள்ளார்.

ஆஸிக்கு அச்சுறுத்தல் எனும்பேரில்ஐம்பது அகதிகள் தடுத்து வைப்பு

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அந்நாட்டு அரசாங்கத்தினால் மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட அகதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்நாட்டின் மனித உரிமை அமைப்புக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளன. அகதி தஞ்சம்கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களே அந்நாட்டு புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் அறிவுறுததல்களின் பேரில் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், மேற்படி ஐம்பது பேரும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கான சரியான காரணங்களை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் வெளியிடாததையடுத்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனப்படுகொலைக்காக 80வருட சிறை

குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ் மொண்ட் அவர்களை அங்குள்ள நீதிமன்றம் ஒன்று குற்றங்கண்டிருக்கிறது. அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி கெரில்லாக்களுக்கு உதவியதான சந்தேகத்தின் அவர்களுக்கு தண்டனையாக பரவலான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல் ஆகியவற்றை மேற்கொண்டதாக நீதிபதி கூறியுள்ளார். தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முதலாவது முன்னாள் தலைவர் இவராவார். (பிபிசி)

கச்சதீவை உரிமை கோர தமிழகத்துக்கு அதிகாரம் இல்லை - டக்ளஸ்

சட்டரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு இலங்கைக்கு உரித்துடையதாகியுள்ளது. இதனால், கச்சதீவை தமிழ்நாடு எக்காரணம் கொண்டும் உரிமை கோர முடியாது என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சதீவின் உரிமையை கோரி நிற்கின்றார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். கச்சதீவு தொடர்பான விவகாரம் இலங்கை - இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரம் ஆகும். அதனால், அரசியல் நோக்கமின்றி அதனைப் பார்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளிடம் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிய சட்டம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நீதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.



ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே

அசாத்சாலி விடுதலை , குற்றத்தை ஏற்றுக் கொண்டதால் மன்னிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமை, இனவாதத்தை தூண்டியமை, இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலாக பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் நேற்று விடுவிக்கப்பட்டார். சுகவீனமுற்ற நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த அசாத்சாலி நேற்றுப் பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று உரிய ஆவணத்தில் கையொப்பத்தினை பெற்றுக்கொண்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டார். எனினும், விடுவிக்கப்பட்ட அசாத் சாலியின் உடல்நிலை பலவீனமாக இருந்தமையால் அவரை, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதித்தனர். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அவர் வெளியிட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு விசாரணைக்காக அசாத்சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுத்து வைப்பதற்கான உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப் பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக்க நடவடிக்கை

எயார் லங்கன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக முன்னேற்ற 5 வருட திட்டமொன்று தயாரிக்கப்படுவ தோடு இதன்படி புதிதாக விமானங்கள் கொள்வனவு செய்யவும் இருக்கும் விமானங்களை மீளமைக்கவுமுள்ளதாக பிரதிநிதி அமைச்சர் சரத் அமுனுகம கூறினார். வாய்மூல விடைக்காக கேள்வியொன்றை எழுப்பிய ரவி கருணாநாயக்க எம்.பி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து இடையீட்டுக் கேள்வி ஒன்றை வினவினார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகையில் அரசாங்கம் புதிதாக 13 விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பது குறித்து அவர் வினவினார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் ஸ்ரீலங்கன்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனம் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது. அதனடிப்படையிலே புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்துவதினூடாக லாபம் பெறும் நிறுவனமாக இதனை மாற்றமுடியும். இதற்கு பெருமளவு நிதி செலவாகும்.

கிழக்கு முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் -  கிழக்கு முதலமைச்சர்

நாட்டின் தற்போதைய சூழ் நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடையடைப்பு, ஹர்த்தால் மற்றும் உண்ணாவிரதம் போன்ற செயற்பாடுகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவையல்ல. எனவே எந்தவொரு விவகாரத்தையும் ஜனநாயக வழியிலான பேச்சுவார்த்தை மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார். ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குட்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அமைப்புக்கள் அஸாத் சாலியின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் உணர்ச்சிக்கும் வெற்றுக் கோஷங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக செயற்படுவதன் மூலம் நிலைமையினை சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தனது கோட்டையாக இருந்த கர்நாடகாவை சில ஆண்டுகள் கை நழுவ விட்டாலும் மீண்டும் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1977ம் ஆண்டில் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பு அலை காங்கிரஸை புரட்டி போட்டபோதும் கர்நாடகா காங்கிரஸ¤க்கு கை கொடுத்தது. அந்த தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியில் தோற்றார். பின்னர் 1978ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனார். அந்த அளவுக்கு காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய கர்நாடகாவை 1983ம் ஆண்டு வரை அக்கட்சியே ஆட்சி செய்தது. (மேலும்....)

இரண்டு பேர்... இரண்டு கொலைகள்!

திலுக்குப் பதில் என்று சொல்வதைப்போல நடந்துள்ளன அந்த இரண்டு மரணங்கள்! 

23 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித்சிங் அங்கேயே தாக்கப்பட்டு பிணமாகத்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். பதிலுக்கு காஷ்மீரின் கோட் பால்வால் சிறையில் பாகிஸ்தானியர் சனாவுல்லா ரஞ்சய் என்னும் கைதி தாக்கப்பட்டு பிணமாக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் கொடூரம் தலைதூக்குவது இந்தியா, பாகிஸ்தான்  நாடுகளைச் சேர்ந்த மனித உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 52 வயதாகும் சனாவுல்லா, பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவர். 1999-ல் காஷ்மீர் பகுதியில் தீவீரவாத நடவடிக்கைகளுக்காக கைதுசெய்யப்பட்ட சனாவுல்லா, தடா வழக்கின் கீழ் தண்டனைக்குள்ளாகி, காஷ்மீர் சிறையில் இருந்தார். காஷ்மீர் சிறையில் பைப் பேக் இசைக் கலைஞராகவும், புல்லாங்குழல் இசைப்பவராகவும், மற்ற நேரங்களில் பட்டம் செய்துவிடுபவராகவும் சிறையில் அனைவருக்கும் பிடித்தவராக வாழ்ந்தவர் சனாவுல்லா. (மேலும்....)

வைகாசி 10, 2013

அஸாத் சாலி விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மிறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் 28 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மீதான அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல்நீதி மன்றின் அறை எண் 502 இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதிகளான கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் சத்தியா ஹெடிகே ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 'இந்த மனு தொடர்பான தகவல்களை கொடுக்க எமக்கு சிறிதுகாலம் தேவை . அவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கும் பிரதிவாதிகளின் அறிவுறுத்தல்களையும் நாம் பெற வேண்டியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணைகளை சிறு காலத்திற்கு ஒத்திவைக்குமாறு' சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பொதுமக்களின் அழுத்தங்களின் காரணமாகவே அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்

பொதுமக்களின் அழுத்தங்களின் காரணமாகவே அரசாங்கம், தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வரையில் பயங்கரவாதி ஒருவரைப் போன்று நடத்தப்பட்ட அசாத் சாலி, மக்கள் அழுத்தம் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டார் என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கு சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, அசாத் சாலி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமையை ஓர் பழிவாங்கல் நடவடிக்கையாக நோக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் 8 மணிநேரம் மூடப்படும்

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தினமும் 8 மணிநேரம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுத்தளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த 8 மணி நேரத்தில் இலங்கைக்கு வரும் விமானங்கள் ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, கட்டுநாயக்க விமனா நிலையத்தின் ஒடுத்தளங்கள் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மணிநேரம் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வன்னி மாவட்டத்தின் பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு ஒருமித்தகுரலில் தீர்மானக் கடிதங்களை அந்த அந்த மன்றங்களின் சார்பில் அனுப்பிவைத்துள்ளார்கள். (மேலும்....)

வட மாகாண தேர்தல்

டக்ளஸ் - ஜனாதிபதி சந்திப்பு

வட மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார். எனினும் ஆளும் கட்சி பட்டியலில் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தேர்தல் பற்றி மேலெழுந்த வாரியான கருத்தாடல்கள் நடந்துள்ளன. நான் இந்த வார இறுதியிலேயே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை ஆரம்பித்ததும்

இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்களை எடுத்துவரத் திட்டம்

கொழும்பு - தலை மன்னார் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்களை எடுத்துவர நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். வட பகுதிக்கான ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசின் உதவியுடன் தென்பகுதிக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டது. புதிதாக 35 ரயில் பெட்டிகள் தருவிக்கப்பட்டுள்ளதோடு குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தலை மன்னாருக்கான ரயில் பாதை நிறைவடைந்த பின்னர் இந்தியாவில் இருந்து பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றினூடாக ரயில்வே திணைக்களம் ஈட்டிவரும் நஷ்டம் குறைவடையும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ரயிலைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 2008 இன் பின்னர் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றார்.

வைகாசி 09, 2013

கூட்டமைப்பை உடைக்க முடியாது - சீ.வி.கே

தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் இன்று தெரிவித்தார். அவர் மேலும் பதிலளிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் ஒற்றுமையை சிதை சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். அதேவேளை,  தமிழர் விடுதலை இயக்கம் தமிழரசு கட்சியை விட்டு விலகாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அத்துடன், நம்பிக்கைதான் வாழ்க்கை அரசியலில் முரண்பாடுகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால், அவற்றினை ஏற்று நடக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதென்பதில் சில உத்திகள் இருப்பதாகவும், கட்சியாக பதிவு செய்வதில் இரண்டு வகை இருப்பதாகவும், அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனியாக பதிவு செய்வதா அல்லது கூட்டாக பதிவு செய்வதா என்பதுதான் முக்கியமானதென்றும் அவர் கூறினார். ஏற்கனவே ஒட்டாமல் பதவிகளுக்காக உடைந்திருக்கும் த.தே.கூ ஐ என்ன புதிதாக உடைக்கமுடியுமா என்று சிவஞானம் சலேடையாக குறிப்பிடுகின்றார் போலும்.

'கச்சதீவு எமது கடல் எல்லையிலேயே உள்ளது'

"கச்சதீவு இலங்கையின் கடல் எல்லையின் உள்ளே உள்ளது. தமிழ் நாடு அரசியல்வாதிகள் கூறுவது போலன்றி வேறு நாட்டவருக்கு அதைப் பயன்படுத்தும் உரிமை இல்லை" என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு தரையிறங்கும் உரிமை 10 வருடங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். 1974ஆம் ஒப்பந்தப்படி கச்சதீவை அண்டிய கடலில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என அமைச்சர் தெரிவித்தார். இப்போது அவர்களுக்கு கச்சதீவில் இறங்கவோ இலங்கை கடற் படையின் அனுமதியின்றி வலைகளை காயப்போடவோ உரிமையில்லை என அவர் குறிப்பிட்டார். இலங்கை கடல் எல்லையினுள் மீன் பிடிக்கும் ஒவ்வொரு மீனவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர் என அமைச்சர் ராஜித தெரிவித்தார். முன்னர் போல இந்திய கடலில் கைது செய்யப்படும் இலங்கை மீனவரை காப்பற்ற நாம் முன்வரமாட்டோம் என அவர் கூறினார்.

பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்

பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரை இந்தியா, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. 34 வயதான நிஸார் அஹமட் என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய வீசா இன்றி ஆந்திர பிரதேசத்தின் சுட்டப்பா கிராமத்தில் வாழ்ந்து வந்த போது குறித்த நபரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளாக உரிய வீசா எதுவுமின்றி குறித்த தீவிராவதி இந்தியாவில் வாழ்ந்து வந்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து அவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இலங்கையிலிருந்து இந்தியா சென்ற காரணத்தினால் அவரை இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். சென்னையிலிருந்து குறித்த நபர் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நாடு கடத்தல் தொடர்பில் இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இலங்கை அதிகாரிகள் குறித்த தீவிரவாதியை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிப்பு

இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அசாத் சாலி குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் அதனை நிரூபித்து விடுதலையாக முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மறுபுறத்தில் முஸ்லிம் சமூகம் தாங்கள் விசேடமானவர்கள் எனக் கருதினால் அது பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 223 தொகுதிகளில் அந்தக் கட்சி 120 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்தன. காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வரானார். ஆனால் தேவ கெளடா தந்த தொல்லையால் அந்தக் கூட்டணி முறிந்தது. இதையடுத்து பா. ஜ. க.வும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்தன குமாரசாமி முதல்வரானார். ஆனால் தனது பதவிக் காலம் முடிந்து முதல்வர் பதவியை பா. ஜ. க.வின் எடியூரப்பாவிடம் தர குமாரசாமி மறுத்ததையடுத்து 2007 ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்தது. பா. ஜ. க. இதையடுத்து நடந்த தேர்தலில் பா. ஜ. க. வெற்றி பெற்றது. (மேலும்....)

இந்திய அகதிமுகாமிலிருந்து 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியா விலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் சுயவிருப்பத்தின் பேரில் விமானம் மூலம் நேற்று நாடு திரும்பினர். யு.எல்- 132 விமானம் மூலம் நேற்றுக் காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததாக விமான நிலைய குடிவரவு பொறு ப்பதிகாரி எஸ். எல். மன்சூர் தெரி வித்தார். அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தா னிகராலயத்தின் ஏற்பாட்டில் நேற்று விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் யு. என். எச். சி. ஆர். அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர். நாடு திரும்பிய ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 27 தமிழர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவர். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 பேரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் மகாராணி சார்பாக இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு

இலங்கையில் நடைபெற விருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொது நலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார். நீண்டதூரம் பயணம் செய் வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத் திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ் வுகளில் மகாராணியைப் பிரதிநிதித் துவப் படுத்தி அரச குடும்பத் தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

வைகாசி 08, 2013

உரையரங்கு

தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் யாழ்ப்பாண காணிப்பதிவக ஓய்வுபெற்ற மேலதிகப் பதிவாளரும் காரை மத்தி மேம்பாட்டுக் கழக போசகருமான திரு. கந்தையா நடராசா அவர்கள்

'யாழ்ப்பாண சமூக மறுமலர்ச்சியும் கல்வி வளர்ச்சியும்'

என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.

தலைமை: எஸ்.தருமராசன் (தலைவர், ஆக்கபூர்வ சிந்தனை செயற்பாட்டு மையம்)

காலம்: 2013 மே 12, ஞாயிறு காலை 9.00 – 12.00 வரை

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்

150 Borough Drive, Scarborough

கூட்ட அறை - 2  (Committee Room – 2)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:

ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயல்பாட்டு மையம்

E-mail: creathought1@gmail.com

கூட்மைப்பின் உள் முரண்பாடும் வடமாகாண சபை தேர்தலும்

வடக்கில் கடந்தகாலங்களில் நடைபெற்ற அந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் கட்சியைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்கள் ஆதரித்தனர். எவ்வளவுதான் அபிவிருத்தியைப் பற்றிப் பேசினாலும் அந்த நிலைமை மாறியிருக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இல்லை. வட மாகாணசபைத் தேர்தல் வந்தால் அரசாங்கத்திற்காக மேடைகளில் பேச முன் வருவது புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் மட்டுமல்ல. புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் மட்டுமன்றி பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பீயும் அப்போது அரசாங்கத்திற்காக மேடையேறலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அதிகார பரவலாக்கலை பூரணமாக ஆதரிக்கும் கட்சியொன்று வடக்கில் பதவிக்கு வருவது அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு சாதகமான நிலைமையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபையில் பதவிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக வேறு நன்மை ஏதும் ஏற்படும் என்பதற்கில்லை.(மேலும்....)

சிரியா மீது இஸ்ரேல் போர் விமானம் மீண்டும் தாக்குதல் - உலக நாடுகள் கடும் கண்டனம்  

இஸ்ரேல் போர் விமானங்கள் மீண்டும் லெபனான் வான் வழியாக அத்துமீறி பறந்து வந்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட மூன்று முக்கிய ராணுவ தளத்தின் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அல்கொய்தா தொடர்புடைய ஆயுதக்குழுவினர் சிரியா அரசுக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு வெளிப்படையாக அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு துருக்கி, சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு தடை செய்யப்பட்ட இரசாயண உயிர் கொல்லி ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சியை அகற்ற முடியவில்லை. (மேலும்....)

காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன் - வைகோ

காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கடல் புறா என்ற படகில் 17 கரும்புலிகள் ஆயுதம் இன்றி செல்லும் போது சுற்றி வளைத்து பிடித்தார்கள். அவர்களை சுட்டுக் கொல்ல சொன்னார்கள். அதில் 12 புலிகள் நஞ்சை கடித்தார்கள். 5 புலிகள் எஞ்சினார்கள். காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார். அதனால் ஓராண்டு சிறை தண்டனை கொடுத்தார்கள். இதை மனப்பூர்வமாக ஏற்றக் கொண்டேன்.

அல்கொய்தாவிற்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் சிரியா

சிரியாவில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய அமெரிக்க ஆதரவு நாடுகளின் ஆதரவோடு அல் கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் சிரியாவில் அரசு படைக்கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். இந்த போரில் அல்கொய்தா தொடர்புடைய தீவிரவாதிகள் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ஒரு லெபனானின் ஹஜிபுல்லா இயக்கத்திற்கு சிரியா ஆயுதம் வழங்குவதாக போலியான காரணத்தை கூறி சிரியா மீது இராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவுன் சிரியாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையே ஆகும்.  லெபனானின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்குள் இரண்டாவது முறையாக சிரியாவின் ஜம்ராயா ஆராய்ச்சி மையத்தின் மீது இரண்டாவது தாக்குதலை இஸ்ரேல் தொடுத்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்த தகவல்களை சிரியா ஐநாவிற்கு தெரிவித்துள்ளது என்று சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் அல் மித்தால் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஈரான், எகிப்து, லெபனான், ரஷ்யா, சீனா, அரபுநாடுகள் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசிலிருந்து விலகும் தேவை மு.கா.வுக்கு இல்லை

அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ¤க்கு கிடை யாது என அமைச் சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் மற்றும் ஸ்ரீல.மு.கா. மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று நடைபெறுகிறது. இதனை மேற்கொள் காட்டி சில ஊடகங்கள் நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லவுள்ளதாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பிரசுரமாகின. இது முற்றிலும் தவறானது எமக்குள் சில கருத்துக்கள், விமர்சனங்கள் உள்ளன. என்றாலும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லும் தேவை எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார். அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

பிரேசில் செல்லும் 6 ஆயிரம் கியூப மருத்துவர்கள் 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், கியூபாவிலிருந்து 6 ஆயிரம் மருத்துவர்களை தங்கள் நாட்டிற்கு அனுப்ப பிரேசில் கியூபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரேசில் நாட்டில் மருத்துவர்க ளின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இதற்காக மருத்துவ சேவையை மேம்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அந்நாடு எடுத்துவருகிறது. இந்நிலையில் சர்வதே அளவில் மருத்துவ சேவை, மருந்து தயாரிப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் கியூபா சிறந்து விளங்கி வருகிறது. இதனால், கியூபாவிடமிருந்து 6 ஆயிரம் மருத்துவர்களை பிரேசிலுக்கு மருத்துவ சேவையாற்ற அழைத்து வரும் முயற்சியில் பிரேசில் இறங்கி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் பிரேசிலின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ பெட்ரோலியா மற்றும் கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்மருத்துவர்கள் பிரேசிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். கியூபாவிலிருந்து மருத்துவர்கள் பிரேசிலுக்கு அனுப்பும் பட்சத்தில், கியூபாவில் உள்ள 5 விமானநிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கான நிதி உதவிகளை மேற்கொள்ள பிரேசில் ஒப்புக் கொண்டுள்ளது.

வைகாசி 07, 2013

மற்றவர்களிடம் நியாயம் கேட்பதற்கு முன்பு நாங்கள் நியாயவாதிகளாக இருக்க வேண்டும் -  சுமந்திரன்

நாம் மற்றவர்களிடம் நியாயம் கேட்பதற்கு முன்பு நாங்கள் நியாயவாதிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் எமது தரப்பு நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயேதான் நாங்கள் மற்றவர்களிம் நியாயம் கோர முடியும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை விசாரணை நடத்த வேணடும் என்று தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளது மனித உரிமை விடயத்திலே இருதரப்பினர்களும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கெதிராக குற்றம் புரிந்துள்ளார்கள் இது விசாரிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் பொறுப்புக் கூறக்கூடிய கடப்பாட்டுக்குள்ளே உட்படுத்தப்பட வேண்டும். இதனை நாங்கள் ஆதரிக்கின்றோம் அவ்வாறான விசாரணை நடாத்தப்பட வேண்டும். இந்த விசாரணை இரு தரப்பினருக்குமிடையே இடம்பெற வேண்டும். (மேலும்....)

முள்ளியவளை

காணிப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் -  ரவூப் ஹக்கீம்

முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முள்ளியவளை காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் ஹக்கீம் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் ஆகியோர் முன்னிலையில் தமது நிலைமையை எடுத்துக்கூறினார். யுத்தத்தின் அகோரம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முள்ளியவளையில் காணிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. ஏன், எதற்காக, இதனைச் செய்தார்கள் என்பதைப்பற்றி கூறுவதைவிடுத்து இனங்களுக்கு இடையில் நிலவும் நல்லெண்ணமும் நல்லுறவும் பாதிக்கப்படாதவிதத்தில்  பிரச்சினைக்குரிய தீர்வுகளை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தை மிகவும் பக்குவமாக அணுக வேண்டும். மக்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்ட அவசர செயற்பாடுகள் நிலைமையை சிக்கலாக்கியுள்ளன.

ரூ.3கோடி 80 இலட்சம் வங்கி அட்டையில் மோசடி

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், களுவாஞ்சிக்குடி பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் கைது

மற்றவர்களுக்கு சொந்தமான வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தனியார் வங்கிகளிலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக பெற்ற ஐந்து சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்பல்வேறு பிரதேசங்களில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையையும் சி. ஐ. டி. யினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மிகவும் சூட்சுமமான முறையில் பண மோசடிகளை மேற்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தர்மபுரம், பருத்தித்துறை, வல்வெட்டி த்துறை, புதுக்குடியி ருப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்களையே கைதுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

மலேஷிய பாராளுமன்றத் தேர்தல்: ஆளும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது

மலேஷிய பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணி மீண்டும் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம் அந்த கூட்டணி தனது 56 ஆண்டு ஆட்சிக்காலத்தை மேலும் நீடித்துக்கொண்டு ள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நஜீப் ரஸாக்கின் பரிசன் நஷனல் கூட்டணி மொத்த முள்ள 222 ஆசனங்களில் 133 ஆசனங்களை வென்றிருப்பதாக குறிப்பிட்டது. கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி 89 ஆசனங்களையே வென்றது. எனினும் அந்த கட்சி கடந்த முறையை விடவும் 7 ஆசனங்களை அதிகமாக வென்றுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் திரளாக வந்து வாக்களித்தனர். 80 வீதமானோர் தமது வாக்குகளை பதிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மலேஷிய சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறை இடம்பெறும் முடிவு தெரியாத தேர்தல் என இந்த தேர்தல் வர்ணிக்கப்பட்டது. வாக்காளர்கள் ஆளும் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது அன்வர் இப்ராஹிமின் மூன்று கட்சிகளைக் கொண்டபகதான் ரக்யாத் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் நிலைக்கு ஆளாகியிருந்தனர்.

லடாக் எல்லையில் திடீர் திருப்பம்: இந்திய - சீன படைகள் வாபஸ்

லடாக் எல்லைப் பகுதியில் திடீர் திருப்பமாக இந்திய, சீனப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் வாபஸ் பெறப்பட்டன. இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள தெலத் பெக் ஒல்தி பகுதியில் கடந்த ஏப்ரல் 15ம் திகதி சீன இராணுவத்தினர் 50 பேர் ஏறக்குறைய 19 கி.மீ தூரத்துக்கு ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். சீனா தனது ஊடுருவலை கைவிட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து தமது எல்லைப் பகுதியில் தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தது. இது தொடர்பாக ஏற்கெனவே இரு தரப்பு இராணுவ அதிகாரிகள் இடையே 3 முறை கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரிகேடியர் அதிகாரிகள் நிலையில் கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனா தனது இராணுவத்தை திரும்பப் பெறப் போவதில்லை என மீண்டும் தெரிவித்தது. மேலும் தெளலத் பெக் ஒல்தி பகுதியில் இருந்து தமது படைகளை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்திய – சீன படைகள் ஒரே நேரத்தில் வாபஸ் பெறப்பட்டன. அப்போது இரு நாட்டு இராணுவ வீரர்களும் கை குலுக்கி வாழ்த்து கூறிக் கொண்டனர். எனினும் சீனா தனது படையினரை ஏப்ரல் 15ம் திகதிக்கு முந்தைய நிலைக்கே திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இந்திய – சீன படைகள் வாபஸ் பெறப்பட்டதால் கடந்த 3 வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்தது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 06, 2013

கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவு

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத்தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவரது வீட்டில்  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்த கொள்கையிலிருந்து தற்போது வேறுபட்டுச் செயற்படுகின்றது.இந்நிலையில் வடமாகாண சபைத்தேர்தலில் தனித்து களமிறங்குவது அதன் கொள்கைக்கு புறம்பானதாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக அண்மைய காலங்களில் குரல் கொடுத்த அசாத் சாலி கைது செய்யப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவரது கைது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி பெரும் கேள்விக்குறியாகவும் உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

லயன் எயார் மீட்பில் 25 சுழியோடிகள், 2 கப்பல்கள்

உதிரிப்பாகங்கள், எலும்புக்கூடுகள், பாதணிகள், தங்க நகைகள் மீட்பு

லயன் எயார் விமானத்தின் உதிரிப்பாக ங்கள், அதில் பயணித்த பயணிகளின் எலும்பு கூடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள் தெரிவித்தனர். புலிகள் இயக்கத்தினரால் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன் எயார் ‘அன்டனோ-24’ என்ற விமானத்தின் உதிரிப்பாகங்களை தேடும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரணைதீவு கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டன. (மேலும்....)

அசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ஹக்கீம்

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று நடக்கின்றது என்ற விடயத்திற்கு அத்தாட்சியாக இருக்கவேண்டிய நானே உண்மையிலேயே உடன்பட முடியாத நிலையில் இருக்கின்றேன் என்பதை பகிரங்கமாக சொல்லுகிறேன் . அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன . ஆட்களின் கைது, விடுதலை தொடர்பான விடயங்கள் சர்ச்சைக்குரியனவாகவுள்ளன என்ற ஆத்திரத்தை அவற்றோடு தொடர்புபட்டவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றைவிடுத்து இப்பொழுது தனிமனிதர் ஒருவரை பற்றி கதைக்கின்றேன். கடந்த வியாழக்கிழமை அசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எமது கட்சியின் சார்பில் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர். (மேலும்....)

பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கினால்

ஸ்ரீலங்கன் விமானங்களை சென்னைக்கு சேவையில் ஈடுபடுத்தத் தயார்

இலங்கையரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதிப்படுத்துமானால் முன்னர் போன்று ஸ்ரீலங்கன் விமானங்களை சென்னைக்கு சேவையில் ஈடுபடுத்தலாமென சிவில் விமானச்சேவை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். சென்னைக்கான நாளாந்த விமானச் சேவைகள் குறைந்ததும், பிரயாணிகள் குறைந்ததும் விமான நிறுவனத்துக்கு நஷ்டம் தான். இருந்தும் பிரயாணிகளைப் பலியாக்கி நிறுவனத்தை முன்னேற்றுவது அரசின் நோக்கம் அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரயாணிகளின் பாதுகாப்பு விவகாரம் சீராகும் வரை யாத்திரிகர்கள் மற்றும் பிரயாணிகள் சென்னை செல்வது குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 05, 2013

சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர். முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் இந்தப் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும் தெரிய வருகிறது.

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி – 10)

(வரதர் பெருமாள்)

புலிகளின் முடிவுக்குப் பின்னர், 2004ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதம பேச்சாளாராக திரு சுரேஸே விளங்கினார். புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவன் தானே என திரு சுரேஸ் கற்பனையில் இருந்தமை இலங்கைத் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலராலும் உணரப்பட்ட ஒன்றே. திரு சம்பந்தன் அவர்கள் எண்பது வயதையும் கடந்து மிகுந்த நோய்வாய்ப்படுதல்களுக்கு உள்ளாகிவிட்டார் என்பதாலும், அதற்கு அடுத்த மூத்த தலைவரான திரு மாவை சேனாதிராஜா அவர்களும் வயதில் எழுபதுகளில் உள்ளார் என்பதோடு களைப்பு இழைப்பு என மூப்பின் தாக்கங்கள் சற்று மும்முரமாகவே அவரிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டன என்பதாலும் திரு பிரேமச்சந்திரன் அடுத்த தமிழ்த் தேசியத் தலைமை தன்னுடையதே என்ற உள்ளாசையை சற்று உரமாகவே கொண்டிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். (மேலும்....)

எனது தந்தை பயங்கரவாதியல்ல;ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர் - அசாத் சாலியின் மகள்

எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்துவைக்க வேண்டும்? என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி ண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார். குற்றப் புலனாய்வினரால் என் தந்தை கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அவர் எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆகையால் அவரின் உடல் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்து வருகிறது. அத்தோடு நானும் என் தந்தையின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று அசாத் சாலி நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் இருக்கும் எனது தந்தையின் உடல் நலம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்னர் ஒருபோதும் நான் அவரை இப்படிப் பார்த்ததில்லை. நேற்று நானும் எனது தாயும் வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர் தலையில் வெள்ளைப் பட்டியணிந்திருந்தார். ஏன் என்று கேட்டபோது தலைவலி என்றார். சாப்பிடுமாறு கூறியபோது முடியாது என்றார். தண்ணீர் குடிப்பதையும் மருந்து குடிப்பதையும்கூட அவர் மறுத்துள்ளார். எனவே தயவு செய்து அவரை விடுவிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நான்கு நாட்களுக்குள் 500 பேர் சட்டவிரோதமாக ஆஸி செல்கை

சட்டவிரோதமாக கடந்த நான்கு நாட்களில் 500 பேர் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக மூன்று பேர் நுழைந்ததுடன் அந்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது என அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சர் ஜேசன் க்ளயர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து கடந்த புதன்கிழமை 184 பேருடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்திருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அன்றையதினமே கிறிஸ்மஸ் தீவின் வடகிழக்குக் கரைக்கு 153 பேருடன் மற்றுமொரு படகொன்று சென்றுள்ளது. கரையோரப் பாதுகாப்புப் படையினர் இவர்களைத் தடுத்து நிறுத்தி கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் கூறுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 160 பேருடன் அவுஸ்திரேலியாவின் டார்வின் பிரதேசத்தில் மற்றுமொரு படகு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இதுவரை 736 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்தி ரேலியாவுக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இந்திய கடற்பகுதியில் அத்து மீறி மீன்பிடித்த 25 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய ஆந்திர மாநில ராஜ்முந்திரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று கண்ணாடி இழைப் படகுகளில் வந்து இந்திய கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 25 பேரே கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார் குறிப்பிட் டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி இந்தியாவின் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கிநாடா கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் வருகை

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்பார் என பிரித்தானி யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என சில அமைப்புகளும், நாடுகளும் குரல் எழுப்பிவரும் நிலையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதாக பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறி வதற்கு அவ்விஜ யத்தைப் பயன் படுத்திக்கொள்ளவும் அவர் தீர்மா னித்திருப்பதாகத் தகவல்கள் வெளியா கியுள்ளன. கொழும்பில் நடைபெறவிருக்கும் அரச தலைவர்கள் மாநாட்டில் தாம் பங்கெடுப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையென அவுஸ்திரேலியா அறிவித்திருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளும் தமது பங்களிப்பை உறுதிப்ப டுத்தியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் களமாகும் வடபகுதிக் கடற்பரப்பு...!

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள்... வடபகுதி கடற்பரப்பு... கரையில் இருந்து சுமார் 18 கடல் மைல் தொலைவு....“யாழ். குருநகர் பக்கமாக இருந்து அலைகளை கிழித்துக்கொண்டு விரைந்த டிங்கி படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்கு நெருக்கமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து நின்ற மீன்பிடிப் படகு ஒன்றிற்கு அருகே சென்றது” “இரு படகுகளும் அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடிப் படகில் இருந்தவர்கள் டிங்கிப் படகில் வந்தவர்களிடம் பார்ஸல் ஒன்றை கைமாற்றினர்” “இதில் ஏதோ விபரீதம் இருப்பதை புரிந்து கொண்டோம். உடனே எமது கடற் கண்காணிப்பு படகினை அப்படகுகள் நின்ற பக்கமாக செலுத்தினோம்” (மேலும்....)

வைகாசி 04, 2013

புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'லயன் எயார்' விமானத்தின் பாகங்கள் ஆழ்கடலிலிருந்து மீட்பு

14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன. வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.  விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர். (மேலும்....)

கேட்டிருப்பீர்கள் தோழர் கே. பொன்னுத்துரை பற்றி . . .

சிந்தனைக்கும் தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கடந்த நான்கு சகாப்தங்கள் வியாபித்திருந்த இருள் எம்மைவிட்டு மெல்ல விலகிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய 96 வயதைப் பூர்த்தி செய்துகொண்டு மேதினமன்று தன் இறுதி ஊர்வலத்தை நடத்தும் வகையில் ஒரு வாய்ப்பைப் பெற்ற தோழர் பொன்னுத்துரை மாக்ஸியத்தில் இறுகிய பற்றாளனாகவும் நடைமுறையாளனாகவும் வாழ்ந்தவர். தென் இலங்கையில் நீர்கொழும்பு, கம்பகா, மினுவாங்கொட பகுதிகளைப் போல வட புலத்திலும் வடமராட்சியை அடுத்து நல்லூர் மாக்ஸியத்தின் நாற்றுப் பாத்தியாக மிளிர்ந்தது. அந்த நல்லூரில் அவதரித்த நாற்றுத் தான் தோழர் பொன்னுத்தரை. (மேலும்....)

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . . (இறுதிப் பாகம் 5)

(ஈழத்திலிருந்து நல்லையா குலத்துங்கன்)

தாம் பிறந்த மண்ணிலே தமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் துணிந்து தமது வாழ்வைப் பணயம் வைத்துப் போராடிய மாற்று இயக்கத் தோழர்களையே அம்மண்ணில் வாழவதற்கு அனுமதிக்க மறுத்தவர்களின் வழித்தோன்றல்களா ? மாற்றுத் தேசத்திலே பிறந்த தமிழருக்கு அந்நாட்டில் உரிமை கொடுக்கப் போகிறார்கள் ? தாம் தனிநாடு கோரும் நாட்டிலே கால் பதிக்கக் கூட முடியாத இப்புலம்பெயர் புலிவாதிகள் எப்போது ? எப்படி ? இப்போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் ? ஒன்றை மட்டும் என் உடன் பிறப்புகளே உணர்ந்து கொள்ளுங்கள். இப்புலித் தலைவருடன் கைகோர்த்து எத்தனையோ இளம் ஈழத்தமிழ்ச் சிறார்களின் வாழ்வைச் சுறையாடியவர்களே இன்று ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளிலே இலங்கை அரசின் ஆசியுடன் அமோகமாக வியாபாரங்களை விஸ்தரித்த வண்ணம் இருக்கிறார்கள். (மேலும்....)

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் - அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் கலந்து கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் மிக முக்கியமான ஓர் நிகழ்வு எனவும், இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. அமர்வுகளை ஒழுங்கு செய்வதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயார் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதனையே அவுஸ்திரேலியா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன தேசத்துக்கு கூகிள் அங்கீகாரம்

உலகின் மிகப்பெரிய தேடுதளமான கூகிள் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக ஏற்றுள்ளது. ஐ. நா. பொதுச்சபையில் பலஸ்தீன தேசத்தை அங்கீகரித்து ஓர் ஆண்டு கூட எட்டாத நிலையில் கூகிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகிள் தேடுதளத்தில் பலஸ்தீன நிர்வாகத்திற்கு உட்பட்ட பக்கத்தை கூகிள் பலஸ்தீனமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் கூகிள் பலஸ்தீனத்திற்கான தனிப்பட்ட இணையத்தள பக்கத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த நவம்பரில் ஐ. நா. பொதுச் சபையில் பலஸ்தீனத்தை அங்கத்துவமற்ற பார்வையாளர் நாடாக அதன் 193 அங்கத்துவ நாடுகளும் அங்கீகரித்தது. இதன்போது பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 138 நாடுகள் வாக்களித்ததோடு அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உட்பட 9 நாடுகளே எதிராக வாக்களித்தன. இதில் மேற்குக்கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகளே பலஸ்தீனமாக கருதப்படுகிறது. முன்னர் ஐ. நா. சபை பலஸ்தீனத்தை ஒரு நிறுவனமாகவே அங்கீகரித்தது. இந்நிலையில் கூகிள் பலஸ்தீனத்திற்கான தனி பக்கத்தை உருவாக்கியது தொடர்பில் அது உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பலஸ்தீன செய்தி வலையமைப்பே இந்த மாற்றத்தை கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

பொஸ்டன் குண்டு சந்தேக நபர்கள் ஜ_லை 4 இலேயே தாக்குதலுக்கு திட்டம்

பொஸ்டன் குண்டு தாக்குதல் சந்தேக நபர்கள் எதிர்வரும் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினத்தின் போதே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அதற்கான குண்டு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்டதால் பொஸ்டன் மரதன் போட்டியில் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பொஸ்டனில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 ஆம் திகதி மிகப் பெரிய வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. (மேலும்....)

துயரம்... துரோகம்!

முகாம் மாறிய தயா மாஸ்டர்

ழப் போரின் தோல்வி, பல அவலமான தருணங்களை உருவாக்கி நம்மை நிலை​குலையச் செய்கிறது. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், இப்போது ராஜபக்ஷேவின் கட்சி சார்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை என்ன​வென்று சொல்வது? வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டவர். இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயா மாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜார்ஜ் என்பவரும் ராணுவத்திடம் சரணடைந்தனர். (மேலும்....)

வைகாசி 03, 2013

சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை; எதிர்த்து சிங்கள இளைஞன் மனு

தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைச்செய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. இவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக,தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் இல்லை. அரசியலமைப்பின் 18 ஆவது,19 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22 வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சதீவை மீட்பதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சதீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின்  கச்சதீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சதீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்களை தடுக்க வேண்டுமானால், கச்சதீவை மீட்டு இந்திய ஆளுகையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வடக்குடன் மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்'

வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை நடத்துவதற்கான அறிவித்தலை அரசாங்கம் விடுக்கும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். முதலமைச்சர்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவருடத்திற்கு முன்பதாகவே மாகாண சபைகளை கலைப்பதற்கு ஆளுநர்கள் நடவடிக்கைகளை எடுப்பர் என்றும் அந்த அமைச்சர் தெரிவித்தார். இந்த மூன்று மாகாண சபைகளையும் யூன் மாதத்தில் கலைப்பதற்கு ஆளுநர்கள் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். ஆயினும், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதியின் கட்டளைக்கு பின்னரே வடமாகாணசபைத்தேர்தலை நடத்தமுடியும். இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்பரில் ஒரே நாளில் நடத்தப்படும் சாத்தியம் உள்ளது. அப்படியாயின் அடுத்தமாத நடுப்பகுதியில் தேர்தல்களுக்கான அறிவித்தல் விடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தேர்தலுக்கான குறிப்பாக வடமாகாண சபை தேர்தலுக்கான அடிமட்டவேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

'கூட்டமைப்பு முரண்பட்டு நிற்பது வரலாற்றுத் துரோகமாகும்'

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முரண்பட்டு நிற்பது தமிழ்த் தேசியத்திற்குச்  செய்யும்  வரலாற்றுத்  துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்....)

சிறிதரன் எம்.பியை ரி.ஐ.டி மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் ( ரி.ஐ.டி) மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும் திகதி எதனையும் அறிவிக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் காணி சுவிகரிப்புக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, நல்லூரிலுள்ள தனது இல்லத்திற்கு இன்றுகாலை சென்ற  புலனாய்வு பிரிவினர் இருவர் தன்னுடைய மனைவியிடம் தன்னைப்பற்றி விசாரித்ததாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இன்று மாலை 3.10 மணியளவில், பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரி பி.சி. திலகரத்ண தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கிளிநொச்சியில் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியான செய்தி குறித்தே தன்னிடம் விசாரணை நடத்தவுள்ளதாக அவர் கூறியதாகவும் விசாரணைக்காக திகதி பின்னர் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்ததாகவும் சிறிதரன் எம்.பி மேலும் தெரிவித்தார். அண்மைக்காலப் பகுதியின் விசாரணைக்கென விடுக்கப்படும் நான்காவது அழைப்பு இதுவென அவர் மேலும் தெரிவித்தார்.

பொஸ்டன் குண்டுத் தாக்குதல் சந்தேக நபரின் கல்லூரி நண்பர்கள் கைது

பொஸ்டன் குண்டுத் தாக்குதல் சந்தேக நபரின் கல்லூரி நண்பர்கள் மூவர் பொலிஸ் விசாரணைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த அசுமத் டசயகவ் மற்றும் டயஸ் கன்டிர்பியவ் ஆகியோர் குண்டுத் தாக்குதல் சந்தேக நபரான சொகர் சர்னெவ்வின் மடிகணனி மற்றும் ஆவணங்களை மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்படுள்ளதோடு ரொபல் பிலிபோஸ் என்பவர் விசாரணையின் போது பொய் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் குண்டுத் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களாக குறிப்பிடப்படவில்லை. இந்த குண்டு தாக்குதல் தொடர்பில் செச்னியவை பூர்வீகமாக கொண்ட 19வயது சர்னெவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு அவரது 26வயது சகோதரர் தமர்லன் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டார்.

4ஆம் மாடியில் அசாத் சாலி தடுத்துவைப்பு

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தற்போது நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலுள்ள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பிலேயே பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.நான்காம் மாடிக்கு சென்ற சட்டத்தரணிகள் சிலர் இவரை பார்வையிட்டுள்ளனர்.

பொன்விழா காணும் யாழ். ஒஸ்மானியா கல்லூரி தோற்றம் பெற்ற வரலாறு

யாழ். மக்கள் கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டார்கள். முஸ்லிம் மாணவருக்கு 8ம் வகுப்பு வரை கல்வி புகட்டும் பணியில் யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி), முஹம்மதியா கலவன் பாடசாலை (அல்லா பிச்சை மாமா பள்ளி), வண/ மேற்கு முஸ்லிம் கலவன் பாடசாலை (மன்ப-உல் உலூம் மத்ரஸா) நற்சேவை புரிந்தன. இப்படியான கனிஷ்ட பாடசாலை களில் கல்வி கற்ற மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்காக யாழ். வைத்தீஸ்வரா, யாழ். மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்குச் சென்றனர். எனினும் அக்காலத்தில் வசதி குறைந் தவர்கள் கனிஷ்ட பாடசாலைகளில் இருந்து மேற்படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடுபவர்களாக இருந்தனர். இது முஸ்லிம் சமு தாயத்திற்கு கவலைக்குரிய விடயமாக இருந்தது. (மேலும்....)

பலவகையான பயிர்ச்செய்கை முறைகள்

பயிர்ச்செய்கை என்பது நமது தேவைக்காக பயிர்களை வளர்த்தெடுக்க செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிக்கும். மண்ணைப் பதப்படுத்தல், பசளை யிடல் மூலம் மண்ணை வளத்துடன் பேணிப் பாதுகாத்தல், நாற்றுமேடை அமைத்து இளம் பயிர்களைப் பேணல், நாற்று நடுதல், நீர்ப்பாசனம் செய்தல், பயிர்களை நோய், பீடைத் தாக்கங்களில் இருந்து பாதுகாத்தல், பயிரை வளர்த்தெடுத்து, சிறந்த விளை ச்சலைப் பெறுவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளல் பயிர்ச்செய்கையில் முக்கியமானவையாகும். (மேலும்....)

ஆபத்தான அரசியம் ஆட்டம்!

(டி.அருள் எழிலன்)

சாதி எல்லைகளைக் கடந்த அரசியல் பண்பாடு தமிழ்நாட்டில் கோலோச்சியது ஒரு காலம். இன்றோ, சாதிகளின் ஓட்டு வங்கிகளை நம்பியே நடக்கிறது அரசியல்! சாதி அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார் டாக்டர் ராமதாஸ் பிடிவாதமாக. கடந்த வாரம்,  பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய 'சித்திரை முழு நிலவுப் பெருவிழா’ ஐந்து பேருந்துகளை எரித்து, 11 குடிசைகளைக் கொளுத்தி, சில இளைஞர்களின் உயிர்ப் பலிகளோடு ஓய்ந்திருக்கிறது. 'கலவரத்துக்குக் காரணம் யார்?’ என்ற பட்டிமன்றங்களுக்கு அப்பால் சித்திரை விழாவில் காடுவெட்டி குருவின் பேச்சு... வழக்கம்போல வன்முறை நெருப்பு. (மேலும்....)

வைகாசி 02, 2013

நாடெங்கும் அமைதியான மேதின ஊர்வலங்கள் கூட்டங்கள்

உலக தொழிலாளர் தினத்தையொட்டி கொழும்பு உட்பட நாட்டின் அநேக பகுதிகளில் நேற்று மேதின ஊர்வலங்க ளும் கூட்டங்களும் மிகவும் கோலாகல மாக இடம்பெற்றன. மேதின நிகழ்வுகளையொட்டி கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பா டுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொழும்பு நகரில் 13 மே தின ஊர்வலங்களும் 20ற்கும் அதிகமான மே தின கூட்டங்களும் இடம்பெற்றன. இதுதவிர குருணாகல், பதுளை, யாழ்ப் பாணம், வவுனியா, தலவாக்கலை, நுவரெலியா, லிந்துல ஆகிய நகரங்களில் பிரதான கட்சிகளின் மேதின ஊர் வலங்களும் கூட்டங்களும் வெகு விமர்சையாக இடம்பெற்றன. (மேலும்....)

சம உரிமை இயக்கத்தின் மேதின முழக்கங்கள்!

1.    வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து! Abolish military rule in North & East

2.    மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்! Let us fight for peoples' right to live

3.    வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக போராடுவோம்! Let us align against the pillage of lands in North & East

4.    அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்! Release forthwith all political prisoners

5.    கடத்தல் மற்றும் காணாமல் போவதாக்குதலுக்கு எதிராக போராடுவோம்!  Let us fight against abductions and disappearances

6.    இனவொடுக்குமுறையை தோற்கடிப்போம் சமவுரிமைக்காகப் போராடுவோம்!  Let us defeat national oppression, fight for equal rights

7.    முஸ்லீம்களுக்கு எதிரான எல்லாவகையான பேரினவாத மற்றும் மதத் திணிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்து! Stop all forms of chauvinist & religious extremism against Muslims

8.    இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைத்து வடிவத்திலுமான பேரினவாத ஒடுக்குமுறையை தோற்கடிப்போம்! Defeat all forms of chauvinism to achieve national unity

9.    எல்லா இனங்களினதும் உரிமைகளுக்காகப் போராடுவோம்!

'மரணத்தை எதிர்பார்த்திருந்தேன்’

பங்களாதேஷ் கட்டட விபத்தில் தப்பிய பெண்ணின் அனுபவம்

பங்களாதேஷில் இடிந்து விழுந்த 8 மாடி கட்டட இடிபாடுகளில் நான்கு தினங்கள் சிக்கியிருந்த 21 வயதான மரினா கதுன் என்ற பெண், “தாம் மரணத்தை எதிர்பார்த்திருந்ததாக” குறிப்பிட்டுள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனுபவம் குறித்து கதுன், பி.பி.சி. பங்காளி மொழி சேவைக்கு நேற்று புதன்கிழமை பேட்டியளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் பேட்டி அளித்தார். “கட்டடம் இடிந்து விழும் போது நான் மூன்றாவது மாடியில் இருந்தேன். அனைத்தும் திடீரென நிகழ்ந்தது. கூரை இடிந்து விழா ஆரம்பித்தது. நான் தப்புவதற்காக மாடிப் படியை நோக்கி ஓடினேன். ஆனால் கூரை வேகமாக வந்து விழுந்தது. நான் உடனடியாக பாரிய இயந்தரம் ஒன்றுக்கு அருகில் படுத்துக் கொண்டேன். அந்த இயந்திரம் என்னை உயிருடன் காப்பாற்றியது” என்று கதுன் விவரித்தார். (மேலும்....)

சுவிஸில் நடாத்தப்பட்ட புளொட் அமைப்பின் மேதின ஊர்வலம்

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில்  தமிழீழமக்கள் விடுதலைக்கழக (புளொட்) சுவிஸ் கிளையும் கலந்து கொண்டது. 

இதில்...

  • தமிழினத்தின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு  காண வேண்டும், வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்க வேண்டும்.

  • அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்.

  • அரசியல் கைதிகளை இலங்கை அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.

  • சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்ய வேண்டும்.

  • போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உதவியும் கிடைக்க வேண்டும்.

  • வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.

  • தேவையற்ற இரானுவ முகாம்களை அகற்ற வேண்டும்.

  • மத, இன ரீதியிலான ஆக்கிமிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

  • அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே

போன்ற சுலோகங்கள் தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் த.ம.வி.க (புளொட்) சுவிஸ்கிளை சார்பாக கலந்து கொண்டார்கள். இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள SihlPost ல் இருந்து ஆரம்பமாகி Bellevueயில் முடிவடைந்தது. இவ் மேதினத்தில் த.ம.வி.கழக (புளொட்) சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.

த.ம.வி.க சுவிஸ்கிளை

பிரச்சாரப்பிரிவு

மே தின மேடையில் மயங்கினார் மாவை

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின கூட்டத்தின் போது உரையாற்றிக்கொண்டிருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுகவீனமுற்றுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேடையில் மயங்கிய அவரை, அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்பான முறையில் ஓரிடத்தில் தங்கவைத்து அவருக்கான முதலுதவியினை வழங்கினர். இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த மாவை எம்.பி, 'அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக வெயிலில் நின்று உரையாற்றிய போது தனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும், சற்றுநேர ஓய்வின் பின் அது சரியானதாகவும்' குறிப்பிட்டார்.

வடமாகாண சபை தேர்தல் இடம்பெற்றால் அமைச்சுப் பதவியினை துறப்பேன்  - விமல் வீரவன்ச

13 ஆவது திருத்தத்தை ஒழிக்காது வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த முற்படுமானால் அமைச்சுப் பதவியினை துறக்க நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேனென தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் இடம்பெற்ற தேசிய விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் மே தினத்தை நடத்திய தேசிய விடுதலை முன்னணி இம்முறை தனியாக ஏன் மே தினத்தை அனுஷ்டிக்க வேண்டுமென எண்ணலாம். ஏனெனில் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கதைக்க முடியாத விடயங்களை விரிவாக விளக்கவே இம் முறை நாம் தனியாக எமது மேதின நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டோம். நாம் அரசில் அங்கம் வகிப்பதால் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்போமென யாரும் எண்ணிவிடக்கூடாது. நாட்டை பாதுகாக்க எமது பதவிகள் உள்ளிட்ட எதையும் இழக்கத் தயாராகவுள்ளோம்.

இலங்கைக்கான உதவியை அமெரிக்கா வாபஸ்

இலங்கைக்கான உதவியை அமெரிக்கா வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதி உதவித் தொகையே இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வினைத்திறனின்மை மற்றும் கவனயீனம் காரணமாக இந்த உதவு தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கவனயீனம் காரணமாக இந்த உதவு தொகை இழக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவு தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளுடன் உரிய இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினல் உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதனை அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்துள்ளது. நீதிமன்றக் கட்டமைப்பின் பல்வேறு துறைகளை மும்படுத்தும் நோக்கிலேயே இந்த உதவு தொகை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சின் செயலாளர் கமாலீனி டி சில்வா தெரிவித்துள்ளார்.

வைகாசி 01, 2013

சாதிவெறி ஒழிய வேண்டும்

(ஸ்ரனிஸ்)

கடந்த 25.4.13 அன்று மகாவலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை பவுர்ணமி விழாவிற்கு வன்னியர் சங்கத்தினர் அனுமதி கேட்டபோதே, போலிசார் இதனால் ஏற்படும் சாதகபாதங்களை மனதில் கொண்டு பல நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் நினைத்ததைப்போல் சம்பவங்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. இந்த விழாவில் அப்பட்டமாக சாதியம் பேசினர் கூடவே பிரபாகரனினதும், வீரப்பனினதும் வழியில் நடப்போம் என உறுதி மொழியும் எடுத்தனர். (மேலும்...)

கருத்து முரண்பாடுகளை கூட்டமைப்பு தீர்த்துக்கொள்ளவேண்டும் - ரணில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் இந்த கட்சிகள் தமக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் முதலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேம சந்திரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் தமிழரசு கட்சியின் சிரேஷட உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 'சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதனை அவர்கள் யாவரும் ஒத்துக்கொள்கின்றனர்'இருப்பினும் இவர்கள் பிளவுப்படவில்லை. ஆனால் அரசாங்கம் பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்றார். (மேலும்...)
 

Wednesday, May 1, 2013 - 1:00pm to 8:30pm

Toronto

1PM – 4PM: Occupy Gardens @ Queens Park
5:30 PM: Rally and March starting at City Hall and ending at Little Norway Park in solidarity with striking workers at Porter (Queens Quay and Bathurst)

Join us in the streets for Toronto's 8th Annual May Day of Action! For seven years, you have marched on May Day to celebrate and invigorate migrant justice struggles in Toronto. On International Workers Day, we march to build a Solidarity City. Solidarity City is a unified struggle for: Respect for Indigenous Sovereignty, Status for All, an End to Imperialism and Environmental Destruction, an End to Austerity and Attacks on the Poor and Working class, continued resistance against Patriarchy, Racism, Ableism and Homophobia and Transphobia Coordinated by a coalition of community groups including No One Is Illegal - Toronto, May 1st Movement and Ontario Coalition Against Poverty. Endorsers include AIDS ACTION NOW!, Association of Part-Time Undergraduate Students (APUS), Camp Sis, Casa Salvador Allende, Common Cause Toronto, CUPE local 1281, Educators for Peace and Justice, Grassroots Ontario Animal Liberation (GOAL) Network, Faculty for Palestine (F4P), Health for All, Injured Workers Action for Justice, International Socialists, Jane and Finch Action Against Poverty [JFAAP], Latin American and Caribbean solidarity Network LACSN, Law Union of Ontario, Maggie's: Toronto Sex Workers Action Project, OPIRG York. Refugees Without Borders, Rising Tide Toronto, Rhythms of Resistance - Toronto, Socialist Project, Toronto Haiti Action Committee, Toronto New Socialists, Toronto Rape Crisis Centre/Multicultural Women Against Rape, United Food and Commercial Workers, Women's Coordinating Committe for a Free Wallmapu [Toronto], Workers' Action Centre and more. To endorse the event, fill out this form http://bit.ly/ZDRwKU

The forum expresses disappointment over Canadian Government stance on Sri Lanka 


We observed Prime Minister Stephen Harper's stint at possibly changing the venue for November, 2013 Commonwealth Heads of Government Meeting scheduled to be held in Sri Lanka.  We also observed Foreign Minister John Baird's immature biased statements highlighting a misguided Canadian foreign policy.  It is further appalling to understand the real driving force behind this current trend that wishes to cause unnecessary harm to a tiny nation that is slowly recovering from a post colonial conflict which lasted over 30 odd years. (more.....)

குவன்தனாமோ உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

அமெரிக்காவின் குவன்தனாமோ பே சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வலுத்துள்ள நிலையில் அங்கு மேலதிக மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 40 தாதிமார் மற்றும் மேலும் விசேட நிபுணர்கள் சிறைச்சாலையை வந்தடைந்திருப்பதாக மேற்படி தடுப்பு முகாமின் பேச்சாளர் லுதினல் கொலனல் சாமுவெல் ஹவுஸ் குறிப்பிட்டார். குவன்தனாமோ பேயில் இருக்கும் 166 கைதிகளில் 100 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் இவர்களில் 21 பேருக்கு வலுக்கட்டா யமாக குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எந்த குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைத்திருப்பதற்கு எதிராகவே கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பெப்ரவரியில் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம் கியூபாவிலிருக்கும் மேற்படி தடுப்பு முகாமுக்குள் வேகமாக பரவி வருகிறது. இதில் புனித அல் குர்ஆன் பிரதியை அதிகாரிகள் மோசமாக கையாண்டதற்கு எதிராகவே இந்த போராட்டம் வெடித்ததாக வெளியான தகவலை குவன்தனாமோ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

உலகத் தொழிலாளர்களின் தியாகத்தில் உருவானதே இன்றைய மே தினம்

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கின. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை ஆகும். (மேலும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com