Contact us at: sooddram@gmail.com

 

தை 2013 மாதப் பதிவுகள்

தை 31, 2013

‘வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்’ -  டக்ளஸ் தேவானந்தா

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட் டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தகவல் திணை க்களத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சின் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது செய்தியாளர் ஒருவர் “வடமாகாண தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதில் முதலமைச்சராக போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் -  அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்.

'திருப்பியனுப்புவதால் புகலிடம்கோருவோரின் எண்ணிக்கை குறைகிறது'

இலங்கைக்கு திருப்பியனுப்புவதன் மூலம் ஆசிய நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றதென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். '700 பேரை நாங்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளோம். இலங்கையிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பளவாகிவிட்டதை நாம் கண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார். அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருவதை நிறுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து இலங்கையர்களை திருப்பியனுப்புவதற்கு ஆரம்பித்தது.

போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - அமெரிக்கா

போர் குற்றம் தொடர்பான, நியாயமான விசனங்களை கருத்திலெடுத்து செயற்படத் தவறிவிட்டதாக இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க செனட்டர்கள் இருவர் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளிநாட்டுக் கொள்ளை தொடர்பில் பிரதான பேச்சாளர்களான செனட்டர்கள் பற்றி லீஹி, பொப் கேசி ஆகியோர் இலங்கை தானே அமைத்துகொண்ட கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தவறிவிட்டது என கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன் அண்மையில் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமைபற்றி இந்த செனட்டர்கள் தமது விசனத்தை வெளியிட்டதோடு அதிகாரம் வாய்ந்தோர் ஊடகங்களை பயமுறுத்தினர் என்ற மனித உரிமைக் குழுக்களின் குற்றச்சாடையும் முக்கியப்படுத்தியுள்ளனர். தமிழீழ புலிகளை தோற்கடித்த இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு, 40,000 வரையான சிவிலியன்களை கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இரணைமடு ஓடுதளம்...

கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதை, இலங்கை விமானப்படையினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த புனரமைப்புப் பணிகள் 75 சதவீதமளவில் பூர்த்தியாகியுள்ள நிலையில் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்ட சிறிய ஓடுபாதையே இந்த இரணைமடு ஓடுபாதை. சுமார் 1,500 மீற்றர் நீளம் வரை விரிவாக்கப்பட்டுள்ள இந்த ஓடுபாதை தற்போது இரணைமடு விமானப்படை ஓடுதளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த விமான ஓடுபாதையானது வர்த்தக, இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் பெரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதாக இந்த விமான ஓடுபாதை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல் - குவைதா, தலிபான் இயக்கங்களுக்கு ஒத்தாசை வழங்க இலங்கையில் தடை

அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்தகவல்கள் குறிப்பிட்டன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் பல வகை உபாயங்களையும் குறிப்பாக தலிபானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இச்சட்டமூலம் குறிப்பிடுகின்றது.

மதச் சார்பற்ற மாநிலத்துக்கு சென்று குடியேறுவதாக கமல் பேட்டி

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, படம் வெளியிட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், தான் தமிழகத்தை விட்டுவிட்டு, வேறு மதச்சார்பற்ற மாநிலத்துக்கோ அல்லது மதச் சார்பற்ற நாட்டுக்கோ சென்று குடியேறுவேன் என்று கூறினார். என் திரையுலக அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு இந்தப்பட த்தை நான் தயாரித்துள்ளேன். இந்தப் படத்துக்காக நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். இந்தப் படம் மட்டும் வெளியாக வில்லை என்றால் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு என்னுடையது இல்லை என்றாகிவிடும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நீதிபதி என்னிடம் கேட்டார் ஒருவரின் முதலீட்டுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா? என்று! எனக்கு நம் நாட்டின் ஒற்று மைதான் முக்கியம் என்பதை நான் இப்போதும் சொல்கிறேன். நம் நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது. அரசியல் கிடையாது. மனித நேயம்தான் முக்கியம்.

தை 30, 2013

இலங்கைக்கு எதிராக அமரிக்கா புதிய தீர்மானம் : அழித்தவர்களின் அடுத்த திட்டம்

வன்னிப்படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது என்பதும், இலங்கை அரசைத் திருப்திப்படுத்தி தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள எவ்வாறு நாடகமாடியது என்பதும் போன்ற ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவிருப்பதாக புலம்பெயர் அரசியல் கனவான்கள் கூத்தாட ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை எந்தத் தடையுமின்றித் தொடர்கிறது. உலகம் முழுவதும் மனித நாகரீகம் அவமானமடைகின்ற வகையில் மனிதர்களை கொசுக்கள் போலக் கொன்று குவிக்கும் அமரிக்காவிற்கு தமிழர்கள் மீது அக்கறை முளைத்துவிட்டதாக புலம்பெயர் ஐந்தாம்படை பிரச்சார ஊடகங்கள் மக்களுக்கு மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன. ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு பேரினவாதியை யூ.என்.பி, சரத் பொன்சேகா, முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி போன்ற இனவாதிகளின் துணையோடு அமரிக்கா ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்துவிடப்போவதில்லை.‘தேசிய’த்தின் பெயரால் மக்களை சுரண்டிப்பிழைக்கும் புலம்பெயர் குழுக்களே பேரினவாதத்தின் இன்றைய உலகக் காவலர்கள்.

வரலாறு கூறும் அனுபவம்!

(எஸ். கண்ணன்)

வயிற்றின் அடிப்பகுதியிலும், இதயத் திற்கும் கீழுமாக மூன்று தோட்டக்கள் துளைத்ததால், காந்தி சரிந்து மடிந்த நாள் ஜனவரி 30. இன்றும் அவர் முன்வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு, இந்துத்வா சக்திகளை வன்மம் கொள்ளச் செய்து வருகிறது. “தேசப்பிதா என்று காந்தியை அழைக்காதீர்கள்” என்று அலறினார் அத்வானி. இன்றளவும், இந்துத்துவா சக் திகள் இந்தியாவில் வெற்றி பெறாமைக் குக் காரணம் இடதுசாரிகளும், காந்தியும் வலியுறுத்திய மதச்சார்பின்மையே ஆகும். அடிப்படையில், இந்துமத வழி பாட்டை மேற்கொள்பவர், சதா ராம நாமத்தை உச்சரிப்பவர் என்ற அடையா ளங்களைக் கொண்ட காந்தி எப்படி, மதச் சார்பின்மையின் பிரதிநிதியாக இருக்க முடியும்? என்ற கேள்வி இன்றும் பலரைத் துளைத்து வருகிறது. “மதம் ஒரு சொந்த பிரச்சனை, அதற்கு அரசியலில் இடம் இல்லை” என்று அன்றைக்கு அழுத்த மாக குறிப்பிட்டார் காந்தி. (மேலும்...)

The Children Killed by America's Drones. "Crimes Against Humanity" committed by Barack H. Obama.

This is a list of names of innocent children killed by America's drones

But behind each name there is the face of a child with a family history in a village in a far away country, with a mom and a dad, with brothers and sisters and friends.

Among the list, are infants of 1, 2, 3 and 4 years old.

In some cases brothers and sisters of an entire family are killed.

Four sisters of the Ali Mohammed Nasser family in Yemen were killed. Afrah was 9 years old when she and her three younger sisters Zayda (7 years old) , Hoda (5 years old) and Sheika (4 years old) were struck by an American drone. (more....)

நுவரெலியாவில் சில தினங்களுக்கு பனிப்பொழிவு

மேலைத்தேய நாடுகளில் போன்று நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளை யில் கடுமையான பணிப் பொழிவு ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி பபோதினி கருணாபால நேற்றுத் தெரிவித்தார். நாட்டில் நேற்று முன்தினம் ஆகக் குறைந்த வெப்பநிலை 7.8 செல்சியஸாக நுவரெலியாவில் பதிவானதாகவும் அவர் கூறினார். அதேநேரம் தற்போதைய வரட்சிக் காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

யாழ். குடா அபிவிருத்தியில் முன்னேற்றம்: நிலையான சமாதானத்துக்கு அடித்தளம்

எமது விஜயத்தின் போது நாம் யாழ்ப்பாணத்திற்கும் சென்றோம்.இங்கு வீதிகள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளதோடு, அபிவிருத்தி முதலீடுகள் என்பனவும் அதிகரித்துள்ளன. மக்களுக்கு எங்கும் சுதந்திரமாக சென்று வரும் நிலை காணப்படுகிறது. நாட்டின் எப்பகுதிக் கும் சென்று வரக்கூடிய வசதி ஏற் பட்டுள்ளது. நீண்டு நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கான அடித்தளமாக இது அமையும் என கருதுகிறோம். சமாதானப் பாதையில் பயணிக்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். அதிகாரப் பகிர்வு குறித்து மட்டுமன்றி நீண்ட கால நல்லிணக்கம் குறித்தும் நாம் பேச்சு நடத்தினோம். எமது அனைத்து சந்திப்புகளின் போதும் நாம் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய செயற்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியிருந்தோம். அத்தோடு நின்று நிலைக்கும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான முயற்சிகளில் துரித முன்னேற்றம் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடியிருந்தோம். இதற்கு வெளிப்படையான ஆட்சி முறை முக்கியமென்பதுடன், பொதுமக்கள் உயிரிழப்புக்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுகள் உட்பட போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முறையாக முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும்.

சென்னை விமான நிலையத்தின் புதிய பகுதிகள் நாளை திறப்பு

புதிய விமான நிலையம் ஜனவரி 31ஆம் திகதி திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குநர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலையத்தின் விரிவாக்கப்பணி 2008ம் ஆண்டு தொடங்கியது. ரூ. 2000 கோடி செலவில் அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடைந்துள்ளதால் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அல்லது பிரதமர் மன்மோகன்சிங் இவற்றை திறந்து வைக்கவுள்ளதாக விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால், இரண்டு மாதத்திற்கு முன்னர் கூறினார். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, நாளை 31ம் திகதி புதிய விமான நிலையங்களைத் திறந்து வைக்கவுள்ளார். இது குறித்து விமான நிலைய இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:- 'விரிவுபடத்தப்பட்ட விமான புதிய முனையத்தை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி 31ம் திகதி பகல் 3 மணிக்கு திறந்துவைப்பார் எனக் கூறினார்.

முழு நகரையும் கண்காணிக்கும் அமெ. ஆளில்லா உளவு விமானம்

முழு நகரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய திறன்கொண்ட ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது. இந்த விமானத்தின் மூலம் 20,000 அடி மேலே இருந்து 30 சதுர மைல் பரப்பளவை தெளிவாகக் கண்காணிக்க முடியும். இந்த உளவு விமான தொழிநுட்பத்திற்கு கிரேக்கத்தின் 100 கண்கொண்ட கடவுளான அர்குயினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு தொழிநுட்ப ஆய்வு மையத்தின் 18.5 மில்லியன் டொலர் திட்டத்தில் அர்குஸ் உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் ஒரு ஐபோன் கெமராவை விடவும் 225 மடங்கு திறன் கொண்டதாக இருக்கும். இதன்மூலம் இந்த உளவு விமானத்தால் 20,000 அடி உயரத்திலிருந்து 6 அங்குல சிறு பொருளையும் தெளிவாக கண்காணிக்க முடியும். அதாவது நாம் கொண்டு செல்லும் கையடக்க தொலைபேசியின் ரகம் குறித்தும் இந்த உளவு விமானத்தால் அவதானிக்க முடியும். இதன்படி முழு யுத்தகளத்திலும் எதிரிப்படைகளின் நகர்வுகளை மட்டுமன்றி அவர்கள் ஏந்திச் செல்லும் பொருட்களையும் தெளிவாக கண்காணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தை 29, 2013

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐகோர்ட்!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மீதான தமிழக அரசின் தடையை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது. மேலும், தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை உடனடியாகத் திரையரங்குகளில் வெளியிடவும் நீதிபதி தனது தீர்ப்பில் அனுமதி அளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பாரிமுனைப் பகுதிகளைச் சுற்றிலும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அத்துடன், அப்பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. இந்த வழக்கில் இன்று காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நீண்ட நேரம் வாதங்கள் நடைபெற்றதால், இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்வதற்காகவே தீர்ப்பை 10 மணிக்குத் தள்ளிவைத்திருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. பின்னர், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மீதான தமிழக அரசின் தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை உடனடியாகத் திரையரங்குகளில் வெளியிடவும் நீதிபதி தனது தீர்ப்பில் அனுமதி அளித்தார். இதனால், தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canadian Minister participate in “one sided” round table discussion on Sri Lanka

Sri Lankan community in Canada are angry of the decision of the Canadian Minister Jason Kenny not to allow Sri Lankan organizations other than pro LTTE organizations to take part in the so called Round table discussion on Sri Lanka, happened to be organized by his office at the Hilton Suites in Markham Ontario on 26th January 2013 in order to gather the view of Sri Lankan community on the current situation of Sri lanka. Some members of Sri Lankan organizations including SLUN were blocked by LTTE Diaspora activists who were guarding at the entrance of the Trillium Room of the Hilton Suites in Markham, where the event was planned to take place. Ministry officials at the premises have not taken any action to settle the matter even though Sri Lankan organizations had complaint to them of the situation. Earlier a public notice was posted in Utahan newspaper published in Toronto requesting the participation of all Sri Lankan organizations to the event. Sri Lankan Canadians say this is a clear cut policy change in Stephen Harper’s Conservative government which were trying to disassociate with terrorists earlier, but now directly associating them for the thrust of getting Tamil Block vote in some Toronto ridings. “Canadian government taking foreign policy decisions based on propaganda of a banned terrorist organization cannot be good for any “democratic” country”; Saman Munidasa, a Sri Lankan activist who tried to attend the event told Third Voice.

(3rdVoice)

10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதி அமைச்சர்கள் நியமனம்

புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர்கள் :

  • பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா
  • சுற்றாடல் துறை  - சுசில் பிரேமஜயந்
  • மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி
  • தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க
  • முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
  • வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா
  • உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
  • கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க
  • தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்
  • சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன


திட்ட அமைச்சர்கள் :

  • நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
  • ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்


பிரதி அமைச்சர்கள்:

  • எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
  • எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
  • பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
  • அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
  • சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
  • சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை

இலங்கைக்கு எதிராக செயல்முறை ரீதியான தீர்மானம் கொண்டுவரப்படும்  - அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரவிருக்கின்றது. மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பேரவையின் கூட்டத்தொடரின் போதே இந்த தீர்மானத்தை கொண்டுவரவிருப்பதாக பிரதி உதவிச்செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஊக்குவிக்கும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பிலே 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானத்தை' கொண்டுவரவிருக்கின்றது. (மேலும்...)

துப்பாக்கி

“ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்று சொல்வார்கள். எண்ணெய் வளமிக்க நாடுகளையெல்லாம் இரண்டாக்கி, மரண வியாபாரத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது அமெரிக்கா.  2011ஆம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக 66.3 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) அளவிற்கு அமெரிக்க ஆயுத வியாபாரிகள், அப்பாவிகளின் உயிர்பறிக்கும் ஆயுதங்களை விற்றுத் தீர்த்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சர்வே, இந்த விவரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சில பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிச் சேனல்களிலும், சீனாவைப் பற்றியும் ரஷ்யாவைப் பற்றியும் இழிவுபடுத்த வேண்டுமென்றால், இந்நாடுகள் இந்தியாவுக்கு எதிராக அண்டை நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்வதாக கூறிக்கொள்வார்கள். (மேலும்...)

விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் - இரா. சம்பந்தன்

'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்­தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மைநிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன்" (மேலும்...)

அவுஸ்திரேலிய எம்.பிக்கள் குழு இன்று கிளிநொச்சி விஜயம்

வடபகுதிக்கு விஜயம் மேற் கொண்டுள்ள அவுஸ்திரேலிய எம். பிக்கள் குழு இன்று கிளிநொச்சி செல்ல விருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இவ் விஜயத்தின் போது கிளிநொச்சி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் மற்றும் பாதுகாப்பு தரப்பு உயரதி காரிகளை சந்திக்கும் இக்குழுவினர் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு பாடசாலை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் என்பவற்றை நேரில் பார்வையிடவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ஜுலி பிசொப் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளனர். (மேலும்...)

விண்வெளிக்கு உயிருள்ள குரங்கை அனுப்பியது ஈரான்

ஈரான் நேற்று வெற்றிகரமாக உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. மீளத் திரும்பும் விண்கலத்தினூடே மேற்படி குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டதாக தெஹ்ரானிலிருந்து வெளியாகும் அரபு மொழி தொலைக்காட்சியான அல் அலாம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் இதற்கு முன்னர் விண்வெளிக்கு குரங்கை அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் உயிர்வாழக்கூடிய உரையொன்றில் வைத்து மேற்படி குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் விண்வெளி திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் ஈரான் விண்வெளிக்கு எலி, ஆமை மற்றும் புளுக்களை வெற்றிகரமாக அனுப்பி யிருந்தது. ஈரான் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காகவே அது உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. எனினும் ஈரானின் விண்வெளி செயற்பாடுகள் குறித்து அது விரிவாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஏவுகணையை வழிமறித்து அழிக்கும் சீனாவின் சோதனை வெற்றி

விண்ணில் பாய்ந்து தாக்க வரும் ஏவுகணைகளை நடுவானில் வழிமறித்து தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை சீனா பரிசோதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் இராணுவ செலவினங்கள் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பழமையான இராணுவ தளபாடங்களை நவீனப்படுத் தவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த செலவினங்கள் தவிர்க்க முடியாதது என சீன அரசு கூறி வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் சோதனையை சீனா முதல் முறையாக மேற்கொண்டது. கிழக்கு சீன கடலில் உள்ள தீவு தொடர்பாக ஜப்பானுடன் கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழிக்கும் சோதனையை சீனா நேற்று முன்தினம் 2வது முறையாக வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.  இந்த சோதனைக்கு பின்னர் பேட்டியளித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “தற்போது நடத்தப்பட்ட சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு வெற்றிகரமாக தாக்கி அழிக்கப் பட்டது. இந்த சோதனை எங்கள் நாட்டை காத்துக் கொள்வதற்காகவே நடத்தப்பட்டது. எந்த நாட்டையும் குறிவைத்து நாங்கள் இந்த சோதனையை நடத்தவில்லை” என்று கூறினார்.

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஒத்திவைப்பு

தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக நேற்று முன்தினம் முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்த மத்திய அரசு தற்போது இறுதி முடிவெடுக்க இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி முடிவை மீண்டும் தள்ளி வைத்துள்ளது.‘ஆந்திராவை பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும்’ என அந்த மாநிலத்தில் நீண்ட நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதனால், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க, கடந்த டிசம்பர், 28ல், டில்லியில், அனைத்துக் கட்சி கூட்டத்தை, மத்திய அரசு கூட்டியது. கூட்டத்தின் முடிவில், ‘தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக, ஒரு மாதத்திற்குள், முடிவு எடுக்கப்படும். என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதி அளித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ளதால், தெலுங்கானா குறித்த அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் எம். எல். ஏ. க்கள் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், தனி மாநில அறிவிப்பை வெளியிட்டால், பதவிகளை ராஜினாமா செய்வோம் என மிரட்டினர். இதனையடுத்து தெலுங்கானா தனி மாநில அறிவிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் தெலுங்கானா மாநிலம் குறித்த இறுதி முடிவு எடுப்பதை மத்திய அரசு மீண்டும் தள்ளி வைத்துள்ளது.

தை 28, 2013

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதரகம் அமைக்க கோரும் பாதிரியார்

அமெரிக்கத் துணைத்தூதரகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளிடமே யாழ். ஆயர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க இராஜதந்திரிகளுக்குக்கும் யாழ். ஆயருக்குமிடையிலான சந்திப்பொன்று ஆயர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே  இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக யாழ். ஆயர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரக அலுவலகம் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறே அமெரிக்காவும் துணைத்தூதரகமொன்றை இங்கு அமைத்து இங்குள்ள நிலைமைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய நிலைமையை உருவாக்கவேண்டும். இவ்வாறு துணைத்தூதரகத்தை அமைக்கும்போது சிவில் சமூகத்துடனான தொடர்புகளை பேணிவரமுடியுமெனவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதற்கு பதிலளித்த அமெரிக்க இராஜதந்திரிகள், இக்கோரிக்கை தொடர்பில் தாம் கவனத்தில் எடுப்பதாகக் கூறியுள்ளதாகவும் யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்.

போருக்கு பிந்தைய அகதி முஸ்லீம்களின் வாழ்வு....?

பிரேசில் களியாட்ட விடுதியில் தீ்; 245பேர் பலி

பிரேசில் தெற்கிலுள்ள சண்டா மரியா நகர இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக 245 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு நேர களியாட்ட விடுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுதியில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரியின்போது மேற்கொள்ளப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நாள் என்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த விடுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறலுக்கு உட்பட்டுமே உயிரழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 160க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ மேஜர் ஜெர்சன் டா ரோசா பெனரரா, இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

வெளி பிரதேசங்களிலிருந்து வரும் சில குழுக்களே இனக்குரோதங்களை தூண்டுவதில் ஈடுபாடு

சகல இன மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதையே நாம் விரும்புகிறோம். மதங்களுக்கிடையில் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை. கடந்த வாரம் குளியாப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை. வேறு பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து மக்களை திசைதிருப்புவதற்கான ஒரு சூழ்ச்சியாகவே இதனை நாம் கருதுகிறோம். இவ்வாறு குளியாப்பிட்டிய பெளத்த விஹாரையின் பிரதான விகாராதிபதி சங்கைக்குரிய அஸ்ஸதும்மசிரி சாசனாலங்கார தேரர் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை குளியாப்பிட்டி யில் முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக் களால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலம், மற்றும் பிரசார நடவடிக்கைகள் பற்றி கருத்து வெளியிட்ட போதே குளியாப்பிட்டிய பெளத்த விஹாரையின் மதகுரு மேற்கண்ட வாறு தெரிவித்தார். நாம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின் றோம். இந்நகரில் பள்ளிவாசல், இந்து கோயில்களும் உள்ளன. மூவின மக்களுக் கிடையில் இதுவரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. இனிமேலும் நாம் ஒற்றுமையாக வாழ்வோம் என்பதையே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒருபால் உறவுக்காரர்களை ஒடுக்க ரஷ்யாவில் சட்டம்

ரஷ்யாவிலே ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளை கணிசமாக ஒடுக்கக்கூடியது என்று ஆர்வலர்களால் தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய சட்ட மூலம் ஒன்றுக்கு பாராளுமன்றம் ஆரம்ப ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபால் உறவு பற்றி வயது வராதவர்களுக்கு விபரம் சொல்வதில் தடை, ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை உள்ளிட்டவை இந்த சட்ட மூலத்தில் அடங்கும். பொதுவிடங்களில் ஒருபால் உறவுக்காரர்கள் கைகோர்த்து நின்றாலோ முத்தமிட்டுக் கொண்டாலோ தண்டிக்கப்படுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கலாம் என்று ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவின் வேறு பல பகுதிகளில் இப்படியான தடை விதிக்கும் சட்டங்கள் ஏற்கனவே அமுலில் உள்ளன. ஒருபால் உறவை ஆபத்தானது என்றும், வெளிநாட்டுச் சிந்தனை என்றும் கூறும் ரஷ்யாவின் ஆளும்கட்சி, இதனிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்த விதிகள் தேசிய சட்டங்களில் சேர்க்கப்படுவது அவசியம் என்று கூறுகிறது.

மாலியின் வடக்கு நகரான கவொ பிரான்ஸ் படையின் கட்டுப்பாட்டில்

வடக்கு மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் பலமான கோட்டையாக இருந்த கவொ நகரை பிரான்ஸ் துருப்புகள் கைப்பற்றியுள்ளன. துராக் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து இஸ்லாமிய போராளிகள் கடந்த ஏப்ரலில் கவொ நகரைக் கைப்பற்றினர். இந்நகர் அவர்களின் வலுவான கோட்டையாக இருந்து வந்தது. எனினும் கிளர்ச்சியாளர் வசமிருந்த விமான நிலையம் மற்றும் நாட்டின் தென் பகுதியை இணைக்கும் முக்கியத்துவம்வாய்ந்த பாலம் ஆகியவற்றை கைப்பற்றிய பிரான்ஸ் படை சனிக்கிழமை கவொ நகரின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்த மோதலின் போது கொல்லப்பட்டோர் தொடர்பான எந்த தகவலையும் பிரான்ஸ் இராணுவம் கூறவில்லை. ஆனால் இரவு வேளையில் நடந்த இராணுவ நடவடிக்கையில் பல இஸ்லாமிய போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று மாத்திரம் பிரான்ஸ் இராணுவம் கூறியுள்ளது. இதில் மோதல்களின் போது பிரான்ஸ் மற்றும் மாலி துருப்புகளின் சேதங்கள் குறித்து விபரம் வெளியிடப்படவில்லை. இதில் கவொ நகரின் மீது பிரான்ஸ் கடுமையான வான் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மாலி, பிரான்ஸ் படைகள் முதலில் விமான நிலையத்தை கைப்பற்றியதோடு பின்னர் நைகர் நதியை கடக்கும் பாலத்தை ஆக்கிரமித்தனர். அதன்பின்னரே கவொ நகரை பிரான்ஸ் துருப்புகள் முழுமையாக கைப்பற்றின.

ராமேஸ்வரம் கடலில் 17 நாட்களாக தத்தளித்த இழுவை படகு மீட்பு

ராமேஸ்வரம் கடலில் 17 நாட்களாக தத்தளித்த இழுவை கப்பல் நீண்ட முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டது.  இந்திய கடற்படைக்கு வழங்க உள்ள எண்ணெய் கப்பலை, கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு ஆதிநாத் என்ற இழுவை கப்பல் கடந்த 9 ஆம் திகதி பாம்பன் கடல் பகுதிக்கு இழுத்து வந்தது. அப்போது கடலில் ஏற்பட்ட சீற்றம், சூறாவளி காற்று காரணமாக இழுவை கப்பல் பாறையில் சிக்கிக் கொண்டு தந்தளிப்புக்கு ஆளானது. சில நாட்கள் கடலில் தள்ளாடிய இழுவை கப்பல், பாம்பன் ரெயில் பாலத்தில் மோதியது. இதனால் ரெயில் பாலம் தூண் சேதம் அடைந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலத்தின் அருகே இருந்து இழுவை கப்பல் இழுகப்பட்டாலும் பாறையில் சிக்கி கடலில் தத்தளித்தே வந்தது. கடந்த 17 நாடகளாக கடலில் தள்ளாடிய இந்த இழுவை கப்பலை மீட்க தூத்துக்குடியில் இருந்து சக்திவாய்ந்த 4 விசைப் படகுகள்கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் பெளர்ணமி என்பதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து காற்றின் வேகம் குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.45 மணிக்கு மீட்பு பணி நடைபெற்றது. பெரும் முயற்சிக்கு பிறகு நள்ளிரவு 1.45 மணிக்கு ஆதிநாத் இழுவை கப்பல் மீட்கப்பட்டு, பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை விலக்குக - சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் ஞாயிறன்று விடுத் துள்ள அறிக்கை வரு மாறு:- விஸ்வரூபம் திரைப்ப டத்திற்கு தமிழக அரசு விதித் துள்ள தடையை நீக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது. திரு. கமலஹாசன் கலைத்துறையிலும் தனிப் பட்ட முறையிலும் மதச் சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடித்து வருபவர். கடந்த காலத்தில் அவரு டைய செயல்பாடுகளே இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது. உச்சநீதி மன்றம் கடந்த காலங்களில் திரைப்பட தணிக்கைத் துறை ஒரு படத்தை தணிக் கை செய்து வெளியிட்ட பிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித் திருப்பது சட்ட பூர்வமாக வும் தார்மீக ரீதியிலும் நியா யமானதல்ல. எனவே விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை யை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஓய்வூதியத்தையும் இழந்தார் ஷிராணி பண்டாரநாயக்க!

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி  பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றம் ஒருவரை சேவையிலிருந்து நீக்க தீர்மானிக்கும் விடத்து அவர் ஓய்வூதியம் பெறும் தகமையை இழக்கிறார் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பொது பணிப்பாளர் டி. சுவர்ணபால தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியினால் பணி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை முன்னாள் பிரதம நீதியரசர் இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு காணப்பட்டால் தமிழர்கள் அகதிகளாக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படாது -  கூட்டமைப்பு

இலங்கையில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகின்றது. இதனாலேயே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்ல முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான நியாயமான தீர்வொன்று வழங்கப்படுமானால் தமிழர்கள் அகதிகளாக செல்லும் நிலை உருவாக மாட்டாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ஜுலி மிஷப், அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் குடிவரவுத் துறைப்பேச்சாளர் இஸ்கொட மொறிஷன், எல்லைப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் மைக்கல் கீனன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசியபோதே கூட்டமைப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தை 27, 2013

ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மரணங்கள், யுத்தத்துக்கு ஆட்சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் தமிழரசுக் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். புலிகள் இயக்கத்தினரையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாக வழிநடத்தாது இலங்கை தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பென அழைப்பதை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்ப வைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். (மேலும்....)

வடக்கில் பெரும்பாலான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே - வாசுதேவ

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ள நிலையிலேயே வாசுதேவ நாணக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

சந்திரிக்கா-குர்ஜித் சந்தித்துப்பேச்சு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையில் கடந்த புதன் கிழமையே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையிலேயே  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பேச்சுவார்ததை இடம்பெற்றுள்ளது. சந்திரிகாவுடனான சந்திப்பின் போது, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சரின் சந்திப்பை அடுத்து இடம்பெற்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடனான இந்தச் சந்திப்பு முக்கியமானதொன்றாக இருக்கலாம் என்று புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலை மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 50பேர் பலி, 90பேர் காயம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சிறைக் கைதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 90பேர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலா சிறைச்சாலை அமைச்சர் இரிஸ் வெரிலா தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் தென்மேற்கு நகரமான பார்குயிசிமெடோவிலுள்ள உரிபானா மத்திய சிறைச்சாலையிலேயே மேற்படி கலவரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறைக்கைதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவரை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சோதனைகளை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து பொலிஸாரை சிறைக் கைதிகள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு பொலிஸாரும் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் கைதிகள், பொலிஸார் மற்றும் சமூக சேவகர்கள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்களன்று அமைச்சரவையில் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு?

பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் அமைச்சரவை மாற்றம், நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறுமெனவும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படும் என்றும்  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் போது 8 துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்துறை, விளையாட்டு, தொழிற்சங்கம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சுக்கள் இதன்போது விசேட கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைகளுக்கு உட்பட்ட அமைச்சுக்களையும் மாற்றத்துக்கு உட்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், அமைச்சரவைக்குள் மேலும் இரு புதிய துறைகளை உள்ளடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புதியவர்களுக்கு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பல புதிய பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மேற்படி தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குழுவிடம் தமிழ் மக்கள் மீதான அனைத்து நெருக்கடிகளையும் கூறினோம்! - இரா. சம்பந்தன்

அமெரிக்க தூதுக் குழுவினரிடம் தமிழர் விவகாரம் தொடர்பில் சகல விடயங்களையும் எடுத்து விளக்கினோம். அவர்கள் எமது பிரச்சினைகளையும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் மிகவும் உன்னிப்பாக செவிமடுத்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவிச் செயலாளரைச் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், உதவி பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங், உதவிச் செயலாளர் ஜென் சிமெர் மென் ஆகியோர் ஒரு வார கால விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்தடைந்தனர். கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிறிதரன் ஆகிய எம்.பி.க்கள் நேற்றைய இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த கால அனுபவங்கள் ஓர் பாடம்

நாட்டில் இனமுறுகல் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்களுக்கு எதிரான சில கடும் போக்காளர்களின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்

கடந்தகால அனுப வத்தை பாடமாகக் கொண்டு நாட்டில் மீண்டும் இனமுறுகல் ஏற்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சில கடும்போக்கு சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதி ராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தி உள்ளார். இதுவிடயம் குறித்து ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாகக் கூறியுள்ளார். இது சிறந்ததொரு நடவடிக்கை என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (மேலும்....)

தை 26, 2013

166 பொது மக்களை கொன்றவருக்கு வெறும் 35 வருட சிறைத்தண்டனை

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிகாகோவில் உள்ள நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் அளித்தது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பெரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை ஏவி விட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் ஹெட்லி. மேலும் தாக்குதலுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து பல இடங்களை வேவு பார்த்தும் சென்றார். தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவரை அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. முன்னதாக அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஹெட்லி தனது சிறைக்காலத்தை அமெரிக்காவிலேயேதான் கழிப்பார். என்றும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

இன முரண்பாடுகளை தோற்றுவிக்க அமைப்பு ரீதியில் சில குழுக்கள் முயற்சி

இனவாதத்தைத் தூண்டி நாட்டில் மீண்டும் முரண்பாடுகளைத் தோற்று விப்பதற்கு அமைப்பு ரீதியாக சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொண் டுள்ளதாகவும் இதனை முறியடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டில் நிலவும் அமைதிச் சூழலையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கவும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் இக்குழுக்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்த அமைச்சர்; இதன் பின்னணியை இனங்காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். சில சிங்கள மற்றும் பெளத்த அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கான பின்னணிகளைக் கண்டறிவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஊடகங்கள் இது விடயத்தில் விழிப்புடன் செயற்படுவதுடன் தமக்குள்ள பொறுப்பை சரிவர நிறை வேற்ற வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஸ்பெயினில் 55 வீதமான இளைஞர்களுக்கு வேலையில்லை

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவுக்கு வேலையில் லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 55 வீதமான இளை ஞர்கள் வேலையின்றி இருப்பதாக அந்நாட் டின் உத்தியோகபூர்வ தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2012 கடைசி மூன்று மாதங்களிலும் ஸ்பெயினின் வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் ஒரு வீதத்தால் உயர்ந்துள்ளதோடு, மொத்தம் 26 வீதமானோர் வேலையில்லாமல் உள்ளனர். அதாவது 5.97 மில்லியன் பேருக்கு அங்கு வேலையில்லை. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஸ்பெயின் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனால் 1970களின் மத்திய காலப்பகுதிக்கு பின்னர் தற்போது அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தை 25, 2013

விறகில் பூத்த மலர்

மூன்று பெண்குழந்தைகள். ஓரு ஆண்குழந்தை. தொழில் கூலி. என்றாலும் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து கொள்ளும் திருப்பதியான வாழ்க்கை. ஊருக்கு ஓரமாக சுழித்துக்கொண்டோடும் மகாவலியின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு அப்பால்  பொலநறுவை வரை பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து வந்து கொத்திப் பிளந்து கொண்டு சென்று விற்றுப்பின் அன்றைய நாள் சிலவேளை அடுத்த நாளுக்குமான அரிசி, பருப்பு மற்றும் துணைச்சாதனங்கள் வீடு வந்து சேரும். இத்தனைக்கும் விறகேற்றி வரும் வண்டில் சொந்தமில்லை. வ.அ.வின் 'தோணி' சிறுகதையில் சொந்தத்தோணிக்காக ஏங்கும் இளைஞனின் நிலையில் தான் நபீக்கினுடைய நிலையும். அக்கதையில் இளைஞன் தோணிக்காக ஏங்கினான். நிஜத்தில் குடும்பஸ்த்தர் நபீக், தனக்கும் ஒரு சொந்தமான வண்டிலுக்காக ஏங்கினார். (மேலும்....)

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த எவரும் காணாமல் போகவில்லை - பாதுகாப்பு செயலாளர்

இறுதி யுத்தத்தின் போது படை யினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். புலிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு படையினருக்கு எதிராக போரிட்டு பலியானவர்களையும் காணாமற் போனவர்களாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இறுதி யுத்தத்தின் போது சுமார் 6000 படை வீரர்கள் வரை கொல்லப்பட்டனர். சிலர் காணாமற் போனவர்கள். இதேபோன்றுதான் புலிகளில் சேர்ந்தவர்களும் யுத்தத்தில் பலியானார்கள். யுத்தம் நடைபெறும் போது இங்கு மட்டுமல்ல எந்த நாட்டிலும் பலியாவது இயற்கையே. எனினும் பெற்றோர் அவர்கள் காணாமற் போனவதாகவே இன்னும் கருத்திக் கொண்டிருக்கிறார்கள். 6000 படையினர் கொல்லப்பட்டதுமட்டுமல்ல 20,000 பேர் வரையில் காயமடைந்தார்கள். அதனைவிட பாரிய எண்ணிக்கையானோர் அங்கவீன மானார்கள். எம்மிடம் சரணடைந்தவர்கள் அனைவரும் யூ.என்.எச்.சீ.ஆர்., ஐ.சீ.ஆர்.சி. மற்றும் இந்திய மருத்துவ நிலையம் என்பவற்றினூடாக சரணடைந்தார்கள். இவ்வாறு சரணடைந்தவர்கள் எவரும் காணாமற் போகவில்லை. அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக் கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரிழந்த மருத்துவ மாணவியின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின

புதுடில்லியில் கடந்த மாதம் 16ம் திகதி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட டில்லி மாணவி 29ம் திகதி சிங்கப்பூரில் மரணம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவ கல்லூரியில் ‘பிசியோதெரபி’ படித்து வந்த அம் மாணவி, இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதிவிட்டு, இயல்முறை கல்விக்காக புதுடில்லி வந்திருந்த போதுதான் அவர் பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்த இந்த கற்பழிப்பு சம்பவம் நடைபெற்று முடிந்த ஒரு மாதம் கழித்து, அந்த மாணவியின் 4ம் (இறுதி) ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. மொத்தம் உள்ள 6 பாடப் பிரிவுகளில் 73 சதவீதம் மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 4 ஆண்டு படிப்புக்கு எங்கள் கல்லூரிக்கு அவர் கட்டணமாக செலுத்தியுள்ள ரூ 1 இலட்சத்து 40 ஆயிரத்தை அவரது பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கல்லூரியின் நிர்வாகி அரோரா கூறினார்.

வடக்கு, கிழக்கில் இராணுவம் பயன்படுத்தும் காணி விடயங்களை கையாள விசேட குழு

வடக்கு, கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் விடயத்தை ஆராய்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் அப்பகுதியில் உள்ள ஐந்து படையணி தலைமையகங்களை ஒன்றிணைத்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு பரிந்துரை செய்துள்ளது. யாழ்., கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு உள்ளிட்ட ஐந்து படையணி தலைமையகங்கள் உள்ளடக்கப்பட்டதாக இந்தக் குழு அமைய வேண்டுமென மேற்படி இராணுவத் தளபதியின் குழு பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையின் படி பயங்கரவாத நடவடிக் கைகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நிறுவன ரீதியான நிர்வாக ரீதியான நிலையான செயற்பாடுகள் குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

வட கொரியா மூன்றாவது அணு சோதனைக்கு திட்டம்

வட கொரிய அரச ஊடகமான கே. சி. என். ஏவில் வெளியான அறிக்கையில், பிரதான எதிரியான அமெரிக்காவை இலக்கு வைத்து ‘உயர்நிலை அணு சோதனை’ மற்றும் மேலும் நீண்ட தூரம் செல்லும் மேம்படுத்தப்பட்ட ரொக்கெட் சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக வட கொரியாவின் உச்ச இராணுவ சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த அணு ஆயுத சோதனை தொடர்பிலான காலப் பிரிவு குறித்து அந்த அறிக்கையில் கூறப்படவில்லை. இதற்கு முன்னர் வட கொரியா 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியா அண்மையில் விண்வெளிக்கு வெற்றிகரமாக ரொக்கெட் ஏவியதற்கு அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அறிவித்து இரு தினங்களிலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வட கொரியா ரொக்கெட் ஏவியதன் மூலம் தடைசெய்யப்பட்ட நீண்டதூர ஏவுகணை சோதனையை மேற்கொள்வதாக அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு எதிராகவே அமெரிக்கா ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இதன்போது ஏற்கனவே தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் கொமியுனிஸ நாடான வட கொரியா மீதான தடைகளை விரிவுபடுத்தவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

தை 24, 2013

இருண்ட ஒரு எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகின்றோமா?

இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின் மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள்  கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா? (மேலும்....)

தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம் - வாசு

தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை ஆஸ்பத்திரி விவகாரம்

மனித எச்சங்கள் தொடர்பான ஆய்வு, விசாரணைகள் துரிதம்

மாத்தளை வைத்திய சாலை வளாகத்திலிரு ந்து கண்டுபிடிக்கப்பட்டு ள்ள மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் குறித்து ஆய்வு நடத்த தேவைப்பட்டால் வெளிநாட்டிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைக்க தயாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி தெரி வித்தார். மாத்தளை வைத்தியசாலை வளாகத்திற்குள் உயிரியல் வாயு கூடமொன்றை அமைக்கும் நோக்கில் கடந்த வருடம் நவம்பர் 23 ஆம் திகதியன்று நிலத்தைதோண்டிய போதே முதன்முதலில் மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் தென்பட்டன. அதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக பல மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரையில் மண்டையோட்டுடன் கூடிய 92 எலும்புக் கூடுகளும் மண்டையோடு இல்லாமல் 13 எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டனில் சர்வஜன வாக்கெடுப்பு

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது பற்றி கருத்தக்கணிப்பை நடத்த பிரதமர் டேவிட் கெமரூன் திட்டமிட்டுள்ளார். எனினும் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கன்சர்வேடில் கட்சி வெற்றிபெற்றால் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். “பிரிட்டன் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க முடியும்” என்று கெமரூன் குறிப்பிட்டுள்ளார். இதில் எதிர்வரும் 2015 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு காலத்திற்குள் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மிலிபான், பிரதமர் பலவீனமானவர் என்றும் தேசிய தேவைகளை விடவும் தனது கட்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவதாகவும் விமர்சித்துள்ளார்.

டி.என்.ஏ. சோதனை

சீனாவில் காணாமல்போன 2,348 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள டி.என்.ஏ. சோதனை மூலம் 2,348 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் இணைந்துள்ளனர். சீனாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி.என்.ஏ. தரவுகளை சேகரிக்கும் முறை மூலம் கடத்தப்பட்ட நிர்க்கதியாக விடப்பட்ட, வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் மனம் போன போக்கில் சுற்றித் திரியும் சிறுவர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று குழந்தைகளை தேடும் பெற்றோர்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் மரபணுக்களை சோதித்து சீன அரசு குழந்தைகளை பெற்றோரிடம் இணைத்து வைக்கிறது.இந்த திட்டம் சீனாவின் மக்கள் பாதுகாப்பு மனித கடத்தல் தடுப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் இதுவரை 2,348 குழந்தைகள் தமது பெற்றோரிடம் இணைக்கப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறு 521 குழந்தைகள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

தை 23, 2013

புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் சேர்க்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடம் மறைத்து விட்டது

உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001 ஆம் ஆண்டு எனது தலை மையில் ஆரம்பிக்கப்பட்டது என் பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது ‘உண்மை’ வெளிப்பட்டு விட்டது. 06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாத படியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்ற மடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுதும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணை யின்மையால் பெருமளவு உறவி னர்களையும், பல கோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது என்பதை உணர்கின்றனர். செல் வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், அவர்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளி யாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத் தருவதில் தவறிவிட்டனர். (மேலும்....)

பேரினவாதத்தின் விஸ்வரூபம் : முஸ்லிம்களே இலக்கு!

தமிழ் சமூகம் நசுக்கப்பட்ட போது அவர்களுக்கு என்று ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை இருக்கவில்லை என்பது காலம் நமக்கு ஊட்டிய பாடமாகும். ஏனெனில், பிரபாகரனைப் பொறுத்தவரை அவரொருவரே தலைவராக இருக்க வேண்டும் என்பதால் அனைவரையும் கொன்று தீர்த்து விட்டார் அதானால் அவர் ஒருவரே தலைவராக வலுக்கட்டாயமாக நின்று கொண்டார். இறுதியில் அவரும் சென்ற பின்னர் தற்போது மீண்டும் வழி நடத்தவோ நம்பவோ ஆளில்லாமல் இன்னும்தான் தமிழ் சமூகம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை என்னவென்றால் தலைவர்கள் கூடிவிட்டார்கள், அந்தத் தலைவர்கள் அனைவரும் நான் முந்தி நீ முந்தியென்று ராஜபக்சவுக்கு வால் பிடிப்பதில் காட்டும் மும்முரத்தைத் தம் சமூகத்தின் ஆதங்கத்தைத் தெளிவாக்குவதற்கு காட்டும் நிலையில் இல்லை, நீதியமைச்சரே நாட்டில் நீதியிருக்கிறதா என்று கேட்கும் போது இதை விட என்ன வேண்டும் என்று ஆகி விட்டதல்லவா? சுனாமி வந்தபோது தமிழ்-முஸ்லிம் என்று பார்க்காது தென்னிலங்கையிலிருந்தும் படையெடுத்துச்சென்று முஸ்லிம்கள் மக்களுக்கு உதவி செய்தார்கள் அது தான் எம் சமூகத்தின் மனிதாபிமானம். அதேவேளை புலியை அழிக்கிறோம் பேர்வழி என்று மக்களை மந்தைகள் போன்று அழித்தபோது நம் மக்கள் வாய் மூடியிருந்தார்கள், ஒரு வகையில் புலி போனால் தான் நாடு முன்னேறும் எனும் மிகச் சாதாரண எண்ணம் புலியை எதிர்த்த தமிழர்களிடமும் இருந்ததால் அதுவும் கடந்த கால வரலாறாகிவிட்டது. (மேலும்....)

'தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமன்'

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி தமிழரசுக் கட்சிக்கல்ல. இந்த அடிப்படையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்தனர்.  சந்தர்ப்ப சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது சுயநோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கூட்டுக் கட்சிகளின் வேட்பாளர்களை தமிழரசு கட்சியில் இணைத்தமையை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கை அமைகிறது. (மேலும்....)

மத்திய மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை

மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண முதலமைச்சர் உட்பட நான்கு  பேரையே தலா 10 இலட்சம் ரூபா பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கபுலி உத்தரவிட்டுள்ளார்.2008 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக கண்டியைச்சேர்ந்த பாடசாலையொன்றின் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மத்திய மாகாண முதலமைச்சருக்கும் ஏனைய நால்வருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு அத்தனகல நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது. நிட்டம்புவ, ஹொரகொல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற  வீட்டுத்தொகுதியின் மீது தாக்குதல் நடத்தினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் பிரதிவாதியான பிரதியமைச்சர் சரண குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜராகாததையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகம் கரிசனை

அண்மை காலமாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய சிவில் சமூக நிறுவனங்கள்,  ஆர்வலர்கள் மற்றும் சட்டத்திற்காக குரல்கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது உலகளாவிய உரித்துடையதென்பதுடன் அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோம்".

48 மணிநேர தடுத்துவைப்பும் 15 தவறுகளும்

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. (மேலும்....)

Canada

MV Sun Sea passenger loses refugee status after court denies his claim that Sri Lanka could falsely link him to Tamil rebels

The Federal Court of Canada has overturned the refugee status granted a passenger aboard a smuggling ship linked to Tamil rebels, just as the refugee board extended protection on the same grounds to a Tamil passenger of a second smuggling ship, highlighting the difficulty in handling the two highly publicized mass arrivals. The overturned decision involves one of 492 Sri Lankan Tamil migrants who arrived aboard the MV Sun Sea in 2010; the newly granted asylum decision involves one of the 76 aboard the MV Ocean Lady in 2009. In both, the men had been accepted as refugees under claims that publicity connecting the ships to the Liberation Tigers of Tamil Eelam placed all passengers at risk in their homeland by mere association. The court’s rejection of the claim could impact other cases still pending. (more....)

இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஐ.நாவை வெளியேறுமாறு கோரிக்கை

காஷ்மீரில் மாநிலத்தின் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இராணுவத்தினரின் நேரடி தாக்குதலை தடுக்கும் பொருட்டு, 1971ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தப்படி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க, ஐ.நா. பாதுகாப்பு ஆய்வு குழுவினர் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைதிப் பணிகளை நேற்று முதல் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, 1972 ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போடப்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி, எங்களது பிரச்சினை களைத் தீர்த்து கொள்கிறோம். எல்லைப் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள ஐ.நா. பாதுகாப்பு ஆய்வு குழுவினர் அங்கிருந்து வெளியேற்றப்படல் வேண்டும் என்று ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தை 22, 2013

கைதான யாழ். பல்கலை மாணவர்களில் இருவர் விடுவிப்பு

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர். ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசினார்கள், புலிகளுக்கு சார்பான சுவரொட்டிகளை ஒட்டினார்கள் மற்றும் புலிகளுக்கு சார்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரனின், அலுவலகம் இன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அலுவலகமே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவ் அலுவலகத்தில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணித்தியாலங்கள் சோதனை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் அலுவலகத்தில் காணப்பட்ட கணினியொன்றையும் எடுத்துசென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இதேவேளை, அவருடைய பிரத்தியேக செயலாளர் பொன் காந்தன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன்போது, கிழக்கு மாகாண பாடசாலைகளில் மூன்று வருடங்கள் கடமை நிறைவேற்றும் அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்றினை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சபையில் சமர்ப்பித்திருந்தார். மேற்படி பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது அமைச்சர் உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ. தவம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தினையடுத்தே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரகசியமான செயற்பாடுகள் நன்மை தரப் போவதில்லை

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற பொதுச் சபை கூட்டத்தில் வீ. ஆனந்தசங்கரி ஆற்றிய தலைமை உரை.

இனப் பிரச்சினை சிக்கலடைந்த மைக்கு எம்மவருள் ஒற்றுமை யின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும், சுயநல நோக்கமும் காரணங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனை யற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளது. கடந்த பொதுச் சபை கூட்டத்தில் உங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் வலுப்படுத்தும் என்பதே ஆகும். எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை. நிலைமையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப் பிற்கு தொடர்ந்து தேவைக்கேற்றவாறு ஆதரவு வழங்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களாக தமிழரசுக் கட்சி தலைவர்களை பல்லக்கில் வைத்து பல்லக்கை சுமப்ப வர்களாகத்தான் இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியவற்றின் தலைமை செயற்பட்டு வருகிறது. (மேலும்....)

பொதுவாழ்க்கை பிரகடனம்

(தமிழருவி மணியன்)

உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட் டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூ னிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப் பணித்து, எள் மூக்கின்முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண் டலற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்குப் போர்க் குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம் யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங் கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமி ழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழ லில்தான் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என் கிறார் கலைஞர் கருணாநிதி.(மேலும்....)

ஆடம்பர மாளிகையை புறக்கணித்த ஜனாதிபதி

லத்தீன் அமெரிக்க நாடு களில் ஒன்றாக இருக்கும் உருகுவேயின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா( 77 ) தனக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட ஆடம்பர மாளிகையை புறக்க ணித்து விட்டு, மனைவி யின் தோட்டத்துடன் கூடிய வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருகிறார். 1960 - 70 கால கட்டங் களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன் னை இணைத்துக் கொண்டு பணியாற்றிவர். பல அடக்கு முறை சட்டங்களையும் எதிர்கொண்டவர். பல முறை தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ர வதைக்கு உள்ளாக்கப்பட் டவர். 2009ம் ஆண்டு இவர் உருகுவேயின் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட் டார். அப்போது அவ ருக்கு அரசு வழங்கிய ஆடம் பர மாளிகையை வேண் டாம் என கூறியதுடன், தான் எப்போதும் போலவே சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன் என்று கூறி அது போல் வாழ்ந்து காட்டியும் வருகிறார். (மேலும்....)

தற்போதைய சூழலும் தேசியமட்ட பிரச்சினையும்

(வதீஸ் வருணன்)

விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும்.(மேலும்....)

நவிபிள்ளையின் அறிக்கைக்கு இலங்கை கண்டனம்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் மற்றும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா உயர்ஸ்தானிகர், இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் தேவையில்லாத விமர்சனத்தை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் செனவிரத்ன புள்ளே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் புறவயத்தன்மை காணப்படவில்லை. இது பக்கச்சார்பானது. தவறான விடயங்களைக் கொண்டுள்ளது. பயன்படுத்திய மொழிநடையும் பொருத்தமற்றதாக உள்ளது எனவும் இதை முழுதாக நிராகரிப்பதாகவும் செனவிரத்ன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது. ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள மக்கள் சனத்தொகையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, அரசியல் கலாசார ரீதியில் உதாசீனமான நிலைமை போன்ற காரணிகளினாலே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து ஐந்து பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் சமையலறையின் ஓட்டைப்பிரித்து வீட்டுக்குள் இறங்கிய திருடர்கள் வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு அவரது மனைவியின் கண், கால் என்பவற்றைக் கட்டி, கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் நகைகளை தேடியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வீட்டில் சல்லடை போட்டுத் தேடிய பின்பு உரிமையாளரின் மனைவியின் தோட்டையும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஞான வைரவர் ஆலயத்தின் பவுணிலான சூலத்தையும் நான்காயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவே வீட்டிற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் யாழ். மாநகர சபையின் முன்னாள் பணியாளராவார்.

பாலியல் விவகாரம்

அமெ. கட்டளை தளபதிகளுள் மூன்றில் ஒருவர் பதவி இழப்பு

அமெரிக்க இராணுவத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பதவி நீக்கப்பட்ட கட்டளை தளபதிகளுள் 30 வீதமானோர் பாலியல் குற்றச்சாட்டுக்காகவே வெளியேற்றப்பட்டுள்ளது அந்நாட்டு பாதுகாப்பு திணைக்கள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதில் கற்பழிப்பு, முறையற்ற உறவு, பாலியல் தொந்தரவு ஆகிய குற்றச்சாட்டுகளும் உள்ளடங்குகின்றன. இந்த தரவுகள் மூலம் அமெரிக்க இராணுவ தலைவர்கள் பாலியல், மது மற்றும் போதைப் பொருள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பது தெரியவந்தது. இராணுவத்தில் இருக்கும் லுதினன் கேனல் அல்லது அதற்கு மேலான அதிகாரிகளில் 10 இல் நான்கிற்கும் அதிகமானோர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஒழுக்கப் பிரச்சினையால் பதவி விலக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் ஒரு நட்சத்திரம் முதல் நான்கு நட்சத்திரங்கள் கொண்ட 18 ஜெனரல் மற்றும் அட்மிரல்கள் பதவி விலக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு காரணமாகவே தமது பதவியை இழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 255 கட்டளைத் தளபதிகள் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.

தை 21, 2013

இன்னொருவர் குடை பிடிக்க ....? சும்மா போங்கள் நீங்கள் தலைவர் ஆகீடீங்க....?

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு வீதியில் அமையப்பெற்றுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பு  புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்தமநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவிலிருந்து பாராட்டு

கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூத்த அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன. கடந்தவாரம், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டியூ.குணசேகர, அதனைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன், வாக்கெடுப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். அரசின் நகர்வுக்கு எதிராக அவர் உரையாற்றி விட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய போது, முதலாவது தொலைபேசி அழைப்பு இந்தியாவில் இருந்து வந்தது. அந்த அழைப்பை எடுத்தவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தனிப்பட்ட செயலர். அந்த உரைக்காக, அவர் இந்தியப் பிரதமரின் சார்பில் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அதற்கடுத்து இந்தியாவில் இருந்த மேலும் பெருமளவு தொலைபேசி அழைப்புகள் வந்தன. தொலைபேசி மூலம் டியூ.குணசேகரவுக்குப் பாராட்டுத் தெரிவித்தவர்களில் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அடங்கியிருந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று உயர்மட்டத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு, இரு நாடுகளினதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

'வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்'

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 44 பேரும் காலி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலைச்செய்வதற்கு முன்வருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய பொறுப்பின் கீழ் இல்லை என்று புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

In praise of Sumanthiran

It is natural for members of the Parliamentary Opposition to oppose whatever the ruling party proposes.  Voting in Parliament is therefore predictable, whether it is for an Act of Parliament, Annual Budget or anything else.  There was a time of dissenting voices voting against party position but that was effectively quashed by a Supreme Court determination regarding the fate of Members who considered crossing over.  What we have got used to seeing is all members of the Opposition using allocated time to object, with the main opposition being the most vocal and other making cursory dissenting noises. (more.....)

'1200 புலிகள் இன்னும் மறைந்திருக்கின்றனர்'

பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத மற்றும் கைதுசெய்யப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த இன்னும் 1200 பேர் இருக்கின்றனர். என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலி சந்தேகநபர்கள் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வடக்கு பாதுகாப்பு பிரிவினரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளது. அந்த 1200 பேரிலும் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் வசிப்பதாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கின்ற அல்லது கைது செய்யப்படாமல் இருக்கின்ற புலி சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உரியப்பிரிவினர் எடுப்பது தொடர்பிலும் அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

'தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி'

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்தியாவின் அழுத்தத்துடன் அங்கத்துவம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இதனால் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாம் ஒரு தீர்க்கமான முடிவினை அரசியலில் எடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற  இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எம்மை பலமுறை அழைத்து இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அவை அனைத்திலும் எமக்கு திருப்தியில்லாத நிலையில் நாங்கள் அதிலிருந்த விலகியுள்ளோம்" என்றார்.

மின்தந்தி முறைமை ரத்து செய்ய தீர்மானம்

மிக நீண்ட காலமாக காணப்பட்ட மின்தந்தி முறைமை ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் தந்திகளை அனுப்புவதனால் தபால் திணைக்களத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் நட்டத்தில் இவ்வாறன தந்திச் சேவையை வழங்க முடியாது எனவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மின் தந்திச் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. மின் தந்தி சேவையை வழங்குவதற்காக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இந்த ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தை தபால் திணைக்களம் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மின் தந்தி சேவையை ரத்து செய்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பணிப்பெண்கள் சவூதி செல்வதை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக் நேரிடும்

இலங்கை பெண்கள் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுப்பதற்கு தற்போதை நிலைமையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு பணிப்பெண்கள் சவூதி செல்வதை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக் நேரிடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் சவூதி அரேபியாவுக்கு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார சுட்டிகாட்டியுள்ளார். பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக் கோரி பெண்கள் உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த எம்மிடம் எவ்வித காரணமும் இல்லை. அவ்வாறு பணிப்பெண்கள் சவூதிக்கு செல்வதை நாம் நிறுத்தினால் பின்னால் பாரிய விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அதாவது சவூதியில் தற்போது பணிப்புரியும் ஆறு இலட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

23 வெளிநாட்டு பிணைக்கைதிகள், 32 ஆயுததாரிகள் பலி

அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின் நான்கு நாள் முற்றுகை முடிவு

அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளால் வெளிநாட்டு பிணைக் கைதிகளுடன் முற்றுகையிடப்பட்ட எரிவாயு ஆலை நான்கு தின போராட்டத்தின் பின் மீட்கப்பட்டது. எனினும் அல்ஜீரிய இராணுவத்தின் மீட்பு நடவடிக்கையின் போது ஆயுததாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு எதிரான கடைசி கட்ட இராணுவ நடவடிக்கையின் போது 7 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி முற்றுகை நடவடிக்கையால் குறைந்தது 23 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதோடு 32 ஆயுததாரிகள் பலியாயினர். இதில் 5 பிரிட்டன் நாட்டவர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுவதோடு மேலும் 5 நோர்வே நாட்டவர்களை காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறையை தீவிரவாத செயல் என விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீவிரவாதத்தை ஒடுக்க பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எதிரான அல்ஜீரிய இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே இது தேவையான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்த வன்முறைகளால் மேலும் பிரிட்டன் பிரஜைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார். மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் களுக்கு எதிரான பிரான்ஸின் இராணுவ தலையீட்டை நிறுத்த வேண்டும் என்பதே ஆயுததாரிகளின் பிரதான நிபந்தனையாகும்.

செவ்வாயில் நீளமான வறண்ட நதி

செவ்வாய் கிரகத்தில் 1,500 கிலோ மீற்றர் நீளமான வறண்ட நதி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் சட்டலைட் என்ற செயற்கைக் கோள் இந்த நதியைப் படம் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 6 கி.மீ அகலம் கொண்ட இந்த நதியின் சில பகுதிகள் 1 கி.மீ. அளவுக்கு ஆழமாக உள்ளன. இதற்கு பல கிளை நதிகளும் உள்ளன. 1.8 பில்லியன் ஆண்டு முதல் 3.5 பில்லியன் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நதி ஓடியிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. இந்த நதிக்கு ரியுல் வல்லிஸ் என்று பெயர் சூட்டியுள்ளது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

உலக வறுமையை ஒழிக்க முதல் 100 செல்வந்தர்கள் போதும்

உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டொலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டொலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது. ஒரு சிலர் கைகளிலேயே எல்லாப் பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் எவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந்த சந்திப்பு ஒன்றில் ஒக்ஸ்பாம் கூறியுள்ளது. உலக சனத்தொகையில் ஒரு வீதமான செல்வந்தர் கள் கடந்த 20 வருடங்களில் தமது வருமானத்தை 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம்

சென்னை விமான நிலையம் 28 ஆம் திகதி ஆரம்பமாகும்

2 ஆயிரம் கோடி ரூபா செலவில் நவீன முறையில் விரிவாக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திறக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு விமான முனையத்தின் விரிவாக்க பணி 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு உள்நாடு, சர்வதேசம் மற்றும் சரக்கு விமானங்கள், தனியார் பயன்படுத்தும் தனி விமானங்கள் என சுமார் 150க்கும் குறைவான விமானங்களே வந்துசென்றன. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 450 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. முன்பு ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கு குறைவான பயணிகளே வந்தனர். ஆனால் தற்போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 16 ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன. தற்போது 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 2 முனையங்களிலும் தரை தளத்தில் வருகை பகுதியும், முதல் தளத்தில் புறப்பாடு பகுதியும் அமைந்துள்ளது. தெற்காசியாவில் மிகப் பெரியதும் 1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமையையும் பெற்றது சென்னை விமான நிலையம். மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக பிசியானது இது.

நுவரெலியாவில் உள்ளூர் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் முடிவு

நுவரெலியாவின் ஹாவாஎலிய பகுதியில் உள்ளூர் விமான நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நுவரெலியாவில் விசேட கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ஹாவாஎலிய பகுதிக்கு விஜயம் செய்து விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதியை பார்வையிட்டார். புதிய விமான நிலையத்திற்கான வரைபடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். மிக விரைவாக விமான நிலையத்தை அமைக்குமாறும் ஜனாதிபதி அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். 900 மீற்றர் நீளத்திலும் 45 மீற்றர் அகலமும் கொண்டதாக ஓடு பாதை அகலமாகவுள்ளது. சீரற்ற காலநிலை ஏற்பட்டபோதும் எவ்வித அச்சமுமின்றி விமானங்களை தரையிறக்கக்கூடியவாறு நவீன தொழில் நுட்பங்களை கொண்டதாக அமைய வுள்ளது.

தை 20, 2013

அரசியல் இலாபங்களுக்காக சமூகங்களுக்கிடையில் இனவிரிசல் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாத ரி.எம்.வி.பி.

சமீபநாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் வகுப்பது தொடர்பில் சில இணக்கமற்ற தன்மைகளும் முரண்பாடுகளும் தோன்றி வருவதனை அவதானிக்க முடிகிறது. தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதனையும் இதனூடாக விரும்பத்தகாத மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு பாதகமான செயற்பாடுகள் நடந்தேறி வருவதையும் ஒரு பொறுப்பு மிக்க மக்கள் கட்சி என்ற வகையில் நாம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன் வேதனையும் அடைகின்றோம். (மேலும்.....)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் நேற்று  (20.01.2013 )கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. பொன் காந்தன் நேற்று காலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலும்.....)

அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் முதல்  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இயக்கங்களுடன் தொடர்பு இருக்கின்றமை உறுதிசெய்யப்படுமானால் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமெனவும் தெரியவருகின்றது.

காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்!

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அடுத்த நிலை தலைவராக அவர் உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் சந்திக்கவும், பா.ஜனதா சார்பில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிற நிலையில், அவரை எதிர்த்து பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தவும் திட்டமிடப்பட்டே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக் தெரிகிறது. (மேலும்.....)

தடம் மாறிப் பயணிக்கும் தமிழ் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தமிழ் மக்களிடையே பலத்த சந்தேகங்களையும், கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் மக்களைத் தமது பொய்யான உறுதி மொழிகளால் ஏமாற்றி வாக்குகளை அபகரித்து தாமே அம்மக்களின் பிரதிநிதிகள் என மார்தட்டிவரும் தமிழ் கூட்டமைப்பு இன்று அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தரக்குறைவான செயற்பாடுகளினால் அதே மக்களின் முன்பாக வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. (மேலும்.....)

இனரீதியாக பிரிவுகளால் எதிர்காலத்திற்கு பாரிய சவால்

கிழக்கில் எதிர்ப்பு அரசியலால் அநாதைகளான தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பிரதேசங்களை காப்பாற்றுமாறு அருண் தம்பிமுத்து கோரிக்கை

மட்டக்களப்பு மாவட் டத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக் களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். (மேலும்.....)

சர்வஜன வாக்கெடுப்பின் மறு வடிவம் பாராளுமன்றமே - வாசுதேவ நாணயக்கார

பாராளுமன்றத்தால் பெறப்பட்ட 2/3 வாக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜனாதிபதி, பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து நீக்கினார். புதிய நீதியரசருக்கான பெயர்ப்பட்டியல் நிர்வாகக் குழு முன் சமர்ப்பித்ததன் பின், அவ்வங்கத்தவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி புதிய பிரதம நீதியரசரை நியமித்தார்.  இதுபற்றி பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஆனால் இது அரசியல் அமைப்பு திட்டத்துக்கமையவே நடைபெறும் ஏற்பாடு. அதன்படி உத்தியோகபூர்வமான முறையில் முறையாகவே இச்செயற்பாடுகள் நடைபெற்றன. அது பற்றி எவ்வித சிக்கலுமில்லை. புதிய பிரதம நீதியரசரும் முறையாகவே நியமிக்கப்பட்டுள்ளார்.  (மேலும்.....)

துண்டிக்கப்பட்ட நீதி!

(பாரதி தம்பி)

சவுதி அரேபியாவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டு இருக்கும் ரிஸானா நபீக் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் மரணம் மொத்த உலகத்தையும் பதறவைத்திருக்கிறது. இலங்கையின் மூதூரில் பிறந்த ரிஸானா, ஏழையிலும் ஏழையான முஸ்லிம் தமிழ்ப் பெண். 2005-ம் ஆண்டு வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்குப் போனபோது, அவளது வயது 17. ரிஸானாவின் வயதை அதிகமாகக் காட்டி பாஸ்போர்ட் பெற்று சவுதிக்கு அனுப்பிவைத்தார் ஏஜென்ட். அங்கு ஒரு பணக்காரரின் வீட்டில் ரிஸானா பணிப்பெண்ணாக வேலை பார்த்தது வெறும் 18 நாட்கள். ஆனால், சிறையில் இருந்ததோ ஏழு ஆண்டுகள். ''அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் யாரும் இல்லை. நான் எஜமானியம்மாவின் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று குழந்தையின் மூக்கில் இருந்து பால் வடிந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொண்டையைத் தடவிக்கொடுத்தேன். மூக்கில் இருந்து பால் வடிவது நின்றுவிட்டது. குழந்தை அயர்ந்து தூங்குகிறது என்று நினைத்து படுக்கவைத்தேன். (மேலும்.....)  

தை 19, 2013

புதிய போராளிக் குழு உருவாவதை தவிர்க்க முடியாது - சந்திரிகா

இலங்கை அரசின் கொடூர அடக்குமுறைகள் தொடர்ந்தால் புதிய போராளிக் குழு அங்கு உருவாவதை தவிர்க்க முடியாது. என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷவின் தாக்குதல் இப்போது சர்வதேச சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக வெடித்திருக்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் இதைப் பற்றி விசாரனை செய்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் நெடுங்காலமாக பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதனால் அவர்கள் தமது உரிமைகளைக் கோரினர். அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது தலைமையிலான அரசாங்கம் முயற்சித்தது. (மேலும்....)

China vs America

One Chinese walks into a bar in America late one night and he saw Steven
Spielberg.

As he was a great fan of his movies, he rushes over to him, and asks for
 his autograph.

 Instead, Spielberg gives him a slap and says "You Chinese people bombed
our Pearl Harbor, get out of here."

 The astonished Chinese man replied. "It was not the Chinese who bombed
your Pearl Harbor, it was the Japanese."

"Chinese, Japanese, Taiwanese, you're all the same," replied Spielberg.

 In return, the Chinese gives Spielberg a slap and says "You sank the
Titanic; my forefathers were on that ship."

Shocked, Spielberg replies "It was the iceberg that sank the ship, not me."

The Chinese replies, "Iceberg, Spielberg, Carlsberg, you're all the same."


(This particular joke won an award for the best joke in a competition in
Britain!)

அரசியலமைப்பை மாற்றவேண்டும் - இடதுசாரிகள்

மாகாணங்களுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்குவதற்கு அரசியலமைப்பை முழுமையாக மாற்றவேண்டும். என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய இடது முன்னணி, இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பனவே இவ்வாறு தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ஜனநாய இடது முன்னணியின் தலைவரும்  அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற புதிய திருத்தத்தில் நிர்வாகத்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்படவேண்டும். சகல இனங்களும் ஆட்சியில் உண்மையாக பங்குப்பற்ற வாய்ப்பு வழங்குவதற்கு அதிகார பகிர்வு அவசியமானது. அதிகார பகிர்வுக்கான அலகாக மாகாணம் இருக்கவேண்டும்.சில மாவட்ட மட்ட அதிகார பகிர்வுபற்றி பேசுகின்றனர். மாகாணம் பலவீனமான ஆட்சி அலகாகவே இருக்கவேண்டும்.என்றார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்காக ஆளும் தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 பேர் எடுக்கும் முயற்சி பற்றி அவர் தெரிவிக்கையில், இது கருத்தாடலுக்கான ஒரு முயற்சி மட்டுமேயாகும். 13 ஆவது திருத்தத்திற்கு எதிரான ஒரு இயக்கம் காணப்பட்டது. ஆயினும் நாம் அதனை பாதுகாப்பதற்கு விரும்புகின்றோம். என்றும் அவர் கூறினார்.

அழகிரி வீழ்ச்சி ஏன்?

ஞ்சாநெஞ்சன் அழகிரி இனியாவது செயல்பட வேண்டும். அவருக்குத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அவர் செயல்பட்ட விதத்தைப் பார்த்து, தென் மாவட்டத் தில் அவருக்கு ஆதரவாக இருந்த சில மாவட்டச் செயலாளர்கள்கூட ஸ்டாலின் அணிக்கு மாறினார்கள். திடீரென்று ஒரு நாள் போர்டு மீட்டிங் கூட்டியதோடு சரி. அதன் பிறகு அது கூடவும் இல்லை. செயல்படவும் இல்லை. தென் மண்டல அமைப்புச் செயலாளரை தென் மண்டல எல்லைக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களில் மதுரை புறநகர் மூர்த்தியும் தேனி மூக்கையாவும் தவிர மற்றவர் யாரும் மறந்தும் சந்திப்பது இல்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடக்கும் முப்பெரும் விழா கடந்த ஆண்டில் நாகர்கோவிலில் நடந்தது. அதற்கும் அழகிரிக்கு அழைப்பு இல்லை. அண்ணா அறி வாலயத்தில் தனக்கென பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கீடு செய்யக் கேட்டார் அழகிரி. அதுவும் ஒதுக்கித் தரப்படவில்லை. பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் மேடைத் தலைவர்களாக உட்கார ஒரு நாற்காலி கேட்டார். அதுவும் போடப்படவில்லை. இவை அனைத்துக்கும் சாதாரணமாக ஸ்டாலின் ஆட்கள் ஒரு காரணத்தைச் சொன்னார்கள்... 'செயல்படாதவருக்கு எதற்கு சேர்?’ (மேலும்....)

யாழ் - கொழும்பு பஸ்மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாவற்குழி எனுமிடத்தில் வைத்தே இன்றிரவு 10.45 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலில் பயணிகளுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை. என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரை பதவி விலக்கியமைக்கு ந. பிள்ளை ஆழ்ந்த கவலை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிவிலக்கியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இது தொடர்பில் அறிக்கையொன்றை முன்வைக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு மற்றும் சமரச செயன்முறைகள் தொடர்பில் அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை இலங்கையில் ஒரு கசப்பான பிளவை ஏற்படுத்தும். இந்த விவகாரம் பொறுப்பு மற்றும் சமரச செயன்முறைகளுக்கு ஒரு கசப்பாக சமிக்ஞையை காட்டுகின்றது. என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் பிரதமர் தி.மு. ஜயரத்ன?

உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு பிரதமர் தி.மு. ஜயரத்ன அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டராங்களில் இருந்து தெரியவருகின்றது. மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பளை தொகுதியின் அமைப்பாளர் பதவி பிரதமரின் மகனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் இந்நியமனம் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பாராளுமன்றத்தில் தி.மு. ஜயரத்னவிற்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

China’s first Tamil author looks to build bridges

Ananth Krishnan

Zhao Jiang, the director of China's only Tamil radio station, has written a book in Tamil, possibly the first of its kind by a Chinese author, to provide an introduction into China's historical and cultural attractions. Photo: Ananth Krishnan

அமெரிக்கா பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனாவிடம் பெறுவோம் - கோத்தபாய

இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல. எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினால் வேறு எதனையும் செய்ய முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன. இவற்றை எதிர்கொண்டு நாட்டின் அமைதியை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்துக்கு இரு மாணவ விடுதிகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 229 மில்லியன் ரூபா செலவில் இந்த விடுதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், 100 ஆண் மாணவர்களும், 100 பெண் மாணவர்களும் தங்கக் கூடிய வகையில் இரண்டு விடுதிகள் அமைக்கப்பட வுள்ளன. பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் விடுதி வசதிகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு பூர்த்தி செய்ய எதிர்பார்க்க ப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தை 18, 2013

மகளை கொலை செய்த சவூதியின் உதவி வேண்டாம் - ரிஷானாவின் தாய்

என்னுடைய மகளை கொலைச்செய்த சவூதி அரசாங்கத்தினதோ  அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் எந்த உதவிகளும் தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள ரிஷானாவின் தாயார், சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட ரிஸானா நபீக்கும், தோற்கடிக்கப்பட்ட சரிஆ சட்டங்களும்

(யஹியா வாஸித்)

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மூச்சுவிடும் அனைத்து ஜீவராசிகளும் மவுத் என்ற பானத்தை அருந்தியே ஆக வேண்டும்.

ரிஸானா என்ன மகிந்த ராஜபக்ஸ அவர்களின் மகளா விசேட விமானம் அனுப்பி அழைப்பிக்க. அல்லது விலைக்கு வாங்க வேண்டியவர்களையெல்லாம் விலைக்கு வாங்கி, மூன்றில் ரெண்டு பெரும்பான்மையில் மேட்டரை முடிக்க. ஜஸ்ட் சோத்துக்கு வழியில்லாமல், பிச்சை எடுக்கவும் முடியாமல், உவ்வாவுக்காக, பேரைமாற்றி, வயதை மாற்றி, பத்தோடு பதினொன்றாக பிழைக்கப்போன ஒரு வேலைக்காறி. வீட்டு வேலைக்கு என மலையகத்தில் இருந்து வரும் பெண்பிள்ளைகளை, இங்கு சிறிலங்காவில் உள்ள புதுப்பணக்காற வர்க்கம், குறிப்பாக முஸ்லீம்கள் எப்படி நடாத்துகின்றது என்பதையும், கீழ் சாதிக்காறரை மேல்சாதி ஹிந்துக்கள் என கூறிக்கொள்பவர்கள் யாழ்ப்பாணத்தில் எப்படி நடாத்துவார்கள் என்பதையும் கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நாயை விட கேவலமாக நடாத்துவார்கள். நமது வள்ளல்கள். (மேலும்.....)

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் அவசரத்தில் முறை தவறுகிறதா பிபிசி தமிழ்?

தமக்கு சாதகமான விடயங்களை திரித்துக் கூறுவதில் அன்றைய லங்கா புவத்தையே (1980-1990) மிஞ்சும் அளவுக்கு முன்னேறி வரும் பி.பி.சி தமிழ் சேவை இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதிலும் முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதிலும் மும்முரமாகச் செயற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் ஒருவரை சிக்கலில் மாட்டிவிட்டு அழகு பார்த்த பி.பி.சி ஊடக தர்மம் தவறிச் செயற்படுகிறதா எனும் சந்தேகம் எழுந்த போது, அதனடிப்படையில்  எம்மால் மேற்கொள்ளப்பட்ட சில விசாரணைகள் பி.பி.சி தமிழ்சேவையினர்  தமது இஸ்லாமிய விரோத மனப்பான்மையை அரங்கேற்றுகிறார்களா எனும் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது. (மேலும்.....)

வெளிவந்துவிட்டது வானவில் 24

நுகர்வுக் கலாச்சாரத்தால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களும் சமூகச் சீர்கேடுகளும்!

இலங்கைத் தமிழ் மக்களின் 'இதய பூமி' என யாழ்.மையவாதிகளாலும் (உயர்சாதி மேட்டுக் குழாமினர்), தமிழ் தேசியவாதிகளாலும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் பெருமையுடன் அழைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களும், சமூகச் சீர்கேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தக் குற்றச் செயல்களும், சீர்கேடுகளும் பலவகைப்பட்டன. நேரடியாக வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, தனியாகச் செல்லும் பெண்களிடம் நகைகளைப் பலவந்தமாக அபகரித்துச் செல்வது, கோவில்கள், பொது நிறுவனங்களில் புகுந்து கொள்ளையிடுவது என்பவை ஒரு ரகம். இவைகள் அநேகமாக ஆயுத முனைகளில் நடப்பவை. இன்னொரு வகை ஏமாற்றிப் பணம் பறிப்பது. வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இலட்சக் கணக்கில் பணம் கறப்பது, உத்தியோகம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறுவது, வங்கிகளில் நிதி நிறுவனங்களில் பெருந்தொகையான பணம் கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்குவது, மதுபான லைசென்ஸ் போன்ற அரச அனுமதிகள் பெற்றுத் தருவதாகச் சொல்லி பணம் கறப்பது, அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அத்தியாசிய ஆவணங்களைக் குறுக்கு வழியில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிப்பது, வெளிநாட்டிலிருந்து அல்லது கொழும்பில் இருந்து வரும் உறவினர்களின் நண்பர்களாக நடித்து வீடுகளில் தங்கி களவெடுத்துச் செல்வது போன்ற பலவகை மோசடிகளும் நடைபெறுகின்றன. (மேலும்.....)

பேச்சுவார்த்தை தான்  சிறந்த வழி

உலகிலேயே எல்லையை காக்க அதிக பணம் செலவழிக்கும் நாடுகள் என்று பார்த்தால் அது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளாகத்தான் இருக்கும். இருநாடுகளும் உலகில் வளர்ந்து வரும் நாடுகளாகும். பொருளாதார ரீதியாக இன்னும் பலமடங்கு வளரவேண்டிய நாடு களாகும். ஆனால் தேவையில்லாமல் கோடிக் கணக்கான ரூபாயை எல்லைப்பாதுகாப்புக்காக செலவழித்து வருகின்றன. காரணம் 1947 ல் ஏற்பட்ட பிரிவினைக்குப் பின்னர் இரு நாடுகளும் பகைமை நாடுகளாக மாற்றப்பட்டன. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு முதல் இரு தரப்பிலும்மேற்கொள்ளப்பட்டநம்பிக் கையூட்டும் நடவடிக்கைகளால் எல்.ஓ.சி எனப் படும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப்பகுதி யில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனால்இரு நாடுகளுக்கு இடையிலானஉறவுகள்வலுவடை ந்து எல்லைப்புறச் சாலைகள் திறக்கப்பட்டன.(மேலும்.....)

நீர்

உலகின் மொத்த நீரின் அளவு மாறாமல் உள்ளது. மற்றப் பொருட்களைப் போன்று நீரை உற்பத்தி செய்ய இயலாது. நீர் சுழற்சியினால் கடல்நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி பின்னர் மழையாக பொழிகிறது. நாம் வாழும் பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதில் 97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சத வீதம் பனிக் கட்டியாக உறைந்துள்ளது. 1 சத வீதம் தண்ணீ ரைத்தான் மனிதனும், ஏனைய ஜீவராசிகளும் குடிநீராகவும், விவசாயத்திற்கும், மற்ற தேவை களுக்கும் பயன்படுத்த முடியும். உலகமயமாதலின் விளைவாக இயற்கை வளங்கள் யாவும் முதலாளிகளின் லாப வேட் டைக்கு பலியாகியுள்ளன. இன்று நீர் பல கோடி டாலர்கள் புழங்கும் பெரிய வர்த்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிக அதிகலாபம் ஈட்டும் துறை என்று கூறப்படுவ தால் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அதில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளன. நீர் அனைவருக்கும் பொதுவான சொத்து. எனவே நீரை பாதுகாத்து விநியோகிக்க வேண்டியது அரசின் கடமையாக கருத வேண்டும். நமது இயற்கை வளங்கள் தொடர் பாக அரசுகள் எந்தவிதமான ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மக்கள் மத்தியில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பின்பே ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இன்று நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக் கும் உள்ளது. நாம் இந்தப் பொறுப்பை தட்டிக் கழித்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான உலகைத்தான் விட்டுச் செல்வோம்.

என் தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்

என் தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார்

நான் குழாயில் நீரை பார்த்தேன்

என் மக்கள் பாட்டில்களில் பாக்கெட்டு களிலும் பார்க்கின்றனர்.

எனது பேரக் குழந்தைகள்???

நிலவிற்கு விண்கலனை   அனுப்ப ரஷ்யா திட்டம்!

2015ம் ஆண்டு நிலவிற்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதன் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்ஸோமோஸ் அறிவித்துள்ளது. இந்த விண்கலம் வோஸ்டோக்னி விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. இந்த ஏவுதளம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியான அமரில் அமைந்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஏவுதளத்திலிருந்து நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இது ஆளில்லா விண்கலம் என்பதால் நிலவில் தானாகவே தரையிறங்குவதற்கு தேவையான தொழில்நுட்பப் பொருட்கள் அதில் இணைக்கப்படவுள்ளன. இந்த விண்கலம் ஆயிரத்து 400 கிலோகிராம் எடையுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியை உலகிற்கு அறிவிப்பதற்கே இந்த முயற்சியை ரஷ்யா எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2018ம் ஆண்டு சர்வதே விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்துள்ள சோயுஷ் விண்வெளி ஓடத்திற்கு பதிலாக புதிய விண்வெளி ஓடத்தை இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த சோயுஷ் விண்வெளி ஓடம் கடந்த 1967ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஓடமான அப்போலோவின் ஓய்விற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்துடன் இணைந்துள்ள ஒரே ஒரு மனிதர்களைக் கொண்ட விண்வெளி ஓடம் என்ற பெருமையை சோயுஷ் பெற்றுள்ளது. இதேபோன்று செவ்வாயிற்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொப்பிகலை பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (17) மீட்டுள்ளனர். வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி. சாஜர் 20,60 ரக மோட்டார் குண்டு 04, ஆர்.பி.ஜி குண்டு 04, 60 ரக மோட்டார் குண்டு, சாஜர் 06 என்பன உரப்பையில் கட்டி புதைக்கப்பட்ட நிலையில் இருந்து இவ் ஆயுதங்களை மீட்டுள்ளனர். இது புலிகளால் யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது என்றார்.

அல் ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளால் வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிப்பு

அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் எரிவாயு ஆலையை அந்நாட்டு இராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அல்ஜீரியாவின் அமனாஸில் இருக்கும் எரிவாயு ஆலையை ஆயுததாரிகள் கடந்த புதன்கிழமை ஆக்கிரமித்தனர். இதன்போது பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் மற்றும் அல்ஜீரிய நாட்டவர் இருவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆயுததாரிகளிடம் 20 வெளிநாட்டினர் பிணைக்கைதிகளாக இருப்பதாக அல்ஜீரியா கூறியுள்ளது. ஆனால் தம்மிடம் 41 வெளிநாட்டினர் பிணைக்கைதிகளாக இருப்பதாக மேற்படி கடத்தல்காரர்கள் குறிப்பிட்டுள் ளனர். பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டோரில் பிரிட்டன், ஜப்பான், அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் நோர்வே நாட்டவர்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பிரான்ஸின் இராணுவ தலையீட்டை கைவிட்டாலேயே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஆயுததாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி!

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக உள்ளது. கடந்த 1945 ல் இருந்து கோயிலின் மூன்று தலைமுறை குருக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி இறுதி சடங்கு செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த ஆஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வந்து கங்கை நதியில் கரைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேதாஜியின் மரணம் குறித்து சர்ச்சை நிலவுவது தொழிலதிபரான தேஷ்முக் கேட்டதற்கு, 'ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த கோயிலுக்கு சென்று நேதாஜியின் அஸ்தி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்ற பதிலளித்தார்.

தை 17, 2013

இன்றைய ரிபிசியின் விசேட அரசியல் கலந்துரையாடலில் தோழர் வரதர்

ரிபிசியின் இன்றைய விசேட அரசியல் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு மகாணசபையின் முன்னால் முதல் அமைச்சரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனி பத்மாநாபா அணியின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர் வரதராஜா பெருமாள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாகவும் பாரளுமன்றத்திற்க்கும் நீதிதுறைக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவும் கலந்து உரையாடல் நடைபெறும் இக் கலந்துரையாடலில்

ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம்,

ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு செ ஜெகநாதன்,

ஆகியோரும் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

இன்று மாலை 8மணி முதல் 10 மணி (ஐரோப்பிய நேரம்) வரை நடைபெற உள்ள இக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு 00 44 208 866 1001

இணையத்தளம் ஊடாக வரதரின் செவ்வியை கேட்க முடியும்

www.tbcuk.com or  www.tbcuk.net

தலை துண்டிப்புக்கு முதலில் நடவடிக்கை, அப்புறம்தான் பேச்சுவார்த்தை!' - இந்தியா

இந்திய வீரரின் தலையை துண்டித்தவர்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை  எடுத்தபிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டைத் தாண்டிவந்து இந்திய ராணுவ வீரர்களை  கொன்று, தலையை வெட்டி மிக கொடூரமாக நடந்துகொண்டது பாகிஸ்தான் ராணுவம்.  இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. ராணுவ  அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை. இந்த நிலையில், பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என பாகிஸ்தான்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி,  "நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, இந்த சம்பவத்திற்கு காரணமாணவர்கள் மீது  பாகிஸ்தான் அரசு முதலில் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதுபோன்று காண்பிப்பதற்கு பதில், ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்னையின் தீவிரம் பற்றி  உணர்ந்துசெயல்பட வேண்டும. இந்தியாவின் நிலை குறித்து கீழ்மட்ட அதிகாரிகள்  அளவிலான பேச்சுவார்த்தையின்போதே மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று  கூறியுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேர் கைது

செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி நேற்றிரவு குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் நேற்று 25ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்தும் இவர்கள் சிறப்பு முகாமில் இருந்து மாற்ற வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். தேவி புகையிரதச் சேவை செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை சென்றடையும்

யாழ். தேவி புகையிரதச் சேவையானது இவ்வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணம் வரை சென்றடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் “இர்க்கோன்” என்ற நிறுவனமே தற்போது மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வருடம் யாழ்.தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியும் என்றார். யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு தற்போது தாழ்ந்து போயுள்ளதால் மாற்றம் அவசியம் - சந்திரிகா

நாட்டின் நிலைமையைக் கண்டு தான் மனமொடிந்து விட்டதாக கூறிய குமாரதுங்க, இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்க தனக்கு வழி தெரியவில்லை எனக் கூறிய சந்திரிக்கா குமாரதுங்க, நாடு காணப்படும் கேவல நிலைபற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார். மற்றவர்களின் உள்ளேயுள்ள மிருகத்தை கட்டுப்படுத்தி அவர்களின் நல்ல, மனிதாபிமான பண்புகளை வெளிக்கொண்டு வருபவரே நல்ல தலைவர். இவ்வாறான தலைவர்களே இதுவரை எட்டாத உயர்நிலைக்கு செல்லும் பலத்தை நாட்டுக்கு வழங்குவர். கூடாத தலைவர்கள் தனி மனிதர்களை அழிப்பதோடு மட்டுமன்றி முழு நாட்டையும் அழித்துவிடுவர் என அவர் கூறினார். (மேலும்....)

ஆடை கலாசார சீரழிவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்;டப்பட்டுள்ளன. 'நாளைய தீர்ப்பு' இனால் உரிமம் கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் 'கட்டளை' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐந்து பேர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு பதாதைகளை ஏந்தியுள்ளனர்.

இந்திய நெருக்கடியால் பணிந்தது பாகிஸ்தான், பதற்றத்தை தணிக்க ஒப்புதல்!

இந்திய ராணுவத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் தூதரக ரீதியில் ஏற்பட்ட கடும் நெருக்கடி காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றத்தை தணிக்கும் விதமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான்,தனது வீரர்களையும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்தில், பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனைதொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினர். இதில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ தலைமையகமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையினை மீறி எதுவும் செய்ய மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவம் உறுதி கொடுத்துள்ளது.மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் உள்ள காக்காகடை சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிதரன் எம்.பிக்கு எதிராக கிளிநொச்சி நகரிலும் அதை அண்மித்த பகுதிகளும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேவேளை, சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அலுவலகம் கடந்த சனிக்கிழமை சோதனையிடப்பட்டு பல பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“பொருளாதார வளர்ச்சியில்  சீனாவை இந்தியா நெருங்கும்”

இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி விரைவில் சீனாவின் வளர்ச்சி நெருங் கும் என உலக வங்கி கணித் துள்ளது. நடப்பு 2013ம் ஆண்டில் உலக பொருளா தார வளர்ச்சி நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது. இதில், வளரும் நாடுகளாக இந் தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நிலையை எட்டும் என கூறப்பட்டுள் ளது. 2015ம் ஆண்டில் சீனா வின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாகவும் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது என்று இதன் தலைமை பொருளா தார நிபுணர் கௌசிக் பாடி கூறினார். (மேலும்....)

பாம்பன் ரயில் பாலம் மீது கப்பல் மோதியதில் ரூ. 1.50  கோடி இழப்பு

பாம்பன் ரயில் பாலம் மீது கடற்படை கப்பல் மோதியதால் 1.50 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடலோர காவல் படையிடம் ரயில்வே நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. சேதமான தூண் பகுதியை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்திய கடற்படைக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட கப்பல், கொல்கத்தாவில் இருந்து, மும்பைக்கு சில நாட்களுக்கு முன் இழுவை கப்பல் மூலம் கட்டி இழுத்து வரப்பட்டது. பாம்பன் கடல் பகுதிக்கு கப் பல் 9 ஆம் திகதி வந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பாம்பன் துறைமுக அதிகாரிகள் அனுமதி தராததால் பாம்பன் வட கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. கடலில் பலத்த காற்று வீசியதால் தடம் மாறிய கடற்படை கப்பல் கடல் நீரோட்டத்தால் இழுக்கப்பட்டு பாம்பன் ரயில் பாலம் மீது மோதியது. கப்பல் மோதியதில் பாம்பன் ரயில் பாலத்தின் இரும்பு கர்டர்களை தாங்கி நிற்கும் 121 வது தூண் தனியாக பெயர்ந்து விலகியது.

பாகிஸ்தானுடன் இனி சுமுக நட்புறவு கிடையாது - பிரதமர் மன்மோகன் சிங்

பாகிஸ்தா னுடன் இனி சுமூக நட்புறவு கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இந்திய வீரர்களின் தலை துண்டிப்பு மிருகத்தனமான கொடூர செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் கடந்த 8 ஆம் திகதி நுழைந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் சுதாகர் சிங், ஹேம்ராஜ் கொல்லப்பட்டனர். ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் இராணுவத்தினர் வெட்டி எடுத்து சென்றனர். இந்த கொடூர செயலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்த சம்பவத்துக்கு பின் பாகிஸ்தானுடன் சுமூகமான நட்புறவு இருக்க முடியாது. இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஊடுருவியதை அந்நாடு மறுத்தாலும், அவர்களை ஏற்க வைக்க முயற்சி செய்வோம். இந்திய வீரரின் தலையை வெட்டிய கொடுமையான குற்றத்தை செய்தவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்து தண்டிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடர்பாக என்ன நிலை எடுப்பது என்பது பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாது இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வியட்நாமுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் அவற்றுக்கான வாய்ப்புகளை இனம் காணவும் இந்தியாவும், வியட்நாமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. வியட்நாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், எந்தத்துறையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று இனம் காணவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வியட்நாம் சார்பில் அந்நாட்டின் திட்டத்துறை துணை அமைச்சர் டாவோ குவாங் துவும், இந்தியத் தூதர் ரஞ்சித் ரேவும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். இந்தியாவும், வியட்நாமும் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்குள் ரூ. 38 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தை 16, 2013

எல்லையில் பதற்றம்!

பதிலடிக்கு தயாராகிறது இந்தியர் பாகிஸ்தான் படைகளும் உஷார்!

  • எதையும் சந்திக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி எச்சரிக்கை

  • 10 பாகிஸ்தான் வீரர்களின் தலைகளையாவது வெட்ட வேண்டும் என்கிறார் சுஷ்மா.

  • எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய வீரரின் தலை இன்னும் கிடைக்காததால் எல்லையில் பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனையடுத்து எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்படுவதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டுமாறு பேசிய மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். (மேலும்....)

ரிபிசியின் 17.01.13 வியாழக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடலில் தோழர் வரதர்

ரிபிசியின் 17.01.13 வியாழக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு மகாணசபையின் முன்னால் முதல் அமைச்சரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனி பத்மாநாபா அணியின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர் வரதராஜா பெருமாள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாகவும் பாரளுமன்றத்திற்க்கும் நீதிதுறைக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவும் கலந்து உரையாடல் நடைபெறும் இக் கலந்துரையாடலில்,

ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம்.

ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு செ ஜெகநாதன்.

ஆகியோரும் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

வியாழக்கிழமை மாலை 8மணி முதல் 10 மணி வiர் நடைபெற உள்ள இக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு 00 44 208 866 1001

visit www.tbcuk.com www.tbcuk.net

பாலியல் வன்முறைகளின் பின்னணி

(அர்ச்சனா பிரசாத்)

சமீப காலமாக பதிவு செய்யப்படும் பாலி யல் வன்முறைகளின் எண்ணிக்கை அதி கரிப்பதற்குப் பலவிதமான காரணங்கள் கற்பிக் கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் இன்று தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பகிரங்கமாகச் சொல்லத் தயாராக உள்ளனர் என்ற காரணம் கற்பிக்கப் படுகிறது. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தங்கள் ஒருமைப்பாட் டினை தெரிவிக்கும் உதவிகளை அளிக்கும் மற்றும் மாற்றங்களை விரும்பும் பெண்கள் அமைப்புகளின் வெற்றியாகவும் இதனை கொள்ளலாம் என்று மற்றொரு காரணம் கற் பிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் காரணங் களோ அல்லது விளக்கங்களோ சீர்திருத்தக் காலக்கட்டத்திற்குப் பிந்தைய காலக்கட் டத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன் முறைகளுக்கான காரணத்தை அல்லது விளக்கத்தை அளிக்கப் போதுமானதாக இல்லை. சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலக் கட்டத்தில் அரசு தன்னை சமூகப் பொறுப்பு களில் இருந்து மிக அதிகமாக விடுவித்துக் கொண்டு வருகிற பின்னணியோடு, இந்த பாலியல் வன்முறைகளின் அதிகரிப்பை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. (மேலும்....)

மாலி நாட்டு அரசை கவிழ்க்க அமெரிக்கா சதி

லிபியாவை அடுத்து மாலி நாட்டு அரசை வீழ்த்த அமெரிக்கா சதி செய்து வருகிறது. லிபியாவின் பக்கத்து நாடு மாலி. எண்ணை வளம் மிகுந்த இங்கு முஸ் லிம் அதிகம் வசிக்கிறார்கள். மாலியில் 6 ஆயிரம் பிரான்ஸ் நாட்டுக்காரர் களும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு லிபியா நாட்டில் அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்கா கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சியை கவிழ்த்தது. அப்போது அமெரிக்க ஆதரவு ராணு வத்தினர் அண்டை நாடான மாலி யின் வடக்கு பகுதிக்குள் அத்து மீறி புகுந்தனர். இப்போது மாலி அதிபர் அமெடோ டுமானி டோர் அரசுக்கு எதிராக அமெரிக்கா அங்கு கலவரத் தை தூண்டி விட்டுள்ளது. கலவரக் காரர்களுக்கு அமெரிக்கா பயிற்சியும் ஆயுதங்களையும் கொடுத்து வருகி றது. இந்த கலவரத்துக்கு முன்னாள் ராணுவ கேப்டன் அமெடோ சனகோ தலைமை வகித்துள்ளார். கலவரக் காரர்களுக்கு அமெரிக்கா ஆயுதங் களையும், தகவல் தொடர்பு சாதனங் களையும் தாராளமாக வழங்கி வரு கிறது. (மேலும்....)

நான் குற்றமற்றவள் - ஷிராணி பண்டாரநாயக்க

தான் குற்றமற்றவர் எனவும்  தனது குடும்பத்தின் பாதுகாப்பு இன்று கேள்விக்குரியாகியுள்ளது என்றும் இது மக்களின் கைகளிலேயே உள்ளது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியேறிய போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேற்கண்டாவாறு  ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அங்கு தொடரந்து உரையாற்றிய அவர், 'கடந்த 30 வருடங்களாக உண்மையாக கடமையாற்றியுள்ளேன். எதிர்காலத்தில் மக்களோடு இருப்பேன். நான் உண்மையானவள். வரியற்ற வாகனமொன்றையேனும் கொள்வனவு செய்யவில்லை. நான் நிரபராதி. நான் எப்போதும் மக்களுடனேயே இருப்பேன். மக்கள் எனது குடும்பத்தைக் காப்பார்கள் என்று நம்புகின்றேன். நான் எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் ஓரிரு நாட்களில் விளக்கமளிப்பேன்' என்றார்.

தென் பகுதி இளைஞரின் கொலை தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம்

பாக். பிரதமரை 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யும்படி உத்தரவு!

பாகிஸ்தான் பிரதமர் ராசா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய, அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பாகிஸ்தான் உயர் நீதிமன்ற கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் மொஹமட் சவுத்ரி பிறப்பித்துள்ளார். ரென்டல் பவர் வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்கார் கான் என்பவரை பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்., உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரதமர் அஷ்ரப் உள்ளிட்ட 16 பேரை, 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய உத்தரவிட்டனர்.

உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன - ஷிராணி பண்டாரநாயக்க

 

அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழிசுமத்தப்பட்டவராக எவ்வித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கடந்த சில வாரங்களாக என் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடும் நடவடிக்கைக்கு இந்தக் குடியரசின் ஒரு பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனும் உள்ளாகக்கூடாது என்று பதவி விலக்கப்பட்டுள்ள கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். (மேலும்....)

 

யுத்தத்தை விடவும் தற்கொலை மூலம் அதிக அமெ. வீரர்கள் பலி

2012 ஆம்ஆண்டில் அமெரிக்காவின் 349 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டில் ஆப்கான் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதை விடவும் அதிகமாகும். கடந்த 2011 ஆம் ஆண்டில் 301 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அமெரிக்க கடற்படை வீரர்களே அதிகமாக தன்னைத் தானே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அமெரிக்க வீரர்களின் தற்கொலை வீதம் அதிகரிப்பதையிட்டு பென்டகன் கவலை வெளியிட்டுள்ளது. இது ஒரு தொற்றுநோய் என பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டா விபரித்துள்ளார். ஆப்கான் இராணுவ நடவடிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 295 அமெரிக்க வீரர்களே கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் தற்கொலை செய்துகொண்ட பல வீரர்களும் 25 வயதுக்கு குறைவான வெள்ளை இனத்தவர் என்று பென்டகன் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தை 15, 2013

பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக மொஹான் பீரிஸ் அறிவிப்பு

பிரதம நீதியரசராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் 12.30 அளவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வழமை போன்று பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்க நீதிமன்றத்திற்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஸானா வழக்கு விசாரணையில் சாட்சிகளை திரட்டுவதிலிருந்து பல்வேறு குளறுபடிகள்

ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை அடங்கலான சகல செயற்பாடுகளிலும் குறைபாடு காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம். ஆர். ஹம்ஸா தெரிவித்தார். தண்டனை நிறைவேற்றும் தினம் வரை ரிஸானா தனது தண்டனை குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறிய அவர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். (மேலும்....)

அரசின் விசேட அனுமதி இன்றி வெளிநாடு செல்ல கியூப நாட்டவர்களுக்கு அங்கீகாரம்

கியூப நாட்டவர்களுக்கு அரசின் விசேட அனுமதி இன்றி வெளிநாடு செல்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொமியுனிச நாடான கியூபாவில் கடந்த அரை நூற்றாண்டுக்கு பின் நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கியூபாவின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி கியூப நாட்டவர் வெளிநாடு செல்வதற்கான வெளியேறும் அனுமதி அல்லது வெளிநாட்டு அழைப்பிதழை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவுடன் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது. முன்னர் வெளிநாடு செல்லும் கியூப நாட்டவர் அதற்கான அழைப்பு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு வெளிநாடு செல்வதற்கான செலவுகளுக்கு 200 டொலருக்கு அதிகமான தொகையை காண்பிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் மூலம் கடந்த அரை நூற்றாண்டாக முறுகல் நிலவிவரும் கியூப- அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்படவாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. கியூபாவின் எந்த பிரஜையானாலும் அமெரிக்காவில் குடியுரிமை கோரினால் அதற்கு எந்த விசாரணையும் இன்றி அனுமதி அளிக்கும் கொள்கையை அமெரிக்க பனிப்போர் காலத்தில் இருந்து கடைபிடித்து வருகிறது. வேறு எந்த நாட்டு பிரஜைக்கும் இவ்வாறான அனுமதியை வழங்குவதில்லை.

சவூதியில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் 45க்கும் அதிகமான வெளிநாட்டு பணிப்பெண்கள்

சவூதி அரேபியாவில் 45க்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மரண தண்டனைக்காகக் காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் வீட்டு உரிமையாளர்களின் கற்பழிப்பு முயற்சியிலிருந்த தப்புவதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பணிப்பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளானோரில் அதிகமானோர் இந்தோனேஷிய நாட்டவர் என்பதோடு இவர்களில் இலங்கை, பிலிம்பைன்ஸ், இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாட்டவர்களும் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் நம்புகின்றன. இந்தோனேஷியாவின் 27 வயதான மூடி துர்சிலாவர்தி பின்டி என்ற பெண் தனது தொழில் வழங்குனரை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ளார். இவர் மரண தண்டனையை சந்திக்க வுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்படி பெண்ணை தொழில் வழங்குனர் கற்பழிக்க முற்பட்டபோதே அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.சவூதியில் மரணதண்டனைக்கு உள்ளான இலங்கையின் ரிஸானா நபீக்கின் சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியா மீது சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தை 14, 2013

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

மகளே ரிசானா!

மரணம் உன்னை அழைத்து சென்றதாமே

நன்று நன்று

மனிதநேயங்களற்ற மனிதர்கள்

ஏன் மனிதர்களே அற்ற மண்ணில்

மகளே உனக்கென்ன வேலை

மரணம் உன்னை தாலாட்;டும்

என்ற நம்பிக்கை எனக்குண்டு

 

நீ குற்றம் புரிந்தவளாம்

சொல்கிறது ஒரு சட்டம்

நாலுமாத குழந்தைக்கு பாலூட்டும் போது

நடந்த மரணத்திற்க்கு நீ காரணமாம்

சட்டத்தின் வியாக்கியானம்

பராமரிப்புடன் வாழவேண்டிய உன் வயதில்

பராமரிப்பு பொறுப்பை தந்த

இந்த சமுதாயத்தின் சட்டமல்லவா இது

இதை விட வேறு எதை எதிர்பாக்கமுடியும்

 

இவர்களின் பார்வையிலே நீ குற்றம் புரிந்தவளாகவே இருக்கட்டும்

இதை செய்ய தூண்டியவர்கள் யார்?

சட்டம் முதலில் அவர்களை தண்டிக்கட்டும்

உன் போன்றவர்களின் ஏழ்மைக்கு காரணமானவர்களை

உன்னை போன்ற குழந்தை தொழிலாளார்கள் உருவாக காரணமானவர்களை

 

மகளே உன் மரணம்

சட்டத்தின் பெயரால் நடத்தி முடிக்கபட்ட பயங்கரவாதம்

இதை மதநம்பிக்கை கொண்டு ஜீரணிக்க முற்படுவது

மனித இனம் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய நேரம்

 

அதனால் மகளே

இந்த பூமியில் உனக்கு இடமில்லாமல் போனதையொட்டி

வெட்கபட வேண்டியவர்கள் நாங்களே

பெருமைக்குரியவள் நீயல்லவா!

(மோகன்)

இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்

இராணுவத்தை விட்டு கடந்த ஆண்டில் 71ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே 71ஆயிரத்து 458 பேராகும். இவர்களில் 33ஆயிரத்து 532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளபடையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய நீதியரசரை நாம் வரவேற்போம் - திஸ்ஸ

குற்றப்பிரேரணை அறிக்கை மீதான வாக்கெடுப்பிலிருந்து நாங்கள் வெளியேறிய போதிலும் புதிதாக நியமிக்கப்படும் நீதியரசரை நாம் வரவேற்போம் என்று லங்கா சமசமாஜ கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிலையியற் கட்டளைகளை திருத்துதல் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர்களை நியமிக்கவேண்டும் என்று எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்தே நாம் குற்றப்பிரேரணை வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தோம். அரசியலமைப்பின் பிரகாரம் நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதன்பிரகாரம் நியமிக்கப்படும் புதிய நீதியரசரை நாம் வரவேற்போம் என்றார்.

 

யாழ் பல்கலைக் கழக மாணவன் விஜிதரனின் விடுதலைக்கான போராட்டம்

வினாசகாலே விபரீத புத்தி

(சுகு-ஸ்ரீதரன்)

இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு நிகழ்வுகள் நாடளாவிய அளவிலும் உலக அளவிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற பெயர்ப்பலகை இற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. “திவிநெகும” பாராளுமன்றத்தில் 160 இற்கு மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சில சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளும் இடதுசாரிகளும் கூட ஆதரித்திருக்கின்றனர். அவைகளின் மனச்சாட்சி இதற்கு நிச்சயமாக உடன்பட்டிருக்றது. என்ன செய்வது இலங்கையில் ஜனநயாக இடைவெளி மீண்டும் நாடளாவிய அளவில் குறுகி வருகிறது. இதேபோல் பிரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையும் நிறைவேறியுள்ளது. உண்மையில் இலங்கையின் அரசியல்  யாப்பு இங்கு கேலிக் கூத்தாகியுள்ளது. வெறும் கடதாசி கட்டுக்கள் என்ற அந்தஸ்தை அது பெற்றுவிட்டதென்றே நினைக்கிறேன். சட்டம் ஒழுங்கை பற்றி பேசவே தேவையில்லை.அரசியல் அமைப்பு ஸ்தம்பிதமடைகையில் நீதி சட்டம் ஒழுங்கு யார் மீது எதன்  அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது.(மேலும்....)

முன்னாள் போராளிகள் 313 பேர் சமூகத்துடன் இணைப்பு

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 சமூகத்துடன் இணைக்கப்;பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மரதனாமடம் மற்றும் பூந்தோட்டம் ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 பேரே இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் தென் மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையே வவுனியா நகரபை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது. இப்போட்டியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளே வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையால் நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு பிரதேச சபை கேட்போர்கூடத்தில் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் முட்கம்பிகள் வழங்கப்படும். அதேவேளை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து தென்னங்கன்றுகளும் ஏனைய பயிர்க் கன்றுகளும் வழங்கப்படும். அத்துடன் 100 பேருக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் கடன்தொகையும் வழங்கப்படும். இதேவேளை, செவ்வாய்க்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நூறு பேருக்கு நஷ்டஈடு மற்றும் கடன்தொகையும் அதிகார சபையினால் வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

பஸ்ஸில் பயணித்த பெண் மீது பஞ்சாப்பில் வல்லுறவு

பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றுமொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர். பஸ்ஸில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் பஸ் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர். என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்களையும் ஒலிக்கச்செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசின் பலதரப்பட்ட வேண்டுகோள்களையும் மீறி சவூதி அரேபியாவில் பணிப்பெண் ரிசான நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டுக்கான தூதுவர் அஹமட் ஜவாத் உடனடியாக திருப்பியழைக்கப்பட்டிருந்தார். சவுதி அரேபியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பித்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அஹமட் ஜவாதின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடனே நிறைவடைந்து விட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் திருப்பி அழைக்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சவூதி அரேபியாவிற்கு புதிய தூதுவரொருவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரியவருகின்றது.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதியின் உத்தரவுக் கடிதம் ஷிராணி யிடம் நேற்று கையளிப்பு

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்குவதற்கான உத்தரவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று 13 ஆம் திகதி காலையில் கையெழுத்திட்டார். ஜனாதிபதிஅவர்கள் கையெழுத்திட்ட அந்த உத்தரவு பிரதம நீதியரசரின் உத்தியோக வாசஸ்தலத்தில் வைத்து கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா நேற்று தெரிவித்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்படும் முதலாவது பிரதம நீதியரசராக ஷிராணி விளங்குகிறார். பிரதம நீதியரசருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட 14 குற்றச் சாட்டுகளில் ஐந்தை விசாரணை செய்த இத்தெரிவுக்குழு, மூன்று குற்றச்சாட்டுக்களில் பிரதம நீதியரசர் குற்றவாளி என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டியுள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சின் இரு வாகனங்கள் தீக்கிரை

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரினால் பயன்படுத்தப் பட்டு வந்த இரண்டு வாகனங்கள் இனந்தெரியாத கோஷ்டி யொன்றினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். பிரதி விவசாயப் பணிப்பாளரினால் பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் எரிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்கள் ஏறாவூர் குல்லிய்யத்து தாரில் உலூம் மத்ரசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. முச்சக்கர வண்டி தீயினால் முழுமையாக எரிந்துள்ளது. கெப் வாகனம் ஓரளவு சேதமடைந்துள்ளது. இவ்வாகனங்கள் நிறுத்தப்பட்டு சற்று நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தை 13, 2013

1983இல் இருந்த சம்பந்தன் அல்லவாம் இன்றிருக்கும் சம்பந்தன்

இதய சுத்தியுடன் உண்மை பேசி தமிழருக்காக குரல் கொடுத்தால் மட்டுமே இனிக் கூட்டு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கினாலும் தாம் தமிழரசுக் கட்சியினரை பல்லக்கில் வைத்து சுமப்பவர்களாகவே இருப்பதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடி யாது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித் துள்ளார். தமிழ் மக்களின் இன்றை நிலைமை முன்பொருபோதும் இல்லாத வாறு மோசமடைந்து வருவதாக தெரி வித்துள்ள ஆனந்தசங்கரி, தமிழ் தேசியக் கூட்ட மைப்பிற்கு எதிராக செயற்படும் நோக்கம் தமக்கில்லை எனவும் குறிப் பிட்டுள்ளார். (மேலும்....)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தில் வெடிமருந்துகள், ஆபாச வீடியோ சீ.டி, ஆணுறைகள் மீட்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று சீ-4 ரக வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். இச்சம்பவத்தினையடுத்து சிறிதரன் எம்.பி.யின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது அலுவலகத்திலிருந்த மேலும் இருவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள குறித்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு

பாலியல் குற்றச்சாட்டில் TNA எம்.பிக்கு பிடியாணை?

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்னிப் பகுதி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முகவர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கூட்டமைப்பு எம்.பியிடம் அழைத்துச் சென்றதாகவும் எம்.பியின் அலுவலகத்தில் வைத்து அந்த 15 வயதுச் சிறுமியை கூட்டமைப்பு எம்.பி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மூவர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் குறித்த பா.உ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. (மேலும்....)

குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி கைச்சாத்து

நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காட்சி சவூதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது! -சர்வதேசம் கண்டனம்

இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூர காட்சி அடங்கிய காணொளி சர்வதேச நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் பொது இடமொன்றில் வைத்து, ரிசானாவுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் சுற்றிவர நிற்க, தலைகுனிய முழங்காலில் நிறுத்தப்பட்ட ரிசானாவின் கழுத்தை, ஒருவர் வாளால் வெட்டித் துண்டாடும் அதிர்ச்சியளிக்கும் காட்சியை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இதனை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைத்துலக அளவில் இந்தச் சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளட்ட பல நாடுகளும், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளும், அனைத்துலகச் சட்டங்களை மீறும் இந்தப் படுகொலை வன்மையாக கண்டித்துள்ளன.(பலரின் இதயங்களை புடிங்கி எறிகின்ற காட்சியாக தலையை வெட்டும் காணொளி அமைந்ததால் அதற்கான இணைப்பை நீக்கியுள்ளோம் - ஆர்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை வழங்கி வந்த குர்திஷ் இனப் பெண்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள கார் டு நோர்ட் தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள குர்திஷ் கல்வி வளாகம் ஒன்றில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண்கள் மூவரும், தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்றும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்று, தமது ஆதரவுக் குரல்களையும் பதிவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தை 12, 2013

குழந்தையை கொலை செய்யாத றிஸானாவுக்கு அநியாய சிரச்சேதம்!

றிஸானாவின் உருக்கமான கடிதம்

றிஸானா தான் குழந் தையை கொல் லவென அதன் கழுத்தை நெரிக்கவில்லை என்று அல் லாஹ்வின் மீது சத்தியம் செய்து இறுதி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்கு மூலம் இந்தப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனையை அனுபவித்த நம்நாட்டு வீர மங்கையான றிஸானா நபீக் 2007ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதியன்று அளித்த வாக்கு மூலத்தில் அல்லாஹ்வின் மீது சத்திய மாக குழந் தையை கொல்லவென அதன் கழுத்தை நெரிக்க வில்லை என்று உண்மையை எடுத்து ரைத்திருக்கிறார். அபலைப் பெண் ணான றிஸானா குழந் தைகளை பராமரிப்பதில் எவ்வித அனுபவமும் இல்லாத காரணத்தினால் தனது பொறுப்பில் விடப் பட்ட அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் போது தற்செயலாக ஏற்பட்ட ஏதோ ஒரு விபரீதத்தினால் தான் அக்குழந்தை மரணித்திருக்கிறதென்பது றிஸானா அளித்த இறுதி வாக்கு மூலம் சான்று பகர்கின்றது.  (மேலும்....)

 

டியூ, கஜதீர, திஸ்ஸ, ரஜீவ், ஆகியோர் வாக்களிக்கவில்லை:ரங்கா எதிர்த்து வாக்களிப்பு

குற்றப் பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை, எதிரணி உறுப்பினரான ஸ்ரீ ரங்கா  எதிர்த்து வாக்களித்தார் இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்றனர். எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது - அமெரிக்கா

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றப்பிரேரணை நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றப்பிரேரணையானது இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது. இதேவேளை, பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் தூதரகம்; கரிசனைகொண்டுள்ளது. அமைதியான  எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் தூதரகம் கேட்டுக்கொள்கின்றது. வன்முறையற்ற ரீதியில் செயற்படும் எதிர்ப்பாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். சர்வதேச சமூகத்திலுள்ள எமது பங்காளர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கமானது சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து ஜனநாயக ஆட்சிமுறையின்அடிப்படைகளை மதித்துச் செயற்படவேண்டும் என கோருகின்றோம்.

தை 11, 2013

நான் வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை - டி.யு.குணசேகர

பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நீதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டி.யு.குணசேகர, நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம், அரசியல் அமைப்பு, பாராளுமன்றம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதனால் குற்றப் பிரேரணை விடயத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்ற அடிப்படையில் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் டி.யு.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் வீட்டின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் வீட்டின் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கொழும்பு, விஜயராம மாவத்தையிலுள்ள வீட்டிற்கு முன்பாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் விஜயராம மற்றும் பௌத்தாலோக்க மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதிகளிலும் சுற்றுவட்டங்களிலும் பெருந்திரளான மக்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்றம் மற்றுமட அதனை அண்மித்த பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரிசானா மரணதண்டனை

ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டம்

ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டு தான் உண்மையில் கலக்கமுற்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் தெரிவித்துள்ளார். ரிசானாவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் சவுதி அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாக கெத்தரின் ஏஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றம் இடம்பெற்ற வேளையில் ரிசானா ஒரு சிறிய பெண் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர புலி ஆதரவாளர்களை இரகசியமாக சந்திப்பதாக குற்றச்சாட்டு

தற்போது பிரிட்டனில் தங்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, புலி ஆதரவாளர்களை இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை சீர்குலைக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரனுடன் மங்கள சமரவீர இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் இந்த சந்திப்பு தொடர்பில் சில புலம்பெயர் செய்தி இணையங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தை 10, 2013

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழாராய்ச்;சி உயிர்கொடை உத்தமர்கள் நினைவாலய நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, தமிழ் கட்சி உறுப்பினர்கள் நினைவு தூபிக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உலக தமிழராய்ச்சி மாநாட்டின் போதும் ஊர்வலத்தின்போதும் இப்பகுதியில் வைத்து 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழில்  தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக இந்நினைவு தூபியானது வெள்ளநீரில் மூழ்கியது. இதற்கு மத்தியிலும் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றிசானா நபீக்

மரணத்தை வெல்லுமா....? மனித நேயம்

(சாகரன்)

(றிசானாவிற்கு மரணதட்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இக் கொடூரச் செயலை சூத்திரம் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கின்றது. றிசானாவின் விடுதலையை வேண்டி நம்பிக்கையுடன் கார்திகை 2010 எழுதிய கட்டுரையை இன்று தேவை கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம். – ஆர்)

மனித நேயமும், மிருக குணமும் கலந்து படைக்கப்பட்டதுதான் மனிதன். இதில் மிருக குணத்தை அடக்கி மனித நேயத்தை மேலோங்கச் செய்வதே மனிதன் 'மனிதன்' ஆக வாழ்வதற்கான வழி முறையாகும். ஆனாலும் மிருக குணம் சில வேளைகளில் மேலோங்கி இருப்பதுவும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுமே மனிதன் குற்றங்கள் புரிவதற்கும், கொலைகள் செய்வதற்கும் காரணமாக அமைகின்றது. இதே போல் மிருக குணம் அடக்கப்பட்டு மனித நேயம் மேலோங்கி நிற்கும் போது குற்றங்கள், கொலைகளை தவிர்த்து அவற்றை தடுத்து நிறுத்தும் மகாத்மாவாக மாறுகின்றான். மனித குல மீட்சிக்காக தன்னை அற்பணிக்கும் மக்கள் தொண்டனாக மாறுகின்றான் மனிதன். இதன் தொடர்சியாக அவன் மக்கள் தலைவனாக மாறுகின்றான். (மேலும்....)

பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சற்றுமுன் ஆரம்பமாகியது. எனினும் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அனுமதியளித்தார். இதனையடுத்து கடும் ஆட்சேபத்தை வெளியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், சட்டத்துக்கு முரணான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்;டம் நடத்துவதற்கு இவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசருக்கு நடக்கப்போவது என்ன?

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன. (மேலும்....)

ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் மீள் அழைப்பு

சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். மரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார். எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

நான் புலியா? ஒரு தடவையேனும் விசாரணை செய்யவில்லையே

நான் விடுதலைப்புலியா? நான் பிரபாகரனுடன் ஒன்றாகவா கைகோர்த்துக்கொண்டு திரிந்தேன். அவ்வாறு நான் விடுதலைப் புலியென்று கூறினால் ஒரு தடவையேனும் விசாரணை மேற்கொள்ளவில்லையே. அவ்வாறு துணிவு இருந்தால் என்னிடம் வந்து பொலிஸார் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அரசாங்கம் என்னை புலியென்று கூறுகின்றது. நான் பிரபாகரனோடு கைகோர்த்துக்கொண்டு ஒன்றாகவா அலைந்து திரிந்தேன். அவ்வாறு நான் விடுதலைப் புலியென்றால் இதுவரை ஒருநாள் கூட என்னை விசாரணைக்குட்படுத்தவில்லை. என்னை விசாரிக்க வரும் பொலிஸாரையும் பார்க்கத்தான் போகின்றேன். நாட்டின் பல இடங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த சிலர் இன்று அரசாங்கத்தில் ராஜபோகமாக இருக்கின்றனர். இதனை விடுத்து என்னை விடுதலைப் புலி என்று கூறவது வேடிக்கையானது என்றார்.

அடுத்து வரும் 12 மணிநேரத்துக்கு மழை

மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மன்னார் சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர், பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம், கோந்தைப்பிட்டி, தாழ்வுபாடு, எருக்கலம் பிட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர். ஏனையவர்கள் தமது வீடுகளில் இடம் பெயராமல் உள்ளனர். ரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் அடுத்து வரும் 12 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால் தொழில் நிமித்தம் கடலுக்குச்செல்வோர் மற்றும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு அந் நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தை 09, 2013

ரிசானாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாலும் அரசாங்கத்தினாலும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பாராயத்து பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பற்றி உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காணப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் மட்ட முயற்சிகளுக்கு மத்தியிலேயே ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரிசானாவின் மரணத்தினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுடன் கவலையில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்களுடன் இணைந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் ரிசானாவின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர். அத்துடன் ரிசானாவின் விடுதலை வேண்டி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது.மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கிற்கு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் இறங்கல் தெரிவித்து ஒருநிமடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நாமல் எம்.பி இராஜினாமா செய்வார்?

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையில் 117 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள போதிலும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கையொப்பம் இடவில்லை. அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார். அதன் பின்னர் அவரை பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார். நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் தலைமைப்பதவிகளை குடும்ப அங்கத்தவர்களே வகிக்கின்றனர். நீதித்துறை மட்டுமே குடும்ப அங்கத்தவர்களின் கையில் இல்லாது பிரிதொருவரின் கையில் இருக்கின்றது. நீதித்துறையையும் தங்களுடைய  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமக்கு  தேவையானதை வேண்டிய நேரங்களில் செய்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். அவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவே திவிநெகுமவை எதிர்த்தோம்

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மத்திய அரசில் குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய திவிநெகும சட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தோம் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா தெரிவித்தார். “மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே இன்றைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். அதுமட்டுமல்லாமல், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் நிதி கையாள்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காத பட்சத்தில் அதனை நாங்கள் எப்பொழுதும் எதிர்ப்போம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா மேலும் கூறினார்.

மாத்தளையில் மனிதப் புதைகுழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பம்

மழை காரணமாக கடந்த சில தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் உள்ள மனித சவக்குழிகளை தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அஜித் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டிடமொன்றை அமைப்பதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனையடுத்து மனித சடலங்களின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டு நீதிமன்றத்தின் பணிப்புரையின்பேரில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதுவரை 64 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 59 மண்டை ஓடுகள் அடங்குவதாகவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

'திவிநெகும' சபையில் நிறைவேற்றம்

‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 107 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முன்னணி (ஜே.வி.பி) ஆகியன சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தன. அதேநேரம் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன சட்டமூலத்திற்கு ஆதரவளித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் 6 எம். பிக்களும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் 2 எம்.பிக்களும் நேற்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அவுஸ்திரேலியாவில் அபாயகட்டத்தில் காட்டுத் தீ

தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ கட்டுப்பாட்டை இழந்து பரவிவரும் நிலையில் அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமான காற்று மற்றும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக மக்களை வெளியேற்றும் நிலை எற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மக்கள் செரிந்து வாழும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 130 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதில் 40 இடங்களில் தீ கட்டுப்பாட்டை இழந்து பரவி வருகிறது. ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தீ டெஸ்மேனிய தீப கற்பத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று விக்டோரியா மாநிலத்திலும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா எங்கும் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனிடையே காட்டுத் தீ தலைநகர் சிட்னியை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது தீ மக்கள் செரிந்து வாழாத பகுதிகளிலேயே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியா மாநிலத்திலும் காட்டுத்தீ பரவியுள்ளது.

திவிநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வாழ்வின் எழுச்சித் திட்டத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது என்று கூறிய அவர் த. தே. கூட்டமைப்பை மக்கள் முழுமையாக நிரா கரிக்கும் காலம் நெருங்கி விட்டதாகவும் கூறினார். அரசியல் தீர்விற்கான ஆரம்பம் 13 ஆவது திருத்தமேயாகும். த. தே. கூட்ட மைப்பு உண்மையாக தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்து அக்கறை உள்ளவர்களல்ல. சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியில் முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை விட சிறந்த தீர்வுத் திட்ட த்தை த. தே. கூட்டமைப்பினர் அன்று எரித்தனர். தமிழ் கூட்டமைப்பு நல்ல சந்தர்ப்பங்களை கைவிட்டதால் பிரச்சி னைக்கு தீர்வு எட்ட முடியாமல் போனது. இந்தப் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கி த. தே. கூ. அரசியல் செய்து வருகிறது.

தை 08, 2013

கொழும்பில், இராணுவ தமிழ் பெண்கள்...

இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு இலங்கை இராணுவ தலைமையகத்தில் வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு!

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? 

(நையாண்டிப் புலவர்)

யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன். இவ்வாறு தற்போது யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் அரங்கேறுகின்றது  தமிழர்களின் கலாச்சாரத்தின் உச்ச நிலை. எமது கலாச்சாரத்தை ஆமிக்காரரும் அரசாங்கமும் சீரழிப்பதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால்..... இவ்வாறு கூறிக் கூறியே நாமை நம்மை அழித்துக் கொண்டுள்ளோம். (மேலும்....)

யாழ். பல்கலையில் மீண்டும் பிரச்சினை வந்தால் பதவி விலகுவேன் - துணைவேந்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தான் பதவி விலகுவதாகவும் புதிதாக பதவிக்கு வருபவர்கள் அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை முதல் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவர்களின் வரவு இடம்பெறவில்லையாயினும் அல்லது இனியும் பல்கலைக்கழகத்தில் பிரச்சினை தோன்றும் பட்சத்திலும் தான் பதவி விலகுவேன் என்று அவர் கூறியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

கனேடிய அமைச்சரின் கருத்து தவறானது -  ஜி.எல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய அமைச்சரின் கருத்து தவறானது மட்டுமன்றி பாரபட்சமானது அத்துடன் சமநிலையற்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கனேடிய அமைச்சர் ஜேசன் கெனீயினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 'பக்கசார்பானது மற்றுமன்றி சமநிலையற்றதாகும்'. மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியலுக்கு பொருத்தமான வகையில் இலங்கை அரசாங்கம்  தனது விவகாரங்களை முன்னெடுக்காது. என்னுடனான சந்திப்பின் போது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகள்இ கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோர் தொடர்பில் அவர் பிரிதொரு காரணத்தை கூறினார். 'அவரது பார்வை ஒரு சீரான பார்வை இல்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலும் மக்கள் தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரது குற்றச்சாட்டானது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் என்றார். 'இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அத்துடன் இங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இது தொடர்பில் கனடா கரிசனையினை காட்டி வருகின்றது' என இலங்கையில் தங்கியிருக்கும் கனேடிய குடியுரிமை குடிவரவு மற்றும் பல்லின கலாசார அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்டக் கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டம்

சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றதாக கோரி மாணவர்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சையில் தோற்றியிருந்த பெரும்பான்மையின மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமை மற்றும் வினாத்தாள்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கோரி கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சட்டக்கல்லூரி வரை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் மகஜரொன்றை கையளிக்கவந்த குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு புகலிடமில்லை

சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தால், அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் ஏற்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும் குறைந்தது 5 வருடங்களுக்கு அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது. அதேநேரம், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து எவரும் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்க முடியாது. சட்டவிரோத ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்கு கனடா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைப வர் கள் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவார்கள். 2009 ஆம் ஆண்டு கப்பல் மூலம் கனடாவுக்குள் நுழைந்தவர் களில் பலர் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர். சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்க ளின் புகலிடக் கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (மேலும்....)

ஸ்டாலின் தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர்!

குழப்ப நினைத்தால் அழகிரி மீது கடும் நவடிக்கை

கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். எனக்குப் பின் யார் என்ற கேள்விக்கு பதில் ஸ்டாலின்தான்.அவரை மறந்துவிடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய தி.மு.க தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, தி.மு.க. ஒன்றும் மடம் அல்ல இதை நான் மட்டும் சொல்லவில்லை, கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே இதை பலமுறை கூறியுள்ளனர் என்றார். இதன் மூலம் ஸ்டாலினை தலைவராக்குவதை ஏற்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.இந் நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க. ஸ்டாலின் பெயரை தி.மு.க. தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அறிவித்தார்.

எனது மகளின் பெயரை வெளியிட வேண்டும்

எனது மகளின் உண்மையான பெயரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கு வாழ்க்கையில் போராடுவதற்கான துணிவு கிடைக்கும். எனது மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. தன்னை காத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் உயிரிழந்துவிட்டாள். இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் இப்போது இல்லை. நீதிமன்றம் அவர்களுக்கு சரியான தண்டனை அளித்து, அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற செய்தி கிடைத்தால் போதும். அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனைதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு தகுந்த பாடமாக இருக்கும். நமது சமூகத்தில் இதுபோன்ற காரியங்கள் நடக்காமல் தடுக்க பொலிஸாரால் மட்டும் முடியாது. பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு, பெண்களை மதிப்புடன் நடத்த கற்றுத்தர வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே இதனைக் கற்பிக்கும் போதுதான் அவர்கள் பொறுப்புள்ள மனிதர்களாக வளருவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தை 07, 2013

ஈழ முரசின் இனவாதம்

அம்பலப்படுத்தினார் “வீரமணி”

“தமிழ் மக்களுடன் பேசினால் தங்களுடனும் பேசவேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்று வழங்கப்பட்டால் தமக்கும் தீர்வு வேண்டும். தமிழ் மக்களுக்கு உலக  நாடுகள் உதவி செய்தால் அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வெட்கமில்லாமல் கையேந்துகின்ற முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுடன் இணைந்து விடுதலைக்காகப் போராடியிருந்தால் அவர்களின் கோரிக்கைகள்  நியாயமானதாக இருந்திருக்கும். அதொன்றையும் செய்யாமல் இன்று தமிழ் மக்களுடைய உதவிகளில் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயமென்பதை முஸ்லிம் தலைமை உணராமலிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல”. இது 30.12.12- 07.01.13 க்கான ஈழமுரசு பத்திரிகையின் (பிரான்ஸ் பதிப்பின்) “தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு!” என்ற  மிக முக்கிய தலைப்பிலான கட்டுரையின் சுருக்கம். அதாவது இலங்கையின் தமிழ் புலிகளுக்கும்- இலங்கை  அரசாங்கத்துக்குமான நீண்டகால ஆயுத யுத்தத்தில் உள்ளக ரீதியில் இடப்பெயர்வுக்குற்பட்டவர் (Internally Displaced People)களுக்கான இந்திய அரசாங்கத்தின் 50,000 வீடுகள் என்ற நிவாரண ஏற்பாடுகளில்  நடப்பதாகக் ஈழத்தில்(?) இருக்கும் வீரமணி கருதும் அநீதிக்கு எதிரான அவரின் குமுறல். (மேலும்....)

வட-கிழக்கில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு

வடக்கில் யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும்,  கிழக்கு மாகாணத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது. (மேலும்....)

மருத்துவ நிபுணர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற தடை

அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுவதைத் தடை செய்யும் விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயத்திலக்க நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள்  தனியார் ஆஸ்பத்திரிகளில் பணி புரிவது ஏற்கனவே தடை செய்யப்பட்டி ருக்கின்றது. அப்படி இருந்தும் ஒரு சிலர் தொடர்ந்தும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கடமையாற்று வது தெரிய வந்திருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தான் இந்த விசேட சுற்றறிக்கை பெப்ரவரி மாதம் வெளியிடப்பட விருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இராணுவத்தில் இணைந்த 103 தமிழ் யுவதிகள் இன்று கொழும்பில் சுற்றுலா

இராணுவத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக இன்று கொழும்பு வருகை தரவுள்ளனர். இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருக்கும் தமிழ் யுவதிகள் நாளை 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதே சங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணுவத்தில் இணைத்துக் கொள் ளப்பட்ட பின் தமிழ் யுவதிகள் கிளிநொச்சி யிலிருந்து முதற்தடவையாக கொழும்புக்கு அழைத்துவரப்படுகின்றனர். தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதேசங்கள் தொடர்பாக இராணுவ ஊடகப் பணிப் பாளர் பிரிகேடியர் ரவிபிரிய தகவல் தருகையில், இன்று கொழும்பு வரும் அவர்கள் நாளை தமது கல்விச் சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர்.

சீனாவில் உறை பனியில் சிக்கிய 1000 கப்பல்கள்

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறை பனியில் 1000 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. சீனாவில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. 28 ஆண்டுகளு க்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது. பொதுவாக அங்கு மைனஸ் 15.3 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 3.8 டிகிரியாக இருக்கும். இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மைனஸ் 7.4 டிகிரியாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் உள்ளது. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த கடல் நீர் பனிக்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீற்றர் அளவுக்கு பனிக்கட்டியாக மாறிவிட்டது. எனவே அக்கடலில் பயணம் மேற்கொண்ட 1000 கப்பல்கள் பனிக்கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. தென்கிழக்கு சீனாவில் சிசுவான் மாகாணத்தில் மலை முழுவதும் பனி படர்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 1000 பேர் சிக்கி தவிக்கின்றனர்.

பலஸ்தீன நிர்வாகம் ‘தேசம்’ என மாற்றம்

‘பலஸ்தீன தேசிய நிர்வாகம்’ என்பதை பலஸ்தீன தேசம் என மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார். பலஸ்தீன முத்திரை, குறியீடு மற்றும் கடிதங்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் எனும் ஆணையில் ஜனாதிபதி கைச்சாத்திட் டுள்ளார். பஸ்தீனுக்கு ஐ.நா.சபை அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை பலஸ்தீன உத்தியோகபூர்வ ஊடகமான ‘வபா’ அறிவித்தது. ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு பலஸ்தீன தனிநாடு மற்றும் சுதந்திரத்திற்கான ஆண்டு என அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தமது எதிர் அமைப்பான காசாவை ஆளும் ஹமாஸ¤க்கு தேசிய ஐக்கியத்திற்கு ஜனாதிபதி அப்பாஸ் அழைப்பு விடுத்திருந்தார். காசாவில் பதா அமைப்பின் 45 ஆண்டு பூர்த்தி நிகழ்வை கொண்டாட ஹமாஸ் அனுமதி அளித்திருந்தது. இதனை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் பதா அமைப்பின் பேரணியும் இடம்பெற்றது.

வயோதிபத்தை அடையும் நம் நாட்டவர்கள் இன்று வறுமையில் வேதனைப்படுகிறார்கள்

சுமார் 60 முதல் 100 வருடங்களுக்கு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த கீழைத்தேய பண்பாட்டு சம்பிரதாயங்களின்படி தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் கூட்டுக்குடும்பங்கள் பந்தபாசத்தை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அன்று கூட்டுக்குடும்பத்தில் ஒரு தலைவர் இருப்பார். அதே குடும்பத்தில் பிள்ளைகள், மருமக்கள், சகோதர, சகோதரிகள், மைத்துனர், மைத்துனிமார், பேரப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய கூட்டுப் குடும்பங்களில் வயோதிப நிலை அடையும் எவரும் ஓரங்கட்டப்படுவதில்லை. அவர்களையும் குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக கருதி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் அன்புடன் பராமரிப்பார்கள். ஆயினும், நாகரீகம் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகாலமாக பெருமளவில் சீர்குலைந்து போய்விட்டது. (மேலும்....)

வெனிசுலா சட்டமன்றத்தலைவராக சாவேஸின் சகா தேர்வு

வெனிசுலா தேசிய சட் டமன்றம் சாவேஸின் நெருங்கிய சகாவான டியோ ஸ்டாடோ கேபெல்லொ வை மீண்டும் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்தது. இத்தேர்வின் மூலம், சாவேஸ் குணமடையாவிட்டால், வெனிசுலாவின் காபந்து ஜனாதிபதியாக நியமிக்கப் படக்கூடியவர்களின் பட்டி யலில் இவரும் சேர்கிறார். கேபெல்லொ ஏற்க னவே சட்ட மன்றத் தலைவ ராக இருக்கிறார். இவர் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். முன்னாள் போர்வீரரான இவர் சாவே ஸின் விசுவாசிகளில் ஒரு வராவார். இத்தேர்வின் மூலம் இவர் நாட்டின் வலி மை மிக்க தலைவர்களில் சாவேஸ், துணைத்தலைவர் நிகோலஸ் மடுரோ ஆகி யோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஒரு தேச விசு வாசி என்ற முறையில் நான் செய்கின்ற காரியங்களில் தாய்நாட்டுக்கும், அதன் அமைப்புகளுக்கும், நமது தளபதி சாவேஸின் தலை மையிலான புரட்சிக்கும் நான் விசுவாசியாக இருப் பேன் என்று உறுதி ஏற்கி றேன் என்று பதவி யேற்பின் போது அவர் உறுதிமொழி யேற்றார்.

தை 06, 2013

வடமாகாண ஆளுநரின் செயலாளர் பதவி நீக்கம்?

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சுமித் ஜெயக்கொடிமீது பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்நிலையிலேயே அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்வதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் இச்செய்தியை ஆளுநர் தரப்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும் நாளைய தினம் இச்செய்தி தொடர்பில் முழுமையான விபரத்தினை அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக புதிய ஆதாரங்களுடன் இரு வீடியோக்களை தயாரிக்கிறது செனல் - 4

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள் அடங்கிய இரு வீடியோ தொகுப்புக்களை இங்கிலாந்தின் செனல் - 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செனல் - 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்ற வீடியோக்களால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்நிலையில் மேற்படி தொலைக்காட்சி மேலும் இரு வீடியோக்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற முன்னாள் போராளிகள் 8 பேர் வழங்கிய இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை வைத்தே மேற்படி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிருக்கு குறி?

நான்காவது கட்ட ஈழப் போரை இலங் கைக்கு சாதகமாக மாற்றியதில், ஆழ ஊடுருவும் அணியின் பங்கு மிகப்பெரியது. எதிரி களின் அரண்களுக்குள் நுழைந்து உளவு​பார்க்கும் இந்தப் பிரிவு, வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தில் அங்கு அழித் தொழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உளவுப் பிரிவு, அப்போது விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியாக விளங்கிய கேணல் சங்கரைப் படு கொலை செய்தது. இப்போது கடைசியாக பிரான்ஸ் நாட்டில் அத்துமீறி நுழைந்து, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்புப் பொறுப்பாளராக இருந்த கேணல் பரிதியைப் படுகொலை செய்து இருக்கிறது. (மேலும்....)

மீண்டுமொரு போராட்டத்திற்கு வித்திடுவது ஆரோக்கியமானதல்ல

முப்பது வருட காலமாக நடைபெற்ற போர் முடிவிற்கு வந்து மூன்றரை வருடங்களாகியும் பழைய நிலைக்கு மீண்டெழ முடியாது தடுக்கி விழுந்து கொண்டி ருக்கும் தமிழினத்திற்கு மீண்டுமொரு போர் தேவைதானா எனும் கேள்வி மேலெழுந்துள்ள நிலையில் சிறிது சிறிதாகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான இரகசிய முஸ்தீபுகளில் புலம்பெயர் சமூகத்திலுள்ள சில குழுக்களின் உந்துதலுடன் ஒருசில உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவது கவலையளிப்பதாகவே உள்ளது. இதற்காக இவர்கள் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தைப் பாவித்து வருவதுடன் இலங்கையில் பிரிவினையைத் தோற்றுவிக்கக் காத்திருக்கும் சில நாடுகளையும் துணைக்கு அழைத்துள்ளமை தெரியவந்துள்ளது. (மேலும்....)

பள்ளிவாசலை அகற்றுமாறும் முஸ்லிம்களை வெளியேறுமாறும் பிக்குமார் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பள்ளிவாயலை அங்கிருந்து அகற்றுமாறும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி இன்று சனிக்கிழமை பௌத்த பிக்குமார்களினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பகுதியில் தக்கியாப் பள்ளிவாயலொன்று அமைந்துள்ளதோடு இப்பள்ளிவாசல் கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது. அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இப்பள்ளிவாசலுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டே எதிர்வரும் 15ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.  இதன்போது நயினாதீவுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பரபரப்பிற்காக ஊடக அறிக்கை விடவேண்டாம்

கொழும்பிலிருந்து முதலைக் கண்ணீர் வடிக்காது யாழ். வருமாறு அழைப்பு

கொழும்பிலிருந்துகொண்டு சகலவிதமான சொகுசுகளையும் அனுபவித்துக் கொண் டிருக்கும் அரசியல்வாதி நல்லையா குமரகுருபரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து உண்மை நிலையை அறிந்து செல்ல வேண்டும். வெறுமனே தமது பரபரப்பிற்காக ஊடகங்களில் அறிக்கையை விட்டு மக் கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனை யக் கூடாது என்று வடக்கு மக்கள் பாது காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குமரகுருபரன் அவர்கள் தெரிவித்தது போன்று யாழ்ப்பாணத்தில் எதுவும் நடைபெறவில்லை. அவை யாவும் அவரது கற்பனையே. உண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில சம்பவங்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலரே காரணமாக உள்ளனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியே நேரடிக் காரணம். அவர் அன்று சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுக்கு உசுப்பேற்றி படையினருடன் மாணவரை மோத வைத்தார். இன்று அவர் கொழும்பில், மாணவர்கள் புனர்வாழ்வு முகாமில். இதுவே உண்மை.

வேலூர் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளி முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை!

வேலூர் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளி முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பர், 8ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் போலீஸார் சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முருகனிடமிருந்து மொபைல்ஃபோன் ஒன்று, நான்கு சிம் கார்டு, மெமரி கார்டு, இரண்டு, "சிடி'க்களை சிறைத்துறை விஜிலன்ஸ் போலீஸார் பறிமுதல் செய்தனர். பாகாயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், முருகனிடம் பறிமுதல் செய்த மொபைல் மூலம் அடிக்கடி இலங்கை, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பேசியது தெரிந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக சிறை நன்னடத்தை விதிகள் படி முருகன் மீது சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை முருகனும், அவரது மனைவி நளினியும் அரை மணி நேரம் சந்தித்து பேசிக் கொள்ள தடை விதிக்கப்பட்டது. அதே போல முருகனை சந்திக்க, அவரது உறவினர்கள், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தை 05, 2013

“உயிர்வாழ ஆசைப்படுகிறேன், என்னைக் காப்பாற்றுங்கள்...!”

'நான் உயிர் வாழ ஆசைப் படுகிறேன். என் னைக் காப்பாற்றுங்கள், குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்' டெல்லியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உருக்கமான வேண்டுகோள், இந்தியாவை மட்டுமல்லாமல் உலக அரங்கு, ஐ.நா. சபையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முழு இந்தியாவுக்குமே தலைகுனிவை ஏற்படுத்திய வெறியர்களுக்கு வழங்கும் தண்டனை இனிமேல் பெண்களை வல்லுறவுக்குட்படுத்த நினைக்கும் அனைவருக்குமே பாடமாக அமையவேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் கோஷம் எழுப்பத் தொடங்கி யுள்ளனர். (மேலும்....)

ஈழ போராட்டம், பெற்றதும் இழந்ததும்

(ஸ்ரனிஸ்)

ஈழ போராட்டமானது இலங்கையில் ஆட்சி செய்த அரசுகளின் இனவிரோத போக்கால் ஏற்பட்டு அதற்காக போராடிய இயக்கங்கள் இடையே ஏற்பட்ட முரன்பாடுகளால், குறிப்பாக புலிகளின் சகோதர படுகொலைகள் காரணமாக அழியத் தொடங்கி, இறுதியில் புலிகளின் பாசிச கொள்கை காரணமாக முற்று  முழுதாக அழிந்து விட்டது. இந்த போராட்டமானது ஆரம்பத்தில் சாத்வீக போராட்டமாக தொடங்கியதற்கு தமிழ் அரசு கட்சியே காரணமாக இருந்தது.தமிழ் அரசு கட்சியை அந்த நாட்களில் பலர் இதற்காக ஆதரித்தனர். தமிழ் அரசு கட்சி இளைஞர்களை வழி நடத்தி தமிழ் ஈழத்தை பெற்று கொடுத்து விடுவார்கள் என பலர் எண்ணி இருந்தனர்.அதற்காக அது தமிழர் விடுதலை கூட்டணியாக உருமாற்றம் பெற்றது.(மேலும்....)

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம் - டி.யூ. குணசேகர

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். பிரதம நீதயரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய பயணிகளின் வியாபார செயற்பாட்டால் யாழ்.வியாபாரிகள் பாதிப்பு

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய பயணிகள் யாழப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதால் யாழ்.வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். 'இந்திய பயணிகளின் வியாபார நடவடிக்கை தொடர்பில் யாழ்.வணிகர் கழகம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. சுற்றுலா விசாவில் வரும் இந்திய பயணிகள் யாழில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவும்முடியாது, ஊக்குவிக்கவும் முடியாது. இவ்வாறு வியாபாரங்களில் ஈடுபடுவர்கள் உடனடியாக தமது தாய் நாட்டிற்கு திரும்புமாறு கோருகிறேன்' என இலங்கைக்கான இந்திய துணைத்தூதவர் வி.மஹாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய பயணிகள் தமது வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். புடவை மற்றும் அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் இவர்கள் தமது பயண பையில் இவற்றை கொண்டு வருகின்றனர். இப் பயணிகள், அலுவலகங்களில் கடமைபுரிபவர்களின் சம்பள தினத்தை கவனத்தில் கொண்டு தமது வியாபார நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'தெரிவுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்தால் சபாநாயகர் பதவி இழப்பார்'

பிரதம நீதியரசர் விடயத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமாயின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனது பதவியை இழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கமும் சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளன. உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்குமிடத்து அதை புறக்கணித்து நாடாளுமன்றம் மேற்கொண்டு நடவடிக்கையெடுத்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரதம நீதியரசரை பதவி நீக்கும் செயன்முறையை நாடாளுமன்றம் தொடருமாயின் நீதித்துறை ஸ்தம்பிதம் அடையுமென ஒரே மேடையில் தோன்றிய மேற்படி இரண்டு அமைப்புக்களும் எச்சரிக்கை விடுத்தன. பிரதம நீதியரசரை பதவி நீக்கும் முயற்சியை நாடாளுமன்றம் தொடருமாயின் சபாநாயகர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை இழைத்தவராக பதவியழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளரான சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார்.

'போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் தோல்விகளுக்கும் புலம்பெயர்ந்தோரே தொன்னூற்றி ஐந்துவீத காரணம்'

முன்னாள் போராளியின் கதை எனும்போது நான் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட நடிகனாகதான் இருந்தேன். அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் பாத்திரத்தில் இருந்து விடுபட்டு நல்லதொரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும். மக்கள் மத்தியில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்டகாலமாகவே இருந்தது. ஆனால், அது தொடர்பில் நான் இயக்குநரிடம் கேட்கவில்லை. இதுதான் கதை என்று கூறினார். சரி எனக்கு அமைந்த பாத்திரம் இதுதான் என தீர்மானித்தேன். ஏனெனில் இங்கு தமிழ் சினிமா இல்லை என்பதால், சகோதர மொழியில் நான் ஒரு தமிழ் கலைஞனாக காணப்படுவதால் எனது வெற்றியை தக்கவைத்துகொள்ள நான் படம் நடித்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய தொழில். நான் பணம் பெற்றால்தான் எனது வயிற்றை நிரப்பமுடியும். இவ்வாறான ஒரு வட்டத்துக்குள் நான் நடித்தே ஆகவேண்டும். அதேவேளை, எல்.ரீ.ரீ.ஈ பாத்திரத்திலிருந்து நான் விடுப்பட வேண்டும். நல்ல உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அத்தகையொரு ஸ்கிரிப்டுக்காக நான் காத்துகொண்டிருந்தேன். அவ்வாறானதொரு சூழலில்தான் எனக்கு இந்த பாத்திரம் கிடைத்தது. (மேலும்....)

யாழ். பல்கலைக்கழகம் 16ம் திகதி ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்க ப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள விரிவுரையாளர்கள் துணைவேந்தர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பின் போது இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையான முடிவு துணைவேந்தரு க்கும், விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்காவையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா ஆகியோரையும் உயர் கல்வி அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு

புனர்வாழ்வு பெற்ற 313 பேர் சமூகத்துடன் இணைக்கப்படுவர்

புனர்வாழ்வு பெற்ற 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் பொங்கலுக்கு முதல் நாளில் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர். வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவ மொன்றில் இவர்கள் அமைச்சர் சந்ரசிறி கஜதீர வினால் சம்பந்தப்பட் டோரின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் 427 பேரே புனர்வாழ்வு நிலையங்களில் உள் ளதாகவும் அவர்களும் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவர் எனவும் அமைச்சர் சந்ரசிறி கஜதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளிலுள்ள புலிச்சந் தேக நபர்கள் அவர்களது வழக்குகள் அடிப்படையில் வெவ்வேறு கட்டங்களின் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டதன் பின்னர் சுமார் 1400 புலிச் சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது சுமார் 800 பேர் வரையிலானோரே புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் ஏனையோர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தை 04, 2013

மஹிந்த  யுத்த வெற்றியால் அல்லாமல் அசோகரைப் போல் பௌத்தனானால் நீண்டகாலம் ஆளலாம்

(வரதராஜப் பெருமாள்)

வரலாற்றிலிருந்து மஹிந்தவும் அவரது சகோதரர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். மஹிந்தவின் அதிகாரம், அரசியற் செல்வாக்கு என்பன எப்போதும் அசைக்கப்பட முடியாதவை போல இன்றைக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் அரசியல் வரலாறு அப்படிப்பட்டதல்ல. ராஜபக்ஷாக்களின் கோட்டையில் ஒரு பொறுத்த இடத்தில் ஓட்டை விழுந்தால் போதும் அந்தக் கோட்டையை இறுகக்  கட்டியிருப்பதாகக் கருதப்படும் கற்களெல்லாம் ஒவ்வொன்றாக உதிர்ந்து கோட்டை மண்ணோடு மண்ணாகி விடும். பதவி; உயரும் போது துணிவு மட்டுமல்ல பணிவும் சேர வேண்டும். செயலாற்றல் உள்ள ராஜபக்ஷாக்களிடம் நல்லவற்றைப் பாதுகாக்கும் மற்றும் உய்ர்ந்தவற்றை மேலும் உயர்த்திடும் சிந்தனையும் சேர வேண்டும். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தம்பிமாரை மட்டும் வைத்துக் கொண்டு உற்றார் உறவினர்கள், தோள் கொடுத்த நண்பர்கள், துணைக்கரம் கொடுத்த அயலவர்கள் எல்லோரையும் இனித்தேவையில்லை – ஆறு கடந்தாயிற்று இனி ஏன் அண்ணன் தம்பியென - என எள்ளிநகையாடி பகைத்துக் கொள்வது தன்தலையிலேயே ஒருவன் கொள்ளி வைத்து அழிவைத் தேடிக் கொள்ளும் வேலையாகும். (மேலும்....)

இந்தியாவுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்படும் - இலங்கை மீனவர்கள்

இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுதர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட மீனவர்கள் சார்பில் பாதுகாப்பு அமைச்சு, இந்திய துணைத்தூதுவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.இதனால் எமது கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு நாள் தோறும் எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் இரு நாட்டு அரசுகளும் விரைவில் தீர்வைக்கான முன்வர வேண்டும்.

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர்

பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக வீடு சென்றுள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர். எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க அவரை விடுதலை செய்யுமாறு சிவசங்கர் விவாதித்துள்ளார். (மேலும்....)

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்திற்கு மாணவியின் பெயர்

மத்திய அரசு கொண்டுவர தீர்மானித்துள்ள கற்பழிப்புக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு டில்லி மாணவியின் பெயரை வைக்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். டில்லியில் கடந்த டிசம்பர் 16ம் திகதி ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். சமீபத்தில் நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடிதம் எழுதியிருந்தார். கற்பழிப்புக்கு எதிரான சட்டத்திற்கு உயிரிழந்த டில்லி மாணவியின் பெயரை வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சசிதரூர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்திருந்தார். சசிதரூரின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதும், தற்போது மாணவியின் பெற்றோர் புதிய சட்டத்திற்கு தங்களது மகளின் பெயரை வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

35 ஆப்பிரிக்க நாடுகளில்   அமெரிக்க படைகள் குவிப்பு

2013ம் ஆண்டில் அமெ ரிக்காவின் ராணுவ குழுக் கள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட நாடுகளில் குவிக்கப்படும் என்று பென்டகன் அறிவித் துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க ராணுவப்படை முதலில் அந்நாடுகளில் உள்ள அரசு ராணுவத்திற்கு பயிற்சியளிக் கும். பின்னர் அந்நாட்டில் உள்ள ராணுவ ஆயுதங் களை நவீனமயமாக்கும். அதன் பின்னர் ராணுவத் தாக்குதலுக்கு தயாராகும் என்று அமெரிக்க ராணு வத்தின் உயர் தளபதி சென் ட்ரல் டெவிட் ரோட்ரிகுஷ் தெரிவித்துள்ளார்.2013ம் ஆண்டின் வசந்த காலத்தில் இரண்டாவது கட்டமாக ராணுவக் குழுக் கள் அனுப்பி வைக்கப்படும். இந்த குழுக்கள் குறைந்த பட்சம் ஓராண்டிற்குள் 10க்கும் மேற்பட்ட கூட்டு பயிற்சி மேற்கொள்ளும். அதில் முதலில் லிபியா, சூடான், நிகீர், கென்யா மற்றும் உகண்டா உள் ளிட்ட நாடுகளில் முதல் கட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி இந்த நாடுகளில் உள்ள அல்கொய்தா தொடர் புள்ள அமைப்புகளை ஒழித்துக் கட்டுவோம் என பென்டகன் அறிவித்துள் ளது. ஆனால் இதற்கு பல் வேறு ஆப்பிரிக்க நாடுகள் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆப்பி ரிக்க பகுதிகளை ஆக்கிர மிக்கவே உதவும். தனது ஆதிக்கத்தை ஆப்பிரிக்க கண்டத்தில் மேலும் வலுப் படுத்தும் முயற்சியாகவே இது அமையும் எனக் கோரி பல்வேறு நாடுகள் பென்ட கனின் அறிக்கையை நிரா கரித்துள்ளன.

தை 03, 2013

தில்லுமுல்லு செய்யும் டியுசன் வாத்தியார்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி கற்பதில் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த பிள்ளைகளுக்கு பாடசாலையில் ஆசிரி யர் புகட்டும் பாடங்களை நல்ல முறையில் புரியவைப்பதற்கா கவே வீட்டில் உள்ள தாய்மார், அக்கா, அண்ணன்மார், மாமன், மாமி மார் அல்லது அயல்வீட்டு அண்ணா, அக்காமார் சிறிய அடிப்படை யில் ஆரம்பித்த கல்வியை சொல்லிக்கொடுக்கும் டியுசன் முறை ஆரம்பமாகியது. அன்று டியுசன் வாத்தியார்களாக இருந்தவர்கள் பாடசாலை பிள்ளைக ளின் பெற்றோரிடம் இருந்து பணத்தை சூறையாடுவதற்காக இதனை செய்யவில்லை. பிள்ளைகளுக்கு கல்வி அறிவைப் புகட்டும் உன் னத நோக்கத்துடனேயே இந்த டியுசன் முறையை அவர்கள் கடைப் பிடித்தார்கள்.(மேலும்....)

கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க யாழ். பல்கலை நிர்வாகம் இணக்கம்

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருத்து தெரிவிக்கையில், 'யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் உள்ளது. ஏனைய மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் யாழ். பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு கோரியதை அடுத்து, அதற்கு இணக்கம் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் பல்கலைக்கழக கல்விச் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது' என்றார்.

2014இல் ஐ.தே.க ஆட்சியமைக்கும் - ரணில்

எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற படைதரப்பு இணக்கம்

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லூர் ஆலயம் பல்லின மக்கள் வருகை தந்து செல்லும் இடமமாக அமைந்துள்ளது. இதற்குள் பாதுகாப்பு படைத்தரப்பினரால் காவலரண் அமைத்துள்ளமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதியுடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்குள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள காவலரண் அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக யாழ். மாநகரசபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்புவார்: சவூதி அரேபிய தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்தார். "பணிப்பெண் ரிஸானா நபீகின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதிற்கு அனுப்பி வைத்த கருணை மனு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருடனான சமாதான முயற்சிகள் பயனளிக்கும்.  இதன் காரணமாக ரிஸானா விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உண்டு. மனிதாபிமான அடிப்படையிலான  ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமாக கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் விஷேட குறிப்புகளை இணைத்து அனுப்பியது. ரிஸானா நபீக்கின் கடவுச்சீட்டிலும் பயண ஆவணங்களிலும் வயதைக் கூட்டிக் குறிப்பிட்டு மோசடியான முறையில் அவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய பயண முகவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் ஹக்கீம் அதற்கான ஆவணங்கள் தற்பொழுது உள்ளதாகவும் தெரிவித்தார்.

டாக்டர் பாக்கியசோதிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலானது மேற்குலக நாடுகளின் சதித் திட்டம்  - விக்கிலீக்ஸ்

மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் தலவைர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலானது மேற்குலக நாடுகளின் சதித் திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ, ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்றின் மூலம் அவருக்கு இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை ரத்து செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் கொலை செய்யப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டல் கடிதத்தை டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்தக் கொலை மிரட்டல் மெய்யானதா என்பதனை விசாரணை செய்யுமாறு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் சில மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

சிலாபம், கொஸ்வாடிய சரஸ்வதி வித்தி யாலயத்தின் முன்னால் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிலாபம் - கொழும்பு போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் தடைப் பட்டிருந்தது. முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மேற்படி பாட சாலையில் நேற்று முதல் முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்படும் என்றும் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மஹவெவ அரசாங்க பாடசாலைக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.1000 பாடசாலை திட்டத்தின் கீழ் சரஸ்வதி வித்தியாலயம் இரண்டாம் நிலை பாடசாலையாக மாற்றப்படுகிறது. இதனை கண்டித்தே பெற்றோர் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாலயத்தின் அழிவு 2013 இல் நடக்கிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். கல்வி அமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். வடமேல் மாகாண உறுப்பினர் சுமன திசேரா ஸ்தலத்துக்கு விரைந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் விலகிச் செல்ல மறுத்துவிட்டனர். இறுதியாக சரஸ்வதி வித்தியாலய பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுத் தருவதாக ஆர்ப்பாட்டக் காரர்களிடம் உறுதி வழங்கியதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

தை 02, 2013

ஐந்து விடயங்கள் சிங்கள கடும்போக்காளர்களை அதிருப்தி அடையச் செய்தது -  விக்கிலீக்ஸ்

சமாதான முனைப்புக்களின் ஐந்து விடயங்கள் சிங்கள கடும்போக்காளர்களை அதிருப்தி அடையச் செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.  இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நோர்வே தூதுவர் நாடு கடத்தப்பட வேண்டும். அண்மையில் ஐரோப்பாவில் திரையிடப்பட்ட தமிழர் ஆதரவு திரைப்படம், பி.பி.சீ கருத்துக் கணிப்பில் தமிழ்த் தேசியப் பாடலுக்கு கௌரவமளிக்கப்பட்டமை, தேசிய கீதம் தேசிய கொடி போன்ற விடயங்கள் தொடர்பில் சிங்கள கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தியதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளே இவ்வாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. சிங்களக் கடும் போக்குடைய கட்சிகளின் அழுத்தங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது சமாதான முனைப்புக்களில் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது. இலங்கையில் பல வரலாற்று தளங்கள், இயற்கை அழகுகள் மற்றும் விருந்தோபலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே இலங்கைக்கு முதலிலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது 2016 ஆண்டிற்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாதாள உலக குழுவினரை இல்லாதொழிக்கும் நடவடிக்கை தொடரும்

கொழும்பில் பாதாள உலகக் குழு மற்றும் குடு போதைப் பொருளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் நகர அபவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு நகரை அண்மித்துள்ள குடியிருப்புகளுக்குச் சென்றால் ஐயோ ஐயா குடுவை ஒழித்து தாருங்கள் என அந்த மக்கள் கோருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடானது அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு தழுவிய உணர்வுகள்  வலியுறுத்தும் செய்தி

வக்கிரமான பாலியல் கொடுமைக்கும் வன் முறைத் தாக்குதல்களுக்கும் உள்ளான பல பெண்கள், சமூகம் கற்பித்து வந்திருக்கிற மான - அவமானக் கோட்பாடுகளின் தாக்கத்தில் தங் கள் உயிரை மாய்த்துக்கொள்வது இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிற ஒன்று. ஆனால், தலைநகர் தில்லியில் 6 கயவர்களால் சிதைக் கப்பட்ட அந்த 23 வயது மருத்துவ மாணவி, சிங் கப்பூர் மருத்துவமனையில் உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த நிலையிலும், தான் உயிரோடு வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களால் ஏற்பட்ட ஆழ்ந்த காயங்களின் கடுமை, உடல் இயக் கத்தின் பன்முகச் செயலிழப்புகளுக்கு இட்டுச் சென்று, இறுதியில் அவரது வாழும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. (மேலும்......)

ஆண்மையை நீக்கவேண்டும் ஜெயலலிதா

பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யவேண்டும் என்பதுடன் சட்டங்களிலும் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை  தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதுடில்லி சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் பிணை பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்.


முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்க சிறிய குழுவொன்று முயல்கிறது

நாட்டில் சிறிய குழுவொன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்குவதற்கு முயல்கிறது. மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் குழுவின் அடிப்படை நோக்கமாகும் என்று தெரிவித்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இதனைத் தடுப்பதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையினரையும் இணைத்துக்கொண்டே செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரி.பி. ஜாயா பவுண்டேசன் கொழும்பு முஸ்லிம் பெண்கள் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ரி.பி.ஜாயாவின் நினைவுதின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


தை 01, 2013

இலங்கை நீதித்துறை, ஐ.நா அதிருப்தி

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான ச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்றும் அவர்களின் நடவடிக்கைகள் மீது அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கெப்ரில்லா நோல் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது களையப்பட்டு நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இணங்கிக்கொண்டபடி இலங்கையின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை முரண்பாட்டை கொண்டிருக்கிறது. எனவே பிரதம நீதியரசர் ஒருவர் மீது விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயாதீனமான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் கடைப்பிடித்து, நீதித்துறை யாரினதும் தலையீடின்றி செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கெப்ரில்லா நோல் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியிருந்த பொலிஸ் விலக்கிக் கொள்ளப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். சி. எம். ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் பாது காப்பு நலன் கருதி பல்கலைக்கழக வெளியில் கடமைக்கு அமர்த்தப்பட்டிரு ந்தவர்களே நேற்று முதல் விலக்கிக் கொள் ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித் தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு முகாமில் 9ஆவது நாளாகவும் உண்ணாவிரதம்

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 9 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களில் 9 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நையீரியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை திறந்தவெளி முகாமிற்கு விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 4 வது நாள் புதன் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் காந்திமோகன், ரமேஷ் ஆகிய 2 பேர், 5ம் நாள் ரைசுதீன் என்பவரும், 7ம் நாள் கஜன், பரமேஸ்வர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் 6 பேர் உடல்நலம் குறைவால் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்த ஏழு பேரும் பிணையில் விடுதலை

தமிழகத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் இலங்கை வந்த 7 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் ஒரு சிறுமி உட்பட 7 பேர் கடல் வழியாக இலங்கைக்குள் வந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வட மத்திய மாகாணத்தின் தம்மென்னா கடற்படைத் தளத்தின் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போதே மன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நகை, பணம் உட்பட உடைமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் பொலிஸார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களும், அவர்களின் அமைப்புகளும்

நாட்டில் மீண்டும் வன்முறைகளை தூண்டிவிடுவதற்கு முயற்சி

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டு காலம் நிறைவு பெற்றுள்ள இவ்வேளையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் மீண்டும் இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதற்கு முயற்சி செய்வதற்கு இடமளிக்காத வகையில் ஒரு பாரிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாண்டில் அமுலாக்கவு ள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 2013ம் ஆண்டில் கொழும்பு நகரத்திற்கு மேலதிகமாக மேலும் 20 நக ரங்களை அபிவிருத்தி செய்வதற்கு தீர் மானித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இவ்வாண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் ஓரங்கமாகவே இந்த 20 நகரங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.(மேலும்......)

சாவெஸ் புதிய உடல் உபாதையால் அவதி

புற்றுநோய்க்காக சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் புதிய உபாதைக்கு உள்ளாகி இருப்பதாக அவரது துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 11ஆம் திகதி நான்காவது தடவையாக கியூபாவில் புற்றுநோய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட சாவெஸ் புதிதாக சுவாச தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளார். இதனை வெனிசுவெலா துணை ஜனாதிபதி நிகொலஸ் மடுரே கியூபாவிலிருந்து தொலைக்காட்சி ஊடே நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார். சாவெஸ் இன்னும் மோசமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் சாவெஸ் கடந்த மூன்று வாரங்களாக மக்கள் முன் தோன்றவில்லை. அத்துடன் அவரது உடல் நிலை குறித்து தொடர்ந்து ரகசியங்களே வலுத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சாவெஸ் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு நடக்கவுள்ள ஜனவரி 10ம் திகதி என்ன நடக்கும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தமது உடல் நிலை மோசமடைந்தால் வெனிசுவேலா மக்கள் துணை ஜனாதிபதி மடுரொவுக்கு வாக்களிக்குமாறு சாவெஸ் கூறியிருந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com