Contact us at: sooddram@gmail.com

 

ஆனி 2013 மாதப் பதிவுகள்

ஆனி 30, 2013

வவுனியாவில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் கே. பத்மநாபாவின் 23ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆனந்த சங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில், யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த 175 பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சேமிப்புப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட இருபது நபர்களுக்கு முதல் கட்டமாக சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண தேர்தலில் மு.கா தனித்து போட்டி

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய  மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில்; இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார். எனினும் சில நேரங்களில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் என அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

ஹக்கீம் - பஷீர் முறுகல்

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே இவர்கள் இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மண்டப மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிந்தபோது, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடையே இந்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். (மேலும்.......)

மாகாண சபை உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரினர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரினர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எஹியா ஆப்தீன் மற்றும் ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகிய இருவருமே நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்திலேயே மன்னிப்புக் கோரினர். 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலான பிரேரணைக்கு குறித்த இரண்டு பேரும் வட மேல் மாகாண சபையில் ஆதரவளித்தனர். இதனையடுத்து கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். இந்த நிலையிலேயே நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டு தமது பக்க நியாங்களை தெரிவித்து மன்னிப்பு கோரினர். இதன்போது முதலமைச்சர் உட்பட மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களினால் தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் வாக்களிக்காவிட்டால் நிதியொதுக்கீடு மற்றும் நியமனங்கள் நிறுத்தப்படும் என தெரிவித்ததாகவும் கட்சியின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது

தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனந்த சங்கரி கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்தார். இதற்கமையவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் தலையீட்டால் இலங்கையின் முயற்சி தடைப்பட்டுள்ளது

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற  முயற்சிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தாமதமடைந்துவருகின்றது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. இந்நிலையில்  இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின்படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அப்படியான முயற்சிகளில் இலங்கை ஈடுபடும்போது இந்தியாவினால் மீண்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

பி. ரி. ஐ. பக்டீரியாவை பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்க கியூபா அரசு முடிவு

பாடசாலைகளில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் வகையில் பி. ரி. ஐ. பக்டீரி யாவை இலவசமாக வழங்க கியூபா அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள கியூபத் தூதுவர் இந்திரா லோபஸ் இது தொடர்பில் கியூபாவின் இணக்கத்தைத் தெரிவித்துள்ளதுடன் பி. ரி. ஐ. பக்டீரியா 2000 லீற்றரை இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமெனவும் அவர் குறிப் பிட்டுள்ளார். பி. ரி. ஐ. பக்டீரியாவை தெளிப்பதற்கான தொழில் நுட்ப உதவியையும் பெற்றுத் தருவதாக தெரிவித்த அவர், இந்தோனே ஷியாவில் மேற்படி பக்டீரியா உபயோ கத்துக்கு உறுதுணையாகவுள்ள நிபுண ரான கலாநிதி எக் டாடாவின் உதவியை இலங்கைக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கவும் அவர் இணக்கம் தெரி வித்துள்ளார். கியூபா தூதுவர் இந்திரா லோபஸ் சுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால வுக்குமிடையில் இடம் பெற்ற ஒரு கலந்துரை யாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு நுளம்பு உற்பத்தி கூரைகளிலுள்ள பீலிகளில் அதிகரி த்துக் காணப்படுவதாகவும் குறிப் பாக பாடசாலைகளிலுள்ள கூரைப் பீலிகளில் இது அதிகரித்துக் காணப்படுவதாகவும் பாலித மஹிபால தெரிவித்தார்.  2012 ஆம் ஆண்டில் பாடசாலை மட்டத்தில் டெங்கு மிகவும் அதிகரித்துக் காணப் படுகிறது. ஐந்து முதல் 9 வரையிலான வயதுடைய மாணவர்களிடையே நூற்றுக்கு 9 வீதமாகவும் 10-15 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களிடையே நூற்றுக்கு 11 வீதமாகவும் டெங்கு நோய் அதிகரித்துள்ளமை ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தற்போது இந்த தொகை முறையே 11 வீதமாகவும் 14 வீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனி 29, 2013
 

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிபணிய போவதில்லை -  வாசு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார். ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில்

கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை. உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே. (மேலும்.......)

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நேற்றிரவு விசேட கூட்டமொன்றை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. அத்துடன், 13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்துவதனை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் வியாழக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பங்கேற்கவைப்பது தொடர்பில் அரசாங்கத்திலுள்ள இடதுசாரி கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேனன் வரும்முன் பஷில் டில்லிக்கு விஜயம்

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜூலை 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூதுவராகவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடெல்லிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விஜயம் அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் வடக்கு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, ஜூலை 7 ஆம் திகதி இந்தியா, கொழும்புக்கு அனுப்பவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னரே அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அரசாங்கம் அதற்கு டில்லிக்கு அனுப்பவிருக்கிறது.

ஐ.தே.க.வின் உத்தேச அரசியல் அமைப்பு

மு.கா. - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் கையளிப்பு

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடம் கையளித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த, ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த நகல்களை வழங்கினார். ஐ.தே.க.வால் தயாரிக்கப்பட்டிருக்கும் உத்தேச அரசியல் அமைப்பு நகலை நன்கு ஆராய்ந்து தமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்த ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமது கட்சியால் தயாரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பின் நகல் பிரதிகள் கையளிக்கப்பட்டது.

இடம் பெயர்ந்தோர் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கை நேற்றுடன் முடிவு

வாக்காளர் இடாப்பில் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மாகாண மக்களை உள்வாங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இவ்வாறு விண்ணப்பித்த இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விபரங்கள் இன்று முதல் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எல்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, தமது பெயர்களை பதிவு செய்ய முடியாத வாக்காளர்களுக்கு இன்று முதல் ஜுலை 5ம் திகதி வரை மேன் முறையீடு செய்வதற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாக்காளர் இடாப்பில் பெயரை பதிவு செய்ய முடியாத வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்காக வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி 2009 ஆம் ஆண்டின் பின் தம்மை பதிவு செய்ய முடியாது போன வாக்காளர்களுக்காக தம்மை பதிய ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.

டெல்லி மேல் - சபை தேர்தல் முடிவு

அ.தி.மு.க. கூட்டணி 5 பேர் வெற்றி: 6 ஆவது இடத்துக்கு கனிமொழி

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்- சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதால், அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக சென்னையில் தேர்தல் நடைபெற்றது. 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்தலில் வாக்குப் பதிவு நடந்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர். அர்ஜுனன் 36 வாக்குகளும், இரா. லட்சுமணன் 35 வாக்குகளும், டாக்டர் வா.மைத்ரேயன் 36 வாக்குகளும், த.ரத்தினவேல் 36 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா 34 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மேலும் உள்ள ஒரு இடத்துக்கு, 2 பேர் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் கனிமொழிக்கு 31 வாக்குகளும், ஏ.ஆர். இளங்கோவனுக்கு 22 வாக்குகளும் கிடைத்துள்ளன. வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு 2 வது விருப்புரிமை அடிப்படையில் கிடைத்துள்ள வாக்குகளை யாருக்காவது கொடுத்துள்ளனரா என்று பார்க்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களின் உபரி வாக்குகள் கனிமொழிக்கோ, இளங்கோவனுக்கோ கிடைக்கவில்லை.

ஆனி 28, 2013

டியூ-சிறீதரன், சித்தார்த்தன் சந்தித்துப் பேச்சு

சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகரவுக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறீதரன் ஆகியோருக்கு இடையே நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து 13ஆவது திருத்தம் தொடர்பாக உரையாடி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாகவே தங்களையும் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கின்றோம் என்று புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.(மேலும்.......)

மு.கா- கூட்டமைப்பு சந்தித்துப்பேச்சு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமிலேயே இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிரயத்தனம் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் வடமாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக இருத்தரப்பும் ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றதுடன் அதன்போதும்  13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 23 பேர் கைது -5 குழந்தைகளும் உள்ளடக்கம்

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23 பேர் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் கடற்கரையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருக்கள்மடம் இராணுவ முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14 பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார் அதிகமானோர் வவுனியா, குருணாகல், வென்னப்புவ மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலிஸார் அமுல்படுத்தத் தவறுகின்றனர் - சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்

யாழ். குடாநாட்டில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலிஸார் உரிய முறையில் இன்னமும் அமுல்படுத்தவில்லையெனவும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்ற போது சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாதென பொலிஸார் தெரிவிக்கின்றமையினால் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலேயே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாவில் சட்ட விரோத மணல் அகழ்வு தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறும்போது உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டாலும் மண் அகழ்வு நடைபெற்று முடிவடைந்த பின்னரே பொலிஸார் சம்பவ இடத்தை செல்கின்றனர். இதனால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க முடியாதுள்ளது. மேலும் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். பொலிஸாரின் இத்தகைய கருத்தானது விபச்சாரத்தை ஊக்குவிக்கும் செயலாக உள்ளது. கிராமங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்ற நேரங்களில் பொலிஸார் சம்பவ இடங்களுக்கு செல்வதில்லையென பொது மக்கள் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினர். இதனைச் செவி மடுத்த யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜிப்ரி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதல்ல, யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் நடப்பதில்லை என்பதே உண்மையாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பவரை கைது செய்யும்போது சுயமரியாதையைக் கருத்தில் எடுத்துத்தான் நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். விடுதியில் ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் தங்குவது, இதனை விடுதி உரிமையாளர்கள் ஊக்கவிப்பது போன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

ஆனி 27, 2013

மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு

அழைப்பிதழ்

இடம்:

சங்கரப்பிள்ளை மண்டபம்

கொழும்பு தமிழ்ச் சங்கம்

இல.7இ  57ம் ஒழுங்கை  

கொழும்பு – 06

காலம்:

30 ஜூன் 2013 ஞாயிற்றுக்கிழமை

நேரம்:

பிற்பகல் 5.00 மணி

ஏற்பாடு:

இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

(மேலும்.......)

'சர்வக்கட்சி குழு பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தெரிவுக்குழு இருக்கும்'

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கையானது சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தொடர்பான நிர்வாக விடயங்களைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாசுதேவ நாணயக்கார மற்றும் டியூ குணசேகர ஆகிய அமைச்சர்களுக்கு விளக்கினார் என தகவல்கள் தெரிவித்தன. இந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளாவர். இந்த இரண்டு அமைச்சர்களும் 13ஆவது திருத்தம் தொடர்பாக தமது ஒருமனதான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர் என தகவல்கள் தெரிவித்தன. கடந்த 2006 ஜுலை 11ஆம் திகதி போராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டது. இதை ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பகிஸ்கரித்திருந்தது. இந்த குழுவின் அறிக்கை ஓகஸ்ட் 16 2009 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட போதிலும் இதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

 ஐ.தே.க – மு.கா சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.  13ஆவது திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதுஇ 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் வரைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இந்த சந்திப்பின்போது கையளிக்கப்பட்டுள்ளது. தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை மாற்று அரசாங்கமாக கருதுவதாகவும் முன்வைக்கப்பட்ட உத்தேச உத்தேச அரசியல் வரைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கு பரிசீலித்து அது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் என அமைச்சர் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

மு.காவிலிருந்து இருவர் இடைநிறுத்தம்

மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்திவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரையே கட்சியிலிருந்து  இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார். புத்தளத்தை சேர்ந்த எஹியா ஆப்தீன் மற்றும் குருநாகலை சேர்ந்த றிஸ்வி ஜவகர்ஷா ஆகிய இரண்டு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலான பிரேரணை வட மேல் மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. "இதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குறித்த இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்தே இவர்களை உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்" என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்த இரண்டு உறுப்பினர்களும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என ஹசன் அலி தெரிவித்தார். "அத்துடன் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் உங்கள் இருவருக்குமான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என மாகாண ஆளும் கட்சியின் உயர் பதவியிலுள்ள ஒருவர் அவர்களை அச்சுறுத்தியுள்ளதாக" அவர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் ஆயர் புதிய பிரபாகரனா?: சேனாவின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம்

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு செயற்பட்டுவருகின்றார் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வண்மையாக கண்டித்துள்ளார். நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததையடுத்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார். ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்பு தற்போது தமிழ் மக்களுக்கும் எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்காலம் முதல் குரல்கொடுத்து வருகின்றது. இதையே மன்னார் ஆயரும் செய்து வந்தார். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பக்கபலமாக செயற்பட்டு வரும் மன்னார் ஆயரின் செயற்பாட்டை பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்புக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் இதன் எதிரொலியாக அரசாங்கத்திலும் இருந்து மன்னார் ஆயருக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனி 26, 2013

புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு செயற்பட்டுவருகின்றார் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழர் என்பதால் மன்னார் ஆயர் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றார். எனவே இவருக்கு எதிராக குரல் கொடுக்க கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள ஆயர்கள் அனைவரும் முன்வரவேண்டும். தேசப்பற்றுமிக்க கத்தோலிக்கத் திருச்சபையின் சிங்கள ஆயர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த தீர்க்கமான கட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழில் கடந்த 2012ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தை பிறப்பு இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப்பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலிருப்பவர்களுக்கு தற்கொலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

தமிழினி விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.  கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார். தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். இலங்கை அரசால் தயாரிகப்பட்ட பெண் கேபி.... வேறு என்ன சொல்ல

13 இல் இரண்டு ஏற்பாடுகளை இரத்து செய்யவும், சு.க தீர்மானம்

‘ஜேவிபி இணைந்திருந்ததை நீதி மன்றம் மூலம் பிரித்தனர். அதனை இனி எக்காலத்திலும் இணைய விடாமல் சட்டம் இயற்றுகின்றனர்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி. ஐதே கட்சி எப்பவும் எதுவும் கொடுகக் கூடாது என்கின்றது’

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இரண்டு ஏற்பாடுகளை இரத்துசெய்யவேண்டும் என்ற உத்தியோகபூர்வ தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று புதன்கிழமை எடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த விவகாரத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன்பிரகாரம், 13 ஆவது திருத்தத்தில் இரண்டு ஏற்பாடுகள் அகற்றப்படவேண்டுமென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைந்து தனி மாகாணசபையாக இயங்கமுடியும் என்ற ஏற்பாடு நீக்கப்படல் வேண்டும் என்பது அதில் ஒன்றாகும். மாகாண சபை அதிகாரத்தின் கீழுள்ள பொதுபட்டியலில் உள்ள விடயங்களை திருத்துவதற்கு சகல மாகாண சபைகளிலும் அங்கீகரிக்கவேண்டும் என்பதும் நீக்கப்படல் வேண்டும் என்பது மற்றொன்றாகும். ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள இந்த தீர்மானத்தை அரசாங்கத்தின் நிலைப்பாடாக ஆக்கிகொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இராணுவமா...? இலங்கையில் தமிழ் மக்களை கொன்றது....?

மன்னாரில் தோழர் நாபாவின் 23 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள்

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 23 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் லிங்கேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பனை அபிவிருத்தி சபைத் தலைவருமான பசுபதி சீவரத்தினம் அவர்கள் தோழர் நாபாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனையடுத்து தோழர் லிங்கேஸ், கட்சியின் பிரதியமைப்பாளர் சந்துரு, மன்னார் பொது மருத்துவமனை வைத்தியர் ராஜ்குமார், தோழர் மாட்டின், உட்பட தோழர்கள் பலரும் நாபாவின் படத்திற்கு தூபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். (மேலும்.......)

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் - யெச்சூரி

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே.13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன. (மேலும்.......)

ஆனி 25, 2013

13ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய கோருவது அரசாங்கமல்ல, சிறுதரப்பினர் - இடதுசாரி, சுதந்திரக் கட்சி தலைவர்கள்

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்பது அரசாங்கத்திலுள்ள பெரும்பான்மை தரப்பினரின் நிலைப்பாடல்ல. இதில் திருத்தம் மேற்கொண்டு மாகாண சபைமுறையை மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென அரசாங் கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். 13 வது திருத்தத்தை ரத்துச் செய்வதன் மூலம் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்று குறிப்பிட்ட அவர்கள், அரசியல மைப்பைத் திருத்துவதற்காக நியமிக்கப் பட்டுள்ள தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் ஐ.தே.கவையும் பங்கேற்க வைக்க சகல முயற்சிகளும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். (மேலும்.......)

நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மிகவும் மதிக்கப்படும் 94 வயதுத் தலைவரான மண்டேலா கடந்த 16 நாட்களாக ப்ரிட்டோரியா நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலில் மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மண்டேலாவின் உடல் நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாக, ஞாயிறன்று மாலை அவரை மருத்துவமனையில் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா சந்நித்த போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே மண்டேலாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்கிற அறிக்கை வெளியானது. மருத்துவமனைக்கு சென்ற ஜனாதிபதி ஸுமா அங்கு மண்டேலாவின் மனைவி க்ரேஷா மஷேலை சந்தித்துப் பேசியுள்ளார். மண்டேலாவின் உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, தமது தேசத்தில் உள்ளவர்களையும் உலக மக்களையும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு மீண்டும் வேண்டியுள்ளார்.

இலங்கையில் மக்கள் அமைதியாக வாழ்வதை எவரும் இடையூறு செய்யக் கூடாது !

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் துக்ளக் இதழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி

இயக்கத்தில் சேரும்போது என் எண்ணம் என்னவாக இருந்தது என்றால், ‘ஒரு நான்கைந்து ஆண்டுகள் போராடினால் தமிbழம் கிடைத்துவிடும். அதன் பிறகு படிப்பு, வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான். ஆனால் 25 ஆண்டுகள் போராடியும் தீர்வோ, வெற்றியோ கிடைக்கவில்லை என்ற போது சலிப்புத்தான் வந்தது. மக்களும் புலிகளுக்கு எதிராக மாறத் துவங்கினார்கள். உலக நாடுகளும் புலிகளுக்கு எதிராக மாறின. இந்தியாவும் புலிகள் ஆதரவை விலக்கிக் கொண்டது. முதல் சந்ததி முடிந்து இரண்டாவது சந்ததி உயிர்களை இழக்கத் துவங்கியாகிவிட்டது. புலிகள் மூன்றாவது சந்ததியையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று தோன்றியது. தனிநாடு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து தனது வெற்றிகளை அரசியல் வெற்றியாக மாற்ற புலிகள் உடன்படாததால்தான் நான்வெளியேறினேன். (மேலும்.......)

13ஆவதை ஏற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது -  ரிசாட்

வட-கிழக்கு பிரிந்துவிட்ட நிலையில், அதனைப் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே  13 ஆவது திருத்தத்தை மனச்சாட்சியுடன் நாம் அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன்  தெரிவித்தார். 'இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்தான் டக்ளஸ் தேவானந்தா. அவர் அதே நிலைப்பாட்டில் தான் அன்றில் இருந்து இன்றுவரை இருக்கின்றார். சகல அதிகாரங்களும் நிறைந்த வடக்கு, கிழக்கு இணைந்த அந்தத் தீர்வை அன்று ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை உயிர்களையும் உடைமைகளையும் உறவுகளையும் இழந்திருக்க தேவையில்லை. அத்துடன், சிறையில் இருக்கும் எத்தனையோ உறவுகள் எம்மோடு இருப்பதையும் கண்டிருக்கலாம். ஆனால் இன்று நடக்கும் போராட்டம் என்ன? வடக்கும் கிழக்கும் இணைந்த அல்லது அத்தனை அதிகாரங்களையும் கொண்ட 13ஆவது திருத்தத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதாகத் இருக்கின்றது. வட, கிழக்கு பிரிந்துவிட்ட நிலையில் அதனைப் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே நாம் அன்றே 13ஆவது திருத்தத்தை மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.

13வது திருத்தசட்டமும், சமகால நிலையும்
இலங்கை, இந்திய அரசுகள்
சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்

29 ஜுன் 2013 (சனி)
மாலை - 4.30
46A, East Avenue, Eastham-E12 6SG
அரசியல்,சமூக செயற்பாட்டாளர்கள், சட்டவாளர்களின் உரையும்
கலந்துரையாடலும் இடம் பெறும்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்!
மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.
நன்றி
தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

வீணையா? வெற்றிலையா? நாளை முடிவு

வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொது சேவைகள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பினரால் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட பரீட்ச்சாத்த நிகழ்வும் புத்தகக்கண்காட்சியும்

உதயம் அமைப்பினரால் சுவிஸ்சூரிச் மானித்தில்22.06.13 அன்று 11.00 மணியளவில் ஒரு நிமிடஅஞ்சலி நிகழ்வை தொடர்ந்து குறுந்திரைப்பட பரீட்ச்சாத்த நிகழ்வும் புத்தகக்கண்காட்சியும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இவ்நிகழ்வில் பல்வேறு தரப்பட்ட மக்களும் உதயம் அமைப்பின் அங்கத்தினரும் குறும் படத்தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் புலம்பெயர் தமிழர்காளல் தயாரிக்கப்பட்டகுறும் திரைப்படங்கள் மக்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது. மிகவும் அற்புதமான படைப்புக்கள் என்று நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்திருந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது. அது மட்டுமல்லாது குறும் திரைப்படங்களை கண்டுகழித்த மக்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பல்வேறு கோணங்களில் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் உதயம் அமைப்பினரின் மதிய உணவு பரிமாற்றமும் இடம்பெற்றது .அதை தொடர்ந்து பலபுத்திமான்களின் படைப்புக்களான பல்வகையான புத்தங்கள் குறிப்பாக கொட்டியாரம்.கிழக்கு மக்களின் பண்டைய கால நாட்டுபுற பாடல்கள் அடங்கிய புத்தங்கள் சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு.கப்பலோட்டிய தமிழன்.என்றும் பல்வேறு படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன மக்கள் மிகுந்த ஆவலுடன் தங்கள் பயனுக்காக வாங்கிசென்றதை அவதானிக்க கூடியதாகவிருந்தது. மாலை தேனிர் அருந்தும்வேளையில் சிறு கலந்துரையாடலின் பின்னர் 18.00 மனியளவில் குறுந் திரைப்பட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது

செய்திஅறிவிப்பு
உதயம் நிர்வாகத்தினர்

துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் கிழக்குப் பல்கலைக்கழகம்

(அதிரதன்)

கிழக்குப் பல்கலைக்கழகமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக பல கல்விமான்கள் இருந்துள்ளார்கள். தற்போதைய நிலையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் முக்கியமானவையாகவும், முன்னேற்றமானவையாகவும் பார்க்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும், தற்போதைய பல்கலைக்கழ அபிவிருத்திகள் தொடர்பிலும் இந்தக்கட்டுரையில் ஆராயலாம். மட்டக்களப்பு மாத்திரமல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களுமே கல்வி மற்றும் பொருளாதாரம் என அனைத்து விடயங்களிலும் கடந்த 30 வருடங்களாக அழிவுகளையும், பின்னடைவுகளையும் இன்னல்களையும் சந்தித்திருக்கின்றன. இக்காலத்தில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போனதும், கொல்லப்பட்டதும், நாட்டை விட்டு ஓடியதும் என பல்வேறு விவகாரங்களும் நடந்து முடிந்திருக்கின்றன. ஏதோ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் அமைதி நிலை ஏற்பட்டு நிம்மதிப் பெருமூச்சொன்று விடப்பட்டு மக்கள் நிமிர்ந்திருக்கிறார்கள். (மேலும்.......)

தென் ஆபிரிக்காவின் உதவியை நாடியது கூட்டமைப்பு

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, சமாதானம் மற்றும் உண்மை அறிதல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கு தென் ஆபிரிக்காவின் உதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடியுள்ளது.  தற்போது இலங்கைக்கு வந்துள்ள தென்ஆபிரிக்காவின் பிரதி அமைச்சர் இப்றாகிம் இப்றாகிமை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தென் ஆபிரிக்க குழு, தமது அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டுவர இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் உதவ முன்வந்தது. தென் ஆபிரிக்காவின் வகிபாகம் எதுவாக இருக்கும் என எதுவும் கூறப்பட்டவில்லை. ஆனால், அது பயனுடையதாக இருக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகின்றது என இரா. சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமை பற்றி குறிப்பாக 13ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தென் ஆபிரிக்க குழுவிற்கு விளக்கியுள்ளது. இந்த தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, ஏ.விநாயகமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமாகாணசபை தேர்தல் செப்.21 அல்லது 28இல்

வட மாகாண சபைத் தேர்தல் செப்டம்பரில் அநேகமாக 21 அல்லது 28 ம் திகதியன்று நடத்தப்படும். கிடைக்கப்பெறும் வேட்பு மனுக்களின் எண்ணிக்கை யினை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் நடத்தப்படும் தினத்தினை உத்தியோகபூர்வமாக என்னால் அறிவிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். இதேவேளை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து அரசாங்கத்திடமிருந்து எமக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையினை தொடர்ந்து மேற்படி இரண்டு மாகாணங்களினதும் ஆளுநர்கள் மாகாண சபையைக் கலைத்ததும் 60 தொடக்கம் 80 நாட்களுக்குள்ளாக அம்மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவோ மெனவும் ஆணையாளர் தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். வடமாகாண தேர்தலுக்கான நிதி கடந்த வருடமே ஒதுக்கப்பட்டி ருப்பதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர், வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு இன்னமும் மேற்கொள் ளப்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.

உத்தரகாண்ட்

5000 பேர் மரணம்?

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த கன மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இது குறித்து உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் யஷ்பால் ஆர்யா, டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது. பிரளயம் போன்ற இந்தப் பேரழிவால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேதாரநாத் பள்ளத்தாக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், குறைந்தது 5,000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. (மேலும்.......)

மொஸ்கோ தப்பிச் சென்ற ஸ்னோடன் ஈக்வடோரில் தஞ்சம்புகத் திட்டம்

அமெரிக்க முன்னாள் புலனாய்வு கணனி நிபுணர் எட்வட் ஸ்னோடன் ஈக்வடோர் நாட்டில் தஞ்சம் கோருவதற்காக நேற்று ரஷ்யாவிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஸ்னோடன் கியூப தலைநகர் ஹவானா சென்று அங்கிருந்து ஈக்வடோர் செல்ல திட்டமிட்டுள்ளார். எனினும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஸ்னோடனை நாடு கடத்துவதற்கான முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு அமெரிக்கா, ரஷ்யா அரசை கோரியுள்ளது. இணையத்தளங்கள் உளவுபார்க்கும் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்புத் திட்டம் தொடர்பான திட்டங்களை கசியவிட்டு ஸ்னோடன் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஈக்வடோரின் லண்டன் தூதரகம் ஏற்கனவே விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்சுக்கு தஞ்சமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் ஸ்னோடனின் புகலிடக் கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஈக்வடோர் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ படினோ நேற்று தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈக்வடோருக்கு இடையில் நாடுகடத்தல் தொடர்பான உடன்பாடொன்று இருந்தபோதும் அது குற்றச்செயல்கள் அல்லது அரசியல் ரீதியான விவகாரங்களில் செயற்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை என குறிப்பிடப்படுகிறது.

ஆனி 24, 2013

கனடாவில்

23 வது தியாகிகள் தினம் இன்று நடைபெற்றது.

கனடா ரொரன்ரோவில் இன்று பத்நாபா ஈபிஆர்எல்எவ் இனரால் 23 வது தியாகிகள் தினம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தோழர் ஆனந்தனின் வழி நடத்தலில், தோழர்கள் சேகரன், யசீர், மதி,ரவி எனைய கனடா வாழ் தோழர்களின் ஒருங்கிணைப்புடனும் தோழர் ஜேம்ஸ் இன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ். சம உரிமை இயக்கம், இலங்கையின் இடதுசாரிகள், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புக்கள், ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் இதில் கலந்தகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். மாற்றுக் கருத்தாளர்களின் தளமான இது உருவாகியிருந்தது சிறப்பு அம்சம் ஆகும். தியாகிகள் தினம் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால். இதில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்குமாறு தலைவரால் அவரது தலைமையுரையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த கால கட்டங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு ஏற்கனவே பல்வேறு தளங்களில் தலைமைத் தோழர்களால் மன்னிப்பும், சுயவிமர்சனமும், சுய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்து தோழர் ஜேம்ஸ் தனது உரையை ஆரம்பித்தார். (மேலும்.......)

லண்டன்

23வது தியாகிகள் தின நிகழ்வுகள்

தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக பத்மநாபா EPRLF  இனரால் தியாகிகள் தினம் வருடா வருடம் அனுஸ்டிக்கப்பட்டு  வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் தீர்க்க தரிசனம் மிக்க இளம் தலைவராக இருந்த தோழர் பத்மநாபா புலி பாசிஸ்டுக்களினால் படு கொலை செய்யப்பட தினமான ஜூன் 19 ம் திகதியே தியாகிகள் தினமாகும். தியாகிகள் தின நிகழ்வுகள் இன்று 22 ஜூன் -மாலை வடக்கு லண்டனில் Northoltcommunity மண்டபத்தில் தோழர் சிராப்பின்  தலைமையில் இடம்பெற்றது. (மேலும்.......)

 

பிரிட்டனின் புதிய விசா நடைமுறை

பாக், இலங்கை, இந்திய நாட்டவருக்கு பிணை விசா அறிமுகம்

குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரிட்டனுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனின் சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவ தாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானா வும் உள்ளடங்குகின்றன. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப் படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்ட வும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

யாழ். பல்கலையில் மாணவர் குழுக்களிடையே மோதல்

யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்று வரும் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இம்மோதல் சம்பவம் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் ஆறு பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவினர்களை தேடித்தருமாறு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் ஐ.சி.ஆர்.சி.க்கு கடிதம்

தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தழிழர்கள் தமது உறவினர்களை தேடித் தருமாறு இருபதுக்கும்  மேற்பட்ட கடிதங்களை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) யாழ். மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் குணசேகரம்பிள்ளை பாலகிருஸ்ணன் தெரிவித்தார். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் தமது சங்கத்துக்கு 20 கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அக்கடிதங்களில், காணாமல் போன தமது உறவினர்களை தேடித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அக்கடிதங்களின் பிரகாரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் சர்வதேசம் முழுவதிலும் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காரியாலயங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்ய தடை

அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதான யோசனையொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் எனவும் ஜனாதிபதியின் அந்த யோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர் மாற்றம் கிடையாது - ஜனாதிபதி

கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர்கள் - ஆளுநருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் - முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே மேற்படி ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். அதேவேளை விமலவீர திஸாநாயக்க வீணான முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றார். ஆளுநர், முதலமைச்சர் மாறாவிட்டாலும் கல்வியமைச்சை வேறொருவருக்கு வழங்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டார். இதேவேளை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவையும் விசேடமாக அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சுற்றி வளைக்கும் புற்று!

(பாரதி தம்பி)

ரு காலத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமே மக்களைப் பதறவைத்த புற்றுநோய், இன்று சினிமா இடைவேளை முடிந்ததும் ஸ்க்ரீனில் விரியும் 'இவர்தான் முகேஷ்...’ என்று கரகரக் குரல் கேட்டதும் கைதட்டி விசிலடிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது. 'அவருக்கு கேன்சராம்’ என எங்கோ, யாருக்கோ வந்ததைப் பற்றி அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டது ஒரு காலம். அப்போது எங்கோ இருந்த புற்றுநோய் இப்போது நம்மைச் சுற்றி கொடிய நச்சுபோலப் பரவி வியாபித்துவருகிறது. (மேலும்.......)

ஆனி 23, 2013

கனடாவில்

தியாகிகள் தினம்

இடம்: 1703  McCowan Road, Scarborough, Ontario

மக்கோவன் / செப்பேட் (McCowan Road / Sheppard Ave East)

காலம்: ஜுன் 23, 20103 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5.00 – 8.00 வரை

 

விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு. எமது போராளிகள், பொதுமக்களின் தியாகத்தால் விளைந்த ஜனநாயக நிலமைகளை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்த விளைகின்றோம். கிடைத்திருக்கும் ஜனநாயக சூழலை பாவித்து எமது மக்களுக்கான சமாதான, சம உரிமை வாழ்வை உறுதிப்படுத்த தொடர்ந்தும் குரல் கொடுக்க இணைந்து செயற்படுவோம். பல்வேறு அமைப்புக்களின் செயற்பாடாளர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். அமைதி, சமாதானம், ஜனநாயகம், சமஉரிமை போன்றவற்றில் ஈடுபாடுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

தகவல்: ஈழ மக்கள் செய்திச் தொடர்பு நிலையம் (கனடா)

யாழ்பாணத்தில் 23 வது தியாகிகள் தினம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 23வது தியாகிகள் தினம் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஈழப் போராட்டத்தில் தம் உயிரை அர்ப்பணம் செய்த தோழர்களின் குடும்ப அங்கத்தினர்கள், இதர கட்சிகளின்; பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் தலைமை வகித்தார். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சுந்தரம் ஐயாவின் பாரியார் நாகேஸ்வரி உயிர்நீத்த தோழர்களின் உருவப்படத்திற்கு குத்துவிளக்கேற்றி தியாகிகள் தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு ஸ்ரீதரன் தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த தோழர்கள், சக இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.  இதில் பங்கு கொண்டிருந்த ஏனைய கட்சி பிரதிநிதிகள், கட்சியின் தோழர்கள், பெற்றோர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள். (மேலும்.......)

திருகோணமலையில் 23வது தியாகிகள் தினம்

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பகப்பிள்ளையார் கோவில் வாசிகசாலையில் இன்று 23 வது தியாகிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்ட இந் நிகழ்வு காலை 9 மணி முதல் 2 மணி வரையும் நடைபெற்றது.   தோழர் சத்தியன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பெருமளவில் பொது மக்கள் கலந்து கொண்டு தோழர் பத்மநாபாவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் போராட்டத்தில் தம் உயிரை அர்ப்பணித்த பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள்.(மேலும்.......)

சுதந்திரக்கட்சியில் போட்டியிட தயா மாஸ்டர் தீர்மானம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். இதற்காக இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ஜயரட்ண அவர்களை தயா மாஸ்டர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது பிரதமர், தேர்தலில் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டுள்ளதாக சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

தெரிவுக்குழு விவகாரம்: த.தே.கூ விரைவில் முடிவு

தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் அக்குழுத்தொடர்பில் விரைவில் முடிவொன்று எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தங்களுடைய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தெரிவுக்குழுவில் இணையுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

மேற்கு கனடாவில் வெள்ள அனர்த்தம்

மேற்கு கனடாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் சுமார் 100,000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் டிரான்ஸ்- கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் மலைப் பிராந்தியத்திலுள்ள பனவ் மற்றும் கன்மோர் நகர்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென் அல்போட்டாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற வெள்ளத்தால் வீதிகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் கார்கள் மற்றும் ஏனைய வாகனங்களும் குளிர்சாதனப் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ள அனர்த்தத்தால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்ட தென் கல்காரி நகர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் தொடர்பில் 5 பிரதேசங்களில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Sri Lanka boosts Cuban ties

Sri Lanka has forged diplomatic ties and further strengthened its relationships with a large number of countries in Latin America, Africa and the Caribbean, Sri Lanka’s Ambassador to Cuba, Sarath Dissanayake said. In a wide ranging interview with Radio Havana’s flagship programme “The world where we live in” the Ambassador said that both Sri Lanka and Cuba being two island nations, have many things in common and shared perspectives on matters of mutual interest. He said that the relations between the two countries today are multifaceted and vibrant covering trade, investment, education, science and technology, culture and close people to people contacts, thanks to the far sighted visionary leaders in the past and present. As regards the post – conflict developments in Sri Lanka since the end of hostilities in May 2009, the Ambassador outlined initiatives taken and progress made in reconstruction, rehabilitation, reconciliation and socio – economic sectors that brought economic dividends and livelihood benefits to all segments of the society. In this regard he observed that “today Sri Lankans are at peace while the country has ushered in a new era of unity, harmony and progress among people of different ethnic, religious and geographical backgrounds. He also laid emphasis on Sri Lanka’s proactive role in the Commonwealth as the host of the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in November 2013 following which it will assume the chair of CHOGM for the next two years. Commenting further, he said forthcoming CHOGM will provide a platform to promote mutually beneficial cooperation and partnerships among likeminded countries within and outside the Commonwealth. (Colombo Gazette)

ஆனி 22, 2013

த.தே.கூ. உறுப்பினர் சு.க.வில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ளார் என்று தெரியவருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ள அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகவும், அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இவ்விடயம் தொடர்பாக இன்று சனிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தாலும்  சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளது. 19 அங்கத்தவர்களை கொண்ட இந்த தெரிவுக்குழுவுக்கு அமைச்சரும் சபைமுதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தலைவராவார். இந்தக்குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், மைதிரிபால சிறிசேன, அநுரபிரியதர்சன யாப்பா, தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, ரிஷாட் பதூர்தீன், சம்பிக்கரணவக்க,விமல் வீரவங்ச, பஷில் ராஜபக்ஷ, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக்க பண்டார ஆகியோரே அங்கம் வகிக்கின்றனர். இந்த அறிவிப்பை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இந்த குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தெரிவு செய்யும் என்றும் இது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டார் என்றும் அவர் சொன்னார்.

அமைச்சர்களான வீரவன்ச, சம்பிக்கவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காது -வாசு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக்குறைப்பும் இடம்பெறாமலேயே வடமாகாண சபை தேர்தல் நடைபெறும். அமைச்சர்களான சம்பிக ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டோரின் முயற்சிகள் எதுவும் பலளிக்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆளும் கட்சியில் பெரும்பாலானோர்கள் இல்லை. ஒரு சில இனவாத தரப்புகளே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்க கூடாது என்று போராடுகின்றன. வட மாகாண சபை தேர்தலில் மாத்திரம் அதிகாரக் குறைப்பிற்கு முயற்சித்து இன்று இனவாத கட்சிகள் சிங்கள மக்களிடையேயும் அவமானப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் வெளியில் வந்த நாள் முதல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உட்பட பேரினவாத அமைப்புகள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தன. இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களை செயலிழக்க செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தமிழகத் தலைவர்கள் இலங்கைக்கு வந்து உண்மை நிலைமையை நேரில் அறிய வேண்டும் - - கருணா அம்மான்

சரணடைந்த புலிகள் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள்

(நேற்றைய தொடர்)

ஆரம்பத்தில் இயக்கத்தில் மக்கள் விரும்பிச் சேர்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், கட்டாயமாக ஆள் பிடிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு போராட்டமும் வெல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் எந்தக் குடும்பமும் தன் கணவனோ, மகனோ, தந்தையோ போரில் ஈடுபட்டுச் சாவதை விரும்பாது. ஆனால், புலி கள் அதைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் குறைந்தபோது பெண்களை யும் இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தார்கள். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். அந்த நேரத்தில்தான் நோர்வே, சமரசத்திற்கு வந்தது. நான் பிரபாகரனிடம் பேசினேன். ‘இதுவரை இராணுவ வெற்றிகளைத் தான் பெற்று வருகிறோம். இதை அரசியல் வெற்றியாகமாற்றி கொள்ள நாம் முன்வரவேண்டும். இராணுவ வெற்றியை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் மேலும் பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் போருக்கு வரும். திரும்பவும் சண்டைதான் போட வேண்டும். என்றைக்கும் நிம்மதியோ, விடுதலையோ இருக்கப் போவதில்லை. எனவே அரசியல் தீர்வுக்கு போவோம்’ என்று சொன்னேன். ஆனால் அவர் ‘தனி நாடு’ என்ற சிந்தனையை விட்டு வெளியே வரவில்லை. (மேலும்.....)

உத்தரகண்டில் மழை, வெள்ள பாதிப்பு ஆயிரக் கணக்கானோர் உயிரிழப்பு

மழை, வெள்ளத்தில் சிக்கி உத்தரகண்ட் மாநிலத்தில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து உத்தரகண்ட் இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உட்பட வட மாநிலங்களில் பலத்த மழை, வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக உத்தரகண்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காட்டாற்று வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. புனித தலமான கேதாரநாத், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 90 ஓய்வு இல்லங்களில் தங்கியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி உள்ளனர். கேதாரநாத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 90 ஓய்வு இல்லங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி 21, 2013

கனடாவில்

இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளர்

நீர்வை பொன்னையன் அவர்களின்

'நினைவலைகள்'

நூல் அறிமுகம்

இடம்: ஸ்கபரோ சிவிக் சென்ரர் – கனடா (Scarborough Civic  Centre - Canada)     கூட்ட அறை இல.1 – 2 (Committee Rooms 1 & 2)

காலம்: 2013 யூன் 22 சனிக்கிழமை காலை 9.00 மணி – 12.00 வரை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:

கனடிய - இலங்கையர் கலை இலக்கிய மையம்

தொடர்புகளுக்கு: canlankan@gmail.com

தனிநாட்டுக் கோரிக்கையை உலகம் இனிமேல் ஏற்காதென்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்  - கருணா அம்மான்

ராஜீவ் காந்தி இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தபோது, அதைப் புலிகள் இயக்கம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக இந்திய இராணுவம் இலங்கை வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டோம். மற்ற எல்லா தமிழ்ப் போராளிகள் இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்புக்குச் சம்மதித்து, இந்திய இராணுவத்தின் பக்கம் இருந்தன. தனிநாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம் என்ற இந்தியாவின் அருமையான திட்டத்தை அன்று நாங்கள் மட்டும் எதிர்த்து இந்திய இராணுவத்துடனேயே போரிட்டோம். இதனால் வட கிழக்கு இணைந்த மாகாண சபை என்ற அரிய வாய்ப்பு கைநழுவிப் போயிற்று. அந்தத் தவறு போதாது என்று புலிகள், பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர். அந்த நிமிடம் முதல் இந்திய அரசு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்து பின்வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். (மேலும்.....)

தமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்

(நிலாந்தன்) 

ஆயுதம் ஏந்திய தமிழ் அரசியல்; எனப்படுவதே தமிழ் மிதவாதத்தின் இயலாமை அல்லது செயலற்றதனம் அல்லது பாசாங்கு போன்றவற்றிற்கு எதிராக உருவாகியவைதான். தமிழ் மிதவாதமானது தான் உருவேற்றிவிட்ட இளைஞர்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தலைமை தாங்க முடியாதுபோய்விட்டது. தளபதி என்று பெயரைச் சூடிக்கொண்ட தலைவர் வாய்ச்சொல் வீரராக மட்டும் இருப்பது தெரிய வந்தபோது இளைஞர்கள் விரத்தியும் கோபமும் அடைந்தார்கள். இதனாற்தான் பெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் 'அரசியல்' என்பதை இகழ்ச்சியாகப் பார்த்தன. விடுதலைப்புலிகள் அல்லாத சில இயக்கங்களில் அரசியற் பிரிவுக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரை ஆரம்ப கட்டங்களில் அரசியல் எனப்படுவது கதைகாரர்களின் வேலை அல்லது செயலுக்குப் போகத் திராணியற்ற கோழைகளின் செயல் என்ற விதமாகவே ஒரு விளக்கம் இருந்தது. இது காரணமாகவே அரசியல் பிரிவுக்கு ''லோலோ குறூப்' என்று ஒரு பட்டப் பெயரும் கிடைத்தது. அதாவது லோலோ என்று கத்துபவர்கள் என்று அர்த்தம். உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனை அவருடைய நண்பர்கள் அப்பாப்பிள்ளை என்று அழைப்பதுண்டு. அப்பாப்பிள்ளை எனப்படுவது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பதன் சுருங்கிய வடிவம்தான். ஒரு அரசியற்துறைப் பொறுப்பாளராக இருப்பது என்பது அமிர்தலிங்கம் செய்த வேலையைச் செய்வது தான் என்று இதற்குப் பொருள். (மேலும்......)

“தமிழர்களைப் போல மலையாளிகள் அப்பாவிகள் அல்ல!”

(இரா.வினோத்)

யக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்...  75 ஆண்டு கால மலையாளத் திரையுலகின் உன்னதக் கலைஞன். கேன்ஸ், வெனீஸ், பாரீஸ், டொரன்டோ என ‌சினிமாவைக் கொண்டாடும் அத்தனை திரைப்பட விழாக்களிலும் இந்திய சினிமாவை உயர்த்திப் பிடிக்கும் படைப்பாளி. உலகமே கொண்டாடும் திரைக் கலைஞன் என்றாலும், திருவனந்தபுரத்தின் நகரமும் கிராமும் கைகுலுக் கும் ஸ்ரீகார்யத்தில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் களுக்குக்கூடத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார் அடூர். (மேலும்......)

புதுடெல்லிமாநாடுஉயர்மட்டக் குழுவினர்

இந்தியப் பிரதமமந்திரிஅலுவலகஅதிகாரிகளுடன் சந்திப்பு

யூன் 18 2013 ஈழ தேசிய ஜனநாயகவிடுதலைமுன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) யுடன் புலம் பெயர்தமிழ்ப் பேசும் மக்களும்(புதுடெல்லிமாநாட்டுஉயர்மட்டக் குழுவினர்) இணைந்து இந்தியப் பிரதமமந்திரிதிரு. மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசகர்; அவர்களைசௌத் ப்ளொக் (ளழரவா டீடழஉம) கட்டடத்தில் சந்தித்துப் பேசினர். இந்தியப் பிரதமரின் ஆலோசகருடன்,யூன் 14,15ந் திகதிகளில் புதுடெல்லியில் நடந்தமாநாட்டில் எடுக்கப்பட்டதீர்மானங்கள் பற்றிக் கலந்துரையாடினார்கள். இந்தச் சந்திப்பில் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1987 இந்திய-இலங்கைஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாற்ப்பரியங்களுக்கு இணங்க எதுவித தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைபிரதிநிதிகள் எடுத்துக் கூறினார்கள்.(மேலும்......)

தமிழ்க் கட்சிகளின் முதுகெலும்பு முறிந்து போனதா?

(கே.சஞ்சயன்)

13ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் விவகாரம் தான் இப்போது நாட்டின் முக்கியமான விவாதப் பொருளாகியுள்ளது. வடக்கு மாகாணசபைக்கு நடைபெறப்போகும் தேர்தலை விடவும், அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த 13ஆவது திருத்தச்சட்டத்தின் மீது தான், சிங்களத் தேசியவாதிகளுக்கு கூடுதல் வெறுப்பாக உள்ளது. மாகாணசபைகளை உருவாக்கிய 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை மாகாணசபைகளின் அதிகாரங்களையும் அதன் மூலம் கிடைத்த நலன்களையும் நன்றாக ருசித்த கட்சிகளும், அரசியல்வாதிகளும் தான், இப்போது அதற்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர். வடக்கு மாகாணசபையும், அதனை நிர்வகிக்கத் தெரிவு செய்யப்படும் அரசாங்கமும், இந்த நன்மைகளைப் பெற்றுவிடக் கூடாதே என்ற ‘பரந்த மனப்பாங்கே(?)‘ இந்த எதிர்ப்புக்குக் காரணம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதானால், தமிழர்களின் கையில் அதிகாரம் போய்விடக் கூடாதே என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. (மேலும்......)

மீண்டுமொரு அரபு வசந்தம் ?

பிரேசிலில் உக்கிரமடையும் போராட்டங்கள்!

பிரேசிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் குதித்துள்ளதுடன் பிரேசிலின் சுமார் 100 நகரங்களில் இவை நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் போக்குவரத்துச் செலவு, வரி வசூலிக்கும் அரசு பொதுச் சேவைகளை ஒழுங்காக வழங்காமை மற்றும் அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளையொட்டி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதாகவும் அதில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையாக முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொதுச் சொத்துக்களும் பாரியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.அரபு வசந்தம் பாணியிலான போராட்டங்களே இங்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனி 20, 2013

என் மனவலையிலிருந்து.....

காலம் கடந்த ஞானம், தமிழ் மக்களின் உரிமைகளை காப்பாற்றுமா......?

(சாகரன்)

மனித நேயம் மிக்க ஒரு தலைவரை பரந்துபட்ட அளவில் பலராலும் உலகெங்கும் நினைவு கூரப்படும் நிகழ்வுகள் இன்று நடைபெற்று இருக்கின்றன. இன்னும் நடைபெற உள்ளன. ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் தலைவர்களின் மனித நேயத்தின் அடையாளச் சின்னம் என்றால் அது பத்மநாபா தான் என்பது அவரின் எதிரிகளால் கூட ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். இதேபோல் மனித நேயம் அற்ற பாசிச வெறியன் என்றால் அது பிரபாகரன் என்பது அவரின் இயக்கதவர் மட்டும் அல்ல அவரின் எதிரிகளும் ஏன் அவரின் வலிந்த வாழ்வுத்துணையும் நம்பும் விடயம் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிந்த விடயம். அதனால்தா அவரின் சகாக்களால் கூட அவரின் மரணம் நினைவு கூரப்படமூடியாத துர்பாக்கி நிலமைகளை அவர்களின் சகாக்களுக்கே ஏற்படுத்தியுள்ளது. 23 வருடங்களுக்கு பின்னரான இந்த பத்மநபா பற்றிய புரிந்துணர்வுகள் மக்கள் மனங்களில் மாற்றங்களை கொண்டுவருமாயின் அதுவே பத்மநாபா நம்பிய, செயற்படுத்த முயன்ற அரசியல் வெற்றியாக அமைய முடியும். இதனை அவர்களின் அரசியல் வழித் தோன்றல்கள் முன்னெடுத்து செல்வதன் மூலமாவே இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். இதற்கு அனைத்து ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரிச் சக்திகளின் இணைந்த ஐக்கியப்பட்ட செயற்பாடு அவசியம் ஆகும். மாறாக மக்களை உசுப்பேத்தும் தேசியம் என்ற போதை வஸ்து உதவிபுரியாது. இலங்கை அரசினது, பேரினவாத வெறியர்களினதும் 13 வது திருத்தச் சட்டதை இல்லாமல் செய்தல் என்ற தமிழ் மக்களுக்கு எதிரான மேலாதிக்கமும், பாகுபாடும் தோழர் பத்தமநாபாவின் தேவையையும், அவரின் வாழும் காலத்து தீர்க்கதரிசன அரசியல் முடிவுகளையும் வேண்டி நிற்கின்றன. அவரின் தேவையை அன்றே பலரும் தாங்கிப் பிடித்திருந்தால் முள்ளிவாய்கால் வரையிலான பாரிய மனித அழிவுகளையும், ஆயுதம் தாங்கி அநியாயமாக விட்டில் பூச்சிகள் போல் புலிகளால் பலியாக்கப்பட்ட பல இளைஞர்களையும் நாம் காப்பாற்றி இருக்க முடியும். சரி இன்றாவது இதன் உண்மை தன்மையை அறிந்து அதன் வழியல் நாம் ஒன்று திரளுவதன் மூலம் இலங்கையில் உள்ள சகல மக்களுக்குமான சம, சக வாழ்வை உறுதி செய்வோம். இதற்கான தலைமையையும், உழைப்பையும் செலுத்தவல்ல திறமைசாலியான அனுபவம் மிக்க தலைவர்களை இனம் காண்போம். (ஆனி 20, 2013)

வடக்கு தேர்தலுக்கு முன் அதிகாரங்களில் மாற்றமில்லை - அரசு

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம். சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். அதேபோல, நாம் இப்போது முகம்கொடுத்துள்ள நிலைமையை இந்தியா விளங்கிக்கொள்ளும். இலங்கை மக்களுக்கு நல்லதை செய்வதற்கு இந்தியா எம்மை அனுமதிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ராஜித, வாசுதேவ, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பொதுபல சேனா

ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருக்கு தேவையான வகையில் 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத இடதுசாரி அணியில் இருக்கும் சிலர், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை எனக் கூறுகின்றனர். அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு கூறுகின்றனர்.  அதற்காக அவர்கள் குரல் கொடுப்பார்களாம். முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று நாங்கள் சவால் விடுக்கின்றோம். மக்களின் வாக்குரிமைகளை கொள்ளையிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றவர்கள் இவர்கள், மக்களின் உரிமைகளை கொள்ளையிட இடமளிக்க போவதில்லை.

 மத்திய அரசின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை - புளொட்


'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.'1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று  சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டார். 'தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.  இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களின் இந்தச் செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாகவே அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது' என்று சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

திறந்த பல்கலைகக்கழக சட்டபீடத்தின் தலைவி யசோதராவுக்கு கத்திக்குத்து

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காயங்களுக்குள்ளாகி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சட்டபீடத்தில் கற்கும் மாணவரான சிவஞான சுந்தரம் சுரேந்திர ஜித் என்பவரே சட்டபீடத் தலைவியைக் கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குட்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் இவரைப் பின்னர் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக சட்டபீடத் தலைவியை கத்தியால் குத்திய மாணவன் அவ்விடத்தில் வைத்தே ஏதோ ஒரு மருந்தொன்றை உட்கொண்டுள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான யசோதரா கதிர்காமத்தம்பி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவருக்கு எந்தவித உயிராபத்தும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர் குறித்த நாளில் தமக்கான ஒப்படை அறிக் கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளார். காலங்கடந்த தமது ஒப்படை அறிக் கையை பொறுப்பேற்குமாறு சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத் தம்பியிடம் பலவந்தப்படுத்தியதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்காவுடன் பேச்சை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்

இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஆப்கான் அரசு இடைநிறுத்திக் கொண்டுள்ளது. தலிபான்களுடனான அமைதி செயற்பாடு தொடர்பில் அமெரிக்காவின் கருத்து மற்றும் செயலில் முரண்பாடு காணப்படுவதாக குற்றம்சாட்டியே ஆப்கானிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளது. தலிபான் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை கட்டாரில் அரசியல் அலுவலகம் திறந்ததை அடுத்து அந்த அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா அறிவித்ததை அடுத்தே ஆப்கான் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் தலிபான்களின் கட்டார் அலுவலகத்திற்கு சூட்டப்பட்ட பெயரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.“அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை ஜனாதிபதி இன்று காலை (புதன் கிழமை) இடைநிறுத்திக் கொண்டார்” என ஜனாதிபதி ஹமிட் கர்சாய்யின் ஊடகப் பேச்சாளர் அய்மால் பாய்சி ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். “ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்கா வெளியிடும் கருத்துக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகிறது” என்றும் பாய்சி குறிப்பிட்டார்.

புலிகள் முகப்பு நிறுவனங்களை தடைசெய்ய கோரிக்கை

அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகப்பு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்வதாக கூறிய இலங்கை, இவர்களை அவுஸ்திரேலியாவிலிருந்து தடைசெய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கொனருடனான பேச்சுவார்த்தையின்போதே இக்கோரிக்கையை முன்வைத்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கான பூரண ஆதரவை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் றொபேட் கா மீண்டும் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான திருத்தப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வரவேற்றார். அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் அனா பேக், எதிர்க்கட்சித் தலைவர் ரொனி அபொட், எதிர்க்கட்சிகளின் பிரதித் தலைவர் யூலி பிஷப், குடிவரவுக்கான நிழல் அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் ஆகியோருடனும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆனி 19, 2013

பத்மநாபாவின் 23ஆவது ஆண்டு நினைவு; வடக்கு, கிழக்கில் அனுஸ்டிப்பு

(எஸ்.கே.பிரசாத், எம்.எஸ்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், தேவ அச்சுதன் )

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)யின் முன்னாள் செயலாளர் நாயகம் கே.பத்மநாபாவின் 23ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை, வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.  வடக்கில் யாழ்ப்பாணத்தில்  உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போராட்ட காலத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில்  புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தாத்தன், ஈழமக்கள் புரட்சிகர மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பெற்றோர் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். (மேலும்.....)

ஆஸியில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது. 2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில், தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு, தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலையில் 

23 வது தியாகிகள் தினம்

இன்று காலை 9.00 மணியளவில் 23வது தியாகிகள் தினம் திருகோணமலையில் உள்ள பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழர்களால் திருருஞான சம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் வாசிகசாலையில நடாத்தப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றி தோழர் பத்மநாபா, அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து இறந்த எமது தோழர்கள், மாற்று இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட அஞ்சலியுடன் தோழர் சத்தியன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் துரைரெட்ணசிங்கம், உபதலைவர் கோணேஸ்வரன் மற்றும் தோழர் தில்லை முகிலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அத்துடன் மூன்று ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் நான்கு இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து  இலவச கண்பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பத்மநாபாவின் தீர்க்கதரிசனம்

முன்பு எப்போதையையும் விட தற்போது அதிகம் பேசப்படுகின்றது

(தோழர் ஜேம்ஸ்)

கால் நூற்றாண்டிற்கு முன்பு 1987ம் ஆண்டு தோழர் பத்தமநாபா தீர்க்க தரிசனத்துடன் இந்திய அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாகப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை ஏற்று முடிந்தளவில் சகல வடக்கு கிழக்கு ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இணைத்து மூவின மக்களுக்குமான மாகாண சபை நிர்வாகத்தை உருவாக்கினார். இவ் மகாண சபை நிர்வாகத்தை திறம்பட செயற்படுத்த தகுதிகாண் நபராக வரதராஜப் பெருமாளையும் அமர்த்தினார். இந்த 13 வது திருத்தச்சட்ட மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறமையான இலங்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு செயற்படுவதற்து எற்ப நாம் செயற்படவேண்டும். இது ஒரு முழமைபெற்ற அரசியல் தீர்வு அல்ல மாறாக இதனை ஒரு ஆரம்ப புள்ளியாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சர்வதேசிய அரசியல் சூழலில் நாம் உள்ளோம். இதனை நாம் திறம்பட பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும் என்று நம்பினார். இதன் வழியில் செயற்படவும் விளைந்தார். (மேலும்....)

மன்னிக்கத்தெரிந்த உள்ளங்கள் மாணிக்கக்கோயில்கள்...

ஆம் தோழர் நாபா அவர்கள் ஒருமுறை சாவகச்சேரி அமீன் தோழர் கோட்டைக்காப்பரணில் கடமையிலிருந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிகுண்டுகள் எதிரியின்பக்கமிருந்துவராமல் பாசிசத்தின்பக்கமிருந்துவந்தது.அமீன் கொல்லப்பட்டான். ஈழமெங்கும் எழுர்ச்சியடைந்தது. நாபா சகோதரப்படுகொலைவேண்டாம். என்றுகூறி தோழர்களைச் சமாதானப்படுத்தினார். தோழர் நாபா செல்லுமிடமெல்லாம் துப்பாக்கிகளை தூக்கிச்செல்லவில்லை நல்ல கருத்துக்களையே கொண்டுசென்றார்.ஈழப்போராட்டமென்றுகூறி குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டவில்லை எங்கெங்கெல்லாம் விடுதலைப்போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் கைகோர்த்து நிற்பான். எல்சல்வடோர். சில்லி, பலஷ்தேனம். நமீபியா. கொங்கோ இப்படிப்பல நாடுகளோடு ஐக்கியம்பேணிவந்தார். வாழ்க தியாகிகளின் நாமம்.

சப்ரகமுவ மாகாண சபை

13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு: பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

13வது திருத்தச் சட்டத்தை ஆதரித்து சப்ரகமுவ மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று சபை பிரதித் தலைவர் துஷ்மந்த மித்ரபாலவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் அவசரமாக சபைக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமான பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதன் போது, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையில் விவாதம் இடம்பெற்றது. மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் 13ஆவது திருத்திச்சட்ட பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது:- 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில், மாகாண சபைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளை இணைப்பதே முதல் நோக்கமாகும் என்று அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 30 வருட காலமாக நாட்டில் இருந்த யுத்தத்தை முறியடித்து தற்போது நாடு அபிவிருத்தியடைந்துவரும் வேளையில், மாகாண சபைகள் மூலம் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது மாகாண சபைகள் அனைத்தும் இணைவதன் மூலம் சரியான தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இடமாற்ற முற்பட்டதற்கு எதிர்ப்பு

தமிழகத்திலிருந்து இரு இராணுவ அதிகாரிகள் நாடு திரும்பினர்

தமிழ் நாட்டின் வெலிங்டன் இராணுவ பாடசாலையில் பயிற்சி பெற்று வந்த இராணுவ அதிகாரிகள் இருவர் இராணுவ பயிற்சியில் இருந்து விலகி நேற்று கொழும்பு திரும்பியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இலங்கை படைவீரர்கள், அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் இலங்கை படைவீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி இரு இராணுவ அதிகாரிக ளையும் இந்தியாவிலுள்ள வேறு இரா ணுவ பாடசாலைகளுக்கு மாற்ற இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்த போதும் அங்கு கேர்ணல் தரத்திலான சிரேஷ்ட அதிகாரிகளே பயிற்றப்படுவதால் அதனை நிராகரித்ததாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்க மையவே இரு இராணுவ அதிகாரிகளும் இராணுவப் பயிற்சியில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளனர். கடந்த 40 வருடங்களாக இலங்கை படையினருக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இரு இராணுவ வீரர்களும் வில க்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உற வில் பாதிப்பு எழாது எனவும் தெரி விக்கப்படுகிறது.

வடக்கு தேர்தலில் ஜனாதிபதியே வெல்வார் - சித்தார்த்தன்

'தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால் வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி கொள்வார். அதில் எவ்வித ஜயமுமில்லை' என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'மாகாண சபை தேர்தலில்  அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தேர்தலில் பலத்தினை பெறவேண்டும். அதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் ஒற்றுமையுடன் செயற்படுவோம்' என்றும் அவர் கூறினார். 'அதேவேளை, உள்ளூராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே பிரச்சினைகள் நடைபெறுகின்றன. உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினை படுவதினாலேயே உள்ளூராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது' என்றும் அவர் கூறினார். அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்' என்றும் அவர் மேலும் கூறினார்.

சென்னையில் 23வது தியாகிகள் தினம்

சென்னை புழல் அகதிகள் முகாமில் இன்று(19.6.13) காலை 7.30 மணியளவில் தியாகிகள் தினத்தை ஒட்டி ஈழவிடுதலைப் போராட்டத்தில் நீதிக்காவும், ஜனநாயத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும், மனிஉரிமைகளுக்காகவும் மரணதித்த தோழர்கள் பொதுமக்களுகாக அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இரண்டு நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்விற்கு பத்மநாபா-ஈ.பி,ஆர்.எல்.எப் தோழர் ஸ்ரனிஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரசின் புழல் பகுதி பொறுப்பாளர் லாரன்ஸ் அழைக்கப்பட்டார். தோழர் பத்மநாபா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்தினார். ஈ.என்.டி.எல்.எப் தோழர் குட்டி தலைமையில் ஈ.என்.டி.எல.எப் தோழர்கள் பங்குபற்றினர். புழல் முகாமில் உள்ள எமது தோழர்களும் பங்குபற்றினர். தியாகிகள் தின நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் தோழர்பத்மநாபா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்

சென்னை

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணி சுவிஸ் கிளையின் தோழர்களின்  இதயஅஞ்சலிகள்.

பத்மநாபா என்பது அவரது சொந்தப் பெயராயினும் அவரது குடும்பத்தவர்களும் நெருங்கிய உறவினர்களும் அவரை பத்தன் என்றே அழைப்பார்கள். நண்பர்களும் மற்றவர்களும் அவரை நாபா என்று அழைத்தார்கள். 1977க்குப் பின்னாலேயே அவரது அரசியல் தலைமறைவு வாழ்க்கையில் பரவலாக அவரது பெயர் தோழர் ரஞ்சன் என்றே வழங்கிற்று. 1982ஆம் ஆண்டும் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அவர் கொழும்பிலுள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் மலையக இளைஞர்கள் மத்தியிலும் புரட்சிப் பணிகளில் ஈடுபட்டபோது தமது பெயரை சேரன் எனப் பயன்படுத்தி வந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் அவரது பெயர் நீண்ட காலமாக தோழர் எஸ்.ஜி என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது.  ஸ்தாபனத்தில் அவர் கொண்டிருந்த செயலாளர் நாயகம் (Secretary General) பதவிப் பெயரின் ஆங்கில ஆக்கத்தின் முதலெழுத்துக்களே எஸ்.ஜி. என்ற பெயராகும். இது அவரின் பதவிப் பெயரைக் குறிப்பதாக இருந்த போதிலும் நாளடைவில் தோழர்கள் மத்தியில் எல்லோராலும் அழைக்கப்படும் பெயராகியது. ஸ்தாபனத் தோழர்கள் மட்டுமல்லாது ஸ்தாபனத்தோடு மிக நெருக்கமாக நட்புக் கொண்டு உழைத்தவர்களும், பழகியவர்களும் கூட அவரைத் தோழர் எஸ்.ஜி. என்றே அழைத்தனர். (மேலும்....)

தோழர்பத்மநாபா அவர்களின் 23வது நினைவு நாள்

தோழர்பத்மநாபா மற்றும் பன்னிரெண்டு தோழர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நாளை அவரது கட்சியினர் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்தி ஜீன்19 இல் இதனை அனுஸ்டித்து வருகின்றனர். இந்த தியாகிகள் தினமானது ஈழ விடுதலைப் போராட்டத்தில் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், ஐக்கியத்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் குரல்கொடுத்து செயல்பட்ட போது  கொல்லப்பட்பட போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூருமுகமாகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. (மேலும்....)

ஆனி 18, 2013

என் மனவலையிலிருந்து.....

இலங்கையில் தமிழ் ஊடகங்களின் பத்திரிகா தர்மம்

(சாகரன்)

சில மணிநேரத்திற்குள்……

’13 ஐ காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்; டில்லியில் பெருமாள், சங்கரி வலியுறுத்தல்’

ஏன்ற பிரசித்தமான செய்தி (இணையத்தளம் இவ்வாறுதான் குறிப்பிடுகின்றது)

‘முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு, பாடசாலையும் மூடப்பட்டது’

என்ற செய்தியால் மாற்றப்பட்டது.

இதனைச் செய்தது வேறுயாரும் அல்ல இலங்கையின் ஒரு பிரபல்ய செய்திப் பத்திரிகையின் இணையத்தளம். இதுதான் இன்றைய இலங்கை தமிழ் ஊடகங்களின் ஐனநாயக, நடுநிலமைச் செயற்பாடாக உள்ளன. மாற்றுக் கருத்தாளர்களின் செய்திகளை தவறுதலாக முதன்மைப்படுத்தி பிரசுரித்த பின்பு மிக, மிக அவசரமாக அதனை மாற்றீடு செய்தது மட்டும் அல்லாது இச் செய்தியை முற்று முழுதாக தமது செய்தி தளத்திலிருந்தே அகற்றியது என்பது கருத்துக்களை, செயற்பாடுகளை மூடி மறைக்கும் மழுங்கடிக்கும் செயல் ஆகும். இதுபோன்ற தொடர்சியான செய்திகளை மூடிமறைக்கும் செயற்பாடுகள்தான் தமிழ் சமூகம் உண்மைநிலையை அறியமுடியாமல் தேசிய வெறிக்குள்ளும், பிழையான தலமைக்குள்ளும் மூழ்கிக் கிடக்கும் அபாயகரமான நிலமைகளை ஏற்படுத்தி இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தீர்கப்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்து வருகின்றது. சரியான தலமைத்துவத்தை உருவாக்க முடியாமல் இருப்பதற்கு இப் பத்திரிகைகள் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்கின்றன. ஆனால் தாம் தமிழ் மக்களின் பிரசனைகளை தீர்ப்பதில் குரல் கொடுப்பவர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியத்தின் காவலர்கள் என்று தம்மைக் காட்டி செயற்படுவதில் இவர்கள் ஆகாய சூரர். இதற்கு இலங்கையிலிருந்து வெளிவரும் பெரும்பான்மை தமிழ் பத்திரிகைகள், இணையத் தளங்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தற்போது மாற்றுக் கருத்தாளர்கள் தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் பரந்துபட்டு கொண்டு செல்வதற்கு ஒரு ஜனசஞ்சரமான ஊடகத்தின் அவசியம் உணரப்படுகின்றது. மாற்றுக் கருத்தாளர்கள் எவ்வளவுதான் சரியான கருத்தியல், செயற்பாடுகளை கொண்டிருந்தாலும் இவற்றை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்ல ஜனசஞ்சரமான பத்திரிகை ஊடகம் இல்லாவிட்டால் இவர்களின் கருத்துக்கள், செய்திகள், செயற்பாடுகள் இவர்களை சுற்றியுள்ள ஒரு சிறுவட்டத்திற்குள் மட்டுமே சுழன்றுகொண்டு இருக்கும். மாறாக பரந்துபட்ட மக்களைச் சென்றடைய வாய்புக்கள் இல்லாமல் போய்விடும். இதுவே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. சிங்கள ஊடகங்களில் தமிழ் ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரிகளின் கருத்துக்களை முன்னெடுத்து செல்ல இன்னமும் பல பலம் வாய்ந்த ஊடகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே மக்களுக்கான அரசியல் மாற்றத்திற்கான போராட்டம் வெற்றி முதலில் ஏற்படக் கூடிய வாய்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் அதிகளவுள்ளது. தமிழ் மக்கள் 'வீடு' இற்குள் முடங்கி தொடர்ந்தும் அடிமைப்பட்டுக் கிடக்கவே இந்த தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் செயற்பட்டுவரும். எனவே ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகளுக்கு இன்றைய உடனடித் தேவை தமது கருத்துக்களை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு ஜனசஞ்சரமான பத்திரிகையே ஆகும். இதனை இவர்கள் உடனடியாக செயற்படுத்தியே ஆகவேண்டும். (ஆனி 18, 2013)

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு, ஆளுங்கட்சி பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றுக்கோரியே அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையமர்வு இன்று நடைபெற்றது. சபையமர்வின் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த சகல உறுப்பினர்களும் பிரசன்னமாய் இருந்தபோதிலும் ஆளும் கட்சியில் ஒரு உறுப்பினர் மட்டுமே சமூகமளித்திருந்தார். ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினரான ஜயந்த விஜயசேகர மட்டுமே வருகைதந்திருந்தார். (மேலும்....)

19 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் - ராஜித

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் இரண்டு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37 ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். மாகாண சபை முறைமையின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியும் என்ற சட்டம் தற்போது இறந்துபோய்விட்டது. எனவே அதனை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதை ஆதரிக்க முடியாது. மாறாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற 37 ஆவது பிரிவை நீக்கிவிடலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் மற்றும் அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் எப்போதோ காலாவதியாகி விட்டது -  அமைச்சர் சம்பிக்க

இலங்கை - இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டது. இனி அது குறித்து எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை. தொட்டதற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினருக்கும் பொருந்தும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். சம்பந்தன் குழுவினருக்கும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட 13 ஆவது திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும் இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஒன்று முள்ளிவாய்க்கால் அழிவுப் பாதை, இரண்டாவது ஏ-9 சமாதான பாதை. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்தாலும் எமக்கு பிரச்சினையில்லை வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தமிழீழக் கனவை இல்லதொழிக்க அனைத்து வகையிலும் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2005இல் புலி உறுப்பினரை நினைவுகூர பெயர் மாற்றம்

யாழ். வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராமத்தை முன்னைய பெயரில் அழைக்க உச்சமன்றில் இணக்கம்

2005ம் ஆண்டு மாவீரர் தினத்தில் மரணித்த எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் சிந்துபுரம் எனப் பெயரிடப்பட்ட யாழ்ப்பாண வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராமத்தை மீண்டும் முன்னைய பெயரில் அழைக்க வலிகாமம் மேற்கு பிரதேச சபை நேற்று (17/6) உச்ச நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தது. இதன் பிரகாரம் தற்போது சிந்துபுரம் வர்த்தகச் சந்தை என குறிப்பிடப்படும் பெயர்ப்பலகையை நீக்கி, அதற்கு வட்டுக்கோட்டை வர்த்தக சந்தை எனப் பெயரிடுமாறும் உச்ச நீதிமன்றம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலருக்கு உத்தரவிட்டது. வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி பிரதேசத்தில் வாழும் பத்துப் பேரும் 32 நிறுவனங்களும் பிரதிவாதிகளாக இருந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீதான மனுவைப் பரிசீலித்துப் பார்த்த வேளையிலேயே இந்த இணக்கம் காணப்பட்டது. யாழ்பாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் அதிகாரம் நிலவிய வேளையில் புலி ஆதரவாளர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி மாவீரர் தினத்தில் இக்கிராமத்தின் பெயரை சிந்துபுரம் என மாற்றினர்.

பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தள கூட்டணி உடைந்தது

17 ஆண்டு உறவை முறித்தது ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா கூட்டணி உடைந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இடையே கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்த கூட்டணி நேற்று முன்தினம் (16) முறிந்தது. இதையடுத்து, பாரதிய ஜனதா கூட்டணி உடைந்தது. பீகார் சட்டப் பேரவையில் பா.ஜ. ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். கட்சியரை சந்தித்தது, பா.ஜ.வுடன் உறவு முறிந்து விட்டது. பலத்தை பேரவையில் திரூபிப்பேன் என்று நிதிஷ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ. ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. தே.ஜ.கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் இரண்டாவது பெரிய கட்சியாக கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்தது. பா.ஜ.வுடன் கூட்டணியில் இருந்தாலும், குஜராத் கலவரத்தில் தொடர்புடைய முதல்வர் நரேந்திர மோடியிடம் இருந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போதும் விலகியே இருந்தார். ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மத்தியில் தே.ஜ. கூட்டணி அடுத்து ஆட்சி அமைக்க விரும்பினால் இன்னும்பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும். 272 எம்.பிக்கள் கிடைத்தால்தான் ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும். பாஜ.வுக்கு ஆதரவாக மாய அலை வீசும் என அவர்கள் நம்பினால் அது தவறான கருத்து இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

ஆனி 17, 2013

என் மனவலையிலிருந்து.....

மணிவண்ணன் வகையாறாக்கள்

பிழைப்பிற்காக மட்டும் குரல்கொடுக்கும் தமிழ்நாட்டுச் சினிமாக்காரர்

(சாகரன்)

ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் ஈழத்தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், 'மாவீரர்கள்' என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல. ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனையுண்டு. இதனைத் தீர்த்து வைப்பதில் இலங்கையை மாறிமாறி ஆண்டு வரும் அரசுகள் உள சுத்தியுடன் செயற்படவில்லை, செயற்படுவதும் இல்லை. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற இரும்புத்திரைக்கூடாக பார்ப்பதுவதே இலங்கை அரசுகள் செய்துவரும் காரியங்கள் ஆகும். ஈழத்தமிழ் மக்களின் விடிவிற்காக அகிம்சாவழியிலும், ஆயும் ஏற்திய போராட்ட வடிவத்தினூடும் போராடின பல தமிழ அரசியல் அமைப்புக்கள், விடுதலை இயக்கங்கள். இதனை தனித்து புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் செய்தன, செய்கின்றன என்று விழுந்த வளத்திற்கு குறிசுடும் பார்வையையே தமிழ் சினமாக்காரர் கொண்டுள்ளனர். அதிலும் சீமான் போர்வாளைத் தூக்கிய பின்பு இப்போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இக்குழாத்தில் ஒரு கறிக்குதவாத மீன்களில் மணிவண்ணனும் ஒருத்தர். கூடவே இவரைப்போல் பலரையும் பட்டியல் இடலாம். அப்படி பட்டியல் இட இவர்கள் யாரும் உத்தமர்களோ, சரியான அரசியல் பார்வையுடையவர்களோ அல்ல. சிறப்பாக புலம் பெயர் தேசத்து டாலர்களுக்காக வாலை ஆட்டும் ஜீவராசிகள் மட்டுமே இவர்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிரபாகரன் என்று ஒரு 'மாவீரன்' இருந்தான் இவன்தான் இலங்கை தமிழ் மக்களின் மீட்போன். இவனைத் துதிபாடினால் தங்கள் பிழைப்பு நன்றாக ஓடும், கூடவே சிறிய விளம்பரமும் கிடைக்கும் என்பது மட்டுமே. அதுவும் 1980 களில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள், இவர்களின் குரல் வளை புலிகளாலேயே நசுக்கப்பட்டது என்பதை பார்க்க விரும்பாவதவர்கள் இவர்கள். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழரின் நலன்களுக்காக எச்சில் கையால் கூட காகம் கலைக்காதவர்கள இவர்கள்;. சரி இவற்றை விடுவோம் தமிழ் நாட்டு மக்களின் நலன்களைப்பற்றி பேசாதவர்கள், போராடாதவர்கள் இவர்கள். இவர்களின் மரணம் சாதாரண ஒரு மனிதனின் மரணத்திறகுள் அடக்க முடியுமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவற்றையும் தாண்டி பெண்களின் சேலையை உருவும் 3ம் தர சினமாக்களைத் தவிர வேறு எதனைத்தான் இந்த துச்சாதனர்கள் சினிமாவாக எடுத்து மக்களுக்கு சேவை செய்து விட்டனர். கூடவே ஆண் மேலாதிக்கதின் வன்புணர்வு உச்சத்தைத் தவிர இவர்கள் வேறு எதனை தமிழ் சினிமா உலகில் செய்து விட்டனர். மணிவண்ணன் வகையாறாக்கள் சுத்த வேஸ்ர். இவரையும் தாண்டி சில நல்லவர்கள் தமிழ் சினிமா உலகில் இல்லாமலும் இல்லை. (ஆனி 17, 2013)

13ஐ காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்; டில்லியில் பெருமாள், சங்கரி வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் புதுடில்லிக்கும் பயணமாகியுள்ளார். இந்நிலையில், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்ற நிலையில் அதில் வரதராஜப் பெருமாளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாக ஆனந்தசங்கரியும் பங்கேற்றுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  (மேலும்....)

வட மாகாணத்தில் 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமனம்

உப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சி பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு, இன்று யாழ்ப்பாணத்துக்கு நியமனம் பெற்று வருகை தந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வட மாகாணத்தில் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிழக்கு முதல்வரின் செயற்பாடுகள் திருப்தி இல்லை; ஆளுங்கட்சியினர் முறைப்பாடு

கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்திறன் இல்லாதவராக காணப்படுவதாகவும் அவரின் செயற்பாடுகள் திருப்தியற்றவையாகக் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டமொன்றின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் விளக்கமளித்துள்ளனர். இதில் கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்றிறனில்லாதவராக காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும் ஆளுநர், அதிகாரிகளை பயறுத்தி வருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சர்களை மதித்து செயற்படுவதில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

13ஐ பலவீனப்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதில்லை - த.ம.வி.பு கட்சி

மாகாணசபை முறைமையையோ 13ஆவது அரசியல் அதிகாரத்தையோ பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஆதரிப்பதில்லை என்பதுடன், அதற்கு எதிராக தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனும் ஏனைய ஒருமித்த கருத்துடையவர்களுடனும் இணைந்து பணியாற்றுவது எனவும் அக்கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாணசபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பொதுக் குழுக் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

A 9 வட பகுதி மக்களின் சொர்க்கத்திற்கான வாயில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தென் பகுதியை விடவும் யுத்தம் காரணமாக அழிவுற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார். ஒரு காலத்தில் இவ்வீதி வழியாக சென்றவர்களிடம் வரி அறிவிடப்பட்டது. இப்போது அப்படியான நிலைமை இல்லை. எல்லா மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இவ்வீதியைப் பயன்படுத்தக் கூடிய சூழல் அரசினால் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இப்போது அற்ப அரசியல் நலன்களுக்காக அம் மக்களின் ஆணையைப் பயன்படுத்துகின்றார்கள். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எமது ஜனாதிபதி பிரதேச பேதங்கள் பாராது எல்லா பிரதேசங்களையும் ஒரே விதமாக அபிவிருத்தி செய்யவே நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதற்கு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் நல்ல எடுத்துக்காட்டு. ஜனாதிபதி அவர்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் உயிர்களைத் தவிர்ந்த இழப்புகள் அனைத்தையும் மீளப்பெற்றுத் தருவதாகக் கூறினார். அது இப்போது இடம்பெற்று வருகின்றது என்று குறிப்பிட்டார்.

ஆனி 16, 2013

என் மனவலையிலிருந்து.....

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புத்தி பேதலித்த வீர வசனங்கள்

(சாகரன்)

கடந்த ஒருமாத காலமாக சிறப்பாக வடக்கு மாகாண தேர்தல் செப்டம்பரில் நடைபெறும் என்ற செய்திகள் வெளிவந்த நாட்களில் இருந்து இலங்கையில் உள்ள சகல அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாய்களிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் சொல் 13 வது திருதச் சட்டம். இது தமிழ்நாட்டு கருணாநிதியையும் விட்டுவைக்கவில்லை. 1989, 90 களில் புலிகள், பிரேமதாஸ உடன் இணைந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகணசபையை இல்லாமல் செய்தவர்களில் கருணாநிதியும் ஒருவர். இன்று 13 வது திருத்தசசட்டத்தை தாங்கி;பிடிக்க? உரக்க குரல்கொடுக்கின்றார் என்றால் பாருங்களேன். இந்திய அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கு முழுமையான பரிணாமத்தை கொடுகக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதனால் அமைந்த மாகாண சபையை ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு மேலே நகர்ந்து செல்வதற்கு ஆதாராமாக இருந்திருக்கின்றது என்பதே உண்மைநிலை. அதுவும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைபையை தாங்கி தொடர்ந்திருந்தால் இந்த 20 வருடத்திற்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் 13 வதற்கு மேலே ஒரு பலமான நிலையை பலவேளைகளில் நாம் அடைந்திருக்க முடியும். இதனை அன்று நன்கு உணர்தவர்களில் இன்றைய பத்தநாபா ஈபிஆர்எல்எவ் இனர் முதன்மையானவர்கள். மற்றயபடி தமிழ் கட்சிகளில் புலிகள் முதன்மையாக பலரும் இதனை இல்லாது ஒழிப்பதில் அன்றைய ஐ.தே. கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள்தான். புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தச்சட்டத்தை பற்றி பேசி பொட்டம்மானால் காணாமல் போகவிரும்பவில்லை என்று காரணம் கூறினாலும், 1989 மே 18 இற்கு பிறகும் சம்மந்தன் உட்டபட இன்றைய அரியநேந்திரன் உட்பட பலரும் இதனை தாம் ஏற்கவில்லை என்று கூறிக்கொண்டே இந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனைபற்றி பேசப் புறப்பட்டு செல்கின்றனர். கடந்த தடவையும் இதேபோல் இந்திய அரசின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாஇற்கு பணயமாவதற்கு முன்பு சம்மந்தன் தாம் '13வது திருத்தச்சட்டத்தை ஏற்கவில்லை' என்று திருவாய் மலர்ந்து அருளி பின்பு இந்தியாவிற்கு இந்தி அரசுடன் பேசச் சென்ற புத்தி சாதுர்சியம் அற்ற செயற்பாட்டை செய்தார். இம் முறையும் இந்தியாவுடன் பேச தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி அரியநேந்திரன் சம்மந்தனுக்கு தான் சளைத்தவர் அல்ல என்பது போல் 'இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது' என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்கள்தான் உலகநாடுகள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அந் நாடுகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவந்திருக்கின்றன என்பதை இவர்கள் உணர்வார்களா...? ஏங்கள் பிரச்சனை தீர்கப்படாமல் இப்படியே இழுத்து செல்வதற்கு மற்றயவர்களைவிட நாமே பெரிதும் காரணமாக இருக்கினறோம் என்பதை உணர்ந்தால் சரி. (ஆனி 16, 2013)

தோழர் றொபேட் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு தினம்

தோழர் றொபேட் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு தினம் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (14.06.2013) முற்பகல் 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் றொபேட்டின் உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கலந்துகொண்ட தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செய்தனர். தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தோழர் குமார், தோழர் ஞானசக்தி, தோழர் சுகு ஆகியோர் உரையாற்றினர். (மேலும்....)

The resoluion passed on the conference held in the Constitution Club of India New Delhi. On Indo-Sri Lanka Accord(1987)

(more......)

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம்; இந்தியா இரட்டை வேடம் - தமிழ் தேசிய கூட்டமைப்பு அரியநேந்திரன் எம்.பி

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் மக்களிடமும் அரசாங்கத்திடமும் இந்தியா இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறது. இதுவே அவர்களின் வரலாற்று ரீதியான கொள்கையாகவும் காணப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். (மேலும்....)

தமிழ் வர்த்தகர்களை மிரட்டி வாஸ் கப்பம் பெற்றாரா? விசாரணை தொடர்கிறது

பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தன்னை விசாரணைக்குட்படுத்திவரும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தமிழ் வர்த்தகர்கள் அடங்கலாக பலரை அச்சுறுத்தி இலட்சக்கணக்கில் கப்பம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வினர் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகரான மொஹம்மட் சியாம் படுகொலை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குவர்தனவை விசாரணைக்கு உட்படுத்தியபோதே அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலி சந்தேக நபர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன விசாரணைக்குட்படுத்தியபோது அவர்களிடமிருந்து பல தமிழ் வர்த்தகர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

படகின் மூலம் கோகோஸ் தீவுக்கு சென்ற இலங்கைத் தமிழர்கள்

இலங்கை தமிழர்கள் என சந்தேகிக்கப்படும் 78 பேர் கொண்ட குழுவினர் பிரித்தானிய கப்பல் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சென்ற படகு செயலிழந்தன் காரணமாக பிரித்தானிய வர்த்தக கப்பலின் உதவியுடன் அவர்கள் அங்கு சென்றுள்ளனர். 
அதேவேளை கடந்த 12 ஆம் திகதி கோகோஸ் தீவுக்கு அருகில் மூழ்கிய தமிழ் குடியேற்றவாசிகளை ஏற்றிய படகு தொடர்பான நடவடிக்கைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டன.  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், தொடர்ந்தும் படகை தேடும் பணிகளை மேற்கொள்வதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் மூழ்கிய படகையும் அதில் இருந்து காணாமல் போனவர்களை தேடி கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா முன்னர் தெரிவித்திருந்தது.

ஆனி 15, 2013

ஜனாதிபதியினால் ஏ9 வீதி இன்று திறப்பு

சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியான ஏ9 வீதி, அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெற்று இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு வீதியினைத் திறந்துவைத்ததோடு வீதி அபிவிருத்திப்பணி நிறைவு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பெயர் சின்னத்தினையும் திறந்துவைத்தார். ஏ9 விதி அபிவிருத்திப் பணியானது கல்குளமவிலிருந்து யாழ்பாணம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 153 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வீதி அபிவிருத்திப் பணிக்காக சீன அரசாங்கம் 19.125 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. 153 கிலோ மீற்றர் கொண்ட இந்த வீதி புனரமைப்பின் போது 35 பாலங்களும் 273 மதகுகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை கிளிநொச்சியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மக்கள் வங்கின் கட்டிடமும் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி, அரச அதிபர்கள், யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவப் படையதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் வன்னி த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இன்று டெல்லி பயணமாகிறது ததேகூ

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் அவசர சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக அவர்களின் அழைப்பின்பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இரவு புதுடெல்லி பயணமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் புதுடெல்லிய பயணமாகின்றனர். புதுடெல்லி செல்லும் இவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரச பிரதிநிதிகளை சந்தித்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 'இந்திய அரசின் அழைப்பின் பேரில் செல்லும் நாங்கள், நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், இந்திய அரசாங்கத்தின் வகிபாகம் என்பன குறித்து விரிவாக விளக்கவுள்ளோம்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தத்தில் கைவைக்க விடமாட்டோம்

13 ஆவது திருத்தத்தில் கைவைப்பதற்கு நாட்டில் எவருக்கும் நாம் இடமளியோம். அதனை பாதுகாப்பதற்காக நான் எனது பதவியையும் இழக்கத் தயார் என மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் நான் ஆரம்பத்தில் இருந்து எனது கொள்கையில் மாறவில்லை. அதற்கு எதிராக செயற்பட்டுவரும் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு நான் எதிர்;ப்புத் தெரிவிக்கின்றேன். 13 ஆவது திருத்தம் தொடர்பில் கைவைப்பதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளியோம். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமை கொடுக்கப்பட்டால் ஈழம் உருவாகுமென பேசுபவர்கள் தற்போது தங்களை மாகாண சபைகளின் ஆட்சியை தீர்மானிக்கும் ரிமோட்கொண்ட்றோல் என சொல்லுகின்றனர். மாகாண சபை முறைமையின் கீழ் தமது வாழ்வாதாரத்தையும் அதன் சுகபோகத்தையும் அனுபவிப்பவர்கள் அதனை தமிழ் மக்களுக்கு வழங்கும் போது அகற்கு எதிராக கூக்குரல் இடுவதேன். இவ்வாறு பிரிவினைவாதம் பேசும் சிங்கள இனவாதிகளால் தான் தமிழ் இனவாதிகள் தோற்றம் பெற்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சியை முடித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வரவேற்பு

கடந்த வருடம் பொலிஸ் திணைக்களத் திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 65 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கள் அடங்கலாக 369 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) களுத்துறை பொலிஸ் பயற்சி கல்லூரியில் நடைபெறும். பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும். 30 வருட யுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து முதற்தடவையாக பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப் பட்ட 44 தமிழ் சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் 19 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இதன் போது பயிற்சிபெற்று வெளியேற உள்ளனர்.

தோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம்

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் இரட்சகர்கள்? சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கி பிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப்படுகிறது. (மேலும்....)

 

புலிகளின் நிறுவனங்களை அவதானிக்கவும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார். இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார்

பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்?

யாழில் இன்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார். குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது.

அரசியல் தீர்வு காண நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

ஓர் அரசியல் தீர்வை உருவாக்குவதற்காக அடுத்த வாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அவையின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த தெரிவுக்குழு அமைப்பதற்கான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசாங்கம், முன்னர் அடையப்பட்ட பொதுக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலொழிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அறிவித்துள்ளன. அவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கமைய சபாநாயகரினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்கள் நியமனம் செய்யப்படுவர். சகல மாகாணசபைகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாகாணசபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டம் இயற்ற முடியும் என்ற உறுப்புரையை 13ஆவது திருத்தத்திலிருந்து நீக்கிவிடுவது பற்றியும் இந்த குழுவில் ஆராய அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

ஆனி 14, 2013

13ஆவது திருத்தம்

அரசாங்கத்தின் சிறு கட்சிகளின் எதிர்ப்பு நிலையானதா?

அரசாங்கத்திற்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்ய முடியாது என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகிறது. முடியுமாக இருந்தால் அரசாங்கத்தின் தலைவர்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யாது மாகாண சபைகளிடமிருந்து இரண்டு அதிகாரங்களை மட்டும் பறிக்க சட்டம் கொண்டுவர முற்பட்டு இருக்க மாட்டார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அடிப்படையிலேயே அதிகார பரவலாக்கத்திற்கு எதிரான கட்சியாகும். 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதும் அக்கட்சி அதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியது. அதிகார பரவலாக்கலை மனப்பூர்வமாக ஆதரிக்கும் சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கிய காலத்தில் மட்டுமே அக்கட்சி அதிகாரப் பரவலாக்கலை ஆதரித்தது. (மேலும்....)

அரசுடன் இணைவு?

மறுக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வினோ எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் வினோ எம்.பி.க்கும் இடையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் கேட்டபோது, 'அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போகிறேன் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது' என்று குறிப்பிட்டார்.  (மேலும்....)

கரும்புலிகள் நினைவு நாளில் FeTNA என்ற களியாட்ட நிகழ்வா? பதட்டத்தில் கனடா தமிழர்கள்

ஜூலை 5, கரும்புலிகள் நாள் காலம் காலமாக ஈழத் தமிழர்களால் நிலத்திலும் புலத்திலும் மண்ணுக்காக மரணித்த உயிர்பூக்களை எண்ணி தொழும் நினைவெழுச்சி நாளாக இந்நாள் நடத்தபடுவது யாவரும் அறிந்ததே. மிகப் பெரிய அதிர்ச்சி என்னவெனில் தமிழின் பெயரால் நடாத்தப் படும் FeTNA வின் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஒரு நாள் நிகழ்வு இதே நாளிலும் பொழுது போக்கு கலை நிகழ்வாக டொராண்டோவில் வட அமெரிக்க தமிழ் சங்கத்தால் நிகழ்த்தப்படவுள்ளது என்பதே. இதற்க்கு கனடியத் தமிழ் காங்கிரஸ் (CTC) உறுதுணையாக நிக்கிறது?!. இனத்துக்காக மொழிக்காக உயிரள்ளி தந்து வெடித்து சிதறிய தற்கொடையாளரான கரும்புலிகள் நினைவு நாளில் FeTNA என்ற களியாட்ட நிகழ்வா? என கனடா வாழ் தமிழர்கள் சினத்துடன் உள்ளதாகவும் மேற்கொண்டு நிகழ்வு நடந்தால் என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் தமிழர்கள் உள்ளதாக தெரிகின்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என மேலும் செய்திகள் கூறுகின்றது. எது எப்படி இருந்தாலும் எப்பாடு  பட்டாவது இந்நிகழ்வு தடுக்கப்பட வேண்டும் என கனடா வாழ் தமிழர்கள் விரும்புவதாகவும், மறுத்து நிகழ்வு நடந்தால் ஒரு தமிழர்கள் கூட பங்கேற்காது புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இரணைமடு ஓடுதளம் சனியன்று திறப்பு

கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது. ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. அதேபோல இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது.  (மேலும்....)

வட மாகாணசபை தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் இலங்கையின் பாசாங்கை ஏற்க முடியாது - இந்தியா தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தை சீராக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கொழும்பு அரசாங்கம் மேற்கொண்டு வரும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள், வினைத்திறன் அற்றதாக அமையும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இவ்வாறு 13ஆவது திருத்தச் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு அரசாங்கம் ஒரு பக்கம் வடக்கில் தேர்தலை நடத்துவதுபோல பாசாங்கு செய்து, சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துகின்ற அதேநேரம், மாகாண சபைகளின் அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொள்ள இரகசிய நடவடிக்கை மேற்கொள்கிறது. இதனை எந்த வகையிலும் இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மன்னார் முதல் காலி வரை கடல் கொந்தளிப்பு

மன்னார், கொழும்பு முதல் காலி ஊடாகப் பொத்துவில் வரையான கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் அக்கடற் பரப்பு கடற்றொழிலில் ஈடுபட உகப்பானதல்ல என்று வளிமண்டலவியல் திணைக் களத்தின் வானிலையாளர் பலோதினி அருணாபால நேற்றுத் தெரிவித்தார். இதனையிட்டு கடற்றொழிலாளர் களுக்கு என 24 மணி நேர முன் னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டில் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விளைவாக மேல், தென், சப்ரகமுவ, மத்தி ஆகிய மாகாணங்களிலும், புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும். சில பிரதேசங்களில் சுமார் 100 மில்லி மீற்றர்கள் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி ஆகக் கூடிய மழை 138 மில்லி மீற்றர்கள் வரை பெய்துள்ளது. மன்னார், கொழும்பு முதல் காலி ஊடாக பொத்துவில் வரையான ஆழ மற்றும் ஆழமற்ற கடற்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. அத்தோடு இப்பகுதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளை இணைக்கும் அதிகாரத்தை நீக்குவதற்கு அமைச்சரவை ஏக அங்கீகாரம்

13வது திருத்தச் சட்டமூலத்தில் இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த யோசனை 13வது திருத்த சட்டத்தின் திருத்தமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அதேநேரம், தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்க முன்னர் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை மாற்றியமைப்பது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது யோசனை மற்றும் 13வது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து சகல கட்சிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனி 13, 2013

'ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள்' பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

'ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள்' என்னும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது என ஐ.நா. அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தாததினால் இலங்கை, சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.நா. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 2012இல் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் அடிப்படையில் நேபாளமும் இலங்கையும் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

13 ஆவது திருத்தம்

ஜனாதிபதி-பிரபா சந்தித்துப்பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்ற பிரபா கணேசனுக்கும் இடையிலான சந்திப்பில், கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்ட தோட்டப்புறங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இந்த மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு செய்வதற்கு  ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். அதற்கு மேலதிகமாக 13 ஆவது திருத்த சர்ச்சை சம்பந்தமாக ஜனாதிபதி கருத்துக்களை பரிமாறினார். அதே நேரம் பொலிஸ் காணி போன்ற அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்படுமேயானால் அதற்கு ஒரு போதும் நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதியும் இவ்விரண்டு அதிகாரங்களை குறைக்கப் போவதில்லை என என்னிடம் தெரிவித்தார். இருப்பினும் இரண்டு மாகாணங்களை ஒன்றிணைக்கும் அதிகாரத்தினை வழங்குவதில் பௌத்த பிக்குகளின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் ஆகவே அவ் அதிகாரத்தினை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சில சமயங்களில் முன்னெடுக்குமேயாயின் அதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

ஆனி 12, 2013

என் மனவலையிலிருந்து.....

தமிழ் கைதிகளின் அழுகுரல் கேட்கின்றதா....?

(சாகரன்)

தமழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமது பாராளுமன்ற பிரதிநிதிகளிடம்தான் இக் கோரிக்கைகளை கைதிகள்ன் உறவினர்கள் முன்வைக்க முடியும். ஆனால் இவற்றை த. தே. கூட்டமைப்பினர் அக்கறையுடன் கருத்தில் கொண்டு செயற்படுவார்களா என்பதே இங்கு கேள்விக்குறி...? தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு வசதியான கல்விகளை இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், ஏன் மகிந்த அரசின் செல்வாக்குடன் இலங்கையில் பெற்றுக் கொள்ளுவதில் காட்டும் அக்கறையின் ஒரு சிறு பகுதியையேனும் இந்த கைதிகளின் நலன்களில் காட்டியிருப்பார்களா...? என்பதற்கு இல்லை என்பதே பதில். இனிவரும் காலங்களில் மக்களின் நலன்களுக்காக செயற்படுவார்கள் இவர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சுரேஸ் தனது மனைவி, பிள்ளைகளை இந்தியாவில் சொகுசு வீட்டில் தங்கியிருக்க வைத்து இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வி கற்பதற்கு செல்வாக்கு செலுத்துவதற்கு நேரம் செலவிடவே அவரின் நேரங்கள் போதுமானதாக உள்ளது. இதேபோல் சம்மந்தரும் தமது பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சுகங்களை இந்தியாவில் உருவாக்கி கொள்வதில் அதிக நேரம் செலவிடுகின்றார். செல்வம் அடைக்கலநாதன் மன்னார் பேராயரின் ஆசீர்வாதத்துடன் திருச்சியில் தனது வியாபார முதலீடுகளை விஸ்தரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றார். எங்கே இவர்களுக்கு நேரம் உள்ளது தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை கவனித்தில் எடுக்க. ஆனாலும் இனிவரும் தேர்தலிலும் இவர்களையே இந்த மக்கள் தமது தெரிவுகளாக மேற்கொண்டு விட்டில் பூச்சிகள் போல் மாய்து போவோம் என்று சத்தியம் செய்து செயற்பட்டால் யார்தான் என்ன செய்ய முடியும். இதுதானே கடந்த 60 வருட தமிழ் அரசியல் போக்கின் பெருவாரியான செயற்பாடு ஆகும். (ஆனி 12, 2013)

உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு

13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்புக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடுத்த சில தினங்களில் புதுடெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளனர். கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சலமான் குர்ஷித், நிதியமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோரை சந்தித்தித்து, இலங்கை பிரச்சினனை தொடர்பாக தீர்மானகரமான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்திய இலங்கை உடன்படிக்கையுடன் தொடர்புடைய அதிகாரங்களின் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பில் ராஜதந்திர மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதற்காக இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பது குறித்து இந்திய கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்டத் திருத்தங்கள் -  வாசுதேவ

இன, மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடியவாறு சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இது தொடர்பான சரத்துக்களை சேர்க்க தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத்தின் ஊடாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேச பிரேரணை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. இன மற்றும் மத ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சில சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்கள் (Part 4)

 

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களையும், அதில் பாதிக்கப்பட்ட சிலரது வாக்குமூலங்களையும், செஞ்சோலை குழந்தைகளின் நிலைமை குறித்தும் தொகுத்து அண்மையில் வீடியோ வடிவில் வெளிவந்துள்ளது.. அதனை உங்கள் பார்வைக்கு தருகிறோம்..
(தகவல் & வீடியோ உதவி:  'என் கடமை தமிழா' - FB)

( Part 4 காணொளியை பார்வையிட.....)

திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும் - ஈ.பி.டி.பி

13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது. இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பாதுவிடின் அது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கும்; என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதேநேரம், இந்த சட்டமூலத்திற்கான எதிர்ப்பை ஸ்ரீலங்கா முஸ்லாம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'கைதிகளின் உறவினர்கள் த.தே.கூவுக்கு பகிரங்க மடல்'

'எதிர்காலமே இருள்' என்ற நிலையில் சிறையில் இருப்பதனால் பொருளாதார ரீதியாக அடிமட்ட பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விரீதியான செலவுகள் மற்றும் வாழ்விடம் என்பவைகளுடன் சட்டத்தரணி தொடர்பான உதவிகள் என பல உதவிகள் தொடர்பாக நாம் பலமுறை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எதுவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் உங்களிடம் எதிர்பார்த்திருப்பது, அரசியல் கைதிகளினுடைய அடிப்படை விடயங்களான குடும்ப நலன் மற்றும் சட்டரீதியான உதவிகளையேயாகும். இது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா? (மேலும்....)

மாகாண சபை ஓர் 'வெள்ளை யானை' - அமைச்சர் பைசர் முஸ்தபா

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமையானது ஒரு 'வெள்ளையானை' போன்றது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். பொலிஸ் அதிகாரம் மாகாண சபை பட்டியலுக்குள் வருவது நாட்டின் இறைமை மற்றும் பொலிஸ் சுயாதீனத்திற்கு பெரும் இடைஞ்சலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு மாகாண சபைகளை இணைத்து அதனை ஒரு சபையாக நிர்வகிக்கும் உறுப்புரையை திருத்துவதற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, வடக்கு தேர்தல் வியூகம் மற்றும் கிழக்கில் தேர்தல் வியூகம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணம் வடக்காகும். கிழக்கில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் இருமாகாணங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றவர்ளின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக அமையும். அத்துடன்.இரு மாகாணங்களையும் இணைப்பதனால்  கிழக்கு மாகாணத்தில் ஒன்றுகொன்று சமமாக வாழ்கின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனத்தவராக மாற்றப்படுவர். அத்துடன் இன விகிதாசாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் தலைமையிலான குழுவினர் மீது தாக்குதல், வாகனம் சேதம்

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை வலப்பிட்டிய பகுதியில் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடலில் உயிரிழந்த மீனவர்கள் சிலரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை ரணில் தலைமையிலான குழுவினர் பலப்பிட்டிய பகுதிக்கு சென்றுள்ளனர். மாலை 4.30 மணியளவில் பலப்பிட்டிய மீஹெட்டுவத்த பகுதியில் எதிர்கட்சி்த் தலைவர் ரணிலின் வாகனத் தொடரணி சென்றபோது 100றக்கும் மேற்பட்டவர்கள் கூடி நின்று கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலியே எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர் கார் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவர் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

13ஆவது திருத்த சட்டத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்காது - த.தே.கூ.

13ஆம் திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சியானது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்காது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். யுத்தம் முடிந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவேன் என ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று அத் திருத்தத்தை ஒழிப்பதற்கும் அதை திருத்துவதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சியானது இனப்பிரச்சினைக்கு தீர்வு எதுவும் வழங்கப்படமாட்டாது என்பதையே காட்டுகின்றது. இதனால் 13ஆவது திருத்த யோசனைகள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது இதை நாம் எதிர்க்கின்றோம். இந்த திருத்த பிரேரணைக்கும் அரசாங்கத்திலுள்ள இடது சாரி கட்சிகளின் அமைச்சர்களும் மற்றும் சில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பிரேரணையை எடுக்கக் கூடாது என்பதாகவும் கூறியுள்ளனர்.

13வது திருத்த சட்டமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது

1988, 89ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதும் அங்கு தமிழ்த் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பிரிவினைவாதக் கொள்கையிலேயே உள்ளனர். இந்த நிலையில் வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டம் திருத்தப்பட வேண்டும். முன்னர் தமிழ்த் தேசிய இராணுவத்தில் அங்கம் வகித்தவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ளனர். இவ்வாறு இருந்த ஒருவரே தற்பொழுது வடமாகாணசபையின் முதலமைச்சராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் அவர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளவில்லை. (மேலும்....)

காலநிலை தொடர்பாக

முன்னெச்சரிக்கை வந்த போது சகலதும் நடந்து முடிந்துவிட்டது

காலநிலை தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுப்பது கடற்றொழில் அமைச்சின் வேலையில்லை. எனினும் அனைத்தும் நடந்து முடிந்ததன் பின்னர் சொத்துக்களை உயிர்களை இழந்த மீனவர் குடும்பத்திற்கு உச்ச நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடற்றொழில பதிலமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்தார். காலநிலை முன்னறிவித்தல் 7ம் திகதி 12.00 மணிக்கு பெக்ஸ் மூலம் வந்த போதும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வில்லை. மாலை 4.00 மணிக்குரிய பெக்ஸ் எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மறுநாள் அதாவது 8 ஆம் திகதி அதிகாலை முன்னெச்சரிக்கை வந்தது. அப்போது சகலதும் நடந்து முடிந்துவிட்டது. காலநிலை முன்னெச்சரிக்கை தொடர்பான தகவலை கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்கள் தான். ஊடகத்துக்கு சரியான முறையில் முன்னெச்சரிக்கைகள் சென்றடைந்திருந்தால் அது சரியான முறையில் பிரசாரம் செய்யப்பட்டிருக்கும். 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றே காலநிலை நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கும் போது 70 முதல் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதற்கு மட்டும் முன்னெச்சரிக்கை விடுக்காததும் ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

தூத்துக்குடியில் நேற்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி பொது வேலை நிறுத்தம்

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி, தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் தலை தூக்கியுள்ளது. இதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் புதிதாக சேதுகால்வாய் திட்ட போராட்ட குழு துவக்கப்பட்டது. மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி இதனை துவக்கியுள்ளார். இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி, தூத்துக்குடியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனி 11, 2013

மாகாணசபை முறையில் கைவைக்கும் உரிமை இரு நாடுகளுக்கும் கிடையாது  - சங்கரி

'மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். 'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர் மானித்துள்ளதாக குடிவரவு, குடிய கல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரி வித்தார். வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர்வரை ஐரோப்பா உட் பட பல்வேறு நாடுகளிலும் வசிக் கின்றனர். அவர்கள் இலங்கைப் பிர ஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்ற பின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கையரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜாஉரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

13ஆவது திருத்தம்

நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட்ட மாற்றம் மக்களின் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டதல்ல

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறையில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான மாற்றம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்டதல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய லலித் வீரதுங்க, நாட்டு மக்களின் விருப்பமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ இன்றியே அரசியல மைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறைமை முழுமையாக மாற்றப்பட்டது எனவும் தெரிவித்தார். அன்று மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை நிறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகர் அப்போதிருந்த இலங்கை ஜனாதிபதியைக் கோரியிருந்தார் என குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க: நாட்டை ஆக்கிரமிப்பதா? அல்லது 13 வது திருத்தத்தை நடை முறைப்படுத்துவதா என்ற வகையில் அந்த அழுத்தம் அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார். (மேலும்....)

குசைர் வெற்றிக்கு பின்

அலப்போ நகர் மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் சிரிய படை

குசைர் நகரை கைப்பற்றிய உற்சாகத்துடன் சிரிய அரச படை கிளச்சியாளர் வசமிருக்கு வடக்கு நகரான அலப்போ மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்க தயாராகி வருகிறது. இந்த பாரிய இராணுவ நடவடிக்கை இன்னும் ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது தினங்களிலோ ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு பிரிவை மேற்கோள் காட்டி அரச ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்காக பெருமளவான அரச படைகள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கான சமிக்ஞைகள் தென்படவில்லை என செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். லெபனான் எல்லைப்பகுதியில் இருக்கும் குசைர் நகரை சிரிய படை ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவுடன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டுள்ள நிலையிலேயே அது அலப்போ மீது கவனம் செலுத்தியுள்ளது. இதில் கிளர்ச்சியாளர் வசமிருந்த குசைர் நகரின் கடைசி கிராமத்தையும் அரச படை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டது. கடந்த ஆண்டு தொடக்கம் வடக்கு சிரியாவின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் தன் வசம் வைத்திருந்தனர். இதில் அலப்போ நகர் கிளர்ச்சியாளர்களின் முக்கிய தளமாக செயற்பட்டு வருகிறது. எனினும் அரச படையின் குசைர் நகர வெற்றி சிரிய உள்நாட்டு யுத்தத்தில் திருப்புமுனையாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் நம்புகின்றனர்.

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் கைது

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்றிரவு வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டதன் பின்னரே அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கொலைச்சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கடந்த 06 ஆம் திகதி வியாழக்கிழமை குற்றப்புலாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிவிலியன்கள் இருவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனி 10, 2013

அடுத்த ஆண்டில் 13 பல்கலைக்கழகங்களை நிறுவ நடவடிக்கை

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்வூட் அழகியற்கலை மையத்திலும் சபுகஸ்கந்த தொழில் பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவப்படும். ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரி நிறுவப்படும். அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியில் தேசத்திற்கு மகுட கண்காட்சிக்காக நிறுவப்பட்ட புதிய கட்டிடங்களில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்படும். இதற்கு மேலதிகமாக 09 பல்கலைக்கழக கல்லூரிகளை இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுரம், பொரல்ல, கட்டுபத்த மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டலஸ் அழக்பெரும அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனத்த கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடி, நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார் என்றும் அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர், தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்கள் (Part 3)

 

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களையும், அதில் பாதிக்கப்பட்ட சிலரது வாக்குமூலங்களையும், செஞ்சோலை குழந்தைகளின் நிலைமை குறித்தும் தொகுத்து அண்மையில் வீடியோ வடிவில் வெளிவந்துள்ளது.. அதனை உங்கள் பார்வைக்கு தருகிறோம்..
(தகவல் & வீடியோ உதவி:  'என் கடமை தமிழா' - FB)

( Part 3 காணொளியை பார்வையிட.....)

லிபியாவில் முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: 28 பேர் பலி

லியாவின் பெங்காசியிலுள்ள முன்னாள் கிளர்ச்சியாளர் தலைமையகங்களுக்கு முன்னால் ஊர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் குறைந்தது 28 பேர் பலியாகியுள்ளனர். இதில் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் ஆட்சியை கவிழ்த்த கிளர்ச்சியாளர் படையணிகள் கலைக்கப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட வேண்டும் என பொதுமக்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையணிகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடாபி அரசு கவிழ்க்கப்பட்டது தொடக்கம் ஆயுதக் குழுக்களை கலைக்கும் அரசின் முயற்சி இன்றுவரை வெற்றியளிக்கவில்லை. எனினும் தாம் பாதுகாப்பு அமைச்சின் கீழே செயற்படுவதாக இவ்வாறான படையணிகள் கூறி வருகின்றன. இதனை இராணுவ பிரதானி அலி அல் ஷெய்க்கும் உறுதி செய்துள்ளார். இந்தப் படையணிகள் மீது தாக்குதல் நடத்துவது அரச நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்துவதாக கருதப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்தியாவையே நம்பியிராமல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு முன்வர வேண்டும் - பாரதீய கட்சி பிரதித் தலைவர்

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஏற்புடையதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வது அவசியம் என்ற கருத்தை இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய ராஜ்ய சபையின் பிரதி எதிர்க்கட்சி தலைவர் ரவி சங்கர் பிரசாத் தலைமை யிலான தூதுக் குழுவினர் வலியுறுத்தி யுள்ளார்கள். இவர் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதித் தலைவராவார். இந்தத் தூதுக் குழுவில் சிவசேனா அமைப்பின் தலைவர் சுரேஷ் ரகு, இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுவப்பன் தஸ்குப்தா, ஓய்வு பெற்ற ஐ. எப். எஸ். அதிகாரி விவேக் கட்ஜீ, ஆர். எஸ். எஸ். பிரதிநிதி ராம் மாதவ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மொனிகா அரோரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிடிவாதப் போக்கு காரணமாக சுமார் 18 மாதங்கள் காலதாமதமாகி இருக்கிறதென்றும் எனவே இனிமேலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த முயற்சியெடுக்க வேண்டுமென்றும் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

த. தே. கூட்டமைப்பு சரவணபவனுக்கு எதிராக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமா...?

லலித் கொத்தலாவலயின் சொத்துக்களை சுவீகரித்து வைப்பிலிட்டோருக்கு நஷ்டஈடு

செலின்கோ நிறுவன முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல அவரின் மனைவி மற்றும் கோல்டன் கீ நிறுவன பிரதம பணிப்பாளர்கள் ஒன்பது பேர் ஆகியோரிடம் உள்ள சகல சொத்துக் களையும் மூன்று மாதங்களுக்குள் சுவீகரித்து, அந்த நிறுவனத்தில் பண வைப்பீடு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்க செலின்கோ சொத்துக்கள் சுவீகரிக்கும் விசேட செயலணி தீர்மானி த்துள்ளது. லலித் கொத்தலாவல, சிசிலியா கொத்தலாவல உள்ளிட்ட மற்றும் 09 பணிப்பாளர்களின் சொத்துக்கள் பற்றிய அறிக்கை பிரஸ்தாப செயலணியினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொத்தலாவலை தம்பதிகளும், பணிப்பாளர்களும் சரியான சொத்து அறிக்கைகளை இதுவரை கொடுக்கவில்லை யென்றும் செயலணி தெரிவித்துள்ளது. இந்த நபர்களுக்கு சொந்தமான வெளியிடப்படாத சொத்துக்கள் பற்றி விபரம் இருப்பின் உடன் தமக்கு அறியத்தருமாறும் இச் செயலணி பொது மக்களைக் கேட்டுள்ளது. இதே மாதிரியான செயற்பாட்ட த.தே. கூட்டமைப்பு எம்பி சரவணபவனுக்கும் அவரின் சப்றா நிதி நிறுவனத்தின் மோசடிக்கும் இலங்கை அரசு செய்யுமா என்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கேட்கின்றனர்.

ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தத்தை காப்பாற்றவும்  - கருணாநிதி

இந்திய முன்னாள் பிரதமர்  ராஜீவ்காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆகியோர்களிடையே 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை காப்பாற்றுமாறு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிங்களர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதில் உடனே தலையிட்டு இலங்கை தமிழர்கள் நலன் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். (மேலும்....)

ஆனி 09, 2013

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்கள் (Part 2)

 

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களையும், அதில் பாதிக்கப்பட்ட சிலரது வாக்குமூலங்களையும், செஞ்சோலை குழந்தைகளின் நிலைமை குறித்தும் தொகுத்து அண்மையில் வீடியோ வடிவில் வெளிவந்துள்ளது.. அதனை உங்கள் பார்வைக்கு தருகிறோம்..
(தகவல் & வீடியோ உதவி:  'என் கடமை தமிழா' - FB)

( Part 2 காணொளியை பார்வையிட.....)

இலங்கை தம்பதிகள் கடத்தல் சம்பவம்: கட்சி பிரமுகர் ஒருவர் கைது

இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.2 கோடி கேட்டு லண்டனில் இருக்கும் தவராஜா மகள் தர்ஷினியிடம் கடத்தல் கும்பல் மிரட்டியது. சென்னை பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கடலூர் அடுத்த மந்தார குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இலங்கை தம்பதியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் இந்திரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் உள்ள தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த அஜந்தனை லண்டன் பொலிசார் கைது செய்தனர். இவர்தான் கடத்தல் கும்பலுக்கு இலங்கை தம்பதியின் படங்கள், பயண விவரம் பற்றி இ-மெயில் அனுப்பி உள்ளார். இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக கடலூர் மந்தார குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவர் சேர்க்கப்பட்டார். இவர் கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார். அவரை அண்ணாநகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொலிசார் கடலூரில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சத்யா தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஆவார். பா.ம.க.வில் இருந்து பிரிந்து சென்ற வேல்முருகன் ஆரம்பித்த அக்கட்சியில் சத்யா பணியாற்றி வந்து உள்ளார். சத்யா பா.ம.க.வில் இருந்தபோது பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.

18 மீனவர்கள் பலி: 36பேரை காணவில்லை

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 36பேர் காணாமல் போயுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் களுத்துறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 37 மீன்பிடிப் படகுகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி அமைச்சு, காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை படையினரை திருப்பியனுப்பவும் - ஜெயா

இலங்கை படையினருக்கு  தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை உடனடியாக திருப்பியனுப்புமாறு கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் கடிமொன்றை மீண்டும் எழுதியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே மாதம்  27 ஆம் திகதி முதல் இலங்கை அதிகாரிகள் இருவருக்கு நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருவதாகாக தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி மத்திய அரசு இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளித்து வருகிறது. எனவே, இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தென் மேல் மாகாணங்களில் சீரற்ற காலநிலை

கடும் காற்று, கடல் கொந்தளிப்புமீனவர்கள் பலரைக் காணவில்லை

தெற்கு மற்றும் மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததுடன், 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 30 வள்ளங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்கும் பணிகளில் விமானப் படையினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள் ளிட்ட கரையோர பிரதேசங்களில் கட லுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன. (மேலும்....)

இனங்களுக்கிடையில் கருத்தொருமைப்பாடு ஏற்பட மும்மொழித் திட்டம் உதவுமா?

நமது நாடு பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஆங்கிலம் அரச கரும மொழியாகவிருந்தது. அரச கருமங்கள் சுயமொழிகளான சிங்களம், தமிழில் நடைபெற வேண்டுமென்ற பிரேரணை 1932ஆம் ஆண்டு சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. எனினும் சுயமொழியில் நிர்வாகம் செய்வது அமுலில் வரவில்லை. தேசபக்தியுடன் நாடு சுதந்திரம் அடையப் பாடுபட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களிடையே இனம் மொழி சார்ந்த பேதங்கள் இருக்கவில்லை. தேச நலனே அவர்களது இலட்சியமாக அமைந்தது. அதுபோலவே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும் சுயமொழிப்பற்றைத் தவிரப் பிறமொழி வெறுப்போ இன வெறுப்போ இருந்ததில்லை. இன நல்லிணக்கம் ஆரோக்கியமாக அமைந்தது.(மேலும்....)

'இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும்'

'இலங்கை தமிழர்களுக்கு கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அதிகாரம் உள்ளிட்ட உரிமைகள் கிடைப்பதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும்' என அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மக்களவை உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மக்களவை குழு அமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பைஜெயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, உதய்சிங், பிரதாப்சிங் பஜ்வா, பிரேம்தாஸ், பக்தசரண்தாஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள், அரசு முறை பயணமாக ஒரு வார காலம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளனர். (மேலும்....)

ஆனி 08, 2013

இந்தியாவையும் தேசியவாதிகளையும் சமாளிக்கும் அரசாங்கத்தின் சட்ட திருத்தம்

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளின் சில அதிகாரங்களை ரத்துச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சில சிங்கள தேசியவாத கட்சிகள் மிக ஆவலோடு விரும்பிய மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தல் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தில் இல்லை. அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது. (மேலும்....)

 

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்கள் (Part 1)

 

2009 வன்னி இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களையும், அதில் பாதிக்கப்பட்ட சிலரது வாக்குமூலங்களையும், செஞ்சோலை குழந்தைகளின் நிலைமை குறித்தும் தொகுத்து அண்மையில் வீடியோ வடிவில் வெளிவந்துள்ளது.. அதனை உங்கள் பார்வைக்கு தருகிறோம்..
(தகவல் & வீடியோ உதவி:  'என் கடமை தமிழா' - FB)

( Part 1 காணொளியை பார்வையிட.....)

இலங்கையில் இடதுசாரிகள்
துருக்கியுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையில் இடதுசாரிகள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஒரு காலத்தில் இடதுசாரிகளாக காட்டிக் கொண்டவர்கள், காலப்போக்கில் வலதுசாரிகளாக மாறி விட்டனர். ஜேவிபி, விடுதலைப் புலிகள் ஆகிய ஆயுதபாணி இயக்கங்கள் கூட அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. (புலிகளும் ஆரம்பத்தில் சோஷலிசத் தமிழீழம் கோரினார்கள்.) துருக்கியில், PKK போன்ற குர்திய இன விடுதலை இயக்கங்கள் மட்டும் அடக்கப் படவில்லை. பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள், இயக்கங்கள் பல தசாப்தங்களாக தடை செய்யப் பட்டிருந்தன. இந்தப் பொதுவான அரச அடக்குமுறையும் PKK, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படக் காரணமாக அமைந்தது. குர்து தேசியவாதிகளுக்கு, தலைமறைவாக இயங்கிய துருக்கி கம்யூனிஸ்டுகள் மட்டுமே நண்பர்களாக இருந்தனர். அந்த விஷயத்தில், இலங்கை அரசு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டது. தமிழ் தேசியவாதிகளையும், சிங்கள இடதுசாரிகளையும் பிரித்து ஆள்வதன் மூலம், தனது அதிகாரத்தை நிலை நாட்டியது. சிங்கள- இடதுசாரிகளை அடக்கும் காலத்தில், தமிழ் தேசியவாதிகளுடன் நட்புறவு பாராட்டும். தமிழ் தேசியவாதிகளை அடக்கும் காலத்தில், சிங்கள- இடதுசாரிகளுடன் நட்புறவு பாராட்டும். தமிழ் தேசியவாதிகளும், சிங்கள- இடதுசாரிகளும் ஒரு காலத்திலும் கூட்டுச் சேர மாட்டார்கள். அதுவும் சிறிலங்கா அரசுக்கு நன்மை பயக்கும்.
(கலையரசன் கலை)

அரசின் யோசனைகளை ஆராய ஈ.பி.டி.பி குழு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் பங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது. முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.தேவராஜின் தலைமையிலேயே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயவும், அவைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பற்றி ஆராயவே இந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முன்னாள் போராளிக்குழுக்களில் ஒன்றான அவரது கட்சி 13 ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், வன்முறைகளை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் யோசனைகளின் பிரகாரம் மாகாண சபைகள் இரண்டோ அல்லது அதற்கு மேல் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ள அதிகாரத்தை ரத்து செய்வதோடு, மாகாண சபைகளுக்கு சம்பந்தமுள்ள விடயங்கள் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது, அனைத்து மாகாண சபைகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்ட நிபந்தனையை திருத்தி, மேலதிக வாக்குகளின் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படலாம் என்று திருத்தங்களை மேற்கொண்டுவரவுள்ளது.

வடக்கு தேர்தலுக்கு ஆயத்தம் - ஆணையாளர்

வட மாகாண தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலை ,செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் திகதி குறிப்பிடப்படும் என்று தெரிவித்த அவர் வடமாகாண தேர்தலை செப்டெம்பரில் நடத்துவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் புத்துயிர் குறித்து இலங்கை அரசு எச்சரிக்கை - அமெரிக்கா

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் கருதுவதால் இலங்கை எச்சரிக்கையுடன் செயற்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து இப்போதும் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பலர் மூலம் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும் இலங்கை அரசு கவலையில் உள்ளது. புலிகளின் சர்வதேச பொருளாதார தொடர்புக்கு தடை விதிக்க பல வழிகளில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் பயிற்சியளித்திருக்கக் கூடும் என இலங்கை சந்தேகிக்கிறது. பேரணியின்போது நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெறலாம் என்ற அச்சமும் கவலையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழுதைகளின் நலனை ஆராய இந்திய அதிகாரிகள் விஜயம்

மன்னாரில் உள்ள கழுதைகளின் நலன் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியாவிலுள்ள கழுதைகள் சரணாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்துள்ளனர். மன்னாரில் கழுதைகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் யுத்தத்தின் காரணமாக மன்னார் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளான போது மனிதனுக்கும், கழுதைகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது  காட்டு கழுதைகளின் சிரமத்தை மன்னார் மக்கள் எதிர் நோக்குவதோடு இவைகள் மக்களினால் வெறுக்கப்பட்டும் வருகின்றது. வெளி மாவட்டத்தில் இருந்து மன்னாருக்கு வருகின்ற மக்களையும்,சுற்றுலாப்பயணிகளாக மன்னாருக்கு வரும் மக்களையும் அதிகம் கவரக்கூடியாதாக இந்த கழுதைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், இந்த கழுதைகளின் நலனை கவனத்தில் கொண்டு மன்னார் நகர சபை மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்திய கழுதைகள் சரணாலயத்தில் இருந்து கால்நடை வைத்தியர்கள் இருவரும் , சமூக கல்வி அலுவலர் ஒருவரும் மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.

ஆனி 07, 2013

ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக அரசியல் தீர்வு அமையாது - ஜனாதிபதி

'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டிய இந்திய தூதுக்குழுவினர், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை தமது விஜயத்தின் போது நேரில் கண்டதாகவும் தெரிவித்தனர். (மேலும்....)

13ஆவது திருத்தம்

இரு திருத்த யோசனைகள் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

அரசாங்கம் அமைச்சரவைக்கு முன்வைத்த இரு திருத்தங்களின் படி இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கப்படுவதோடு தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்பிக்க முன்னர் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை திருத்தி பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட்டால் சட்டமூலத்தை நிறைவேற்றலாமென மாற்றம் செய்யப்படுகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்று கூறிய அமைச்சர் அவற்றை அகற்றுவது தொடர்பில் கூட்டுக்கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுவதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கட்சிகளின் யோசனைகள் குறித்து ஆராயப்படும். (மேலும்....)

வாக்காளர் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம்

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை பலப்படுத்தும்

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலேயே வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றுப் பாராளு மன்றத்தில் தெரிவித்தார். இதற்கிணங்க, வாக்காளர் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்க ளுக்கென குறைநிரப்பு வாக் காளர் இடாப்பொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமது சொந்த மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் தங்கியிருக்கும் மக்கள் நிரந்தரமான ஒரு முகவரி இன்மையால் வாக்காளர் இடாப்புக்களில் தமது பெயர்களை உள்ளடக்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இச்சட்ட மூலத்தின் கீழ் இடம்பெயர்ந்தவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்த வாக்காளர் பட்டிலுக்கு அமைய இடம்பெயர்ந்துள்ளமையை உறுதிப்படுத்தி சொந்த மாவட்டத்தில் வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் கொலைச் சம்பவம்

விசாரணைகளில் திடீர் திருப்பம், நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கொன்ஸ்டபிள் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரி தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான இரு சிவிலியன்களை ஏற்கனவே கைது செய்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சி. ஐ. டி.யினரி டம் மேலதிக விசாரணை களுக்காக ஒப்படைத்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அழைக்கப்பட்டு சி. ஐ. டி. யினால் வாக்கு மூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் அந்தரங்க பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

துருக்கியில் தொடரும் ஆர்ப்பாட்டம்

துருக்கியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நீடிக் கும் நிலையில் பிரதமர் ரிசப் தய்யிப் எர் டொகன் தனது மூன்று நாள் வட ஆபிரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளார். தலைநகர் அங்கார, ஸ்தன்பூல் மற்றும் ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டம் ஒருவாரமாக தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஒரு தசாப்தமாக பிரதமர் பதவியில் இருக்கும் எர்டொகன் பதவி விலக ஆர்ப்பாட்டக்காரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது இடம் பெற்ற கலவரத்தில் அட்னா மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பாலத்திலிருந்து விழுந்து பலியாகியுள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக மூவர் பலியாகியுள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஸ்தன்பூல் பூங்காவை அபிவிருத்தி செய்யும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட அமைதியான ஆர்ப்பாட்டமே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக தீவிரமடைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் அற்றது என பிரதமர் குற்றம் சாட்டியபோதும் துணைப் பிரதமர் பொலிஸார் வன்முறையை கையாண்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். கருங்கடல் கரையோர நகரான ரிசாவில் இளைஞர்களைக் கொண்ட அரச எதிர்ப்பாளர் குழுவொன்றுக்கு அரசுக்கு ஆதரவானோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் பதிவான முதல் மோதல் இதுவாகும்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 49 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்களின் இன பெருக்க காலம் துவங்குவதற்கு முன் ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 26 உள்ளிட்ட 52 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் மீனவர்கள் வழக்கமாக ஒரு சில தினங்களிலேயே விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் சுமார் ஒரு மாதம் சிறை வைக்கப்பட நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். ஆனால் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டனர். சுமார் 45 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமதாஸ் இன் சாதி வெறி வென்றதா...?

காதல் கணவரை பிரிந்தார் திவ்யா; தாயுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி

தர்மபுரியில் காதலி்த்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணால் இரு சமூகத்துக்கு இடையே சாதி மோதல் ஏற்பட்ட நிலையில், காதல் கணவரை பிரிந்த திவ்யா, தாயாருடன் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம்காலனியை சேர்ந்த இளவரசன், செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதல் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.  மேலும் இந்த பிரச்னையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பயங்கர கலவரம் வெடித்தது. பா.ம.க.வினர் இந்த சம்பவத்தை காதல் நாடக திருமணம் என்று பிரசாரம் செய்ய, இதற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பிரசாரம் செய்தனர். மேலும் 2 கட்சியினரும் காரசாரமாக விவாதம், அறிக்கை போர் நடத்தியதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. திவ்யாவின் 'மனமாற்றம்' இற்கு பின் வன்னியர் சங்கத்தின் சாதிவெறி மிரட்டல்கள் இருந்தன என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனி 06, 2013

வடக்கு தேர்தல் நடக்கும் - அமைச்சர் டக்ளஸ்

வடக்கு மாகாண சபை தேர்தலை குழப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர்  மாதம் முதல் வாரத்தில்  நடக்குமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண சபை தேர்தலினை சில கட்சிகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புக்கள் பிரச்சினையாக இருக்க முடியாது. தென்னிலங்கையில் தீக்குளித்த பிக்கு ஒரு கள்ளத்தனமானவர். அவர் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் அரசாங்கத்திற்குள் அவர் சம்பந்தமாக நல்ல அபிப்பிராயம் இல்லை. அந்த சந்தர்ப்பத்தினை சிலர் பயன்படுத்தப் நினைக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தனித்து போட்டியிடுவதும், சேர்ந்து போட்டியிடுவதென்பதும் இறுதி முடிவல்ல என்று பதிலளித்த அமைச்சர் ஏதோ ஒரு வகையில், முதலமைச்சர் பதவிக்குள் வருவேன் என்றும் அதனை மக்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டுமென்றும் பதிலளித்தார்.

திருத்தம் போதாது!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் ஒழிக்க வேண்டும் - சம்பிக்க

அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட சில பாரதூரமான அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. என்றாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லயிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட சில பாரதூரமான அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதை ஜாதிக ஹெல உறுமய வரவேற்கின்றது. இருப்பினும் அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் முற்றாக இரத்துச் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

''நமக்கு தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம்!''

அமைதிப் படையை ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கமே, தனி ஈழம் அமைக்கத்தான். ஆனால், பிரபாகரன் கேட்டது என்ன? 'தனி ஈழத்திலே ஜனநாயகம் கூடாது, தேர்தல் கூடாது. என்னை சர்வாதிகாரியாக அமர்த்த வேண்டும்’ என்று சொன்னார். இந்தியா அதை மறுத்தது. உடனே, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்துகொண்டு நம் ராணுவ வீரர்களைக் கொன்றார் பிரபாகரன். ராஜீவ் காந்தியின் திட்டத்தை நாசமாக்கியவர், பாழாக்கியவர் பிரபாகரன். பிரபாகரனின் பையன் பாலச்சந்திரனின் போட்டோவைப் போட்டு 12 வயது பாலகனைக் கொன்றார்கள்... கொன்றார்கள்... என்று எல்லாக் கட்சிக்காரர்களும் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அது கவலை தரும் செய்திதான். இதே பிரபாகரன் 11 வயது இளம் சிறுவர்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி இழுத்துவந்து போர்க்களத்திலே நிறுத்தினாரே? அதைவிடவா இது கொடியது? பிரபாகரனைக் கைதுசெய்து அவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்தானே இந்த ஜெயலலிதா. இப்போது அதே பிரபாகரன், உங்கள் கண்ணுக்கு மாவீரன்போல் தோன்றுகிறாரா? நீங்கள் குழம்பி இருக்கிறீர்களா? அல்லது மக்களைக் குழப்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக, இதை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். ஆனால், மக்கள் உங்கள் எல்லோரையும் தனிமைப்படுத்திவிடுவார்கள். (மேலும்....)

பாரிஸ் மாநகரில்

இலக்கிய மாலை நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு  நூல்கள் வெளியீடு..!

'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது.' (மேலும்....)

தமிழ்க்கட்சிகளின் பிரதிநிகளுடன் இந்திய எம்.பிக்கள் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்திய எம்.பிக்கள்  குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்திய எம்.பிக்கள் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள, இந்தியாவுக்கான கவுன்ஸ்லேட் ஜெனரல் வி.மகாலிங்கத்தின் வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழரசு கட்சியின் சார்பில் இரு பிரதிநிதகளும், ஈ.பி,ஆர்.எல்.எப் சார்பில் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி   ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் மட்டக்களப்பில் அண்மைகாலமாக இடம்பெற்ற இந்துகோவில்களின் விக்கிரங்கள் உடைப்பு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்புகள் மற்றும் இவ்விரு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்தியா வழங்கிவருகின்ற உதவிகள் தொடர்பில் தமிழ்க்கட்சியினர் விரிவாக எடுத்து கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலி முத்திரை

(கே.சஞ்சயன்)

விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவை அரசாங்கம் கடந்த மாதம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டுதோறும் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடி வரும் அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் புலி என்ற ஓர் உருவகத்தை வைத்தும் நாட்டை மிரட்டிக் கொண்டிருக்கிறது. கடந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2012ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதாக கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், விடுதலைப் புலிகளின் எந்த தீவிரவாத செயற்பாடுகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. (மேலும்....)

மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துமாறு கனடாவும் அமெரிக்காவும் ஜெனிவாவில் வலியுறுத்து

யுத்தத்தின்போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணையை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துகின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் தாமதமின்றி அமுல்படுத்தவேண்டும் என்று ஜெனிவாவுக்கான கனடா நாட்டின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையானது பொதுநலவாய விழுமியங்களை பின்பற்றுவதில் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டும் என்றும் கனடா நாட்டின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கனடா கவலையடைந்துள்ளது. யுத்தத்தின்போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணையை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துகின்றோம். இதேவேளை இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்காவின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி குறிப்பிடுகையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் குறித்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகள் காப்பாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள் என்பன தொடர்ந்தவண்ணமேயுள்ளன. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைகளோ அல்லது வழக்குத் தொடர்தல்களோ இடம்பெற்றிருக்கவில்லை என்றார்.

பிரகீத் எக்னெலிகொட மனைவியுடன் பிரான்ஸில் உள்ளார் - அருந்திக்க பெர்னாண்டோ எம்.பி

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத் தளம் மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் இது பிரான்ஸில் உள்ள இலங்கையர் களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அருந்திக்க பெனாண்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பிக்கும் எனக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வீண் குற்றச்சாட்டு!

திரு. ஜோன் எப். ஹரி ராஜாங்க செயலாளர், ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்,ஐக்கிய அமெரிக்கா.ஐயா, 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிய நாட்டு அறிக்கை - ஸ்ரீலங்கா

இலங்கையின் பாராளுமன்ற உறுப் பினரும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகிய நான் 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை பற்றிய செயற்பாடு களுக்கான நாட்டறிக்கை, ஸ்ரீலங்கா என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, காங்கிரஸின் ராஜாங்கத் திணைக்களம் இந்த வருடம் ஏப்ரல், மாதம் அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பி வைத்த ஆவ ணத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக பின்வருவனவற்றினை எடுத்துரைக்க விரும்புகின்றேன். (மேலும்....)

ஆனி 05, 2013

செப்டெம்பருக்குள் 13 திருத்தப்படும் -  விமல்

13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் செப்டெம்பர் மாதத்திற்குள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களித்தின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

ுலிகளின் 1000 கிலோ குண்டுகள் கொழுப்பில் மறைத்து வைப்பு - புலி உறுப்பினர் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ கிராம் எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகள் கொழும்பில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரிஐடி) பிரதான நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. (மேலும்....)

அமெரிக்காவின் நிவாரணம் இலங்கைக்கும் நீடிப்பு

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமான அளவில் குறைத்தமைக்காக இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான நிவாரணத்தை ஆறுமாத காலங்களுக்கு நீடிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. சீனா, இந்தியா, மலேசியா, சிங்கபூர், தென்னாபிரிக்கா,தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் உள்ளட்ட ஏழு நாடுகளிலுள்ள வங்கிளுக்கும் இது விலக்களிப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையிலேயே, இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில் ஈரானிடமிருந்து பெருமளவு எரிபொருள் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அமெரிக்கா, கால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த குழுவினரை பாரம்பரிய கைத்தொழில்கள் ,  சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் பலர் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர். இக்குழுவினர் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலை தொழிற்சாலையினை பார்வையிட்டுள்ளதுடன் யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து யாழ்.குடா நாட்டின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த குழுவில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத், சுரேஷ் பாபு மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப், இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வடக்குத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் மூலம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தலாம் -  பீரிஸ்

வட மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் ஊடாகவே இலங்கையின் முன்னேற்றத் தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும். அதே போன்று வட மாகாண சபை தேர்தல் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். பிரிட்டன் பிரதமர் உட்பட பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் இலங்கையில் நடைபெறுகின்ற மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே, மிகவும் வெற்றிகரமான பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெல்லன்வில விகாரைக்கு மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட யானைக்குட்டியொன்றினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை விகாரை வளகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

China biggest lender to govt, India biggest benefactor

Foreign loans, grants committed in 2012:

China emerged as the biggest lender to the government of Sri Lanka with loans amounting to US$ 1,056.05 million in 2012 with additional grants amounting to US$ 0.16 million and India became the country’s biggest benefactor with grants amounting to US$ 257.28 million and the third biggest lender with loans amounting to US$ 443.06 million, data released by the Treasury showed. (more....)

சத்தீஷ்கார் தாக்குதல்

மாவோயிஸ்டுகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் நால்வருக்கு தொடர்பு

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு கள் நடத்திய கொடூர தாக்குதலில், அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் 4 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த 25 ஆம் திகதி ‘பரிவர்த்தன் யாத்திரை’ என்ற யாத்திரையை நடத்திவிட்டு திரும்பிய காங்கிரஸார் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன், அந்த மாநில முன்னாள் உள்துறை மந்திரி மகேந்திர கர்மா, இன்னொரு முன்னாள் மந்திரி உதய முதலியார் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய மந்திரி வி. சி. சுக்லா உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். (மேலும்......)

தெஹிவளை ரயில் குண்டு தாக்குதல் சம்பவம்

3 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்கு கடூழிய சிறை

தெஹிவளையில் நடந்த ரயில் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குற்றத்தை ஒப்புக் கொண்ட (இரு சம்பவங்களுக்காக) மூன்று எல். ரி. ரி. ஈ. உறுப்பினர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.1996ஆம் ஆண்டு கொழும்பு கோட் டையிலிருந்து அளுத்கமவுக்குச் சென்று கொண்டிருந்த ரயில் வைக்கப்பட்டி ருந்த குண்டு வெடித்ததில் 70 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 500 பேர் வரை படுகாயமடைந்தனர். தெஹி வளை ரயில் நிலையம் அருகில் இச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்பான குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்தோ னிப்பிள்ளை ரொபர்ட் மெக்சிலன் என்றழைக்கப்படும் பாலசிங்கம், சவரிமுத்து லோகநாதன் என்றழைக் கப்படும் ஆனந்த ஆகிய இருவருக் கும் ஒவ்வொரு குற்றத்துக்கும் 10 வருடம் என்ற அடிப்படையில் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநேரம், குற்றத்தை ஒப்புக் கொண்ட சித்திரசேனை துருமகள் என்றழைக்கப்படும் ரமணி என்ற பெண்ணுக்கு ஐந்து வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட மூன்றாவது நபர் குற்றம் சுமத்தப்பட்ட முதலாவது நபரின் பாரியார் ஆவார். இவர்கள் 17 வருடங்களாக கைதாகி உள்ளனர். இரு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது இவர் கைதாகியுள்ளார். இவரின் மகளுக்கு தற்போது 16 வயதாகிறது. அவர் பாட்டியிடம் உள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மற்றும் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்ட நான்காவது நபர் சின்னப்பு செல்வராஜா, குற்றம் சுமத்தப்பட்ட ஏழாவது நபர் சுப்பையா ஸ்ரீதரன் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை.

தொண்டமான், ஹக்கீம், டக்ளஸ் நிலைப்பாடு என்ன? -  மனோ கணேசன்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமல்ல, எல்லா அதிகாரங்களும் பறிபோகப்போகின்றன. இவ்வாறான நிலையில் 13 ஆம் திருத்தத்தை பாதுகாப்போம் என்று அரசாங்கத்துக்குள் இருந்தவாறு கூறிவருகின்ற அமைச்சர்களான, தொண்டமான்,ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் நிலைப்பாடு என்ன? என்று என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பினார். 13 ஆம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை அல்லது சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல யோசனையை அரசாங்கம் சமர்பிக்க போகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

ஆனி 04, 2013

திருகோணமலை நகரசபையுடன் கல்வி நோக்கத்திற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது -  அமெரிக்கா

கல்வி நோக்கத்திற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. திருகோணமலை நகரசபையுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருந்தது. இந்த உடன்படிக்கை ராஜதந்திர நியதிகளுக்கு புறம்பானது என வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியிருந்தது. மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டதாக அமெரிக்கத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பற்றிய அண்மைமய தகவல்களை இந்த வள நிலையங்கள் வழங்கும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இதேவேளை, திருகோணமலை நகரசபை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கைதி மரணம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடி இடமாற்றம், தெடர்ந்தும் பதற்ற நிலை

தெமட்டகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான தனபிள்ளை சேகர் வயது 42 என்பவர் மரணமடைந்ததையடுத்து அவருடைய மரணத்தில் சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொருந்தொகையான பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணகல உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். (மேலும்......)

பி.ஜே.பி. பிரதித் தலைவர் தலைமையிலான இந்திய குழு இன்று வருகை

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் பிரதித் தலைவர் ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான ஆறுபேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அழைப்பின் பேரிலேயே ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது. இந்தியப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு வியாபார அபிவிருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் ரவி சங்கர் பிரசாத்திற்கு மேலதிகமாக சிவ சேனா அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரபு, இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுவப்பன் தஸ்குப்தா, ஓய்வுபெற்ற ஐ. எப். எஸ். அதிகாரி விவேக் கட்ஜீ, ஆர். எஸ். எஸ். பிரதிநிதி ராம் மாதவ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மொனிக்கா அரோரா ஆகியோர் அங்கம் வகிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி கராலயம் தெரிவித்தது.

வட மாகாண தேர்தல் தொடர்பான வாக்காளர் பதிவு சட்டமூலம்

வட மாகாண தேர் தலை நடத்துவதற்கு தேவையான மாற்றங் களை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (4) உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்பட உள்ளது. வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அரசிய லமைப்பிற்கு அமைவானதா, இல்லையா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சந்தியா ஹெட்டிகே ஆகிய நீதியரசர் குழு முன் ஆராயப்பட உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட உள்ளது. இதேவேளை, வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அவசர சட்டமூலமாக எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வட மாகாணத்தில் வாழ்ந்த மக்கள் தாம் 1983 ஆம் ஆண்டிற்கு முன் வாழ்ந்த இடங்களில் இருந்து வாக்களிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

"இருள் தின்ற ஈழம்" தேவ அபிராவின் கவிதைத் தொகுப்பு அறிமுகம்

Taken at 2467 Eglinton Ave East, Scarbrough

"இருள் தின்ற ஈழம்" தேவ அபிராவின் கவிதைத் தொகுப்பு அறிமுகம் and உதவி நண்பர்கள் கனடா நடத்தும் இலங்கையில் உள்ள பெற்றோர் உறவினர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படடுள்ள சிறுவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு.

ஆனி 03, 2013

மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்!

(பீமன்)

 ‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. ‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை. (மேலும்......)

ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை கூட்டமைப்பு ஏற்பது படுபாதகம் -  ஆனந்தசங்கரி

சமஷ்டியைக் கைவிட்டு  ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை  உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது என்பது படுபாதகச் செயலாகும்  என தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அவர் விடுத்துள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டிருப்பதாவது, ஐக்கிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்  சமஷ் டிக் கொள்கையை முன் வைத்தே  போட்டியிட்டது. 49 சதவீத  மக்களின் ஆதரவு கிடைத்தது. தந்தை செல்வாவும் இனப்பிரச் சினைக்குத் தீர்வாகச் சமஷ்டியையே  முன் வைத்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் ஐ.தே.க சமஷ்டிக் கொள்கையைக்  கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக கூறியுள்ளது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராட்டியிருப்பது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்களுக்குச் செய்யும் படுபாதகச் செயலாகும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அறிக்கைகளை விடும் சுமந்திரன் பதவி விலக வேண்டும். அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவரைப் பதவி விலக்க வேண்டும்  என்றுள்ளது.

புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாயிருந்த 1பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியுடைய சொத்துகள் பற்றிய விபரம் பயங்கர வாத புலனாய்வுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விசாரனைகளின் போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 1.2 பில்லியன் ரூபாவுக்குக் கூடுதலான பெறுமதியுடைய இத்தகைய சொத்துகளில் காணி, தொடர்மாடி மனைகள், அழுத்தகங்கள் (அச்சு இயந்திர சாலைகள்) வீடுகள், இயந்திரத் தொகுதிகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் மீன் பிடி இழுவைப் படகுகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன எனவும் அவை பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் திறைசேரிக்கு மாற்றப்படும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கள், கறுப்புப்பண செலாவணியாக்கல் ஆகியவை தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். (மேலும்......)


13 ஆவது திருத்தம் நொண்டி எலியைப் போன்றது - பசீர்

'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடும் ஆனால் அதை கடித்து சாப்பிடுவதில்லை. அதேபோன்றுதான் இந்த 13ஆவது திருத்தமுமாகும். இந்த 13ஆவது திருத்தம் எனும் எலியை வைத்து அரசியல் பூனைகள் விளையாடுகின்றன. இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்தது. அதில் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்பட்டன. உள்நாட்டு யுத்தம் இருந்தது. இதன்மூலம் பெரும் அழிவுகள் ஏற்பட்டன என்பதற்கான ஆதாரமே இந்த 13ஆவது திருத்தமாகும்.13ஆவது திருத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இனப்பிரச்சினை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும் பல விடயங்கள் இடம்பெற்ற போதிலும் அவைகள் எதுவும் சான்றாக அமையவில்லை. ஆனால் இந்த 13ஆவது திருத்தம் மாத்திரம் ஒரு சான்றாக உள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதன் மூலம் இந்த 13ஆவது திருத்தம் வந்தது. ஆனால் இதை யாரும் அன்று ஏற்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்; ஏற்கவில்லை. அதேபோன்று அன்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ஏற்கவில்லை. அன்றைய மாகாண சபை தேர்தலை கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க பகிஷ்கரித்திருந்தார். (மேலும்......)

மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலிடம் கண்ணீர் விட்ட தாய்

காணாமல் போன தனது மகளை தேடித் தாருங்கள் என்று காணாமல் போன யுவதியொருவரின் தாய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. இன்று ஞாயிற்றிக்கிமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வருகை தந்த நாமல் எம்.பி.யிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தனது மகள் கிளிநொச்சியில் உள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இவர் காணாமல் போயுள்ளதாகவும் இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்று அந்த தாயார் நாமலிடம் தெரிவித்தார். இந்த தாயாரின் கோரிக்கையை கவனத்திற்கொண்ட நாமல் எம்.பி, உடனடியாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன் - ஐ.தே.க.

அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது. இந்த அரசாங்கம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மென்மேலும் கடன் பெற வேண்டுமா? என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் பிரதான நோக்கம் கடனைப் பெறுவதே அன்றி வேறொன்றும் இல்லை. இவ்வாறு சீனா 2.2 பில்லியன் டொலர்களை கடனாக இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு முன்னரும்; சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெருந்தொகையான கடனுதவிகளை இந்த அரசாங்கம் பெற்றுவந்துள்ளது. அவற்றின் மூலம் முறையான, மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, இந்நாட்டு அப்பாவி பொதுக்களே.

பாகிஸ்தானை விட சீனாவிடம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது

மத்திய அரசு சீனாவிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சமஸ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் தெரிவித்துள்ளார். ஏனென்றால் இமாச்சல்லிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியாவின் நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதே ஆகும். டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முலாயம் மேலும் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக நான் சீனா குறித்து கூறி வருகின்றேன். இது குறித்து யாரும் கவனத்தில் கொள்வதாக தெரிய வில்லை. இந்தியாவின் பல பகுதிகளை சீனா தன்னுடன் இணைத்துக்கொள்ள எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராகி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தவறான கருத்தை கொண்டிருக்க வேண்டாம். தற்போதைய நிலையில் சீனா, தனது ஊடுருவலை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் அது தனது எல்லை மீறலை தொடரும். அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா தனக்கு சொந்தமானது என சொல்லி வருகிறது. இதனால் அருணாச்சல பிரதேச மாநிலத்தவர்களுக்கு சீனாவிற்கு வந்து செல்ல விசா வாங்க தேவையில்லை என்ற சலுகையை அறிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது நாம் பாகிஸ்தானை விட சீனாவிடம்தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

துருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

துருக்கியில் வெடித்துள்ள அரச எதிர்ப்பு போராட்டம் காரணமாக இதுவரை 900க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் முஅம்மர் குலர் குறிப் பிட்டுள்ளார். கடந்த மூன்று தினங்களாக வர்த்தக நகர் ஸ்தன்பூலில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் ஏனைய நகரங்களுக்கும் பரவி வருகின்றது. துருக்கியை இஸ்லாமிய நாடாக உருவாக்க கடந்த ஒரு தசாப்தமாக அந்நாட்டை ஆளும் பிரதமர் எர்டொகனின் அரசு முயற்சித்து வருவதாக மதச்சார்பற் றோரிடையே கடும் குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையிலேயே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. "இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜனநாயகத்தை மதிக்காமல் அவர்களது சிந்தனையை பரப்ப முயற்சிக்கிறார்கள்" என்ற ஸ்தன்பூல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டினார்.

ஆனி 02, 2013


வடமாகாண தேர்தல் அறிவித்ததும் தமிழரசு கட்சி முடிவெடுக்க தீர்மானம்

வடமாகாணசபை தேர்லை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்ததும் அதுபற்றி முடிவெடுப்பதற்கு தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைவரும் தமிழ்க்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் சனிக்கிழமை காலைவேளையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்தியக்குழு அங்கத்தவர்களுக்கு இடையே  பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம் - டக்ளஸ்

'வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'நாய் குரைத்தாலும் வண்டிபோகவேண்டிய இடத்தைப் போய் சேரும்'என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும்'  என்றும் அவர் தெரிவித்தார். 'பொதுமக்கள் துன்பத்துடன் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கமும் சிந்தனையுமாக இருக்கின்றது. இந்த அரசாங்கத்துடன் எமது பிரச்சனையை பேசித் தீர்வுகாணமுடியும் என்று நான் நம்புகின்றேன். யுத்தத்தினால் எமது மக்கள் பல பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றார்கள்.

இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பம் வழங்கப்படும் -  சீனா

'சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும். இதற்கு ஏற்ற வகையில், இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பம் வழங்கப்படும். இலங்கை நாட்டு இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்' என சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பில் சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ,  நிருபர்களிடம் பேசும்போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, 'இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர் புதிய கடன் தர முன்வந்துள்ளது.  கண்டியை யாழ்ப்பாணத்துடன் இணைக்கின்ற வகையில் வடக்கு அதிவிரைவு சாலை அமைப்பு பணிக்காக ஒன்றரை பில்லியன் டொலர்கள் (ரூ.8,250 கோடி) முதலீடு செய்ய இலங்கையும், சீனாவும் உடன்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயை விஸ்தரிக்கவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளர்ச்சிக்கும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன' என வெளிவிவகார அமைச்சர்  ஜி.எல். பீரஸ்  கூறினார்.

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் இலங்கைத் தமிழர்

அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் இலங்கைத் தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்.
பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது - சம்பிக்க

இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது. என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர். ஏன் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஏன் பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா?வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவின்றோமா? பம்பலப்பிட்டியவில் கூட்டமைப்பு காரியாலமொன்றை திறந்துவைத்துள்ளது அதற்கு நாம் கல்லெறிந்துள்ளோமா? ஆனால் சிங்களக் குடியேற்றத்தை செய்யும்போது கல்லெறிந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை மனித புதைகுழி விசாரணைக்கு இன்டர்போலின் உதவி

மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. மாத்தளை மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் போது நீதவான் இதனை அறிவித்துள்ளார். குறித்த புதைகுழிகளில் மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எவரேனும் தகவல்களை வழங்க விரும்பினால் அது குறித்து அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களினால் சமூகத்திற்கு எந்தப் பாதிப்புமில்லை

சரணடைந்த மற்றும் கைதான 12,165 பேரில் 11,593 பேரை இதுவரை புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைத்துள்ளோம். மேலும் 339பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அடுத்த வருட நடுப்பகுதியாகும். போது சகலரும் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுவிடுவர். 2237 அங்கவீனமுற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 2174 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 63 பேரே எஞ்சியுள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சுயதொழில் புதிய கடனுதவி வழங்கப்படுகின்றது. சமூக சேவை அமைச்சினால் வழங்கப்படும் இந்தக் கடனுதவியை பெற 187 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 53 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபா வரை சுயதொழில் கடன் வழங்கப்ட்டுள்ளது. இது தவிர 3 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவொன்றும் அங்கவீன முற்றவர்களுக்காக சமூக சேவை அமைச்சு வழங்குகிறது. (மேலும்....)

ஆனி 01, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை

கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர். இவர் இலக்கு வைத்தே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர். சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவிகளில் கொலையாளிகள் மூவரும் பதிவாகியுள்ளனர். அவர்களின் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எம்மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - தேவானந்தா

 அமெரிக்க வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை - 2012 இல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் அற்றவை என சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'அரசாங்கத்தின்  துணைப்படைக் குழுவினுடன் தொடர்புடைய  கொலைகள் முன்னைய வருடத்தைவிட குறைவாக இருந்த போதிலும்,  சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ்  வழிநடாத்தப்படும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) அச்சுறுத்தல், பலாத்காரமாகப் பணம் பறித்தல், இலஞ்சம் பெறுதல் மற்றும் யாழ் பொதுமக்கள் மீது வன்முறையினை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நம்பகத்தரமான அறிக்கைகளில் இருந்து தெரியவருகின்றது  என்ற அமெரிக்க அறிக்கையில் குறிப்பிட்ட விடயத்தை அவர் மறுத்துள்ளார். (மேலும்....)


புலிகளின் வலையமைப்பு 2012 வரை செயற்பட்டது - அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது. பல்வேறு அறிக்கைகளில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அதன் சர்வதேச தொடர்பாளர்களையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் பயன்படுத்தி ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள்,நிதிகள் மற்றும் வேறு தேவைகளுக்கான பொருட்கள் என்பவற்றை பெற்றது என அமெரிக்க இராஜங்க திணைக்களம் வெளியிட்ட பயங்கரவாதம் 2012 எனும் அறிக்கையில் கூறியுள்ளது. இலங்கையுடனான பயங்கரவாத எதிர் கூட்டுறவும் பயிற்சியும் 2012 இல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அமெரிக்க இராஜங்க திணைக்களம் கூறியுள்ளது. (மேலும்.....)

பிள்ளையாரடியில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் - விகாராதிபதி

மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த 16வருடங்களாக நான் விகாராதிபதியாக இருந்து இன ஐக்கியத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் சமய பணி செய்து வருகின்றேன். மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை போடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதியை கேட்டு விண்ணப்பித்தேன்.(மேலும்.....)

கண்டி - கொழும்பு கடுகதி அதி சொகுசு ரயில் சேவை

ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார். 1864 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டிக்கும், கொழும்புக்கும் இடையில் அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார். இந்த அதிசொகுசு ரயிலின் 10 பெட்டிகளில் 44 இருக் கைகள் இருக்கும் என்றும், ஒரு வழிப்போக்குவரத்துக்கு ஒருவரிடம் தலா 500 ரூபா அறவிடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த சொகுசு ரயில் வண்டி வாரத்துக்கு ஒருநாள் மாத்திரமே பயணத்தை மேற்கொள்ளும் என்றும், இது ராகம, கம்பஹா, பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலத்திற்கு கீழ் நூறு அடிவரை ஸ்கான் செய்யும் அதிநவீன அமெரிக்க கருவி

நிலத்துக்குக் கீழ் 100 அடிவரை ஸ்கான் செய் யக் கூடிய நவீன இலத்தி ரனியல் ஸ்கானருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப் படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான இந்த விசேட ஸ்கானரின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இருவர் குறித்த ஸ்கானர் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து நிலத்தின் கீழ் ஸ்கான் செய்யக்கூடிய ஸ்கானர் இயந்திரம், இதற்குப் பயன்படுத்தக் கூடிய மடிகணினி, கையடக்கத் தொலைபேசி ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, புறக்கோட்டை வெஸ்டல் வீதியில் மூன்று சந்தேகநபர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கடன் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவர் என்றும், ஏனைய இருவரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய - சீன இராணுவ அதிகாரிகள் அருணாச்சலப்பிரதேசத்தில் சந்திப்பு

காஷ்மீர் மாநிலம் லடாக் செக்டரில் இருதரப்பு இராணுவத்தினருக்கும் இடையே நேருக்கு நேர் முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனையடுத்து இந்திய - சீன இராணுவத்தினர் இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து பேச நேற்று அருணாச்சல பிரதேச பம்லா என்ற இடத்தில் சந்திப்பு நடந்தது. இரு தரப்பு பிரிகேடியர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம் சுமார் 3 1/2 மணி நேரம் நீடித்தது. இதில் எல்லையில் அமைதி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எல்லை ரோந்து பணியின் போது இரு தரப்பு வீரர்களும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 15ம் திகதி சிக்கிமில் நதுல்லா என்ற இடத்தில் முன்பு இதுபோன்று ஒரு கூட்டம் நடந்தது. மேலும் தவாங்கில் இருதரப்பு எல்லை பணியாளர்கள் கூட்டமும் நேற்று நடந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com