Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2013 மாதப் பதிவுகள

நவம்பர் 30, 2013

'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் திரையிடப்பட்டது

இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார். இந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டி ஆகியோரும் அடங்குவர்.(மேலும்.....)

தேர்தலில் புதிய கூட்டணி குறித்துப் பேச்சு

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் மற்றும் பொதுத் தேர்தலின் போது பொதுவான ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்றினைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் பற்றி இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான இந்த சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியினர் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் போது அவர்களும் கலந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை வெளிநாடுகளுக்கு இருந்தது

தமிழ் மக்கள் தொடர்பில் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கத்தைப் பாவித்து பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இங்கிருப்பது உள்நாட்டின் எமது பிரச்சினையாகும். எனவே அந்நிய தலையீடுகளின்றி நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம். இதற்காக தமிழ் மக்களுக்கும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கில் அபிவிருத்திகளை மாத்திரமன்றி ஜனநாயக முறைமைகளையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது? தேசிய பிரச்சினை ஒன்றினை எதிர்கொண்டுள்ள நாம் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு நாமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்த திணிக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் இங்கு பயனுடையதாக அமைந்து விடப் போவதில்லை. இன்று தமிழ் மக்களின் பால் வெளிநாடுகள் சில முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. எனினும் தமிழ் மக்கள் மீது இவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருப்பின் அன்று யுத்தத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றார்.

சிரியாவில் எதிர்கிளர்ச்சிக் குழுவைச்சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை

சிரி்யா கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது எதிர்க்குழுவொன்றைச் சேர்ந்த 7 பேருக்கு தம்மால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அல்-கொய்தா போராளி குழு படமாக்கி வெளியிட்டுள்ளது. சிரியா உள்நாட்டுப் போரில் ஏனைய மிதவாத குழுக்களை ஓரங்கட்டும் பிரசார நடவடிக்கையின் ஓர் கட்டமாகவே மேற்படி மரண தண்டனை நிறைவேற்காட்சியை அல்-கொய்தா போராளி குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையடக்கத் தொலைபேசி புகைப்படக்  கருவியை பயன்படுத்தி எடுக்கப்பட்டதாக நம்பப்படும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலையில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதையும் வெளிப்படுத்துகிறது. சிரியாவின் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடும் போக்குக் குழுக்களுக்கும் மிதவாத குழுக்களுக்குமிடையே கடும் முரண்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக மிதவாத குழுக்களை இலக்கு வைத்து கடும் போக்கு குழுக்கள் தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்து வருகிறது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மிதவாத குழு கட்டளைத் தளபதியான ஹஸான் ஜனவீராவும் உள்ளடங்குவதாக நம்பப்படுகிறது.

நவம்பர் 29, 2013

தற்கொலை தாக்குதலிலிருந்து தப்பியது எவ்வாறு? நீதிமன்றில் பொன்சேகா விளக்கம்


'இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது நான் சுமார் 5 நிமிடங்கள் வரை வாகனத்துக்குள்ளேயே கதவை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னை அம்புயுலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்' என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்த போது குண்டு வெடித்த பின்னர் தான் 5 நிமிடங்கள் வரை வாகனத்தின் கதவை பிடித்துக்கொண்டிருந்ததாகவும் பின்னர் ஒரு இராணுவ அதிகாரி தன்னை அம்புலன்ஸில் ஏற்றி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார். இராணுவ தலைமையகத்திலிருந்து பாதுகாப்பு தொடரணியுடன் புறப்பட்டு வந்தபோது வாசலி;ல் நின்ற கூட்டத்தினிடையே நீல நிற சல்வார் அணிந்த ஒரு பெண்ணை கண்டதாக சரத் பொன்சேகா கூறினார். இவரது கார் இந்த பெண்னை 2 மீற்றர் அளவில் நெருங்கியபோது அந்த பெண் நின்ற பக்கத்தில் தீச்சுவாலை எழும்பியதாகவும் சாரதி முன்னே சரிந்து கிடந்ததாகவும் தனதருகில் இருந்த இரண்டு காவலர்களும் நிலத்தில் கிடப்பதை கண்டதாகவும் அவர் கூறினார். தான் 5 நிமிடங்களுக்கு மேலாக கதவைப்பிடித்துக் கொண்டு உதவியை எதிர்பார்த்து இருந்ததாக கூறினார். எதிராளிகளான கிருபாகரன், சூரியகுமார், பிரகாஷ் ஆகியோரின் சார்பில் என்.ஸ்ரீகாந்தன், எஸ்.பஞ்சாட்சரன், ஏ.பிரியந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகினர். வழக்கு மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்துக்கு இந்தியாவின் உதவி மிக அவசியம்

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதமை குறித்து இலங்கை மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நன்கு தெரிந்திருந்த காரணத்தினால் இந்தியப் பிரதமர் வராதமை குறித்து அந்தளவுக்கு ஏமாற்றம் அடையவில்லை என்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். எங்கள் இரு நாடுகளும் தேசிய தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் பொருளாதார தேவைகளை உள்ளடக்கக்கூடிய வகையில் அரசியல் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உட்பட எங்கள் நட்பு நாடுகளின் நலனுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவுமில்லை என்றும் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தை பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அழிவுகளிலிருந்து காப்பாற்றி அச்சுறுத்தல்கள் அற்ற அமைதியான பிரதேசமாக உருவாக்குவதே இலங்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார். இன்று இலங்கையில் வடபகுதியில் ஜனநாயகம் தலைத்தோங்குகிறது என்று தெரிவித்த அவர், வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எங்களுக்கு நட்பு நாடான இந்தியாவினதும், தமிழ்நாட்டினதும் ஆதரவு அவசியம் என்று கூறினார்.

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பது காலத்தின் தேவை

இதற்காகவே புலிகளை ஒழிக்க சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கியது - சம்பந்தன்

தமிழ் மக்கள் உட்பட ஏனைய சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நோக்குடனே புலிகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பை வழங்கின. இவ்வாறு ஒத்துழைத்த சர்வதேச சமூகத்திற்கு அரசு என்ன பதிலை வழங்கப்போகின்றது என்று நான் இந்த சபையில் கேட்கவிரும்புகிறேன். பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானது. இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொறுப்புக் கூறுதல் இல்லாவிட்டால் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளும், தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சிறந்த தீர்வை வழங்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொது நலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை வகித்த நிலையிலேயே இந்த வரவு - செலவு திட்டத்தை சமர்பித்துள்ளார். இந்த தலைமை பொறுப்பு வகிப்பதன் மூலம் அவருக்கு மேலும் பாரிய பல பொறுப்புக்கள் உள்ளன, இந்நிலையில் இந்த தலைமைத்துவத்தின் மூலம் சிறந்த ஒரு அனுகூலமான முடிவை தரும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

அமெரிக்காவுக்கு உளவுபார்க்க உதவிய கனடா

2010 டொரொன்டோவில் நடந்த ஜி-8 மற்றும் ஜி-20 மாநாடுகளின் போது பரந்த அளவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு கனடா அனுமதி அளித்திருந்ததாக முன்னாள் அமெரிக்க உளவு நிறுவன ஊழியர் ஸ்னோடன் கசியவிட்டிருக்கும் புதிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. குறித்த மாநாடுகள் இடம்பெற்ற 6 தினங்களிலும் ஒட்டாவாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு கட்டளைத் தளமாக பயன்படுத்தியதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உளவு செயற்பாட்டின் குறித்த இலக்கு பற்றி அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டாத போதும் டொரொன்டோ மாநாட்டில் அமெரிக்க திட்டத்திற்கான கொள்கை வகுப்போருக்கு ஆதரவாக அந்த உளவு செயற்பாடு அமைந்திருக்கலாம் என சி. பி. சி. தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 28, 2013

செய்தியும் சிந்தனையும்(4)

(அபிமன்யு)

செய்தி

தஞ்சாவூர் விளார்சாலைப் பகுதியில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை என்னும் அமைப்பால் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முற்பகுதியும் சுற்றுச் சுவரும், இம் மாதம் (நவம்பர், 2013 ) 13ந்திகதி--அதன் திறப்பு விழா நடந்த மூன்றாவது நாளே--தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினரால் தமிழக பொலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.  

சிந்தனை

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பற்றி முன்னர் ஒரு செய்தி வெளிவந்தது. அப்பொழுது அது முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுத்தூண் எனக் கூறப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்பு சார்பாகக் கட்டப்படும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுத்தூண் அமைக்கப்படும் மொத்த நிலத்தில் தன்னுடைய 4500 சதுர அடி நிலத்தை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக துபாயில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் சேலத்தைச் சேர்ந்த அமலா புஷ்பமேரி என்பவர் கொடுத்த புகார் சம்பந்தமாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவன் நடராஜன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த இட விவகாரத்தில் சசிகாலாவின் அண்ணன்  விநோதனின் மகனான டி.வி. மகாதேவன் ஜந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதே அச் செய்தி. (மேலும்.....)

மரங்களை மாவீரர் தினத்தில் மட்டும் நடும் ‘புதிய’ தேசப்பற்றாளர் விக்னேஸ்வரன்


எமது மக்களின் உணர்சிகளை  இராணுவப்பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ நிறுத்த முற்பட்டால் இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
(மேலும்.....)

மரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமையினை நிலைநாட்டுவோம்! - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

2009 இல் புலிகள் ஸ்தாபன ரீதியாக அழிக்கப்பட்ட பின்னான அரசியல் சூழல், பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து, தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணமல்போனவர்களை மையப்படுத்தியும் மரணித்த தங்கள் உறவுகளின் நினைவுகளை முன்னிறுத்தியும், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அரசியல் ரீதியாக மனிதவுரிமைகள் சார்ந்தாகவும், உரிமைகள் சார்ந்தாகவும் வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக நிலவும் சமூக கண்ணோட்டத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.(மேலும்.....)

மாவீர்களும்... விற்பனர்களும்...

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல... !!!

(இக்கட்டுரை வன்னி இறுதிப் போர்... பெரும் போர்... நடந்து அடுத்த வருடம் எழுதப்பட்டது...
இக்கட்டுரை எழுதி மூன்று வருடங்கள் கழிந்தாலும்... இன்றும் அமரர் பிரபாகரனை மாவீரராக்கி... வடமாகான மக்களின் வாக்குகளை எடுத்தவர்கள் இருக்குமிடத்தும்...

முள்ளி வாய்க்காலில் தான் சத்தியப்பிரமாணம் எடுப்போம் என்று சூளுரை விடுப்பவர்கள் இருக்குமிடத்தும்...

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறுதி நாட்களில் கப்பல் வருகிறது... கப்பல் வருகிறது... வெளிநாட்டில் இருந்து உதவி வருகிறது...  வெளிநாட்டில் இருந்து உதவி வருகிறது... என்று மாயைக்குள் உள்ளாக்கியது மாதிரி...

இன்றும் புலம்பெயர் தேசங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும்... அதற்காக இந்தியாவில் இருந்து பிள்ளைகளை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்... இளைஜர்களை கவிதைகள்... மேடைப்பேச்சுக்களிநூடாக... உசுப்பேத்தி.. பலிக்கடாவாக்கிய... காசி ஆனந்தனின் முகப்புரையுடன்... அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழத்தை நோக்கிய கைகாட்டலுடன்... கூடிய... முகப் படத்துடன்... "வருவோம் தாய்மண்ணே"  என்று திரும்பவும் மக்களை மாயைக்குள் உள்ளாக்க... (மேலும்.....)

நீரிழிவு அலட்சியப்படுத்தும் வியாதியல்ல

உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்கள் மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வருடாந்தம் பல மில்லியன் பேர் இந்நோய்களால் மரணமடைகின்றனர். தொற்றா நோய்களில் ஒன்றான நீரிழிவு நோயானது இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இருதய நோய், புற்று நோய் போன்றவைக்கு அடுத்ததாக ஆபத்தான மூன்றாவது நோயாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் 170 மில்லியன் பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். முன்பு நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கிய இந்நோய் தற்போது பத்து வயது சிறார்களைக் கூடத் தாக்க ஆரம்பித்துள்ளது. நீரிழிவு நோய் என்பது ஒரு நோயே அல்ல. கணையச் சுரப்பி ஒழுங்காகச் செயற்பட்டுப் போதிய அளவு இன்சுலினை சுரக்காமை, சுரக்கப்பட்ட இன்சுலினை உடல் ஏற்று முறையாக இரத்தத்திலுள்ள சீனியை எரித்துச் சக்தியாக மாற்றாமை காரணமாக இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்கும் நிலையே நீரிழிவு எனப்படுகிறது. (மேலும்.....)

கரவெட்டி பிரதேசசபையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பதவியேற்றார்...!

வடமராட்சி தெற்கு மேற்கு சபையின் வெற்றிடமாகக் காணப்பட்ட இடத்திற்கு புதிய உறுப்பினர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  கரவெட்டி பிரதேசசபையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான துரை பிரதீபன் அவர்கள் கடந்த மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கைமையினால் பதவி வறிதாகிக் காணப்பட்ட வெற்றிடத்திற்கு விருப்பு வாக்கு வரிசையில் நான்காவது இடத்திலிருந்த கரவெட்டி, கரணவாய் மேற்கு, மண்டானைச் சேர்ந்த இந்திரராசா துஷிகரன் அவர்கள் தேர்தல் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தனது நியமனக் கடிதத்தை வடமராட்சி தெற்கு மேற்கு சபையின் தலைவர் திரு பொ.வியாகேசு அவர்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளித்து இன்று நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம் 27ம் திகதி நடைபெறும் என தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மூன்று மாத கால தடையை கெபத்திகொல்லாவ நீதிமன்றம் விதித்துள்ளது. கொகா கோலா நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொதி இலக்கம் போன்றன குறிப்பிடப்படாமல் கொகா கோலா போத்தல்கள் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருந்தமைக்காக இந்த தடை உத்தரவு குறித்த நீதிமன்றத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 26ஆம் இலக்க, 18ஆம் சரத்தின் (2)ஆம் பிரிவுக்கு அமைவாக, மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் உணவு மற்றும் பான உற்பத்தி வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் நிறுவனத்துக்கு 15000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கம்பனி தீர்மானித்துள்ளதாக அறிய வந்துள்ளது. இத்தடை நிரந்தரத் தடையானால் மக்களுக்கு நல்ல விடயமாக அமையும்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை, தலையிலிருந்து சன்னம் மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னலையில் நடத்தப்பட்டது. இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், பிடறி பகுதியில் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

'விசா விதி' பற்றி நான் அறிந்திருக்கவில்லை - ஜெயபாலன்

இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தான் சுற்றுலா விசாவில் செல்லும்போது உரை நிகழ்த்தியிருப்பதாகவும், அங்கெல்லாம் இதற்கான 'ஜனநாயக வெளி' இருக்கிறது என்றும் கூறிய கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் உணர்ந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை ) இலங்கையிலிருந்து நோர்வேக்கு நாடு கடத்தப்பட்டார். நோர்வேக்கு திரும்பியதன் பின்னர்; பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தான் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான வடகாடுக்கு சென்று தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருக்கையில், பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் தாயாரின் நினைவிடத்துக்கு செல்லாமல் திரும்பமாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போராடிய பின்னர், தன்னை தாயின் நினைவிடத்துக்குச் செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்று அவர் கூறினார். ஆனால் தன்னைப்பற்றி இலங்கை அமைச்சர்கள் பஷீர் ஷேகு தாவுத் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் சாதகமான கருத்துக்களை தந்திருக்கின்றனர் என்றார் அவர். தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மன உளைச்சல் இருந்தது ஆனால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என்றார் அவர்.

நவம்பர் 27, 2013

நாடு கடத்தப்பட்டார் நடிகர் ஜெயபாலன்

நோர்வே பிரஜையும் கவிஞரும், பிரபல நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார். வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பான அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நாடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கேசரியிடம் தெரிவித்தார். ' TK731 Turkis ' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் விசா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன், அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, ஜெயபாலனை ஞாயிறன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர். இந்நிலையிலேயே இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது. கவிஞர், எழுத்தாளரான ஜெயபாலன் நோர்வே குடியுரிமைக் கொண்டவர் என்பதுடன் தென்னிந்திய திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்படுபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இழந்து விட்ட இன்னொரு சந்தர்ப்பம்.

(சுகு-ஸ்ரீதரன்)

13 வது தின் கீழான அதிகாரப்பரவலாக்கல்; வடக்கு கிழக்கில் பலப்படுவதற்கு அர்த்தமுள்ளதாக்குவதற்கு பாரதப்பிரதமரின் வருகை உதவிகரமாக இருந்திருக்கும். இந்தியா ஏற்கனவே இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தொடங்கியுள்ள வீடமைப்பு, வீதி, தண்டவாளம் முதலீடுகளுக்கான கட்டமைப்புக்கள் துரித கதியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு உபயோகமாக இருந்திருக்கும். 22 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்றம், மற்றும் கடல்வளப்பாதுகாப்பு  இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகள் பற்றியும் ஆக்கபூர்வமான பிரச்சனைகள் பற்றிய ஆக்க பூர்வமான பேச்சுவார்த்தைகள் செயலுருவாக்குவதற்கும்  வழிவகுத்திருக்கும். (மேலும்.....)

22 வருடங்களாக....


மட்டக்களப்பு, காத்தான்குடி 6 ஆம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்ன மாவத்தையை சேர்ந்த மீரா லெவ்பை கலந்தர் லெவ்வை இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களை  தனது மாட்டு  வண்டியில்  ஏற்றி நாளொன்றுக்கு   1000 ரூபாவை வருமானமாக ஈட்டி வருகின்றார். மின்கம்பங்களை பின்தங்கிய பிரதேசங்களுக்கு  கொண்டு  சென்று கொடுப்பதாக தெரிவித்த அவர் கடந்த 22 வருடங்களாக இந்த பணியை செய்து வருவதாகவும் தெரிவித்தார். (படம்  :- எம்.எஸ்.நூர்தீன்)

காபன் புகைவண்டி
கரிப்புகையை கக்குதுகா
நம்ம கலந்தர் மச்சான் மாட்டுவண்டி
கடகடத்து போகுதுகா
மாட்டு வண்டி ஓட்டி இங்கே
மாடு போல உழைச்சாலும்
மச்சான் - வீட்டு வண்டி நல்லா
குடு குடண்டு ஓடட்டுமே...

(Abdul Jaleel)

ஜெயபாலன் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு

திரு.ஜெயபாலன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ்.ஊடகமையத்தில் தற்போதைய இலங்கை அரசியல் நிலைமைகள் பற்றி கூறிய கருத்தின் அடிப்படையில் கைது செயப்பட்டார். பின்பு கிடைத்த செய்திகளின் படி ,அவர் கூறிய கருத்துக்கள் இலங்கை அரசை குறை கூறாமல் மேலும் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை சாடுவதாக இருக்கின்றபடியால் அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற விக்னேஸ்வரன் குழுவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடக்க கூடாது என்பதையும் மற்றும் பல அரசியல் தந்திரங்களையும் கூறி இருந்தார். இவர்கூறிய கருத்துக்கள் அரசிய சக்கரவர்த்திகளான தம்மை அவமான படுத்துவதாகவும்,தமக்கு இவர் அரசியல் பாடம் நடத்த முனைவதாகவும் கூட்டமைப்பு கருதுகிறது. அதனால் தம்முடைய இரகசிய செல்வாக்கை பயன்படுத்தி ( விக்கி) இவரை கைது செய்ய வைத்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பது போல், இவரை கைது செய்து திரும்ப நாட்டிற்குள் வராமல் செய்வது ஏன் என்றல் அவருடைய கருத்தையும் பலர் நம்பக்கூடும் என்பதால்லும், கைது செய்வதால் இலங்கை அரசுக்கு கரிபூசும் நோக்கிலும் நடத்தப்பட்ட நாடகம் தான் இது என்பது சிறிது சிறிதாக கசியதொடங்கி உள்ளது. எது எப்படி இருப்பினும் நல்ல ஒரு கலைஞன் ஜெயபாலன் இதனால் பாதிக்கப்பட கூடும். எப்படி எனில் இவரை இந்தியா அல்லது தமிழ்நாடு உள்ளே விடமாட்டார்கள். இவர் மீண்டும் தன்னுடைய கலைத்தொண்டை செய்வதற்கு தமிழ்நாட்டில் இடம்மில்லை. இவரை நோர்வே நாட்டிற்க்கு தான் அனேகமாக அனுப்பப்படுவர். இவருடை கைது இவரை ஒரு பயங்கரவதியாக காட்டிக்கொள்வதால் ( புலி ) இவரை ஜெயலலிதா உள்ளே விட போவதில்லை என்பது பலரது கருத்து. சிலவேளைகளில் உள்ளே விட்டு பின்பு உள்ளே(ஜெயில்) வைத்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழர்களும் தான் இவருடைய கலை படைப்புகள் (திரையில் ) இல்லாமல்.

(Ratnasingham Annesley)

Room போட்டு யோசித்திருப்பார்களோ....?

விடுதலை செய்யப்படவேண்டும்! - சுகு-ஸ்ரீதரன்

நண்பர் ஜெயபாலன் அவர்களின் கைது மிகுந்த  வேதனையை ஏற்படுத்துகிறது. அவர் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கிறேன். பயங்கரவாதத்தை தோற்கடித்தால்,  ஜனநாயகம் தேவையில்லை என்று அர்த்தமா? ஜெயபாலன் யாழ் பல்கலைகழக மாணவரைவைத் தலைவராக இருந்தவர். 1977 இனக்கலவரத்தின் போது  யாழ் பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிங்கள மாணவர்களுக்கு உறுதுணையாக நின்றவர். யாழ்ப்பாண சாதியமைப்பு பற்றியும், முஸ்லீம்க்களின் வரலாறு தேசிய இனப்பிரச்சனை பற்றியும் பெறுமதிவாய்ந்த கட்டுரைகளை எழுதியவர். ஒரு சமூக அக்கறை கொண்ட கலகக் காரராகவும் அவர் இருந்தவர். ஒரு காலகட்டத்தின் குறியீடான கவிஞர். நண்பர் ஒருவர் சொன்னார் பிரித்தானியப் பிரதமர் கமரோன் யாழ்ப்பாணம் வருகிறார். கருத்து சொல்கிறார் . ஊர்ப்பிறந்த ஜெயபாலன் வரக்கூடாது பேசக் கூடாதென்றால் அது என்ன நியாயம் என்று. சமூக அக்கறை உள்ளவர்கள் ஜெயபாலனின் விடுதலைக்கு பாடுபடவேண்டும். அவருடைய கருத்துக்களில் உடன்படுவது வேறுபடுவது வேறு. அவர் விடுதலைசெய்யப்படவேண்டும்.

அப்பிளின் உற்பத்திகளை பிரதி பண்ணியது செம்சுங்

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் வசதிகளை பிரதி பண்ணிய குற்றச்சாட்டுக்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு செம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்சுங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 26 உற்பத்திகளில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பிள் நிறுவனம் செம்சுங் நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்தது. வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி லுசி கோஹ் தலைமையிலான குழுவினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனினும் தமது உற்பத்திகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று உறுதிபடத் தெரிவிக்கும் செம்சுங், இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அப்பிள், செம்சுங் நிறுவனங்களுக்கிடையிலான முறுகல் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றமையால் போட்டித் தன்மை மிக்க மொபைல் சந்தையில் பாரியதொரு மாற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின்

சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பெப்ரவரி 12,1809 - ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில் உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவு களுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. (மேலும்.....)

வட அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் ஆரம்பமாகும்

குருநாகல், தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களை கொழும்புடன் இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கு பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகுமென அமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். இந்த நெடுஞ்சாலை சீனாவின் நிதி உதவியுடன் மூன்று கட்;டங்களில் அமைக்கப்படுமென்றும் அவர் கூறினார். முதல் கட்டத்தில் கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை எதரமுல்லை, மீரிகம ஊடாக குருநாகலுடன் தொடுக்கப்படும், பின்னர் இது கண்டி, கட்டுகஸ்தோட்டைவரை கொண்டு செல்லப்படும்.இறுதிக்கட்டத்தில் இது தம்புள்ளையுடன் இணையும். தென் அதிவேக நெடுஞ்சாலை காலியிலிருந்து மாத்தறைவரை நீடிக்கப்படுவதுடன் இந்த நெடுஞ்சாலை ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும். இந்த வீதி திறக்கப்படும் தினத்தில் நாம் இந்த வீதியை ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லும் வேலையை தொடங்குவோமென செயத்திட்ட அமைச்சர் கொத்தலாவல கூறினார்.

அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்துக்கு மேலும் மூன்று ஆண்டுகள் தடை நீடிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கம் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளது. இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்புடன் அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடைகளும் நீடிக்கப்பட்டுள்ளன. புலிகள் அமைப்பிற்கு அவுஸ்திரேலியாவில் எவ்விதமான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட இடமளிக்க முடியாதென அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. பயங்கரவாதம் அவுஸ்திரேலியாவுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டி ருக்கும் அவர் எந்தவகையிலான பயங்கரவாத செயற்பாடுகளையும் தமது அரசாங்கம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 32 நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிளெக்பெரியின் பெரும்புள்ளிகள் இராஜினாமா

பிளெக்பெரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதேநேரம் பிரதம கணக்காளரும் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிளெக்பெரி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கிறிஸ்டியன் டீர், பிரேங்க் போல்டன், பிரயன் பிதுல்கா ஆகியோரே தமது பதவி விலகல் கடிதத்தினை சமர்ப்பித்துள்ளனர். முகாமைத்துவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இவர்கள் அந் நிறுவனத்திலிருந்து விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிளெக்பெரி நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் வெளியான உற்பத்திகள் சந்தையில் வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்நிறுவனத்துக்கு பரியளவு நட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்றும் 4 ஆயிரத்து 500 பேரை தொழிலில் இருந்து இடை நிறுத்துவதாக பிளெக்பெரி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில் தர்மம் கொண்ட பிக் பொக்கட் திருடன்

சீனாவில் ஐபோன் கைத்தொலைபேசி ஒன்றை ஒருவரிடமிருந்து களவாடிய பிக்பொக்கெட் திருடன் ஒருவன், அந்தத் தொலைபேசியிலிருந்த தொடர்பு விபரங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளான். அத்தோடு சேர்த்து தொலைபேசியின் சிம்கார்டையும் உரிமையாளருக்கு அந்தத் திருடன் தபாலில் அனுப்பி வைத்துள்ளான். தொலைபேசியில் பதிவு செய்யப் பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் அனைத்தையும் 11 பக்கங்களுக்கு கையால் எழுதி அவன் அனுப்பி வைத்துள்ளான். கிட்டத்தட்ட 1000 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரச செய்தி ஊடகம் கூறுகிறது. தொலைபேசியை பறி கொடுத்த உரிமையாளர் திருடனின் இந்தச் செயலால் ஆச்சரியமடைந்துள்ளான். மைக்ரோ ப்ளோகிங் எனப்படும் குறுந்தகவல்களை வெளியிடும் சீனாவின் சினா வேய்போ நுண்வலைப்பூ பதிவாளர்கள், இந்தச் செய்தியை பாராட்டி குறிப்பெழுதியுள்ளார்கள். இந்தத் திருடன் ‘நம்பிக்கைக்குரிய’, ‘அனுதாபம்மிக்க’ நபர் என்று ஒருவர் எழுதியுள்ளார். ‘தொழில் தர்மத்தை’ மதிக்கும் திருடன் என்றும் ஒருவர் பாராட்டியுள்ளார்.

புத்தர் பிறந்த இடத்தில் பழைமையான விஹாரை கண்டுபிடிப்பு

புத்த பெருமான் பிறந்த இடத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான பெளத்த விஹாரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோபாளத்தின் லும்பினியில் இருக்கும் மாயாதேவி விஹாரைக்குள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் கிறிஸ்துவுக்கு முன்னர் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானம் ஒன்றையே ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த கட்டுமானம் புத்த பெருமானின் பிறப்புடன் தொடர்புபட்டதாக கருதப்படுகிறது. புத்த பெருமானின் தாய் மரக்கிளை ஒன்றை பிடித்தவாறே அவரை பெற்றெடுத்ததாக நம்பப் படுகிறது. இவ்வாறு புத்த பெருமானின் தாயான மாயாதேவி பிடித்திருந்த மரத்தை சுற்றியே தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் விஹாரை அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் புத்த பெருமான் பிறந்த காலம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. புத்தரின் வாழ்க்கை மற்றும் செயல் பற்றி பல ஆவணங்கள் இருந்தபோதும் அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பது குறித்து இன்று வரை சந்தேகம் நிலவி வருகிறது. லும்பினியில் இருக்கும் மிகப் பழைமையான தொல்பொருட்களின் காலம் கி. மு. 3 ஆம் நூற்றாண்டை விடவும் முன் கூட்டியதாக இல்லை. இந் நிலையில் அங்கு முதல் முறையாக கி. மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26, 2013

6 அடி நிலம் தேவையில்லை, 6 அங்குல நிலம் போதும் இந்த வறுமைக்கு.....?

தோழர் எஸ்.எஸ் தியாகராஜன் மறைவு

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏ.ஐ.ரி.யு.சி) உபதலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் எஸ்.எஸ் தியாகராசன் அவர்களின் மறைவிற்கு பத்மநாபா ஈபிஆர்எல்எப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தொழிலாளர்களின் நலன்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர். இந்திய இடதுசாரிகள் குறிப்பாக தமிழக தலைவர்கள் தோழர்களுடன் ஈபிஆர்எல்எப் நல்லுறவுளைப்பேணி வந்திருக்கிறது. தோழர் பத்மநாபாவும் தோழர்களும் படுகொலைசெய்யப்பட்ட முதலாவது ஆண்டு நினைவுதின கருத்தரங்கு தேவநேயப்பாவாணர் மண்டபத்தில் நடைபெற்றது.  மேடையிலும் படிகளிலும் அமர்ந்து இடதுசாரித்தோழர்கள் நினைவஞ்சலி உரையாற்றியது இன்னும் எம் நினைவுகளில் நிழலாடுகிறது. நாம் புரட்சிகர எழுச்சிக்காலத்தில் கனவுகளுடன் திரிந்த காலத்தில் பழகிய பல தோழர்கள் மறைந்து விட்டார்கள். இத்தகைய ஒருபெரும் தோழமை வட்டத்தை உருவாகியவர் தோழர் பத்மநாபா. அவர்களில் பலர் மறைந்துவிட்டார்கள். தோழர் எம். கே, தோழர் ராமமூர்த்தி, தோழர் பா மாணிக்கம் ,தோழர் நல்லசிவம், அறந்தை நாராயணன் ,தோழர் சித்தன், தோழர் பரமேஸ்வரன் ,தோழர் மொகித்சென் தோழர் எல்.ஜி கீதாநந்தன், தோழர் எம்வி சுந்தரம் பெயர் குறிப்பிடாத இன்னும் பல தோழர்கள். எமது துன்பங்களில் நெருக்கடியான காலகட்டத்தில் எமக்கு கைகொடுத்தவர்கள் தமிழக இடதுசாரிகள். எமது வரலாற்றின் பெருமை மிகு பாகம் அது. தோழர் தியாகராசனின் வாழ்வு பொதுவுடைமை இயக்கத் தோழர்களின் உன்னதமான வாழ்விற்கு எடுத்துக்காட்டு. பத்மநாபா ஈபிஆர்எல்எப் துயர்பகிர்கிறது. அன்னாரின் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.  

வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் சேர்ப்பு

வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை கூறியது. 2012 வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசெம்பர் பூர்த்தியாகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார்.  2012 இல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் 10 சதவீதமானேர் வடமாகாணத்தினர் என அவர் கூறினார். 2013 வாக்காளர் பட்டியலும் டிசெம்பர் 23 இல் தயாராகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார். இவ்வருட வாக்காளர் பட்டியலில் 1.2 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் 71,7512 வாக்காளர்கள் அகற்றப்பட்டதாகவும் திணைக்களம் கூறியது.

Dual citizenship: To offer or not to offer

By Kirthi Hewamanne
* Strict new laws should be introduced for the benefit of the country and the applicant

* Some investment in Sri Lanka should be made mandatory for applicants

Having dual citizenship status is literally having the best of both worlds. Many Sri Lankans who hold dual citizenship had a sense of superiority. They can enjoy all the benefits and facilities enjoyed by any Sri Lankan and also entitled to all the benefits and facilities of their adopted country. Some diaspora who obtained dual citizenship in the past used to engage in activities detrimental to the country. They used the status to fund terrorist organisations in Sri Lanka. Using facilities and the benefits offered by the government, they misused to create devastation in their motherland. (more.....)

யாழில் பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்டத்திலுள்ள  பெண்கள் அமைப்புக்கள் இன்று திங்கட்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டியுமே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'பெண்களுக்கு எதிரான வன்முறை அற்ற சமுதாயத்தை எமது எதிர்காலத்தில்; ஆக்குவோம்', 'நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோம்'இ 'சட்டமூல அமுலாக்கம் எங்கே? அதை உறுதிப்படுத்தியவர்கள் எங்கே' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உதயம் அமைப்பின் கலை விழா

உதயம் அமைப்பினர் இவ்வருடமும் கலை நிகழ்வினை சுவிஸ் நாட்டில் சூரிச்மாநகரில் 24.11.13 அன்று வெகு சிறப்பாக நடாத்தினர்  உறவுகளுக்கு உதவிடும் உதயம்   விழா திருமதி ஐந்திமாலா குணசீலன் அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்பு  வழங்களில் விழா 13.00 மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது உதயம் அமைப்பின் தலைவர் திருவாளர்கள் தேவசகாயம்  செயளாலர்  குணசீலன்  பொருளாளர்  துரைநாயகம் மற்றும் ஆதரவாளர்களின் குத்துவிளக்கு சுடர் ஏற்றிவைத்தனர்   தொடரும் விழாவாக முத்தமிழ் வித்தகன் 'சுவாமி விபுலானந்தர்' சுவாமி  அடிகளாரின் விபுலானந்தர்' சுவாமி  அடிகளாரின் 

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

என்ற பாடலுடன் கலைகாலாச்சார நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது விழாவின் கலைநிகழ்சிகளாக கவிதை களம்;. சிறுவர் சிறுமியர் அபிநய நடனம். பரதநாட்டியம்.கரோக்கி இசை நிகழ்வு.பெரியோர் அபிநய நடனம். மதிய உணவு. கேள்வி பதில் போட்டி நிகழ்வு. குறும்படம் (தமிழ் இனி ) நாடகம் என்னும் பல்வேறு  சுவையான நகைச்சுவை நிகழ்வுகள். வெல்வது யார்?உதயம் அமைப்பினரின் அதிஸ்டசாலி  யார் ? இப்படி கூறிக்கொண்டே போகலாம் விழாவினை காணவந்த மக்களின் எண்ணிக்கை விழாவின் தளம் நிரம்பி வழிந்ததை நாம் காணக் கூடியதாகவிருந்தது நிகழ்சிகள் பங்குபற்றிய மக்களின் கருத்துக்கள் அமைப்பின்  ஆதரவாளர்களினால் பெறப்பட்டது   விழா வருடாவருடம் நடைபெறுவது போல் இவ்வருடமும் வெகு சிறப்பாக நடை பெற்றது என்று மக்கள் பாராட்டிதை நாம்அவதானிக்க முடிந்தது இறுதி விழாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறப்பித்த கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது அத்துடன் மீன்மகள் பாடுகிறாள் வவிமகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான வீதியம்மா என்ற இனிய கானத்தின் மக்கள் நடனத்துடன் உதயம் விழா மிகமிக இனிதே நிறைவு பெற்றது மக்கள் அதிகளவில் தங்கள் ஆதரவினை தெரிவித்தனர் புதிதாக பல குடும்பங்கள் உதயம் அமைப்பினில் தங்களை அங்கத்தினராக இணைந்ததையும் நாம் இங்கு தெரிவிக்காமல் இருக்க முடியாது உறவுகளுக்கு உதவிடும் உதயம் விழாவினை வெகு சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு விழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் தங்கள் வியாபாரம். விளம்பரம். உணவு இலவசமாக வழங்கிய நிறுவனத்தாருக்கும் தங்கள் சரீர உதவிகளை மிகவும் சிறந்த முறையில் வழங்கிய அனைவருக்கும் உதயம் அமைப்பினர் தங்கள் கரங்கள் கூப்பி நன்றிதனை தெரிவிக்கின்றனர் 

இவ்வண்ணம் 

உதயம் அமைப்பினர் சுவிஸ் 

பிரித்தானியா வருமாறு சீ.வி.க்கு அழைப்பு

இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிற்கும் வட மாகாண முதலமைச்சரிற்கும் இடையிலான சந்தித்திப்பின் போது இந்த அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிற்கு முன்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலமைச்சரை புதுடில்லி வருமாறு அழைத்திருந்தார். எனினும் இந்த விஜயங்களில் எதுவும் உடனடியாக நடைபெறாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஆதரவு தேடப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் கூறியிருந்தார். அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது இலங்கை பற்றி பேசப்படும். இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை இலங்கை நிலைவரம் பற்றி தனது அறிக்கையை சமர்ப்பிப்பார். இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிரி மற்றும் மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோரை இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டன. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆளுநரை மாற்றும்படி வட மாகாண சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயபாலன் கைது மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும் - ழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஜெயபாலனின் கருத்துச் சுதந்திரத்தையும். தாயாருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமுள்ள உரிமையையும் மனிதாபிமான அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. கவிஞரும் எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி. தவராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கவிஞர் ஜெயபாலன் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தளங்களில், பலவாறான கோணங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. (மேலும்.....)

கொழும்பு – சென்னை விமான சேவையை இடைநிறுத்துகின்றது ஜெட் எயர்வேய்ஸ்

கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை நிறுத்த இந்தியாவில் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக, ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்குப் பிந்திய நாட்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.  சென்னை - கொழும்பு இடையில், குறைந்த கட்டண விமான சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. இந்நிலையில் போதிய இலாபமின்மையை காரணம் காட்டி இந்த சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுத்தியுள்ளது. 

புலிகளை ஊக்குவிப்பதும் புகழ்பாடுவதும் சட்டவிரோதம்

ஊடகச் சுதந்திரம் என்ற போர்வையில் தமிbழ விடுதலைப் புலிகளின் பெருமை போற்றுதல், ஊக்குவித்தல், புகழ்பாடுதல் சட்டவிரோதமான செயலாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அவ்வாறு எவரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்படும் என்றும் ஊடக மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புலிகளை நினைவு கூரும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனதென நேற்றுக் காலை முதல் வதந்திகள் பரவி வருகின்ற நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் உடன்படிக்கையால் எண்ணெய் விலை சரிவு

ஈரான் ஆறு உலக நாடுகளுடன் எட்டிய அணு சக்தி ஒப்பந்தத்தை அடுத்து சர்வதேச மசகு எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டொலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும் இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்திய கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது என்று நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் மீதான கடுமையான தடைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தியிருந்தன. ஆனால் கனடாவில் கடந்த வாரத்திலிருந்து எரிபொருளின் விலை லீற்றருக்கு 10 சதம் வரை உயரந்துள்ளது

நவம்பர் 25, 2013

கவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....

(ரூபனா)

முன்னாள் புளட் அமைப்பின் முக்கியஸதர் பின்னாள் கவிஞர் இந்நாள் நடிகர் ஜெயபாலன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி கவலை அளிப்பதாக இருந்தாலும் சிலரை  சிந்திக்கவும் பலரை சிரிக்கவும் வைத்துள்ளது.  இந்த கைது புலியை பிடிப்பதாக நினைத்து எலியை பிடித்ததாக ,இவரை கைது செய்த அதிகாரிகள், மேல் மட்டத்தினால் தண்டிக்கவோ ,கண்டிக்கவோ படுவதற்கான வாய்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயபாலன் கைது செய்யப்பட்டு விட்ட விடயம் தெரிந்ததும், பல பகுதிகளிலுமிருந்த பல்வேறுதுறை சார்ந்த நண்பர்களிடமும் ஒரேவிதமான எண்ணமே இருந்தது. ஜெயபாலன் எதை விரும்பினாரோ எதை நோக்கி நகர்ந்தாரோ அது நடந்து விட்டது. அவர் எதிர்பார்த்து இலங்கை வந்த, காவல்த்துறையின் வாகனத்தில் ஏறுவது என்கின்ற அவா நிறைவேறியதன் மூலம் நானும் ரௌடிதான் என வடிவேலு பாணியில் உரத்து கூவி தமிழகத்திலும் புலம் பெயர் தேசியவாதிகள் மத்தியிலும் மீசையை முறுக்கிக்கொண்டு வீர நடை போடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார். ஒரு தியாகியாக, சிறைமீண்ட செம்மலாக, பயிற்சி பெறாத போராளியாக உலா வரப்போகிறார். இவையே அவரை 1970களில் இருந்து அறிந்த பலரின் கருத்தாக இருந்தது. (மேலும்.....)

இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்டாம் - சீனா வேண்டுகோள்

மனித உரிமைகளை முன்னேற் றுவதிலும் நாட்டை கட்டியெழு ப்புவதிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து நாட்டுக்குள் குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்ற நடவடிக்கைகளை பொருட்படுத்த வேண்டாம் என சீனா சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத் துள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உரிய சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பதே சிறந்ததென சுட்டிக்காட்டுகின்ற சீனா, மனித உரிமைகளை முன்னேற்றுவதிலும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் அதே போன்று சகல துறைகளிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளை பேணவும் நாட்டை கட்டியெழுப்பவும் இலங்கை கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வலிமையும் ஆற்றலும் உள்ளன எனவும் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீன வெளிநாட்டமைச்சு விடுத்ததாக கூறப்படும் உரை மற்றும் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் திகதி நிர்ணயித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் கூறிய கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சீனா, இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதுவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழரின் அழுத்தமே கொழும்பு மாநாட்டை மொறீஷியஸ் பகிஷ்கரிக்கக் காரணம்

எல்.ரி.ரி.ஈ யின் முக்கியஸ்தர்கள் ஒழுங்கு செய்த சர்வதேச தமிழ் புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை மாநாடு நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்பட்டதன் எதிரொலியாகவே மொறீஷியஸ் பிரதமர் நவீன் சந்ரா ராம் குலாம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பதென்ற தீர்மானத்தை எடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. எல்.ரி.ரி.ஈ யின் முக்கிய உறுப்பினரான நெடியவன் என்று அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரே இந்த சர்வதேச மாநாட்டை ஒழுங்கு செய்திருந்தார். மொறீஸியஸ் நாட்டில் உள்ள மக்கள் தொகையின் ஒன்பது சதவீதமானோர் தமிழர்களாவர். அந்நாட்டின் மக்கள் அனைவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு பொதுநலவாய உச்சிமாநாட்டை பகிஷ்கரிக்கும் யோசனையை இந்தியா, கனடா மற்றும் மொறீஷியஸ் ஆகிய நாடுகள் எடுத்தமைக்கு பிரதான காரணம், அந்நாடுகளின் தேர்தல்களில் தங்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை இலக்காக இருப்பதேயாகும். இலங்கையை ஆதரித்தால் இந்தியா, கனடா, மொaஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் நாட்டுத் தேர்தல்களில் தங்களை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்ற அச்சம் அந்நாட்டுத் தலைவர்கள் மனதில் வலுவூன்றி இருந்தது. அதனால் தான் இந்தியப் பிரதம மந்திரியும் இலங்கைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொறீஷியஸ் தேசத்தின் உதவி ஜனாதிபதி ஏ.வி.செட்டியார் கடந்த ஆண்டில் இந்தியாவின் மதுரை நகரத்திற்கு சென்றிருந்தபோது தங்கள் நாட்டில் உள்ளவர்களின் பெரும்பாலானோர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் என்று கூறியிருந்தார். நெடியவன் எல்.ரி.ரி.ஈ யின் சர்வதேச அமைப்பான ஈழத் தமிழர் சர்வதேசப் பேரவையின் சார்பில் மொறீஷியஸில் உள்ள தமிழ் ஆலய சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுகிறார்.  இவர்கள் மொறீஷியஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அரவின் பூலெல் என்பவரையும் சந்தித்து கொழும்பு உச்சி மாநாடுக்கு செல்லக்கூடாதென்று வேண்டுகோளும் விடுத்திருந்தனர்.

கடல் எல்லை தாண்டக் கூடாதென மீனவர்களுக்கு தமிழகம் அறிவுறுத்தாதது ஏன்?

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடிக்கக் கூடாதென எமது மீனவர்களுக்கு நாம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது போன்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் தமது மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்காதிரு ப்பது ஏன் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று கேள்வி எழுப்பினார். எமது கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதே இல்லை. இதனை இந்திய கரையோர காவல் படையே அந்நாட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசிப்பதால் தானே பிரச்சினை. தினமும் 400 - 500 படகுகளில் அவர்கள் வருகின்றார்கள் ஆனால் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று எமது மீனவர்களுக்கு நாம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். எமது அறிவுறுத்தலை மீறி மீன் பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி எம்மிடம் வரவேண்டாம் என்றும் நாம் அவர்களுக்கு கூறியுள்ளோம். இவ்வாறு இந்திய மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் தம் மீனவர்களுக்கு ஏன் அறிவுறுத்தல் வழங்க வில்லை.

அவுஸ்திரேலியா குடியரசாவதற்கு ஆளுநர் ஆதரவு கருத்து

அவுஸ்திரேலியா குடியரசா வதற்கு அந்நாட்டின் மகா ராணியின் பிரதிநிதியான ஆளுநர் ஆதரவு தெரிவித்துள்ளார். சிட்னியில் இடம்பெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற 70 வயதான ஆளுனர் குவன்டின் ப்ரைஸ், “ஒரு காலத்தில் எமது தேசத்தின் தலைவராக எமது சிறுவர் அல்லது சிறுமி வருவார்” என்று குறிப்பிட்டார். அவுஸ் திரேலியாவில் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியரசாவதற்கான மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. பாராளுமன்ற ஜனநாயக நாடான அவுஸ்திரேலியாவின் தேச தலைவராக பிரிட்டன் மகாராணி கருதப்படுகிறார். இந் நிலையில் அவுஸ்திரேலிய ஆளுநரின் புதிய கருத்து பிரிட்டனுடனான நாட்டின் உறவை மேலும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது.

அணுத்திட்ட செயற்பாடுகளை மட்டுப்படுத்த ஈரான் இணக்கம்

உடன்படிக்கை

ஈரான் செய்ய வேண்டியது

* 5 வீதத்திற்கு மேலால் யுரேனியம் செறிவூட்டல் நிறுத்தப்பட வேண்டும்.

* 5 வீதத்திற்கு மேலால் யூரோனியம் செறிவூட்ட தேவையான தொழில்நுட்ப தொடர்புகள் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

* அணுக்களை பிளக்கும் எந்த வகையான புதிய கருவிகளும் பொருத்தப்படக் கூடாது.

* யுரேனியம் செறிவூட்டுவதற்கான அடுத்த தலைமுறை கருவிகள் பயன்படுத்தவோ பொருத்தவோ கூடாது.

* புதிய யுரேனியம் செறிவூட்டு தளம் அமைக்க கூடாது.

* நடான்ஸ் மற்றும் பொர்டோவிலுள்ள அணுத் தளங்களை நாளாந்தம் கண்காணிக்க சர்வதேச அணுக் கண்காணிப்பாளர்களுக்கு வசதி செய்யப்பட வேண்டும்.

* சரக் அணு உலை பற்றிய விபரங்களை வழங்க வேண்டும்.

பதிலுக்கு உலக நாடுகள் செய்ய வேண்டியது

* அடுத்த ஆறு மாதங்களுக்கு ஈரான் மீது அணு விவகாரம் தொடர்பில் புதிதாக எந்த தடையும் விதிக்கக்கூடாது.

* தோராயனமாக ஈரான் 1.5 பில்லியன் டொலர் வருவாயை பெறக்கூடிய வகையில், அதன் மீது விதிக்கப்பட் டிருந்த ஈரானின் தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள், வாகன உற்பத்தி துறை, எரிபொருள் ஏற்றுமதி மீதான தடைகளை தளர்த்த வேண்டும்.

* ஈரானின் எண்ணெய் கொள்வனவை தற்போதைய அளவில் வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்.

* குறிப்பிட்ட ஈரான் விமானங்களில் உள்நாட்டிலேயே பாதுகாப்பு தொடர் பான பழுதுபார்த்தல் மற்றும் சோத னைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

* மூன்றாவது நாடுகளில் உள்ள ஏற்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் ஈரானிய மாணவர்களுக்கு அரசு சார்பிலான 400 மில்லியன் டொலர் அளவு நிதி பறிமாற்றத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

நவம்பர் 24, 2013

மஹிந்த சிந்தனை' என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது - சி.வி

'ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். இதை விடுத்து மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 'வட மாகாண சபையில் நாம் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன' என்றும் வட மாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும்' அவர் கூறியுள்ளார். 'யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் என்னையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். அதற்கான கடிதம் ஒன்று எனக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைத்திருக்கின்றது. இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். (பி.பி.சி)

வடக்கு முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கெமரூன் எங்கிருந்தார்?

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் வடக்கிற்கு சென்று மனித உரிமை பற்றி பேசினார். வடக்கில் புலிகளால் உடுத்த உடைகளுடன் அப்பாவி முஸ்லிம்கள் விரட் டியடிக்கப்பட்ட போது இந்த கெமரூன் எங்கிருந்தார்? என பிரதி அமைச் சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார். இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும், கெமரூன் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும், சர்வதேசத்திற்கு எடுத்து கூறியிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதுபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக பல வன்முறைகள் அரங்கேற் றப்பட்டன. அது பற்றி வாயே திறக்காத கெமரூன், ஒருதலைப் பட்சமாகவும், பக்கச்சார்பாகவும் நடந்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பாரா செல்வம் எம்.பி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பொது மக்களுக்கு வழங்கி வரும் வாக் குறுதிகள் அவரால் கடைப்பிடிக்கப்படு கின்றனவா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்திற்குள் நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இந் நிலையில் ஒரு வருட காலக்கெடுவானது முடிவடைந்த நிலையிலும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பினால் தீர்வுத்திட்டத்தைக் காண முடியவில்லை. இதனடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உண்ணாவிரதம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தாமல் விடுவதற்காக பல்வேறு பொய்க் காரணங்களை முன்வைக்கும் முயற்சிகளில் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. அவர் தான் விட்ட சவாலை மறந்தாலும் மக்கள் அதனை மறந்துவிடவில்லை.

வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினை தொடர இடமளிக்காதீர்கள்

தமிழ்- முஸ்லிம் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் மீள் குடியேற இருக்கின்ற முஸ்லிம்களின் அச்ச உணர்வை நீக்கி அவர்கள் தமது தாயகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாரூக் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குள், பொந்தீவுகண்டல் கிராம சேவகர் பிரிவில் பூவரசங்குளம் கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தினை தங்களின் மேலான கவனத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் கொண்டு வருகின்றேன். (மேலும்.....)

கெமரூனின் கூற்றுக்கு எதிர்ப்பலைகள்...

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது, நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ அவ்வாறான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.


இறுதிக் கட்டப் போரின்போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்

இறுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் இராணுவப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். எனவே, போர்க் குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்தே டேவிட் கமரூன் விசாரணை நடத்த வேண்டும். புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். கமரூனின் வடக்கு விஜயத்தின் போது புலிகளினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்கவில்லை. புலிகளின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கமரூன் அறிந்து கொண்டுள்ளார். இறுதிகக் கட்ட போரின் போது புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.


சர்வதேச விசாரணைக்கு ருபோதும் இடமளியோம்

இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் ஐதேகவின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


டேவிட் கமரூனுக்கு எதிராக திர்ப்பை வெளியிடவேண்டும்

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு செய்வது மிகவும் முக்கியமானது அத்தியாவசியமானதுமாகும். அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது என்ற உடன்பாடு பொதுநலவாய அமைப்பில் உள்ளது என்றார்.

எனினும் டேவிட் கமரூன் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்க்கின்றேன். இது குறித்து அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்காது விடின் தவறான முன்னுதாரணம் கொடுத்ததாக அது ஆகிவிடும் எனவும் குறிப்பிட்டார். இருப்பினும் பிரித்தானிய பிரதமரின் கருத்துக்களை சிறிதாக எண்ணிவிடக் கூடாது. அது தொடர்பாக ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


புலிகளை சாந்தப்படுத்த கமரூன் அரசியல் விளையாட்டு

பிரித்தானியாவில் எஞ்சிப்போயுள்ள புலிகளைச் சாந்தப்படுத்துவதற்கே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் தனது அரசியல் விளையாட்டைக் காண்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கி வரும் உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் செல்வாக்கிற்குட் பட்டதாகவே கமரூனின் நிலைப்பாடு அமைந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென பிரித்தானிய அரசின் தூதுக்குழுவினர் கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னர் லண்டனில் செயற்பட்டு வரும் மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். பொறுப்புக் கூறும் விவகாரங்களைக் கையாள்வதற்கான அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ எடுக்காதுவிடின் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையொன்றை நடாத்தக் கோரும் பிரேரணைக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதான கமரூனின் எச்சரிக்கை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிடுகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யா, சீனா மற்றும் கியூபா போன்ற ஏனைய செல்வாக்கு மிக்க நாடுகள் அங்கத்துவம் வகிப்பதனால் அங்கு பிரித்தானியாவினால் தனி வழியே செயற்பட முடியாத நிலையே ஏற்படுமெனவும் இலங்கை தற்போதும் தனது ஆளுமைக்குட்பட்ட நாடொன்றாக இருப்பதாகவே பிரித்தானியா தப்புக்கணக்கு போட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பிரித்தானிய அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பிரிவினர் எஞ்சியுள்ள புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் தொழிற்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் ரையான் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகராக செயற்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.


பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த கோரிக்கையை வரவேற்கின்றோம்

இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமேயில்லை என்பது தொடர்பில் இலங்கை அரசுக்கு பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரிட்டிஷ் பிரதமரின் கூற்றை கூட்டமைப்பு வரவேற்கின்றது. உள்நாட்டில் நம்பகரமான சுயாதீனமான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமேயில்லை.

பாகிஸ்தானிய தலிபான் தலைவர் கொலை

பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் ஹக்கீமுல்லாஹ் மசூத் கடந்த வாரம் அமெரிக்க இரகசிய சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ‘டொரோன்’ என இங்கீலிஷ¤ பாஷையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உளவு பார்க்கும் விமானங்கள் பல தடவைகள் பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியை ஏற்றவுடன் விடுத்த அறிக்கையொன்றில் அமெரிக்காவினால நடத்தப்படும் இப்படியான தாக்குதல்களுக்கு முடிவுகாணப்படவேண்டும் என கூறியிருந்தார். இத்துடன் இவர் இந்த தாக்குதல்களையும் சாடினார். (மேலும்.....)

நவம்பர் 23, 2013

முன்னாள் புளட் உறுப்பினரும், இந்நாள் புலிகளின் தீவிர ஆதரவாளருமான வ. ஐ. ச. ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது

கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் ஜெயபாலன் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருவோர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படக் கூடாது என்று அவர்; தெரிவித்துள்ளார். 'வெளிநாடுகளில் வாழும் எங்கள் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் எந்த நேரத்திலும் நாட்டுக்கு வரமுடியும்.ஆனால் அவர்கள் இங்கு வந்து மூன்று இனங்களுக்கு இடையிலும் மீண்டும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடாது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் . மீண்டும் இங்கு பிரச்சனை ஏற்படும் விதத்தில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் நடந்துகொள்ள அவர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. யாராவது சுற்றுலா வீசாவில் வந்து பிரச்சனையை ஏற்படுத்தினால் கைதுசெய்யப்படுவார்கள்' என்றார் காவல்துறை பேச்சாளர். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்பட்ட காரணத்தினாலேயே தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். (பிபிசி)

ஈழம் சக முள்ளிவாய்க்கால் வியாபாரம்

(சுகு சிறீதரன்)

இன்று மிகவும் பிரபலமான தமிழ் வியாபாரப்பண்டம் ஈழம். அதில் முள்ளிவாய்க்காலுக்கு கேள்வி அதிகம். அதை சர்வதேச வணிக வளாகமாக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.  இதில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதும் பயன் பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஈழ வியாபாரத்தில் தமக்கு கிடைத்த பலன்கள்  தமது பிள்ளைகளுக்கும் உற்ற சுற்றத்திற்கும் கடத்தியுள்ளார்கள்.  மனித உரிமை மீறல்கள்  எல்லாம் பணப்பட்டுவாடாவாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு புலம்பெயர்வாழ்வு கிடைத்தது உள்ளூர் தமிழர்களின் தியாகத்தாலேயே. அது இன்று நானாவித வியாபாரிகளுக்கும் வாழ் வழிக்கும் வரப்பிரசாதமாகியுள்ளது. (மேலும்......)

ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரையிலும் நான் இறங்க மாட்டேன் என்று கூறி ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னர் சிரேஷ்ட உதவியாளர் ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருக்கின்ற மரத்திலேயே  ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின் கீழ்  சாரதியாக சேவையாற்றிய அவர் ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் 2007 ஆம் ஆண்டு சேவையிலிருந்து நீக்கியதாகவும் தனக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமையை அடுத்தே அவர் மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்திலுள்ள மாளிகைக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட, கிழக்கில் 90,000 விதவைகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த விதவைகள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு௨013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (மேலும்......)

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று (22) எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே இந்த துண்டுப் பிரசுரங்கள் எறியப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 11ஆம் திகதி முதல் டிசெம்பர் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நடமாடுவதற்கும் விடுதியில் தங்குவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நவம்பர் 22, 2013

 

டக்ளஸும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்; தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல், அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல், திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) ஒருவருடன் இணைந்து முன்னெடுப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப்பதவி 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருக்கும்".

கூட்டமைப்பின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது. பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமரால் சபையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 10 பேர் எதிராகவும் ஒன்பது பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது. இந்த வரவு செலவுத்திட்டம் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டமையினாலேயே இதனை தாம் நிராகரித்ததா பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐ.தே.க, ஜே.வி.பி. எம்.பிக்கள் பகிஷ்கரிப்பு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. எம்.பிக்கள் சபைக்குள் இருக்கவில்லை. வரவு- செலவுத் திட்டத்தை பகிஷ்கரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் 7 பேர் மட்டும் சபையில் அமர்ந்திருந்தனர். 2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட ஆலோசனைகளின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே ஐ.தே.க, ஜே. வி.பி எம்.பிக்கள் சபைக்குள் சமுகம் தராதிருந்தனர்.

ஐ.ஆர்.ஏ. உறுப்பினர்கள், பொது மக்களை தேடிச் சென்று சுட்டுக் கொன்றார்கள்

நிராயுதபாணிகளாக இருந்த பொது மக்களை வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் உளவுப் படையைச் சேர்ந்த போர்வீரர்கள் சுட்டுக் கொன்றதாக லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சி சேவையின் பெனரோமா நிகழ்ச்சியில் உளவுப்படையைச் சேர்ந்த ஒருவர் தகவல் தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டிஷ் இராணுவத்தின் உளவுப் படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு வெல்பர்ஸ் நகரில் உள்ள ஐஆர்ஏ உறுப்பினர்களை தேடிச் சென்று சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறுகிறார். இந்த உளவுப்படை 1973ம் ஆண்டில் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தாங்கள் பலரை காப்பாற்றியதாகவும் இந்த முன்னாள் உளவுப்படை உறுப்பினர் தெரிவித்த கருத்து குறித்து புலன் விசாரணை செய்யுமாறு பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உளவுப்படை 18மாதம் பொதுமக்களை கொலை செய்த பின்னர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அது கலைக்கப் பட்டது. 1972ம் ஆண்டில் வட அயர்லாந்தில் 10ஆயிரத்து 600இற்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

சகலதுறைகளையும் முன்னேற்றும் மக்கள் நலன்சார்ந்த பட்ஜட்

  • ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பு

  • அரச ஊழியர்களுக்கும் ரூ 1,200 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

  • விவசாயிகளுக்கு ரூ 1,250 ஓய்வூதியம்

கல்வி, சுகாதார, வீடமைப்பு, உட்கட்டமைப்பு, கிராமிய அபிவிருத்தி அடங்கலான சகல துறைகளையும் இணைத்த மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டமாக 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014 ம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த காலங்களைப் போன்று இலக்கங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்களும் பொருளியல் நிபுணர்களும் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியினால் சபையில் முன்வைக்கப்பட்ட 2014 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை ஒரே பார்வையில் தருகிறோம். (மேலும்......)

புதிய நட்பு நாட்டை தேடும் இஸ்ரேல்

அமெரிக்காவை தவிர்த்து இஸ்ரேல் புதிய நட்பு நாட்டை தேடிவருவதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுடன் அணுவிவாகரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் சூழலிலேயே இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. "இஸ்ரேலுக்கும் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்திருக் கிறது" என்று லிபர்மன் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். "அமெரிக்கா- வட கொரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் உள்நாட்டு பொருளாதார பிரச்சினை என ஏகப்பட்ட சவால்களை சந்தித்திருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும்" என்றும் அவர் விபரித்தார். இஸ்ரேலின் கடும் போக்கு அரசியல்வாதியாக கருதப்படும் லிபர்மன் ஊழல் சர்ச்சையில் இருந்து இம்மாத ஆரம்பத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட் டதைத் தொடர்ந்தே மீண்டும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றார். "அரபு அல்லது இஸ்லாமிய உலகின் பணத்தில் தங்கியிருக்காத, குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள், கவலைகளை தவிர்த்து களத்தில் வழக்கத்தை மீறி எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படும் நாட்டை தேடுகிறோம்" என்றும் அவர் குறிப் பிட்டார்.

நவம்பர் 21, 2013

தமிழர்களை கொல்வதற்கு உதவிய கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது

யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இன்று திடீரென தமிழர்கள் தொடர்பில் ‘‘ஞானம்’’ பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது என நவசமசமாஜக்கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கமரூன் இதனை தடுத்தாரா இல்லாவிட்டால் இது தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடு செய்தாரா எதனையும் செய்யவில்லை. இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கான உதவிகளை பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் வழங்கினார். ஆனால் இன்று திடீரென கமரூனுக்கு ‘‘ஞானம்’’ பிறந்துள்ளது. யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையென தெரிவித்துள்ளார். காலம் கடந்தாவது கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமையை வரவேற்கின்றோம்.

சுவிஸ் நாட்டில் உதயம் விழா

24.11.2013

ஞாயிறு

 

2004.12.26 ஆண்டு பேரழிவுதனை ஏற்படுத்திய சுனாமி பேரலை நமது நாட்டில் இலங்கையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உறவுகளின்றி ஆதரவின்றி துன்பதனை அனுபவித்துதை நாம் அறிவோம் அவரகளின் துயரங்களை துடைத்து உதவி புரிவதற்கு சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கைவாழ் கிழக்குமாகாண மக்கள் உதயம் அமைப்பினை உருவாக்கினர் ஒவ்வொரு வருடமும் கலை கலாச்சாரவிழாநிகழ்ச்சி நடாத்தி மக்கள் மனமுகர்ந்து தரும் உதவிகளை கொண்ட நாட்டில் அனாதரவாக்கப்பட்ட நாம் உறவுகளுக்கு உதவிவருவது வழமையானதொன்றாகும் இதேபோன்று உறவுகள் அற்ற மாணவர் விதவைகள் .முதியோர் .உடனடி அவசர மருத்துவதேவை மேலும் பல்வேறு உதவிகளை புரிந்துவரும் உதயம் அமைப்பினர் இவ்வருடமும் உறவுகளுக்கு உதவும் கரங்கள் நிகழ்ச்சி தனை 24.11.2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடாத்தவுள்ளனர் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம் அதேவேளை இவ்சிறப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் உதயம் அமைப்பினர் அன்புடன் அழைக்கின்றனர்

இவ்வண்ணம்

உதயம் அமைப்பினர்

இராணுவ வீரர் - தமிழ் பெண் திருமணம்

11ஆவது சிங்க றெஜிமேட்டினை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் சுதுமலை வீதி தாவடியினைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும் இடையில் இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இராணுவ வீரர் ரஞ்சித் சமரசிங்கவும் மணப்பெண் ரகு தர்மினியும் தம்பதிகளாக இணைந்து கொண்டனர். திருமணம் இந்து முறைப்படியும் பௌத்த முறைப்படியும் நடைபெற்றது.

வெனிசுலா ஜனாதிபதிக்கு விசேட அதிகாரங்கள்

வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் விசேட அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன்படி மடுரோவினால் எதிர்வரும் 12 மாதங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றத் தின் ஆலோசனை பெறாமல் ஆட்சி நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய உதவியாகவே இந்த விசேட அதிகாரங்கள் வழங்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்க் கட்சிகளுக்கு எதிராக இந்த அதிகாரங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். வெனிசுலாவில் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறை நிலவுவதோடு பணவீக்கம் 54 வீதத்தை எட்டியுள்ளது. அதேபோன்று நாட்டில் மின்சார வெட்டும் தீவிர மடைந்துள்ளது.

இந்திய விமானம் தாங்கி கப்பலை

வெள்ளோட்டத்தின் போது உளவு பார்த்த அமெரிக்கா

இந்தியா புதிதாக வாங்கியுள்ள விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு ரஷ்யா புதுப்பித்து வழங்கிய விமான தாங்கி போர்க்கப்பலான விக்ரமாதித்யா, கடற்படையில் கடந்த வாரம் இணைக்கப்பட்டது. இந்த கப்பலின் பலத்தை அறிய இந்தியாவின் நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் மிகவும் ஆர்வமாக உள்ளன. இந்த கப்பலின் வெள்ளோட்டம் ரஷ்யாவின் வெண்கடல் பகுதியில் நடந்தபோது, அமெரிக்காவின் பி- 3சி ரக உளவு விமானம், கப்பல் அருகே பறந்து சென்றுள்ளது. நேட்டோ படையில் இடம் பெற்றுள்ள இந்த விமானம், விக்ரமாதித்யா கப்பலை உளவு பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. அப்போது விக்ரமாதித்யா கப்பல் ரஷ்ய கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது.  தற்போது இந்தியா வந்து கொண்டிருக்கும் விக்ரமாதித்யாவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் எதுவும் இல்லை. அதற்கு பாதுகாப்பாக 2 இந்திய போர்க் கப்பல்கள் வருகின்றன. அதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன. உளவு பார்க்கும் முயற்சியை இந்த கப்பல்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 20, 2013

நவம்பர் 19

தோழர் நபாவின் பிறந்தநாள்

(சுகு-ஸ்ரீதரன்)

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் அமைந்த அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அதனை தீண்டுவார் யாரும் இல்லாத காலத்தில் -1987 இல்- அதுபற்றிய குழப்பங்கள் தடுமாற்றங்கள் ,அகத்திலும்- புறத்திலும் நிலவிய காலத்தில் அதனை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்று சிந்தித்த யதார்த்தமான திட உறுதி கொண்ட புரட்சியாளன். சக போராட்ட இயக்கங்கள் ,முற்போக்கு சத்திகளுடன் சமூகங்களுடன் ஐக்கியம் ,சர்வதேச சகோதரத்துவம் எமது சமூகத்தில் நிலவும் சாதி, பால் ,பிரதேச, வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகள் பற்றிய ஆழமான பிரக்ஞையுடன் பிரச்சனைகளை அணுகிய மனிதநேயன்.(மேலும்......)

அமரர் தோழர் பத்மநாபா 62 வது பிறந்தநாள் நினைவு தினம்.

(தோழர் மோகன்)

1985 இல் அனுராதபுரத்தில் அப்பாவிசிங்கள மக்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வோதும், சுளிபுரத்தில் புலிகள் இயக்க இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், ரெலோ இயக்கம் தடைசெய்யப்பட்டு படுகொலைகள் இடம்பெற்ற போதும் இந்த தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்க ஈபிஆர்எல்எவ் பின்நிற்கவில்லை.  1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் செயற்பாட்டுக்கு புலிகள் தடை விதித்ததை தொடர்ந்து மோதல் உருவாவதற்கு முன்னதாக ஈபிஆர்எல்எவ் சக இயக்கங்களை சேர்ந்த போராளிகளுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியது கிடையாது. தோழர் பத்மநாபா இயக்கங்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். 1984 இல், ஆயுதந் தாங்கிப் போராடிய இயக்கங்களான ஈரோஸ், ரெலோ, ஈபிஆர்எல்எவ் மத்தியிலும் பின்னர் புலிகளுடனும் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.எல்.எவ்) என்ற ஐக்கிய முன்னணியை உருவாக்குவதில் தோழர் பத்மநாபாவின் பங்கு காத்திரமானதாகும். 1985 இல் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட்டுச் சேர்ந்து திம்புப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு ஒற்றுமையாக பங்கேற்றுக்கொண்டதும். நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். (மேலும்......)

பத்மநாபா வை பற்றி இப்படி கூறுகின்றார்கள்

தோழர் நாபா பிறந்ததினம்

சிவந்த மண்ணின்
சிங்காரப் புதல்வன்- தன்
மண்ணை காக்கவும் -தன்
மக்களை காக்கவும்
புறப்பட்ட புரட்சியாளன்

அன்பின் அடையாளமானவன்
அரவணைப்பில் தாயானவன்
கருணையின் இருப்பிடமானவன்
கற்பித்தலில் ஆசனானவன்

மண்ணின் விடிவுக்காய்
அயராது உழைத்தவன்
பாசமுள்ள ஈழமகன்
பலியானான் பாசிசவாதிகளின்
இரக்கமற்ற கரங்களுக்கு

ஒ தோழனே
உன் ரத்தம் குடித்த கயவர்
நம் மண்ணில் அழிக்கப்பட்டனர்
சுவடுகளின்றி எரிக்கப்பட்டனர்
சத்தியத்திற்கு அழிவில்லை
தர்மம் என்றும் அதை நிலைநாட்டும்

(Vani Kugan)

தோழர் நாபா!.....

தாகமெடுத்த தேசத்தில்
தத்துவங்களின் ஊற்றுக்கிணறு!...
வேர்கள் அற்ற மண்ணில்
நடைமுறையின் நாற்று மேடை!..
பழைய நூற்றாண்டின்
இருட்டுப்பள்ளத்தாக்கில்
படுத்துக்கிடந்த சமூகத்தில்
விடிந்தெழுந்த சூரியன்...
சாபங்களால் சபிக்கப்பட்டாலும்
காலம் எமக்களித்த வரம்.....

(Sivachelvam Sellathamby )

நாங்கள் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை. மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம் என்ற உன்னத வரிகளுக்கு சொந்தக்காரரான குணத்தால், அன்பால் உயர்ந்த தோழனே உனக்கு செவ்வணக்கம்.

(Asraf Ali Cpi)

மேலதிகமாக நிதியை ஒதுக்கவும்: வட மாகாண சபை கோரிக்கை

வட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாகாண சபையினால் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டினை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது.  2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் கீழ் வட மாகாண சபைக்கு 17 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த நிலையிலேயே வட மாகாண சபையினால் மேலதிக நிதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை திறைசேரியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என தேசிய நிதி ஆணைக்குழுவின் தலைவர் ஆரியரத்ன ஹேவகே தெரிவித்தார். திறைசேரியின் அங்கீகாரத்தின் பின்னரே நிதியொதுக்கீடு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடுவதற்கு திட்டம்

சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூடப்­பட்டு சில நாட்­க­ளுக்குள் 90,000 மெற்­றிக்தொன் மசகு எண்ணெய் கப்­ப­லொன்று திடீ­ரென இங்கு வந்­துள்­ள­மை­யா­னது பல்­வேறு சந்­தே­கங்­களை கிளப்­பி­யுள்­ள­தாக இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பன பொது ஊழியர் சங்கத் தலைவர் அசோக ரங்­வல தெரி­வித்­துள்ளார். சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை நிரந்­த­ர­மாக மூடி விடு­வ­தற்கு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குற்றம் சாட்­டினார். மசகு எண்ணெய் ஏற்­றிக்­கொண்டு கப்­ப­லொன்று வரு­வ­தென்றால் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் எஞ்­சி­யி­ருந்த எண்ணெய் மூலம் சில நாட்கள் நிலை­யத்தை இயங்கச் செய்­தி­ருக்­கலாம். ஆனால் கப்பல் வரு­வதை வெளிப்­ப­டுத்­தாது சுத்­தி­க­ரிப்பு நிலையம் இழுத்து மூடப்­பட்­டது. யாரது தேவைக்­காக என்­பது புரி­ய­வில்லை. அத்­தோடு திடீ­ரென 90,000 மெற்றிக் தொன் மசகு எண்­ணெ­யுடன் கப்­ப­லொன்று வந்­துள்­ளமை பல்­வேறு சந்­தே­கங்­களை கிளப்­பி­யுள்­ளது. சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூடப்­படும் வரை கப்பல் வரு­வது ஏன் மறைக்­கப்­பட்­டது? திடீ­ரென மசகு எண்ணெய் கப்பல் எப்­படி வந்­தது? இதற்­கான கோரிக்கை எப்­போது விடுக்­கப்­பட்­டது.? கப்பல் வரு­வது தெரிந்­தி­ருந்தால் ஏன் நிலையம் மூடப்­பட்­டது. இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? மசகு எண்ணெய் கொண்டு வரு­வதால் நாட்­டுக்கு லாபம் கிடைக்­கி­றது.

தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கு மாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் அழுத்தம் வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று வேண்டுகோள் விடுத்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதனூடாகவே தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதினூடாகவே சரியான தீர்வை அடைய முடியும் எனவும் தெரிவித் தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக அபிப்பிராயங்களை பரப்பி வருவதோடு தேர்தல் காலத்திலும் பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்கி வாக்கு பெற முயன்றது. தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எமது கட்சி இனவாத அடிப்படையிலோ இன ரீதியிலோ செயற்படும் கட்சியல்ல. ஆரம்பம் முதல் நாம் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு வருவதினூடாகவே தமிழ் மக்களுக்கு உகந்த தீர்வை எட்ட முடியும் என்றார்.

நவம்பர் 19, 2013

என்மனவலையிலிருந்து.......

நான் கண்ட மகத்தான மனிதர் தோழர் பத்மநாபா

(சாகரன்)

நான் கண்டு, பழகி, சேர்ந்து போரடிய மகத்தான மனிதர்களில் முதன்மையானவர் என்றார் அது தோழர் பத்மநாபா தான். எளிமை, இனிமை, உளம் சோர்ந்து போகாத விடாப்பிடியாத போராட்ட குணாம்சம், எந்த சூழலிலும் எல்லோரையும் மனம் சோரவிடமல் உற்சாகப்படுத்தும் தன்மை.... இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். எந்த சூழலிலும் இவர் கலங்கியதை காணமுடியாது, தன் தாயின் மரணத்தில் மட்டும் தன்னை மறந்து என் முன்னிலையில் அழுதது இன்றும் என் கண்முன்னே இருக்கின்றது. அதுவும் தனது போராட்ட வாழ்வினால் தனக்கு எப்பவும் ஏதும் நிகழலாம் என்பதினால் நீண்டகாலமாக காதலித்து மனைவியானவரை தனக்கு ஏதும் நிகழ்ந்தால் தன் மகள்போல் காத்து ஆறதலாக இருப்பார் என்ற நம்பிக்கை மிகக்குறுகிய காலத்தில் கொழும்பில் நடைபெற்ற வாகன விபத்தினால் தனது தாயை இழந்தபோது மட்டும் கலங்கிவிடார் மற்றயடி அவர் கலங்கியதை எம்மால் பார்க்க முடிவதில்லை. தோல்விகள், வறுமைகள், கஷ்டங்கள் என்ற விடயங்கள் வரும் போதெல்லாம் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கி நம்பிக்கையுடன் செயற்பட்ட வசீகரம் மிக்க மனிதர். மனித நேயத்தை இவரைவிட நீங்கள் வேறு யாரிடமும் அதிகமாக காண முடியாது. மக்களை இவர் அளவிற்கு நேசித்த தலைவரைப் பார்பது அரிது. அதுவும் இனம், மதம், வர்க்கம் என்று எல்லாவற்றையும் கடந்த நேசித்தவர். தலைமைப் பதவிகளையும், அதற்கான ஆசனங்களையும் தேடி ஓடி மனிதர்கள் மத்தியில் தனது செயற்பாட்டின் மூலம் மட்டும் தலைமையை தன்னை நோக்கி நகர்ந்து வருமாறு போராட்வாழ்வில் வாழந்து காட்டியவர். தனது உழைப்பு, அர்பணிப்பு, மனித நேயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தபடியினால்தான் தானே உணவும், இருக்க இருப்பிடமும், படிக்க பண உதவியும் செய்து சகல விதத்திலும் உதவி என்று நம்பிச் செய்து ஒருவனாலேயே கொல்லப்பட வேண்டிய துர்பாக்கி நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை கொன்றவர்களுக்கும் வஞ்சித்தவர்களுக்கும் தெரியும் இவரின் இவ் நற் குணத்தை தமக்கு சாதமாக பயன்படுத்தி இவரைக்கொலை செய்வதற்கு பயன்படுத்தலாம் என்று. இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்த விடுதலை அமைப்புக்களின் தலைமைத் போராளியான பத்மநாபாவை அவரின் வழியில் அவரை நேசித்தவண்ணம் நடைபோடும் பலரை காண முடியும். அவரை உதாரண புருஷராக கொண்டு இன்று வரை நடைபோடும் மனிதர்களை காணமுடியும். மற்றபடி ஏனைய விடுதலை அமைப்புத் தலைவரகளை அவர்கள் சார்ந்த அமைப்பினர் கூட இந்த அளவிற்கு தமது தலைவரகளை தமது உதாரண புருஷர்களால் கொண்டு நடப்பவர்கர்களை இன்று போர் முற்றுப் பெற்ற நிலையில் காண்பது அரிது. ஆயுதம் தாங்கியவர்களின் வீரதூரம் என்று புகழ்ச்சி பாடுவார்களே தவிர அவர்களை உண்மையாக நேசித்து நடக்கும் அளவிற்கு யாரும் பத்மநாபாவிற்கு நிகராக ஈழவிடுதலை அமைப்புகளின் தலைவர்கள் இல்லை என்பதே நாம் வாழும் காலத்தில் காணும் உண்மையாகும். இப்படியான ஒருவரின் பிறந்த தினம் இன்று. அவர் இன்று எம்முடன் உயிருடன் இல்லாவிடினும் அவரின் நல்வழிகளை பின்பற்றி மக்களின் விடிவிற்காக தொடர்ந்தும் உழைத்து வருவோம் என்று தொடர்ந்தும் வரலாற்றுக் கடமைகளைச் செய்வதே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். என்னிடம் யாரும் வரம் ஒன்று கேளுங்கள் என்றால் எம் பத்தநாபாவை மக்கள் முன் கொண்டு வந்து மீண்டும் நிறுத்துங்கள் என்பேன். எமக்கு வேண்டும் மனித குலத்தின் விடுதலை. இதற்கு வேண்டும் பத்மநாபா போன்ற நல்ல தலைவர்கள்

அன்னை இந்திராகாந்தி ,தோழர்பத்மநாபா பிறந்த தினம்

(தோழர்ஸ்ரனிஸ்)

அன்னை இந்திராகாந்தி அலகாபாத்தில் 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பிறந்தார். இந்தியாவின் நலன்களுக்கும்,பிராந்திய நலன்களுக்கும், உலக அமைதிக்காவும் அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர். தோழர் பத்மநாபா இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை எனும் இடத்தில் நவம்பர் 19, 1951 இல் பிறந்தார். இலங்கையின் பல்லின மக்கள் வளர்ச்சிக்காகவும், பிராந்திய நலன்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் அயாராது பாடுபட்ட மாபெரும் தலைவராவார். அன்னை இந்திராவும்,தோழர்பத்மநாபாவும் நாளும் பொழுதும் மக்களைப்ற்றியே சிந்திப்பதாலும் சாதாரண மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வின் உயர்வுக்கு அயராது பாடுபட்டதாலும், அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ அக்கறை கொள்ளவில்லை. (மேலும்......)

அயர்லாந்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் சிவிலியன் கொலைகள்

40 ஆண்டுகளுக்குப் பின்னரே பிரிட்டனின் அறிக்கை வெளிவந்தது

பிரிட்டிஷ் இராணுவம் 1972ம் ஆண்டில் வட அயர்லாந்தில் 13 பொதுமக்களை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றிய புலன்விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு 40 ஆண்டுகள் எடுத்தன. இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆய்வுநடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை இலங்கை மீது அநாவசியமான அழுத்தங்கள் கொண்டுவரும் பிரிட்டன் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். கடந்த 17ம் திகதி பி.பி.சி. தொலைக்காட்சி சேவையின் செய்தியறிக்கையில் 1972ம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டிக்கும் முகமாகவே பி.பி.சி. செய்தி தொகுப்பாளர்கள் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்கள். (மேலும்......)

அன்னை இந்திரா, தோழர்பத்மநாபா பிறந்ததினம் சென்னை புழல் முகாமில்

அன்னை இந்திராகாந்தி மற்றும் தோழர்பத்மநாபா பிறந்தினம(;19.11.13) புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழர் ஸ்ரனிஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அவர்களது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து, முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முகாமில் உள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

நிந்தவூரில் பதற்றம்

ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோர் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்:

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை நிந்தவூர் பிரதேசத்தில் இடைமறித்து ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதையடுத்து பொதுமக்கள் பொலிஸார் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனால் இப் பகுதியில் தற்போது பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இரவு படை­யி­ன­ருக்கும் பொது மக்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்­றைய தினம் அப் பகு­தியில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.  இதன் கார­ண­மாக பாட­சா­லைகள், அர­சாங்க மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், வங்­கிகள், வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­ட­துடன் போக்­கு­வ­ரத்தும் தடைப்­பட்­டது. கடந்த இரு வார கால­மாக நிந்­தவூர் பிர­தே­சத்தில் இரவு வேளை­களில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­துடன் அச்­சு­றுத்தும் வகை­யிலும் நடந்து கொண்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்ம நபர்கள் சிலரை நேற்று முன்­தினம் இரவு கடற்­க­ரையில் வைத்து பொது மக்கள் மடக்கிப் பிடித்­த­தை­ய­டுத்து அங்கு பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த பாது­காப்பு தரப்­பினர் குறித்த மர்ம நபர்­களை அங்­கி­ருந்து மீட்டுச் சென்­ற­துடன் வானை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தையும் மேற்­கொண்­டனர். இத­னை­ய­டுத்து பிர­தேசத்தில் பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­ட­துடன் மக்கள் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்­டனர். இச் சம்­ப­வத்தைக் கண்­டித்தும் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்ம நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு கோரி­யுமே பொது மக்கள் நேற்­றைய தினம் ஹர்த்தால் அனுஷ்­டித்­தனர்.

நவம்பர் 18, 2013

தமிழக கட்சிகளால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை

'தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பது இல்லை' என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பது இல்லை. மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை செய்து கொடுக்க முடியும். இதை விடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது. அரசியல் ஆதாயத்துக்காகவே தமிழக அரசியல் கட்சிகள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றன' என்று நாராயணசாமி மேலும் கூறினார்.

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு தேவை - தென் ஆபிரிக்கா

இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆபிரிக்கா கோரியுள்ளது. போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும்இ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆபிரிக்கா தயாரகவுள்ளது என்று அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்தித்துள்ளது என்றும்,  பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையை கையாண்டு பிரச்சினைகளை தீர்த்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே தற்போது உயர்ந்த மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் ஜூமா தெரிவித்தார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆணைக்குழு உருவாக்கப்படும்

வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான  சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது  வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என  யாழ். மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை  உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்;களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்பாளர்கள் 5 பேர்  கடமையாற்றுவார்கள் என்பதுடன், அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

புலிகளை  திருப்திபடுத்துகிறார் கெமரூன்

விடுதலைப் புலிகளை திருப்திபடுத்துவதற்காகவே பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன்  சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கேட்கிறார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கெமரூனின் செயற்பாடு, பிரிட்டனில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் அமைந்திருப்பதாகவும கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதமரின் குழுவினரை, அந்நாட்டில் உள்ள தமிழ் குழுக்கள் சந்தித்ததையும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டே செயற்படுகின்றனர். கெமரூனின் இலங்கைப் பயனும் அதன் பின்னணியில் அமைந்ததே என்றும், போர்க் குற்றம் தொடர்பில் கெமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையை தோற்றுவித்திருப்பதாகவும் கோட்டாபய குற்றம் சாட்டியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எமது அனுபவங்களை பகிர்வதற்குத் தயார் - தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை என்றால் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­பவங்­களை பகிர்ந்­து­கொள்ள தயா­ரா­கவே இருக்­கின்றோம். நாங்கள் பாரிய மோத­லி­லி­ருந்து மீண்டு வந்­த­வர்கள் என்று தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­பதி ஜேகப் ஷுமா தெரி­வித்தார். இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கு தென்­னா­பி­ரிக்கா தயா­ரா­கவே உள்­ளது. மிக மோச­மான போர் இன முரண்­பா­டுகள் ஆகி­ய­வற்றின் பின்னர் நாட்டில் சமா­தா­னத்தை நிலை­நாட்­டிய அனு­ப­வத்தை கொண்­டுள்ள நாம் எமது அனு­ப­வத்­தையும் துறைசார் அறி­வி­னையும் இலங்­கை­யுடன் பகிர்ந்­து­கொள்ள தயா­ராக இருக்­கின்றோம். நாம் மோத­லி­லி­ருந்து மீண்டு வந்­ததன் பின்னர் ஒரு முறை­மையை மேற்­கொண்டோம். இரு நாட்­டி­னதும் இரா­ஜ­தந்­திர குழுக்கள் பரஸ்­பர விஜ­யங்­களை மேற்­கொள்ளும் அதே­வேளை சந்­திப்­புக்­க­ளையும் நடத்­து­வதன் மூலமே இந்த இலக்­கினை எட்ட முடியும். எமது பிரச்­சி­னை­களை நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்தோம். சுமு­க­மான தீர்­வு­களை முன்­வைத்­தி­ருந்தோம். இவற்­றிற்­காக சில பொறி­மு­றை­களை ஸ்தாபிக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. இதே­வேளை இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­னா­பி­ரிக்­காவின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே கோரிக்கை விடுத்திருந்தேன் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

மோதலுக்குப் பின்னர் முன்னேறிவரும் இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் - அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோர்ட்

நீண்ட கால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பாரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளதுடன் இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களை ஆக்க பூர்வமானதாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோர்ட் தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது குறிப்பிட்டார், எனவே அதனை மதிப்பிடுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் சகலரும் சமமான அந்தஸ்தை உடையவர்கள் என்பதை நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்திய அதன் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளை தெரிவித் துக்கொள்கின்றேன். அத்துடன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கை அரசாங்கமும், கடற்படையினரும் ஆற்றிவரும் பணி அளப்பரியது. அதனை பாராட்டுவதுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நடவடிக்கைகளுக்கு அவுஸ் திரேலியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தெரிவித்த அவர், கடற்படையின் இந்த செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 2 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு கப்பல்களை இலங்கை கடற்படையினருக்கு நாங்கள் வழங்க தீர்மானித்துள்ளோம்.

சீன பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்

சீனாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட சின்ஜியாங் பிராந்தியத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக சின்ஜியாங் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்பது ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர். இதன்போது ஆயுததாரிகள் கத்தி, கோடாறிகளை கொண்டே தாக்குதல் நடத்தியதாக சின்ஜியாங் பிராந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மேலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அண்மைய தாக்குதல்களுக்கு சின்ஜியாங் உய்குர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளே காரணம் என சீன அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. எனினும் உய்குர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சீன ஆயுததாரிகளே வன்முறையில் ஈடுபட்டதாகவும் மியுனிச்சை மையமாக கொண்டு செயற்படும் உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதன்போது பல ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சமூக, பொருளாதார துஷ்பிரயோகம் மற்றும் மத, கலாசார கட்டுப்பாடுகளுக்கு எதிராக உய்குர் இனத்தினர் சீன அரசுக்கு எதிராக போராடி வருவதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நவம்பர் 17, 2013

போலி நாடகத்தில் நடிக்க நான் தயாரில்லை - ஆனந்தசங்கரி

உண்மையில் தமிழ் ஊடகங்கள் பலவும் இன்று பாரிய தவ றினை இழைத்து வருகின்றன. நான் எந்த ஊடகத்தையும் விழித்துக் கூறவில்லை. (பிறகு அவர்கள் எனது செய்திகளைப் போடமாட்டார்கள்) இந்தச் சில தமிழ் ஊடகங்கள் பொய்யைக் கூறினால்தான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அல்லது ஏதாவது புலிக் கதையைக் கூற வேண்டும். இதனால்தான் நான் கூறும் உண்மைகளை இந்தச் சில தமிழ் ஊடகங்கள் கவனத்திற் கொள்வதே இல்லை. நானும் பொய்யாக புலித் தலைவர் வருவார், அவரது தலைமையில் மாகாண ஆட்சி நடத்துவோம் என்று நான்கு வீரவசனங்களைப் பேசியிருந்தால் ஒவ்வொரு நாளும் முன்பக்கத்தில் கலர் படத்தோடு செய்திகளைப் போட்டிருப்பார்கள். மக்களும் அதை உண்மையென நம்பி வாக்களித்திருப்பார்கள். நானும் வென்றிருப்பேன். ஆனால் இப்போலி நாடகத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. இனியும் தயாரில்லை. இதனைத் தமிழ் ஊடகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அன்று பொய்ச் செய்திகளைப் போட்டு வெற்றி பெற வைத்தீர்கள். இன்று வென்ற உடனேயே பதவிச் சண்டை போட்டு பல துருவங்களாகி வாக்களித்த மக்களைமறந்து நிற்கிறார்கள். அதனை ஏன் மூடி மறைக்கிறீர்கள். (மேலும்.....)

"வணக்கம்" நீக்­கப்­பட்­டது ஏன்? ஊட­க­வி­ய­லாளர் கேள்வி

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்­கி­விட்டு "ஆயு­போவன்" என்ற சிங்­களப் பதத்தை தமிழில் எழு­தப்­பட்­டது ஏன்? என்று வெளி­நாட்டு தமிழ் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு அந்தக் குழு வில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதி­ல­ளித்தார். பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் அழ­கான தமிழில் "வணக்கம்" என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தற்கு மேலாக "ஆயு­போவன்" என்ற சிங்­கள வார்த்தை தமிழில் ஒட்­டப்­பட்­டுள்­ளது. இது ஏன் என்று அந்த ஊட­க­வி­யலாளர் கேள்வி எழுப்­பினார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரி­பால டி சில்வா பதி­ல­ளித்த பின்னர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அந்த ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து "நீங்கள் வேண்­டு­மென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்" என்று குறிப்பிட்டார்.

ஊடகப் போராக மாறிவிட்ட 'ஷோகம்'

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கனேடியப் பிரதமர் மாநாட்டை பகிஷ்கரித்த போதிலும் கனடாவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான கன்ஸர்வேடிவ் கட்சி உறுப்பினர் தீபாக் ஒப்ராய் இவ்விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரும் வழியில் ஆனையிறவில் வைத்து போரில் இறந்தவர்களுக்காக மலர் வளையம் ஒன்றை வைத்தார். கனேடியப்பிரதமரின் பிரதிநிதி புலிகளுக்காக மலர் வளையம் வைத்ததாக அப்போது இலங்கையில் வெளியாகும் ஆங்கில பத்திரிகையொன்று கூறியது. கனேடியப் பத்திரிகையொன்று அதற்கு பதிலளிக்க முன்வந்தது. அங்கு வெளியிடப்படும் நெஷனல் போஸ்ட் பத்திரிகை ஒப்ராய் மலர் வளையத்தின் அருகே இருப்பதையும் போரில் பாதிக்கப்பட்ட 'அனைவரையும்' நினைவு கூறுவதாக குறிப்பிடப்பிடும் மலர் வளையத்தின் லேபிளை அவர் கையில் வைத்திருப்பதையும் காட்டும் படமொன்றை வெளியட்டு அப் பத்திரிகை தமது மறுப்பை வெளியிட்டு இருந்தது.
(மேலும்.....)


ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை - சம்பந்தன்

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை சம்பூர் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11 மணிவரை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் சம்பூர் மக்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பதாதைகளை ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள முற்பட்ட போதும் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுத்தனர் அரச காணியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடத்த முடியாது என தடைவிதிக்கப்பட்டது . அதனையடுத்த  அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது . அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுயாதீன விசாரணையின்றேல் சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது -  கெமரூன்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படாதவிடத்து சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்குவதாகவும் அவ்வாறு சுயாதீன விசாரணை நடத்தத் தவறும் பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைக்கு இலங்கை தள்ளப்படும் சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.  இதேவேளை, வடக்கு நிலைமைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டுப்போர் நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது. குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகச் சாதகமான ஓர் முன்நகர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வட மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கத்துக்கான வடக்குப் பாதை

வடக்கில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாணசபைக்கு வடக்கில் நடந்தவைகளைப் பற்றி விசாரணை செய்ய வடக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றுக்கான அரசியல் யாப்பு நிறுவ வேண்டியது அவசியம். உதாரண மாக 1985ல் அனுராதபுரத்தில் பொதுமக்களை கொன்றது, உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த பொது மக்களின் கொலைகள், 1991இல் வட மாகா ணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை திரளாக வெளியேற்றியதுடன் அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் மற்றும் உடமைகளையும் கையகப்படுத்தியது, 1985ல் சென். ஜோன்ஸ்; கல்லூரி அதிபர் திரு. ஆனந்தராஜவில் ஆரம்பித்து 1989ல் யாழ்ப்பாண பல்கலைக்க ழகத்தை சேர்ந்த கலாநிதி ரஜனி திரணகம, 1999ல் கலாநிதி நீலன் திருச்செல்வம், 2006ல் திரு. கேதீஸ்வரன் லோகநாதன் வரையான அறிவாளிகள் கொல்லப்பட்டது போன்ற அனைத்தையும் விசாரிக்க வேண்டும். (மேலும்.....)

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் பொன்விழா

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பொன் விழா நிகழ்வு அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கல்விக் கண்காட்சி,பொன்விழா மலர் வெளியீடு, கௌரவிப்பு நிகழ்வு, பழைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசிக்கும் பழைய மாணவர்களும் வரவழைக்கப் படவுள்ளனர். கல்விக் கண்காட்சியின் ஓர் அங்கமாக யாழ். முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு, மூதாதையர்களின் புகைப்படங்கள், சரித்திர குறிப்புகள், கல்வெட்டுக்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படவுள்ளன. பொன்விழா காணும் எமது ஒஸ்மானி யாக் கல்லூரி மென்மேலும் வளர்ந்து முஸ்லிம் சமுதாயத்தில் தலைசிறந்த கல்லூரியாகத் திகழ்ந்து வைரவிழா, நூற்றாண்டு விழா போன்ற பல விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம். (மேலும்.....)

நவம்பர் 16, 2013 

என்மனவலையிலிருந்து.......

உலகத் திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் இனம்காண்போம்

(சாகரன்)

உலக நாடுகளுக்கு எல்லாம் வியாபாரம் செய்வதற்கு என்று புறப்பட்டு பின்பு அந்நாட்டு மக்களை தமது அடிமைகளாக்கிய பிரித்தானியா இன்று பொதுநலவாய மகாநாடு என்று இலங்கைக்கும் வந்திருக்கின்றது. மாகாராஜ என்று ஒருவர் ஒரு புறம். இவர் காதலித்தவளை மறைத்து விட்டு கௌரவத்திற்காக அழகியை கரம் பிடித்தவர். இவர் பின்பு கரம் பிடித்தவளுடன் தானும் வாழாமல் அவளையும் வாழவிடாது மரணத்திற்குள் தள்ளிய வரலாற்றைக் கொண்டவர். மறுபுறம் அண்மைக்காலம் வரை ஐரிஸ் மக்களின் விடுதலையை மறுத்த கூட்டத்தின் தலைவர் பிரித்தானிய ஆளும்வர்கத்தின் எடுபிடி. உலகம் முழுவதையும் தமது குடையின் கீழ் கொண்டுவந்து? சுரண்டி சும்மா இருந்து சாப்பிட்டு ஏப்பம் விட்ட கூட்டத்தின் தலைவர். இதற்காக தம்மால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள இனங்களுக்கிடையில் பிரித்தாளும் கொள்கைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவர். இதன் அறுவடைகள்தான் இன்றுவரை உலகின் பலநாடுகளிலும் அந்நாடுகளில் வாழும் தேசிய இனங்களுக்கிடையேயான பிரிவுகளும், உழைக்கும் வர்க்கங்கள் இடையேயான தனித்து நிற்று பலவீனப்பட்டிருக்கும் நிலமைகளும் ஆகும். இன்றுவரை உள்நாடுகளில் பரவி இருக்கும் இன முரண்பாடுகளும், இதன் தொடர்ச்சியான  உள்நாட்டுச் சண்டைகளும், யுத்தங்களும், அழிவுகளும். இன்று நீலிக்கண்ணீர் வடித்த வண்ணம் கறுப்புக் கண்ணாடி அணிந்து சமாதானத் தூதுவர்களாகவும், மனித உரிமைவாதிகளாகவும், நியாயம் கூறுபவர்களாகவும் தம்மைக் காட்டிக்கொண்டு வேஷம்போடும் செயற்பாடுகளும், அறிக்கைகளும் வலிகாமத்து மக்களின் மீள்குடியேற்றம்பற்றிய பேச்சுக்களும் வெறும் வேஷங்களே ஆகும். முதலில் இவர்கள் செய்யவேண்டியது எல்லாம் இவர்களின் மூதாதையர்கள் எங்கள் மூன்றாம் உலகநாடுகளில் கொழுத்திப் போட்டுவிட்டு போன பிரித்தாளும் வெடிகளால் ஏற்பட்ட யுத்தங்களுக்கும், பிரிவுகளுக்கும், அழிவுகளுக்கும் தாமே காரணம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாகும். இதன்பின்பு தமக்கு இருக்கும் பலத்தை பாவித்து முடியமாயின் உள்நாடுகளில் உள்ள அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்வேண்டி தமது தார்மீக ஆதரவுகளையும், செல்வாக்குகளையும் பயன்படுத்துவதாகும். இதனை இவர்கள் செய்வார்களா? என்றால்..... இல்லை என்பதே பதிலாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் இன்று வரை இவர்கள் பிரித்தாளும் கொள்கைகளினால் சுரண்டலை தொடர்ந்தும் நவகாலத்துவ முறைப்படி செய்துகொண்டு, தமது ஆயுத வியாபாரங்களை செய்யவும் இவர்கள் விரும்புவதே காரணம் ஆகும். அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்று வியாபாரத்தையும் செய்து பின்பு போலிச் சமாதானத்தை ஏற்படுத்தி புனர்நிர்மாணம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இதே நாடுகளில் கொத்தராத்துக்கள் மூலம் சுரண்டலைத் தொடரும் சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தும் திருடர்கள் இவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இச் சர்வதேச திருடர்களும்  உள்ளுர் திருடர்களும் பங்காளிகளாக இருப்பது இவர்களுக்கு வாய்பாக இருக்கின்றது. எனவே இந்த சர்வதேச திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் வர்க்க உடன்பாட்டுடன் இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது எமது கடமை அல்லவா? மாறாக இனக் கூறுகளாக நாம் பிரிந்து நின்றால் இக் கூட்டுத் திருட்டை ஒழிக்கவே முடியாது.

(நவம்பர் 16, 2013)

மீண்டும் மரண பூமி­யாகும் யாழ்.குடா­நாடு

எறி­க­ணை­களின் முழக்­கங்­களும் வேட்­டோ­சை­களின் இரைச்­சல்­களும் வட­பு­லத்தின் புலர்வை நிச்­ச­யப்­ப­டுத்­திய காலம் மறைந்து செல்­பே­சி­களின் சீண்­டல்­க­ளுடன் வலைத்­த­ளங்­களில் குறிப்­பாக முக­நூல்­களின் அர­வ­ணைப்­புக்­க­ளுடன் பொழுது புலரும் இவ்­வே­ளை­களில் மீண்டும் அவல மர­ணங்­களின் பதி­வுகள் குடா­நாட்டை அச்­சு­றுத்தி வரு­கின்­றன. அமை­தி­யான நிலை­யி­லி­ருந்து ஆதூ­ர­மான நிலைக்கு கடந்­து­போன சில ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்த சூழலை ஞாப­கப்­ப­டுத்தி நிற்­கின்­றன.(மேலும்.....)

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு வலியுறுத்துவேன்: கெமரூன்

'வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கெஇன்று (15) மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் வலி. வடக்கில் முகாம்களில் வசிக்கும் மக்களை இன்று பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த மக்களிடம், நீங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தீர்கள்? உங்களுடைய காணிகளை யார் வைத்திருக்கின்றார்கள்? இவ்வளவு காலமும் ஏன் மீள்குடியேறாமல் இருக்கின்றீர்கள்? போன்ற கேள்விகளை அவர் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எங்கள் காணிகளை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருப்பதுடன், அங்கு இராணுவக் குடியேற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலளித்த பிரதமர், 'இது தொடர்பாக அரசாங்கத்தினை வலியுறுத்தி உங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பேன்' என்றார்.

கண்ணீர் விட்டழுத சனல்-4 ஊடகவியலாளர்

யாழ்ப்பாணம் வருகை தந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களின் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இன்று யாழ்பாணம் வருகை தந்த பிரிட்டன் பிரதமருடன் சனல் 4 ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினைப் பார்வையிட்ட சனல் 4 ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களை ஆரத்தழுவி கண்ணீர் விட்டழுதுள்ளார். பிரிட்டன் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக பிரிட்டன் பிரதமரின் உதவியாளரிடம் அந்த  கோரிக்கையை சமர்பித்துள்ளார்.

யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம்

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும் தமிழத்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்புவதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, பொது நூலகத்திற்கு  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வாகனங்களை அங்கிருந்து நகரவிடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கெமரூன் - சி.வி சந்தித்துப்பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.பொது நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் கெமரூன் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.

நவம்பர் 15, 2013

வாசுதேவவிற்கு நவீபிள்ளை கடிதம்

மக்களின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையானர் நவநீதம்பிள்ளே அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 திகதியிட்ட கடிதத்தில் மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் அமைச்சரின் முன்மொழிவுக்கான தனது ஆதரவைஇ நவநீதம்பிள்ளே தெரிவித்துள்ளார் 'மொழி தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை செயற்படுத்துவதில் தங்கள் பிரத்தியேக முன்னெடுப்புகளையும் மனப்பூர்வமான செயல்களையும் நான் பாராட்டுகிறேன். மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் தங்கள் முன்மொழிவை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆதரிக்குமென நான் நம்புகின்றேன். இது நல்லெண்ணத்தின் அடையானமாக இருக்குமென நான் நம்புகின்றேன்' என அவர் கூறியுள்ளர். காழ்ப்புணர்ச்சியை தூண்டுதல் தொடர்பில் சட்டங்கள் ஆக்கப்பட வேண்டுமெனும் அமைச்சரின் அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வரவேற்றுள்ளார். சிறுபான்மையினர் விவகார ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு  ஆணையாளர் தனது ஆதரவை உறுதியளித்துள்ளார். இது ஒரு நீண்டகால வேண்டுகோள் என அவர் கூறியுள்ளார்.

நவம்பர் 14, 2013

கெலம் மெக்ரே ஊடகக் குழுவுக்கு எதிராக அநுராதபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்

வவுனியா நோக்கி சென்றுகொண்டி ருந்த செனல் 4 அலை வரிசை ஊடகவியலாளர் கெலம் மெக்ரே அடங்கலான குழுவினருக்கு அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கருகில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொழும்பிலிருந்து ரயில் மூலம் வவுனியாவுக்கு சென்று கொண்டிருக்கையிலே ரயில் பாதையை மறித்து சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயிலை பயணிக்க விடாமல் வழிமறித்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையடுத்து கெலும் மக்ரே அடங்கலான குழு வாகனம் மூலம் கொழும்பு திரும்பியதாக அறிய வருகிறது. இவர்களுக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே.

யாழ்.,வவுனியா பஸ்கள் மீது கல்வீச்சு: சாரதி படுகாயம்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு  மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி மற்றும் மாதம்பே-இட்டக்குளம் பிரதேசத்தில் வைத்தே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் மீது சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி எனுமிடத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது வவுனியா- இட்டக்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவங்கள் தொடர்பில் மாதமே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் 10 மடங்கு நடவடிக்கைகள் இன்னும் தேவை'

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால்  மட்டுமே மக்கள் நல்ல நிலைக்குத் திரும்பமுடியும்' என பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் புதன்கிழமை (13) இரவு யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் தங்கினர். 'வடபகுதிக்கு புதன்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலமைகளை பார்வையிட்டோம். குறிப்பாக கிளிநொச்சிப் பகுதிக்குச் சென்று செஞ்சோலை சிறுவர் இல்லம் மற்றும் சிவில் பாதுகாப்புச் செயலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அதன்போது தங்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இருக்கவில்லை என அப்பெண்கள் எமக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு வேலைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் எமக்கு விளக்கமளித்தார். கிளிநொச்சியில் சில பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தெரிவித்த போதும், பெருமளவானவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மொழி ஒரு பிரச்சனையாகவிருந்தது. யுத்தம் நடந்த முடிவுற்ற நாடுகளில் விரைவான அபிவிருத்தி இடம்பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வழமைக்கு திரும்புவது  உலக நாடுகளிலுள்ள வழமையான செயற்பாடாகும். ஆனாலும், இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகள் காணப்படவில்லையென்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை. இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சிரியாவில் குர்திஷ் இனத்தினரும் சுயாட்சி பிரகடனம்

வட கிழக்கு சிரியாவின் குர்திஷ் இன பிராந்தியம் இடைக்கால சுயாட்சி நிர்வாகத்தை அறிவித்துள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தம் முடியும்வரை குர்திஷ் இன பெரும்பான்மை பிராந்தியத்தை நிர்வகிக்க அந்நாட்டு குர்திஷ் ஜனநாயக ஒன்றிய கட்சி திட்டமிட்டுள்ளது. எனினும் தமது கட்சி தனி குர்திஷ் தேசத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை என அந்தக் கட்சியின் பிரிட்டன் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் வடக்கு சிரியாவின் குர்திஷ் இனத்தினர் இருபக்கமும் சாராமல் ஒதுங்கி நிற்கின்றனர்.  எனினும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதத்தில் குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதிக்குள் முன்னேற போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் குர்திஷ் ஆயுததாரிகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துள்ளன. சிரிய சனத்தொகையில் 10 வீதமாக உள்ள குர்திஷ் இனத்தினர் நாட்டின் வட கிழக்கு பகுதியில் துருக்கி மற்றும் ஈராக் எல்லையையொட்டி பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

நவம்பர் 13, 2013

அனுபவங்களும், தவறுகளும் முன்னேறுவதற்கான திசை வழியும். வரலாற்றுணர்வில்லாமல் எதையும் சாதிக்கமுடியாது.

(ஸ்ரீதரன்-சுகு)

தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கின் தலைநகரை எங்கே அமைப்பது என்ற சர்ச்சை எழுந்தது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் இன் விருப்பம் யாழில் அல்லது மட்டுவில் அமையட்டும் என்பது. அதுவும் நாம் விரும்பியவாறு திருமலையில் அமைக்க முடிந்தது. மாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசு அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் மாகாண சபை இந்திய அமைதிகாப்பு படையின் உதவியுடன் மாகாண காவல்துறைக்கு ஆட்களைத் திரட்டி பயிற்சி வழங்கியது. அதற்கு பின்னர்தான் இலங்கை அரசு அதனை அங்கீகரிக்க முன்வந்தது. மாகாண சபைக்கான வெளி நாட்டு உதவிகள் கிடைப்பதில் கூட கொழுப்பு பல தடைகளைப் போட்டது. எனினும் அன்றைய சூழ்நிலையில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அதனை லாவகமாக கையாள முடிந்தது. யாழ்ப்பாணத்தின் கணித அறிவு மென்பொருள் உற்பத்தியை பெங்களூர் மாதிரியாக ஒரு மென்பொருள் நகரமாக்க தீர்மானிக்கப்பட்டது. திருமலையை ஹரியானாவின் தலைநகர் சண்டிகரை ஒத்த ஒரு நவீன நகராக நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டன. (மேலும்....)

பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லமாட்டேன்: சி.வி.விக்னேஸ்வரன்

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளில் (13) கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.



மாநில அரசுகளின் அழுத்தங்களால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தளம்பல்

மத்திய அரசின் அணுகுமுறையில் அப்படியெல்லாம் எந்தவொரு சிந்தனையும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லை. குறைந்த பட்சம், பிரதமர் தமிழக முதல்வரை அழைத்துக் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திருந்தால், தமிழகக் கட்சிகளை எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்திருந்தால் கூட, பொதுநலவாய மாநாட்டை வட இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பயன்படுத்தி இருக்க முடியும். சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர் அதை கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். ஏதோ தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக, தான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.  (மேலும்....)

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடியத் பிரதிநிதிகள் அஞ்சலி

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆனையிறவுப் பகுதியில் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்திக் கலந்துரையாடினர். சந்திப்பின் பின்னர் ஏ – 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் யுத்த வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் உள்ளே சென்று, அங்கு வைத்து யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் கொண்டு வந்திருந்த மலர்வளையத்தினை தம்கூடவே எடுத்துச் சென்றனர்.

புலிக்கொடி விவகாரம்

சந்தேகநபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதிமன்றத்தில் இன்று (12)  தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு, நெடுமாறன் உட்பட 50பேர் கைது

தமிழகம், தஞ்சாவூர், விளார் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா ஆகியன பொலிஸாரால் இடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிர்மாணிக்கப்பட்டது.  இன்று அதிகாலை 5 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 12, 2013

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்

கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆறு சந்தர்ப்பங்களில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றன என அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறான 24 சம்பவங்களில் 11 பாதிக்கப்பட்ட பெண்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். மன்னார் மாவட்டம் தவிர்ந்த சகல மாவட்டங்களிலிருந்தும் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாண பொலிஸாரிடம் விசாரித்தபோது தமக்கு 6 புகார்கள் மட்டுமே கிடைத்ததாகவும் நான்கு குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டும் உள்ளதாக அவர்கள் கூறினர். ஏனைய சம்பவங்கள் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். ஆயினும் அதிகாரம் வாய்ந்த குழுக்களின் அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பத்தினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை பழிவாங்கல்களுக்கு பயந்து விலக்கிக் கொள்வதாக பெண்கள் அமைப்புகள் கூறின.

இந்திய பிரதிநிகள் புதன் வருகைதருவர்

பொதுநலவாய உச்சு மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் விசேட விமானம் மூலம் புதன்கிழமை கொழும்பை வந்தடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழுவின் தலைவரான வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் வெளிவிவகார செயலாளர் சுயாதா சிங் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் வரவுள்ளனர் என இலங்கைக்கான இந்திய தூதுவ அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை கூறினார். இதே விமானத்தில் இந்தியாவின் பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் பயணிப்பர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

வடக்கின் ஆளுநரை மாற்ற வேண்டும் : சபையில் பிரேரணை நிறைவேறியது

வடக்கின் ஆளுநரை நீக்க வேண்டும் எனவும் இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் எனவும் கோரி வடமாகாண சபையில் இன்று பிரேரணை ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றபோது அவையில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இப்பிரேரணையை முன்மொழிந்தார். இப்பிரேரணையை வடமாகாண சபையின் உறுப்பினரான து. இரவிகரன் வழிமொழிந்தார். பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் இலங்கையில் குடியியல் அல்லது நிர்வாக ரீதியில் கடமையாற்றுகின்ற இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும். ஆளுநரை நியமிக்கும் பொழுது இப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அதியுச்ச ஜனாதிபதியிடம் கோருகின்றோம் என்றுள்ளது.

நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல : கெலும் மெக்ரே விமான நிலையத்தில் தெரிவிப்பு

தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள செனல் -4 தொலைக்காட்சியின் தயரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும் மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது தொடர்பிலும் தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தில் விடுதலைபுலிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் வராமைக்கு அரசு கவலைமாநாட்டையும், இருதரப்பு உறவையும் பாதிக்காதெனவும் தெரிவிப்பு

பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, 37 நாட்டின் அரச தலைவர்கள் கலந்துகொள்வது உறுதி. இவர்களைத் தவிர பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளினதும் பிரதிநிதிகள் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவரென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். இதேவேளை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமையையிட்டு கவலையடைவதாக கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, இது உச்சி மாநாட்டினையோ இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகளையோ பாதிக்காது எனவும் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்த தீர்மானம் உள்நாட்டு அரசியல் நெருக்கடியினால் ஏற்பட்டதொரு தீர்மானமாக விருக்கலாமென தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப் பிட்டார். பொதுநலவாய அமைப்பைப் பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களும் சமனான அந்தஸ்து உடையவர்களே, ஒரு நாட்டினுடைய பரப்பளவையும், பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களுடைய ஆதிக்கம் தீர்மானிக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை மரணம்

2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதி வாசகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த பிரபல தமிழ் நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 'புஷ்பா தங்கதுரை' என்ற புணைப்பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். அறிவியல், கிரைம், சமூகம் என பல தலைப்புகளில் தனக்கே உரிய சிறப்பு நடையில் இவர் எழுதிய பல நாவல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வேணுகோபாலன் என்ற தனது இயற்பெயரில் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தலப்புராணங்களையும் எழுதியுள்ள இவர் சில நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்கியுள்ளார். இவரது பிரசித்தி பெற்ற நாவல்களான 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'நந்தா என் நிலா' ஆகியவை திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புஷ்பா தங்கதுரை உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 வார காலமாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிலிப்பைன்ஸ் ஹையாம் புயல்

பாரிய சேதத்தால் மீட்பு நடவடிக்கையில் பாதிப்பு, நிவாரணமின்றி மக்கள் தவிப்பு

பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய ஹையான் புயலால் வீதிகள் மற்றும் விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதால் மீட்பு நடவடிக் கைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு நிவாரண நடவடிக்கைகளிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புயல் காரணமாக கடல் நீருடன் பாரிய கப்பல்களும் நாட்டுக்குள் அடித்து வரப்பட்டதோடு கட்டிடங்கள், மரங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் மின்சாரம், சாலை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப் பட்டுள்ளது.10,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கலாம் என பிலிப்பைன்ஸ் நிர்வாகம் கணித்துள்ளது. கொல்லப் பட்டோரது உடல்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. புயல் தாக்குதலில் பிலிப்பைன்ஸின் 36 மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சுமார் 50 இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களையும் இழந்துள்ளனர். இவர்களை தேடி தெருக்களில் அலைந்து திரிகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகுரலும், சோகமும் எதிரொலிக் கின்றன. இது ஒரு புறம் இருக்க உயிர் பிழைத்தோர் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இன்றி பரிதவிக்கின்றனர். அவற்றை பெற தக்லோன் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

நவம்பர் 11, 2013

நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பி.க்கள் திருப்பியனுப்பப்பட்டனர்

குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளை மீறினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். நவம்பர் 08 ஆம் திகதி ‘விசிட்டிங் வீஸா’ மூலம் இலங்கைக்குள் வந்திருந்த மேற்படி அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அரசியல்வாதிகள் நேற்றுக் காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்த தயாரான நிலையிலேயே, தடுத்து விசாரணைக் குட்படுத்தப் பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைவர் சூலானந்த பெரேரா தினகரனுக்குத் தெரிவித்தார். விசிட்டிங் வீஸா’ வில் நாட்டி ற்குள் வந்தவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவது குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளை மீறும் செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவுஸ்திரேலியாவில் செனட் சபையைச் சேர்ந்த வீ. ரைனோன் மற்றும் நியூஸிலாந்தின் பசுமைக் கட்சி எம்.பி. யான யான் லொக்கி ஆகிய இருவருமே இலங்கை யிலிருந்து திருப்பியனுப்பப்பட்டதாக தெரிய வருகிறது. இவ்விருவரும் வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே கொழும்பில் நேற்று பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்த தயாரானமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

ஐ.நா. கலாசார நிறுவனமான யுனஸ்கோவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வாக்குரிமை அகற்றப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தமது பங்களிப்பு தொகையை செலுத்தாததாலேயே இவ்வாறு இடைநீக்கப்பட்டு ள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டில் யுனஸ்கோ அமைப்பில் பலஸ்தீனத்துக்கு அங்கத்துவம் வழங்கியதையடுத்து அமெரிக்கா தனது பங்களிப்பை நிறுத்திக்கொண்டது. யுனஸ்கோவுக்கு அதிக நிதி பங்களிப்பு வழங்கும் நாடுகளில் அமெரிக்கா 5 ஆவது இடத்தில் இருந்தது. இதே காரணத்தால் இஸ்ரேலும் தனது பங்களிப்பை நிறுத்தியது. பலஸ்தீனத்தை யுனஸ்கோவில் சேர்த்ததன் மூலம் மத்திய கிழக்கு அமைதிப் பேச்சு வார்த்தை தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் குற்றம்சாட்டின. அமெரிக்காவின் நிதியுதவி கிடைக்காததால் யுனஸ்கோ ஆண்டுதோறும் 80 மில்லியன் டொலர்களை இழந்து வருகிறது. எனினும் யுனஸ்கோவுக்கான அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும் என யுனஸ்கோவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் கிலியோன் உறுதி அளித்தார்.

சிறுநீரகத்திற்குள் 35 கற்கள்

எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கற்களில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தது. இவரின் குருதி இரத்தம் லி வகையானது. இவ் வகை இனக் குருதியை வைத்தியசாலைகளில் பெறுவது கடினமாக இருந்ததால் ஒரு பைந் பகற் இரத்தத்தை மாத்திரம் நம்பி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக அறுவை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய இந்த சத்திர சிகிச்சைகளை எந்தவொரு வசதியும் இல்லாமல் சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுநீரக கல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 10, 2013

பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பம்

பொதுலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பமானது. அதனடிப்படையில், பொதுநலவாய இளைஞர் மாநாடும், மக்கள் மன்ற மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலும் மக்கள் மன்ற மாநாடு ஹிக்கடுவயிலும் நடைபெறுகின்றது. பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்ற அதேவேளை, இலங்கை சார்பாக 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் 8 முக்கியத் தலைப்புக்கள் தொடர்பில் ஆராயப்படுவதுடன் இலங்கை அரச தலைவர்களுடன் இளைஞர் மாநாட்டின் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓர் அபலைக்கான மனித இதயம்...!

(எஸ்.ஹமீத்)

அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும்  புன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. (மேலும்....)

வருத்தமளிக்கின்றது

மன்மோகன்-மஹிந்தவுக்கு கடிதம்

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமை வருத்தமளிப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவர் மூலம் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவிருக்கின்றது. மாநாட்டில் தான் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் நாட்டிலிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் இந்தியா, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பலத்தை எதிர்ப்பை தெரிவித்திருந்தன. ஆயினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும், அமைச்சு அதிகாரிகளும் இந்திய பிரதமர் மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்றே விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர்  மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது எமக்கு தோல்வியல்ல என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். (பிபிசி)

யார் இந்த குமார் சங்கக்கார?


ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன். 83 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார. தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்­கக்­கார நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்டார். அகில இலங்கை ரீதியில் நல்­லி­ணக்­கத்­திற்­கான முரளி வெற்றிக் கிண்ண இரு­பது - 20 போட்­டிகள் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மா­கின. இது வட மாகா­ணத்தின் ஐந்து இடங்­களில் இடம்­பெ­று­கின்­றது. இந்­நி­லையில் இந்த போட்­டியில் பங்­கு­பற்றும் வீரர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்கி உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குமார் சங்­கக்­கார வட மாகாணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு படையெடுப்பு

பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு படையெடுத்துள்ளனர். அதில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியிருக்கின்ற ஊடகவியலாளர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நாளை முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விருவரும் வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேவை என்று ஒன்று இருந்தால் மட்டுமே, தேடல் என்பது சுகமாக அமையும்..!

பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்திய அரசியலில் மிகப் பலம்வாய்ந்த ‘சவுத் புளொக்’ டாக்டர் மன்மோகன் சிங் கொழும்பு வருவதை ஆதரிக்கிறது

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை தயாரிக்கும் சவுத் பிளொக் என்றழைக்கப்படும் வெளிவிவகார அமைச்சும் இந்தியாவின் சிரேஷ்ட நிர்வாகிகளும் தங்கள் பிரதமமந்திரி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் மதிப்பையும் நற்பெயரையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் தங்கள் பிரதம மந்திரி கொழும்பில் நடைபெறும் இம்மகாநாட்டில் கலந்து கொள்வது அவசியம் என்று புதுடில்லியில் உள்ள சவுத் பிளொக் நிர்வாக அமைப்பு மறைமுகமான கண்டிப்பான உத்தரவை அந்நாட்டின் அரசாங்கத் தலைவர்களுக்கு விடுத்திருப்பதாக இந்தியாவின் செல்வாக்குமிக்க அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். (மேலும்....)

இசைப்பிரியாவும், சனல் - 4 வின் ‘மணி மேக்' கலையும்

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரம் பற்றி புகலிட இலக்கியத்தில் முன்னோடிகளில் ஒருவரான திருமதி இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ஒரு ஆவணப்படம் தயாரித்தார். இலங்கை தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேசம் அறிந்திராத அந்தகாலத்தில் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டு உதவுமாறு அவர் கேட்டபோது சனல் 4 அதற்கு மறுப்பு தெரிவித்தது. அப்போது இலங்கையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என்பதே அதற்கு காரணமாகும். மேலைத்தேய எசமானர்களின் விசுவாசியான ஜெயவர்த்தனாவை காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதில் இந்த சனல் 4 உறுதியாக இருந்தது. ஆனால் அந்த சனல் 4 தான் இன்று தமிழருக்காக நீலிக்கண்ணீர்வடிக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் இருந்து இயக்குனர் மணிமேகலை எடுத்திருக்கும் வெள்ளைவேன் ஆவணப்படத்தையும் இந்த சனல் 4 வாங்கி வெளியிடவுள்ளது. எனும் செய்திகளும் வருகின்றன. வெள்ளை வேன் கலாசாரத்தை ஈழப்போராட்ட வரலாற்றில் தொடக்கி வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பது முக்கியமானது. (மேலும்....)

விக்கி லீக்ஸ் அதிர்ச்சி தகவல்

விடுதலைப் புலிகள் ஆயு தங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தியிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிற்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம் சனினால் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை ஓர் பாதுகாப்பு சொத்தாகப் பயன்படுத்திக் கொண் டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது உறுப்பினர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு புலிகள் பொதுமக்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஆயுதங்கள் இடத்திற்கு இடம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15 ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் தொடர்ச்சியாக சிவிலியன்கள் பிரசன்னமாகி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனித கேடயமாக பயன்படுத் தப்பட்டனர் என்பது உண்மையே. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்தில் என்பது பற்றிய தகவல்களை உறுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் தமிழரசுக்கட்சித் தலைவர்கள்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனும், அவரது சகாக்களும் தமது தவறுகளை உணர்ந்து மக்கள் முன்பாக மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஏற்கனவே இவர்கள் பல பக்கங்களாலும் தமிழ் மக்களால் குட்டுபடத் தொடங்கி விட்டார்கள் எனினும் அவை மூடி மறைக் கப்பட்டு வருவதாகவும், ஒருசில பிராந்திய மற்றும் தேசிய தமிழ் ஊடகங்கள் என்று இவர்களுக்குத் தாளம் போடுவதை நிறுத்துகிறதோ அன்று இவர்களது சகலவிதமான பொட்டுக்கட்டுக்களும் வெளியே வந்து சாயம் வெளுக்கும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழரசுக்கட்சி சகல விடயங்களிலுமே இரட்டை வேடம் கொண்டுள்ளதாகவும், நம்பவைத்துக் கழுத்தறுக்கும் பணியில் இதன் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த ஆனந்த சங்கரி, பொதுநலவாய மாநாடு தொடர்பாகவும் தமிழ்க் கூட்டமைப்பு இருமுகங்களைக் கொண்டுள்ளதாகவும், கட்சிக்கு நேற்று வந்த அரசியல் பால்குடிகளை வைத்துக் கொண்டு அவர்களது கைப்பொம்மையாக மாறியுள்ள சம்பந்தன் பழையவர்களை ஒதுக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பொது நலவாய மாநாடும் சனல்-4 இன் நாடகமும்

புலிகள் இருந்த காலத்தில் எத்தனையோ பொதுமக்கள், படைவீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பட்டோர் அப்புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் வதை முகாம்களில் பலர் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். சிறு சிறு குற்றங்களைப் புரிந்த பலர் ஈவிரக்கமின்றிச் சுடப்பட்டு மின்சாரக் கம்பங்களில் கட்டிவிடப்பட்டனர். கல்வி கற்கக் கூடிய சிறார்கள் பலர் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனைக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர். எனவே சனல் - 4 உண்மையான ஊடகம் என்றால் புலிகளில் இந்த உண்மையான அராஜகங்களையே முதலில் வெளிக்கொணர வேண்டும். இவற்றிற்கு தமிழ் மக்களிடையே உண்மையான சாட்சியங்கள் உள்ளன. (மேலும்....)

நவம்பர் 09, 2013

காமன்வெல்த் மாநாடு

பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய உயர்நிலைக்குழுவும் பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும், எனினும், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தெருநாய்களின் மன்றாட்டம்!

(எஸ்.ஹமீத்)

**கோணேஸ்வரிகளையும்

  கிருஷாந்திகளையும்
  சாரதாம்பாள்களையும்

  இசைப்பிரியாக்களையும்

  இன்னுமுள்ள எல்லா அபலைகளையும்
  விட்டுவிடுங்கள்...!

(மேலும்....)

பலாலி முகாமை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

 
யாழ். உயர் பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பலாலி, இடைக்காடு அன்டனிபுரத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்கி அம்மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்ய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சுமார் 350 ஏக்கர் பிரதேசமான இப்பகுதியில் காணிகளுக்கு உரித்துடைய பொதுமக்கள் தங்களது காணிகளைச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியினை யாழ். படைத் தலைமையகம் இன்று (08) வழங்கியது. இதற்கமைய 10 இடைத்தாங்கல் முகாங்களில் வசித்து வந்த மக்களில் 150 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் கடல் வளத்தினையும் கண்டுகளித்தனர். கடந்த 23 வருடங்களுக்கு பின்னர் முதற் தடவையாக அம்மக்கள் தங்களது சொந்த காணிகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வரவேண்டும்

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் அதி. வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று விடுத்துள்ள வேண்டுகோளில் இலங்கை வரும் போது இந்தியப் பிரதம மந்திரி மன்னார் உட்பட வடமாகாணத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் வழியுறுத்தியுள்ளார். இந்தியாவே இந்த யுத்தத்தை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதம மந்திரி இங்கு வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் வடமாகாணத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் அதிவணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா தமிழர்களின் தாயின் ஸ்தானத்தில் இருப்பதனால் இந்தியா விழித்தொழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 08, 2013

மனம்பெரி தொடக்கம் - இசைப்பிரியா வரை கருணையற்ற மனோநிலை

(சுகு-ஸ்ரீதரன்)

ஊடக, உலக தேவைகள் நலன்களுக்கப்பால் சனல்-4 இல் இசைப்பிரியா இழுத்துச்செல்லப்படும் காட்சி எம்மை அமைதியிழக்கச்செய்கிறது. நிராதரவான பயங்கரமான குரூரமான தனிமையான அவலமானது அந்தச் சூழல், சேறும் இரத்தமுமாக  வக்கிரமிருகவெறியுடன் துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை இழுத்து வரும், மரணத்தை நோக்கிய அவலமான பயணம். நாம் மனிதரெனக் கொண்டிங்கு வாழும் போது  இசைப்பிரியாவின் நிலை, தவிப்பு ,கையறு நிலை இதனைப்பார்க்கும் போது வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. இசைப்பிரியாவின் துயரம் ஒரு கைத்தொலைபேசியில் பிடிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. (மேலும்....)

புலம் பெயர் பிழைப்புவாத ஊடகங்களை மிரட்டிய சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்

சுதந்திரமடைந்த முதல் நாளிலிருந்தே சிறுபான்மைத் தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினரின் கரங்களில் வன்முறை, புறக்கணிப்பு போன்றவற்றால் துன்பப்படுத்தப்படுகின்றனர். ஜூலை 1983,தமிழ்ப் புலிகள் என்ற புதிய தமிழ் தேசிய கெரில்லா குழுவொன்றால் இலங்கைச் சிப்பாய்கள் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர், அரச ஆதரவாளர்கள் ஒரு வாரகால தமிழர் எதிர்ப்புக் கலவரம் ஒன்றை தொடக்கிவைத்தனர். அந்தக் கலவரத்தின் போது குறைந்தத பட்சம் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் பயங்கரமான சிவில் யுத்தம் ஆரம்பமானது. என்ற முன்னுரையோடு ஆரம்பிக்கும் சனல் 4 இன் ஆவணப்படம் வாணி விஜி குறித்த அறிமுகத்தோடு தொடர்கின்றது. “வாணி விஜி ஒரு தமிழர். அவர் இலங்கையில் பிறந்தவர். ஆனால் அவரது குடும்பம் வன்முறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இடம்பெயர்ந்த பரம்பரையைச் சார்ந்தது. பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்ட வாணி விஜி, 2008 ஆம் ஆண்டு இலங்கைக்குச் செல்கிறார்.” (மேலும்....)

மன்மோகனின் இலங்கை விஜயம்

இறுதி முடிவில் காங்கிரஸ் குழப்பம்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து. அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலரும் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸாரும் மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி எப்படியும் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை மாநாட்டில் பங்கேற்க வைப்பதற்கான கூட்டம் ஒன்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளால நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் கொழும்புக்கு சென்றுவிட்டு தமிழர்கள் வாழும் வட மாகாணத்துக்கும் பிரதமர் செல்லலாம் என்று சுதர்சன நாச்சியப்பன் போன்ற மத்திய அமைச்சர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதையும் வெளியுறவுத் துறை ஆராய்ந்து வருகிறது. பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் இலங்கை மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்திய சுதந்திர இயக்கத்தின் தார்மீக வலுக்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

(சுகு-ஸ்ரீதரன்)

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத அன்சாரி அண்மையில் கியூபாவின் பிடலைச் சந்தித்தார். 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட கலந்துரையாடல் 2 மணி நேரம் நீடித்திருக்கிறது. இந்தியாவுடனான கடந்தகால நினைவுகளை கஸ்ட்ரோ மீட்டிருக்கிறார். உலகின் பல விடுதலைப் போராட்டகாரர்களுக்கு இந்தியா எப்போதும் கிளர்ச்சியை பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. வியட்கொங் போராளிகள், தென்னாபிரிக்கா பாலஸ்தினத்தின் போராளிகள் உலகளாவிய நிறவெறிக்கெதிரான போராட்டக்காரர்கள் ஒரு ஆத்மார்த்த அன்பை இந்தியா மீது கொண்டிருக்கிறார்கள். (மேலும்....)

நவம்பர் 07, 2013

கனடாவிலுள்ள வீதிக்கு இசைப்புயலின் பெயர்

கனடாவில் உள்ள வீதி ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஒருவரைக் கௌரவிப்பது என்றால் அவரது சிலையை நிறுவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கௌரவிக்கும் வகையில் கனடாவில் உள்ள வீதி ஒன்றிற்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளனர். இந்திய சினிமாவின் 100ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கனடாவில் றொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பொலிவுட் மற்றும் ஹொலிவுட் சாதனைகள் குறித்து புகழப்பட்டது. பின்னர் அதன் தொடர்ச்சியாக, கனடாவின் மர்கம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் (அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) வீதி என பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும்

மன்மோகன் சிங்கும், சோனியாவும் பயப்படப் போவதேயில்லை.

'இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் மாநாட்டில், நம் பிரதமர் மன்மோகன்சிங், கலந்து கொள்ளக் கூடாதாம். அவர் சார்பாக, அவரது, அலுவலக பியூன் கலந்து கொள்வது கூட, பெரிய பஞ்சமா பாதகமாம். அப்படி மன்மோகன் சிங் கலந்து கொண்டால், அவரது திருவடிகள், இலங்கை மண்ணில் பட்ட மாத்திரத்திலேயே, தமிழகத்தில், பெரிய பூகம்பம் நிகழும். அன்று, கண்ணகி, மதுரையை எரித்தது போல, இன்று, தமிழர்கள் எரித்து விடுவர் போலும்! ஏழு கோடித் தமிழக மக்களும், கொதித்துப் போயிருக்கின்றனராம்; அவர்கள், தம் மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பாவை விட, இலங்கையில் வாழும், தமிழர்களின் நிலையை எண்ணி எண்ணி, நொந்து நுாடுல்ஸ் ஆகியிருக்கின்றனராம்.இப்படியெல்லாம், கண்ணீர் கதைகள் சொல்லி, தமிழகத்திலிருக்கும், நம் மதிப்பு மிகு அரசியல் தலைவர்கள், முதலைக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர். (மேலும்....)

பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் புதன்கிழமை (06) காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் இவ் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவயவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை (29) அதேஇடத்தினைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது - 27) என்ற பெண்  சடலமாக மீட்கப்பட்டார். மேற்படி பெண் திங்கட்கிழமை (28) இரவு தொலைபேசியில் உரையாடியவாறு வீட்டிற்கு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மேற்படி பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து மாடு கட்டச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வயல் கிணற்றிலிருந்து மேற்படி பெண் சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனல் 4 இயக்குநர் இலங்கை வர அனுமதி

சர்ச்சைக்குரிய சனல் 4 ஆவணப்படங்களின் இயக்குநர் கெல்லும் மெக்ரே, இலங்கை நுழைவதற்கான விஸா வழங்கப்பட்டுள்ளது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காகவே இவருக்கு விஸா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவினருக்கும் விஸா வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.

இந்தியத் துணை தூதரகத்தினால் வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கௌரவிப்பு

இந்தியத் துணைத் தூதுவர் வே. மாகலிங்கத்தினால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. கௌரவிப்பு நிகழ்வினை தொடர்ந்து இந்தியத் துணைத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் கமலேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், "13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை முறைமைஇ இந்திய வீட்டுத்திட்டம், வாழ்வாதார உதவிகள், புகையிர பாதை புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு இந்திய காட்டி வரும் கரிசனைக்கு மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் நன்றிகள் தெரிவித்தேன். இந்திய அரசாங்கம் எமது தமிழ் பேசும் மக்களுக்கு மென்மேலும் வாழ்வதார உதவிகள்இ இளைஞர் - யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகளை அமைத்தல்இ பிரதேசங்களின் உள்ளக வீதிகள் அமைத்தல்இ கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டிருந்தேன். மேலும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எமது நாட்டில் நடைபெற போகும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்பதுடன் அவர் வட மாகாணத்திற்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு நிலைமைகளை பார்வையிட்டு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய தீவிர அக்கறை காட்ட வேண்டுமென வலியுறுத்தியதாக" அவர் குறிப்பிட்டார்.

லண்டனில் பொறியியலாளராக மகன்; பார்க்க துடிக்கும் முதியோர் இல்லத்திலுள்ள தாய்

யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் லண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.  கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்கலாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார். இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது. கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார். இந்நிலையில், இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார். தற்போது அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார். இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கு இருந்தாலும் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று முதியோர் இல்ல அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர் அத்துமீறல்களால்

வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் ரூ. 97,500 மில். நஷ்டம்

இந்தியாவின் தமிழக மீனவர் கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் துச் செல்வதால் வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் 97,500 மில்லியன் ரூபா நஷ்டமேற் படுவதாக மீன் ஏற்றுமதியாளர் கள் சங்கம் தெரிவிக்கிறது. எனவே இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை தடைசெய்ய உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் ஏற்றுமதி சங்கம் அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியா விலிருந்து ஆயிரக்கணக்கான இழுவை படகுகள் தினமும் இரவு நேரங்களில் வட பகுதி கடலுக்குள் அத்துமீறி நுழைகின்றன. எமது மீன் வளத்தை சுரண்டிச் செல்வதுடன் கடல் வளத்தையும் அழிக்கின்றனர். இந்த நிலைமையினால் மீனவர்களின் வளம் அழிக்கப்படுகிறது. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உட்பட வட பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயலினால் இரு நாடுகளுக்கு இடையேயும் உள்ள நட்புறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. அத்துடன் சர்வதேச கடல் உடன்படிக்கையை மீறும் செயலாகவும் அமைகிறது. இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கும் முறை எமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் அத்துமீறி மீன் பிடிக்கிறார்கள்.

ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு

ஹம்பாந்தோ ட்டை சிரிபோ புரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் திறந்து வைக்கப்படவுள்ளது. தென் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் தலைநகரிற்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபமாக இது திகழவுள்ளதோடு, இதன் நிர்மாணப்பணிகளுக் கென 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 1520 ஆச னங்களைக் கொண்ட பிரதான மண்டபத்தோடு சகல நவீன வச திகளோடு மேலும் பல ஒன்று கூடல் அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபத்தின் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை பொதுநலவாய உச்சி மாநாட்டின் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது. சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் உணவகங்கள் என்பனவும் தொடர்ந்து பரீட்சிக்கப்பட்டு வருவதோடு சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன.  துப்புரவு செய்யும் பணிகளுக்கு மாநகர சபை ஊழியர்களோடு வீரவில திறந்தவெளி சிறைச்சாலையின் சிறைக்கைதிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்பிற்காக 1800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  

அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு

பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் மரணம் குறித்த சுவிஸ் மற்றும் ரஷ்யாவின் விசாரணை அறிக்கை பலஸ்தீன நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அரபாத் மரணம் குறித்த பலஸ்தீன விசாரணைக் குழுவின் தலைவர் தவ்பீக் திராவி, சுவிஸ் ஆய்வு கூடத்தின் அறிக்கை கிடைக்கப் பெற்றதை உறுதி செய்தார். அதேபோன்று இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த பலஸ்தீன நிர்வாகம் நியமித்த ரஷ்ய குழுவின் அறிக்கையும் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருப்பதாக பலஸ்தீனின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை உறுதி செய்தது. கடந்த 2004 ஆம் ஆண்டில் மரண மடைந்த யாஸிர் அரபாத்தின் உடல் எச்சத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 மாதிரிகள் சோதனைக்கு பெறப்பட்டன. இந்த மாதிரிகள் ஆய்வுக்காக சுவிஸ், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆய்வுக் குழுக்களிடம் வழங்கப்பட்டது. அரபாத் தனது 75 ஆவது வயதில் பிரான்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. பிரேத பரிசோதனைகூட மேற்கொள்ளப்படவில்லை. அவரது உடைமைகளில் பொலோனியம் -210 என்ற உயிர் கொல்லி கதிரியக்கம் இருப்பதை சுவிஸ் ஆய்வுகூடம் ஒன்று அண்மையில் உறுதி செய்ததை அடுத்தே அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது.

நவம்பர் 06, 2013

இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்!

(எஸ்.ஹமீத் )

எமதிளைய மகளே......!
   உன்னுடைய மரணத்தில்
   உலகின் மனசாட்சி உயிர் பெற்றிருக்கிறது...!
 
 போரில் இறந்த புலிகள் மீதும் படையினர் மீதும்
  அனுதாபம் கொள்கிறோம்,
  அவர்களும் மனிதர்கள் என்பதால்...!
 

கொல்லப்பட்ட தமிழ்-முஸ்லிம்-சிங்கள
   மக்கள் மீது
   இன்னுமின்னும் இரக்கம் வருகிறது,
   ஏதுமறியா அப்பாவிகள் அவர்கள் என்பதால்...!


(மேலும்....)

வடபகுதி மீனவர் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பினர் என்றும் குரல் கொடுத்ததில்லை

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எமது கடற் பிரதே சத்தினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பாக நாம் ஆரம் பம் முதல் குரல் கொடுத்துவருகிறோம். ஆனால் இந்திய மீனவர்களினால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பிற்குள் சட்டவிரோதமாக வந்து மீன் பிடிப்பதினால் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர தடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதனால் நீரியல் வளங்கள் சேதமடைகின்றன. இவற்றினால் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. (மேலும்....)

செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்யும் ‘மங்கள்யான்’ விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைக்கோள் நேற்று பிற்பகல் 2.38 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி. எஸ். எல். வி. ரொக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார். இது எதிர்வரும் 30 ஆம் திகதி பூமியின் வட்டப் பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை தொடங்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வா யின் பாதையை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் இருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். விண்ணில் பாய உள்ள பி. எஸ். எல். வி. ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில் யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மங்கள்யான் என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் 1350 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகிலேயே இந்த சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிக்கும். இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம் ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நவம்பர் 05, 2013

மன்மோகன் சிங் வந்தால் கருணாநிதி கூட்டணியிலிருந்து விலகுவாரா?

இம் மாதம் நடுப் பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வார் போல் தான் தெரிகிறது. இந்திய மத்திய அரசாங்கம், தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குதல்களை விட முழு இநதியாவினதும் நலன்களை கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கிறது என்று கடந்த வாரம் நாம் கூறியதையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியா இந்த மாநாடு இலங்கையில் நடைபெறும் ஒரே காரணத்திற்காக அதனை பகிஷ்கரிக்கப் போவதில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிவித்திருந்தது. இதற்கு முன்னர் இந்தியாவானது மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி அனுப்பிய கடிதமொன்றுக்கு அளித்த பதிலிலும் தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகள் உட்பட 'ஏனைய காரணிகளை' கருத்தில் கொண்டே 'தாம் பங்கு பற்றுவதை' தீர்மானிக்கப் போவதாக பிரதமர் மன்மோஹன் சிங் கூறியிருந்தார். மாநாட்டை பகிஷ்கரிப்பது தொடர்பாக அவர் அதிலும் எதனையும் கூறியிருக்கவில்லை. (மேலும்....)

Sri Lanka Consul Karunaratne Paranawithana leaving Toronto after successful tenure

(BY SRIMAL ABEYEWARDENE)

Karunaratne Paranawithana, the Consul General of Sri Lanka in Toronto, is leaving after a successful tenure as the diplomatic representative for Sri Lanka. He is a humble, peaceful and loving person and a highly accomplished academic and a professional in many fields. Paranawithana had his early education at the village school, Dippitigala Maha Vidayala in Lellopitiya, north of the Gem City of Ratnapura.He moved to St. Aloysius College Ratnapura and entered the University of Colombo to read for a special degree in arts. Paranawithana was a brilliant student at the Colombo University and a determined young man who nurtured hopes of continuing his studies to serve his Motherland. As a student at the Colombo University he was involved in trade union activities and was very popular among the student. Despite his popularity and academic brilliance he remained true to his village traditions. (more.....)

செவ்வாய்க் கிரகத்தில் இந்தியாவின் விண்கலம்

செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பவுள்ள மங்கள்யான் விண்கலம் இன்று செவ் வாய்க்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளது. விண்கலத்தை ஏவுவதற்கான கவுன்ட்-டவுன், திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.08 மணிக்கு ஆரம்பமானது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த விண்கலம் பி. எஸ். எல். வி. சி-25 ராக்கெட் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 5) பிற்பகல் 2.36 மணிக்கு ஏவப்பட உள்ளது. இஸ்ரோ சார்பில் முதன் முறையாக மொத்தம் ரூ. 450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு இந்த விண்கலம் ஏவப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாள்களுக்கு விண்கலத்தை ஏவும் வகையில் வானிலை இயல்பானதாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதால் 56 1/2 மணி நேர கவுன்ட் டவுன் தொடங் கப்பட்டுள்ளது. செவ்வாய் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன என்று விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். பி. எஸ். எல். வி. சி-25 ராக்கெட் எரிபொருள் விண்கலத்தை ஏவுவதற்கு 32 தொன் எடை கொண்ட 44 அடி உயர பிரம்மாண்டமான பி எஸ். எல். வி. சி-25 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பிணைப்பண நடைமுறை ரத்து பிரிட்டன் அரசாங்கம் அறிவிப்பு

ஆறு ஆபத்தான நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப்பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா, மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு ஆறு மாத கால விசாவை வழங்கப் பணத்தை வைப்புச் செய்யும் திட்டம் ஒன்றை அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் முன்வைத்திருந்ததுடன் அதனை நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரேசா தெரிவித்திருந்தார். 6 மாத கால விசா வழங்கப்படும் நபர்கள் அந்த அனுமதி காலத்தையும் தாண்டி பிரித்தானியாவில் தங்கியிருந்தால் வைப்புச் செய்த அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அந்தத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை என துணைப் பிரதமர் நிக் கிளாக் அழுத்தங்களை கொடுத்ததை அடுத்தே அரசாங்கம் இந்தத் திட்டத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்வோர் பிணைப்பணமாக 3000 பவுண்ஸ் செலுத்த வேண்டுமென்பதை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

இந்திய மீனவர்கள் 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகு ஒன்றில் வந்த 6 மீனவர்களும், புதுக்கோட்டை ஜனதாப் பட்டினம் பகுதியிலிருந்து 6 படகுகளில் வந்த 24 மீனவர்களுமே இவ்வாறு திங்கட்கிழமை (4) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள், காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுநலவாயத்தில் பங்கேற்குமாறு பிரதமருக்கு பரிந்துரை

இலங்கையில்,  நவம்பர் 15 ஆம் திகதி  முதல் 17  ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. இது தொடர்பான பரிந்துரைக் கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் திங்கட்;கிழமை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பிரதமருக்கு சென்றிருக்கும் கடிதம், மாநாட்டில் அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்ப தாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் மாநாடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் போது பேச வேண்டிய விவகாரங்கள் குறித்தும் அந்த அமைச்சகம் பிரதமருக்கு எடுத்துக் கூறும் என்றும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 04, 2013

சிரிய யுத்தம் அந்த நாட்டு மக்களை காப்பாற்றுமா.....?

(ஈஸ்வர்)

(கனடாவில் வெளிவரும் பூபாளம் என்ற பத்திரிகையின் செப்ரம்பர் 15, 2013 ம் திகதி பதிப்பில் வெளியான கட்டுரை இது)

(சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை தாமாகவே அழிப்பதாக உடன்பாட்டிற்கு வர முன்பு எழுதப்பட்ட கட்டுரை இது)

மீண்டும், மீண்டும் போர் மேகங்கள். அமெரிக்காவின் வலிந்த யுத்தம் ஒன்றிற்கான அறைகூவல். வழமை போல இரசாயன ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்ற பிரச்சாரத்தை தனது ஊதுகுழல்களாலான சி.என்.என் பி.பி.சி. ஊடாக ஆரம்பித்து தனது நாட்டு மக்களை மூளைச் சலவை செய்யும் செயற்பாடுகள். நலிந்து வரும் பொருளாதாரத்தின் தாக்கத்தினால் அமெரிக்க, மேற்குலக மக்களால் அந்நாட்டு மக்களிடம் அரசுக்கு எதிராக எற்பட்டு வரும் எதிர்பலைகள், போராட்டங்களை திசை திருப்ப இன்னொரு முயற்சி. நிரூபிக்கப்படாத ஆதாரங்களை வைத்துக்கொண்டு தன்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என்ற கோஷங்களுடன் புறப்பாடு. இவ்வாறு தொடரும் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். (மேலும்....)

வடமாகாண ஆளுநரின் பதவி பறிபோகுமா?

வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், முக்கியமான மூன்று விவகாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முதலாவது, இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நீக்குவது. இரண்டாவது, வடக்கிற்கு தனியான பொலிஸ் பிரிவை உருவாக்குவது. மூன்றாவது, வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது. இவையனைத்தும் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட்ட விவகாரங்கள் தான். ஆனால், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றை வலியுறுத்தியதற்கும், இப்போது வடக்கு மாகாண அரசை நிறுவிய பின்னர், அதனை வலியுறுத்த ஆரம்பித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன. (மேலும்....)

இசைப்பரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை - ஈ.பி.டி.பி

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி போர்க் குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்ல உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்சிக்குள்ளாகியுள்ளது.  (மேலும்....)

இலங்கை கடற்பரப்பிற்குள்

வாரத்தில் ஒருநாள் மீன்பிடிக்கக்கோரும் இந்தியாவின் யோசனை நிராகரிப்பு

வாரத்தில் ஒரு நாள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மூலம் இந்த யோசனை கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் அவரது அமைச்சு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் தங்களிடம் உள்ள சக்தி வாய்ந்த பெரிய இழுவைக் கப்பல்களுடன் இலங்கை கடல் எல்லைக்குள் வாரத்தில் மூன்று நாட்களாவது அத்துமீறி பிரவேசிக்கின்றனர். எமது மீனவர்களுக்கு சொந்தமான மீன் வளத்தை கொள்ளையிட்டுச் செல்வதுடன், இழுவைக் கப்பல்களில் சிறிய துளைகளையுடைய வலைகளில் மீன் குஞ்சுகளும் சிக்குகின்றன. இந்த மீன் குஞ்சுகளை ஆபத்தின்றி வளர்வதற்கு இடமளித்தால் சுமார் ஒரு மாத காலத்தில் பெரிய மீன்களாக வளர்ந்துவிடும் என்பதை தெரிந்திருந்தும் கூட, இந்திய மீனவர்கள் சுயநலப் போக்கில் நடந்து கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார். தாங்கள் அத்துமீறி பிரவேசிக்கும் நாட்களில் இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென்றும் இந்திய மீனவர்கள் அச்சுறுத்தியும் வருகிறார்கள். இத்தகைய முறைப்பாடுகளை அடுத்தே கடற்றொழில் அமைச்சு இந்திய மீனவர்களுக்கு எமது கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தது.

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர் 48 மணி நேரத்துக்குள் வெளியேற்றப்படுவர்

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் மாறியுள்ளதால் விதிமுறைகளும் மாறியிருக்கின்றன. நீங்கள் விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியா விற்கு வந்தால், நீங்கள் வழிமறிக்கப்படு வீர்கள். நீங்கள், திருப்பி அனுப்பப்படலாம் அல்லது மதிப்பீடுகளுக்காக விரைவில் பப்புவா நியூ கினியா அல்லது நெளறு விற்கு இடமாற்றப்படலாம். நீங்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டீர்கள். ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்ப வேண்டாம். அவர்களுக்கு உங் களது பணமே தேவை. நீங்கள் விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவிற்கு வருவீர்களானால், உங்கள் வாழ்க்கை அடங்கலாக, சகலவற்றையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வீர்கள். எவருக்கும் அவுஸ்திரேலியாவில் (பிள்ளைகள், குடும்பங்கள், துணையில்லாத சிறார்கள் அடங்கலாக) குடும்பமொன்று இருக்கும் பட்சத்திலும் மாறுதல் ஏற்படப் போவதில்லை. அங்கு வரும் எவரும் வந்த நேரத்தில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் பப்புவா நியூ கினியா அல்லது நெளறுவிற்கு இடமாற்றப்படுவார்கள்.(மேலும்....)

நவம்பர் 03, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்,தமிழர் விடுதலை கூட்டணி தொடர்ந்து இயங்க இடமுண்டா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இக்கட்டான நிலையேற்படும்வேளையில் அவர்களை மீட்டெடுப்பது இதுதான் முதற்தடவையல்ல. இச்சந்தர்ப்பங்களில் ஒரு சிறு குழு தம்மைப் பாதுகாப்பதற்கு தங்கள் மீது சாய்வதை தாங்கள் அனுமதிக்கக்ககூடாது. முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும் கூட ஏகமனதாக முடிவெடுக்க வேண்டிய தேவையிருந்தும் அவ்வாறு செயற்படவில்லையென்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். முதலமைச்சர் வேட்பாளர் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படகூடியவர் என்பதோடு அவர் என்னுடைய நண்பரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாய்ப் பயின்ற வருமாவார். மேலும் சொல்லப்போனால் பல ஆண்டுகளுக்கு முன்பு முயற்சித்து உண்மை நிலையை அறிந்தபின் அதில் தலையிடாமல் ஒதுங்கியவருமாவார். எனவே அவரின் தெரிவில் எனக்கு ஒருவித அபிப்பிராயபேதமும் இருக்கவில்லை. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எவருக்கேனும் ஏதாவது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதா? அப்படியானால் அது நிறைவேற் றப்பட்டதா? என்பதே தற்போ தைய கேள்வி! கூட்டமைப்பில் உள்வட்டம் ஒன்றிருப்பதால் அவர்களாலேனும் இவ்வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? அன்றேல் முதலமைச்சர் மீது திணித்து விடப்பட்டதா? முதலமைச்சர் கூட்ட மைப்பைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு இன்னும்பல விடயங்கள் எண்டு. (மேலும்....)

23 ஆவது ஆண்டு நிறைவு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம்

வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற அந்த இருண்ட நாட்களை இன்னமும் தெளிவாக நினைவில் கொண்டுள்ளார்கள். அது 1990 ஒக்டோபர் மாதக் கடைசி, வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள், சில மணி நேரக் காலக்கெடுவுக்குள் தங்கள் சொந்த வீடுகளையும் சொத்துக்களையும் விட்டு உடனடியாக வெளியேறும்படி திடீரென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். எந்தவிதமான பெறுமதி வாய்ந்த பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது என அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தேடிய தங்கள் பணத்தையோ அல்லது நகைகளையோ தங்களுடன் எடுத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொத்துக்களையோ அல்லது உடமைகளையோ விற்பதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. உடுத்த உடையுடனே தாங்கள் பிறந்த இடங்களை விட்டு அவர்கள் கட்டாயப்படுத்தி வெளியே தள்ளப்பட்டார்கள். நவீன நாகரிக உலகம் என்று அழைக்கப்படும் இந்த உலகத்தில்தான் இது நடைபெற்றது. (மேலும்....)

நிகழ்கால பிரபாகரனாக சிறிதரன் எம்.பி. உள்ளாராம் - ஆனந்தசங்கரி

தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளு மன்ற உறுப்பினரான சிறிதரன் நிகழ்கால பிர பாகரன் என தமிழர் விடுதலை கூட்ட ணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரி வித்துள்ளார். பத்திரிகை ஒன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன், அத்தகைய எண்ணத்துடன் செயற்படும் நபரது செயற்பாடுகளுக்கு நான் செவிசாய்க்கத் தயாராக இல்லை. சிறிதரன் தன்னை ஒரு மேதையாக எண்ணிச் செயற்பட்டு வருகிறார். தனது இலக்குகளை அடைய அவர் குறுக்கு வழிகளைக் கையாளுகிறார் என்பது எனக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் வருகிறார்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை மீதுள்ள செல்வாக்கை இந்தியா இழக்க நேரிடும். இதன் காரணமாக இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் செல்வாக்கு பெற்றுவிடும் என்று கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜனாதிபதி – சம்பந்தன் பேச்சு

யாழ். கட்டுவன் பகுதியில் இராணுவத்தினால் வீடுகள் அகற்றுவதனை நிறுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  இரா. சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இது விடயமாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயம் பற்றி தான் அறிந்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி வீடுகள் அகற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக இரா. சம்பந்தன் தெரிவித்தார்

தலிபான் தலைவர் விமானத் தாக்குதலில் பலி

பாகிஸ்தானிய தலிபான் இயக்க தலைவர்களில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். தலிபான் இயக்க முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுபவரும், நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்தவருமான ஹகிமுல்லா மேஷுட் என்பவரே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு வசிரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அமெரிக்க புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இவரின் கொலையை தலிபான்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா நடாத்திவரும் இந்த ஆளில்லா விமான அத்துமீறல் தாக்குதலை பாகிஸ்தான் வழமைபோல் கண்டித்துள்ளது.

சந்திரிக்காவுடன் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்து பொன்சேகா பேச்சு

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்தாலோசித்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டில் ஊழல் நிறைந்திருக்கிறது. வீதி அபிவிருத்தி உட்பட அனைத்து வேலைத்திட்டங்களிலும் நிதிக் கையாடல் அதிகரித்துள்ளது. மக்களின் வரிப்பணம் சிலரது பைகளுக்கு செல்கிறது. தனிப்பட்டவர்களின் நன்மைகளுக்காக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு என்பன சீரழிந்து போகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நன்மதிப்பு குறைந்து வருகிறது. எனவே அக்கட்சியை பாதுகாப்பதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அண்மையில் சந்தித்தபோது என்னிடம் தெரிவித்தார். அத்துடன், தற்போது அரச அமைச்சர்கள், உறுப்பினர்களில் பலர் தன்னுடன் இணைந்து செயற்பட உறுதியளித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல முயலும் முதலமைச்சரின் நற்செயலை குழப்ப வேண்டாம்

வடக்கில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தலைமையொன்று மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணங்கிச் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து அம்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளது. அதற்குத் தலைமை தாங்கிச் செயற்படும் வட மாகாண சபையின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களது செயற் பாடுகளைக் குழப்பி தமிழ் மக்களை மீண் டுமொருமுறை யுத்தம், உயரிழப்பு, இடம்பெயர்வு என்ற அவஸ்த்தைக்குள் தள்ளிவிட வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் குழுவொன்று தமிழ் ஊடகங்களிடம் மன்றாட்டமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவா ளரான கொழும்பு, வெள்ள வத்தையில் வசிக்கும் வல்லிபுரம் என்பவரால் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில தனியார் தமிழ் ஊடகங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லும் அரசியலுக்கு முன்வந் துள்ளதை விரும்பாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இதே கருத்தைக் கொண்டுள்ள சிலருடன் இணைந்து குழப்பும் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்கள் இத்தகைய குழப்பும் செய்திகளைத் தொடர்ந்தும் பிரசுரித்தால் அவை மக்களைச் சென்றடையாத வகையில் நடவடிக்கை எடுக்கத் தாம் தயங்கமாட்டோம் எனவும் வல்லிபுரத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நூலகம் இலங்கையின் அதிசிறந்த நூலகமாக தெரிவு

யாழ். நூலகம் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அதிசிறந்த நூலகமாக இம்மாதம் முதல் மீண்டும் தரமுயர்த்தப்பட் டுள்ளது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாகவும், யாழ். பொது நூலகம் தெரிவு செய்யப்பட் டுள்ளது. ஆசியாவில் மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்த யாழ். நூலகம் 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் அதிசிறந்த நூலகமாக யாழ். நூலகம் காணப்பட்டது. தற்போது நாட்டில் நிலவும் அமைதி சூழலில் இந்த நூலகத்தை சிறப்பாக கட்டியெழுப்ப அரசாங்கம் சகல விதமான நடவடிக்கைகளையும், மேற்கொண்டுள்ளது. இந்த நூலகம், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஜனாதிபதியும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வெற்றிதான் - கே. பி.

வடக்கில் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான வேலைத் திட்டங் களை வட மாகாண சபை உருவாக்க வேண்டும். அதேநேரம், வடக்கில் தனியார் காணிகளை மீள அதன் உரிமை யாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரி வித்துள்ளார். வட மாகாண சபையின் கன்னி அமர்வின்போதும் அதன் பின்னரும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் ஆற்றிவரும் உரைகள், எதிர்காலம் நோக்கி சாதக தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். வட மாகாண முதலமைச்சரின் இந்த உரைகள், சிறந்த சாதக நிலைமையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். நட்பு ரீதியான அணுகுமுறையே தமிழர்களுக்கான எதிர்கால தீர்வை நிர்ணயிக்கும். தற்போதைய தலைவர்களான ஜனாதிபதியும், வட மாகாண முதலமைச்சரும், இந்தத் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் கே. பி. சுட்டிக்காட்டினார். வடக்கில் உள்ள தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய நிர்வாகிகளான ஜனாதிபதியும், வட மாகாண முதலமைச்சரும், இந்த தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் கே. பி. சுட்டிக்காட்டினார்.

நவம்பர் 02, 2013

கடும் செய்தியை இலங்கை அரசுக்கு கொண்டுசெல்கிறோம் - பிரிட்டன்

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் அதன் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் திட்டவட்டமான முன்னேற்றத்தைக்  காண வேண்டுமென்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துச் செல்லப்போவதாக வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ஹியூகோ ஸ்வயர் நாடாளுமன்றில் கூறியுள்ளார். (மேலும்....)

உலக நாடுகளில் அத்துமீறி தலையிடும்

அமெரிக்காவுக்கு மனித உரிமை பற்றி பேச அருகதை இல்லை

உலகின் பலம்வாய்ந்த வல்லரசான அமெரிக்கா ஒரு பொலிஸ்காரனைப் போன்று மற்ற நாடுகளின் மீது தன் அதிகாரத்தைப் பிரயோகித்து ஆதாரமற்ற துஷ்டத்தனமான குற்றச்சாட்டுகளை குறிப்பாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற போதிலும் அதைவிட மோசமாக குற்றச் செயல்களை மேற்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. ஏன் இவ்விதம் அமெரிக்கா நடந்துகொள்கிறது என்று ஒரு ஊடகவியலாளர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கேட்ட போது, நாம் எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்விதம் நடந்து கொள்கிறோம் என்று விளக்கம் அளிக்கிறார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட மேலும் பல நாடுகள் மீது அமெரிக்கா ஆளில்லாவிமானத் தாக்குதல்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நாடுகளின் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக பலியாகினார்கள். இந்தக் குற்றச் சாட்டுக்கும் அமெரிக்க அரசாங்கம் எங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் இவ்விதம் செய்கின்றோம் என்று பதிலளிக்கிறது. (மேலும்....)

டாலி... டாலி!

''அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்தராத்திரி  சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா...

''ஓவியர் ஆதிமூலம் அண்ணன் வழிகாட்ட, மத்திய நெசவாளர் சேவை மையத்தின் சென்னைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். 1973-ல் எனக்கு 850 ருபாய் சம்பளம். அவ்வளவு பணத்தை மொத்தமா பார்த்தப்போ, நிஜமாவே கதறி அழுதிட்டேன். பட்டினியா அலைஞ்ச காலம் மாறி வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பிச்சது. அங்கே வேலை பார்த்துட்டு இருக்கும்போதுதான் கவிஞர் அறிவுமதி மூலமா, பாலுமகேந்திரா நட்பு கிடைச்சது. 'சந்தியாராகம்’ படத்தில் என்னை நடிக்க வெச்சார். சினிமா நடிகன் ஆனது அப்படித்தான். 80-களில் ஈழம் தொடர்பான போராட்டங்கள்ல ரொம்ப உணர்வாளனா பங்கெடுத்துக்கிட்டேன். அப்போ என்னை மும்பை அலுவலக சகாக்கள் 'டைகர் ஆயா’னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. 'புலி வருது’னு அர்த்தம். காதல், ஈழம்னு பூவும் போர்க்களமுமா வாழ்ந்த நாட்கள் அவை! (மேலும்....) 

நவம்பர் 01, 2013

விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் நாடகமாடாது முஸ்லிம்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்­களை வெளி­யேற்­றி­ய­மைக்கு வடக்குத் தமி­ழர்­களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்­பாக்கி முனையில் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை. விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் நாட­க­மா­டாது முஸ்லிம் மக்­களின் நிலங்­களை உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பிர­பா­க­ரனால் முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்ளோம் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது. அன்று ஆயு­த­மு­ணையில் அப்­பாவி மக்­களை வெறும் 500 ரூபா­வுடன் விரட்­டினர். முஸ்லிம் பெண்­க­ளையும் வய­தா­ன­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி அவர்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து ஒரு அரா­ஜ­க­மான செயலே அன்று பிர­பா­கரன் செய்தார். பின்னர் இலங்கை இரா­ணு­வத்­தினர் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து செய்­து­மு­டித்த யுத்த வெற்­றி­யோடு நாட்டில் இருந்த தீவி­ர­வாதம் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. எனினும் தற்­போது வட மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் மக்­களை ஆத­ரிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். வடக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் வாழ்­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்பும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் செயற்­ப­டக்­கூ­டாது விக்­கினேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் பொய்­யான கருத்­துக்­களை கூறி மக்­களை ஏமாற்­றாது குறித்த கால எல்­லைக்குள் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்த வேண்டும். விடு­தலைப் புலி­க­ளினால் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் நிலங்­களை மீண்டும் அம் மக்­க­ளுக்கே ஒப்­ப­டைக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

குமரன் நினைவுகள் - நினைவுப் பேருரை, உரையாடல்

03.11.2013 ஞாயிறு - பிற்பகல் 03.00 மணி

SALLE  SAINT  BRUNO

9, RUE  SAINT  BRUNO

75018    PARIS

SAINT  BERNARD தேவாலயம் அருகில்

 Métro:  LA  CHAPELLE

குமரன் நினைவுப் பேருரை

யமுனா ராஜேந்திரன்

போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்

போரா ட் டத்தினுள் வாழும் மனிதர்கள் முதன்மையாக இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் . உச்சபட்சமாக உயிரை இழக்க நேரும். நிலவிய சமூகம் ஏற்படுத்தி வைத்த அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள், பொறுப்புக்கள் போன்றவற்றை இவர்கள் மீற நேரிடும். தவிர்க்கவியலாமல் வன்முறையை எதிர்கொள்ளவும், செலுத்தவும் நேரிடும். அனைத்துக்கும் மேலாக இலக்கை எய்தும் நோக்கில் தோல்வியை எதிர்கொள்ளவும் நேரிடும் .அப்போது தாம் இழந்தவையும் மீறியவையும் அர்த்தமுள்ளவைதானா என்கிற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். .அவ்வேளை உளச்சிதைவுக்கும் நம்பிக்கையின்மைக்கும் அவர்கள் உள்ளாகவும் நேரிடும். இதனையும் மீறித்தான் மனிதர்கள் தம் இருப்புக்கும் விடுதலைக்கும் போரிட்டபடியே இருக்கிறார்கள். இதுவே மனிதகுலத்தின் வரலாறு. ஈழப் போராட்டத்தினையிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் வாழ்வும் இவ்வாறானதே . எனினும், இவர்களில் ஒரு சிலரே வரலாற்றில் வாழ்கிறார்கள். ஏன் அவ்வாறு நேர்கிறது என்பது குறித்து பார்வையாளர்கள் பங்குபெறும் உரையாடல் பிரதான உரையை அடுத்து இடம்பெறும். தோழர். குமரனுடன் வாழ்ந்த தோழர்களும் நண்பர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

அனவரையும் அழைக்கும்

தோழர்களும் நண்பர்களும்

தொடர்புகளுக்கு

06 19 45 02 76   

 06 23 60 72 65  

06 13 98 82 71 

ஒக்ரோபர் 31, 2013

மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் விருப்பம்

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற  பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரும்புவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா அறிக்கையிட்டுள்ளது. அயல்நாட்டுடன் தொடர்பிலிருப்பது இந்தியாவின் கேந்திர நலனுக்கு முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டே இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய கட்சியின் மத்திய குழுவுடன் பேசிய பின் இலங்கைக்கு வரும் தீர்மானம் கூடுதல் வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு அப்பால் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய செல்வாக்கை பேணுவதற்கு பிரதமர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பதன் மூலமே இலங்கை அரசாங்கத்தின் நடத்தை மீது செல்வாக்கு செலுத்தவும் இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்யவும் முடியுமென இந்திய அரசாங்கம் சிந்திக்கின்றது. மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வராதிருப்பது இலங்கையை அவமதிப்பதாக கருதப்பட்டு இந்தியாவின் நல்லெண்ணத்தை கடுமையாக பாதிக்கலாமென இந்திய அரசாங்கம் கருதுகிறது.

அழைப்புக்கும் மாநாட்டுக்கும் தொடர்பில்லை - சி.வி.  

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வடமாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'நேற்றைய தினம் சென்னையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில தினசரியான இந்துவில் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கிறார் விக்னேஸ்வரன் என்ற தலைப்பில் பிரசுரமான செய்தி பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்துவதாக அர்த்தப்படுத்தப்பட்டு ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றியறிதலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இலங்கைக்கு விஜயம் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அக்கடிதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com