Contact us at: sooddram@gmail.com

 

ஆடி 2013 மாதப் பதிவுகள்

ஆடி 31, 2013

ஐ.ம.சு.மு.வின் யாழ். மாவட்ட வேட்புமனு இன்று முற்பகல் தாக்கல்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான யாழ். மாவட்ட வேட்புமனுவினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று முற்பகல் தாக்கல் செய்யவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை வேட்பாளராக ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிடும் எஸ். தவராசா, மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் இ. அங்கஜன், ஐ.ம.சு.மு.வின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஆகியோர் வேட்புமனுவினை தாக்கல் செய்யவுள்ளனர். இன்று முற்பகல் 10.45 மணியளவில் வேட்புமனுதாக்கல் இடம் பெறவுள்ளது. ஐ.ம.சு.மு.வின் பட்டியலில் ஈ.பி.டி.பி. சார்பில் முதன்மை வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் ஆலோசகர் எஸ். தவராஜா போட்டியிடுகின்றார். இந்தப் பட்டியலில் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மா அணியின் செயலாளர் எஸ். சிறிதரனின் மனைவி திருமதி ஞானசக்தி சிறிதரனும் போட்டியிடவுள்ளார். இவரும் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என் மனவலையிலிருந்து.....

வடமாகாண தேர்தல் சூதாட்டக் களம்

(சாகரன்)

வடமாகாண தேர்தல் சூதாட்டம் ஆரம்மாகிவிட்டது.. இதில் பலர் களத்தில் இருக்க சிலர் ஆட்டத்தில் சேரமுடியாமல் கழட்டிவிடப்பட்டுள்ளனர். குளட்டிவிடப்பட்டுள்ளவர்கள் சிறப்பாக இடதுசாரி ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஆகும். இவர்களின் பிரசன்னமற்ற தேர்தல் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காது என்று கூறினால், பலரும் புரிந்து கொள்வார்களோ தெரியாது. இரங்கை அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தி வடக்கில் ஏதும் பிரச்சனைகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையில் இருக்கின்றது. இத்தேர்தலில் எப்படியும் வென்று நாடு முழுவதும் தனது கையில் என்பதை தீவிரவாதம் பேசும் சகல தரப்பினருக்கும் நிரூபிக்க முயலும். மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டுக் கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்கால் வரையும் தமிழ் மக்களை உசுப்பேத்தியது போல் வடமாகாணத் தேர்தல் முடிவுகளால் மீண்டும் ஒரு முறை ஆணையைத் தாருங்கள் என்று வாக்கு கேட்டு கதிரைகளைப் பிடித்துக் கொள்ள முயலுவார்கள். இதற்கு வீட்டுச்  சின்னம் நன்கு உதவிசெய்யும். இதனுடன் தொடுச்சலில் உள்ள கட்சிகள் தம்பி, நண்பன் என உறுவுகளை மட்டும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறச்செய்து தமிரின் வரலாற்றை மீண்டும் மீண்டும் நிறுவி நிற்பர். யாழ்ப்பாண வேட்பாளர் பட்டியலில் ஒருவர் எனது வகுப்பு நண்பர். இவர் தனது க.பொ.த சாதாரணதர வகுப்பிற்கு பிறகு விளம்பரம் விரும்பியாக மட்டும் வலம் வந்தவர். ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர் இதற்கான வேஷம் கட்டலில் ஈடுபடுபவர். ஒருகாலத்தில் மாக்சிசம் பேசிய 'தலை'யின் பால்யகாலத்து நண்பர் இவர். இதுவே இவருக்கு இருக்கும் ஓரே தகுதி. இன்னொருவர் இதே 'தலை'யின் சகோதரர். ஈழவிடுதலைப் போராட்டத்தால் கிடைத்த தொடர்புகளை தனது உயர்கல்விக்காக மட்டும் பயன்படுத்தி டெல்லி வரை சென்று உயர் கல்வி கற்று கடந்த பல வருடங்களாக தென்னிலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக இருப்பவர். இவரின் சகபாடிகள் பலர் யாழ் பல்கலைகளகத்தில் படிப்பை துறந்து உயிரைத் துறந்து மண்ணோடு கலந்துவிட்டனர். இவரும் சகோதர பாசத்தால் வேட்பாளர் ஆகிவிட்டார். தேர்தலில் வென்றால் வேறு என்ன அமைச்சர்பதவி நிச்சயம் இவருக்கு. சத்தியமாக கூறுகின்றேன் இவர் அமைச்சரானால் இவரை தமது மனைவி, மக்கள் மட்டுமே சந்திக்க முடியும். இவ்விருவரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கை அரசு, புலி, என் இந்திய அரசுகளின் பாதுகாப்பு சிக்கல்களில் தப்புவதற்காக நன்கு வெ|ம் கட்டியவர்கள். இன்னமும் கட்டுவர். வேறு என்ன வடக்கு தெரியாத றோயல் குடும்ப விக்னேஸ்வரன் கூட்டத்திடம என்னத்தை எதிர்பார்க்க முடியும். பாவம் மீண்டும் மக்கள். தமிழ் மக்கள் அரசியலில் இந்த இரண்டு சக்திகளுக்கு அப்பால் மாற்றுக் கருத்தாளர்கள் தம்மை கட்டி எழுப்ப முடியவில்லை என்பதுவும் மாற்றுக் கருத்தைக் கொண்ட எம் போன்றவர்கள் மீதான கடுமையான விமர்சனமும் கூட. ம்.......... பார்ப்போம்....?ஆடி 31, 2013

கூட்டமைப்பினால் நிராகரித்தோர் தனியாக களமிறங்க முஸ்தீபு

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் நிராகரிக்கப்பட்டவர்கள் அந்த மாகாணத்திலேயே சுயேட்சை குழுவாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இரசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்த நிலையில் இறுதி நேரத்தில் கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களே இவ்வாறு களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானவர்கள் தனித்து களமிறங்குவதற்கு எடுக்கும்  தீர்மானத்திற்கு அரசியல் கட்சி ஒன்று மறைமுகமாக ஆதரவினையும் வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று இத் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களும் இத் தேர்தலில் சுயேட்சைக்குழுவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக போட்டியிடவுள்ளதாகவும் தங்களுடைய வேட்பு மனுவை அவர்கள் இன்று தாக்கல் செய்யவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். பல்கலையில் கைகலப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை நண்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் கலைப் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கும் மூன்றாம்  வருட மாணவர்களுக்கும் இடையேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் எக்கார ணம் கொண்டும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத் தையோ காணி அதிகா ரத்தையோ வழங்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தை நான் முதலமைச்சரானவுடன் நிறைவேற்றுவேன் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இது இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையுமே என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதில் அளித்த ஜனாதிபதி, நாங்கள் நினைப்பது போல் “பேய் அவ்வளவு கருப்பானதல்ல” என்று திரு. சி.வி.விக்னேஸ்வரனுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தை ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.

புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டார். யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி  கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார். இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார். புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

த. கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக பேசும் என்பது வெறும் கபடத்தனம்

வட மாகாண முஸ்லிம்க ளின் நலன் குறித்தே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை வெறும் கபனத்தனமானதென வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்தார். வடக்கில் முஸ்லிம்களுக்கு கடந்த 20 வருட காலமாக இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய் பொத்திக் கொண்டு இருந்த இவ்வாறான அமைப்புகள் தேர்தல் வந்ததும் பொட்டணி வியாபாரிகள் போன்று ஓடிவந்து வட மாகாண முஸ்லிம்கள் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளமை போலி நாடகம் என்பதை எம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது. வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற் றத்தின் பின்னணியில் புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இருந்தனர் என்பதை யாவரும் அறிவார்கள். அவர்களின் ஆட்சி முடிவடைந்த போதும், முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் வேலையில் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருவது அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.

68 இலங்கையர்கள் ஆஸியிலிருந்து நாடு கடத்தல்

கொக்கோஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 68 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கொக்கோஸ் தீவிலிருந்து விமானம் மூலம் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இவர்கள், விசாரணைகள் மற்றும் அடையாளப் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும், எதிர்வரும் சில தினங்களில் இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இக்குழுவினர் விசாரணை மற்றும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவிலோ அல்லது பப்புவா நியூகினி தீவிலேயோ குடியமர்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆடி 30, 2013

ஈபிஆர்எல்எப் இன் உன்னதான தருணங்களின் மனிதன்

(சுகு-ஸ்ரீதரன்)

ஈபிஆர்எல்எப் உருவாக்கத்தில் பங்களித்து வாழ்ந்து மறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். தோழர் குமரேசன் -சுதன் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்தவர். சிற்பங்கள், அணிகலன்கள், கோபுரங்களை ஆக்கும் கலைஞன் -  படைப்பாளி .1980 களின் முற்பகுதியில் ஈழாணவர் பொது மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவரது சிரித்த முகமும் குரலும் வசீகரமானது. நற்பண்புகளின் உறைவிடம் என்பதை அவை காட்டிக் கொடுத்துவிடும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் வெகுஜன வேலைகளிலும்; கிளர்ச்சி - புரட்சிகர நடவடிக்கைகளில்  மிக நெருக்கடியான காலகட்டங்களில் கட்சிக்கு நிதி ஆதாரங்ளை பெற்றுக் கொடுப்பதில் நிகரற்ற பங்களிப்பை வழங்கியவர். (மேலும்....)

 

சகடமுனியின் விகடசங்கடம் 1 – முனிதாசபூதன்

முனிதாசபூதன்

செய்தி:- (1)

மஹிந்த அரசில் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவானது விரைந்து மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் நில அதிகாரங்களை அரசாங்கம் பறித்தெடுக்காது போனால் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். (மேலும்....)

வட மாகாண சபைத் தேர்தல்

ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று நண்பகல் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. நேற்றைய தினம் நண்பகல் 12 மணிமுதல் 12.30 ற்கு உட்பட்ட காலப் பகுதியில் வடக்கின் ஐந்து மாவட்டங்களு க்கும் ஒரே சமயத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததாக பாராளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.(மேலும்....)

ஈ.பி.டி.பி கட்சியின் வேட்பாளர் விபரம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் மட்டத்தினர் தெரிவித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்பாளர் தெரிவு நடைபெற்று நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபையின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன், ஈழ.மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், ஏ.சூசைமுத்து, ஈழ. மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சுந்தரம் திவகர்லால், ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின், சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுஷhங்கன், பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன், ஆகியோர் செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் தகவல் தெரிவித்தனர். வேட்பு மனு தாக்கல் ஓரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் மேலும் கூறினர்.

தயாசிறி, கருணா, கே.பி., விமல்: கட்சித் தாவலின் நாகரிகம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பல ஆண்டுகளாக சரிவுக்கு மேல் சரிவுகளை எதிர்நோக்கி வந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்குத் தாவியதை அடுத்து மற்றொரு அடி விழுந்துள்ளது. ஜயசேகர ஐ.தே.க.வின் முன்னணி பிரசாரகாரர்களில் ஒருவர் என்பதால் அவரது கட்சித் தாவல் ஐ.தே.க.வை வெகுவாக பாதிக்கும என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவாக ஐ.தே.க.வின் சரிவு இரண்டு விதத்தில் நாட்டை பாதிக்கின்றது. எந்தவொரு நாட்டிலும் பலமானதோர் எதிர்க் கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த நிலைமையாகும். 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 13அவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்வதற்கான முயற்சிகள் போன்றவை பலமான எதிர்க் கட்சியொன்று நாட்டில் இல்லாமையின் நேரடி விளைவாகும். (மேலும்....)

Hon. Jason Kenney issues statement on 30th anniversary of the Black July pogrom.

On July 23, at 9:30 PM I received an e-mail from a Canadian-Tamil, one Thevan Paramsothy (tparamsothy@yahoo.com) with a subject line – Fw: (Tamil_Araichchi) Hon. Jason Kenney issues statement on 30th anniversary of the Black July pogrom.  And the message was: “Here what our Tamil friendly minister saying….funny dog”. Jason, I hope you noticed that he addressed either you or me as “…funny dog”.   If it was supposed to be me, it does seem that whatever I say about the Tamil separatist Eelam issue bites him as if it was a dog’s bite.  And I like it if that is indeed the effect it has on him and his Eelam psyche, I believe I have been effective.  I don’t consider myself a vicious dog and I hope my bite wouldn’t bleed him.  I want to spare him with that unfortunate predicament. (more....)

வட மாகாண முஸ்லிம்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பு துரோகமிழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ். மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் வாக்குரிமை இல்லாத யாழ்ப்பாண த்தை சேர்ந்த அய்யூப் அஸ்மி என்பவர் இடம் பெற்றுள்ளதானது மன்னாரில் முஸ்லிம் களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களின் உச்ச கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் ஒரு முஸ்லிமை வைத்துக் கொண்டு இன்னும் அந்த சமூகத்திற்கு எதிரான உள்விவகாரங்களை அறிந்து செயற்பட வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுவதாக அஸ்கர்ரூமி மேலும் தெரிவித்தார். (மேலும்....)

ஆடி 29, 2013

சகடமுனியின் விகடசங்கடம்

(முனிதாசபூதன்)

வடமாகாண தேர்தல்

செய்தி:- (1) மஹிந்த அரசில் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவானது விரைந்து மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் நில அதிகாரங்களை அரசாங்கம் பறித்தெடுக்காது போனால் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். முனியின் சங்கடம்:- இருக்கிற நிலைமைகளைப் பார்க்கிற போது வட மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னாலும் கூட மஹிந்த அரசாங்கம் மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் நில அதிகாரங்களை முற்றாக  (மேலும்....)

த.வி.கூ. உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்வன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும்  இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியேமே மேற்படி மூவரும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் ஆனால்,வாய் திறக்கக்கூடாது -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம், அதற்கு இடையில் ஆனால், வாயை திறக்கக்கூடாது. அதேபோன்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை வழங்கவும் அவருக்கு அதிகாரம் கிடையாது எனது தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நவநீதம்பிள்ளை தனியாக ஊடகவியலாளர் மாநாடு நடத்த முயன்றால் அரசாங்கம் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகும். எனவே, அதன் ஆணையாளர் நாயகம் என்ற ரீதியில் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதையோ, அரசாங்கம் உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பதையோ, பேச்சுவார்த்தைகளை நடத்துவதையோ நாம் எதிர்க்கவில்லை. அதை விடுத்து யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது விசாரணைகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது. விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை.

தயா மாஸ்ரர் திறமையற்றவர்- பஷில் ராஜபக்ஷ

வட மாகாண சபைத் தேர்தலுக்கான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் திறமையானவர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டியிருந்தனர். நேர்காணல்களும் நடைபெற்றன. அதில் தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் இடம்பெறவில்லை என வெளிவரும் தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் காணிகளை அரசாங்கம் இராணுவத்தின ரிடம் இருந்து விடுவித்து பொதுமக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறதென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கத்திற்கு எதிராக வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள இன்றைய காலகட்டத்தில் சுமத்தி வருகின்றன. இத்தகைய போலிப் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்து, அரசாங்கமும் இராணுவமும் மக்களை துன்புறுத்தவில்லை, அவர்களின் சொந்தக் காணிகளை ஆக்கிரமிக்கவுமில்லை.  அவை படிப்படியாக மக்களுக்கு மீள பெற்றுக் கொடுக்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கி அதனை தற்போது வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. (மேலும்....)

யாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சுதந்திரக் குரல்

(நவாஸ் சௌபி...)

போராட்ட வன்முறைகளுக்கு எதிராக மனிதாபிமான, ஜனநாயகக் கருத்துக்களை முன்வைப்பவர்களை துரோகிகள் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு கருத்துச் சுதந்திரத்தின் அரசியல் காணப்பட்ட நிலையில் இலக்கியச் சந்திப்பின் உரையாடல்கள் அவற்றை கட்டுடைத்து மிகச் சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் தமது உரையாடல்களை முன்னெடுத்து வந்திருக்கிறது. ஆயுதப் போரட்டத்தினாலும், அதற்கு எதிரான படையினரின் தாக்குதலாலும் இலங்கையில் யுத்தம் என்ற பெயரினால் நடந்த அனைத்து ஜனநாயக மீறல்களையும் தமிழ், முஸ்லிம். சிங்கள சமூகங்கள் சார்பில் இலக்கியச் சந்திப்புக்கள் மிக வெளிப்படையான கருத்துக்களால் சுதந்திரமாகப் பேசியிருக்கிறது பதிவு செய்துமிருக்கிறது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து விடுபட்டு இலங்கையின் இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அதற்கான எதிர்குரல ;கள் ஒருசில இலக்கியகாரர்களிட மிருந்து எழுந்தது. தற்போதுள்ள இலங்கை அரசுக்கு சார்பான ஒரு இலக்கியச் சந்திப்பாக இதனை விமர்சித்து குற்றம் சுமத்தப்பட்ட பேச்சுக்களும் பேசப்பட்டது.  (மேலும்....)

வடக்கு தேர்தல் களம்

வடக்கு விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர்; ஜனாதிபதியின் இணக்கத்துடன் நானே தீர்மானிப்பேன்!....

- டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எமக்கே ஆணை வழங்குவார்கள். அவ்வாறு ஆணை கிடைக்கும் போது தமிழ் பேசும் மக்களின் வடக்கு தேசத்தின் விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பதை எமது மக்களின் விருப்பங்களை ஏற்று நானே தீர்மானிப்பேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஆடி 28, 2013

வடக்கில் மாகாண சபையை த.தே. கூட்டமைப்பு கைப்பற்றினால்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி சபை பிரதேசங்களை போலதான் வடக்கும் மாறும்

'வடமாகாண சபைத் தேர்தலில் ஈரோஸ் தனித்து போட்டியிட்டாலும் ஆளும் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கே ஆதரவு தெரிவிக்கும். எமது கட்சியின் ஆதரவு என்றுமே ஆழும் அரசாங்கத்திற்குத்தான்' என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் ஆசனங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக செய்ததென்ன? வடக்கில் அவர்களுக்கு மாகாண சபை ஆட்சி செல்லுமானால் இதேநிலைதான் உருவாகும்' என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஈரோஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  'வடக்கிலே அழிந்து போன பூமி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக அரசாங்கம் பல கோடி ரூபாய்களை செலவிட்டுவருகின்றது. இந்தப்பணிகள் தொடர்நது வடபகுதி அபிவிருத்தியின் உச்சத்தைத்தொட வேண்டுமானால் வடக்கில் மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றவேண்டும். இல்லாவிட்டால் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி சபை பிரதேசங்களை போலதான் வடக்கும் மாறும்' என தெரிவித்தார்.

புளொட் வேட்பாளர்கள் விபரமும் அறிவிப்பு                     

புளொட சார்பில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு, யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டம் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா மாவட்டம் வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மன்னார் மாவட்டம் திரு. இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களாவர். 

யாழ். மாவட்ட சு.க வேட்பாளர்கள் விபரம்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில்  யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் இவர்கள் வேட்பு மனுவில் ஒப்பமிடவுள்ளதாக  அக்கட்சியின் யாழ மாவட்ட அமைப்பாளா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராம நாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ், யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சு.க. வேட்பாளர் தெரிவில் தயாமாஸ்டர் நிராகரிப்பு?

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராகச் செயற்பட்ட தயாமாஸ்டர்  இடம்பெறவில்லை என்று சுதந்திரக்கட்யின் யாழ் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்ட தயாமாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததோடு வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுதந்திரக்கட்சியினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார். யாழ். சுதந்தரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் நேற்று சனிக்கிழமை சுதந்திரக்கட்சினால் வெளியிடப்பட்டுள்ளது இதில தயாமாஸ்டரின் பெயர் இடம்பெறவில்லை. அத்துடன், யாழ் மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்த எம்.எம் சீராஸின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகப் போவதாக விமல் எச்சரிக்கை

அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படாவிட்டால், தெரிவுக்குழுவிலிருந்து விலக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் உடனடியாக பாராளுமன்றத் தெரிவிக்குழு ஆராய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுமைக்கும் ஒர் எல்லை உள்ளது - வி. ஆனந்தசங்கரி

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒற்றுமையை குலைக்க விரும்பாததால் தமிழ் தேசிய கூட்ட மைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித் தோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். இல்லையெனில் தனித்துப் போட்டியிட்டு அதிக ஆசனங்களை எம்மால் வெல்ல முடியும். கூட்டமைப்பின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் நாம் மிகவும் பொறுமையுடன் செயற்படுகிறோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்  தொடர்ந்தும் இழுபறி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான பங்கீடு பல குடும்பிச் சண்டைகளுக்குப் பின்னர் ஓரளவு முடிவுக்கு வந்துவிட்ட போதும் தமக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் உட் கட்சி இழுபறி தொடர்கின்றது. அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ. கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதேச சபை அங்கத்தவர் பதவி என்பவற்றை ராஜினாமாச் செய்துள்ளார். மற்றொரு அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச் செய்ய முடிவு செய்திருப் பதாக கூறப்படுகின்றது. இதனிடையே முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஆசனத்தை ஒதுக்க கட்சியின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார். எது எவ்வாறாயினும் நாளை 29 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டமைப்பின் வேட்பு மனுக்களை வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவென்றே தலைவர் சம்பந்தன் வெள்ளியிரவு யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சம்பந்தன் சில நாட்களிற்கு வடக்கில் தங்கி நின்று பிரசாரங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பருத்தித்துறையில் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

யாழ். பருத்தித்துறை நகரத்தில் சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரைக்குச் செல்லும் வீதியிலேயே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணியின் போது இந்த சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்குரிய பாதையாக இது காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சுரங்கப்பாதை எந்தக் காலத்திற்குரியது, யார் இதனைப் பயனப்படுத்தினார்கள் என்ற தகவல்கள் இதுவரை இல்லாத போதும் இதனை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

த.தே.கூ வின் வேட்புமனுத் தயாரிப்பு பணி நிறைவு

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுத் தயாரிப்பு பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த வேட்புமனு தயாரிக்கும் பணியில் கூட்டைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் வருகை தந்து இந்த வேட்பு மனுத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டனர். வேட்பு மனுக்கள் நாளைய தினம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வேட்புமனுக்களை  பரிசீலனை செய்வதற்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன்  அங்கு வருகை தந்துள்ளதுடன் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களையும் பரிசீலனை செய்துள்ளார். இதில், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,சிறிதரன்,மாவை சேனாதிராசா,சிவசத்தி ஆனந்தன் உட்பட கட்சியின் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஆடி 27, 2013

மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழரசுக்கட்சிக்குள் அங்கம் வகிப்பவர்களுக்கு அரசியல் அஸ்தமனம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

(எஸ்.எஸ்.கணேந்திரன் )

இலங்கைத்தமிழர்கள் மட்டுலல்லாமல் சர்வதேசமே மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்திருக்கும் வடமாகாண சபை தேர்தலினை ஒரு பிரதேசசபை தேர்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைகூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து செயல்படுகின்றதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ளடங்கப்பட்ட கட்சிகளுக்கிடையிலான குத்துவெட்டுக்கள் தொடக்கம் வேட்பாளர்கள் தெரிவுவரை  இலங்கை தமிழரசுக்கட்சியினரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தமது இஷ்டப்படி செயற்படுவது மிகவும் துரதிஸ்ட்டவசமானதே. (மேலும்.......)

கிறிஸ்மஸ்தீவில் மற்றுமொரு படகு தஞ்சம்: 68 பேரும் இலங்கையர் எனச் சந்தேகம்

அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் 68 பேருடன் வந்த சட்ட விரோத படகொன்றினை அந்நாட்டின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். ஆரம்ப விசாரணைகளினடிப்படையில் படகிலிருக்கும் அனைவரும் இலங்கையர்க ளென்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அதன் பணிப்பாளர் சியுநைட் தெரிவித்தார். கைதாகியுள்ள 68 புகலிடக் கோரிக்கையாளர்களும் மருத்துவ சோதனைகளுக்காக கிறிஸ்மஸ்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் முறையான பரிசீல னையை தொடர்ந்து பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவதுடன் ஏனையவர்கள் தமது தாய்நாட்டிற்கே திருப்பியனுப்பப்படு வரெனவும் அவர் நேற்று கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார். இப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆடி 26, 2013

தோழர் சுதனுக்கு எமது அஞ்சலிகள்

எங்களால் தோழர் சுதன் என அழைக்கப்பட்ட பிரமநாயகம் குமரேசன் இன்று (25.07.2013) அதிகாலை தனது 55 வது வயதில் காலமாகிவிட்டார். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை கட்டியமைத்ததிலும் அதன் வளர்ச்சியிலும் ஆரம்பம் முதல் 1986 நடுப்பகுதிவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். பின்னர் தமிழ்நாடு திருநெல்வேலியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பெருமாள் கேவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சுதன் 1986 நடுப்பகுதியில் அவரது திருமணத்தின் பின்னர் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து அங்கு வசித்துவந்தார். அவருக்கு எமது அஞ்சலிகளை உரித்தாக்குகிறோம். அன்னாரின் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மறக்க முடியா மரணங்கள்

தோழர் சுதன்...

(குகன், சென்னை)

அழைப்பினில் சுகம் கூட்டும் அற்புதப் பெயர் அவனை நான் பார்த்த முதல் நாள் இன்னும் பசுமையாக என் மனதில்... கையில் பிஸ்ட்டலோடு - முரட்டுத்தனமான தோற்றம் முகத்தில் நீண்டநாள் மழிக்காத தாடி இரவெல்லாம் தூங்காத விழிகள் . தோழர் ரொபர்ட் என்னை அவனுக்கு அறிமுகம் செய்ய லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தன் கடமையில் கண்ணானான். ஆம் - ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஆரம்ப கால தோழர்களில் முக்கியமானவன் அவன். மக்கள் விடுதலைப் படையை (PLA ) கட்டுவதில் தோழர் ரொபர்ட்டோடு தோளோடு தோள் நின்று உழைத்த உத்தம தோழன் அவன். தோற்றத்தில் முரட்டுத்தனம் தெரியும் ஆனால் பழகுவதற்கு இனிமையானவன். எல்லாவற்றுக்கும் அப்பால் அவன் ஒரு சிற்ப கலைஞன் என்பது தனிச் சிறப்பு. இலங்கையின் பிரபல கோயில்களில் அவனதும் அவனது சகோதரனதும் கைவண்ணங்களை இன்னும் காணலாம். (மேலும்.......)

ஈழப் பிரச்சினையில் இந்தியாவை ஓரம்கட்ட முயற்சிக்கும் ரி.என்.ஏ!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான தேர்வில் திரு. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய தெரிவு பலருக்கும் தகுதியுடையதாகத் தெரியலாம். அவர் படித்தவர், சட்டத்தரணி, நீதிபதி என்று பல தகுதிகளையும் உடையவர். அரசாங்கத்துடனும், பிறநாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தகுதியானவர் என்று பல வெளிநாட்டுத் தமிழர்களும், கொழும்பை மையமாகக் கொண்டவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தும் உண்மைதான். எங்களுடைய பிரச்சினை எங்கள் இனத்தோடும், மொழியோடும், நிலத்தோடும், கலாச்சாரத்தோடும், உயிர் வாழ்வோடும் தொடர்புடையதாகும். எங்கள் இனத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் எங்கள் இனத்தோடு ஒன்றரக் கலந்தவராக இருத்தல் கட்டாயமாகும். எங்கள் இனம்பட்ட துயரங்களில் தானும் பங்கெடுத்தவராக இருத்தல் வேண்டும். (மேலும்.......)

வடக்கு, கிழக்கைச்சேர்ந்த 73 பேர் காலியில் தடுத்துவைப்பு

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றுக்கொண்டிருந்த போது படகு பழுதானதில் தத்தளித்துக்கொண்டிருந்த 73  பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். இவர்கள், காலி துறைமுகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7.30 மணியளவில் அழைத்துவரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து 290 கடல் மைல் தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடந்த 23 ஆம் திகதி தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த 73 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் விபரம்

வட மாகாணசபை தேர்தலில்  தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் சார்பில் போட்டியிடுவோர் தெரிவு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா. சங்கையா தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் மத்திய பொதுக் குழு கூட்டம் யாழ். மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களுக்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. யாழ். மாவட்டத்திற்கு கந்தப்பர் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவும், கணபதிப்பிள்ளை தருமலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.  கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரியும், கந்தசாமி திருலோகமூர்த்தியும், வினுபானந்தகுமாரி கேதுரெட்ணமும் தெரிவு செய்யப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேரி கமலா குணசீலன்  ஆகியோரே  தமிழர் விடுதலை கூட்டணியின்  சார்பில் தெரிவு செய்யப்பட்டதாக நிர்வாக செயலாளர் மேலும் கூறினார்.

இரு அரசியல் கட்சிகள் நேற்று வேட்புமனு

எட்டு சுயேச்சைகளும் கட்டுப்பணம் செலுத்தின

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் முதலாம் நாளான நேற்று (25) அங்கீகரிக்கப்பட்ட இரு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்ததோடு எட்டு சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் திணைக்களம் கூறியது. மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ‘ஜனசெத்த பெரமுன’வும் யாழ். மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தன. கண்டி மாவட்டத்திற்கு இரு சுயேச்சைக் குழுக்களும் யாழ். மாவட்டத்திற்கு ஒரு சுயேச்சை குழுவும் புத்தளம் மாவட்டத்திற்கு இரு சுயேச்சைக் குழுக்களும் நுவரெலியா மாவட்டத்திற்கு 2 சுயேச்சை குழுக்களும் குருநாகல் மாவட்டத்திற்கு ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்திற்கான ஜனசெத்த பெரமுன வேட்பு மனுவை அதன் செயலாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்தார். தமது கட்சி வவுனியா, மன்னார், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வேட்பு மனு யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் பி. ஜி. தயானந்தாவினால் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்பினுள் 10 வாரங்கள் மீன்பிடிக்கும் இந்திய கோரிக்கை நிராகரிப்பு

இலங்கையில் பத்து வாரங்களுக்கு மீன் பிடிக்கக் கோரும் இந்திய மீனவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக பத்து வாரங்கள் இந்திய மீனவர் இலங்கைக் கடலிலும் அடுத்த பத்து வாரம் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடலிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறு இந்திய மீனவர் சங்கங்கள் கோரியிருந்தன. இந்த வேண்டுகோள் சாத்தியமற்றதென கருதி அதனை நிராகரித்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை, இந்தியக் கடற் பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கையரை இந்திய படைகள் கைதுசெய்து வழக்கு தொடர்வது போல் இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் இந்தியர்களும் இனி கைதுசெய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இது காலவரை போன்று எவரது சிபாரிசின் பேரிலும் வழக்கின்றி அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித் தார்.

பேராதனை பூங்கா வரலாறு 14ம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பம்

பேராதனை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது. மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி. மீ. தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 14 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. 1371 இல் மூன்றாம் விக்கிரமபாகு மன்னன் இவ்விடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டான். 1747 - 1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜ சிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. (மேலும்.....)

ஐ.ம.சு.கூவில் மு.கா. போட்டி?

வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் கட்சி தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரொருவர் தெரிவித்தார். இந்த அழுத்தம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அதியுயர் பீட உறுப்பினர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த அழுத்ததின் பின்னணியில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வட மாகாண சபை தேர்தல் உட்பட செப்டம்பரில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கடந்த ஜுன் 13ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 14ஆம் திகதி பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பதில் கடிதத்தை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க விடயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிச்சயமாக எந்த மாற்றமும் இல்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் குறிப்பாக, தமிழர்கள் தமது நிலையை தாமே தீர்மானிப்பதை உறுதிப்படுத்துவதற்கு புதுடில்லி நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. இந்த நோக்கத்தை எட்டும் வரை தொடர்ந்து நாம் பணியாற்றுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடி 25, 2013

சி.வி. விக்னேஸ்வரனை வேட்பாளராக்கியதை எதிர்த்து சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டிகள்

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டது தொடர்பில் தமிழரசு கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் அயராது உழைத்த மாவை சேனாதிராஜாவை நியமிக்காது தனது சொந்த விருப்பத்தின் பேரில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது தொடர்பில் அவருக்கு எதிராக வடக்கில் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறது. இரா சம்பந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்சி பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவு வெளியிட்டும் வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி என்ற பெயர்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணா, மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா? சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து, சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா? சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு? மாவை அண்ணா ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் ‘நாங்கள் துன்பப்பட்ட போது விக்னேஸ்வரன் ஐயா எங்கு போனார்’ சம்பந்தன் ஐயா! உங்கள் முதலமைச்சருக்கு கோணாவிலும் கேப்பாபுலவும் எங்குள்ளது என்று தெரியுமா? போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்தார். வடக்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஈரோஸ் ஏர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் வட மாகாணத்திற்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளராக ஐ.ம.சு.கூவில் போட்டியிடுவேன் - தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் ஆற்றிய விசேட உரையினை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இதன்போது தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சிக்குள் இருப்பவர்கள் தன் மீது கல்லெறிவதாகவும் இதனாலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாகவும் தனது விசேட கூற்றின்போது தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் தெரிவில் எவ்விதமான அழுத்தங்களும் வரவில்லை:சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாகவே தெரிவு செய்தனர். விக்னேஸ்வரனின் தெரிவு விடயத்தில் உள்நாட்டலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ எவ்விதமான அழுத்தங்களும் கட்சிக்கு வரவில்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 30 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஜூலை மாதம் இதுபோன்ற நாளில் தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் வன்முறை நடந்தேறியது. அப்போது நான் மாணவனாக இருந்ததுடன் வன்முறையின்போது கொழும்பில் பல்வேறு வீதிகளிலும் ஒடித் திரிந்தேன். பின்னர் கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அப்போதுதான் வடக்கு என்பது எமது தாயகம் என்பதனை நாங்கள் வலுவாக உணர்ந்தோம். தலைநகரில் எங்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னரே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். இதற்கு முன்னர் 1951 ஆம் ஆண்டு மற்றும் 1956 ஆம் ஆண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்றன. ஆனால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எனினும் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னரே இந்த நகர்வுக்கு இளைஞர்கள் சென்றனர்.

ஆனால் மீண்டும் கொழும்ப சென்று சுகபோக வாழ்வை தொடர்ந்தோம் என்பதையும் சுமந்திரன் குறிப்பிட்டால் நல்லதாக இருக்கும்.

யாழ்.குடாவில் 13 சிறிய இராணுவ முகாம்கள் அகற்ற நடவடிக்கை

வடக்கின் இராணுவ குறைப்பின் ஒரு கட்டமாக வலிகாமம் மற்றும் பலாலி வரையிலான பிரதேசத்தில் காணப்படும் 13 சிறுஇராணுவ முகாம்களை நீக்குவதற்கும் அக்காணிகளை உரிய உரிமையாளர்களுக்கு வழங்கவும் இராணுவ தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். யாழ்.குடாநாட்டின் மேலதிகமாக காணப்படும் இராணுவ முகாம்களையும் இராணுவத்தையும் குறைக்கும் நடவடிக்கையை இராணுவ தலைமையகம் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகளில் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த அடிப்படை கட்டுமானபணிகளை இராணுவம் முன்னெடுத்துவந்திருந்தது. இந்நிலையில் அப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கிருந்து மேலதிக இராணுவத்தை குறைக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன் பிரகாரமே வலிகாமம் மற்றும் பலாலி பகுதிகளில் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட 13 சிறிய இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றி அக்காணிகளை உரிய உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிககை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் (25) ஓகஸ்ட் முதலாம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. வேட்பு மனுக்களை ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மூன்று மாகாணங்களி லுமுள்ள 10 மாவட்ட செயலகங்களிலும் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட உள்ளதோடு இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையக கட்சிகள் அடங்கலான பிரதான கட்சிகள் வேட்பு மனு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதோடு அவை அடுத்த வாரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்தில் இருந்து 36 பேரும் மத்திய மாகாணத்திலிருந்து 56 பேரும், வட மேல் மாகாணத்திலிருந்து 50 பேரும் தெரிவு செய்யப்பட உள்ளனர். வடக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து 16 பேரும், கிளிநொச்சியில் இருந்து 4 பேரும், மன்னாரில் இருந்து 5 பேரும், வவுனியாவிலிருந்து 6 பேரும் முல்லைத்தீவிலிருந்து 5 பேரும் தெரிவாக இருக்கின்றனர்.

1941இல் மூழ்கிய கப்பலில் தொன் கணக்கில் வெள்ளி மீட்பு

இந்தியாவில் இருந்து 1941 ஆம் ஆண்டு ஏராளமாக செல்வங்களை அள்ளிச் சென்றபோது அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிய இங்கிலாந்து சரக்கு கப்பலில் இருந்து தற்போது 61 தொன் வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியா இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்தபோது 1941 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து வெள்ளி, இரும்பு தாது, தேயிலை ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு எஸ்.எஸ். கய்ர்சோப்பா என்ற சரக்கு கப்பல் இங்கிலாந்து நோக்கி சென்றது. அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது எரிபொருள் தீர்ந்த நிலையில் கப்பல் கடற்புயலில் சிக்கி 20 நிமிடங்களுக்குள் மூழ்கியது. சுமார் 400 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் அயர்லாந்து அருகே முழ்கி கிடந்தது. இந்த கப்பலில் இருக்கும் பொருட்களை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் ஒடிசா மெரைன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதன்படி இந்த கப்பலில் இருந்து 35 மில்லியன் டொலர் பெறுமதியான 61 தொன் வெள்ளிக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆடி 24, 2013

4 கட்சிகள் ஒன்றிணைந்து மலையக தேசிய முன்னணி உதயம்

மூன்று மாகாண சபைகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளில் மலையக தேசிய முன்னணி தனித்து போட்டியிடவுள்ளது. திருமதி சாந்தி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, பிரபா கணேசன் எம்.பி. தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தி. ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து வி. இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் மலையக தேசிய முன்னணி எனும் அமைப்பை புதிதாக ஸ்தாபித்துள்ளன. (மேலும்....)

ஈ.பி.டி.பி.க்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு

வடமாகாண சபைக்கான  தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார். இந்த தேர்தலில்  ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாஙத்துடன் இணைந்தே  ஈபிடிபி போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

'13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்தோம்'

நாமிருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளோமே தவிர அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து வேண்டிய நேரத்தில் எம்மால் வெளியேறவும் முடியும் என்பதுடன் 13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்து நிறுத்தினோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன், வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். 13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யக்கூடாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது மலைய மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் மற்றும் மலையக மக்களின் வீடு மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் போன்ற மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தேர்தலில் மலையக தேசிய முன்னணியாக களமிறங்கியுள்ளோம். ஒரு சிறு திருத்தத்தையேனும் 13 ஆவது திருத்தத்தில் மேற்கொள்வதற்கு இடமளியோம். அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம் என்பதுடன் எங்களுடைய எதிர்ப்பினால் தான் 13 ஆவது திருத்தம் கைவிடப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

அரச நிறுவனங்கள் யாவும் நஷ்டத்தில் இயங்கவில்லை

அரச நிறுவனங்கள் அனைத்தும் நட்டத்தில் இயங்குவதாக பரப்பப்படும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொது நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் (கோப்) தலைவர் சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார். பதினாறு அரச நிறுவனங்களே நட்டத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அவை விரைவில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும் எனவும் அது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 244 அரச நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மாத்திரமே குறிப்பிடும்படி யான நஷ்டம் ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன வென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பொதுநிறுவனங்கள் தொடர்பான குழு தனது இரண்டாவது அறிக்கையை தயாரித்துள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான 212 பொது நிறுவனங்களின் நிதி நிலைமைகள் தொடர்பான முதலாவது அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2012 ஜனவரி முதலாம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி வரையிலான 15 மாத காலப் பகுதியில் 244 பொது நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழு விரிவான விசாரணைகளை நடத்தி இரண்டாவது அறிக்கையை தயாரித்துள்ளது.

சட்ட விரோத ஆஸி பயணங்கள்

1500க்கு அதிகமானோர் இதுவரை கடலில் மூழ்கி உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத மாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 746 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 363 பேர் கடலில் மூழ்கியிருப்பதுடன் 350 பேர் தொடர்ந்து காணாமல் போனவர்களின் விபரங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 22 பேர் தடுப்பு முகாம்களில் உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பின்னர் கொல்லப்பட்டிருப்பதாக அச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘ஸயுர’ கப்பல் மீதான தாக்குதல்

6 எல். ரி. ரி. ஈ. உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

 ‘ஸயுர’ என்ற கடற்படை கப்பலைத் தாக்கி கப்பலில் இருந்த கடற்படை வீரர்களைக் கொன்ற சம்பவம் தொடர்பாக எல். ரி. ரி. ஈ. இயக்க உறுப்பினர்கள் உட்பட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன உத்தரவிட்டார். விளக்கமறியலில் இருக்கும் குற்றம் சுமத்தப்பட்டோர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிங்களவர் ஆவார். இவர்களுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இக் குற்றத்தைச் செய்ததற்காக சிங்களவரின் உதவியும் எல். ரி. ரி. ஈ. இயக்கத்துக்குக் கிடைத்துள்ளது. நீர்கொழும்பில் கடற்படை கப்பலைத் தாக்க திட்டமிட்டிருந்தது. முல்லைத்தீவு எல். ரி. ரி. ஈ. கடற்படைப் பிரிவில் தலைவரான கடல் புலித் தலைவர் சூசை, பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அந்தனி, ராணி குமார், நிக்ஸன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். தற்போது மரணித்துள்ள நீர்கொழும்பு பகுதியிலுள்ள புலி ஆதரவாளரான வர்ணகுலசூரிய கிறிஸ்டி பெர்னாண்டோ என்ற “புலி கிறிஸ்டி” என்பவர் நீர்கொழும்பு பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 2006 ஜூன் 16ஆம் திகதி கப்பல் தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டது.

ஆடி 22, 2013

யாழில் இந்திய திருநங்கை

யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இந்தியா, சென்னையைச் சேர்ந்த வித்தியா என்ற திருநங்கையே இவ்வாறு யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இவர் இதன்போது, தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், "திருநங்கையான நான் யாழில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியமை குறித்து மகிழ்ச்சிடைகின்றேன். தமிழ் மக்களுக்காக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் நானும் கலந்துகொண்டிருக்கின்றேன். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் இந்த பிரதேசத்தையும் காணக்கிடைத்தது  என் வாழ்நாளில் மிகமுக்கியமான நிகழ்வாகும். (மேலும்.....)

நூல் ஆய்வரங்கு

'தினகரன்' நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர்

சிவா சுப்பிரமணியம் எழுதிய

' இலங்கை அரசியல் வரலாறு – ஒரு நோக்கு'

தலைமை: பி.தேவராஜ்

ஆய்வு செய்வோர்:

லெனின் மதிவானம்

செல்வி திருச்சந்திரன்

காலம்: யூலை 28, 2013 ஞாயிறு பிற்பகல் 4.30 மணி

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58 தர்மராம வீதி

     கொழும்பு – 06 (இலங்கை)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

மின்னஞ்சல் முகவரி:

kailashpath@yahoo.com

இலங்கை விவகாரம்

புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க முடிவு

13 ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை, நிறைவேற்றுமாறு  வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் இந்திய பங்குபற்றக்கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றும் திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

வடக்கு முஸ்லிம்கள்

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன ?

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தினை ஆளப்போகின்ற கட்சியாக வரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் அங்குள்ள முஸ்லிம்களின் புனர்வாழ்வு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முஸ்லிம்களின் காணி போன்றவைகள் தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளோம். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அந்த சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கித்தருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக அவர் கூறினார்.

ரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது

இரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை மீனவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர். பைபர் கிளாஸ் வள்ளங்களின் ஊடாக குறித்த இருவரும் இந்தியாவை சென்றடைந்துள்ளனர். புஸ்பகுமார் மற்றும் வருணகுலசேகர் ஆகிய பெயர்களை உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆடி 21, 2013

தமிழ் தலைமையும் அரசியல் தீர்வுகளும்.

(நடேசன்)

கிறிஸ்துவிற்கு முன்பான 5ஆம் நூற்றாண்டில் பாரசீக சாம்ராச்சியத்தை ஆண்ட மன்னன் ஆதர்ஸ், தனது அரச சபையில் விருந்தினர்களுடன் குடித்து விருந்துண்டு மகிழ்ந்த போது தனது பட்டத்து இராணியான வஸ்தியை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்தான். விருந்தினர் மத்தியில் தோன்ற மறுத்த பட்டத்து இராணியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒரு இராணியை தேர்ந்தெடுக்க அழகிப் போட்டியை வைத்தான். அந்த நாட்டில் மொடிசியஸ் என்ற யூத அரசகாவலனால் வளர்க்கப்பட்ட எஸ்தர் என்ற யுதப்பெண் அரசனைக் கவர்கிறாள். அரசனை மணம்முடித்து பட்டத்து இராணியாகும்; எஸ்தர் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்பதை அரசனிடம் மறைத்து விடுகிறாள். (மேலும்.....)

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை

நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் சித்தாண்டி மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. 5 பெரு விளையாட்டுக்களில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலம் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 19 வயது பெண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டம்,15,17,19 வயது பெண்கள் பிரிவுகளுக்கான வலைப்பந்து, மற்றும் 19 வயது பிரிவுக்கான எறிபந்து ஆகிய 5 பெரு விளையாட்டுக்களில் சம்பியன் பட்டத்தை பெற்றதன் மூலமே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இம் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக பாடசாலை அதிபர் தி.ரவி, உப அதிபர், பிரதி அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்களான ஆ.சந்துரு, எம்.எம்.எம், றியாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கே.விநாயகமூர்த்தி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குக்கும் மேற்பட்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சோசூரியர் செந்தூரன் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

'தமிழர்கள் ஆட்சி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன்'

'கிழக்கு மாகண சபையினை தமிழர்கள் ஆட்சி செய்யமாட்டார்கள். அவ்வாறு ஆட்சி செயதால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்' என ஜனாதியின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 'நான் காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்பவனல்ல. காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வேண்டும் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புமைப்புத்தான் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றது. அதில் என்ன இருக்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதான் நிலைமை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39 வீதமும் முஸ்லிம்கள் 37 வீதமும் ஏனையவர்கள் சிங்களவர்களாகவும் உள்ளனர். அதிலும் தமிழர்கள் தற்போது சட்ட விரோதமாக படகுகள் மூலமும் ஏனைய வழிகளிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள். இந்நிலையினைப்  பார்க்கும்போது தமிழர்கள் கிழக்கில் 32 அல்லது 33 வீதமாக குறைந்துள்ளார்கள். தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள். அது அவர்களின் திறமை. ஆனால் தமிழர்களிடத்தில் முன்னேற்றம் போதாமலுள்ளது. கிழக்கு மாகாணத்தில சிறுபான்மை என்றால் அது தமிழர்களாகத்தான் உள்ளனர். தமிழர்களின் எதிர்காலம் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது. ஏனெனில் நிலமை அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றது.

நான்கு மாவட்டங்களின் வேட்பாளர் நியமனங்களில் கூட்டமைப்புக்குள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியமனக் குழு கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் கூடியிருந்தது. இந்த இருநாள் சந்திப்புக்களின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.(மேலும்.....)

விக்னேஸ்வரனை வேட்பாளராக்க தூதரகங்கள் சம்பந்தனுக்கு அழுத்தம்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வ ரனை நியமிக்கும்படி இரண்டு தூதரகங் களிலிருந்து இரா. சம்பந்தனுக்கு அழுத் தம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கில் முதலமைச்சர் வேட் பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவையே நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசியல்வாதி அல்லாத மற்றும் வடக்கு மக்களோடு சம்பந்தமில்லாத முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனையே நியமிக்கும்படி கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் அலுவலகங்கள் இரா. சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்தன் மர்மம் என்ன? கடந்த காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாக ரனின் ஆயுதத்துக்கு முடிவுகட்டப் பட்டது. 13 வது திருத்தத்தை மேலும் சக்திமிக்க ஒரு சரத்தாக மாற்றுவதற்கும் அதனூடாக மேலும் சட்டங்களை திணிக்கவுமே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை 2 வெளிநாட்டு தூதுவர் அலுவலகங்கள் சிபார்சு செய்தன.

ஆடி 20, 2013

கூட்டமைப்புக்குள் போட்டி பிளவு ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை -  மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம். இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென மக்களும் ஆதரவாளர்களும் என்னை வற்புறுத்திய போதும் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் மக்கள், கட்சி ஆகியன விரும்புமாக இருந்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்பதை மாத்திரமே நான் கூறியிருந்தேன். யாரிடமும் என்னை முதலமைச்சர் வேட்பாளரக நியமியுங்கள் என நான் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் எமது கட்சியின் தலைவருக்கும் செயலாளருமாகிய எனக்குமிடையில் ஒரு பிளவு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும்.

சீமானை கைது செய்ய பிடியாணை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் (19) ஆஜராக நீதிமன்றத்திற்கு ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.

ஆடி 20, 2013

விக்னேஸ்வரன் அரசியல் சூழலை மாற்றுவாரா?சூழல் அவரை மாற்றுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வரும் போது மேலெழுந்து வந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிரான குரல்கள் படிப்படியாக மங்கிவிட ஆரம்பித்துள்ளன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால்விட்ட அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது தமது கட்சி வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மட்டும் கூறி வருகிறார். தமது கொள்கைக்கு பொருந்தாததினால் வட மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டால் மாகாண சபை முறைக்கே அவரது கட்சி எதிரானது என்பதால் ஏனைய மாகாண சபைகளில் இருந்தும் அவரது கட்சி உறுப்பினர்களை அவர் விலக்கிக்கொள்வாரா? (மேலும்.....)

தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் அவர்களுடனான நேர்காணல்

நேர்காணல் கண்டவ் - ஸ்ரனிஸ்

ஏரிமலை வெடித்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடி அனைத்தையும் அழித்து பின் குளிர்ந்த பிறகு ஏற்படும் சாதாரன நிலை போன்ற ஒரு சாதாரன நிலைதான் வடக்கு-கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.எரிமலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்து சிதறலாம்.அதேபோல் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் ஒரு இனக்கலவரம் வெடிக்கலாம்.தற்பொழுதிருக்கும் சாதாரன நிலை கூட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ராஜபக்சே பயத்தினால் ஏற்பட்டதே ஒழிய,மற்றப்பபடி வேறு எதனாலும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.உலக நாடுகளின் கண்டனத்தால் சிங்களவர்களுக்கு எற்பட்ட அசாதாரனநிலை மாறிய பிறகு மீண்டும் ஒரு அனப்படுகொலையை ராஜபக்சே தூண்டிவிடலாம்,ஏனென்றர் ராஜபக்சேவின் நோக்கம் விடுதலைப்புலிகளை அமிழப்பதல்ல,ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதுதான்.அதனால்தான் 2007 இல் நடந்த இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து அதில் அப்பாவி தமிழ் இன பொதுமக்களை ஒன்று  கூடச் செய்து நாலாபுறமுமும் ராணுவத்தை ஏவி தரைமார்க்கமாகவும்,ஆகாய மார்க்கமாகவும் தாக்குதலை நடத்தி 45000 அப்பாவி மக்களை கொலை செய்தனர் என்பதை இலங்கை வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். (மேலும்.....)

உரையரங்கு

அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருக்கும்

டாக்டர் நோயல் நடேசன் அவர்கள்

'அரசியல் தீர்வும் தமிழ் தலைமைகளும்'

எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (கனடா)       

Scarborough Civic Centre Auditorium (Canada)

காலம்: யூலை 20, 2013 சனிக்கிழமை பிற்பகல் 3 முதல் – 6 மணி வரை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு: வாழும் மனிதம் - கனடா

வட மாகாணசபை தேர்தல்; ஐ.ம.சு.மு, ஈ.பி.டி.பி, அ.இ.மு.க இணைந்து போட்டி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியுடன் அமைச்சர் சுசில் பிமேரஜயந்த இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு இன்று மதியம் 1 மணிக்கு அக்கட்சியின் யாழ். மாவட்ட  அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் பிரத்தியேக செயலாளருமான கே.என்.தயானந்தா மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் றொபின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கறுப்பு ஜூலையின் வடுக்களை மறைக்க 23-30 வரை ‘‘சகோதரத்துவ வாரம்’’

இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 30 திகதி செவ்வாய்க்கிழமை காலப் பகுதியை ‘‘சகோதரத்துவ வாரமாக’’ ஜே.வி.பி. பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலான நிகழ்வுகளை அக்கட்சி வவுனியா நகரில் நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெளிவுபடுத்துகையில்,1983 கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்கள் மனதில் மாறாத வடுக்களை ஏற்படுத்தியது. இனியும் இந்நாட்டில அவ்வாறானதோர் துர்ப்பாக்கியம் இடம்பெறக்கூடாது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும். அதனை வலியுறுத்தியே சகோதரத்துவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளோம்.

இலங்கையுடனான நல்லுறவு தொடரும் இந்தியா நம்பிக்கை

இலங்கை அரசுடன், இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. அந்த உறவு தொடரும் என்றே தான் நம்புவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். டில்லியில் செய்தியாளர்களுக்கு நேற்றுமுன்தினம் பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த பேட்டியின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ``இந்திய - சீன எல்லையை ஒட்டி இந்திய பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து, தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை. போர் காலங்களிலும், அமைதியான முறையில் தீர்வு காண விரும்புபவர்கள் நாம். எனவே, தேசிய நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான உடன்பாடு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பல துறைகளில் நல்லுறவு நிலவுகிறது. அந்நாட்டை புனரமைக்க நாம் முழுவீச்சில் இறங்கியுள்ளோம். அந்த நல்லுறவு தொடரும் என நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என்றார்.

படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள்

படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேலும் அவுஸ்திரிரேலியாவில் மீள் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் அனைவரும் வறுமைமிக்க பபுவா நியூகினியாவுக்கு அனுப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூத் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ‘‘தற்போதிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்கள் அந்நாட்டில் அகதிகளாக குடியமர்த்தப்படுவதற்கு எதுவித வாய்ப்பும் இல்லை’’ என கெவின் ரூத் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பிறிஸ்பேர்ன் நகரில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கையொன்றுக்கான ஆவணங்களில் பபுவா நியூகினியாவின் பிரதமர் பீற்றர் ஓ நீலுடன் கைச்சாத்திட்டதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை பபுவா நியூகினியாவிலுள்ள மனுஸ்தீவுக்கும் அந்நாட்டிலுள்ள வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறிய கெவின் ரூத் அவர்கள் நிஜமான அகதிகள் என கண்டறியப்படும் பட்சத்தில் பபுவா நியூகினியாவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் வரையறையின்றி

சுப்பர் மார்க்கட்டுகள் நிறுவப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியம் - ஜனாதிபதி

நாடு முழுவதும் வரையறை இன்றி சகல நகரங்களிலும் சுப்பர் மார்க்கட்டுகள் உருவாவதைத் தடுக்க சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார். சுப்பர் மார்க்கட்டுகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி வரையறையின்றி நிறுவப்படுவதால் கிராமங்களில் சிறு சிறு வர்த்தகர்களுக்கும் வியாபாரம் செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான சுப்பர் மார்க்கட்டுகள் நிறுவப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். விவசாய அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2013- 2015 திட்டங்கள் குறித்து மீளாய்வுகள் செய்யப்பட்டன. காய்கறிவகைகள், பழங்கள் மற்றும் மேலதிக ஊடு பயிர்கள் உற்பத்திகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கோதுமை மா பாவனை தொடர்பாக பேசிய ஜனாதிபதி அவர்கள் கோதுமை மாவை அதிகளவில் நுகரும் தோட்டப்புற மக்களுக்கு அரிசி மாவை அதிகளவில் உபயோகிப்பதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வெளிநாட்டில் நல்ல கிராக்கியுள்ள அரிசிவகைகளை உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அடுத்த போகத்தின் போது மகாவலி பி மற்றும் சீ வலயங்களில் இந்த உயர்ரக அரிசி வகைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஆடி 19, 2013

முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க கூட்டமைப்பு முஸ்தீபு

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றின் சட்டத்தணி ஒருவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. இந்த இரண்டு முன்னாள் போராளிகளில்; தமிழரசுகட்சி சார்பாக ஒருவரும் ரெலோ அமைப்பின் சார்பில் ஒருவருமாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறன. ஏற்கெனவே, விடுதலைப்புலிகளின்; ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் சுதந்திரக்கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்;கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரையும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதியரசர் விக்னேஸ்வரனின் நியமனத்திற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு -  வாசுதேவ நாணயக்கார

மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் மக்கள் வாக்களிக்காது பகிஷ்கரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென்ற பிரசாரத்தை முன்னெடுப்பார்களா? என சவால் விடுக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நியமித்ததை புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். (மேலும்....)

வடக்கில் கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்

வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்...

கிளிநொச்சி

தமிழரசுகட்சி                                3
தமிழர்விடுதலைக்கூட்டணி      2
ரெலோ                                          1
ஈபி.ஆர். எல். எப்                          1

முல்லைத்தீவு

தமிழரசுகட்சி                                2
ரெலோ                                          2
ஈபி.ஆர். எல். எப்                          2
புளொட்                                          1
தமிழர்விடுதலைக்கூட்டணி       1

வவுனியா

தமிழரசுகட்சி                                2
புளொட்                                         2
ரெலோ                                          2
ஈபி.ஆர். எல். எப்                          3

மன்னார்

தமிழரசுகட்சி                              2
புளொட்                                       1
ரெலோ                                        3
ஈபி.ஆர். எல். எப்                        2

ஆடி 18, 2013

மாகாண சபை தேர்தல்: சுதந்திரக்கட்சி வேட்பாளர் நேர்முகம் பூர்த்தி

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்லில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வத ற்கான நேர்முகப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் வேட்புமனு தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 20 ஆம் திகதிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியல் நிறைவு செய்யப்படும் என வேட்பு மனு குழு உறுப்பினர் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார். ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளுக்கு வழங்கப்படும் ஆசன ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரத்தினுள் ஆராயப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அறிய வருகிறது. ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் ஐ.ம.சு.மு.வுடனே போட்டியிட உள்ளதாகவும் அது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜுலை 25ம் முதல் ஆகஸ்ட் 01 வரை ஏற்கப்பட உள்ளது தெரிந்ததே.

கவிஞர் வாலி காலமானார்

டி. எஸ். ரங்கராஜன் என்றழைக்கப்படும் கவிஞர் வாலி இன்று வியாழக்கிழமை காலமானார். திருவரங்கத்தில் 1931 ஆம் ஆண்டு  ஒக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த வாலி தனது 82 ஆவது வயதில் சென்னையில் காலமானார். கடந்த ஜுன் 8 ஆம் திகதியன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் அன்றிரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையிலேயே இன்று காலமானார். தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியருமான இவர் எழுதிய 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவையாகும். 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை  திரைப்படங்களுக்கு வாலி எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.'ஹேராம்', 'பார்த்தாலே பரவசம்' மற்றும் 'பொய்க்கால் குதிரை' ஆகியவை அவர் நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை. (மேலும்....)

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது - விக்னேஸ்வரன்

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லது என்பதே என் கருத்து. 13ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதே. 1987இல் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு இரு மாகாணங்களும் இணைந்ததற்கு காரணம், இரண்டு மாகாணங்களிலுமே பொதுவானதாக தமிழ்மொழி இருந்ததுதான். அந்த நேரத்தில் கிழக்கில் இருந்த முஸ்லிம் மக்கள், தமிழ் பெரும்பான்மையைப் பற்றிய அச்சம் கொண்டிருந்தார்கள். இப்போது அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் பாவிக்கப்படுவது ஒரே மொழி. அவர்களது கலாசாரம் தனி. சுவாத்தியம் கூட மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் அவர்களை தங்களை தாங்களே தங்கள் மொழியில் ஆட்சி செய்ய அனுமதிப்பது அவசியம். வடக்கில் வந்து வாழ்வதை ஒருவரும் எதிர்க்கவில்லை என்று முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(மேலும்....)

வவுனியாவில் இன்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!! 

ஆரம்ப நிகழ்ச்சியாக முதலில் மாலைதீவுப் புரட்சி நடவடிக்கையில் மரணித்த புளொட் தோழர் கோபியின் தாயார், புளொட் முக்கியஸ்தர் தோழர் ஜெஸ்மின் அவர்களின் துணைவியாரும், புளொட் மகளிர் அமைப்பை சேர்ந்தவருமான தோழர் ஜெயபாலினி ஜெஸ்மின், உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களினால் நினைவுச் சுடர் ஏற்றலுடன்  கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களினால் மலரஞ்சலி செலுத்தப் பட்டதுடன், வீர மக்கள் தின அஞ்சலி நிகழ்ச்சி ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக திரு.மகேந்திரராஜா வரவேற்புரை நிகழ்த்தியதுடன், தோழர்.ஜி.ரி.லிங்கநாதனினால் (விசு) தலைமையுரை நிகழ்த்தப்பட்டு புளொட் தலைவர் சித்தார்த்தன், உட்பட புளொட் முக்கியஸ்தர்களினாலும், ஏனைய அமைப்பு பிரதிநிதிகளினாலும், ஊர்ப் பிரமுகர்களினாலும் உரை நிகழ்த்தப்பட்டு தோழர் பவனின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவேறியுள்ளது. இன்றைய வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் "மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூறும் இத்தினத்தில் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு தினத்தை ஏற்படுத்தி, மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூருவதை விடுத்து, எல்லோரையும் நினைவுகூரும் ஓர் தினத்தை எல்லோருக்கும் பொதுவாக ஓர் தினத்தில் நடாத்த முன்வர வேண்டும்" என்றார்.

தகவல்.. ஊடகப்பிரிவு - புளொட் 

Toronto Ceylon Tea Festival -2013, Harbourfront

Ceylon Tea promotion in Toronto Canada ! pl share this clip with all tea lovers
http://www.youtube.com/watch?v=Be8GKaM8LmQ

த.தே.கூ.வின் வேட்பாளர்கள், நாளை இறுதித் தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு நாளை வியாழக்கிழமை எட்டப்படவுள்ளது. வேட்பாளர் தெரிவுக்கான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை, இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற நிலையிலேயே நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. நேற்றைய தினக் கலந்துரையாடல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. தேர்தலில் த.தே.கூ வேட்பாளர்களாக சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதா அல்லது கட்சி உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இன்றைய கலந்துரையாடலில் உறுதியான முடிவுகள் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் நாளை வியாழக்கிழமை 3 மணிக்கு கலந்துரையாடப்படவுள்ளது.  இதன் பின்னரே, சமூகப் பிரதிநிதிகளா அல்லது கட்சி வேட்பாளரை நியமிப்பதா என்பது பற்றிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toronto police say they’ve foiled multi-million dollar scheme that tricked banks into giving loans

Toronto police says it has foiled a multi-million dollar fraud scheme that saw a network of 25 people trick major banks into loaning money to phoney businesses. For more than a year, a cast of three ringleaders orchestrated a series of meetings with lenders in the Toronto area, inviting them to locations staged as legitimate businesses, Det.-Const. Sarath Thayalan said at a news conference on Monday. Of the 25 accused, some are local business owners and employees who allegedly allowed the fraudsters to use their property when lenders wanted to make on-site visits — often removing existing pieces of equipment and adding others to fit with the ruse, Det.-Const. Thayalan said. “[The lender] would see equipment and a building that would fool him.” The shell companies were incorporated in Ontario, but existed only “on paper,” he said. In 15 cases investigated by police, loans ranged between $100,000 and $1.7-million, totalling $8-million. The fraud unit has recovered “a minority” of the money. After loans were granted, money was laundered both locally and internationally, police allege. The three alleged ringleaders — Daniel Kebbe, Elias Rassi and Michael Shawn Majeed — face charges including fraud, attempted fraud, possesion of the proceeds of crime, uttering a forged document and conspiracy to commit an indictable offence. Det.-Const. Thayalan would not specify which banks or private lenders were targeted, but said “they are companies we all deal with.” Police arrested the 25 suspects between August 2012 and this month, but believe there are other victims and suspects. One suspect has left the country and is at large, Det.-Const. Thayalan said.

(National Post)

இலண்டன் மாநகரில் இலக்கிய மாலை

வி. ரி. இளங்கோவனின் 6 நூல்கள் அறிமுக நிகழ்வு..!

இலண்டன் மாநகரில், இலக்கிய மாலை நான்காவது நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 10-ம் திகதி (10 - 08 - 2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகவுள்ளன. இலண்டன் 'மனோர் பார்க்'  என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலண்டன் மாநகரில் வாழும் பல மூத்த கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரைநிகழ்த்துவர். வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?' - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்' - கட்டுரைத் தொகுப்பு, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?, 'மண் மறவா மனிதர்கள்', 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' - (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்' ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகவுள்ளன.

- ஓவியா

யாழ் தேவி செப்டெம்பர் முதல் கிளிநொச்சி வரை பயணம்
 

யாழ் தேவி’ ரயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.  வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் அழிவடைந்த வடபகுதி ரயில் பாதைகள் இந்திய இர்கொன் கம்பனியினூடாக மீளமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பில் இருந்து வவுனியா வரையே இடம்பெற்ற யாழ் தேவி ரயில் சேவை தற்பொழுது ஓமந்தை வரையே இடம்பெறுகிறது.  நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அடுத்த வருட முடிவுக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ் தேவி ரயில் பயணம் செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையும் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி, முறிகண்டி கோயில், நாவற்குளி, பரந்தன், ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்காவில், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசன்துறை அடங்கலான ரயில் பாதைகள் நிர்மா ணிக்கப்பட்டு வருகின்றன.

பனாமாவில் சிக்கிய ஆயுத கப்பலுக்கு கியூபா பொறுப்பேற்பு

பனாமா கால்வாயில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வட கொரிய கப்பலில் உள்ள ஆயுதங்களுக்கு கியூப நாடு பொறுப்பேற்றுள்ளது. பயன்பாட்டிலில்லாத ஆயுதங்களை திருத்துவதற்கு கியூபாவிலிருந்து வட கொரியாவுக்கு அனுப்பியதாக கியூப நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வட கொரிய கொடியுடன் சென்ற கப்பலில் சர்க்கரை பொதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த கப்பலை பனாமா அரசு தடுத்து வைத்துள்ளது. வடகொரியாவின் சர்ச்சைக்குரிய அணு செயற்பாடு தொடர்பில் ஐ. நா. சபை விதித்த கட்டுப்பாட்டில் வட கொரியாவுக்கு ஆயுத ஏற்றுமதி இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச சட்டங்களை மதிப்பதாக அறிவித்துள்ள கியூப வெளியுறவு அமைச்சு, குறித்த கப்பல் 240 தொன் கொண்ட பயன்பாட்டிலில்லாத ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் இரு விமான எதிர்ப்பு ஏவுகணை, 9 ஏவுகணைகள், இரு மிக் 21 யுத்த விமானங்கள் மற்றும் 15 மிக் இன்ஜின்கள் உள்ளடங்குகின்றன. பனாமாவின் நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்கா, அதனது விசாரணை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறியது.

ஆடி 17, 2013

திறந்தவெளி குளியலறைகள்... சுகாதாரமற்ற கழிவறைகள்... தலையை இடிக்கும் கூரைகள்..

(புலம்பும் புழல் அகதிகள்!)

''இந்தியாவில் இருந்து 6,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆஸ்திரேலியா. உரிய படகு வசதிகளுடன் புறப்பட்டால்கூட ஆஸ்திரேலியாவை அடைய குறைந்தது 20 நாட்கள் தேவை. உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நீண்ட பிரயாணம். ஆனால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறிய வகைப் படகுகள் மூலம்தான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இவ்வாறு ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டு, நடுக்கடலில் தத்தளித்து இறந்துள்ளனர்'' -இப்படி ஓர் அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம் சொல்கிறார் புழல் அகதிமுகாம்வாசி ஒருவர். (மேலும்....)

அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக வவுனியாவை மாற்ற நடவடிக்க- தினேஸ்

வவுனியா மாவட்டத்தை மிகவும் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். வவுனியா பேராற்றை மறித்து வவுனியா நகருக்கான குடிநீர்த்திட்டத்தை அமைக்கும் பணியில் பாதிப்படைந்துள்ள 15 விவசாயிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நஷ்டஈடு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'வவுனியா மாவட்டத்தில் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டபோது, அங்கு விவசாய நிலத்தைக் கொண்டிருந்த மற்றும் அங்கு குடியிருந்த மக்களின் ஒத்துழைப்பு எமக்கு அதிகமாக தேவைப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இந்தமுறை பயிர்ச்செய்கையை செய்து இலாபத்தை ஈட்டலாம் என எண்ணிக்கொண்டிருந்த அந்த மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்கி வைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் முக்கியமானதாக கருதுகின்றேன். இந்த அபிவிருத்திப் பணியின் பலன்கள் இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியதாக உள்ளது. அந்த வகையில் இந்தத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த மக்கள் போலவே எமது அமைச்சும் மிக வேகமாக இந்தத் திட்டத்தை செய்து முடிப்பதற்கு முன்வருகின்றது என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் -  ஜாதிக ஹெல உறுமய

விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓய்வு பெற்ற உயர் நீதமன்ற நீதியரசர் ஒருவர் இவ்வாறு பிரிவினைவாதிகளுடன் இணைந்துள்ளார் என்றால் அவரது முன்னைய காலப் பகுதி மற்றும் பணிகள் தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன. எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கையும் ஒன்றிணைத்து மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் செயற்பட்டதை விட மிகவும் ஆபத்தான சூழலே எதிர்வரும் நாட்களில் வடமாகாணத்திலும் ஏற்படப் போகின்றது.(மேலும்....)

விடுதலைப் புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க கூட்டமைப்பு முயற்சி - குணதாஸ அமரசேகர

இந்தியாவின் ‘‘றோ’’ உளவுப் பிரிவின் ஆலோசனையும் சம்பந்தனின் அரசியல் வியூகமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடமகாண சபையின் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர குற்றம் சாட்டினார். சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப்புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளதாகவே அவர் தெரிவித்தார். (மேலும்....)

மூன்று மாகாண சபைகளிலும் மு. கா. தனித்துப் போட்டி

வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக திங்கட்கிழமை (15) இரவு கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம். ரி. ஹஸன் அலி தெரிவித்தார். இத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட பொழுது, அதியுயர் பீட உறுப்பினர்களின் அதிகப் பெரும்பாலானோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தனித்துவத்தைப் பேணி கட்சியின் மரச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என பலமாக வலியுறுத்தியதால் இந்த முடிவை மேற் கொண்டதாகவும் செயலாளர் நாயகம் மேலும் கூறினார். வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைச் சரிவர பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் சார்பான குழுக்களும் ஒன்றிணைந்து போட்டியிடுவதே உகந்தது என்று இக் கூட்டத்தின் போது கலந்து ரையாடப்பட்டது.

கதிர்காம ஆவணி வேல் உற்சவம்

காட்டுப் பாதை வழியான யாத்திரை ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு மாற்றம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆவணிவேல் உற்சவத்திற்கு யால காட் டுப் பாதையினூடாக பாதயாத்திரை மேற்கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட (ஜுலை 25) திகதி ஓகஸ்ட் 01ம் திகதியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவித்தலை மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் உகந்தைமலை முருகன் ஆலய வண்ணக்கர் முத்துபண்டா (குமார்) வுக்கு அறிவித்துள்ளார். குமண வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் வன பரிபாலன திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ¤ம் இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார். கதிர்காம ஆவணிவேல் உற்சவம் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது. வழமையாக கதிர்காம ஆடிவேல் உற்சவத்திற்குச் செல்வோர் உகந்தைமலை முருகனாலயத்தில் ஓரிரு தினங்கள் தங்கியிருந்து பின்னர் குமண யால காட்டுப் பதையினூடாக 06 அல்லது 7 தினங்கள் பயணித்து கதிர்காமத்தைச் சென்றடைவது தெரிந்ததே. (மேலும்....)

தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாம் இடத்தில் டில்லி மெட்ரோ ரயில் சேவை

புதுடில்லியில் 2002 ஆம் ஆண்டு 190 கி. மீற்றர் நீள மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தொடங்கிய 11 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவில் அதிக பயணிகளை கையாளும் இரண்டாவது பெரிய ரயில் சேவையாக டில்லி மெட்ரோ ரயில் சேவை சிறப்பிடம் பிடித்துள்ளது. சீனாவின் தைபேய் மற்றும் சிங்கப்பூரின் மெட்ரோ ரயில் சேவைகளை பின்னுக்கு தள்ளி கடந்த 1 ஆம் திகதி மட்டும் 23 இலட்சத்து 60 ஆயிரம் பேர் டில்லி மெட்ரோ ரயில்களில் பயணித் துள்ளனர். கடந்த 6 மாதங்களாக பயணிகளின் சராசரி எண்ணிக்கை நாளொன்றுக்கு 20 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. 115.6 கி. மீற்றர் நீளமுள்ள சீனாவில் தைபேய் மெட்ரோ ரயில் சேவையின் அன்றாட சராசரி பயணிகள் எண்ணிக்கை 17 இலட்சத்து 10 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. 148.9 கி. மீற்றர் நீளமுள்ள சிங்கப்பூர் மெட்ரோ ரயில் சேவையின் அன்றாட பயணிகள் எண்ணிக்கை 19 இலட்சத்து 40 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. 115.6 கி. மீற்றர் நீளம் கொண்ட ஹொங்கொங் மெட்ரோ ரயில் சேவையின் மூலம் அன்றாடம் 40 இலட்சம் மக்கள் பயனடைகின்றனர். அதற்கு அடுத்தபடியாக டில்லி மெட்ரோ ரயில் சேவை தென்கிழக்கு ஆசியாவில் 2வது இடத்தை பெற்றுள்ளது.

ஆடி 16, 2013

முதலமைச்சர் வேட்பாளராக சுவாமிநாதன்?

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். ஆயினும் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரசாரம் செய்வதில் தான் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை. நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.வேட்பாளர் நியமனக் குழு பற்றியும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தினகரன் ஆசிரியர் தலையங்கம் இப்படிக் கூறுகின்றது

சனல் 4 தொலைக்காட்சி எல்.ரி.ரி.ஈ.யின் டொலர்களுக்காக ஆட்டம் போடுகிறது

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிலையம் இலங்கை அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் நாட்டு மக்களையும் இழிவுபடுத்தக்கூடிய வகையில் எல்.ரி.ரி.ஈ. டொலர்களுக்கு அடிமையாகி உலக அரங்கில் பொம்மலாட்டம் போட்டு வருவது குறித்து நாம் எமது கடும் கண்டனத்தை வெளியிட விரும்புகிறோம்.ஆதாரமற்ற, போலியாக ஜோடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை மிலேச்சத் தனமாக சுட்டுக் குவித்து யுத்தக்குற்றங்களை புரிந்தார்கள் என்று பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிலையம் செய்தி அறிக்கைகளை யும் விவரண குறும்படங்களையும் உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்து, இலங்கையின் நற்பெயரை இழிவுபடுத்தும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டது. (மேலும்....)

வட மாகாணசபை

தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவின் பின்னணியில்

வட மாகாண சபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவா அல்லது சி. வி. விக்னேஸ்வரனா நியமிக்கப்படுவார் என்ற சர்ச்சை பூதாகரமாகியிருந்த நிலையிலே நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்றது(மேலும்....).

கறுப்பின இளைஞனின் மரணத்திற்கு கிடைத்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த மக்கள்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. தற்பாதுகாப்பு கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர்ஜ் சிம்மர்மேன் தெரிவித்தார். ஜோர்ஜ் சிம்மர்மேனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை விடுதலை செய்தது. இதனையடுத்து தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ட்ரேவோன் மார்ட்டினின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். நிவ்யோர்க் நகரில் சிறிய அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் பெரும் போராட்டமாக மாறியது. இதனிடையே, மக்களை அமைதிகாக்குமாறு ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை விடுத்திருந்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளான சமூகப் பணியாளர் ஜோர்ஜ் ஸிம்மர்மேன் மீது சிவில் வழக்கு தொடர முடியுமா என்று ஆராய்ந்துவருவதாக அமெரிக்க நீதி விவகாரங்களுக்கான துறை கூறியுள்ளது. அமெரிக்க பிரபலங்கள் பலரும் இத்தீர்ப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் இன்றைய வீரமக்கள் தின (மூன்றாவது நாள்) செயற்பாடுகள்..
இன்றையதினம் புளொட் முன்னாள் உபதலைவர் மாணிக்கதாசன் உட்பட மரணித்த கழக தோழர்கள், மற்றும் அனைத்து இயக்க முக்கியஸ்தர்கள், ஆகியோருக்கு புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் நினைவு கூறப்பட்டதுடன், இன்றுமாலை 6.00மனியளவில் வவுனியா இறம்பைக்குளம் இராணி மில் அருகில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளாராகவும், வவுனியா இராணுவ பொறுப்பாளாராகவும் இருந்த ச.சண்முகநாதன் (தோழர் வசந்தன்)அவர்களின் நினைவுத் தூபிக்கு கழக முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களினால் நினைவுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நாளையதினம் வவுனியாவில் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புளொட் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.
தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட்.

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் மோதல்

சிரிய அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீனப் படை மற்றும் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராளிகளுக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிரிய சுயாதீனப் படையின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் சிரியாவின் அலப்போ நகரின் பஸ்டான் அல் கஸிர் பகுதியில் இருக்கும் சோதனைச் சாவடியை கைப்பற்றுவதற்கு சிரிய சுயாதீனப்படையும் அல் கொய்தா போராளிகளும் கடந்த சனிக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர். சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரச படைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் மேற்கு மற்றும் அரபு நாடுகளின் ஆதரவை பெற்ற சிரிய சுயாதீனப் படையின் தலைமைகள் மேற்படி அல்கொய்தா பிரிவை தமது எதிரியாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளது. “அரச படைக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் உதவுவதாக இருந்தால் வரவேற்க முடியும். ஆனால் அவர்கள் சிரியாவை மற்றொரு அப்கானிஸ்தானாக்க முயன்றால் நாம் தேவைப்படும் நடவடிக்கையை எடுப்போம்” என்று சிரிய சுயாதீனப் படையின் உயர் மட்ட இராணுவ கவுன்ஸில் உறுப்பினர் கொலனல் ரஹ்மான் சுவைஸ் குறிப்பிட்டார்.

ஆடி 15, 2013

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டத்திலேயே ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் 5 பங்காளிக் கட்சிகளும் ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் ஏனைய பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரனையா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவையா முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் நீண்ட நாட்களாக விவாதங்கள் நடந்து வந்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு கொழும்பு வாழ் அங்கி அணியும் யாழ்ப்பாண மேட்டுக்குடி மகன் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் ஓர் சேர் பொன்னம்பலம், அருணாசலம் காலத்து அரசியல் சுழர்ச்சிக்குள் சிக்கியுள்ளது தமிழர்களின் தலை விதி -  சாகரன்

விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்- மனோ

"இலங்கை தீவின் வடக்கிலும்  கிழக்கிலும் தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும் ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும் வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்.  இந்த இரண்டு வழித்தடங்களையும் எதிர்கால முதல்வர் சமமாக பாவித்து முன்னெடுக்க வாழ்த்துகின்றேன்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன். (மேலும்....)

மு.கா தனித்து போட்டி?

வடக்கு,மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தனித்து போட்டியிடுவதே கட்சியிலுள்ள பெரும்பாலானோரின் அபிபிராயமாக இருப்பதாக அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார். இது தொடர்பில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அரசியல் உயர்பீடத்திற்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்றிரவு இடம்பெறவிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பணச் சடங்கு சீசன் ஆரம்பம்! கூடவே ஆட்கடத்தலும்! 

கனடாவில் புலியை நம்பி மோட்கேஜ் எடுத்த ஆட்கள் பலர் இன்று பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உண்டியல் தூக்கி கடனடடைக்கலாம் என்று இருந்த பல உண்டியல் புலிகளின் வாயில் பிரபாகரன் வெள்ளைக் கொடி காட்டிக் கோவணத்துடன் பரலோகம் போனதனால் மண் விழுந்துள்ளது. ஆட்கடத்தல் அல்லது எந்த மோசடியும் செய்து பணம் திரட்ட பலர் புறப்பட்டுள்ளனர். கிரடிட் காட் மோசடிகளில் பிடிபட்ட பலர் "ஈழத்தமிழர்கள்" என்றும் தெரிய வந்துள்ளது. வன்னி மக்களுக்கு என்றும் சில போக்கிரிகள் பணம் சுருட்டப் புறப்பட்டுள்ளனர். வன்னியில் எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புகிறார்கள் என்று கேட்டால் சொல்ல முடியாதாம். வேலையும்,கூலியும் இல்லாமல் ஆடம்பர வாழ்வு வாழலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாமே 2009 உடன் முடிவுக்கு வந்துள்ளது. (மேலும்.......)

வடக்கு மாகாண சபை தலைவர் பதவிக்கு திரு.சம்பந்தர் அவர்களும் திரு. ஆனந்தசங்கரி அவர்களும் பொருத்தமானவர்கள்.

'இந்திய-இலங்கை' ஒப்பந்தமானது ஒரு பொறி(Trap) என்று கூறி, 13வது திருத்தச் சட்டம் தமிழருக்கு எதுவும் தரப்போவதில்லை என்றும்,13 10 10 என்றும், அதற்கும் மேலாக ஒரு ஒப்பந்தத்தினை நாங்கள் ஜனாதிபதி ராஜபக்சேயுடன் கையெழுத்திட இருக்கிறோம் என்று கூறிவிட்டு, இன்றோ வடக்கு மாகாண அரசில் முதலமைச்சர் பதவியை அடைய அனைத்து காய்களையும் நகர்த்தி வருகிறார் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள். 'இந்திய-இலங்கை' ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றதுதான் இந்த மாகாண அரசு. இதை ஓர் பொறி(Trap) என்று கூறி வந்த சேனாதிராஜா அவர்கள், அந்தப் பொறியினால் உருவான மாகாண அரசுக்குத் தலைமை அமைச்சர் ஆவதற்கு கடந்த ஒரு வருட காலமாக தமிழரசுக் கட்சி அங்கத்தினரை தனக்கே ஆதரவளிக்குமாறு பெரு முயற்சி மேற்கொண்டு வந்தார்.(மேலும்.......)

வவுனியாவில் இன்றைய தினம் புளொட் அமைப்பினரால் 24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பினரால்) வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவு நூலகத்தில்  24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவப்படத்துக்கு இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பிரதேச சபைத் தலைவர் திரு.சிவலிங்கம் அவர்களினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. (மேலும்.......)

வவுனியாவில் இன்றும் "வீரமக்கள் தின" விழா புளொட் அமைப்பால் நினைவு கூறப்பட்டது..  

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம், நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கழகத்தின் மூவர்ண தோரணங்கள் கட்டப்பட்டது.  அத்துடன் கழக அஞ்சலிச் சுவரொட்டி வவுனியா நகர், சிதம்பரபுரம், கல்லாண்டகுலம், பெரியகோமரசன்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், சமளங்குளம், கோவில்புதுக்குளம், கோவில்குளம், தெக்கிலுப்பைக்குலம், வெளிக்குளம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, தவசிக்குளம், குருமன்காடு, திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட வவுனியாவின் பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றது. இதேவேளை வவுனியா நகர், கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்குக்கு அருகாமையில் வவுனியா நகரசபையால் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் புளொட் ஆதரவாளர்களினால் வீரமக்கள் தின அஞ்சலிச் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டு இருக்கும் போது சற்று முன்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸாரினால் புளொட் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு, அவர்கள் வசம் இருந்த அஞ்சலிச் சுவரொட்டிகளும் பறித்துச் செல்லப் பட்டுள்ளது. இதுகுறித்து புளொட் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தகவல்... ஊடகப்பிரிவு -புளொட்.

ஆடி 13, 2013

தமிழ்க்கட்சிகள் இரண்டு ஐ.ம.சு.முவில் போட்டி

வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் கட்சிகள் இரண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சிறி ரெலோ ஆகிய இரண்டு கட்சிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் தயா மாஸ்டர் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி-சம்பந்தன் திடீர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்து வைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். பிரிக்கப்படாத, ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சாத்தியப்படக் கூடியதுமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்கு கூட்டமைப்பு தயாராக இருப்பதாக சம்பந்தன், ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல், இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல், இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அரசுக்கு இது தேவையா?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்தாகக் கூறினார்கள். வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதில் சில பகுதிகளை இல்லாதொழிப்பதாகக் கூறினார்கள். இப்போது எதுவுமே இல்லாமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்திய நெருக்குதலினாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்பதை உலகமே கண்டுகொண்டது. இது தேவையா? மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உருமய போன்ற கட்சிகள் மாகாணசபை முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்த போதிலும் ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிக அண்மைக் காலத்தில் இருந்தே அந்த கோரிக்கையை விடுத்து வருகிறது. மாகாணசபை முறை 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அக்கட்சியும் அம்முறையை எதிர்த்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பு மங்கிப்போயிருந்தது. (மேலும்.......)

ஆடி 12, 2013

ஆடி 11, 2013

13 வது திருத்தம் பற்றி.......

(புரட்டாசி 2009 ல் வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. இன்றைய தேவை கருதி இக்கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)
(13 வது திருத்தம், அரசியல் தீர்வு, தோழர் வரதராஜபெருமாள் .)

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைக்கான அதிகாரங்களை அளிப்பதில் திருப்தியற்ற ஒன்று என்று 20 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை அரசுடன் அரசியல் ரீதியில் போராடி அந்த 13வது திருத்தத்துக்கு மாற்றாக பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பொறுப்பாளியான இந்திய அரசுக்கும் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் முன்வைத்தீர்;;கள். அத்துடன் மாகாணசபையின் உத்தியோக பூர்வமான தீர்மானமாக இலங்கை அரசுக்கும் முன் வைத்தீர்கள். ஆனால். இப்போது அதே 13வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றினால் தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்படும் என்று தமிழர்களில் ஒரு பகுதியினராலேயே கூறப்படுகிறதே! இவைகள் பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன? இவ்வாறான போக்குகள் தொடர்பான உங்கள் விளக்கம் என்ன? (மேலும்.......)

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி

வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன். ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது.

வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை - விமல்

வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. பிரிவினைவாதத்துக்கு ஏதுவான சரத்துக்களை 13ஆவது திருத்தத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றே கூறினேன். அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார். வடக்குத் தேர்தல்கள் நடைபெற்றால் பதவி விலகுவேன் என்று ஒருபோதும் கூறவில்லை; 13ஆம் திருத்தத்தினூடாக பிரிவினை வாதத்துக்கு துணைபோகும் சரத்துக்களை நீக்குமாறே கோரியிருந்தேன். இது தொடர்பில் தற்போது அமையப்பெற்றுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த சரத்துக்களை நீக்குவது தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் கூறினார். அமைச்சர் விமல் வீரவங்சவின் பதில்களுக்கு மத்தியிலும் சஜித் பிரேமதாச எம்.பி. தொடர்ச்சியாக இக்கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தார். இதனால் இருவருக்குமிடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்

ஜுலை 25 முதல் ஆகஸ்ட் 01 வரை வேட்புமனு

வட மாகாண சபை மற்றும் வட மேல், மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் ஜுலை 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஜுலை 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேற்படி மூன்று மாகாணங்களிலுமுள்ள மாவட்டச் செயலகங்களில் அமைக்கப்படும் வேட்புமனு கையேற்பு நிலையங்களில் வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறும். வேட்பு மனுத் தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஜுலை 31 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். வேட்பு மனுத் தாக்கல் முடிவு திகதியான ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முந்திய தினமான ஜுலை 31 ஆம் திகதி நண்பகலே கட்டுப்பணம் ஏற்பதற்கான இறுதி நேரமாகும்.

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஓரிரு தினங்களில் உறுதியான முடிவு - சம்பந்தன்

வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓரிரு தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏகோபித்த முடிவாகவே அது அமையும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சர்ச்சை நிலவிவருகின்றது. கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று ஒரு தரப்பும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டுமென்று மறுதரப்பும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும். இன்று மாலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம் பெறவுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான முடிவு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏகோபித்த கருத்துக்களை உள்ளடக்கியதாகவே அமையும். கூட்டுக்கட்சிகளுடன் கலந்து பேசி கூட்டு முயற்சியாக நல்லதொரு முடிவு எடுக்கப்படும்.

வடக்கில் பயங்கரவாத நடவடிக்கை: பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடுகள்

வடக்கில் கடந்த கால யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக உயிரிழந்த, காயமடைந்த, சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபை தெரிவிக்கிறது. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஆலோசனைக்கமைய இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நஷ்டஈட்டுக்கொடுப்பனவுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் வைத்து வழங்கப்படவு ள்ளது. இது சம்பந்தமான அறிவித்தல் மாவட்ட செயலகங்களுக்கு ஊடாக வட மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. யாழ். மாவட்டத்தில் இந்தக் கொடுப்பனவை பெறுபவர்களு க்கான அறிவித்தல்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம அலுவலர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. நஷ்டஈட்டைப் பெறுபவர்களை யாழ். செயலக புனர்வாழ்வுப் பிரிவு கொழும்புக்கு அழைத்து செல்கிறது.

தமிழகத்திலிருந்து ஆஸி. செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் கைது

தமிழ் நாட்டிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரை தமிழக பொலிஸார் கைது செய்தனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர் உட்பட இரண்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் ஊத்துக்காட்டில் சந்தேகப்படும் படியாக சிலர் கடந்த 2 நாட்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் விசாரணை நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதி முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் இவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது. விசாரணையின் போது இவர்கள் மதுரை ஆணையூர் அகதிகள் முகாம் சுப்ரமணிய அகதிமுகாம் மற்றும் கும்மியடிப்புண்டி அகதி முகாம்களைச் சேர்ந்தோர் என தெரியவந்தது. அவர்கள் சென்னை அல்லது கடலூரில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தமை தெரியவந்தது.

இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?

(டி.அருள் எழிலன்)

இளவரசனின் மரணம் தற்கொலையோ... கொலையோ... ஆனால், அவரது மரணத்துக்கு ரயில் மட்டுமே காரணம் அல்ல. மீண்டும் மீண்டும் அவர்களைத் துரத்தி, எங்குமே அவர்களை வாழவிடாமல் செய்து, சூழ்ச்சியாகத் திட்டமிட்டு திவ்யாவைக் கரைத்துப் பிரித்து, 'இளவரசன் வேண்டாம்’ என திவ்யாவின் வாயாலேயே சொல்லவைத்து... இவற்றுக்கு எல்லாம் யார் யார் காரணமோ, அவர்கள்தான் இளவரசன் மரணத்துக்கும் காரணமானவர்கள். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்; அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். திவ்யாவை 'இளவசரனின் காதலி’ எனப் பலரும் குறிப்பிட்டாலும், அவர் இளவரசனின் மனைவி. நத்தம் காலனியின் மருமகள். இளவரசனுடன் இணைந்து இல்லறம் நடத்தியவர். ஆயிரம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இளவரசனை விட்டு விலகிவிடக் கூடாது என ஆரம்பத்தில் அவர் காட்டிய மன உறுதி, மகத்தானது. அந்தத் துணிவுதான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஊர் ஊராக ஓடி வாழும் தைரியத் தைத் தந்தது. ஆனால், அந்த மன உறுதி சற்றே பலவீனப்பட்ட தருணம்தான் அவர் வீழ்ந்த இடமும்.(மேலும்.......)

ஆடி 10, 2013

வட மாகாண சபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நாளை

வட மாகாண சபை தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடுவார் என்று தேர்தல் திணைக்கள தகவல்கள் உறுதிபடுத்தின. கடந்த வெள்ளிக்கிழமை வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் கட்டளையை தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கி ஒரு வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் விடுக்கவேண்டும் என்பதற்கு அமைய நாளை 11 ஆம் திகதி வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. முதலில் வட மாகாண சபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை அல்லது 28 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் இதே தினத்தில் நடைபெறும் என்றும் தெரியவருகின்றது. இந்த இரண்டு மாகாண சபைகளும் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சகோரதப் படுகொலை - (பகுதி 2)

புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும. - இந்திய இராணுவத்திற்கும் இடையேயான யுத்த காலங்களில் புலிகளின் சகோதரப் படுகொலை மாற்றுக் கருத்தாளர்கள் மீது வகைதொகையில்லாது நடைபெற்றது. இலங்கை அரசு மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட கொலைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இவை நடைபெற்றன. கூடவே புலிகளின் வதை முகாங்கள் இலங்கை இராணுவத்தின் வதை முகாங்களை மிஞ்சுவையாக அமைந்திருந்தன. இதனை பலர் மறைத்தும், மறுத்தும் வருகின்ற நிலமையில் இவற்றை வெளிக் கொணரும் பல முயற்சிகளில் இவ் காணொளிப் பதிவும் ஒன்றாகும். இன்று புலிகளில் செயற்பட்ட பலரும் அதனிடத்திருந்து விலத்தி செயற்படுகின்றபோதும் சிறப்பாக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்ற போதும் தாம் கடந்த காலங்களில் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலங்களில் செய்த சகோரப் படுகொலைகளையும் ஏனைய முஸ்லீம், சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீதான் படுகொலைகள் பற்றி வாய்திறப்பது இல்லை. வதை முகாங்களின் சித்திரவதையில் தங்களின் பங்களிப்பு பற்றி காட்டிக் கொள்வது இல்லை. தாம் புனிதர்கள் போல் செயற்படுகின்றனர். ஆனால் செய்த தாம் தவறுகளுக்கான தார்மீகப் பொறுப்புக்களை இவர்கள் மக்கள் மன்றங்களில் ஏற்று சுயவிமரசனத்துடன் கூடிய திருந்தலின் பின்பே இவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தளத்தில் செயற்பட முடியும். இதற்கான ஒரு அம்பலப்படுத்தலாக இவ் காணொளி அமைவது சிறப்பான விடயம் ஆகும். இனி காணொளியை பாருங்கள்.... (காணொளி பகுதி 2)

வீரமக்கள் தின நினைவுக் கருத்து

அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் 13 வதை தாண்டி செல்லவில்லை. -  தோழர் சுகு- ஸ்ரீதரன்

மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவு கூர்வது சீரிய பண்பாடு. அது இன்றைய எமது வரலாற்றுச் சூழலில் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களையெல்லாம் மற்நது விடுவோம். அந்தச் சுவடே தேவையில்லை என்று ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அது மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு பெறாத எந்த தியாகமும் செய்யாத கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்கள் பேரழிவுகளையும் அவலங்களையும் சந்தித்த போது சம்பந்தமில்லாமல் இருந்து விட்டு இப்போது தமிழ் மக்கள் மீது அதிகாரம் செலுத்த புறப்பட்டிருக்கிறது. (மேலும்.......)

கிருஷ்ணமூர்த்தியின் “மறுவளம்“

கிருஷ்ணமூர்த்தியின் “மறுவளம்“ நூலுக்கான அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடந்தது. நூலின் பிரதியை கரைச்சிப் பிரதேச செயலர் திரு. நாகேஸ்வரன் மக்கள் வங்கியின் முகாமையாளர் திரு. கந்தசாமி பெற்றுக்கொண்டார். உடன் நிற்பவர்கள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிளிப்பார் திரு. க. முருகவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி.

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் FETNA 2013  26வது நிகழ்வுகளின் தொகுப்பு

கடந்த வாரம் கனடா டொரோண்டோ மாநகரில் முதன் முறையாக  நடந்த வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் FETNA 2013  26வது நிகழ்வுகள் கனாடிய தமிழர் பேரவையினரால் நடந்தேறியது அதன் நிகழ்வு பற்றிய சில கருத்துக்கள் கடந்த ஜூலை 5ஆம் திகதி வெள்ளிகிழமை காலை தொடக்கம் இரவு வரையும் ஜூலை 6ஆம் திகதி சனிக்கிழமையும் காலை முதல் இரவு வரையும் ஜூலை 7ஆம் திகதி ஞாயிறு அதே போன்று முடிவடைந்தது இவ் நிகழ்சிகள் கணிசமான அளவு அமெரிக்காவில்லுள்ள சில மாநிலங்களில் வாழ் இந்திய தமிழர்கள் சில இலங்கை தமிழர்களும் பங்கு பற்றினர்..நிகழ்ச்சிகள் ஒரு சில நன்றாக அமைந்தன எதிர் பார்த்த அளவிற்கு நிகழ்ச்சிகள் இல்லை   நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட  தமிழ் நாட்டிலிருந்து  தமிழருவி மணியன் இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலங்கை முன்னால் நீதிபதி விக்னேஸ்வரன் பிபிசி செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் ஹரிசன்  போன்றவர்கள் வருவதாக இருந்தபோதிலும்  கலந்து கொள்ளவில்லை. (மேலும்.......)

சம்பந்தனால் மட்டுமே தீர்வு - தயா மாஸ்டர்

இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் இன்று தெரிவித்தார். 'மூத்த தமிழ் அரசியல்வாதியும், அரசியல் அநுபவமிக்கவரும், பல்வேறுபட்ட அரசியல் ஒப்பந்தங்களின் போது, உடனிருந்தவர் என்ற வகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்லில் வெற்றி பெற்றால், இணங்கிய அரசியலில் ஈடுபட போவதாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன், போராளிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளதாகவும்' அவர் கூறினார். அத்துடன், 'எமது சக்திக்கு அப்பால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் உரிமைகள் உட்பட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேவேளை, 13ஆவது திருத்தத்தில் மாற்றம் வரப்போவதில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.  'விடுதலைப் புலிகளின் தனிநாடு கோரிக்கை எப்போதும் சாத்தியப் படப்போவதில்லை. அது அழிந்து விட்டதென்றும், இணக்க அரசியல் நடத்தப் போவதில்லை, இணங்கிய அரசியல் நடத்தப் போவதாக' அவர் மேலும் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவே சிறந்தது

மேனனிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அதிகாரங்களை ஏனைய மாகாணங்களுக்கும் வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பங்குபற்றுவது முக்கியமானதாகும். 13 ஆவது திருத்தத்தை சகலரும் ஏற்றுக்கொள்வதென்றால் இந்த தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்தவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப்போன்ற சிறிய நாடொன்றில் மாகாண நிறுவனங்களுக்கிடையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒப்படைக்கின்றபோது தோன்றுகின்ற நடைமுறைச் சிக்கல்களை மேனனுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி தீர்வானது நடைமுறைப்படுத்துகின்ற வகையில் நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பொருத்தமானதாகவும் உடன்படக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டுமென்பதை தெரிவித்தார்.

பின்லாடனின் தலைமறைவு வாழ்க்கையை அம்பலப்படுத்தும் பாக். அரச அறிக்கை கசிவு

பாகிஸ்தான் உளவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அலட்சியப் போக்கால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் கடந்த ஒரு தசாப்தமாக வாழ முடிந்திருப்பதாக வெளியுலகுக்கு கசிந்த அந்நாட்டு அரச அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஊடுருவியுள்ள ஒசாமா பின்லாடன் 2011 ல் அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரையில் பாகிஸ்தானில் இருந்துள்ளார்.  பின்லாடன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசினால் அமைக்கப்பட்ட அபோதாபாத் ஆணைக்குழுவின் அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அபோதாபாத் அறிக்கை தொடர்பில் பாக். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த அறிக்கையை கட்டாரை மையமாகக் கொண்டு செயற்படும் அல் ஜுரா தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. (மேலும்.......)

ஆடி 09, 2013

13 குறித்து இந்தியாவின் கொள்கையில் மாற்றமில்லை  - சிவ்சங்கர் மேனன்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் உட்பட இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடுகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுவந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நேற்று திங்கட்கிழமை மாலை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின்னரை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரக் குறைப்புகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்காது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் நிரந்தர பாதுகாவலனாக இந்தியா தொடர்ந்தும் இருக்க வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்ததன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி உட்பட கூட்டமைப்பின் முக்கிய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

புலிகளின் சகோரதப் படுகொலை - (பகுதி 1)

புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும. - இந்திய இராணுவத்திற்கும் இடையேயான யுத்த காலங்களில் புலிகளின் சகோதரப் படுகொலை மாற்றுக் கருத்தாளர்கள் மீது வகைதொகையில்லாது நடைபெற்றது. இலங்கை அரசு மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட கொலைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இவை நடைபெற்றன. கூடவே புலிகளின் வதை முகாங்கள் இலங்கை இராணுவத்தின் வதை முகாங்களை மிஞ்சுவையாக அமைந்திருந்தன. இதனை பலர் மறைத்தும், மறுத்தும் வருகின்ற நிலமையில் இவற்றை வெளிக் கொணரும் பல முயற்சிகளில் இவ் காணொளிப் பதிவும் ஒன்றாகும். இன்று புலிகளில் செயற்பட்ட பலரும் அதனிடத்திருந்து விலத்தி செயற்படுகின்றபோதும் சிறப்பாக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்ற போதும் தாம் கடந்த காலங்களில் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலங்களில் செய்த சகோரப் படுகொலைகளையும் ஏனைய முஸ்லீம், சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீதான் படுகொலைகள் பற்றி வாய்திறப்பது இல்லை. வதை முகாங்களின் சித்திரவதையில் தங்களின் பங்களிப்பு பற்றி காட்டிக் கொள்வது இல்லை. தாம் புனிதர்கள் போல் செயற்படுகின்றனர். ஆனால் செய்த தாம் தவறுகளுக்கான தார்மீகப் பொறுப்புக்களை இவர்கள் மக்கள் மன்றங்களில் ஏற்று சுயவிமரசனத்துடன் கூடிய திருந்தலின் பின்பே இவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தளத்தில் செயற்பட முடியும். இதற்கான ஒரு அம்பலப்படுத்தலாக இவ் காணொளி அமைவது சிறப்பான விடயம் ஆகும். இனி காணொளியை பாருங்கள்.... (காணொளி பகுதி 1)

13 வதும் தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகளும்

(சுகு-ஸ்ரீதரன்)

13 வது திருத்த சட்டத்தின் காணி ,பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் இனவாத பிரச்சாரங்களுக்கெதிராக இடதுசாரிகளும் தெற்கின் ஜனநாயக சத்திகளும் உறுதியாக குரல் கொடுப்பது சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான நல்ல தருணமாகும் .திட்டவட்டமாக நறுக்கு தெறித்தாற்போல் விடயங்களைச் சொல்வது தமிழர் தரப்பில் அரிதாகவே காணப்படுகிறது. 13 வதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதில் தமிழர்தரப்பில் ஒரு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியல் யாப்பில் அங்கமாகி விட்ட  13 வதை இல்லாதொழிப்பதற்கான போராட்டம் பேரினவாதிகளால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தாலும் தமிழர் தரப்பில் 13 வதற்கு ஆதரவான உறுதியான குரல் வெளிப்படுத்தப்படவில்லை. (மேலும்.......)

ஒரு புலி இன்னொரு புலியைக் கேள்வி கேட்கின்றது.....?

தயா மாஸ்டர் போட்டியிடுவதை த.தே.கூ. விரும்பவில்லை - அப்பாத்துரை விநாயகமூர்த்தி

'வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுவதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். "வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளை களத்தில் இறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தேர்தலில் தயா மாஸ்டர் மற்றும் தமிழினி ஆகியோரின் வெற்றி வாய்ப்புக்கள் நூற்றுக்கு பூச்சியமாக அமையும்.  மக்களுக்காக போராடியவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். ஆனால், மக்களுக்காக இவர்களை எதனை சாதித்தார்கள்? என்று கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.  கடந்த முறை எதிர்கட்சித் தலைவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது தயா மாஸ்டரைச் சந்திக்க விரும்பினார். அவரைத் தொடர்புகொண்டு நான் இந்த விருப்பம் தொடர்பில் தெரிவித்தேன். இருப்பினும், ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க அவர் விரும்பவில்லை. ஆனால், வரணிப் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என அறிந்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்று நான் தெரிவித்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இவரை போட்டியிட வைப்பதை விரும்பவில்லை.

சிவசங்கர் மேனன்-ஜனாதிபதி இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது. இலங்கையில் நேற்று விஜயம் செய்த சிவசங்கர் மேனன் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல பிரநிதிகளை சந்தித்து சிவசங்கர் மேனன் பேச்சு நடத்தவுள்ளார் என்பதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுமாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் போது அவர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட இவர், வெளிவிவகார அமைச்சின் அழைப்பினை ஏற்றே இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தெரிவுக்குழுவின் கன்னிக்கூட்டம் இன்று

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு, முதல் தடவையாக இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதென அக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான அங்கத்தவர்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அங்கத்தவர்களை இதுவரையிலும் தெரிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு 19 உறுப்பினர்களை நியமித்துள்ளது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவமுள்ள எதிர்க்கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்த்தரப்பினர் தமது பிரதிநிதிகளை நியமிக்காதுவிடினும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது செயற்பாட்டை முன்னெடுத்து குறித்த கால எல்லைக்குள் பரிந்துரைகளை செய்யவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் தமிழீழம் சோஷலிஸம் போன்ற லட்சியங்களுக்கு அர்த்தம் உண்டா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

(புலி உறுப்பினர்களின் நடவடிக்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு பொத்தாம் பொதுவில் எல்லோரும் அப்படியே என்று கூற முனைவதும் நிறுவ முனைவதும் இக்கட்டுரையின் அபத்தம் ஆகும்.)

பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அநாவசியமானவை என்றும் விலைவாசி மற்றும் மின்சார கட்டன உயர்வு போன்ற விடயங்களை மறக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவற்றை சர்ச்சையாக்கி  இருப்பதாகவும் எதிக்கட்சிகள் பல கருதுகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விடயங்களை சர்ச்சையாக்கியது என்று திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் இறுதி விளைவாக நடந்திருப்பது அது தான். ஆனால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை மேலும் பரவலாக்குவதை அரசாங்கத்தின் சில தலைவர்கள் விரும்பாததினாலேயே அது 13ஆவது அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் கை வைத்துள்ளது என தமிழ் தலைவர்கள் கருதுகிறார்கள். அதுவும் உண்மை தான். (மேலும்.......)

ஆடி 08, 2013

கிழக்கு மாகாணசபையை முகாவுடன் இணைந்து ததேகூ கைப்பற்றும் - செல்வம்

கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற மாபெரும் சக்திக்கு வித்திட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள். அவர் இக்கூட்டமைப்பு வலுப் பெறுவதற்கு அயராது உழைத்தவர். 5 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இக்கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மக்களை தேசிய ரீதியாக பலப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமைதான் அவசியம்.

புலிகள் மகிந்தரைச் சுட முன்னர் என்னைச் சுட இருந்தார்கள் ! - இரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகள் மகிந்தரை சுட முன்னர் தன்னையே சுட விரும்பியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். நாம் எப்போதும் தனி நாடுவேண்டும் என்று கோரவில்லை. காந்திய வழியில் போராடி வருகிறோம். புலிகளின் பட்டியலில் நான் இருந்தேன். அவர்கள் மகிந்தரைக் கொல்லவேண்டும் என்று நினைப்பதற்கு முன்னதாக, என்னைக் கொல்லவேண்டும் என்று நினைத்திருந்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமை இரா.சம்பந்தரை பல தடவை வன்னிக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது யாவரும் அறிந்த விடையம். அதன் பின்னர் புலிகளின் முயற்சியால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியே உருவாகியது.
(மேலும்.......)

புத்தகயா அருகே அடுத்தடுத்து

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயா மாவட்டத்திலுள்ள மகாபோதி பெளத்த வழிபாட்டுத்தலம் அருகே வெவ்வேறு இடங் களில் 9 குண்டுகள் தொடராக வெடித்தன. கோயிலுக்குள் ஐந்து குண்டுகளும், கோயில் வளாகத்திற்குள் மூன்று குண்டுகளும் சுற்றுலா பயணிகள் பஸ்ஸ¤க்கு அடியே ஒரு குண்டும் வெடித்துள்ளது. இதே நேரம் வெடிக்காத நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மேலும் இரு குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பிக்குகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த இரு பிக்குகளும் திபெத், மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. அடுத்து சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 4 குண்டுகள் வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குண்டுகளால் மகாபோதிக்கு சேதம் ஏற்படவில்லை. 9 குண்டுகளுமே வீரியம் குறைந்த குண்டுகளாக இருந்ததினால் சேதங்கள் ஏற்படவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த தலத்தின் மேற்கு பகுதியில் புனித போதி மரம் (அரச மரம்) உள்ளது. அந்த அரச மரத்தடியில் தியானம் செய்த போது கெளதம புத்தர் ஞானம் பெற்றார். (மேலும்.......)

‘இராணுவ புரட்சி’

அறிவிக்க தயங்கும் அமெரிக்கா

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த இராணுவத்தின் செயலை, ஒரு இராணுவப் புரட்சியாக அறிவிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இந்நிகழ்வு இராணுவப் புரட்சி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு, எகிப்து இராணுவத்திற்கான உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதாலேயே அமெரிக்க நிர்வாகம் அந்த அறிவிப்பை வெளியிட தயக்கம் காட்டுகின்றது எனக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசியலமைப்பு இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளது. 1985 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, சட்டபூர்வமாகத் தேர்வான அரசை இராணுவம் கவிழ்க்கும் பட்சத்தில் குறித்த நாட்டுக்கான அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் ரத்துச் செய்யப்படும் என விபரிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இடம்பெற்ற இராணுவ சதி குறித்த அமெரிக்காவின் அறிவிப்பில், எகிப்து விரைவில் ஜனநாயக வழிக்கு திரும்ப வேண்டும் என்று மாத்திரமே அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

மாமல்லபுரத்தில் கண்ணாடி சுரங்கத்துடன் கடல்வாழ் உயிரின காட்சியகம்: ரூ 250 கோடி செலவில் அமைப்பு

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபா செலவில் உலகத்தரம் வாய்ந்த கடல் வாழ் உயிரின காட்சியகம் அமைக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகத்தின் கடற்கரை 1076 கி. மீ. நீளமுடையது. தமிழ்நாடு கடற்கரை வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் என்ற மூன்று கடல்களை கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும். தமிழக கடலில் கடல் வாழ் உரினங்கள், கடல் நீர் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. தமிழகம் பல்வகை மீன் இனங்கள், கடற் சுற்றுச் சூழல் மற்றும் உயிர்கோள காப்பக பகுதிகளை கொண்டுள்ளதால், இதனை பயன்படுத்தி கடல் வாழ் உயிரின காட்சியகம் ஒன்றினை இயற்கை சூழலில் உள்ளது போல் அமைத்திட முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடல் வாழ் உயிரினக் காட்சியகத்தில் கடல் வாழ் தாவரங்களும் விலங்கினங்களும் கடல் சூழலில் உள்ளது போன்று உயிருடன் காட்சிக்கு வைக்கப்படும். இது ஒரு கடல் போல் காட்சி அளிக்கும். இக்கடல் வாழ் உயிரினக் காட்சியகத்தில், பெரிய நீர்வாழ் பாலூட்டிகளான டொல்பின் கடற்பசு மற்றும் சுறா, கடல் அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ் மீன்கள், கடற்புற்கள், கடற்பாசிகள், பவளப் பாறைகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட வாழிடத்தில் காட்சியளிக்கும்.

ஆடி 07, 2013

வட மாகாண தேர்தலை புறக்கணிக்கக் கூடாது -  டியூ

வட மாகாண சபை தேர்தல் தமிழர்களுக்கு நல்ல சந்தர்ப்பம். அதை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்தார். கம்னியூஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "35 வருடங்களாக அடக்குமுறைகள், யுத்தங்கள் இடமபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்கள் இனவாதிகளும் அல்ல, சிங்கள மக்கள் இனவாதிகளுமல்ல. இரு சமூகத்திற்கு இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரே இனவாத்தினை தூண்டுகின்றனர். அந்த இனவாத்தினை விட்டு, சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள வட மாகாண சபை தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்காது ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக தமிழ் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்றும் அதனை புறக்கணிக்காது ஜனநாயக உரிமையினை வென்றெடுக்க வேண்டும். கடந்த 25 வருடங்களாக வாக்களிக்காத மக்களுக்கு தற்போது வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும்.தேர்தலின் போது, சரியானவர்களை தெரிவு செய்யாது. பின்னர் வருத்தப்படாதீர்கள் என்றும் தகைமையில்லாதவர்களை தவிர்த்து தகமையானவர்களை தெரிவு செய்த ஜனநாயக உரிமையினை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்றும், பல இனம் உள்ள இந்த நாட்டில், குறிப்பிட்ட சில இனத்தவர்களின் ஆதரவுடன், ஆட்சிக்கு வந்தவர்களினால், இனப்பிரச்சினையை தீர்த்து விட முடியாது. வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமாக ஏற்று உரிமையினை வென்றெடுக்க வேண்டும்" என்றார்.

புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின்

மறுவளம் (கட்டுரைகளும் விமர்சனங்களும் பதிவுகளும்)

நூல் அறிமுகம்

கரைச்சிப் பிரதேச செயலக மண்டபம் 08.07.2013 திங்கள் பி.ப 3.30 மணிக்கு திரு. கு.ரஜீவன் (கலாச்சார உத்தியோகத்தர், கரைச்சி) தலைமையில் நடைபெறுகிறது. நூல் மற்றும் படைப்பாளியைப் பற்றிய அறிமுகத்தை  திரு. க.முருகவேல் (வலயக்கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி) ஆற்றுகிறார். முதல் நூலினை வழங்குகிறார் திரு. கோ. நாகேஸ்வன் (பிரதேச செயலர் ) பெற்றுக்கொள்கிறார். திரு. இ. கந்தசாமி (முகாமையாளர், மக்கள் வங்கி, கிளிநொச்சி) விமர்சனவுரைகளை ஆற்றுகிறார்கள். திரு. பெ. கணேசன் (அதிபர், பாரதி வித்தியாலயம், கிளிநொச்சி) திரு. இயல்வாணன் (உதவிக் கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி வலயம்) - ஏற்புரை திரு.கிருஷ்ணமூர்த்தி - நன்றியுரை. திரு. சி. ரமேஸ்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் மாற்றம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை; கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை அமைப்பதென்று முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்த விடயத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு  ஒவ்வொரு கட்சிக்கும் தலா நால்வர்வீதம் இருபது பேரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளடக்கப்பட்டு அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் எண்ணிக்கையை மொத்தம் இருபத்தொருபேராக அதிகிரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது எதிர்வரும் 11ஆம் திகதி சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய பிரச்சனை என்னவென்றால் இதில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளுக்கு தமது கட்சியில் 4 பேரை தேடிப்படிப்பது முடியாத காரியமாக இருப்பதே....?

கூட்டமைப்பில் போட்டியிட்டது நான் செய்த முட்டாள் தனம் - ரெமிடியாஸ்

'தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்' என முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தமரணியுமான முடியப்பு றெமிறிடியாஸ் தெரிவித்துள்ளார். 'கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அன்றில் இருந்து யாழ்.மாநகர சபையில் உள்ள கூட்டமைப்பில் 8 மந்தைகளையும் மேய்பததில் நான் பெரும் பாடுபட்டு வந்தேன். மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. எதற்கெடுத்தாலும் அதனை எதிர்ப்பது தான் இவர்களின் வேலையாக போய்விட்டது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. எங்கள் பிரச்சனையை யாருடன் பேசித்தீர்க்க வேண்டும், யாருடன் கதைத்தால் அது முடியும் என்ற நிலையில் தான் இன்று கூட்டமைப்பின் அரசியல் போய்க் கொண்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்களிடம் என்ன விடயத்தினைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறார்கள் என்று எமக்குத் தெரியும். சர்வதேசம் எம்மோடு நிற்கிறது. மக்கள் ஆணைவழங்கி அதனை நிரூபிக்கவேண்டும் என்பதே இவர்களி பிரசாரப்பொருளாக இருக்கப்போகிறது.

மேனன் அடுத்த வாரம் வருகிறார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு தனது விஜயத்தை அடுத்தவாரம் மேற்கொள்ளவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு ஜூலை 7 ஆம் திகதி இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவிருந்தார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவில் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமையினால் மேனனின் விஜயம் அடுத்தவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவித்தன. இந்திய, இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான முத்தரப்பு கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கே அவர் கொழும்பிற்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்த இடமளியோம் இணக்கப்பாட்டு அரசியலினூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலட்சியத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி செயற்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக நாம் கடைப்பிடித்து வரும் இணக்க அரசியல் கோட்பாட்டின் மூலம் பல விடயங்களை சாதித்துள்ளோம். வடக்கிற்கு ஒரு மாகாணசபை தேவை என்ற எமது நீண்டகால கனவு நிறைவேற இருப்பது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம் என இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (மேலும்.......)

மும்மொழிகளிலும் தேசிய அடையாள அட்டை நவம்பரில் அறிமுகம்

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கவிருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார். தற்போதைய நவீன இயந்திரங்களின் உதவியுடன் அடையாள அட்டைகளை ஒரு மணித்தியாலயத்திற்குள் தங்களால் வெளியிட முடியுமென்றும் அவர் தெரிவித்தார். அடையாள அட்டையில் ஒருவருடைய பெயர் மாத்திரம் பதிவு செய்யப்படுவதுடன் அவர் செய்யும் தொழில் பற்றிய விபரம் சேர்க்கப்பட மாட்டாதென்றும் அவர் தெரிவித்தார். ஒருவருக்கு இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கோ ஒரே இலக்கத்தில் இரண்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதையோ முற்றாக தடை செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கைவிரல் அடையாளமும் அடையாள அட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதனால் ஒருவர் எங்காவது குற்றம் புரிந்திருந்தால் அவரை இலகுவில் இனங்காண்பதற்கு உதவியாக இருக்குமென்றும் ஆணையாளர் தெரிவித்தார். இனிமேல் தேசிய அடையாள அட்டை களை தயாரிப்பதற்கு ஒருவரது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் பிள்ளைகளின் விபரங்கள் போன்றவை சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் கைகலப்பில் முடிந்த கலப்பு திருமணம்

மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ். குருநகர் பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முஸ்லிம் இளைஞரும் கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளனர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்காத நிலையில், அவ்விருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர். முச்சக்கரவண்டி சாரதியான கணவருடன், குறித்த பெண் குருநகர், பாங்சால் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பல தடவைகள் அடித்து கொடுமை படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி 06, 2013

அதிகார பகிர்வை முழுமையாக அமுல்படுத்தவும் - இந்தியா

எவ்விதமான குறைப்புகளும் இன்றி அதிகார பகிர்வை முழுமையாக அமுல்படுத்தி அர்த்தமுள்ள அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன் வடக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுத்துள்ளதாக அமைச்சர் பசில் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். புதுடில்லி சென்றிருக்கின்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடமே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வரவேற்ற சல்மான் குர்ஷித், வடக்கு தேர்தல் அறிவிப்பை இந்தியா மதிப்பதாக தெரிவிப்பதுடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் வலியுறுதியுள்ளார்.  அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவும் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண தேர்தல்

யாழில் சு.க.வின் முதலாவது பிரசார கூட்டம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தனது முதலாவது பிரசார கூட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தியது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, மல்லாகம் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முக்கணியின் கட்சி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பிரசார கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தயா மாஸ்டர், சட்டத்தரணி றெமிடியஸ் உட்பட யாழ். மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் புத்தூர், சிறுபிட்டி, ஐந்துசந்தி பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 05, 2013

வட மாகாண தேர்தலுக்கு ஜனாதிபதி அனுமதி

வட மாகாண சபை தேர்லை நடத்துவதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

13 விவகாரம்

இந்தியா அதிருப்தி - நாராயணசாமி

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய இந்தியா அனுமதிக்காது. இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' என்று இந்திய பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 'மாகாண சபைகளை நிறுவுவதற்காகவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையையும் திருத்தச் சட்டத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது. இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது' என்றும் அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 'சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (பி.பி.சி)

மாவையை நிறுத்தாவிடின் தீக்குளிப்பேன் - சிறிகரன்

'இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்' என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய அனுபவமும் தூரநோக்குச் சிந்தனை, செயல்திறன், பேச்சாற்றல், கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாதவிடின் நான் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். என்ன இதன் மூலம் மகாணசபை தேர்தல் உறுப்பினராக நிறுதப்படுவதை நிஷாந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்…..?

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இவர்களை ஜுலை மாதம் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தாமதம் ஆனாலும் புலிகளால் தூண்டப்பட்ட அதிரடிப்படையினர் இவ் அப்பாவி மாணவர்களைக் கொன்றது எந்த வகையிலும் எற்புடையது அல்ல. காலம் தாமதம் ஆனாலும் நீதிதேவதையஜன் முன்பு இவர்கள் நிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

13 இல் அதிகாரங்கள் குறைப்பதை இந்தியாவுக்கு பசில் விளக்குவார்

13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விளக்குவார் என்று அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பங்காளியான இந்தியாவுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே அமைச்சர் பசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என்றும் அவர் சொன்னார். 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25 வருடங்களாக எந்தவொரு மாகாணசபையிலும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், எதிர்காலத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் அந்த மாகாண சபைகளுக்கு புதிதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் நன்றாக ஆராய்ந்திருப்பதாகவும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் மேலும் தெரிவித்தார்.

மத்திய, வடமேல் மாகாண சபைகள் இன்று கலைப்பு

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகள் இன்று நள்ளிரவு கலைக்கப்படவிருப்பதாக மாகாண ஆளுநர்கள் தினகரனுக்குத் தெரிவித்தனர். இந்த இரண்டு மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கடிதங்களை இரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், மாகாண ஆளுநர்களிடம் கையளித்திருப்பதைத்தொடர்ந்து இன்று இந்த மாகாண சபைகளைக் கலைக்கவுள்ளதாக ஆளுநர்கள் தெரிவித்தனர். இந்த மாகாண சபைகள் இரண்டும் நேற்று நள்ளிரவு கலைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் இன்றையதினமே அவை உத்தியோக பூர்வமாகக் கலைக்கப்படவிருப்பதாக மாகாண ஆளுநர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

இலங்கை தொடர்பான ஆவணப்படம் காண்பித்த மூவர் மலேசியாவில் கைது

இலங்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள்- கோலாலம்பூர், சிலாங்பூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும் ஏற்பாடு செய்திருந்தன. படத்தைத் திரையிட்ட 10 நிமிடங் களில் உள்துறை மற்றும் குடி வரவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணனியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர். ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள், பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

"அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்"

'கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 'மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சாரத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தமாக 600 கோடி ரூபா நிதியினை தற்போது பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவுள்ள ஜோன் செனவிரத்ன அக்காலத்தில் மின்சார சபை அமைச்சராகவிருந்த காலத்தில் ஒதுக்கீடு செய்திருந்தார்.(மேலும்.......)

தமிழகத்தை உலுக்கிய காதல் விவகாரம்: காதலன் தற்கொலை!

இந்தியாவின் தர்மபுரியில் கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் சடலம் நேற்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. அவர் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து பெரும் வன்முறை வெடித்தது. 3 கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை என்றும் அம்மா முடிவுப்படி தான் நடக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதனால் இளவரசன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூளை சிதறிய நிலையில் உடல் கிடந்தது. தண்டவாளம் அருகே இருந்த அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி 04, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பில் முக்கிய முடிவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், டெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரன், என்.சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், ராகவன், சிவநேசன் (பவன்) ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.  இச்சந்திப்பின்போது ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதென்றும், ஐந்துபேர் கொண்ட தேர்தல் நியமனக்குழு மற்றும் நிதிக்குழுவை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் சம்பந்தமான விடயங்களை இந்த ஒருங்கிணைப்புக் குழுவும் நியமனக் குழுவும் கலந்து ஆலோசிக்குமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரீசில் 23வது தியாகிகள் தின நிகழ்வு

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரான்ஸ் கிளை 23வது தியாகிகள் தின நிகழ்வை  கடந்த ஞயிறு 30 யூன் 2013 அன்று பரீசில் அனுஸ்டித்தது.  உன்னத இலட்சியங்களுக்காக மரணித்த தோழர்கள் போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து தோழர் கிருபன் தீபம் ஏற்ற  தோழர்கள்,  நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனஅஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
 ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆரம்பகால செயல்பாட்டாளரும் முகம் திரைப்பட இயக்குனரும் இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அருந்ததி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று  நிகழ்சிகளை நெறிப்படுத்தினார். தோழர் அருந்ததி தனது உரையில் 1990 வரை இலங்கையில் நடந்தது விடுதலைபோரட்டமல்ல அது இடதுசாரி சிந்தனை யாளர்களையும், புத்திஜீவிகளையும், எதிர்கருத்து கொண்டவர்களையும் அழித்து சர்வாதிகாரத்தை நிலைநாட்டுதலே.  இதில் பலியான  தோழர் பத்மநாபா போன்ற ஆளுமை மிக்க தலைவர்களின்  இழப்புக்களால் இரண்டு சகாப்த காலங்களாக தமிழ்சமூகம் அரசியல் தலைமை பண்பற்ற தலைவர்களின் வழிநடத்துதலினால் முள்ளிவாய்க்கல் வரை சென்று பாரியஇழப்புகளுக்கு மத்தியில்  இன்று தம் தலைவிதியை நினைத்து தாமே நொந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
(மேலும்.......)

தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் வட மாகாணத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவோம் - டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் மூன்றிலிருந்து ஐந்து வருடத்திற்குள் ஒரு குட்டி ஜப்பானாகவோ அல்லது குட்டி சிங்கப்பூராகவோ வட மாகாணத்தை மாற்றுவோம். இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் திறன் அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே. என். டக்ளஸ் தேவானந்தா கூறினார். காரைதீவு,பாலையடி, ஸ்ரீவாலவிக்னேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் அமைச்சர் டக்ளஸின் சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்.......)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வட மாகாணசபையின் போது பிரசாரத்திற்கு தலைமை - டக்ளஸ்

மாகாண சபைகளில் அங்கத்தவர் வெற்றிடம் ஏற்படுமிடத்து அந்த இடத்திற்கு வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதற்கு வழிசெய்யும்  வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பிக்கவுள்ளார். தற்போதுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் வேட்பாளர் பட்டியலிலுள்ள ஒருவரைக் கொண்டே வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். ஆயினும், விருப்புரிமை வரிசை நிலையில் அடுத்ததாக உள்ளவரையே நியமிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தனது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அல்லது ஐக்கிய மக்களி சுதந்திர முன்னணியின் சார்பில் வட மாகாணசபையின் போது பிரசாரத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பயணப் பிரச்சனை

முல்லைத்தீவு இளைஞர்கள் இருவரை பலியெடுக்க முயற்சி

முல்லைத்தீவைச்சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலியெடுப்பதற்காக மத்துகம பெலவத்த எனுமிடத்திற்கு அழைத்து கொண்டுசென்றபோது அவ்விருவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மீஹாதென்ன பொலிஸாரே இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பணயக்கைதிகளாக களுத்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பிவைக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய 16 இலட்சம் ரூபா கிடைக்கும் வரையில் அந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பயாகல பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 16 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுக்காவிடின் அவ்விருவரையும் கொலை செய்வதற்கு பாதாள உலக கோஷ்டியினருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலவச கல்விக்கு ஆதரவாக...

பல்கலைகழகங்களை அரசியல் மயப்படுத்துவதையும் இலவச கல்விக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதையும் கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்ப்பு பேரணியொன்று இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலுமுள்ள பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட இந்த எதிர்ப்பு பேரணி ஹைலெவல் வீதியில் ஆரம்பித்து வார்ட் பிளேஸிலுள்ள உயர் கல்வி அமைச்சிற்கு முன்னாள் நிறைவடைந்தது. இந்த எதிர்ப்பு பேரணியினால் கொழும்பில் இன்று மாலை வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில்

முற்றாக துண்டிக்கப்பட்ட கையை பொருத்தி சாதனை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த கையினை சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி இவ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர். இச் சத்திர சிகிச்சை சம்பவம் கடந்த வாரம் மேற் கொள்ளப்பட்டது. அறுவைச் சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான் சிறிசேன தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவு செய்தது. இது வரை காலமும் இப்பொது வைத்தியசாலைக்கு இவ்வாறான சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் கண்டி மற்றும் கொழும்பு போன்ற மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டே சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது சகல சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 03, 2013

13 ஐ பாதுகாப்போம் - ரணில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம், அதிகாரத்தை பகிர்வதற்காக கைகோர்ப்போம் என்ற தொனிப்பொருளில் கீழ் எதிர்க்ட்சிகளின் எதிர்ப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மகஜரில் கையொப்பமிடும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த போராட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றுமாலை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர். 1990 களில் இவர் தனது தலைவர் பிரேமதாஸவுடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்தபோது 13 வது திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் இவரின் வேஷம் எங்கு போய்விட்டது. சந்திரிகா அம்மையார் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை கொழுத்திய போது இவரின் அதிகாரப்பரவலாக்கம் எங்கேபோனது. இதற்கு த.தே. கூட்டமைப்பு அன்று சேர்ந்து 'சிஞ்... சா...' போட்டதை இன்று இவரின் சகா சம்மந்தர் பகிரங்கமாக ஒப்புக் கொள்வாரா...?

யாழ். நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் 70 வது ஆண்டு விழா

நேபாள முன்னாள் பிரதமர் விசேட உரை

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் எழுபதாவது ஆண்டு விழா எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் நேபாள முன்னாள் பிரதமர் மாதேவ்குமார் அவர்களின் விசேட உரை இடம் பெறுவதுடன் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூகுணசேகர, திஸ்ஸ விதாரண உட்பட மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள். இவர் முன்னாள் ஆயுதக் போராட்டக்குழுவின் தலைவர் மட்டும் அல்லாது ஒரு இடதுசாரியும் ஆவார்.

இலங்கையர் மூவர் பிரித்தானியாவில் கைது

பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள  கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த 3 பேரையும் பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றும் முகமாக குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு பிடியாணை

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி  கார்டிஃப் நகர மைதானத்தில் நடந்தபோது புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளார். புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயரப் பறக்கும் அமைச்சர் தேவானந்த

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று  செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களை பார்வையிட்டதுடன் மரமொன்றில் ஏறி பேரீச்சம் பழங்களையும் பறித்துள்ளார். இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கிலும் இது போன்ற பேரீச்சம் பழங்களை தனது அமைச்சினால் நடுவதற்கு ஆலோசனைகளை வழங்குமாறு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கேட்டுக்கொண்டார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே பேரீச்ச மரங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் மிரர்)

அமைச்சர் திஸ்ஸவிதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது - எஸ்.சிறிதரன்

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் அமைச்சர் திஸ்ஸவிதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா அணியின் செயலாளர் எஸ்.சிறிதரனும் தெரிவித்துள்ளனர். அமைச்சர் திஸ்ஸவிதாரணவை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியின் செயலாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தினை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை தடுப்பது குறித்து ஆராயப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் திஸ்ஸவிதாரண நானும் எமது கட்சியும் மற்றும் இடதுசாரி கட்சிகளும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதை தடுக்க தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான டி.யூ.குணசேகரவையும் புளொட் தலைவர் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா அணியின் செயலாளர் எஸ்.சிறிதரனும் கடந்த வியாழக்கிழமை சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Canadian facing U.S. terrorism charges pleads guilty to aiding Tamil Tigers

A Canadian engineering graduate from Waterloo, Ont., pleaded guilty in New York Tuesday to being part of a terrorist procurement cell securing sophisticated military technology for the Tamil Tigers, including submarine and warship design software, and laundering money. Suresh Sriskandarajah, 32, known by the nickname Waterloo Suresh, used students as couriers to smuggle prohibited items into Tiger-controlled territory in Sri Lanka. Between September, 2004, and April, 2006, he and several co-conspirators helped a Tiger procurement officer research and acquire aviation equipment, submarine and warship design software, night vision equipment and communications technology, prosecutors said. On Tuesday afternoon, in a near-empty courtroom in Brooklyn, Sriskandarajah admitted he provided support to the Tigers knowing it was designated as a terrorist group, saying he met his co-accuseds while visiting Sri Lanka. Sriskandarajah could face up to 15 years in prison but likely will be sentenced to far less, perhaps even to the time he has already served in custody pending trial after his arrest in Toronto in 2006.(more.....)

தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்

“மாற்றுக் கருத்தாளர்களை வகை தொகையில்லாமல் கொல்வது அல்லது கொல்வதற்கு உடந்தையாக இருத்தல் குற்றம் இல்லையெனில் இவர்கள் கற்றமற்றவர்ளே....?”

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப்பாளரும் ஆயுத கொள்வனவாளருமான 'கே.பி' என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளீர் பிரிவு முன்னாள்  பொறுப்பாளரான  'தமிழினி' என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் 'தயா மாஸ்டர்' என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளனர். வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (மேலும்.......)

சுரேஸ் இன் கனவு மாளிகை இடிகின்றதா.....?

'முதன்மை வேட்பாளருக்கு த.தே.கூ.வின் அங்கத்துவ கட்சிகளது அங்கீகாரம் தேவை' - சுரேஸ்

 'வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதாயின் அதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை பெறவேண்டும்;' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 'வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கீகாரம் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் யாழ். கிளை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.......)

போட்டியிடுவதா இல்லையா?

கூட்டமைப்பு தீர்மானிக்கவேண்டும் - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அதில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் முதலில் தீர்மானிக்கப்படும் அதற்கு பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.  இவ்வாறான நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே இவை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும். இந்நிலையில், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் கைது! - பொலிஸார் நடவடிக்கை

யாழ்.மத்திய பேருந்து நிலைய சூழலில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக பல இடங்களில் பலர் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிமாராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்கள் வடக்கிற்கும் வழங்கப்படுவதில் பிரச்சினை இல்லை - விமல் வீரவன்ச

மேல் மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்கள் வடக்கிற்கும் வழங்கப்படுவதில் எதுவித பிரச்சினையும் கிடையாது என நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். மேல்மாகாணத்தில் அனுபவிக்காத அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் வடக்கிற்கு வழங்குவது பிரிவினைக்கே வித்திடும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே மேல், வடமேல், மத்திய மாகாணங்களின் அதிகாரத்துக்குச் சமமான அதிகாரத்தை வடக்கில் அமு லாக்காமல் போனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவினைவாத ஓட்டை களால் நுழைந்து செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரிவினைவாத ஓட்டைகளை மூடிவிடாவிட்டால் அவை பெரிதாகி சமாதானத்துக்கும் அச்சுறுத்தலாகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப்பனையில் “ஜனசெவன” வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆடி 02, 2013

அதிகாரங்களை குறைத்தால் அரசிலிருந்து விலகுவேன் - வாசு

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படல் வேண்டுமென்று தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கோ இன்றேல் அதிலிருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ எடுக்கப்படும் முயற்சிகளை தான் முழுயாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாமல் 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் மாற்றியமைக்கப்பட்டு மாகாண சபை முறைமை ஒழிக்கப்படுமாயின் இந்த அரசிலிருந்து தான் விலகிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். நான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவன் என்பதுடன் இந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் தொடர்பில் பிரச்சினையொன்று இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி

சந்தேகநபர் சந்தியா குற்றத்தை ஏற்க தயாரென நீதிமன்றில் அறிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய சதி தீட்டியமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள செல்வகுமார் சத்யலீலா என்ற சந்தியா என்பவர் குற்றத்தை ஏற்க தயாராக இருப்பதாக சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கு விசாரணையில் அமைச்சரும் சாட்சியமளித்தார். குற்றம் சுமத்தப்பட்டவர் எனது நெருங் கிய ஆதரவாளராக இருந்தவர். அவரைப் பற்றி நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும். இருப்பினும் அவர் தண்டனை அனுபவிக்க கூடாதென்பதே தமது யோசனை என்றும் தெரிவித்தார். 2004 மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஜுலை 24 ஆம் திகதி வரை கொள்ளுப்பிட்டியில் தற்போது மரணித்துள்ள தியாகராஜா ஜயரானி என்பருடன் அமைச்சரைக் கொலைசெய்ய சதி தீட்டியமை, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஏக்கநாயக்க, சார்ஜன்ட் ஹெரல்ட் ஆட்டிகல, பந்து ஜயசிங்க ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை போன்றவை குற்றச் சாட்டுக்கள் ஆகும்.

எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை..

டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர் தான். (மேலும்.......)

“என் தலைவர் பிரபாகரன் என முழங்கினார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் TELO செல்வம் அடைக்கலநாதன்

வவுனியாவில் நடைபெற்ற பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் ‘என் தலைவர் பிரபாகரன் என முழங்கினார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்.. மக்கள் கரகோசம்!
இன்று வவுனியாவில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஸ் அணி) இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்திருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற நாமத்தோடு நாங்கள் அனைவரும் இன்று ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்பதற்கு அன்று எங்களை ஐக்கியம் எனும் தளத்தில் ஓரணியில் நிறுத்தியது ‘என் தலைவன் பிரபாகரன்’ தான் எனக் கூறிய போது, அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோசம் எழுப்பி தலைவர் மீதான தங்கள் பற்றுறுதியை வெளிப்படுத்தினர்.

அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் கோரவுள்ள வெளியுறவு அமைச்சு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன், இலங்கை வெளியுறவு அமைச்சினால் விளக்கம் கோரலுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை தொடர்பில் விளக்கம் கோரலுக்காகவே சிசன் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது, மிச்செல் சிசனிடம், குறித்த எச்சரிக்கை விடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள் வாய்மூலமாக, உடல் ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, வெளிநாட்டவர்கள் குறிப்பாக பெண்கள், இலங்கையின் ஏனைய பயணிகளுடன் பஸ்களில் பயணம் செய்யும்போது கவனமாகப் பயணிக்க வேண்டுமென அமெரிக்க எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு தெரிவுக்குழுவை பகிஷ்கரிப்பது

தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை பகிஷ்கரிக்க கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமாகுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தெரிவுக்குழுவுக்கு சமுகமளிக்காமை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புகளிலிருந்து விலகி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு பாராளுமன்ற விதிமுறைகளுக்குட்பட்ட தொன்றே தவிர அரசாங்கத்தின் செயற்பாடல்ல என்பதனை கூட்டமைப்பின் எம். பிக்கள் புரிந்துகொள்ள தவறியி ருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை மறுக்கும் இவர்கள் எதற்காக பாராளு மன்றத்திற்கு மட்டும் சமுகமளிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இது குறித்து பேச்சு நடத்தி அவர்களை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதற்காகத் தொடர்ந்தும் தூண்டுதல்களை விடுத்து கொண்டேயிருப் போமெனத் தெரிவித்த அமைச்சர், இறுதித் தறுவாயிலாயினும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு சமுக மளிப்பதே சிறப்பானதாக அமையுமெனவும் குறிப்பிட்டார். (மேலும்.......)

ஆடி 01, 2013

மாவையே முதலமைச்சர் வேட்பாளர்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பதிவுத் தபால் மூலம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் அனைத்து கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்றக் கூடியவர் என்ற ரீதியிலும் வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கின்றது என்ற வகையிலும் மாவை சேனாதிராசாவை தெரிவு செய்துள்ளோம். இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகள் குறிப்பாக ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் ஆகியன ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, சாதகமான முடிவொன்றை எடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஏனைய கட்சியினரும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

த.தே.கூ யாழ். உறுப்பினர் ராஜினாமா; சு.க.வில் இணைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமிடியஸ் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துக்கொண்டுள்ளார். தான், தமிழ்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தினை யாழ்.மாநகர சபை முதல்வரிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ்.ஊடக மையத்தில், இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் தனது ராஜினாமா தொடர்பில் அறிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாநகர சபைத் தேர்தலில் நான் தமிழ் தேசியக் கூட்டமைபின் கீழ் போட்டியிட்டு, அதிக வாக்குகளில் வெற்றிபெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தொடர்ந்து வந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நானும் முரண்பட்டுக் கொண்டு வந்திருந்த நிலையிலும், நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே தனித்தும் சுதந்திரமாகவும் செயற்பட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் என்னை, அக்கட்சியினர் எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர். அதற்கான நேர்முகத் தேர்விற்கும் நான் சென்று வந்துள்ளேன்.

யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கைது

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ். பிரதான வீதியிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி யாழ். பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோர் சென்று ஜோடியொன்றை பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் தனது விடுதிக்குள், யாழ். பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், முன்னாள் மாநகரசபை உறுப்பினரைக் கைதுசெய்துள்ளதாகவும் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழர் தலையெழுத்தும்!

(வன்னியிலிருந்து ஈழப்பித்தன்)

தமிழ் இனத்தவர்அரசியல் தலைமை இன்றிதவித்தவேளை, புலிகளின் ஏற்பாட்டில் இதோ நாங்கள் இருக்கிறோம் என்றுவந்தவர்கள்தான் தமிழ் தேசியக் கூட்;டமைப்பினர். 2009ல் தமிழ் இனத்தவர்படுகொலைசெய்யப்பட்டபோதுஅதனைத் தடுத்துநிறுத்தமுடியாமல் ஏதோதோகதைகள் சொல்லிகொழும்புக்கும், இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் பயணித்துவந்தனர் இந்தத் தலைவர்கள். யுத்தத்தை நிறுத்த என்ன திட்டங்கள் இருக்கின்றன என்றுகேட்டதற்கு, 'தம்பிமார் இருங்கோபார்க்கலாம்' நாங்கள் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறி மொத்த மக்களும் இறந்தபின் மீண்டும் நாங்கள்தான் தலைவர்கள் என்றுநாடாளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிவிட்டனர்,பிளைக்கத் தெரிந்த கூட்டமைப்பினர். (மேலும்.......)

தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு அவசியம்

அரசியலுக்காகவன்றி தேச நலனுக்காக ஒன்றுபட வேண்டும்

பிரச்சினை தீர்வுக்கு வழி வகைகளைச் சிபார்சு செய்வ தற்காக சகல எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பேச்சுவார்த் தைகளில் கலந்துகொள்வது அவசியமென சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் இதில் பங்குபற்றவில்லையாயின் அது “அரச பாராளுமன்றத் தெரிவுக் குழு” என்று மட்டுமே அடையாளம் காணப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆணை பெற்றது. வரலாற்றிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. தமது உறுப்பினர்களைப் பிரேரிக்க சகல அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்பதை கடமையாகக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பிரச்சினை தீர்வுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் சிபார்சுகளை முன்வைத்த போதும், எதிர்க்கட்சிகள் அவற்றை வன்மையாக எதிர்த்ததாலும் அவற்றை நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதுவே கசப்பான உண்மை என்றும் அமைச்சர் நினைவூட்டினார். தேசிய நலனைக் கருத்திற் கொண்டு அவர்கள் அவற்றை எதிர்க்கவில்லை. அரசியல் ஆதாயம் தேடவே அவ்வாறு செய்தனர். இந்த துர்ப்பாக்கிய நிலை இனியும் தொடரக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு அரசியற் கட்சிகளின் பங்களிப்போடு இரு வருடங்களாக கலந்தாராய்ந்த சர்வகட்சி மாநாட்டுக் குழுவின் அறிக்கைக்கு ஏற்பவே பாராளுமன்றத் தெரிவுக் குழு செயற்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Video

The Fascist Monks Of Sri Lanka

The ethnic cleansing of Rohingya Muslims in Myanmar has shocked the world and drawn attention to rising Islamophobia in Asia. Now Muslims in Sri Lanka are under dire threat as well. The similarities with Myanmar are striking and foreboding. Buddhist monks are at the forefront of the rising hatred, the government is taking sides against Muslims and attacks have begun. Full scale violence is threatening to break out to create another catastrophe for Muslims in the region. There have already been a series of attacks on mosques and Muslim places of work. Hard line, ultra nationalist groups led by Buddhist monks such as Buddhist Strength Force (BBS) and Sinhala Echo preach the same message as those of the Buddhist Rakhine in Myanmar: “Muslims are taking over, they are building too many mosques and are trying to destroy our culture.” On this week’s INFocus we document the rising crisis in Sri Lanka and attempt to bring the world’s attention to the issue before it’s too late.

Courtesy PressTV

அரசுக்கும் - மு.கா.வுக்கும் இடையிலான முரண்பாடு ஆழமாகிவிட்டது -  பஷீர்

'அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன. இந்த நிலையில்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இது பொருத்தமான காலமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும்' என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். (மேலும்.......)

அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது - ஹக்கீம்

அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார். ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தை பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தை கழற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோல இருக்கின்ற சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறொன்றை மறைப்தற்கு அதனைப் பயன் படுத்த முடியாது. மானம் மிக முக்கியம். இதுபோல எமது கட்சிக்கும் சமூகத்திற்கும் எது முக்கியமோ அதனைத்தான் நாம் செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர். அப்படியான பேரினவாத சக்திகளுக்கு தீனிபோடும் வேலையை நாம் செய்ய முடியாது. நான் அமைச்சரவையில் பேசுவதை பொதுக் கூட்டத்தில் பேசமுடியாது. எனக்கென்று ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. அதனை நான் பாதுகாக்கவேண்டும். எனவே பேசவேண்டிய இடத்தில் நான் பேசுவேன். அதற்காக வலியப்போய் வம்பைத்தேடிக் கொள்ளத் தேவையில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு யாப்பு உண்டு. சட்டதிட்டம் உண்டு. அதனை யாரும் மீறினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைமையின் பொறுப்பு என்றார்.

Tamils Need The PC Even If Powers Are Curtailed

(By S. Ratnajeevan H. Hoole)

On14.06.2013, Jey and Chrishanthi (Anna) Anandarajan lost two-day old Elyssa. They held through with fortitude borne of faith. As if in tribute to his father – my loving chemistry teacher and later Principal, St John’s College, C. E. Anandarajan, who was felled by LTTE killers – Toronto’s gathering matched that at Jaffna school functions. We still live among murderers. On 30.05.2013, a short distance away, a 37-year-old Tamil was murdered in his backyard in daylight. Police termed it ‘targeted shooting.’ A ‘Brown’ man brought in his car two ‘Black men making the hit. From the community grapevine, the victim was an LTTE Collector. He had recently bought this house in an expensive Scarborough neighbourhood, paying full cash. (more.....)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 10 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குள விடுதி ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கிரான்குள விடுதிக்குச் சென்ற காத்தான்குடிப் பொலிஸார், இரு ஆண் பிள்ளைகளைகளும் ஒரு பெண் பிள்ளையும் அடங்கலாக 5 குடும்ப உறுப்பினர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ததாகவும் இவர்களை காத்தான்குடிப் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை நடாத்திவருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள், 12பேர் தோணி மூலம் அவுஸ்திரேலியா செல்ல உள்ளதாக, க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பை அடுத்து கடந்த, 28ஆம் திகதி, திருச்சி கே.கே.நகரில் இருந்து இலங்கை தமிழர்களை ஏற்றிக்கொண்டு, கடலூர் செல்ல தயாராக இருந்த வான் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் இலங்கைத் தமிழர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

பிரபாகரன் எதனைச் செய்தாரோ சம்பந்தன் அதனையே செய்கிறார்

புலிகளின் தலைவர் பிரபாகரன் வரலாற்றில் எதனை செய்தாரோ அதனையே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் செய்துவருகின்றார். தாங்கள் ஜனநாயக செயற்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை என்பதனையும் ஜனநாயக விரோதமாகவே செயற்படுவோம் என்பதனையும் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். பிரபாகரனின் கொண்டிருந்த கருத்தியலை தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டு செல்கின்றது என்பது தெரிவுக்குழு குறித்த அவர்களின் முடிவின் ஊடாக தெரியவந்துள்ளது. மேலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது ஒரு திறந்த மேடையாகும். யார் வந்தாலும் வராவிடினும் அதன் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் 19 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்தத் தெரிவுக்குழுவில் பங்குப்பற்றப்போவதில்லை என அறிவித்துள்ளன.

சம்பிக்கவின் அணு சக்திப் பொறுப்பு வாபஸ்

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அணு சக்திப் பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் சம்பிக்க ரணவக்க தொழில்நுட்ப மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கு மட்டும் அமைச்சராக கடமையாற்றுவார். கடந்த 24ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவிப்பு பிரசூரிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இவ்வாறு குறித்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com